Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் எப்போது சுதந்திரமாக இருக்க முடிகிறது ?????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%85%

பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ.

பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறைத்து மதிப்பிடவோ கேலி செய்யவோ இல்லை. அதை மீறி ஒரு பெண்ணானவள் தான் சுதந்திரமானவளாக எப்போது உணர்கிறாள் என்பதே கேள்வி. 

ஆண்களே அதிகம் உள்ள களத்தில் இப்படியான பதிவு வரவேற்பைப் பெறாது தான்.  இருந்தாலும் சகாரா, தமிழினி, கண்மணியக்கா, நிலா அக்கா, மீனா, மீரா, செவ்வந்தி,யாயினி இன்னும் எப்பவாவது வந்து எழுதும் பெண் உறவுகள் ..... வந்து துணிவுடன் எழுதுங்கள். 

அதற்காக ஆண்கள் வராமல் விட்டுவிட வேண்டாம். உங்கள் கருத்தும் மிகமிக முக்கியம் :lol::icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால இது நாங்க கேட்கவேண்டிய கேள்வி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால இது நாங்க கேட்கவேண்டிய கேள்வி

சரி முதல்ல இதுக்கு எழுதுங்கோ அடுத்தது ஆண்களுக்கு வருவம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. பல பெண்களுக்கு யாருக்கு கீழயாவது பணிந்து வாழுறதுதான் கூடப் பிடிச்சிருக்கு எண்டு.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி நீங்களே உங்களுக்குள்ள நினைச்சுக்கொண்டு பெண்களை நிமிரவே விட்டிடாதேங்கோ. பெண்களை விட்டுவிட்டால் ஆண்களுக்குக் கடைசி காலத்தில் தொண்டு செய்யக் கட்டாயம் பெண்கள் தேவைதானே . :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா, புரிந்துணர்வுடன் கூடிய கணவன் அமைந்தால், நினைச்ச நேரம் நகை, புடவை, அம்மா வீடு, கொஞ்சம் அப்பாவியா இருந்தால் பரமசிவன் தலையில் ஒளிரும் அம்மணி மாதிரியே ஆளுமையுடன் தானே இருக்கிறீர்கள்..? போதாக்குறைக்கு பிள்ளைகளின் முழு ஆதரவும் உங்களுக்குத்தானே..?

சில 'மென்டல் கேஸ்'கள் கணவனாக வாய்த்துவிட்டால், பெண்களின் கதி அதோகதிதான்..! :(

( மேற்கூறியவை அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்! :) )

'சுதந்திரம்' என்பது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் உணர்வுகளை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது.
 
கல்யாணத்திற்கு முன்பும் சுதந்திரமாய்த் தான் இருந்தன் ஆனா கல்யாணத்திற்கு பின்பு தான் அதிக சுதந்திரமாக இருக்க முடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலே எவ்விதத்திலும் திருப்தியடையாத இனம் பெண்ணினம்.

  • கருத்துக்கள உறவுகள்

தீடீரெண்டு கிளம்பி வருவா. ஏதாவது மண்டையால போற பிரச்சனையை தூக்கிப் போட்டு, கிடாய் அறுக்கிற மாதிரி, அறுத்து உங்க எறிஞ்சு போட்டு...

அக்கோய்...

  • கருத்துக்கள உறவுகள்

கணவனின் அருகில் இருக்கும்போது.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 
யார் வேண்டாமென்றார் ....வாழுங்கோ ஆயுள் இருக்கும் வரை சுதந்திரமாக வாழுங்கோ ....
ஏன் கல்யாணம் ....பிள்ளை குட்டி என்று உங்களை நீங்களே  சிறை படுத்துகிறீர்கள் ....

