Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் அந்த நபர் அதே 2010 இலிருந்து ஆறாத நோய்க்கு உட்பட்டு  பல வேதனைகளை அனுபவித்து  சென்ற வருடம் தன்னைக் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொண்டார்.   

தெய்வம் நின்று கொல்லும்

 

 

முள்ளிவாய்க்காலிலும் தெய்வமா நின்று கொன்றது?

உங்கள் உறவினர்கள் நோய்வாய் படும்போது அல்லது நீங்கள் நோய்வாய் படும்போது உங்களையும் இந்த தெய்வம் நின்று கொல்வது பற்றி தெளிவாக சிந்திக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

இது தெளிவாக இருக்கின்றது. விளக்கத்திற்கும் நேரத்திற்கும் நன்றி ஐயா

இப்படி தெளிவா இல்லாவிட்டால் சிலர் வந்து முட்டையில் .... பிடுங்கி

நம்மை மூக்கையே சுரண்ட வைப்பார்கள். அதனால்  நானே முந்திக்கொண்டேன். :D

 

 

 

 

  நன்றி அண்ணா .இந்த செய்தி விபரத்தை முழுமையாக எழுதி அனைவர்க்கும் புரியும் படி செய்த உங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன் . :)

சேகரித்த நிதி என்னவாயிற்று?  திரும்பவும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
அது சேகரித்தவர்களுக்கும் 
நிதி கொடுத்த மக்களுக்கும் 
இடைபட்ட பிரச்சனை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

அது சேகரித்தவர்களுக்கும் 
நிதி கொடுத்த மக்களுக்கும் 
இடைபட்ட பிரச்சனை. 

 

வெளியே  வந்தவர்தான் பணம் சேர்க்கவில்லை

அவர்களுடன் தொடர்பில்லை

என்னைக்கட்டாயமாக காசு சேர்க்க பணித்தார்கள்

அவர்கள் பயங்கரவாதிகள் ....

என்ற சொல்லிவிட்டு பலவருடங்களுக்கு முன்பே வௌியில் வந்திருந்தால்

அவர் நம்மவர்...

 

இவர் அன்றும் என்றும் அவர்களைப்போல அல்லவா இருக்கிறார்

அத்துடன் வந்த வேகத்தில் மக்களுடனும் நடமாடுகிறார்

அடுக்குமா நமக்கு..

 

இத்தனை வருடம் எமக்காக உழைத்து

சிறையிலிருந்து வெளியில் வரும் ஒரு உறவை

வெளியில் வைத்தும் இவ்வாறு கொல்ல தமிழனால் மட்டுமே முடியும்....... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்த திரியில்தான் ஒரு மாற்றுக்கருத்து மணிக்கமும் கருத்தே சொல்லவில்லையே ( தென்னாலி இறுதியாக எழுதியது போக). அப்புறம் ஏன் சும்மா காத்துக்கு அட்டை கத்தியை விசுக்குகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
நீதி பிறக்கும்போது 
சிலர் ஓடி ஒழிந்துகொள்வார்கள் என்பதை இந்த திரி மூலம் காண  கூடியாதாக இருந்தது.
 
நீதி பிறக்குவரை ....
மாரி தவளைபோல் அநீதி பரப்பி 
வாழ்வார் சிலர் என்பதையும் புரிந்து கொண்டோம்.
 
தெளிவும் 
புரிதலும் 
பேச பட வேண்டியவை.
 
அதுதான் புத்தருக்கு ஞானம் வந்துவிட்டதே 
ஏன் இப்போது ஓதிக்கொண்டு திரிகிறீர்கள் ?
என்று போய் புத்த கோவில்களில் கேட்டு ...
பதிலை எம்மோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி நான் முன்பு எழுதவில்லை.

விசாரித்துப் பார்த்ததில் தெரிவது,

1) மேற்படியானவர்கள் கிரிமினல்கள் என்ற கீழ் கோட்டின் தீர்ப்பில் மாற்றம் இல்லை.

2) பயங்கரவாதிகளா இல்லையா என்பது ஈயூ முடிவில் தங்கியுளது. ஆகவே அதில் இப்போ இந்த இடைநிலை கோட்டு முடிவெடுக்க முடியாது

3) இப்போ கொடுக்கப் பட்ட தண்டனைக்கு ஏலவே அனுபவித்த காலம் போதுமானது ஆகவே இப்போ உடனடி விடுதலை.

