Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! 
[Friday 2015-05-01 08:00]
court-order-150-news.jpg
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது. 2011ம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரும் செய்தி....

  • கருத்துக்கள உறவுகள்

நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! 
[Friday 2015-05-01 08:00]
2011ம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவலையான செய்தி ....................

பின்னுக்கு வரும் மாற்று கருத்துகள்  சிவப்பில் உள்ளதை படித்து விட்டு மல்லுகட்டவும் . "அப்பவே சொன்னம் " என்று குத்தி முறிவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ஐவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, ஹேக்கில் உள்ள நீதிமன்றமே நேற்று இந்த  சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்று ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டி சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119276/language/ta-IN/article.aspx

அனைத்தும் சுத்தப்பொய் .............
 
நெதர்லாந்து நாட்டில் மனித நேயசெயற்பாட்டாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் நடை பெற்ற இறுதி விசாரணையில் மேலதிக தணடனை தேவை இல்லை என நீதிபதிகளால் தீர்ப்பிடப்பட்டு அனைத்து மனிதநேய செயல்பாட்டாளர்களும் முளுமையாக விடுதலை செய்யப்பட்டனர்,
 
இந்த ஐந்து  மனித நேய செயல்பாட்டாளர்களையும்  நெதர்லாந்து காவல் துறையினரால்  முதலில் பயங்கரவாதபிரிவின் கீழ் கைது செய்து பயங்கரவாதிகளாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர் சில காலங்களுக்கு முன் நடை பெற்ற இறுதி வழக்கில் இவர்கள் பயங்கரவாதிகள் இல்லை ஆனால் நெதர்லாந்து சட்டங்களின் சில விதி முறைகளை மீறியதாக ,கூறப்பட்டு அதன்  அடிப்படையில் அவர்களுக்கு சில வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது .அனைவரும் அந்த தண்டனையை ஏற்று தண்டனைகாலம் முடிய விடுதலை செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள் .
 
ஆனாலும் நெதர்லாந்து காவல்துறையினர் இல்லை இவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி மேன்முறையீடு செய்தனர் .அதன் அடிப்படையில் நேற்று டென் காக் நகரில் நடைபெற்ற இறுதித்தீர்ப்பின் போது நீதிபதிகள் இவர்களுக்கு மேலதிக தண்டனை எதுவும் தேவை இல்லை .இவர்கள் செய்த குற்றத்திற்கு இந்த தண்டனை போதும் என்று கூறியும் ,இவர்கள் அனைவரும் இனி இந்த நீதி மன்றுக்கு வரத்தேவையில்லை என்று கூறியும் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தார்கள் .
 
இதுதான் உண்மை .இப்போது இந்த ஐந்து பெரும் தத்தமது வீடுகளில் வாழ்கிறார்கள் .சிறையில் இல்லை 
 
உண்மையுடன் தமிழ்சூரியன் .........
 
[என்னாடா ஊடகங்கள் நடாத்துறாங்க ..........ஊடகத்தருமத்தையும் ,.உண்மையையும் மறைத்து ...........இந்த பிழைப்பு தேவையா ???
 
.எங்காவது விபச்சார பதிவுகளை தெரிந்தெடுத்து போடுங்க அதுக்குத்தான்  தற்போது ஊடகம் என்ற பெயரில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் லாயக்கு .. :D ..]
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி தமிழ்சூரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சூரியன்.. ஏதாவது ஒரு பம்மாத்து சிங்கள ஊடகத்தில் வந்திருக்கும்.. அதை மொழி பெயர்த்திருப்பார்கள்.. :o

நன்றி தமிழ்சூரியன்.. ஏதாவது ஒரு பம்மாத்து சிங்கள ஊடகத்தில் வந்திருக்கும்.. அதை மொழி பெயர்த்திருப்பார்கள்.. :o

நேதேர்லாந்துக்கான சிறி லங்காவின் தூதரக நிருபரும் அங்கே சென்றிருந்தார்  இசை . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி தமிழ்சூரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தகவல்களை தந்த, தமிழ்ச்சூரியனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
மாற்று கருத்து மாணிக்கங்களை திரிபக்கம் காணவில்லை என்ற உடனேயே 
நினைத்தேன் தமிழர்களுக்கு எதோ நல்லது நடந்திருக்கும் என்று.
செய்தி அப்படி இல்லையே என்று நினைத்துகொண்டு 
மீண்டும் ஒருமுறை பார்க்கும்போதுதான் 
தமிழ் சூரியன் அண்ணரின் கருத்து தென்பட்டது.
நன்றி !