கல்யாணம் பேசி வருபவர்களுக்கும் ,பின்னாலை  அலைபவர்களுக்கும் துடைப்பத்தாலை நாலு விட்டீங்கோ என்றால் அடுத்தமுறை உங்கட பக்கம் தலை வைச்சு கூட படுக்கமாட்டினம் .
பெண்ணிற்க்காக ஆண்கள் வாயால் வீணி வடிய பின்னுக்கு திரிந்த காலம் எல்லாம் அந்தக்காலம் ....
இப்போ என்னால் உனக்கென்ன இலாபம் ....உன்னால் எனக்கென இலாபம் அவ்வளவுதான் 
ஊரிட்க்கு வந்து பாருங்கோ வரிசையில் நிக்கினம் முதிர்கன்னிகள் (சுதந்திரப்பறவைகள்) .....மாப்பிள்ளைகள் தான் இல்லை

ஏன் ஊரில் நாங்கள் இல்லை வீட்டாலை போராட்டம் வலுத்து பாழும்கிணற்றில் தள்ளப்படும் வரை தாங்கிப்பிடித்து கொண்டு தானே இருக்கிறம் (இப்பவே தொடங்கிட்டு வீட்டார் போகுமிடமெல்லாம் என்ன ....மகனை இப்படியே வைத்திருப்பது தானா ...ஒன்றும் தேடவில்லையா ...? ஆனால் இதையெல்லாம் கதைக்க தொடங்குவதும் உங்கள் பெண்கள் (சுதந்திரம் பறிபோனவர்கள்) தான் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்லெண்ணமோ தெரியவில்லை )
ஊரில ஒரு முதிர்கன்னி தெருவில போனாலே கூடியிருந்து அவளுக்கு என்ன குறையிருக்கும் என்று ஒரு வைத்தியர் கணக்காக X-Ray மட்டும் தான் செய்யவில்லை எனும் அளவுக்கு  ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடாத்துவதும் உங்கள் சுதந்திரம் பறிபோன பெண்கள் தான் 
(ஒருவேளை இதெல்லாம் கதைக்கும் அளவுக்கு உங்களுக்கு அதிக சுதந்திரம் தந்துவிட்டோமோ ....?)

என்ன எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை (நோய்,நொடியிலும் எங்களால் தனியே நின்று பிடிக்க முடியும்)
ஆனால் மேலே போயிட்டோம் என்றால் பிணத்தை இழுத்துக்கொண்டு போய் அடக்க நாலு பேர் வேண்டுமே என்பதுதான் 
அது இருந்தால் வாழ்க்கை பூராக நாங்களும் சுதந்திரமாக இருக்க தயார் ....உங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க தயார் 

இப்படியே சுதந்திர வேட்கை அதிகரித்தால் தனிப்பிணங்களும் அதிகரித்துபோய்விடும் .....கவனம் அக்கோய்

என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம் ........? :D  :D   :D 
 
  • கருத்துக்கள உறவுகள்
சுதந்திரம் பத்தி கதைக்க முன்னர் ஒருகணம், போனவாரம் பாகிஸ்தானில் கணவனுக்கு சொல்லி அனுமதி பெறாமல் வீட்டுக்கு வெளியால போன பெண்  உயிருடன்  கொளுத்தப் பட்டார் என்ற நிலைமையில் வாழும் பெண்களை மனதில் கொண்டு, நம்ம சுதந்திரம் என்ன நிலைமையில் இருக்குது எண்டு சொல்லுங்கோவன் அக்கோய்... :o
 
இது ஒரு வழமையான நிகழ்வு. 2600 பேர் வரை கடந்த வருடம் கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். 
 
நமது சுதந்திரத்தை, அவர்களது நிலைமையுடன் ஒப்பிடாவிடில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது.
 
உந்த படத்தில நீங்கள் இல்லை போல...  :icon_idea:
 
படக்காரர் குறைப் பட மாட்டினமோ ?   :rolleyes:
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ

பெண்ணுக்கோ

சுதந்திரம் வேறுபாடுதான்...

அதேநேரம் அது காலம்

பருவம்

பொறுப்பு

சார்ந்து வேறு படும்...

