Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் சங்கக்கார லண்டன் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தொந்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை விட நன்றாக துவேசம் பேசக் கூடிய தமிழ் பேர்வழிகள் உலா வரும் திரி இது...

குறைந்த பட்சம் ஒரு செய்தியின் தன்மையை புரிந்துகொண்டு அதன் வரையறைக்குள் கருத்து பதியும் பகுத்தறிவு இங்கு பலபேருக்கு "கிலோ  என்ன விலை?" என்ற நிலைமை.

இவர்கள் தமிழ் உணர்வு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது....தூ. <_<

 

சிலபேருக்கு, கடுப்பு ஏத்துவதற்காக எழுதுவதை வாசித்து.....

ரென்சன் ஆவாதீங்க.... சசி. :lol:  :D

  • Replies 56
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் அண்ணே ,
உங்கள் அகராதியில் 'இனத்துவேசி' என்பவன் யார்?
சங்கக்கார ஒரு இனத்துவேசி என்னும் உங்கள் வாதத்தை ஏற்பதாயின் அதற்க்கு நீங்கள் வைத்துள்ள சான்றுகள் என்ன?

சிங்களவர் பொதுவாக இனத்துவேசம் பிடித்தவர்கள்.
சங்கக்கார ஒரு சிங்களவர்.
ஆதலினால் அவரும் ஒரு இனத்துவேசி.


இந்த லாஜிக்கில் ஏதும் பார்க்குரீர்களோ...?

  • கருத்துக்கள உறவுகள்

சசி அண்ணை 
நீங்கள் மேற்குறிப்பிட்ட லாஜிக்கில் 
 

 

 

சிங்களவர் பொதுவாக இனத்துவேசம் பிடித்தவர்கள்.

இதனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்களா ....?(நீங்கள் உட்பட).....?
ஆம்  என்றால் அத்துடன் எனது வேலை முடிகிறது இந்த திரியில் 
சங்கா இனத்துவேசியா இல்லையா என்பது எனக்கு அவசியமற்றது  அதை வேண்டுமானவர்கள் தொடரட்டும் 
சங்காவை வைத்தோ ...மற்றைய வீரர்களை வைத்தோ முழு சிங்கள இனத்திற்கும் வெள்ளையடிப்புகள் அனுமதிக்கமுடியாதவை 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் அண்ணே ,

உங்கள் அகராதியில் 'இனத்துவேசி' என்பவன் யார்?

சங்கக்கார ஒரு இனத்துவேசி என்னும் உங்கள் வாதத்தை ஏற்பதாயின் அதற்க்கு நீங்கள் வைத்துள்ள சான்றுகள் என்ன?

சிங்களவர் பொதுவாக இனத்துவேசம் பிடித்தவர்கள்.

சங்கக்கார ஒரு சிங்களவர்.

ஆதலினால் அவரும் ஒரு இனத்துவேசி.

இந்த லாஜிக்கில் ஏதும் பார்க்குரீர்களோ...?

சசி.. இறுதிப் போர் முடிந்த கையோடு இவர் ஒரு உரையாற்றினார் (லண்டனில் என நினைக்கிறேன்) அத்தோடு இவரும் அதே மட்டைதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அது Colin Cowdrey lecture. அதை கேட்டு சங்கா துவேசி என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு ஆங்கிலப் புலமை மட்டு மட்டு என்றுதான் அர்த்தப்படக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது Colin Cowdrey lecture. அதை கேட்டு சங்கா துவேசி என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு ஆங்கிலப் புலமை மட்டு மட்டு என்றுதான் அர்த்தப்படக்கூடும்.

இருக்கலாம் கோசான்.. ஏனென்றால் எனக்குத் தமிழ்தான் முதல்மொழி.. :D மற்றதெல்லாம் இடையில் பழகியது.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் அண்ணே ,

உங்கள் அகராதியில் 'இனத்துவேசி' என்பவன் யார்?

சங்கக்கார ஒரு இனத்துவேசி என்னும் உங்கள் வாதத்தை ஏற்பதாயின் அதற்க்கு நீங்கள் வைத்துள்ள சான்றுகள் என்ன?

சிங்களவர் பொதுவாக இனத்துவேசம் பிடித்தவர்கள்.

சங்கக்கார ஒரு சிங்களவர்.

ஆதலினால் அவரும் ஒரு இனத்துவேசி.

இந்த லாஜிக்கில் ஏதும் பார்க்குரீர்களோ...?

சசி உங்களுடன் எனக்கு முரண்பாடு இன்றுவரை கிடையாது .என்று சிங்களம் விளையாட்டை அரசியல் ஆக்கியதோ அன்றே அது இனதுவேச குழு .

