Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண விஜயத்தில் ரணிலுக்கு நெருக்கடியைக் கொடுத்த விக்னேஸ்வரன் விவகாரம்

Featured Replies

 

112.jpg?resize=620%2C284

 

வடமாகணத்துக்கான மூன்று நாள் விஜயத்தை நேற்று ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவகாரம் பெரும் நெருக்கடியைக் கொடுத்தருப்பதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

விக்னேஸ்வரனுடனான முரண்பாடு காரணமாக அவருடனான சந்திப்பைத் தவிர்த்துக்கொண்ட பிரதமர், தன்னுடைய நிகழ்வுகளுக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இதனால் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலின் நிகழ்வுகளைப் புறக்கணிததார்கள்.  இருந்தபோதிலும் வடமாகாண ஆளுநர் பாளிகார இந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.

 

வடமாகாண சபை இந்த நிகழ்வுகளைப் புறக்கணித்தமை ரணிலின் விஜயத்தின் போது முக்கிய விவகாரமாக நோக்கப்பட்டது. சர்வதேசத்துக்கும் இது ஒரு செய்தியை வெளிப்படுத்தியது.

 

இந்தப் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு, அவருடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என சிவில் அமைப்புக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடமிருந்து கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.

 

பிரதமரின் விஜயம் குறித்து அவரது அலுவலகத்திலிருந்து முதலமைச்சருக்கு எந்தவிதமான அழைப்பும் அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க பங்குகொள்ளும் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்திருந்தனர்.

 

அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பங்குகொண்ட போதிலும், யாழ். மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறிதரன் இவற்றைப் புறக்கணித்ததுடன், அது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். வடமாகாண சபைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாமையால்தான் இதனை தான் புறப்பணிப்பதாக சிவஞானம் தெரிவித்திருந்தார்.

 

இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட பைவங்கள் பலவற்றிலும், “விக்கினேஸ்வரனுடன் முரண்பட வேண்டாம்” என அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஐ.தே.க.வுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றது.

 

மாகாண சபையுடன் முரண்பட்டுக்கொண்டு வடக்கில் ஐ.தே.க.வினால் அரசியல் செய்ய முடியாது எனவும் ரணிலுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

இந்தப் பின்னணியில் முதலமைச்சரையும், பிரதமரையும் சந்திக்கவைப்பதற்கான முயற்சிகளில் சில முக்கியஸ்த்தர்கள் இறங்கியிருப்பதாகவும் தெரிகின்றது. ஆளுநரும், மதப்பெரியார்கள் சிலரும் இது குறித்து இரு தரப்பினருடனும் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இன்று சனிக்கிழமையும் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பார் என்பதால், இன்றைய தினம் சந்திப்பு ஒன்றுகான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. இதன் மூலம் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

முதலமைச்சர் விடயத்தில் தாம் எதனையும் செய்ய முடியாது என கூட்டமைப்பின் தலைமையும் சொல்லிவிட் டநிலையில், மூன்றாவது தரப்பு மத்தியஸ்த்தத்தின் மூலம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகின்றது.

http://tamilleader.com/?p=47888

 

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு.... மண்டையிலை, சரக்கு.. அவ்வளவு தான்.
ஒரு நாட்டுப் பிரதமர், ஒரு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் போது..

அந்த மாகாண முதல்வரின் கை குலுக்கல் வரவேற்பின் உள்ளே... நுழைவது, உலக... நடைமுறை.
எலிசபத் மகாராணியே.... ஒரு முறை... சிலோனுக்கு வந்த போது...

தனது வெள்ளை கையுறைகளை கழட்டி... தனக்கு கணக்கு படிப்பித்த,

வன்னி சுந்தர லிங்கத்துக்கு...." கை "கொடுத்தவ....
 

சிங்களவன், மோட்டு..சிங்களவன்.
இது தெரியாத.... சிங்கள "ரணில்." பிரதமராக இருந்து பிரியோசனமில்லை.
அடுத்து..... நாம், செய்ய வேண்டியது....
ஆயுதத்தை.... தூக்க, வேணும் போலை கிடக்கு.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு.... மண்டையிலை, சரக்கு.. அவ்வளவு தான்.

ஒரு நாட்டுப் பிரதமர், ஒரு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் போது..

அந்த மாகாண முதல்வரின் கை குலுக்கல் வரவேற்பின் உள்ளே... நுழைவது, உலக... நடைமுறை.

எலிசபத் மகாராணியே.... ஒரு முறை... சிலோனுக்கு வந்த போது...

தனது வெள்ளை கையுறைகளை கழட்டி... தனக்கு கணக்கு படிப்பித்த,

வன்னி சுந்தர லிங்கத்துக்கு...." கை "கொடுத்தவ....

 

சிங்களவன், மோட்டு..சிங்களவன்.