இதை இருசாராரும் ஒவ்வொரு நிலையிலும்  இருந்து பார்க்கணும்

உதாரணமாக சுயநலத்தை பெரிதாக்கி சுதந்திரமாக வாழவிரும்புபவர்கள்

திருமணம் என்ற பந்தத்தை தவிர்ப்பது நல்லது

திருமணம் என்ற பந்தம் பல கட்டுப்பாடுகளையும்

ஒழுங்குகளையும் நெறிகளையும் கொண்டது

அதை சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சிலர் திருமணத்தின் பின் நினைக்கத்தொடங்குவது தான் 

எம்மவரின் பல குடும்ப சிக்கல்களுக்குக்காரணம்....

பிரான்சில் நகரசபைகளில் நடைபெறும் திருமணப்பதிவுகளுக்கு சென்றதுண்டு

அன்றீலிருந்து தான் எத்தனை கட்டுப்பாடுகள் போடப்படகின்றன என்பதை புரிந்து கொண்டதுண்டு

எனது திரமணத்திலும் ஐயர் கனக்க சொன்னவர்தான்

ஆனால் விளங்காத மொழியில்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு அடிமைத்தனம் கையோங்கி நிற்கின்றதோ அங்கு சுதந்திரம் தேவைப்படுகின்றது.

யார் அடக்கப்படுகின்றார்களொ அவர்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போரிட்டுப்

புரட்சி செய்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அடிமைப் பெண்களே  போராடுங்கள். இழந்ததாக நினைக்கும் உங்கள் உரிமைகளை 

நீங்களே போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள்.

உரிமைகளும் உணர்வுகளும் மதிக்கப்படும் இடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா, புரிந்துணர்வுடன் கூடிய கணவன் அமைந்தால், நினைச்ச நேரம் நகை, புடவை, அம்மா வீடு, கொஞ்சம் அப்பாவியா இருந்தால் பரமசிவன் தலையில் ஒளிரும் அம்மணி மாதிரியே ஆளுமையுடன் தானே இருக்கிறீர்கள்..? போதாக்குறைக்கு பிள்ளைகளின் முழு ஆதரவும் உங்களுக்குத்தானே..?

சில 'மென்டல் கேஸ்'கள் கணவனாக வாய்த்துவிட்டால், பெண்களின் கதி அதோகதிதான்..! :(

( மேற்கூறியவை அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்! :) )

'சுதந்திரம்' என்பது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் உணர்வுகளை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது.

நான் கூறும் சுதந்திரம் அது அல்ல அண்ணா :D  என்னதான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கூறினாலும் சமையல் - பிள்ளைக்குக் கணவனுக்கு பிடித்தது என்று தனக்காக எதுவும் செய்து உண்ணக் கூட பல பெண்களுக்கு முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு .அதுபற்றி .......

கல்யாணத்திற்கு முன்பும் சுதந்திரமாய்த் தான் இருந்தன் ஆனா கல்யாணத்திற்கு பின்பு தான் அதிக சுதந்திரமாக இருக்க முடிகிறது.

எதை நீங்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா செவ்வந்தி ???

உலகிலே எவ்விதத்திலும் திருப்தியடையாத இனம் பெண்ணினம்.

அது கொஞ்சம் தான் குமாரசாமி. கனபேர் எதுக்குமே ஆசைப்படாமல் கணவன் பிள்ளைகளுக்குப் பிடித்ததை உண்டு அவர்கள் விருப்பத்துக்கு உடுத்து தமக்கு என்று எந்தவித ஆசையும் இல்லாமல் இருக்கிறார்கள் தானே. அவை பற்றிக் கதைப்பம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 

யார் வேண்டாமென்றார் ....வாழுங்கோ ஆயுள் இருக்கும் வரை சுதந்திரமாக வாழுங்கோ ....

ஏன் கல்யாணம் ....பிள்ளை குட்டி என்று உங்களை நீங்களே  சிறை படுத்துகிறீர்கள் ....

கல்யாணம் பேசி வருபவர்களுக்கும் ,பின்னாலை  அலைபவர்களுக்கும் துடைப்பத்தாலை நாலு விட்டீங்கோ என்றால் அடுத்தமுறை உங்கட பக்கம் தலை வைச்சு கூட படுக்கமாட்டினம் .

