Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் 3 வருடங்களுக்கு இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி

Featured Replies

வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் என்ற கணக்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான போச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்டகாலமாக இருத்தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக இரண்டு நாடுகளின் மீனவர்களும் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து இராஜதந்திர தலையீடுகளுடன் மீனவர்களும் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாடுகளின் மீனவர்களும் எதிர்நோக்கும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இதற்கு முன்னர் இரண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன் அவை இணக்கங்கள் எதுவுமின்றி முடிவடைந்தன.

எனினும் இம்முறை பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவருகிறது.

http://www.tamilwin.com/show-RUmtyDRaSUlu6D.html

  • கருத்துக்கள உறவுகள்

இது அநியாயம் :(

  • கருத்துக்கள உறவுகள்

இது அநியாயம் :(

உண்மைதான்

எந்த வகையில் இதை ஒத்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... ரயில்வே தண்டவாளம் போடவும், 55´000 வீடுகள் கட்டவும் ஒத்துக் கொள்ள முடியுமென்றால்....
83 நாள் மீன் பிடிக்க ஏன்.... முடியாது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

84 ஆம் நாள் எல்லைக்குள் படகை விட்டால் சுடுவோம்.
நான் சொல்லவில்லை.... இனி ரணில் சொல்வார்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கிந்திய சிங்கள அரசின் கூட்டு சதி இதனால் பாதிப்புக்கு உள்ளாகபோவது தமிழ் மீனவர்கள்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மீனவர்களிடம் " நீயா தாரியா இல்லை நாமே புடுங்கட்டுமா" எனும் ரீதியில் தமிழக மீன் மாபியாக்கள் மிரட்டி, கொள்ளை அடிக்கிறார்கள்.

இதுதான் உண்மை. இதை தட்டிக்கேட்க தமிழகத்தில் ஒரு அரசியல் வாதி இல்லை. கேட்டா அண்ணனின் தம்பி. அப்பாவின் மச்சினன் எண்டு நீட்டி முழங்குவாங்கள்.

சில சமயங்களில் தொப்புள் கொடியே கழுத்தை நெரிப்பதும் உண்டு.

தமிழக மீனவர்கள் என்பதால் அவர்களை மாபியாக்கள் என்று அழைக்கிறீர்கள். அவர்கள் வேறு மொழி பேசுபவர்களாக இருந்தால் எந்த மோசமான  கிரிமிலுடன் மரியாதையாக  சலாம் போட தயார்.

எனக்கு தெரிந்தவரை இவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. இது இந்திய மீனவர்கள் வைத்த பிரேரணகளில் ஒன்று. இவர்களின் இப் பிரேரணையை இலங்கை மீன்மிடிப்பாளர் சங்கம் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி முடிவெடுக்க உள்ளதாகவும் அதனை மே மாதத்தில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தது. அத்துடன் அரசியல், மீன வளத்துறை, மாகாண அரசு. இலங்கை அரச பிரமுகர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இப்பேச்சுவார்த்தை நேற்றைய தினம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்திருந்தனர்.
 
இதுவரை எதையுமே அவர்கள் தாரை வார்க்கவில்லை அதற்குள் ஏன் இந்த அவசரம்.
  • தொடங்கியவர்

இந்தியா... ரயில்வே தண்டவாளம் போடவும், 55´000 வீடுகள் கட்டவும் ஒத்துக் கொள்ள முடியுமென்றால்....

83 நாள் மீன் பிடிக்க ஏன்.... முடியாது. :D  :lol:

அள்ளிக்கொண்டு போனாள் எடி செல்லமா

அவன் ரோலரால போட்டு சாத்துறான்

உண்மையில் கிந்திய சிங்கள அரசின் கூட்டு சதி இதனால் பாதிப்புக்கு உள்ளாகபோவது தமிழ் மீனவர்கள்தான்.  

ஈழத் தமிழர்கள் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு கரையோர மீன்வளத்தை சிங்களவர்கள் சூறையாட.. ஆழ் கடல் மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஆதிக்கம் செலுத்த.. எம் மீனவர்கள் கரையோரத்தில் நின்று காய வேண்டியான்.