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் பெருமாள் அண்ணே ,
உங்க கூட மட்டுமில்ல, யாழ்  இணையத்தில் இருக்கிற ஒருத்தர் கூடவும் எனக்கு பிணக்குகள் கிடையாது.
உங்கள் கூற்றுப்படி "சிங்களம் விளையாட்டை அரசியல் ஆக்கியதோ அன்றே அது இனதுவேச குழு
இதை நன்கு புரிந்து கொண்டால் சிங்களம் விளையாட்டை அரசியல் ஆக்கியது உண்மை... ஆனால் அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் அந்த அரசியல் கோட்பாட்டை கடை பிடித்தார்களா? அல்லது தீர்மானித் தார்களா? 
 
இதே கண்ணோட்டத்தில் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்களேன்... இந்திய அரசியல் எமக்கு செய்த கொடூரங்கள் தான் எத்தினை.... அதனால் ஒட்டு மொத்த இந்தியரையும்  நாங்கள் எதிரிகளாக பார்க்க முடியுமா?
 
ராஜீவ் காந்தி கொலையுடன் எதோ ஒரு வகையில் தெரிந்தோ, தெரியாமலோ ஈழத்தவர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் (துன்பியல் நிகழ்வு).. அதனால் ஒட்டு மொத்த ஈழத்தவரும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களா?
 
வணக்கம் அக்னியஸ்திரா, 
சங்காவை வைத்தோ ...மற்றைய வீரர்களை வைத்தோ முழு சிங்கள இனத்திற்கும் வெள்ளையடிப்புகள் அனுமதிக்கமுடியாதவை ...
சிங்கள இனத்திற்கு இங்கு யாரும் வெள்ளை அடிக்க முன் வரவில்லை ..
அதே போல் தமிழில் அதி தீவிர பற்றுள்ள ஒரு சிலர் முன்வைக்கும் சிங்கள இனத்தின் மேலான இனத் துவேசமான கருத்துக்களால் ..முழு தமிழ் இனத்திற்கும் "இனத்திவேசிகள்" என்ற கருப்பு அடிப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே...
 
இங்கே நடந்தது ஒரு தனி மனித தாக்குதல் ...இதுவே உண்மை..
சங்கக்கார கிரிகெட் உலகம் போற்றும் ஒரு வீரர் .. இதுவே உண்மை..
சரியான புரிதல் இன்றி கருத்துக்கள் வைக்கப்ப் பட்டன ... அதுவே உண்மை 
நான் இதை எழுதுவது கூட என் இனத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுதலால் ..இதுவே உண்மை.
 
~~ நான் அதிகப் பிரசங்கித்தனமாக எதனையும் எழுதி இருந்தால் மன்னித்து பொருத்தருள்க ~~
  
 
  • கருத்துக்கள உறவுகள்

சங்கா கிரிக்கெட் உலகு போற்றும் சிறந்த வீரர்தான். அவரது ஆட்டத்தையும் அரவிந்த டி சில்வாவின் ஆட்டத்தையும் ரசித்தாலும் சிறிலங்கா வெல்லுவதை ஒருபோதும் கொண்டாடுவதில்லை.

சிறிலங்கா இந்தியா போல எமக்கு அண்டைநாடு எமது நாடல்ல. இந்தக்கூற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கலாம். அப்படித் தொடர்ந்தும் இருந்தால் சிங்களவர்களுக்குக் கீழேதான் எப்போதும் வாழவேண்டும்.

தமிழனாக இருந்து கொண்டு இனவாத சிங்கள அரசால் போஷிக்கப்பட்டு வரும் சிறிலங்கா கிரிக்கெட் அணியை விளையாட்டில் அரசியல் பார்ப்பதில்லை என்று ஆதரிப்பதில் எனக்கு ஒருபோதும் சம்மதமில்லை. இது தமிழ் இனவாதம் என்றால் நான் இனவாதியாகவே இருந்துவிட்டுப் போகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா கிரிக்கெட் உலகு போற்றும் சிறந்த வீரர்தான். அவரது ஆட்டத்தையும் அரவிந்த டி சில்வாவின் ஆட்டத்தையும் ரசித்தாலும் சிறிலங்கா வெல்லுவதை ஒருபோதும் கொண்டாடுவதில்லை.

சிறிலங்கா இந்தியா போல எமக்கு அண்டைநாடு எமது நாடல்ல. இந்தக்கூற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கலாம். அப்படித் தொடர்ந்தும் இருந்தால் சிங்களவர்களுக்குக் கீழேதான் எப்போதும் வாழவேண்டும்.