பெண்ணிற்க்காக ஆண்கள் வாயால் வீணி வடிய பின்னுக்கு திரிந்த காலம் எல்லாம் அந்தக்காலம் ....

இப்போ என்னால் உனக்கென்ன இலாபம் ....உன்னால் எனக்கென இலாபம் அவ்வளவுதான் 

ஊரிட்க்கு வந்து பாருங்கோ வரிசையில் நிக்கினம் முதிர்கன்னிகள் (சுதந்திரப்பறவைகள்) .....மாப்பிள்ளைகள் தான் இல்லை

ஏன் ஊரில் நாங்கள் இல்லை வீட்டாலை போராட்டம் வலுத்து பாழும்கிணற்றில் தள்ளப்படும் வரை தாங்கிப்பிடித்து கொண்டு தானே இருக்கிறம் (இப்பவே தொடங்கிட்டு வீட்டார் போகுமிடமெல்லாம் என்ன ....மகனை இப்படியே வைத்திருப்பது தானா ...ஒன்றும் தேடவில்லையா ...? ஆனால் இதையெல்லாம் கதைக்க தொடங்குவதும் உங்கள் பெண்கள் (சுதந்திரம் பறிபோனவர்கள்) தான் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்லெண்ணமோ தெரியவில்லை )

ஊரில ஒரு முதிர்கன்னி தெருவில போனாலே கூடியிருந்து அவளுக்கு என்ன குறையிருக்கும் என்று ஒரு வைத்தியர் கணக்காக X-Ray மட்டும் தான் செய்யவில்லை எனும் அளவுக்கு  ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடாத்துவதும் உங்கள் சுதந்திரம் பறிபோன பெண்கள் தான் 

(ஒருவேளை இதெல்லாம் கதைக்கும் அளவுக்கு உங்களுக்கு அதிக சுதந்திரம் தந்துவிட்டோமோ ....?)

என்ன எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை (நோய்,நொடியிலும் எங்களால் தனியே நின்று பிடிக்க முடியும்)

ஆனால் மேலே போயிட்டோம் என்றால் பிணத்தை இழுத்துக்கொண்டு போய் அடக்க நாலு பேர் வேண்டுமே என்பதுதான் 

அது இருந்தால் வாழ்க்கை பூராக நாங்களும் சுதந்திரமாக இருக்க தயார் ....உங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க தயார் 

இப்படியே சுதந்திர வேட்கை அதிகரித்தால் தனிப்பிணங்களும் அதிகரித்துபோய்விடும் .....கவனம் அக்கோய்

என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம் ........? :D  :D   :D 

நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் அன்று பெண்களைப் பற்றித் தெரியாதிருக்கிறீர்கள். அத்தோடு மேலே நான் நீலம் இட்ட பகுதியில் உங்கள் ஆண்திமிர் தான் தெரிகிறது பெண்களுக்கான சுதந்திரத்தைத் தருவதற்கு ஆண்கள் யார். ????? பெண்களை அடக்கி வீட்டுள் வைத்திருப்பதனால் அவர்கள் பொழுதுபோகாமல் கதைப்பதை மட்டும் தான் செய்கிறார்கள். வெளியே வேலைக்குச் சென்று ஊர் உலகத்தைப்பர்றித் தெரிந்துகொண்டால் அவர்கள் கதைப்பதற்கும் நேரம் இருக்கப் போவதில்லை.

நோய் நொடி சின்னதாக வந்தாலும் பெண்தான் உங்களுக்கு சமையல் சாப்பாடு எல்லாம் தரவேண்டும். பெண்களுக்கு வந்தாலும் அவர்களே நோயுடன் அல்லாடியபடி இருப்பவர்க்கும் செய்து தானும் உண்ண வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல ஆண்கள் இப்ப இப்ப மனைவியருக்கு உதவுகின்றனர். அல்லது கடைகளில் எடுத்து  உண்கின்றனர். ஆனால் ஊரில் அடுப்பில் கறிசோறு எல்லாம் மனைவிக்கு வருத்தம் என்று தாம் செய்து கொடுப்பார்களா ஆண்கள் ??????