இதில் யாரும் வெல்லவுமில்லை யாரும் தோக்கவும் இல்லை.

இதை இங்கே மாற்றுக்கருத்து எழுதுபவர்களின், குறிப்பாக ஒருவர் நீண்ட ஓய்விலும் மற்றயவர் ஒரு மாத விடுப்பிலும் போயுள்லபோது கதைத்து - அட்டைக் கத்தியை விசுக்கி வீரம் காட்டுவது வெக்கம் கெட்ட வேலை. நேர்மையில்லாத கருத்தாடலும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொல்வது கொஞ்சமாவது மண்டையில் சரக்கு உள்ள மாற்று கருத்து மாணிக்கங்களை.

கோசன் நீங்கள் என்ன உளறிக்கொண்டு, யார் அவர்கள் எதுக்கெடுத்தாலும் புலியின் மேல் பழி போடுபவர் எல்லாம் மாற்று கருத்தளர்கள் கிடையாது. :icon_mrgreen:

யதார்த்தம் எது மாய வலை எது பகுத்தறிய தெரிந்தவர் மாத்திரமே. சும்மா கல்யாண வீட்டிலும் ,கருமாதி வீட்டிலும் தானே  மாலை போடணும் எனும் ஆட்களை  மாற்றுக்கருத்தாளர்கள் ஆக்கினால் தமிழன் என்னாவது . :D  :icon_idea: 

Edited by பெருமாள்

எனக்கு எழுதப்பட்டு பின் வெட்டுப்பட்ட பதில்களையும் அவை வெட்டுப்பட முன்னர் வாசிக்கும் பேறு கிடைத்தது. நான் கேட்ட கேள்வியில் உள்ள பிழையை யாராவது சிந்திக்க கூடியவர்கள் விளங்கப்படுத்தினால் நல்லது.  இதுக்கு ஏன் நடிகர் திலகம் ரேஞ்சிக்கு உணர்ச்சிவசப்பட்டு உணர்வுப்பிழம்பாகிய பதில்கள்?
 
ஓவரா நல்லவர் வேடம் போட தேவையில்லை. இங்க கனடாவில நிதி சேகரித்து பின் மிரட்டி வீட்டு மோர்ட்கேஜ்ஜை ரீ மோட்கேஜ் செய்யப்பண்ணி காசு சேர்த்த விடயங்களும் ஊர் அறியும். எனக்கு தெரிந்த பலரே இவ்வாறு பணம் வழங்கினார்கள். போராட்டத்துக்கென சேர்த்த நிதி போராட்டம் இல்லை என்றான பின்னர் என்னவாயிற்று என்று கேட்டா ஒருத்தர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சி அடையிறார். இன்னொருத்தர் இவர் தமிழன் தானா என்று சந்தேகம் கிளப்பிறார். இனி நான் எந்த போராட்டத்தில கொடி ஆட்டினன் என்டு விதானையிட்ட கடிதம் வாங்கி வந்தாதான் தமிழன் என்டு ஏற்றுக்கொள்வாரோ
 
தனிப்பட்ட ரீதியில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பற்றியோ அவர்களது அர்பணிப்பு பற்றியோ நான் பேசவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அவனவன் சுருட்டினது தெரியாதோ தென்னாலி? அதற்காக எல்லோரும் சுருட்டினார்கள் என்றாகுமா? கனடாவில் சுருட்டியவர்கள் வெளிப்படையாக தான் திரிகிறார்கள்? அவர்களிடம் ஏன் யாரும் கேட்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் சுருட்டியவர்களும்,

அந்தமாதிரி...  வீட்டில் ஆளுக்கொரு புதுப்புது "ஐ போன்களுடனும்"

புதுக் கார்களுடனும், வருடத்துக்கு... ஆடம்பரமான சுற்றுலா என்று... ஜாலியாக திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொல்வது கொஞ்சமாவது மண்டையில் சரக்கு உள்ள மாற்று கருத்து மாணிக்கங்களை.