 

 

தமிழனாக இருந்து கொண்டு இனவாத சிங்கள அரசால் போஷிக்கப்பட்டு வரும் சிறிலங்கா கிரிக்கெட் அணியை விளையாட்டில் அரசியல் பார்ப்பதில்லை என்று ஆதரிப்பதில் எனக்கு ஒருபோதும் சம்மதமில்லை. இது தமிழ் இனவாதம் என்றால் நான் இனவாதியாகவே இருந்துவிட்டுப் போகின்றேன்!

 

ஆஹா...  நல்ல, கருத்து கிருபன்.

சொல்வதை அழகாக, சொல்லியுள்ளீர்கள்.

நிச்சயமாக.... உங்களிடமிருந்து, இந்தக் கருத்தை நான்... எதிர் பார்க்கவேயில்லை. :rolleyes:  :) 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கிருபன் அண்ணா,

நீங்கள் கூறும் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவையே...

ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் ஸ்ரீலங்கா அணியின் வெற்றி குறித்தோ அல்லது, ஒரு நாடாக
ஸ்ரீலங்காவின் அரசியல் சித்து விளையாட்டுக்கள், தமிழர் மீதான இனத்துவேசம் குறித்தோ அல்ல.

அவ்வாறான ஒரு திரியில் நானும் உங்களுடன் தோல் சேர்ந்து என் இன உணர்வை வெளிப்படுத்துவேன்.
என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதை நான் அன்றாடம் செய்தும் வருகிறேன்.
 
பெரிய பெரிய விடயங்கள் குறித்து கருத்தாடும் பலர் இங்கே அடிப்படை விடயங்களை புறம் தள்ளி பேசுகிறார்கள் என்பது வருந்தத்தக்கது...

இங்கே நான் திரும்பவும் வந்து கருத்து எழுதக்காரணம் ஸ்ரீ லங்கா விளையாட்டு அணிக்கு ஆதரவுக்காக அல்ல.
மாறாக சங்கக்கார எனும் ஒரு தனி மனிதனை ஆதாரங்கள் இன்றி  நீங்கள் எல்லோரும் "இனத்துவேசி" என்று அடையாளப்படுதுவதே.

"இனத்துவேசி" என்பது ஒருவருடைய குணாதிசயங்கள், பண்புகள், நடவடிக்கைகள், கொள்கைகள் மூலம் வெளிப்படும் ஒரு செயல்... அப்படியாயின் சங்கக்கார எனும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இந்த மனிதன் ஆற்றிய இனத்துவேசத்தை அடையாள படுத்தும் செயல்கள் என்ன?

 

(இப்படியான ஒரு கருத்தை நான் பௌத்த பல சேனா தேரருக்கோ, கோத்தாஅபயவிற்கோ அல்லது டி.எம் ஜெயரட்னவிற்கோ வந்து எழுதப் போவதும் இல்லை...)
   
இதற்கு மேல் நான் எதையும் எழுத விரும்பவும் இல்லை ... நீங்கள் "இது தமிழ் இனவாதம் என்றால் நான் இனவாதியாகவே இருந்துவிட்டுப் போகின்றேன்" என்று முடிவெடுத்தால் தாராளமாக இருக்கலாம்.
ஆட்சேபனை எதுவும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவின் விமான நிலையங்களிலும்.. சோதனைச் சாவடிகளிலும் தமிழர்கள் (வயதானவர்கள் கூட) மிருகங்களிலும் கேவலமாக நடத்தப்பட்ட போது தமிழர்களுக்காக கவலைப்பட்டிருக்காரா சங்ககார. அப்படிப்பட்ட சங்ககாரவுக்கு ஹீத்துரோவில் ஒரு சின்னப் பிரச்சனையாம் என்ற உடன பரிதவிக்கிற ஆக்களை.. ஊடகங்களைப் பார்த்தால்.. பரிதாபமாகவும்.. சிரிப்பாகவும் உள்ளது. :lol::icon_idea::o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

The terrible race riots of 1983 and a bloody communist insurgency amongst the youth was to darken my memories of my childhood and the lives of all Sri Lankans. I recollect now the race riots of 1983 now with horror, but for the simple imagination of a child not yet six it was a time of extended play and fun. I do not say this lightly as about 35 of our closest friends, all Tamils, took shelter in our home. They needed sanctuary from vicious politically-motivated goon squads and my father, like many other brave Sri Lankans from different ethnic backgrounds, opened his houses at great personal risk.