கலியாணம் கட்டவேண்டும் என்றதற்காக குடிகாரனையோ அல்லது வேலை வெட்டி இல்லாதவரையோ கட்டிவிட்டு வாழ்நாள் பூராக துன்பம் கொள்வதிலும் கன்னியாக வாழ்தல் நன்று என்று அவர்கள் இப்போதாவது அறிகின்றனர். முதிர் கண்ணியாகாது இளம் கன்னியாக இருந்தால் மாத்திரம் நீ மட்டும் வா இணைந்து வாழ்வோம் என்றா அழைக்கிறீர்கள். உனக்கும் எனக்கும் சேர்த்து சாகும்வரை சாப்பிட காசுபணம், வீடுவாசல், நகை எல்லாம் கொண்டுதானே வரச்சொல்கிரீர்கள் ?????

சுதந்திரம் பத்தி கதைக்க முன்னர் ஒருகணம், போனவாரம் பாகிஸ்தானில் கணவனுக்கு சொல்லி அனுமதி பெறாமல் வீட்டுக்கு வெளியால போன பெண்  உயிருடன்  கொளுத்தப் பட்டார் என்ற நிலைமையில் வாழும் பெண்களை மனதில் கொண்டு, நம்ம சுதந்திரம் என்ன நிலைமையில் இருக்குது எண்டு சொல்லுங்கோவன் அக்கோய்... :o
 
இது ஒரு வழமையான நிகழ்வு. 2600 பேர் வரை கடந்த வருடம் கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். 
 
நமது சுதந்திரத்தை, அவர்களது நிலைமையுடன் ஒப்பிடாவிடில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது.
 
உந்த படத்தில நீங்கள் இல்லை போல...  :icon_idea:
 
படக்காரர் குறைப் பட மாட்டினமோ ?   :rolleyes:

படம் கூகிளில் இருந்தது என்றபடியால் என்னைக் குறை கூற முடியாது நாதமுனி.

நான் பேசுவது எங்கள் ஈழத்துப் பெண்களைப் பற்றித்தான். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொருவரையரைகள் உண்டு. அவர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை நான். அரேபியப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் போல் எமக்கு இல்லைத்தான். அதற்காக அவர்களுடன் எம்மை ஒப்பிட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ

பெண்ணுக்கோ

சுதந்திரம் வேறுபாடுதான்...

அதேநேரம் அது காலம்

பருவம்

பொறுப்பு

சார்ந்து வேறு படும்...

இதை இருசாராரும் ஒவ்வொரு நிலையிலும்  இருந்து பார்க்கணும்

உதாரணமாக சுயநலத்தை பெரிதாக்கி சுதந்திரமாக வாழவிரும்புபவர்கள்

திருமணம் என்ற பந்தத்தை தவிர்ப்பது நல்லது

திருமணம் என்ற பந்தம் பல கட்டுப்பாடுகளையும்

ஒழுங்குகளையும் நெறிகளையும் கொண்டது

அதை சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சிலர் திருமணத்தின் பின் நினைக்கத்தொடங்குவது தான் 

எம்மவரின் பல குடும்ப சிக்கல்களுக்குக்காரணம்....

பிரான்சில் நகரசபைகளில் நடைபெறும் திருமணப்பதிவுகளுக்கு சென்றதுண்டு

அன்றீலிருந்து தான் எத்தனை கட்டுப்பாடுகள் போடப்படகின்றன என்பதை புரிந்து கொண்டதுண்டு

எனது திரமணத்திலும் ஐயர் கனக்க சொன்னவர்தான்

ஆனால் விளங்காத மொழியில்.... :(

அண்ணா நான் எமது கலாச்சாரத்தையோ அன்றி திருமண குடும்ப உறவையோ கொச்சைப்படுத்தவில்லை. அதற்கும் மேலாக ஒரு பெண் தான் சுதந்திரமானவளாக எப்போது உணர்கிறாள் என்பதே.

