Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழரின் காசு…! கத்தை கத்தையாக அகப்பட்டது.

Featured Replies

லண்டன் தமிழரின் காசு…! கத்தை கத்தையாக அகப்பட்டது.

London-Dolr-300x130.jpg

லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பப்பில்(மதுபான விடுதியில்) , 3 லட்சம் பவுன்சுகள் காசு பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். லண்டனில் பிரபல வர்த்தகராக இருக்கும் இன் நபரின் பெயரில் சில ரவல் ஏஜன்சிகளும் உண்டு.

மேலும் இவருக்கு சொந்தமாக ஒரு பப் கிங்ஸ்பெரியில் இருக்கிறது. குறித்த இந்த மதுபான விடுதியில் , பொலிசார் திடீரென சோதனை நடத்தில் 370,000 ஆயிரம் பவுன்சுகளை பறிமுதல் செய்துள்ளார்கள்.

பொலிசார் நீண்ட நாட்களாக அவதானித்து தான் , பின்னர் ஒரு நாள் இந்த வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

ஹரோ பொலிசார் இதுதொடர்பான முழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தமிழ் வர்தகரின் மகன் , சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு ,பெருந்தொகைப் பணத்தை கொண்டுவந்து மதுபான விடுதியில் பதுக்கி வைத்திருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பொலிசார் சுற்றிவளைத்து , பணத்தை பறிமுதல் செய்த சம்பவத்தை அடுத்து , சில தினங்கள் கழித்து இனந்தெரியாத நபர்கள் அந்த விடுதிக்குச் சென்று பட்டப் பகலில் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளார்கள்.

அங்கே பல பெண்களும் ஆண்களும் குடித்துகொண்டு இருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றதால் பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

பலர் கூச்சலிட்ட வண்ணம் வெளியே தப்பியோடியுள்ளார்கள். பணம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கும் தாக்குதல் சம்பவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெரும் மாபியாக் கும்பல் ஒன்றின் பணம் அங்கே பதுக்கப்பட்டு இருந்ததாகவும், அதனை பொலிசார் எப்படி மோப்பம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை என்றும் விடையம் அறிந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாபியாக் கும்பலே குறித்த விடுதியை தாக்கியுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இந்த மதுபான சாலையை நடத்தி வரும் தமிழர் , பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகளோடு தொடர்புடையவர்.

அதுமட்டுமல்லாது பல சிங்கள பெரும்புள்ளிகளோடும் தொடர்புடையவர் என்றும் அறியப்படுகிறது.

http://www.jvpnews.com/srilanka/105003.html

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இந்த JVP news ?

ஒரு வியாபார நிலையமான பப்பில £370,000 இருப்பது (பொலீஸ் கைப்பற்றக் கூடிய) பெரிய விசயம் இல்லையே.

மேலும், ஹரோ வாசிகளான நமக்கு தெரியாமல், பொலீஸ் அறிக்கை, இவர்களுக்கு மட்டுமேயா?

travel agency வைத்திருப்பவர்கள் எல்லாம், அவனவன் இன்ரநெற் புக்கிங் எண்டு கிளம்பிற்றாங்கள் என்று புலம்பிக் கொண்டு திரியினம்.

இடிக்குதே? :o

அண்ணை சேல்ஸ் ரிப்போர்ட் காட்டவேண்டும், அதோட பாங்கிங் செய்யாமல் அதிக பணத்தை வைத்திருக்கவும் முடியாது. ஆனா உந்த JVP நியூசை நம்பவும் ஏலாது

அதுசரி...சார் அப்ப ஹரோவோ? அப்ப சம்பலில் கொத்து சாப்பிடலமே? :lol:

பாங்கிங் செய்யாமல் வைத்திருப்பதில் சட்டப் பிரச்சனை இல்லை.

உங்க, உண்டியல் காரரே கத்தை கத்தையா வச்சிருக்கினமே...

சம்பலில் கொத்தா?

கொத்து எண்டால், அப்படி பார்த்துக் கொண்டிருக்க கொத்தித் தரவேண்டும்.

சும்மா, பிரிட்ஜ்க்க வைச்சு, சூடாக்கித் தந்தால், அது கொத்து இல்லை, சுத்துமாத்து... :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் லண்டனில் ஒரு ஒழுங்கான கொத்து ரொட்டி கடை கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி நியூசை நம்ப முடியாது.இப்படியான செய்திகள் கட்டhயம் ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்திருக்கும்(வெளிநாட்டுக்காரன் கத்தை கத்தையாக காசு வைச்சிருந்தால் இந்தப் பத்திரிகைகளுக்குப் பிடிக்காது.இப்படித்தான் தமிழ் டொக்ரர்மார் நிறைய உழைக்கினம் என்றுபேப்பரில் போட்டவங்கள்)

Edited by புலவர்

பாங்கிங் செய்யாமல் வைத்திருப்பதில் சட்டப் பிரச்சனை இல்லை.