இது தெரியாத.... சிங்கள "ரணில்." பிரதமராக இருந்து பிரியோசனமில்லை.

அடுத்து..... நாம், செய்ய வேண்டியது....

ஆயுதத்தை.... தூக்க, வேணும் போலை கிடக்கு.

 

 

இன்டைக்கு வெள்ளிக்கிளமை ஆளை விடங்கோ சாமியோவ் :rolleyes::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எந்த ஆயுத்தைதை தூக்குவதற்கு தயாராகிறாரோ

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சிறியர், தூக்கிடாதீங்க, ஆயுதத்தை.

வெள்ளிக்கிழமை, கப்புப்புக் கப்பெண்டு ஏறினது, உங்கட கதையை கேட்டு ரென்சனில இறங்கீட்டுது...

ரணிலின்ற அரசியல், முந்தி, MP ஆக இருந்த காரைநகர் தியாகராயா நினைவுக்கு வர வைக்கும்.

அவரை, பனித்தியாகர் எண்டு சொல்லுறவை. அந்த தொகுதியில், ஒரு குறித்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்குள், அடிபிடி, கொலை, ஒழுக்கமின்மை என நல்ல பெயரில்லை.

தியாகர், சுதந்திர கட்சி சார்பில் போட்டி இட்டார். அந்த பகுதியில் 3000 வாக்குகள் கிடைக்கும். ஜயா ஒருக்கா தலையை காட்டுங்க எண்டு, ஏஜண்டுகள் சொல்ல பனித்தியாகர் போகமாட்டேன் எண்டு போட்டார்.

ஏஜண்டுகள், வேற பகுதிக்கு போற மாதிரி உங்க கொண்டு போய் இறக்க, சனத்தை கண்டு சந்தோசமாக, இறங்கியவருக்கு, எங்க நிக்கிறம் எண்டு புரிந்ததும், வந்ததே கோபம்.

இந்த கோதாரிபிடிப்பாரின்ற வாக்குகள் வேண்டாம் எண்டால், உந்த நாசமறுவார், கேட்டால் தானே என்று, கத்தி காருக்க ஏறிக் குந்திட்டார்.

பனித்தியாகர், அந்த முறை தோல்வி. பிறகு வெல்லவே இல்லை.

ரணிலும் இந்த கோஸ்டி தான் போல... :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

112.jpg?resize=620%2C284

 

அதுசரி  பிரேமதாசவின்ரை மனுசி ஹேமாவுக்கு யாழ்ப்பாணத்திலை என்ன அலுவல்?

ஐயோ சிறியர், தூக்கிடாதீங்க, ஆயுதத்தை.

வெள்ளிக்கிழமை, கப்புப்புக் கப்பெண்டு ஏறினது, உங்கட கதையை கேட்டு ரென்சனில இறங்கீட்டுது...

ரணிலின்ற அரசியல், முந்தி, காரைநகர், MP ஆக இருந்த தியாகராயா நினைவுக்கு வர வைக்கும்.

அவரை, பனித் தியாகர் எண்டு சொல்லுறவை. அந்த தொகுதியில், ஒரு குறித்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்கள், அடிபிடி, கொலை' ஒழுக்கமின்மை என நல்ல பெயரில்லை.

தியாகர், சுதந்திர கட்சி சார்பில் போட்டி இட்டார். அந்த பகுதியில் 3000 வாக்குகள் கிடைக்கும். ஜயா ஒருக்கா தலையை காட்டுங்க எண்டு, ஏஜண்டுகள் சொல்ல பனித்தியாகர் போகமாட்டேன் எண்டு போட்டார்.

ஏஜண்டுகள், வேற பகுதிக்கு போற மாதிரி உங்க கொண்டு போய் இறக்க, சனத்தை கண்டு சந்தோசமாக, இறங்கியவருக்கு, எங்க நிக்கிறம் எண்டு புரிந்ததும், வந்ததே கோபம்.

இந்த கோதாரிபிடிப்பாரின்ற வாக்குகள் வேண்டாம் எண்டால், உந்த நாசமறுவார், கேட்டால் தானே என்று, கத்தி காருக்க ஏறிக் குந்திட்டார்.

பனித்தியாகர், அந்த முறை தோல்வி. பிறகு வெல்லவே இல்லை.

ரணிலும் இந்த கோஸ்டி தான் போல... :D

 

பனித் தியாகர்தான்.. ஆனால் ஒரு முறை வட்டுக்கோட்டை தொகுதியில் எம்பியாக இருந்தாலும், பல அபிவிருத்திகளையும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்த பெருமை அவரையே சேரும்.