எங்கு அடிமைத்தனம் கையோங்கி நிற்கின்றதோ அங்கு சுதந்திரம் தேவைப்படுகின்றது.

யார் அடக்கப்படுகின்றார்களொ அவர்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போரிட்டுப்

புரட்சி செய்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அடிமைப் பெண்களே  போராடுங்கள். இழந்ததாக நினைக்கும் உங்கள் உரிமைகளை 

நீங்களே போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள்.

உரிமைகளும் உணர்வுகளும் மதிக்கப்படும் இடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்கும்.

வாத்தியாருக்கும் விளங்கவில்லையா ??? நான் கூறியது பெறுதல் தொடர்பானது அல்ல உணர்தல் தொடர்பானது. :D 

 பெற்றோருடன் இருக்கும் பொழுது எமது சமுதாயத்தில் கட்டுப்பாடுகள் கூடத் தானே. அப்படிக் கட்டுப்பாடுகள் நிட்சயம் தேவையும் தான் எம்மை நல்வழிப்படுத்த.  இந்தக் கட்டுப்பாடுகள் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை ஆண் பிள்ளைகளுக்கும் இருப்பது தானே (ஒப்பீட்டு அளவில் பெண் பிள்ளைகளுக்குக் கூடவாக இருப்பது.) நாங்களும் எமது பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் தானே வளர்க்கின்றோம். (சில பெற்றோர்கள் விதி விலக்கு) 

எனக்குத் திருமணத்துக்குப் பிறகு சுதந்திரம் கூட என்றே சொல்லலாம். அதுக்காக 100% என்று சொல்ல மாட்டன். என் கணவரும்  என்னைச் சில விடயங்களில் கட்டுப்படுத்திறவர் :D ( நானும் அதை எதிர் பார்க்கிறனான், அப்படி இல்லாட்டி ஒரு ஆரோக்கியமான குடும்பமாய் இருக்காது).  அதே போல நானும் அவரைச் சில விடயங்களில் கட்டுப்படுத்திறனான். (நிட்சயமாக)  :rolleyes:  :D .

அதுக்காக நான் சொல்ல முடியாது நான் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று. அப்படி நான் சொல்லின் எனது கணவரும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கவில்லைத் தானே. எல்லாமே மனம் தான். :D 

எனக்கு மாமியாரின் கட்டுப்பாடு எதுவும் கிடையாது,  நான் அவவுடன் இருந்தது இல்லை. இருந்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ தெரியாது :lol: . 

எது எப்படியாயினும் தமிழ் குடும்பங்களில் பெரும்பாலான கணவர்மார் தமது மனைவிமாருக்குப் படு பயம். முதலில் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்போமே சுமே  :D  :lol: 

எங்கையும் மதுரை ஆட்சியே!! (பெரும்பாலான வீடுகளில்) .... :D  :lol:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 
முதலில் நீங்க தெளிவாக குளம்பியுள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது 

யாரும் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை 
 
பெண்களுக்கான சுதந்திரத்தைத் தருவதற்கு ஆண்கள் யார். ????? 

இதைத்தானே நாங்களும் கூறுகிறோம் .....உங்களுக்கு தருவதற்கு நாங்கள் யார் அது உங்களிடமே தான் உள்ளது 
சுதந்திரம் கூடி நீங்கள் வருவித்துகொள்ளும் பிரச்சினைகளுக்கு பிறகு ஆண்களை காரணம் காட்டாதீர்கள் 