கோசன் நீங்கள் என்ன உளறிக்கொண்டு, யார் அவர்கள் எதுக்கெடுத்தாலும் புலியின் மேல் பழி போடுபவர் எல்லாம் மாற்று கருத்தளர்கள் கிடையாது. :icon_mrgreen:

யதார்த்தம் எது மாய வலை எது பகுத்தறிய தெரிந்தவர் மாத்திரமே. சும்மா கல்யாண வீட்டிலும் ,கருமாதி வீட்டிலும் தானே  மாலை போடணும் எனும் ஆட்களை  மாற்றுக்கருத்தாளர்கள் ஆக்கினால் தமிழன் என்னாவது . :D  :icon_idea: 

 

இங்கு மாற்றுக்கருத்து எழுதப்படுகிறதா??

இன்ன இன்ன விடயங்களை தாக்கினால்

நமது எதிர்க்கருத்தாளருக்கு வலிக்கும் என்பது மாற்றுக்கருத்தா??

வெறும் சொறிச்சேட்டை

 

இப்படியே தாக்கி எழுதிவிட்டு

அதிக தூரம் போனதும்

ஓ இவரைப்பற்றியெல்லாம் (பிரபாகரன் உட்பட)

இவ்வாறு கண்டபடி எழுதிவிட்டோமோ என 

அம்மணமாக நடுவீதியில் நிற்பது தான் நடக்குது.. :(  :(  :(

மிக டீசண்டாக எழுதுகிறேன் .
 
மாற்றுக்கருத்து என்பது ஒத்த போக்குடையோர்  ஒரு விடயத்தை செயல்படுத்தும்போது அதன் செயல்முறையில் பல்வேறுவிதமான வழிகளை கொண்டிருப்பதை குறிக்கும் .........அதாவது விடயம் ஒன்றாகவே இருக்கும் .
 
ஆனால் எதிர்க்கருத்து என்பது ஒரு விடயத்தை செய்ய முற்படும்போது அது அறவே தேவை இல்லை என்று எதிராக கருத்து கூறுவதை குறிக்கும் .............
 
அந்த வகையில் மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கத்தக்கது .ஆனால் எதிர்க்கருத்து >???????
 
 யார் மாற்றுக்கருத்து ,யார் எதிர்க்கருத்து என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் தோழர்களே . :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் சுருட்டியவர்களும்,

அந்தமாதிரி...  வீட்டில் ஆளுக்கொரு புதுப்புது "ஐ போன்களுடனும்"

புதுக் கார்களுடனும், வருடத்துக்கு... ஆடம்பரமான சுற்றுலா என்று... ஜாலியாக திரிகிறார்கள்.

 
யேர்மனியில் சுருட்டியவர்கள் எனச் சந்தேகத்துக்குரியவர்களே இன்று புலிகளின் பிரதிநிதிகள் நாங்களே என்று கொடிபிடித்து நிற்கின்றனர். பிரதிநிதிகளிடம் நிதி இருப்பதால் அது உரிய இடத்திலேயே உள்ளது. சுருட்டப்படவில்லை என்று வாதிட்டு அந்தப் பிரதிநிதிகளின் முழங்கையால் வழிவதை ஏந்திக் குடித்து வாழ்பவர்களும் இங்குண்டு. 
 
அண்டங்காக்கா கொண்டைக்காரிக்கே பொழிப்புரை எழுதத் தமிழில் இடம் இருக்கும்போது, சுருட்டியவர்களுக்கு எழுதவா இடமில்லாது போய்விடும்.... ????  :icon_mrgreen:

நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!
 

ஆமா இந்த திரியில்தான் ஒரு மாற்றுக்கருத்து மணிக்கமும் கருத்தே சொல்லவில்லையே ( தென்னாலி இறுதியாக எழுதியது போக). அப்புறம் ஏன் சும்மா காத்துக்கு அட்டை கத்தியை விசுக்குகிறீர்கள்.


???????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

தசூ,

ஒரு அப்பாவியை கழுத்தை நெரித்து கொல்வோம் என்கிறார் முதலாமவர். இல்லை கழுத்தை வெட்டிக் கொல்லுவோம் என்கிறார் இரண்டாமவர். இவர்களிடையே இருப்பது செயல்முறை பற்றிய பிணக்கு. கொள்கை முரண் அல்ல.

