Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!

Featured Replies

தாயகத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
அதேசமயம் வெளிநாட்டில் வாழும் உறவினர்களின் பணத்தில் சோம்பேறிகளாக வாழும் ஒரு பகுதியினர் உள்ளார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்படியான பொருளாதாரம் ஒருகட்டத்தில் களவுக்கு ஏவும் என்பதை கடந்து போன பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

இத்தகைய களவுகளை கண்டும் அதைக் காணாதுவிடுவதோ அல்லது அதற்கு நியாயம் கற்பிப்பதோ எதிர்காலத்தில் இதன் வளர்ச்சிக்கு உதவுவது போன்றது.

இவற்றின் பரிணாமம் கொலையளவுக்குக் கூட வளர்ச்சியடையலாம். அதனால் மக்கள் காவற்துறையை சார்ந்து வாழ்வது தவிர்க்க முடியாதது என்றொரு நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இங்கே அவர் ஏற்கெனவே சில சங்கிலிகளை அந்த இடத்தில் திருடி இருக்கிறார்.. வேறு 2 பெண்களுடன் தூர இடத்தில் இருந்து திருடுவதற்காக வந்திருக்கிறார்.. ஆகவே இது அவரது முதல் திருட்டு முயற்சி என்றும் கூற முடியாது. இவரை அடையாளப்படுத்தாதுவிட்டால் இவர் இதே திருட்டை இன்னோர் இடத்தில் தொடரமாட்டார் என என்ன நிச்சயம்?!!

இப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்... சட்டதரணி மூலம் இவரை வெளியில் எடுத்து, இனிமேல் திருடாமல் இருக்கும்விதத்தில் ஒரு நிரந்தர வருமானத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்... இவருக்காக செய்வீர்கள் என நினைக்கிறேன்.. செய்தால் அறியத் தாருங்கள்.. ஒரு நன்றியாவது சொல்ல ஆசைப்படுகிறேன்!!

  • Replies 80
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பா சண்டை சும்மா பிடிக்கிறியள்.... :D

எதுக்கும் இவை இரண்டு பேரிட்டையும் ஒரு பைனல் ஒப்பினியன் கேட்டுப்பாக்கலாமே....ஏனெண்டால் இவைக்கு அனுபவம் கூட இருக்குமெண்டு நினைக்கிறன். :icon_mrgreen:

thirudar_breaking_house.png

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சம்மந்தமான செய்தியில், இவர்களின் பின்புலம், குடும்ப நிலமைகள், சமுதாயத்தில் பொருளாதார சமனிலையின்மை, படம் போட்டதனால் இவர்களுக்கு ஏற்பட கூடிய கொளரவ பாதிப்புக்கள், லண்டன் இல் வாழ்பவர்கள் எல்லாரும் குடிசைக்கு சமினில்லாத வீடுகளில் வாழவில்லை என்ற குற்றம்...போன்றவற்றை பதிந்ததாக ஞாபகம் இல்லை.....இல்லா விட்டால் என் கண்ணுக்கு படவில்லையோ தெரியாது :(

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற நடைமுறைகளால் குற்றம் என்று நிரூபிக்காத வரை ஒருவரை கள்வன்.. கள்ளி என்று சொல்ல முடியாது. சாதாரண பொதுமக்கள் சொல்லலாம். ஊடகங்கள் சொல்ல முடியாது.

அந்த வகையில்.. சந்தேக நபர் என்று செய்தி வெளியிடுவதே பொருத்தமானது.

இணைய தமிழ் ஊடகங்கள் நடத்துபவர்களில் பலர் சும்மா நபர்கள். ஊடகவியலாளர் பயிற்சி நெறிகளை கற்றவர்களோ.. பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. அவர்களை கட்டுப்படுத்த உலகில் எதுவும் இல்லை என்ற நினைப்பு அவர்களுக்கு. எமது மக்களுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெரியாத அறியாமை.