For me, though, it was a time where I had all my friends to play with all day long. The schools were closed and we'd play sport for hour after hour in the backyard - cricket, football, rounders…it was a child's dream come true. I remember getting annoyed when a game would be rudely interrupted by my parents and we'd all be ushered inside, hidden upstairs with our friends and ordered to be silent as the goon squads started searching homes in our neighbourhood.

I did not realise the terrible consequences of my friends being discovered and my father reminded me the other day of how one day during that period I turned to him and in all innocence said: "Is this going to happen every year as it is so much fun having all my friends live with us."

We visited shelter camps run by the Army and the LTTE and even some administered in partnership between them. Two bitter warring factions brought together to help people in a time of need.

In each camp we saw the effects of the tragedy written upon the faces of the young and old. Vacant and empty eyes filled with a sorrow and longing for homes and loved ones and livelihoods lost to the terrible waves.

Yet for us, their cricketers, they managed a smile. In the Kinniya Camp just south of Trincomalee, the first response of the people who had lost so much was to ask us if our families were okay. They had heard that Sanath and Upul Chandana's mothers were injured and they inquired about their health. They did not exaggerate their own plight nor did they wallow in it. Their concern was equal for all those around them.

This was true in all the camps we visited. Through their devastation shone the Sri Lankan spirit of indomitable resilience, of love, compassion, generosity and hospitality and gentleness. This is the same spirit in which we play our cricket. In this, our darkest hour, a country stood together in support and love for each other, united and strong. I experienced all this and vowed to myself that never would I be tempted to abuse the privilege that these very people had given me. The honour and responsibility of representing them on the field, playing a game they loved and adored.

I will do that keeping paramount in my mind my Sri Lankan identity: play the game hard and fair and be a voice with which Sri Lanka can speak proudly and positively to the world. My loyalty will be to the ordinary Sri Lankan fan, their 20 million hearts beating collectively as one to our island rhythm and filled with an undying and ever-loyal love for this our game. Fans of different races, castes, ethnicities and religions who together celebrate their diversity by uniting for a common national cause. They are my foundation, they are my family. I will play my cricket for them. Their spirit is the true spirit of cricket. With me are all my people. I am Tamil, Sinhalese, Muslim and Burgher. I am a Buddhist, a Hindu, a follower of Islam and Christianity. I am today, and always, proudly Sri Lankan.

இவரைத்தான் இனவாதி என்கிறீர்களா?

ஒரு சிங்களவன் கூட இனவாதியில்லாமல் இருக்க முடியாது எனும் உங்கள் சிந்தனை, இஸ்லாத்தை நம்பாதவன் எல்லாம் காபிர் எனும் தலிபான் சிந்தனைக்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாரவின் அப்பர் 1983 இல் செய்த ஒரு உதவியை வைச்சுக் கொண்டு.. அதன் பின் நடந்த அத்தனை இனப்படுகொலைகளையும் கண்டும் கண்மூடிக்கிடந்த சங்காராவுக்கு.. இனப்படுகொலைகளை செய்த சிங்கள இராணுவத்துக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த சங்ககாரா என்ற சிங்கள இனவாதிக்கு... வெள்ளையடிக்கும்.. சிலரின் செயல் தலிபான்களின் செயலை விட மோசமான மக்கள் விரோதமாகும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Riot: a violent disturbance of the peace by a crowd.

அதாவது ஒரு கும்பலின் அமைதியைக் குலைக்கும் செயல் எனப் பொருள்படும். :wub:

1983 இல் தமிழர்களை இலக்கு வைத்து சிங்கள அரசியல்வாதிகள் காடையரை ஏவி கொலை செய்ததுக்குப் பெயர் இன அழிப்பு. அதை சிங்களவன் நயவஞ்சகமாக Riot என்கிறான். அதையே நாங்களும் சொல்கிறோம். சங்கக்காரவும் சொல்கிறார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ரையட்டா, இனப்படுகொலையா. யுத்த குற்றமா, இனவழிப்பா என்று ஜீ ஜீ பொன்னம்பலம் காலத்தில் இருந்து முட்டையில் மயிர் புடுங்கி கடைசியில் கண்டது - முள்ளிவாய்க்கால் கோவணம் தான்.

I am Tamil, Sinhalese, Muslim and Burgher. I am a Buddhist, a Hindu, a follower of Islam and Christianity. I am today, and always, proudly Sri Lankan.

