Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலையில் நஞ்சுகலந்த நீர் அருந்திய 26 மாணவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9c63b82c4dbed54ea32c218ee0c26b86.jpg

ஏழாலை மயிலங்காடு சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 பாடசாலை மாணவர்களும் பூச்சிமருந்து கலந்த நீரை அருந்தியதால்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
இன்று காலை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.எனினும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.சிலர் தண்ணீரை அருந்தவில்லை.சிலர் தண்ணீர் அருந்தியுள்ளனர்.தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறி பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
 
உடனடியாக பூச்சிமருந்து கலந்த நீரை அருந்திய  மாணவர்கள் 26 பேரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் சிலர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது மயக்கமடைந்தனர்.
 
இதனால் நீர் அருந்திய 26 பேரும் அதிதீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கையின் பின்னரே அவர்கள் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
 
mmmmmm.jpg
 
mm(1).jpg
 
mmmmmmmmmmmmmmmm.jpg
 
mmmmmmmmmmmmmmmmmmm.jpg
 
0000(16).jpg
 
00(26).jpg
 
0000000000000000(1).jpg
 
0000000000(7).jpg
 
0(25).jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ba284a79ec5a7b9b28af6acbd400cb5a.jpg

குடிநீர் நெருக்கடியை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் நோக்கத்தோடு மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய விசக்கிரிமிகளின் ஈனச் செயலால் 26 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு கடவுள் அல்லது இயற்கை தான் விரைந்து இவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும்; என விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 
                                       
 
 
இன்று ஏழாலை சிறிமுருகள் பாடசாலையில் விசக்கிரிமிகளினால் பாடசாலை நீரில் கலக்கப்பட்ட பூச்சிமருந்தால் 26 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அப்போது அங்கு விரைந்து வந்த விவசாய அமைச்சர் அவர்களை நேரில் பார்த்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
328b4a6732245bc62f2499b63380ee26.jpg

 யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

 
 பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.. 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
ggg(2).jpg

http://onlineuthayan.com/News_More.php?id=217453929219475556

நாங்கள் எங்கு நகர்கின்றோம்.
 
நான் 77களில் கேட்ட கவிதை வரிகள்தான் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.
 
எங்கு செல்கிறோம்
எதற்கு செல்கிறோம்
என்று தெரியாது
எம் கால்கள் நடந்தன.
 
கவிஞர் பெயர் ஞாபகமில்லை மன்னிக்கவும்
  • கருத்துக்கள உறவுகள்

இது மிருகங்களின் செயல்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இது மிருகங்களின் செயல்

அரசியல் – முரண்பாடுகளுக்காக குழந்தைகளையும் பலி கொடுக்க தயாங்காத சமூகமாக மாறுகிறதா தமிழ்ச் சமூகம்:-

 

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷத்தினை கலந்தது விஷமிகள் – தெற்கில் இருந்து சென்றவர்கள் அல்ல..

 

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கையில்,

பாடசாலை கிணறு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கழிவு எண்ணெய் கலந்து உள்ளது எனும் சந்தேகத்தால் மூடபட்டு உள்ளது. அதனால் பாடசாலை மாணவர்கள் பிரதேச சபையினால் வைக்கபப்ட்டுள்ள தண்ணீர் தாங்கியில் இருந்தே நீரினை பருகி வந்தனர்.

 

இன்றைய தினமும் காலை உடற்பயிற்சி மற்றும்  காலை பிரார்த்தனை முடிய மாணவர்கள் வழமை போன்று நீரினை அருந்தி உள்ளனர் காலை 9 மணியளவிலையே நீரில் விஷம் கலந்துள்ளமை தெரியவந்து மாணவர்களை உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தோம்.

 

பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்தார்.

 

அதேவேளை வடமாகாண மாகாண முதலமைச்சர் இது தொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ள வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.

 

அதனை அடுத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக .தெரிவிக்கபபட்டது

தற்போது மாணவர்களுக்கான சிகிசைகள் உரிய வகையில் வழங்கப்பட்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்டு உள்ளதாகவும், அவர்களை தொடர்ந்து 48 மணிநேரம் முதல் 72 மணி நேரம் வரையில் வைத்திய கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதனால் மாணவர்களை தற்போது விடுதியில் அனுமதித்து உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

 

விஷம் கலந்த நீரினை பருகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் பார்வையிட்டனர்

இதே வேளை ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர் தாங்கியில் விஷத்தினை கலந்தவர்கள் பாடசாலைக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் பிரதேச சபைக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நோக்குடனையே இதனை செய்து இருக்கலாம் என தற்போது ஒரு சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