இந்தச் செய்திகளை யாழில் தான் படித்து அறிகிறோம். தமிழ் செய்தி இணைய ஊடகங்களை  வாசிப்பதில்லை. அவர்களின் தரம் அப்படி.

மேலும் பெண் என்பதற்காக சந்தேக நபர்கள் குறித்து ஈவு இரக்கம் காட்டனும் என்றில்லை. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இந்த பெண்ணுக்காக வாதாடும் சிலர் " இலன்டனில் வீடுடைக்கும் தமிழர்கள்" என்ற திரியில் எழுதியதை வாசியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/155592-லண்டனில்-வீடுடைக்கும்-தமிழ்-தி/

பிழை செய்தால் சந்தியில்  வைத்து  சுடும்  நிலைமையில் வளர்த்த  நாம் குற்றம்  யாரு  செய்தாலும்  தண்டனை  கொடுப்பதில்  தவறு  இல்லை  இது  பெண்ணை  இருந்தால் என்ன ஆணா  இருந்தால்  தான்  என்ன  குற்றம்  குற்றமே  இங்க  போலி  மனிதாபிமானத்துக்கு  இடம்  இல்லை ...

படம்  இன்னும்  பெரிய  போஸ்டர்  அடிச்சு  ஓட்டனும் இல்லை  பிழை  என்பவர்கள்  அந்த  பிள்ளை  களவு  எடுக்காமல்  இருக்க  மாதம்  காசு  அனுப்பலாம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசு வராதவன் எல்லாம் ஊரில களவெடுத்துக்கொண்டா இருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சுரன் அண்ணே.....  களவெடுத்து நிரூபிக்கப்பட்டால்.. மொட்டை தாணண்ணே போடுறது. சுடுறதில்லை அண்ணே. அது உங்களைப் போல முன்னாள் இயக்கம் என்று கொண்டு காட்டிக்கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடியந்தாக்களை தான் அண்ணே தேசத்துரோகக் குற்றத்துக்காக சுடுறது. அது உலகம் பூரா அப்பாவி மக்களை.. அவர்களின் நாடுகளை..  உங்களைப் போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற செய்யுற நடவடிக்கை தானுண்ணே. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

தேய்க்காய்  களவு  எடுத்தவனை  எல்லாம்  சுட்ட  வரலாறு  இருக்கு எங்களிடம் இது  எல்லாம்  பிரிட்டன்  மகாராணி  பேரனுக்கு  எங்க  புரியபோகுது  விளங்க  போகுது  விடுங்கோ .... :icon_idea:

புலிய மட்டுமே  தெரிந்த  ஆக்கள் யூடிப்பில்  சீமான்  பேச்சை  கேட்டு  ஈழ  விடுதலை  பேசினா  இப்படித்தான்  நெடுகர்    :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எத்துணை துன்பம் வந்தாலும் இடர்கள் ஏற்பட்டாலும் உயர்ந்த மனித நாகரீகத்தைப் பேணவேண்டும் என்ற உள்ளம்கொண்டவர்கள் தமிழர்கள். யாழ்களமும் அத்தகைய தமிழர்களை வெளியே கொண்டுவந்து காட்டுவதற்கு இந்தப்பதிவும் உதவியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பதுபோல் சிறீலங்கா அரசுகளுக்கு ஏற்ப அந்தநாட்டுச் செயல்முறைகளும் இருப்பது ஆச்சரியமானது அல்ல. 
 