சிங்கள இனத்தில் இருந்து இப்படிச் சொல்லும் ஒரு குரலை - அடையாளம் காண நாமும் மன விசாலம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

கேபியை, கருணாவை, டக்காவை, புலிப்பணத்தை அமுக்கிய புல வாலுகளை போன்ற தமிழர்களை விட சங்காவை போன்ற சிங்களவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

இனவாதத்துக்குப் பதில் இனவாதமே என்று, நாமே உருவாக்கிய மனச்சிறையில், கடந்த காலத்தின் கைதிகளாய், சூரியத்தேவனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் மானிடர்க்கு இந்த மனவிசாலம் வாய்க்கவில்லை என்பது அவர்களின் அப்பட்டமான இனவாத கூச்சலிலே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் என்ன சொன்னாலும் சங்கா ஒரு ஜெண்டில்மன் தான்!

சந்திரன், டோக், புறனவா இந்த மூண்டும் நினைவில் வந்து துலைக்குது! :D

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

58951_10151345545407944_2021433323_n.jpg

 

 

சங்காவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி கனநாள் ஆச்சுது. இப்ப தான் சிலர்.. முள்ளிவாய்க்கால்.. கோவணம் என்று கொண்டு நிற்கினம். முள்ளிவாய்க்காலுக்கு முதல்.. 1948 முதல்.. டங்குவார் அற அற ஓடினது தெரியல்ல... மறந்திட்டினம். :lol:

இப்படித்தான் ரையட்டா, இனப்படுகொலையா. யுத்த குற்றமா, இனவழிப்பா என்று ஜீ ஜீ பொன்னம்பலம் காலத்தில் இருந்து முட்டையில் மயிர் புடுங்கி கடைசியில் கண்டது - முள்ளிவாய்க்கால் கோவணம் தான்.

I am Tamil, Sinhalese, Muslim and Burgher. I am a Buddhist, a Hindu, a follower of Islam and Christianity. I am today, and always, proudly Sri Lankan.

சிங்கள இனத்தில் இருந்து இப்படிச் சொல்லும் ஒரு குரலை - அடையாளம் காண நாமும் மன விசாலம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.

கேபியை, கருணாவை, டக்காவை, புலிப்பணத்தை அமுக்கிய புல வாலுகளை போன்ற தமிழர்களை விட சங்காவை போன்ற சிங்களவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

இனவாதத்துக்குப் பதில் இனவாதமே என்று, நாமே உருவாக்கிய மனச்சிறையில், கடந்த காலத்தின் கைதிகளாய், சூரியத்தேவனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் மானிடர்க்கு இந்த மனவிசாலம் வாய்க்கவில்லை என்பது அவர்களின் அப்பட்டமான இனவாத கூச்சலிலே தெரிகிறது.

முள்ளிவாய்க்கால் கோவணம்..அது இது எண்டு தேவையில்லாத கதைகள் கதைக்கவேண்டாம்

நீங்கள் ஒருபெரியாள் எண்டு யாழில் காட்டுவதற்காக நீங்கள் கதைக்கும் சில கதைகள் வெந்தபுண்ணில் வேல் பாச்சுவது போல் இருக்கிறது

முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு கோவணம் கலரவில்லை....உலக நாடுகளினதும், ஐனாவினதும் கோவணம் தான் கழன்றது :icon_mrgreen: 

இறந்த 50 000 மாவீரர்களும் மானம் ஒன்றுக்காக தான் தம் இன்னுயிரை மாய்த்தார்கள்

சங்கக்காரவுக்கு நீங்கள் விளக்குபிடிக்கத்தேவையில்லை...பிடித்தாலும் அவர் உங்களை ""பறை தெமுலு" என்று வாயில் உமுல்வது நிச்சயம் :icon_idea: 

கீத்ரோவில் அவருக்கு நடந்தது பெரிய அநியாயம் என்றால்... பண்டாரனாயக்காவில் நம் தமிழருக்கு நடப்பது எந்த வகையை சாரும்? :D 

இமிகிறேசனில் சிங்களத்தில் தான் கேள்வி கேட்பார்கள்.....பின்னுக்கு நிக்கிற நாங்கள் போய் மொழிபெயர்த்து விட்டால் எங்களையும் ஒரு பார்வை பாப்பினம்....கோய்யால பாத்திருடா எண்டிட்டு........நாம் அந்த உதவியை செய்யாமிலிருப்பதில்லை :wub:  :wub:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் ஐநாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிராரணைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறீலங்கா அதியுச்ச அரசியல் சித்து விளையாட்டுகளை செய்து கொண்டிருக்கிறது. ஐநாவில் சிறீலங்காவின் ஊடகக்காரர் பகிரங்கமாக மிரட்டும் வேலைகளில்கூட இறங்கிவிடுகிறார்கள்.