இல்லை கொல்லவே கூடாது என்கிறார் மூன்றாமவர் - அதுதான் மாற்றுக் கருத்து. ஆங்கிலத்தில் dissent என்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

தசூ,

ஒரு அப்பாவியை கழுத்தை நெரித்து கொல்வோம் என்கிறார் முதலாமவர். இல்லை கழுத்தை வெட்டிக் கொல்லுவோம் என்கிறார் இரண்டாமவர். இவர்களிடையே இருப்பது செயல்முறை பற்றிய பிணக்கு. கொள்கை முரண் அல்ல.

இல்லை கொல்லவே கூடாது என்கிறார் மூன்றாமவர் - அதுதான் மாற்றுக் கருத்து. ஆங்கிலத்தில் dissent என்பர்.

Dissent என்பது மறுதலிப்பதைக் குறிக்கும். மாற்றுக்கருத்து என்பது Alternative viewpoint என்பதைக் குறிக்கும்.

தமிழீழமே தீர்வு என்று ஒரு தரப்பு சொன்னால், அதற்கு எதிராக‌, ஒன்றிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு என்று சொல்வது முன்னையதை மறுதலித்தல் (dissenting viewpoint) ஆகிறது. ஆகவே இக்களத்தில் மாற்றூக்கருத்தாளர்கள் என்று எவரும் கிடையாது. :lol:

பொது பணத்தை சுருட்டுவது நாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளில் சகஜம். பொது துறையில் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் சேர்ந்து பாடுபடவேண்டும். மக்களின் வரிப்பபணத்தை பில்லியன் கணக்கில் சுருட்டி ஏப்பம் விட்ட இன்னும் சுருட்டிக் கொண்டிருக்கும் எத்தனையோ பெரிய அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் இன்று எமது நாடுகளில் கனவான்களைப் போல் வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு ஏர்போட்டில் போய் இறங்கியவுடனேயே ஊழலில் வாசம் தான் எம்மை முதலில் வரவேற்கும். சிறிய பியோனில் இருந்து உயர் அதிகாரி வரை பணச்சுருட்டலை காணலாம்.

இதை ஒழிக்க என்ன செய்யலாம். எமது நாட்டின் சாபக்கேடா?

 கோசான் சே  சரியாக சொன்னீர்கள் 
 
 அதுதானே  போட்டிருக்கிற கச்சையையாவது    பாதுகாப்போம்  என்று ஒருவன் நினைக்கிறான் ,மற்றவன் கச்சையையும் வேட்டியையும்  பாதுகாப்போம் என நினைக்கிறான் ...............இல்லை  கச்சையும் வேண்டாம் வேட்டியும் வேணாம் என்று இன்னொருவன் நினைக்கிறான் .............. :D
 
 
கச்சை = கோவணம் -------என்று வாசிக்கணும் 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தசூ,

ஒரு அப்பாவியை கழுத்தை நெரித்து கொல்வோம் என்கிறார் முதலாமவர். இல்லை கழுத்தை வெட்டிக் கொல்லுவோம் என்கிறார் இரண்டாமவர். இவர்களிடையே இருப்பது செயல்முறை பற்றிய பிணக்கு. கொள்கை முரண் அல்ல.

இல்லை கொல்லவே கூடாது என்கிறார் மூன்றாமவர் - அதுதான் மாற்றுக் கருத்து. ஆங்கிலத்தில் dissent என்பர்.

ஆனால் இந்தோனேசியா கொல்லலாம் ....
 
இனபிறார் கொல்லகூடாது.
 
என்பது மாற்று கருத்து அல்ல அது வேதாந்தம்!
  • கருத்துக்கள உறவுகள்

சரி இசை அப்போ இனி என்னை, அர்யூனை, தெனாலியை, சபேசன்களை இன்னும் எம்போன்றோரை மறுதலிப்பாளர்கள் என்றே அழையுங்கள். இதுவரை dissent ஐத்தான் மா க என்று நான் குறிபிட்டு வந்தேன்.

உங்களுக்கும் நெடுக்குக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்துக்கு பெயர்தான் alternative view point/ மாற்று கருத்து என்றலால் - அந்த சப்பை கட்டுக்குள் நாம் அடங்க மாட்டோம்.

நம் தார்மீக கோபத்துக்கு மறுதலிபாளர் எனும் திமிரான பெயரே சாலவும் பொருந்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.