குற்றமிழைத்த ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் அவரைச் சந்தேக நபராகப் பார்க்கவேண்டிய பண்பு சிறந்தது. மனிதநேயத்தைக் கொண்ட நாடுகள் அதனைக் கடைப்பிடித்து வருவதும் கண்கூடு. அத்தகைய நாடுகளோடு சிறீலங்காவை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்குச் சார்பாக நீதிவழங்கும் நீதிபதிகளையும் கொண்ட நாடுதான் சிறீலங்கா என்ற நாடு.  இதனை அதிகமாக அந்நாட்டுத் தமிழர்கள் அறிந்துகொண்டுள்ளது மட்டுமல்ல அனுபவித்தும் வருகின்றனர். இந்தப்பெண் உண்மையிலே குற்றவாளியாக இருந்தாலும் அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நீதிமன்றம் செயற்பட்டவும் அங்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏற்பட்டால் பல பொதுமக்கள் பாதிப்படையப் போவதைத் தவிர்க்க முடியாது. அன்றிக் குற்றவாளியல்ல என்றால், அந்தப் பெண்மட்டுமே பாதிப்படைவார். இது தற்போதைய சிறீலங்கா நாட்டைப்பொறுத்த ஒரு கசப்பான உண்மை.  
 
அஞ்சுரன் அண்ணே.....  களவெடுத்து நிரூபிக்கப்பட்டால்.. மொட்டை தாணண்ணே போடுறது. சுடுறதில்லை அண்ணே. அது உங்களைப் போல முன்னாள் இயக்கம் என்று கொண்டு காட்டிக்கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடியந்தாக்களை தான் அண்ணே தேசத்துரோகக் குற்றத்துக்காக சுடுறது. அது உலகம் பூரா அப்பாவி மக்களை.. அவர்களின் நாடுகளை..  உங்களைப் போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற செய்யுற நடவடிக்கை தானுண்ணே. :lol::icon_idea:

களவெடுத்தவங்களை மட்டுமில்லை.. தனது குடும்பத்து கஸ்ட நிலையை சமாளிக்க கசிப்புக் காச்சினவங்களையே போட்டி போட்டுக்கொண்டு சுட்ட இயக்கங்களைப்பற்றி தெரியாதா?! இந்த வேலையை அப்போது அனேகமாக எல்லோருந்தான் செய்தார்கள்!!

கஸ்டத்துக்கு கசிப்புக் காச்சி வித்து பறித்த உயிர்கள் எத்தனை. அத்தனைக்கும்.. பரிகாரம்..?!

கசிப்பு தடைசெய்யப்பட்ட ஒன்று. அதனை உற்பத்தி செய்வதும்.. விற்பதும் தண்டனைக்குரிய குற்றம்.

கஸ்டம் என்று கள்ள நோட்டு அடிச்சு பணக்காரன் ஆனால்.. உலகத்தில் எந்த அரசு அனுமதிக்கும்..??!

கஸ்டம் என்று கஞ்சா விற்றால்.. அனுமதிப்பார்களா..?!

கஸ்டத்தைப் போக்க எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்குது. பாடுபடாமல்.. கஸ்டத்தை நீக்க முடியாது.

ஒரு கொக்கு மீனுக்கு கஸ்டம் என்று திருடித் தின்பதில்லை. காத்திருந்து பிடித்துத் தின்கிறது. அந்தப் பொறுமை கூட இல்லாத மனிதர்களை திருத்துவது எப்படி..??!

மற்றைய இயக்கங்களைப் பற்றி தெரியாது. புலிகளைப் பொறுத்த வரை.. விசாரணைகள்.. 3 எச்சரிக்கைகளுக்கு அப்புறம் தான் தீவிர தண்டனை வழங்கினார்கள். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி யு டேர்ன் அடிச்சாச்சு.
மற்ற ஊர் அறிஞர்கள் இனி களமிறங்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