உங்க, உண்டியல் காரரே கத்தை கத்தையா வச்சிருக்கினமே...

சம்பலில் கொத்தா?

கொத்து எண்டால், அப்படி பார்த்துக் கொண்டிருக்க கொத்தித் தரவேண்டும்.

சும்மா, பிரிட்ஜ்க்க வைச்சு, சூடாக்கித் தந்தால், அது கொத்து இல்லை, சுத்துமாத்து... :D

இப்ப கன சாமான்கள் பிறிட்சுக்க இருந்து தான் எடுத்து தருகினம்.

பிறிட்சுக்க வைகேக்க இடம் மாறி...அதால நிறம் மாறி வருகுது... :lol:

உண்மைதான் லண்டனில் ஒரு ஒழுங்கான கொத்து ரொட்டி கடை கிடையாது .

அண்ணை எப்புடித்தான் போட்டலும் ஊர்கொத்தை அடிக்கேலாது

அதுவும் விறகடுப்பில போட்டது...

Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலை மூட்டை மூட்டையாய் காசு வைச்சிருக்கிறாங்கள். சும்மா உந்த கத்தை விசயத்தை பெரிசு படுத்திக்கொண்டு........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு அடுத்தது கொத்தெண்டால் அது பரிசிலதான். யூரோஸ்டார் எடுத்தால் - கார் டி நோர்ட் இல் இருந்து 3 நிமிச நடை.

லண்டன் கொத்தில்ல - குப்பை. முந்தி கணா பரவாயில்லை இப்ப அதுவும் போச்சு.

ஜப்னா கவுசும் படுத்திட்டு. கவன்ரில ஏதோ ஒரு கடை நல்லா போடுறதா கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் அத்தி பூத்தது மாதிரி எப்பவாவது ஒருக்கா நல்ல கொத்து கிடைக்கும் விலை கூட லண்டனை விட ஆனால் தேநீரை அடிக்கமுடியாது இன்று வரை அப்படியேதான் லண்டனில் கொத்துகடைஒன்று இரண்டு இருந்தது போட்டி கடை போட்டு கொடுத்தது ஆல் மெயின் செப் விசா இல்லாமல் உள்ளுக்கை.  

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் லண்டனில் ஒரு ஒழுங்கான கொத்து ரொட்டி கடை கிடையாது .

நான் போடலாம் என்று இருக்கிறேன் பெருமாள்.

ஊருக்கு அடுத்தது கொத்தெண்டால் அது பரிசிலதான். யூரோஸ்டார் எடுத்தால் - கார் டி நோர்ட் இல் இருந்து 3 நிமிச நடை.

லண்டன் கொத்தில்ல - குப்பை. முந்தி கணா பரவாயில்லை இப்ப அதுவும் போச்சு.

ஜப்னா கவுசும் படுத்திட்டு. கவன்ரில ஏதோ ஒரு கடை நல்லா போடுறதா கேள்வி.

கோசான் உங்கள் தொலை பேசி இலக்கம் தாருங்கள். கொத்து ரோட்டி போடும்போது போன் செய்கிறேன். சாப்பிட்டுப் பார்த்துவிட்டுக் காசு தரலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் போடலாம் என்று இருக்கிறேன் பெருமாள்.

யாரை போடுவதாய் பிளான் :lol:  கட்டாயம் உண்மையில் நல்லதாய் இருந்தால் நீங்கள் தான் லண்டனின்  தமிழ் கோடிஸ்வரி .

  • கருத்துக்கள உறவுகள்

சுமே,

போன் நம்பர் என்ன நல்ல கொத்துக் கிடைக்கும் பட்சத்தில் சொத்தையே எழுதித்தரலாம் :)

( ஒரு கொத்தளவுக்குத் தன் நமக்கு சொத்திருக்கென்பது வேறு விடயம்).

உள்மனம் : கொத்துக்கு ஆசைப்பட்டு நீ யாரெனும் அடையாளத்தை காட்டிடாதடா கோசான்!

வேறு சாப்பாடுகளில் மினக்கெடமா தனியே கொத்து மட்டும், தமிழர் புழங்கும் இடத்தில் 11:30-2:30 & 6:30-10:30 திறந்தாலே போதும். ஒரு பேகர் வானிலேயே செய்யலாம்.

ஆனா கொத்து கன் மாரி இருக்கோணும்.