ஒரு காலத்தில் கொழும்பில் பட்டாசு வெடித்தாலும் புலிகள் தான் காரணம் என்று எடுத்துவிட்டது போல 
இப்போது பெண்களுக்கு தும்மல் ,இருமல் வந்தாலும் ஆண்கள் தான் காரணம் என்று எல்லாவற்றயும் ஆண்கள் மீதே போட்டு பழகிவிட்டீர்கள்(காரணம்: அளவுக்கதிகமாக அதிகரித்து போய்விட்ட பெண்ணியம் உங்கள் தவறுகளையே நீங்கள் ஏற்றுகொள்ள அனுமதிக்குதில்லை ) . நீங்கள் ஊர் வம்பளப்பதற்கும் ஆண்கள் தான் காரணம் .....நீங்கள் வேலைக்கு போய் அங்கே ஏதாவது ஏடாகூடமாகி போனால் அதற்கும் ஆண்கள் தான் காரணம் (பணப்பேய் ...பொண்டாட்டிய கட்டாயம் வேலைக்கு அனுப்பத்தான் வேண்டுமா...?)....சரி நீயும் வேண்டாம் இந்த வாழ்க்கையும் வேண்டாம் என்று முடிவெடுத்தால் (ஒரு பெண்ணை ஒழுங்காக வச்சி வாழத்துப்பில்லாதவன்)
 
அக்கோய் வாழ்க்கையில் எல்லாமே உள்ளது ...ஆனால் Reverse Button மட்டும் இல்லை (பெண்கள் தவறு செய்தால் இயற்கையே காட்டிகொடுத்துவிடும் படைப்பிட்க்கும்  ஆண்கள் காரணம் இல்லை ...கடவுளின் கொலரை பிடியுங்கள் )
அதனால் தான் பெண்களை கவனமாய் பாதுகாக்கின்றோமே தவிர சுதந்திரத்தை பறிக்கவில்லை 
நடுஇரவில் வெளியே செல்லுங்கள் எத்தனை காமுகர் வழிமறித்தாலும் தனியே  நீங்கள் சமாளித்துக்காட்டுங்கள் 
பிறகென்ன இரவு மூன்று மணிக்கும் நீங்கள் தனியே செல்லலாம் ( காமுகர்கள் ஆண்கள் தானே என்று நீங்கள் கூறலாம்...எங்களுக்கு முக்கியம் உங்களை பாதுகாப்பது காமுகர்கள் பற்றிய ஆராய்ச்சியல்ல)

இந்த உலகில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் நீங்கள் சொல்வது போல் பூசை செய்து விரதம் இருந்து  தவம் கிடந்தது திருமணம் செய்யலாம் ...பல்லாயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் உள்ளனர் ...எவர் எங்களது WAVE LENGTH இற்கு செட் ஆகிறானங்களோ அவர்களை நாங்கள் துணையாக தெரிந்தெடுப்போம் (Finally its subjective not objective) அதை தீர்மானிக்கும் சுதந்திரமும் உங்களிடமே உள்ளது  ....அதிக சுதந்திரம் தேவையானவர் உங்களிட லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து தொலையுங்கள் ...கூழிட்கும் ஆசை மீசைக்கும் ஆசை விளையாட்டு இங்கே சரிப்படாது அக்கோய்  :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கும் விளங்கவில்லையா ??? நான் கூறியது பெறுதல் தொடர்பானது அல்ல உணர்தல் தொடர்பானது. :D 

இஞ்சை பாருங்கோ திரும்பவும் தொடங்கீட்டா. :o

வாத்திக்கும் விளங்கேல்லையாம்  

நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கேட்ட கேள்வி இதுதானே ?

தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

இதற்கு நான் எழுதிய  பதில்  உங்களுக்கும் விளங்கவில்லையோ ??? :D:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது கொஞ்சம் தான் குமாரசாமி. கனபேர் எதுக்குமே ஆசைப்படாமல் கணவன் பிள்ளைகளுக்குப் பிடித்ததை உண்டு அவர்கள் விருப்பத்துக்கு உடுத்து தமக்கு என்று எந்தவித ஆசையும் இல்லாமல் இருக்கிறார்கள் தானே. அவை பற்றிக் கதைப்பம் :D

ஒருவர் அல்லது ஒருத்தி தன் குடும்பத்திற்க்காக ஆசாபாசங்களை  துறப்பதற்கு பெயர் சுதந்திரமல்ல....  :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறும் சுதந்திரம் அது அல்ல அண்ணா :D  என்னதான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கூறினாலும் சமையல் - பிள்ளைக்குக் கணவனுக்கு பிடித்தது என்று தனக்காக எதுவும் செய்து உண்ணக் கூட பல பெண்களுக்கு முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு .அதுபற்றி ...