சமூக, பகிரங்க வலைத்தளங்களில் மற்றவரின் அனுமதி பெறாமல் எதை போடுகிறார்கள் என்பதே அது பாதிப்பா நன்மையா என்பதைத் தீர்மானிக்கும் காரணி. புத்தக வெளியீட்டுக்குப் போனவர்களின் படங்களை முகங்களுடன்  செய்தியில் போட்டால் அது விதிமீறல் அல்ல, செய்தி! செய்தியில் வரக் கூடும் என்று தெரிந்து போனவர்களுக்கு இதனால் பாதிப்பு வருமா என்றால் இல்லை! ஆனால் ஒரு சந்தேக நபரை நீதி விசாரணைக்கு முன்பே படம் எடுத்து பகிரங்கப் படுத்துவது கேவலமான செயல் மட்டுமல்ல, நீதி நடைமுறைகளைப் பாதிக்கும் செயல். ஒரு உதாரணத்திற்கு, அதே கூட்டத்தில் இன்னொரு நபரின் நகையைத் திருடிய வேறொரு திருடன் தப்பி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நகை போன ஆத்திரத்தில் பறி கொடுத்தவர், பேப்பரில் படத்தைப் பார்த்து விட்டு "இந்தப் பெண் தான் அருகில் நின்றார்" என்று சாட்சி சொல்லக் கூடும்! மேற்கு நாடுகளில், நீதிக்குப் பங்கம் வரக் கூடாது என்பதாலும் தான் சந்தேக நபர்களைப் பகிரங்கப் படுத்துவதில்லை. மேற்கு நாடுகளில் இருந்து, குடி கூத்து, கடன் வாங்குதல், வங்குரோத்து அடித்தல் எல்லாம் கற்றுக் கொள்வோம் நாங்கள், ஆனால் உருப்படியான விடயங்கள் வரும் போது வடலியை விட்டு வரவே மாட்டம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

எத்துணை துன்பம் வந்தாலும் இடர்கள் ஏற்பட்டாலும் உயர்ந்த மனித நாகரீகத்தைப் பேணவேண்டும் என்ற உள்ளம்கொண்டவர்கள் தமிழர்கள். யாழ்களமும் அத்தகைய தமிழர்களை வெளியே கொண்டுவந்து காட்டுவதற்கு இந்தப்பதிவும் உதவியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பதுபோல் சிறீலங்கா அரசுகளுக்கு ஏற்ப அந்தநாட்டுச் செயல்முறைகளும் இருப்பது ஆச்சரியமானது அல்ல. 
 
குற்றமிழைத்த ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் அவரைச் சந்தேக நபராகப் பார்க்கவேண்டிய பண்பு சிறந்தது. மனிதநேயத்தைக் கொண்ட நாடுகள் அதனைக் கடைப்பிடித்து வருவதும் கண்கூடு. அத்தகைய நாடுகளோடு சிறீலங்காவை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்குச் சார்பாக நீதிவழங்கும் நீதிபதிகளையும் கொண்ட நாடுதான் சிறீலங்கா என்ற நாடு.  இதனை அதிகமாக அந்நாட்டுத் தமிழர்கள் அறிந்துகொண்டுள்ளது மட்டுமல்ல அனுபவித்தும் வருகின்றனர். இந்தப்பெண் உண்மையிலே குற்றவாளியாக இருந்தாலும் அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நீதிமன்றம் செயற்பட்டவும் அங்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏற்பட்டால் பல பொதுமக்கள் பாதிப்படையப் போவதைத் தவிர்க்க முடியாது. அன்றிக் குற்றவாளியல்ல என்றால், அந்தப் பெண்மட்டுமே பாதிப்படைவார். இது தற்போதைய சிறீலங்கா நாட்டைப்பொறுத்த ஒரு கசப்பான உண்மை.  

மேலே கிழவிக்கு எழுதிய பதிலில் இதையும் தான் சொல்ல நினைத்தேன்! "படத்தை போட்டதால் என் கட்சிக் காரர் மேல் அபாண்டமான பழி விழுந்து விட்டது" என்று வாதாடி வெளியே விட்டால், நகை பறி கொடுத்தவருக்கு நீதியும் இல்லை, பறித்தவருக்கு திருந்துவதற்கான சந்தர்ப்பமும் இல்லை, அவசியமும் இல்லை. படத்தோட செய்தி போட்ட வெங்கணாந்திக்கு ஒரு பதிப்பும் இல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா, விட்டால், போலீஸ்காரர் அங்க நிண்டதே பிழை, அந்தப் பெண் நகை போட்டு வந்து, திருட்டை ஊக்குவித்ததே பிழை என்ற ரீதியில் கதைப்பியல் போல கிடக்கிறதே.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், பொலீசாரால் 'சந்தேகத்தின்' பால் கைது செய்யப்பட்டுள்ளார். படங்களை பிடிக்கவும், அதை வெளியிடவும் அநுமதித்து, இவரது பின்புலம் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புர கோருவதும் எங்கும் நடப்பது.