தகவல்களுக்கு நன்றி தமிழ்சூரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று கருத்து மாணிக்கங்களை திரிபக்கம் காணவில்லை என்ற உடனேயே 
நினைத்தேன் தமிழர்களுக்கு எதோ நல்லது நடந்திருக்கும் என்று.
செய்தி அப்படி இல்லையே என்று நினைத்துகொண்டு 
மீண்டும் ஒருமுறை பார்க்கும்போதுதான் 
தமிழ் சூரியன் அண்ணரின் கருத்து தென்பட்டது.
நன்றி !

மாற்று கருத்து மாணிக்கங்கள், அவசரப்பட்டு கருத்து எழுதாமல் இருக்கும் போதே....

நானும், அப்படித்தான் நினைத்தேன். :D

தகவலுக்கு நன்றி சூரியன்! இந்த தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தி ஒன்று (பொட்டம்மானின் சகோதரர் மரணம்) குறித்து நான் இங்கே உண்மை நிலையை விளக்கி பலரது துர் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்!!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று கருத்து மாணிக்கங்கள், அவசரப்பட்டு கருத்து எழுதாமல் இருக்கும் போதே....

நானும், அப்படித்தான் நினைத்தேன். :D

அவர்களின் இணயங்கள் மவ்னமாய் அடக்கி வாசிக்கும் போதே அலெர்ட் ஆகியிருக்கணும் .இல்லாவிடின் அங்கு போட்டதை சப்ப முடியாமல் இங்கு வந்து தினவெடுத்து ஆடுவினம் . :D

  • கருத்துக்கள உறவுகள்

Five Dutch nationals of Sri Lankan origin have been jailed for between 19 months and six years three months for raising money for the Tamil Tigers.

Read more at DutchNews.nl: Five jailed in The Hague for supporting Tamil Tigers http://www.dutchnews.nl/news/archives/2015/04/five-jailed-in-the-hague-for-supporting-tamil-tigers/

அந்த ஐந்து பேருக்கும் சிறை என்றல்லவா இநத ஆங்கிலச் செய்தியும் கூறுகிறது??!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆங்கிலச் செய்தியில் உள்ளதே தமிழ்ச் செய்திகளிலும் வந்துள்ளது.

இசை சொன்னது போல அவர்களுக்குச் சிறைத்தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. :o

தமிழ் சூரியன் தகுந்த ஆதாரத்துடன் இந்தக் குழப்பத்திற்கு விடை தருவாரா? :) 

இதில  என்னப்பா குளப்பம்....

வழங்கப்பட்ட காலத்துக்கும் அதிககாலமாக அவர்கள் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்கள்

அதனால் விடுதலை..

  • கருத்துக்கள உறவுகள்

இதில  என்னப்பா குளப்பம்....

வழங்கப்பட்ட காலத்துக்கும் அதிககாலமாக அவர்கள் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்கள்

அதனால் விடுதலை..

அதிக பட்சத் தண்டனை 75 மாதங்கள் என்றால் 6 வருடங்களும் 3 மாதங்களும் ஆகும்.   இவர்கள் கைதாகி இத்தனை வருடங்கள் ஓடி விட்டதா??

  • கருத்துக்கள உறவுகள்

நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! 
[Friday 2015-05-01 08:00]
court-order-150-news.jpg
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
 
இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது. 2011ம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பட்சத் தண்டனை 75 மாதங்கள் என்றால் 6 வருடங்களும் 3 மாதங்களும் ஆகும்.   இவர்கள் கைதாகி இத்தனை வருடங்கள் ஓடி விட்டதா??

 வணக்கம் ............
 
இந்த வழக்கின் இறுதி முடிவு பற்றி நான் குறிப்பிட்டவையே உண்மை .அதில் எந்த மாற்றமும் இல்லை .
 
ஆனாலும் வெளிநாட்டு ஊடகங்களும் அதை தழுவிய எம் தமிழ் ஊடகங்களும் தெளிவில்லாமல் இந்த விடயத்தை பிரசுரித்திருக்கிறார்கள் என்பதும் உண்மை .
 