ஓ.. நீங்கள் கவலைப்படுவது, 'விருப்பமான சாப்பாடு' பற்றி மட்டும்தானா?  :o

நான் என்னவோ ஏதோவென நினைத்துவிட்டேன்.! :lol:

எளிமையான வரிகளில், எவ்வளவு சிறப்பாக கீழே சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் என்னவோ சுதந்திரம், தந்திரம், இயந்திரம் என பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்கிறீர்களே..! :D

http://youtu.be/IbS6KHTlhsM

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலே..

பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே..

அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ..?

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ..?

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்

இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..?

பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ..?

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா..?

ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா..?

இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா..? :o

எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா சுதந்திரம் என்பது இருக்கும் நாட்டை பொறுத்தே பெண்களுக்கு அமைகிறது .பாவம் பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் சிரியா,சவுதி ,கட்டார்  போன்ற நாடுகளில் உள்ள  பெண்களுக்கு  யார் தான் சுதந்திரம்  வாங்கி கொடுப்பது .

அது அந்தந்த நாட்டின் சட்டம் அதே சட்டங்கள் நமது  நாட்டில் கொண்டு வரவேணும் ஒரு காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களின் பிறப்பு.............. முட்கள் வைத்து விடுவார்களாம் அவள் யாருடனும் உறவு வைத்து விடுவாள்  என்பதற்க்காக‌ அப்படி இருக்கு அங்கு சுதந்திரம் .

ஆனா ஒரு வார்த்தை ,அல்லது ஒரு அடி அடித்தால் கூட இங்க பெண்கள் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள் .உடனே விவாகரத்து .இப்படிதானே சுதந்திரம் பெறுகிறார்கள்

எதை நீங்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா செவ்வந்தி ???

பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எனக்கான சுதந்திரம் மறுக்க பட்டதா எந்த சந்தர்ப்பத்திலும் நான் உணர்ந்ததில்லை . சில கட்டுப்பாடுகள் என்க்கு இருந்தது தான் அதை நான் தனிமனித ஒழுக்கத்தை பேணுவதற்கான கட்டுபாடுகளாகத் தான் பார்க்கின்றேன் . எனக்கான கல்வியை தந்தார்கள் . சுதந்திரமாய்த் முடிவெடுக்க கூடிய தையிரியத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.

கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு எந்த துறையில் விருப்பமோ அதை எனது கணவர் என்னை படிக்க வைச்சார். ஆனா நான் எப்பவுமே எனது கணவரை சமையலறை வேலை செய்ய அனுமதித்ததில்லை. எனது பிள்ளைகளுக்கு பிடித்தது கணவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கிறதில் எனக்கு ஒரு வித சந்தோசம் தான் கிடைக்கிறது . எனது அன்பை வெளிப்படுத்திற ஒரு வழியாகத்தான் இதைப்பார்கிறன். இதையெல்லாம் நான் தியாகம் என்றோ சுதந்திர மறுப்பு என்றோ சொல்லமாட்டன். அதற்காக நான் வீட்டு வேலையை மட்டும் செய்திட்டு வீட்டிலேயே இருக்கிற பெண்ணும் இல்லை. வேலை செய்யிறன் , ஜிம்மிற்கு போவன் , நீச்சல் வகுப்பு போவன் அதோட வீட்டையும் கவனிக்கிறன். இதில் எதிலும் எனது சுதந்திரம் மறுக்க பட்டதாக உணரவில்லை.

நீங்கள் இப்பிடி சொல்லுறீங்கள்.. ஆனால் உங்களை மூளை சலவை செய்துபோட்டாங்கள் என்று சுமே அக்கா சொல்லப்போறா.. :unsure: எதுக்கும் நான் Smiley_running.gif

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.