 

அதற்கு முதல் தொடர்ந்து 4 (?) முறை எம்பியாக இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு செய்தது என்னவென்றால் தனது ஊரான பண்ணாகத்தில் சிலருக்கு CTB வஸ்ஸில் டிரைவர், கொண்டக்டர் வேலை எடுத்துக் கொடுத்தது  மட்டுந்தான்.  (மற்றது தனது பிள்ளைகளான காண்டீபனையும், பகீரதனையும் இலண்டனில் படிக்க வத்து, சுளையாகச் சீதணம் வாங்கி திருமணம் செய்து வைத்ததுதான்.)

 

தியாகர் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமிர்தலிங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று.. பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார். 

 

அடுத்த தேர்தலில் எங்கும் தமிழீழ அலை அடித்ததே அவர் வெற்றி பெற முடியாமைக்கு முக்கிய காரணம். (தமிழீழம் என்ற கோட்பாட்டை வைத்து போட்டியிடாவிட்டால் அமிர்தலிங்கம் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.)  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அமிர்த்தலிங்கதின் சுய ரூபம் தெரிய இலட்சக்கணக்கான தமிழரின் உயிர் காவு கொடுக்கபட்டு உள்ளது. சுமன்திறனின் அரசியலால் ஒரு இனமே உலகில் காணமல் போகப்போவுது .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண விஜயத்தில் ரணிலுக்கு நெருக்கடியைக் கொடுத்த விக்னேஸ்வரன் விவகாரம்

 

 

ரணிலைப்புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்

ஒற்றுமை

தியாகம்

வீரம் என இருந்த புலிகளையே பிரித்து அழித்தவர் அவர்...

 

இன்று விக்கினேசுவரருடன் மோதுவது போல் பருப்புக்காட்டி

கூட்டமைப்பை பிரிக்கமுயல்கிறார்

இதைப்புரியாமல்

இதன் ஆபத்தை உணராமல்

கூட்டமைப்பு  பாராளுமன்ற உறப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்

தமக்குள் விரிசலை ஏற்படுத்துகின்றனர்

இதைப்பெரிது படுத்திவிட்டு

ரணில் குளிர் காய்வார்

தமிழருக்கு எந்தவித சக்தியும் இதனுடன் இல்லாது போகும்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தண்ணியில் ரணிலின் பருப்பு அவியாது....எங்கயோ எப்பவோ கேட்ட கதைவசனமாக இருக்கா....1980 களில் மன்னார் எம்.பி சூசைதாசன் அவர்களின் வசனம்....(மன்னார் தண்ணியை யாழ் தண்ணி என மாற்றியுள்ளேன்)

நிமிர்த்து  நிக்கும்  வடக்கு முதல்வர்  மூலம்  அடுத்த  கட்ட  போருக்கு  மக்கள்  தயாராக  வேணும் என்று  ஒரு  அகதி  தமிழனா  இணைய  மூலம்  கூறிக்கொண்டு  செய்தியை  தொடர்த்து  படிக்கிறேன்  :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தண்ணியில் ரணிலின் பருப்பு அவியாது....எங்கயோ எப்பவோ கேட்ட கதைவசனமாக இருக்கா....1980 களில் மன்னார் எம்.பி சூசைதாசன் அவர்களின் வசனம்....(மன்னார் தண்ணியை யாழ் தண்ணி என மாற்றியுள்ளேன்)

 

உண்மைதான்

ஆனால் சூசைதாசன் என்ன ஆனார்??

அவரது இலக்கு என்னாச்சு?

அவரது இனத்தின் இன்றையநிலை என்ன?

நாள் 

ஆண்டு

தண்ணி முக்கியமில்லை சகோ

இலக்கில் வென்றோமா?

அத தான் முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஒரு குள்ள நரி!!!புலிகளில் இருந்து கருணாவைப் பிரித்ததும் ரணில்,மகிந்தவிடம் இருந்து மைத்திரியைப் பிரித்து ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைத்த ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து குறுக்கு வழியில் பிரதமராகி இருக்கிறார். இப்ப கூட்டமைப்பைப் பிரிக்கும் வேலலையில் இறங்கியிருக்கிறார்.என்ன இருந்தாலும் வடமாகாண முதலமைச்சரை புறக்கணித்த நிகழ்வில் ததேகூட்டமைப்பின் தலைவர்கள் பங்கு கொண்டமை கண்டிக்கப் பட வேண்டியது. முதலமைச்சரைப் புறக்கணித்தது தமிழ்மக்களைப் புறக்கணித்ததற்குச் சமமாகும்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர் பிரதிநிதிகள்ளும் தமிழ் மக்களை அவமதித்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

cvw-1(1).jpg

 

நோ டென்ஷன் ப்ளீஸ்...

 
தமிழ் மக்கள் வாக்குகளில் வென்ற இரண்டு பேரும் சந்தித்தார்கள்.
 
பின்கதவால் வந்தவர் குறித்து அலட்டிக் கொல்வதேன் ?

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.