இந்த வழக்கில்  சில வருடங்களுக்கு முன் இவர்கள் பயங்கரவாதிகள் இல்லை ஆனால் நெதர்லாந்து சட்டங்களுக்கமைய கிரிமினல் சட்டங்களுக்கடிப்படையில் கீழ் நீதி மன்றத்தால்  இவர்களுக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டன .அதில் 6 வருடம் தண்டனை பெற்றவர்களும் அடங்குவர் .
 
அந்த வகையில் அவர்கள் அதற்கான தண்டனைகளை சிறை வாசம் இருந்து தண்டனைக்காலம் முடிய விடுவிக்கப்பட்டனர் [6 வருடம் என்றால் 5 வருடத்தில் அவரது தண்டனைக்காலம் முடியும் ,இது நெதர்லாந்து வழக்கம் ]
 
அந்தக்கால கட்டத்தில் நெதர்லாந்து காவல்துறையினர் கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்க முடியாது இவர்கள் பயங்கரவாதிகளே ,இவர்களுக்கான தண்டனைக்கலாம் 5 தொடங்கி 16 வருடம் வரை வேண்டும் என்று மென் முறையீடு செய்திருந்தனர் .....அந்த வகையில் இந்த வழக்கு பல கோணங்களில் பல்வேறு வடிவம் ,உருவம் பெற்று பல நாட்கள் இழுபட்டு பின்னர் 30-04-2015 அன்று இறுதித்தீர்ப்பு வழங்ககப்பட்டது .
 
மேல்நீதிமன்று  தீர்ப்பு .............
 
இவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று ஏற்கனவே கீழ் நீதி மன்று  எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ,ஆனால் இவர்கள் கிரிமினல் குற்றம் செய்ததன் அடிப்படையில் இவர்களுக்கான தண்டனை கீழ் நீதி மன்றம் கொடுத்த காலங்கள் போதுமானதாகவும் மேலதிக காலங்கள் இவர்களுக்கு தேவை இல்லை என்றும் ,மேல் நீதி மன்றம் இறுதி தீர்ப்பு கூறியது .
 
அரசியல் ...........,.....
 
இவர்கள் செய்தது குற்றம் இல்லை என்று சொன்னால் இவர்களுக்கான நட்ட ஈடு பெருந்தொகைப்பணம் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவேண்டும் .........
 
நெதர்லாந்தின் கௌரவம் ,சுய மரியாதை இந்த வழக்கில் ???????????
 
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்ற ஐரோப்பிய நீதி மன்றின் இறுதி தீர்ப்புக்காக நெதர்லாந்து காத்திருக்கும் நிலை [நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு அங்கம் ]
 
இவற்றை வைத்து  மேலதிகமாக நீங்களே சுயமாக சிந்தியுங்கள் [ எழுதி கை நோகுது .]
 
ஊடகங்கள் 
 
நெதர்லாந்து நீதிமன்றின் தீர்ப்பை அதாவது கீழ் நீதி மன்றால் வழங்கப்பட்ட  இவற்களுக்கான தண்டனை[ போதும்  ]என்று தீர்ப்பிட .அதனை மேற்குலக ஊடகம் அதாவது இந்த வழக்கின் பின்னணி ,போக்கு தெரியாத இவர்கள் அதை அப்பிடியே செய்தியாக போட.................. :rolleyes:
 
வீட்டிலும் கந்தோர் கணணிகளிலும் இயங்கும் நம் தமிழ் ஊடகங்கள் அவற்றை அப்பிடியே மொழி பெயர்த்து [ஊடகத்தர்மம் ] இங்கே போட . :D ...............சிறை என்று சம்பந்தப்பட்ட நபர் என் அருகில் இருந்து என்ன மச்சி இங்கே நடக்குது என்று என்னை கேட்க :o  .நானும் எழுதுறேன் எழுதுறேன் எழுதிக்கொண்டே இருக்கிறேன் :lol:  .முடியல . :icon_idea:
 
நிறைய இசை சம்பந்தமான படைப்புக்கள் காத்திருப்பதனால் இனி மேல் இது சம்பந்தமாய் எழுதவும் மாட்டேன் ,நேரமும்  இல்லை ....இந்த விடயங்களை புரிந்து கொள்வது உங்கள் ஒவ்வொருவரினதும் அறிவை பொறுத்தே இருக்கும் . :)
 
நன்றி வணக்கம்  :)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் ............
 
இந்த வழக்கின் இறுதி முடிவு பற்றி நான் குறிப்பிட்டவையே உண்மை .அதில் எந்த மாற்றமும் இல்லை .
 