அப்போது சங்கக்கார புகழ்பெற்ற இந்த உரையை ஆற்றுகிறார். அதன் முன்னரும் ஆற்றவில்லை. பின்னரும் ஆற்றவில்லை. அதில் அவர் வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசிகளைக் கவனியுங்கள்.

00:35 - தெற்கில் நடந்த வன்முறைகள் தன்னைப் பெரிதும் பாதிக்கவில்லை என்று சொல்லும் இவர், வேறு பகுதிகளில் அன்றாடம் மக்கள் உயிராபத்தில் இருந்தார்கள் என்கிறார். சிலர் தங்கள் தாய்நாட்டைக் காக்க அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இருந்தார்கள் என்கிறார். இவர் தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளைக் குறிப்பிடுகிறார் என எண்ணுகிறேன். வாழ்க சங்கா!

06:35 - கொழும்பில் ஒரு சோதனைச் சாவடியில் தன்னை நிறுத்திய இராணுவ சிப்பாய் தான் இறப்பது பெரிதல்ல (அது தனது வேலையாம்..) ஆனால் சங்கா பாகிஸ்தான் தாக்குதலில் தப்பியது ஆறுதல் தருகிறது என்றாராம். இது போர்க்குற்ற இராணுவத்துக்கான வெள்ளையடிப்பு இல்லை என்பது திண்ணம்.

பாகம் 2:

01:24 - 400 வருடகால போர்த்துக்கேய, ஒல்லாந்தர், ஆங்கிலேய காலனியாதிக்கத்தினால் எங்கள் உறுதியை சிதைக்க முடியவில்லை என்கிறார். (செய்தி: ஐநாவினால் ஒன்றும் புடுங்க முடியாது. அப்போது அவரது முகபாவனையையும் கவனியுங்கள். அதில் உள்ள தினாவெட்டு சொல்கிறது.. சிறீலங்கனா கொக்கா.. :icon_idea: ) இதை வேறு யாரோதான் சொல்கிறார்கள். நான் நம்பமாட்டன்.. :D

இன்னும் பல பாகங்கள் உள்ளன. நேரம் உள்ளவர்கள் பார்த்துப் பயன்பெறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சங்கா வெட்டிக்கு கத்தி திரியுறார் போலத் தான் தெரிகிறது. சரியிற செல்வாக்கை உயர்த்த. :lol: 

 

Kumar Sangakkara posted on Twitter a series of messages after his dealings with UK Border Force at Heathrow Airport
 

A Home Office spokesperson told MailOnline Travel: 'All Border Force officers are expected to carry out their duties in a professional and courteous manner.

 

'If we received a complaint suggesting these standards have not been met, it would be thoroughly investigated as a matter of course.'

 

Sangakkara is not believed to have lodged a formal complaint with Border Force. 

ருவிட்டரில் புலம்பினதை.. ஏன் இவர் கம்பிளைனா கொடுக்க துணியல்ல..?! :rolleyes:  :lol: 

 

http://www.dailymail.co.uk/travel/travel_news/article-3079709/Sri-Lankan-cricketer-Kumar-Sangakkarra-complains-Twitter-horrendous-experience-rude-patronising-UK-immigration-officer-Heathrow-Airport.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கம்பிளைட்ன் கொடுக்கவில்லை, ஏனென்றால் உங்களை என்னைப் போல சங்கா சில்லறை இல்லை. ஜென்டில்மேன் ;)

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சுப்பிரமணியம் சுவாமி மாதிரி ருவிட்டரில பிசத்தினவரோ. அதுவும் ஜென்டில்மேன் பிகேவியர் என்றாலும் எண்டுவியள். சுளகு தனக்கு தனக்கு என்றால் படக்குப்படக்கு என்றுமாம்.

 

ருவிட்டர் அழுது வடிச்சது.. உங்க ஜென்டில்மேனை.. பீடிங் பேபி... நேசறிப் பிள்ளை மாதிரி காட்டிவிட்டது. ஆங்கில ஊடகங்கள்.. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வரை போய் விசாரிச்சிட்டு சொல்லுதுங்க.. உதெல்லாம்.. சங்காவின் ருவிட்டரில தான். என்ன நடந்தது என்று கூடச் சொல்லேல்ல. ஏதேதோ புலம்பிறார். ஒரு கம்பிளைனும் கொடுக்கல்ல. கொடுத்தாலாவது விசாரிப்பம். மற்றும்படி எங்கள் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள்... மேன்மையான நடத்தையை காண்பிக்க கோரப்பட்டவர்கள் என்று.