சிலரது வாதங்களன்படி, கதவு உடைத்து உள்ள பூரும், வீடியோவில் உள்ளவர்களும், அப்பாவிகள் அல்லவோ?

நாதமுனி! எங்க உகண்டாவிலயா இருக்கிறீங்கள்? :D எங்கும் நடப்பதா இது??

சந்தேக நபரைக் காவல் துறை பிடித்து வழக்குப் பதிவு செய்து mug shot எடுத்துப் பதிவு செய்த பின்னர் தான் மேலதிக தகவலுக்காக அவர்களது உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வரும்! இந்த முறை கூட பாரதூரமான வன்முறைக் குற்றங்களுக்கு மட்டும் தான்! எந்த நாட்டிலும் "இந்தா போட்டோ பிடியுங்கோ!" எண்டு காவல் துறை சந்தேக நபரைக் காட்டிக் கொண்டு நிற்பதாக நான் கேள்விப் படவில்லை!

பிற்குறிப்பு: "சந்தேக நபர்" , அப்பாவி, குற்றவாளி போன்ற பதங்களுக்கு என்ன வரைவிலக்கணம் என்று கையோட ஒருக்காத் தேடிப் படித்து விடுங்கள்! :D இங்கே இதைக் கண்டிக்கும் யாரும் "அப்பாவி" என்று சொன்னதாக எனக்குத் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

Justin என்னையா சொல்கிறீர்கள்?

இந்த தமிழர் உள்ள வீடீயோவை வெளியிட்டு தகவல் கேட்பது பொலீசார் இல்லையா?

பிரித்தானியாவில், அப்பாவிகளை, 'Trail by media' வகையில், குற்றவாளிகளாக காட்ட வைத்து, உண்மையான குற்றவாளியை, அப்பாடா தப்பித்தோம், என நிம்மதியாக வெளிவர வைத்து, அமுக்கிய சம்பவங்கள் கூட நடந்து உள்ளனவே. (Bristol, Jonna Yates Murder case என google பண்ணிப்பாருங்சள்)

பொலீசார், 'சந்தேகத்தின்' பேரால் யாரையும் கைது செய்ய முடியும். அது 'வெறும்' சந்தேகம் மட்டுமே என வாதாடி வெளிவருவதே 'சந்தேகநபர்' வேலை. இதுவே அடிப்படை கிரிமினல் சட்டம். (It is unfortunate for that suspected person to be in the wrong place at the wrong time, if that person is innocent: as they say in lawyers chambers)

e-fit வகை படங்களை வெளியிட்டு தகவல் கேட்பது என்ன வகை ஜயா?

Crime Watch பார்ப்பதில்லையா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! எந்த வீடியோவைக் கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை? ஆனால், சங்கிலி திருடிப் பிடிபட்ட பெண்ணின் படத்தைப் பொலிஸ் கொடுத்தா நியூ ஜவ்னா போட்டது? எ-fஇட் சட்ட பூர்வமாக ஒருவரைக் காவல்துறை தேடுவது, அதுவா இங்கே நடந்தது?

"trial by media" இல் தற்காலிகமாகவேனும் அப்பாவிகள் மாட்டிக் கொண்டார்கள் என்று நீங்களே சொல்லி இந்த மீடியாக்கள் ஏன் சட்டத்தின் வேலையைத் தாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஆதாரம் தருகிறீர்கள்! நீங்கள் எழுதுவதை நீங்களே வாசிக்க மாட்டீர்கள் போல! :D

Edited by Justin

முடியல,

Trail by media பத்தி தானே பேசுறோம் தல!!