தமிழக - தாயக மீனவர்கள் தமக்குள் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது தான்.. நல்லது. இந்த அப்பம் பிச்சு கொடுக்கும் குரங்கின் நிலையில்.. சிங்களவனை வைப்பது இருதரப்பு மீனவர்களுக்கும் நல்லதல்ல.  :icon_idea:

Edited by nedukkalapoovan

539795_508876359148672_1178771446_n.jpg?

வரைபடத்தில் மஞ்சள் கோடே உண்மையான எல்லை . சதுரம் A தமிழக மீனவரின் பிறப்புரிமை எல்லை, அதற்குதான் கச்சதீவு உள்ளது. அதை சிங்களவன் கைகளுக்கு கொடுத்து தமிழனை சிங்களவன் கொல் வதை அனுமதித்து வேடிக்கை பார்ப்பது பச்ச துரோகம் . 1974 காலத்துக்கு முன் தமிழக மீனவரின் சொர்க்கமாக் இருந்த இந்த தீவை காங்கிரசு அரசு தமிழன் அனுமதி இன்றி சிங்களவனிடம் கொடுத்தது. தமழக மீனவரின் பாவனைக்கும் வலை காயவிடுதல் வாடி அமைத்தல் என்பவற்றிற்கும் உரிமை உடையவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

விட்டா நெடுந்தீவும் தங்கட எண்டுவாங்கள் போல இருக்கு. :)

கச்சைதீவை இந்தியா விட்டுக்கொடுத்து ஒரு சர்வதேச ஒப்பந்தமும் போட்டாச்சு.

இனி தமிழ் நாட்டுக்கு கச்சதீவு வேண்டும் எண்டால் - முதலில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகி அதன் பின் இலங்கையோடு நெகோசியேற் பண்ண வேண்டும்.

இந்தியாவின் சீலைக்குள் ஒளிந்து கொண்டு கச்சதீவு, கன்னித்தீவு என்று சீன் போடுவதை தமிழக கோமாளி அரசியல்வாதிகள் கைவிடோணும்.

இலங்கையோடு நெகோசியேற்  பன்னிகுரம் ,நீங்க உங்க வெலைய பாருங்க.  

கையலகத ஸ்ரீலன்கா தமில் அரசியல்வாதிகள்  வீட தமிழக கோமாளி அரசியல்வாதிகள் தெவலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா எங்க அரசியல்வாதிகள் கையாலாகாதவங்கதான் ஆனால் அவர்கள் ராமேஸ்வரம் தங்களுக்கு சொந்தம் எண்டு சீன் போடவில்லை.

தமிழன் கடல் என்று ஏதுமில்லை. இலங்கை தமிழனின் கடல் வளத்தை சூறையாட தமிழ்நாட்டு மீன்மாபியாக்களும் அவர்கள் பணத்தை எதிர்பார்க்கும் கோமாளி அரசியல்வாதிகளும் செய்யும் டிராமாதான் இது.

விடுங்கையா எங்கள் கடலை நாங்க பாத்துக்கிறோம்.

ஈழ மீனவர்கள் வளங்களை  அவர்கள்  சுரண்டி  போக அனுமதிக்க கூடாது  ரணிலின்  கருத்தே  என் கருத்தும்  தாயும்  பிள்ளையும்  ஆனாலும்  வாயும்  வயிறும்  வேறு ....

அது  எமக்குரிய வளம் எதுக்கு அவங்களுக்கு  கொடுக்கணும் நாம் .

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துட்டுப்போனாலும் பரவாயில்லை, டிரோலர்களில் வந்து, தடைசெய்யபட்ட முறைகளை பயன்படுத்தி அழிச்சிட்டுப் போறாங்கள். படுபாவிகள்.

ஒற்றுமை என்ற போர்வையில் நல்லா மிளகாய் அரைக்கிறார்கள். அதுக்கும் வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் புலத்தில்.

இவர்களுக்கு என்ன, திரும்பி ஊருக்குப் போய் வலையா போடப் போறாங்க? அங்க இருக்கிற சனம்தான் பாவம்.

தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் கூட பரவாயில்லை முழு பணக்கார அரசியல் முதலைகள் தான் வந்து அள்ளுகின்றார்கள்.

தமிழ் நாட்டை சூறையாடியது பத்தாது போல .

அநியாயம்  அநியாயம்.

அம்பாறை முதல் கொக்கு தொடுவாய் வரைக்கும் சிங்களவன் வந்து தமிழனை துரத்தி அடிச்சும் கொலை செய்து போட்டும், இடங்களையும்  மீனும் பிடிக்கிறது அநியாம் இல்லை.   ஆனால் தமிழ் நாட்டுக்காறன் வந்து  எல்லையிலை மீன் பிடிச்சால் அநியாம் தான்.

இங்கை சிலருக்கு யாழ்ப்பாணத்தவைக்கு வாற பிரச்சினை மட்டும் தான் பிரச்சினை. 

Edited by காத்து

இது காலம் காலமாக உள்ள பிரச்சினை

ஆனால் தற்பொழுது பெரிதாக்குகிறார்கள்..

சின்னக்கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோடு...

சிங்களவனுக்கு ஒரே அடியில் பல மாங்காய்....

நமக்கு புருசனும் போச்சு

அண்ணன் தம்பிகளும் போச்சு... :(  :(  :(

இருக்கிற புற்று நோயோ அண்ணை இப்ப பிரச்சினை. எங்கட கவட்டுக்கை வாற கட்டுதானே பிரச்சினை. 

ஆமா எங்க அரசியல்வாதிகள் கையாலாகாதவங்கதான் ஆனால் அவர்கள் ராமேஸ்வரம் தங்களுக்கு சொந்தம் எண்டு சீன் போடவில்லை.

தமிழன் கடல் என்று ஏதுமில்லை. இலங்கை தமிழனின் கடல் வளத்தை சூறையாட தமிழ்நாட்டு மீன்மாபியாக்களும் அவர்கள் பணத்தை எதிர்பார்க்கும் கோமாளி அரசியல்வாதிகளும் செய்யும் டிராமாதான் இது.

விடுங்கையா எங்கள் கடலை நாங்க பாத்துக்கிறோம்.

தனது தாய் நாடு ஈழத்தையே  அழித்த சொறிலங்காவை எப்பவுமே ஆதரித்து  தனது பிறந்த நாட்டை எந்த அன்னியனுக்கும் சலாம் போடுமாறு பிரசங்கம் செய்யும் பிரசங்கி  கோமாளிகள் தமிழக அரசியல் வாதிகளை கோமாளி என்று சொல்லுதுங்க. எங்கட கடலாம் இப்ப அது சொறி லங்கா கடலாம்.

Edited by trinco

அப்ப இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் சென்று  83 நாட்கள் மீன் பிடிக்கலாமா? 

அல்லது ஒரு போகம் பயிர்தான் செய்யலாமா? 

இதுக்குமாத்திரம் இலங்கையின் இறைமையை எங்கே கொண்டுபோய் அடையு வைத்தார்களோ?

எடுத்துட்டுப்போனாலும் பரவாயில்லை, டிரோலர்களில் வந்து, தடைசெய்யபட்ட முறைகளை பயன்படுத்தி அழிச்சிட்டுப் போறாங்கள். படுபாவிகள்.

ஒற்றுமை என்ற போர்வையில் நல்லா மிளகாய் அரைக்கிறார்கள். அதுக்கும் வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் புலத்தில்.

இவர்களுக்கு என்ன, திரும்பி ஊருக்குப் போய் வலையா போடப் போறாங்க? அங்க இருக்கிற சனம்தான் பாவம்.

இலங்கை தடை தமிலக மீனவர்கலுகு பொருந்தாது.

வீட்ல அன்னன் தம்பிகுட ஒற்றுமையா இல்லதவங்க,  கடல் தாண்டி ஒற்றுமையாவா  இருக்கும். 

ஒற்றுமை நீங்க இருந்தல் தமிழ் ஈழம் என்றொ மலர்ந்து இருக்கும். 

.

.

.

.

நீங்க வந்த வேலையை சரியா செய்ரீங்க. :icon_mrgreen:

Edited by VENDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.