 

இதைச் சொல்லின பிறகும்.. சங்காவுக்கு ஜென்டில்மேன் கெளரவம் கொடுக்கக் கூடியது உங்க ஒரு சிலர் தான். அதுவும் வழமையான சின்னத்தனமான செயல் தான். :lol::icon_idea:

  • 2 weeks later...
ஒரு 20 வருட்ங்களுக்கு முன்னர் .....
 
எனது தங்கையின் O/L  பரீட்சையின் முதல் நாள் , யூனிபோர்பம் நீலம்  எல்லாம் போட்டு தோய்த்து சந்தியில் கடையில் கொடுத்து அயர்ன் செய்து (அப்போது மின்சாரம் இல்லை) , அப்பா காலையில் கோயில் சென்று அர்ச்சணை செய்து கொண்டு வந்து தங்கைக்குப் விபூதி பொட்டுஎல்லாம் வைத்து , தம்பி இன்றைக்கு தங்கை சயிக்கிள் ஓட வேண்டாம் ,நீங்கள் கொண்டு போய் பரீட்சைக்கு விட்டு விட்டு வாருங்கள் என சொல்ல ,  அப்பா அம்மா எல்லாரும் தங்கைக்கு முத்த மிட்டு அனுப்ப நானும் சயிக்கிலில் ஏற்றிக் கொண்டு போகிறேன் ,நான் மெயின் றோட்டுக்குப் போய் ஒரு சில நிமிடங்களில் , திடீரென வந்த சுப்பர் சொனிக் விமானங்கள் வானத்தில் சில சுற்றுகளைச் சுற்றி குண்டு போடுவது போல் பதிந்து எழும்பி  , வெருட்டி விட்டு சென்று விட்டது, நானும் தங்கையும் , சயிக்கிள போட்டுட்டு  றோட்டில் விழுந்து படுத்து , பற்றைக்குள் எல்லாம் ஓடி ஒழித்து, விமானங்கள் எல்லாம் போன பின்னர் எழும்ப , அப்பாவும் சயிக்கிளில் அவ்விடத்துக்கு வர சரியாக இருந்தது ( விமானம் சுற்றும் போது எல்லோரும் ரோட்டிலும் , பற்றைகளுக்குள்ளும் படுத்து கிடக்க அப்பா மட்டும் எம்மை நோக்கி வந்து இருக்கிறார். அன்புள்ள அப்பா)
 
தங்கயின் காலிலும், கையிலும் உரசல் காயங்கள், அயர்ன் பண்ணிய யூனிபோர்ம் எல்லாம் ஒரே மண் , தங்கை எழும்பி அழுது கொண்டு வாங்க அப்பா , அண்ணா நாங்கள் வீட்ட போவம் என சொல்ல ,நாங்கள் அவ்வாவைத் தேற்றி  பரீட்சைக்கு கூட்டிச் சென்று பரீட்சை முடியு மட்டும் வெளியிலேயே நின்று......................
 
 நிற்க 
 
விமானங்கள் வந்தது ஒன்றும் தற்செயலான செயல் அல்ல , கொழும்பில் உள்ள படித்த சிங்கள மேதாவிகள் பரீட்சக்கு செல்லும் தமிழ் மாணவ்ர்களின் மன நிலையக் குழப்பி அவர்களைச் சிதைத்து, சிங்கள மாணவர்களை முன்னேற்றுவதற்காக பலாலிக்கு கட்டளையிட்டு சரியாக பரீட்சைக்கு மாணவர்கள்  செல்லும் நேரம் பார்த்து குழப்பியுள்ளார்கள்
 
யோசித்துப் பாருங்கள் சிறிலங்கா முதலாவது டெஸ்ட் வென்றது sep 1985 , யாழ்ப்பாணத்தில் முதாலாவது புற்தரை பிட்ச் போட்டது 2014
 
எதற்காக ,
 
தமிழர்கள் சிறந்து விளையாட்டு வீரர்களாக உருவாகக் கூடாது என்பத்ற்காகத் தான் 
யாழில் எனது காலத்தில் 
 
பெரிய வரதன், சின்ன வரதன் (யாழ் இந்து), "பென்ஜமின்" சதீஸ் (யாழ். மத்தி), காண்டீபன் (சென் ஜோன்ஸ் - எனதருமை ஆசான் திரு மகாலிங்கம் சேரின் மகன்), அந்த பெயர் தெரியாத சென் பற்றிக்ஸ் opening batsman (பிரசன்னா?)
 இவர்கள் அணைவருக்கும் இலங்கை தேசிய அணியில் இடம் பிடிக்கக்கூடிய திறமை யிருந்தது  என நான் கருதுகிறேன். (இன்னமும் பலர் இருந்திருக்கலாம்)  
 
அப்படி நடந்திருந்தால் சில வேளை சங்ககாராக்கள் யாரென்றே தெரியாமல் போயிருக்கலாம்.
 