ஆ, இந்த பெண்......

ஆகா, கோயிக்கு வெளில, Justin உடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டனான் என்பது போன்ற தகவல்கள் தான், போலீசாரும், சமூகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது, இல்லையா? :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! நீங்கள் செய்தியின் ஆரம்பத்திலிருந்து வாசித்து விட்டு வருவது பலரின் நேரத்தைச் சேமிக்கும்! இது பொலிசார் வெளியிட்ட படம் அல்ல! பொறுப்பற்ற ஒரு மீடியா வெளியிட்ட படம்! அதுவே இங்கு பிரதான வாதம்!

என்றாலும் உங்களிடம் ஒரு கேள்வி, தனிப் பட்ட தாக்குதலாக எடுக்க வேணாம்! ஒரு உதாரணம் மட்டுமே! இது போன்ற நிலைமைகளில் படம் வெளிவந்தவர் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் உங்கள் பதில்கள் இப்படித் தான் இருக்குமா? (இதைப் personal ஆக எடுக்க வேண்டாம்! நியூ ஜவ்னாக் காரர்களிடமும் இதையே கேட்க ஆசை, ஆனால் இவர்களுக்கு விரயம் செய்ய என்னிடம் நேரம் இல்லை!)

உங்களிடம் ஒரு அப்பாவித்தனமான கேள்வி!

கமராவைக் கொண்டு போய் போலீசாரையும், சந்தேக நபரையும், 'ஏதோ' வகை அனுமதி இன்றி, படம் பிடிக்கவும், பிரசுரிக்கவும் முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் ஒரு அப்பாவித்தனமான கேள்வி!

கமராவைக் கொண்டு போய் போலீசாரையும், சந்தேக நபரையும், 'ஏதோ' வகை அனுமதி இன்றி, படம் பிடிக்கவும், பிரசுரிக்கவும் முடியுமா?

:rolleyes: உங்களுக்கு அதே அப்பாவித் தனத்துடன் ஒரு பதில்: இப்ப யாரும் கமெராவைத் தூக்கித் திரிவதில்லை! யாழில் ஸ்மார்ட் போன் பாவனை லண்டனுக்குச் சமமாக இருக்கிறது இப்போது! புள்ளிகளை இணைக்க முடிகிறதா அல்லது அதையும் செய்து விடவா? :rolleyes:

ஒன்று மட்டும் உண்மை் இப்படியான படங்களை பிடித்து வெளியிடுபவர்களை போன்ற அயோக்கியர்களை போன்று உலகில் எவருமில்லை.

இவர்கள் தான் விபத்தில் உயிர் துடிக்கும்போதும் புலிக் கூண்டில் ஒருவன் உயிருக்காக போராடும் போதும் அவர்களை காப்பாற்றும் சிந்தனையற்று அச் சம்பவங்களை படம் பிடித்து பணம் பெருக்கும் வக்கிர மனம் கொண்டவர்கள் .

இவர்களை விட அந்த பெண்ணை மேலாகத்தான் நான் பார்க்கின்றேன்் ஏனெனில் அவள் நிச்சயமாக தன் குடும்ப துயர் துடைக்கவோ இல்லாவிடின் தனது குழந்தைகளின் வயிற்றுப் பசி போக்கவோ தான் திருடியிருப்பாள் .

அந்த பெண் நினைத்திருந்தால் தனது உடலினையும் மானத்தையும் விற்று நிறைய சம்பாதித்திருக்கலாம் . ஆனால் வேறு பிழைப்புக்கு வழியின்றித்தான் அவள் திருடியிருப்பாள் .

ஆனால் மற்றவர்களின் வலியினிலே பணம் சேர்க்கும் கேவலமான ஊடகங்கள் அப் பெண்ணின் படத்தினை வெளியிட்டு அப்பெண்ணை கேவலப்படுத்தி விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.