பிரச்சனை என்னெண்டால், சத்தம், கொத்துற சத்தம். அது ஊரைக் கூட்ட, வந்திருவாங்கள், உங்க என்ன நடக்குது என்டு, கவுன்சில் / சிற்றி அதிகாரிகள்.

லண்டன் சிட்டிக்குள் அங்கு வேலை செய்பவரை விட அவர்களுக்கு பேகர், சாண்ட்விச்ஸ்  10.00AM TO 3.00PM மட்டும் விற்பவரின் வருமானம் கூட .

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்னெண்டால், சத்தம், கொத்துற சத்தம். அது ஊரைக் கூட்ட, வந்திருவாங்கள், உங்க என்ன நடக்குது என்டு, கவுன்சில் / சிற்றி அதிகாரிகள்.

சவுத்தோளில் இப்படியான கொத்துகடை உண்டு நாதமுனி அவ்வளவுக்கு எழுப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் சிட்டிக்குள் அங்கு வேலை செய்பவரை விட அவர்களுக்கு பேகர், சாண்ட்விச்ஸ் 10.00AM TO 3.00PM மட்டும் விற்பவரின் வருமானம் கூட .

பொறுத்த இடத்தில கடை சிக்கினால் அந்த மாதிரி.... :D

"சுமேரியரின் கொத்து" என்று நிவேதாவால் வருகிற ஆகஸ்ட் மாதம் கொத்து றொட்டிக் கடை திறக்கப்படவுள்ளது!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிக்கியது பணமா கொத்துரொட்டியா? :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிக்கியது பணமா கொத்துரொட்டியா? :rolleyes::icon_idea:

கொத்திய பணம் :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்னெண்டால், சத்தம், கொத்துற சத்தம். அது ஊரைக் கூட்ட, வந்திருவாங்கள், உங்க என்ன நடக்குது என்டு, கவுன்சில் / சிற்றி அதிகாரிகள்.

இப்ப யார் கொத்து ரொட்டியை, கொத்துகிரார்கள்.

ஏற்கெனவே..... மிசினால் வெட்டிய ரொட்டி,  Frozen பக்கற்றில் உள்ளதை எடுத்து....

ஆக்களுக்கு.... சவுண்டு கொடுப்பதற்காக, டொக்கு, டொக்கு என்று தட்டி விட்டு, கறியை... அதற்குள் போட்டு பிரட்டி... தருகிறார்கள். :D

அண்மையில் சிட்னியில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் போயிருந்தேன்!

அங்கு ஒரு இரும்புத்தட்டையும் போட்டுக் கொத்து ரொட்டியும் தயார் செய்து கொண்டிருந்தார்கள்!

வழக்கம் போல, இரவு பத்து மணிக்குத் தான் பாட்டி களை கட்டத் தொடங்கியது!

கொத்து ரொட்டிச் சத்தத்தைக் கேட்ட ' பக்கத்துக்கு வீட்டு' வெள்ளை கேட்டது....'அந்த வாத்தியத்துக்கு என்ன பெயர் எண்டு?' :icon_idea:  

இரவு பத்து மணிக்கு, வெள்ளையை..... நித்திரை கொள்ள விடாமல் செய்த,  ஆத்திரத்தில்.....

நாசுக்காக... உறைக்கும் படி கேட்ட வெள்ளையின் சமயோசித புத்திக்கு.... ஒரு கொத்து ரொட்டி, பார்சல் பண்ணி கொடுத்திருக்கலாம். :D  :lol:

இந்த திரியை நாவுற வாயுற பகுதிக்கு மாற்றிவிடலாம் போல் உள்ளது....  :icon_idea: கொத்து ரொட்டி நேற்று தான் சாப்பிட்டேன்.... உங்களின் கவலைகள் தீர இன்று இரவும் ஒன்றை வாங்கி சாப்பிட எண்ணியுள்ளேன்... :D :D  கலைவாணி ஓட்டலில் கொத்து ரொட்டி அடிக்கும் சத்தம் கோயமுத்தூருக்கே  கேட்கும் :rolleyes: 

சரி அமைதியாய் பர்கரும் பிரேட்டும் சாப்பிட்டு வேலைக்கு  செல்லுங்கள்.... :D  நான் சித்திரை திருநாளுக்கு வாங்கிய மா பழா  எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு, அப்படியே கலைவாணி ஓட்டல் போய் ரவா தோசையும் வீச்சு புரோட்டாவும் சாப்பிட்டு வேளைக்கு கிளம்புகிறேன் :lol:

.

.

.

.

...

அட சொர்க்கமே என்றாலும்..............!!!!

நீங்கள் ஊர்கொத்து சாப்பிடவில்லை அதுவும் வடமராட்சி பக்கம் சாப்ட்டுவிட்டு பிறகு சொல்லுங்கள்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.