அந்த வகையில் அவர்கள் அதற்கான தண்டனைகளை சிறை வாசம் இருந்து தண்டனைக்காலம் முடிய விடுவிக்கப்பட்டனர் [6 வருடம் என்றால் 5 வருடத்தில் அவரது தண்டனைக்காலம் முடியும் ,இது நெதர்லாந்து வழக்கம் ]
 
அந்த வகையில் இந்த வழக்கு பல கோணங்களில் பல்வேறு வடிவம் ,உருவம் பெற்று பல நாட்கள் இழுபட்டு பின்னர் 30-04-2015 அன்று இறுதித்தீர்ப்பு வழங்ககப்பட்டது .
 
மேல்நீதிமன்று  தீர்ப்பு .............
 மேலதிக காலங்கள் இவர்களுக்கு தேவை இல்லை என்றும் ,மேல் நீதி மன்றம் இறுதி தீர்ப்பு கூறியது .
 
இது தெளிவாக இருக்கின்றது. விளக்கத்திற்கும் நேரத்திற்கும் நன்றி ஐயா

இப்படி தெளிவா இல்லாவிட்டால் சிலர் வந்து முட்டையில் .... பிடுங்கி

நம்மை மூக்கையே சுரண்ட வைப்பார்கள். அதனால்  நானே முந்திக்கொண்டேன். :D

சிறு குறிப்பு:

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கொடுக்கப்பட்ட தண்டனைக்கும்   2003 இல் எங்கள் தமிழர்  ஒருவர் அரச தரப்புச் சாட்சியாக மாறிக் கொடுத்த வாக்கு மூலமும் காரணமாக இருக்கலாம். அவருடைய வீட்டில் ஒல்லாந்துப் பொலிசார் பல ஆவணங்களையும் கைப்பற்றி இருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதும் அடுத்த நாள் காலை ஒல்லாந்துக் காவற்துறையிடம் சென்ற இவர் தான் அமைப்பிலிருந்து விலகி விட்டதாகக் கூறியிருக்கின்றார். அவருடைய வீட்டில் ஒல்லாந்துப் பொலிசார் பல ஆவணங்களையும் கைப்பற்றி இருந்தார்கள்.  

2003 இல் இருந்து 2010 வரை இவரது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டது. அந்தக்கால கட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவரது வீட்டில் ஒல்லாந்துக் காவற்துறை விசாரணைக்கு வந்து சென்றன.ஆனால் அவர் சகல விபரங்களையும் காவற்துறைக்கு அளித்துத் தன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டார்.

ஆனால் அந்த நபர் அதே 2010 இலிருந்து ஆறாத நோய்க்கு உட்பட்டு  பல வேதனைகளை அனுபவித்து  சென்ற வருடம் தன்னைக் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொண்டார்.   

தெய்வம் நின்று கொல்லும்

தற்போது ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடும் விடயங்கள் நெதர்லாந்து அரசாங்கத்தினதும் அவர்கள் சார்ந்த கருத்துக்களுமே ........இவை எல்லோர்க்கும் தெரிந்த விடயங்கள் அதாவது இந்த மனித நேய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட கணத்தில் இருந்து நெதர்லாந்து அரசாங்கத்தினால் இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள்.அதையே தமிழ் ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள்

நடந்து முடிந்த வழக்கில் நெதர்லாந்து அரசாங்கம் இவர்கள் மேல் சுமத்திய பல குற்றச்சாட்டுக்களை நெதர்லாந்து நீதி மன்றம் நிராகரித்தது .2011 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி நெதர்லாந்து கீழ் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பானது இவர்கள் நெதர்லாந்து சட்டங்களை மீறி செயல்பட்டதர்கமைய கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் இவர்களுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.. இவர்கள் ஐந்து பெரும் பயங்கரவாதிகள் என்பதை அந்த நீதி மன்றம் ஏற்கவில்லை .

அதன் அடிப்படையில் 30-04-2015 அன்று உச்ச நீதிமன்றமும் கீழ் நீதிமன்றின் தீர்ப்பையே ஆமோதித்து தனது இறுதி தீர்ப்பை வழங்கியது .

அதன் அடிப்படையில் அவர்கள் யாவரும் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் .இதுதான் செய்தி .

இதை தவிர்த்து ஊடகங்கள் ஏன் சம்பந்தமில்லாத தலைப்பில் செய்திகளை பிரசுரித்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது .நன்றி வணக்கம் . :D

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.