இதே வேளை மேலும் தெரிவிக்கையில், விஷத்தினை கலந்தவர்கள் கை தவறி விஷ போத்தலை நீர் தாங்கிக்குள் விழுத்தி இருக்கா விடின் , அனைவரும் இன்றைய தினம் பிரதேச சபையின் மீது குற்ற சாட்டை முன் வைத்து இருப்பார்கள். பிரதேச சபைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து இருப்பார்கள் பிரதேச சபையே விஷம் கலந்த நீரினையே மாணவர்களுக்கு வழங்கியது எனவும் பிரதேச சபையால் வழங்கப்படும் நீர் பாதுகாப்பு அற்றது என்ற ரீதியில் மக்களை பிரதேச சபைக்கு எதிராக திசை திருப்பவே மாணவர்களின் குடிநீரில் விசத்தினை கலந்துள்ளார்கள்.

 

எனினும் விஷ போத்தல் நீர் தாங்கியினுள் விழுந்ததால் பிரதேச சபைக்கு எதிராக மக்களை திசை திருப்பும் சதித்திட்டம் விணாகி போனதாக தெரிவித்தனர்.

 

- Global Tamil News -

- உலக தமிழ்ச் செய்திகள் - 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117772/language/ta-IN/------.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்.. சிறிய மாணவர்கள். :o 
நினைக்கவே.... வெட்கப்படும் செயல்.
 

அனைத்துப் பாடசாலைகளுக்கும்,கட்டாயம் ஒரு காவலாளி ஒருவராவது நியமிக்க....
பெற்றோர் தமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்க சிங்களவன் வந்துதான் உங்களை அழிக்கணுமாக்கும். கேடுகெட்ட இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் கொடுமையான செயல்.இக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மன்னிக்கப் பட முடியாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பிஞ்சுகளின் நிலையை நோக்குகையில் மனதை வலிக்கும் நிகழ்வு.

வெட்கப்படவேண்டிய காட்டுமிராண்டித்தனமான செயல். :wub:

 

இதுக்க சிங்களவன் வந்துதான் உங்களை அழிக்கணுமாக்கும். கேடுகெட்ட இனம்.

யாரை திட்டுறீங்க சார். அந்த சமூக விரோதிகளையா? அல்லது முழு தமிழ் இனத்தையுமா? அதற்கு உதாரணத்திற்கு சமூக விரோதிகள், கள்வர்,கிரிமினல்களை தம்மிடையே கொண்டிராத உங்கள் விசுவாச சிங்கள இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

போங்க சார்,

மொத்த இனமே போக்கிரிங்க, நாதாரிங்க, டங்குமாரிங்க, மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம் போகாததுகள் எண்டு சொன்னா - உங்களைப் போன்ற பத்திரமாத்து தங்கங்களை எல்லாம் அவமதிப்பது போலாகாதா?

சமூகவிரோதிகளைச் சொல்லுகிறேன்.

போங்க சார்,

மொத்த இனமே போக்கிரிங்க, நாதாரிங்க, டங்குமாரிங்க, மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம் போகாததுகள் எண்டு சொன்னா - உங்களைப் போன்ற பத்திரமாத்து தங்கங்களை எல்லாம் அவமதிப்பது போலாகாதா?

சமூகவிரோதிகளைச் சொல்லுகிறேன்.

என்ன உங்க பாஷை சொற்கள் எல்லாம் உங்க ரேஞ்சுக்கு தக்கபடி ரொம்ப லோக்கலா இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
chunnakam-protest-200315-200-seithy.JPG

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் குடிநீர் தாங்கியில் நஞ்சு கலந்த, 26 மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இன்று சுன்னாகத்தில் கண்டனப்பேரணி நடைபெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டனப் பேரணி, ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரை வந்தடைந்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   

வடமாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் நீரைப்பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். குறித்த தண்ணீர் தாங்கியினுள் நஞ்சு போத்தல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

chunnakam-protest-200315-seithy%20(1).JP

 

 

chunnakam-protest-200315-seithy%20(2).JP

 

http://seithy.com/breifNews.php?newsID=128685&category=TamilNews&language=tamil

எதுக்கும் இந்த ஏரியா Bottle water distributer ஐ இரண்டு தட்டு தட்டினால் விடை கிடைக்கும்.

இந்த பூச்சிமருந்து யாழ்பாணத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கும் எண்டு நினைக்கிறன் , போலீஸ் நினைத்தால்  ஈஸியா விசமிகளை பிடிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.