யாருக்குத் தெரியும் சில வேளை வரதன் உலகின் முன்னனி batsman ஆகவும் காண்டீபன் உலகின் முன்னனி all rounder ஆகவும்  இருந்திருப்பார்கள்
 
சிங்களம் எம்மைச் சிதைதுத் தான் சங்காராக்கள், மலிங்கக்களை 
உருவாக்கினார்கள் , இவர்கள் இருக்கும் இடம் எனது உறவுகளுக்கானது எனும் போது இவர்களை நான் எப்படி கொண்டாடுவது.
 
சங்ககார நல்லவரகா இருக்கலாம் அது வேறவிடயம் , ஆனால் தமிழர்களை அழித்து அந்த இடத்தில் தான் சிங்களம் சங்ககாரவை அமர்த்தியிருக்கிறது என நான் நினைக்கும் போது , நான் எப்படி அவரைப் போற்றுவது?

 

16 வயதில் கைது செய்யப்பட்ட தமிழ் மாணவன் எந்த வித விசாரனையும் இன்றி 25 வருட்ங்களாக சிறையிலிருக்கிறான்,
 
தமிழக சகோதரர்கள் ஒரு சிங்கள விளையாடு வீரனும் தமிழக் எல்லைக்குள் வரக்கூடாது எனப் போராடுகின்றனர்.
 
ஆனால் நாம் சங்ககாராகளைக் கொண்டாடுகிறோம், சிலர் சொல்வார்கள் விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று , 
 
நான் கேட் க்கிறேன்
 
எமது உயிருடன் விளையாடியவனின் விளையாட்டை நான் ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்
 
சிங்களம் எம்மைச் சிதைத்து எமது குருதியில் வரைந்த ஒவியங்கள் தான் இந்த சங்ககாராக்கள், ஓவியம் வடிவாக இருக்கலாம் ஆனால் நான் அசிங்கம் என்று தான் சொல்வேன் , எனக்கு அங்கே தெரிவது ஓவியமல்ல எமது குருதி தான் .
 
ஈழத்தமிழர் உலகின் மிக சிறந்த இனமாக வரக்கூடியவர்கள் என்பதனை,  ஈழத்தமிழர் அறிய முன்பே இந்தியர்களும், சிங்களமும் கணித்துக் கொண்டனர் , அதனால் தான் எம்மைச் சிதைத்து உலகம் முழுவதும் அகதியாக ஏற்றுமதி செய்துவிட்டு , இன்று அவர்கள் அனைவரும் பொறியியலாளர்கலாகவும், வைத்தியர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உலகை வலம் வருகிறார்கள் 
 
சங்ககரா எமது துன்பங்களை வெளியில் சொல்வாராக இருந்தால் அவருக்கு எனது நன்றிகள்
 
சங்ககரா தற்போது கனவானா? கெட்டவரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் தனது சர்வதேச கிர்க்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் மிகவும் அநீதியான மனிதாராகவே இருந்தார்.
 
அவுட் இல்லாமல் அவுட் கேட்பது, உடனடியாக அவுட் எனக் கொண்டாடி, நடுவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது, கையில் பந்து இல்லாமலே பந்து கையில் இருப்பது போல் பாவனை செய்து துடுப்பாட்ட வீரனை ஒட்ட மெடுக்கும் போது குழப்புவது, ஒரு வர்ணனையாளர் கூறினார் , சங்காவுக்கு விளாயாட்டு நாகரீகம் தெரியாது இருக்கலாம் ஆனால் அவர் தான் கற்ற கல்விக்கென்றாலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று (அப்போது சங்கா ஒரு சட்டக் கல்லூரி மாணவன்)
 

(இங்கே நான் எனது தங்கயின் சம்பவத்தை பதிந்த காரணம் , சிங்களம் எப்படி யெல்லாம் எம்மை சிதைத்து என்பதற்கான எனது சொந்த அனுபவம்)

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி ஆதவன் உங்கள் நேரத்திறக்கும் உங்களுக்கும் . இங்கு உறங்குவது போன்று நடிப்பவர்களால்தான் பிரச்சனை ஆனால் அவர்களின் மனசு உள்ளே குத்துவதால் இன்னுமொரு திரி திறந்து குத்து நடக்குது எனக்கு இவர்கள் மீது கோபம் வரவில்லை மாறாக கிருபன் சொன்னது போல்  நான் இனவாதியாகவே இருந்துவிட்டுப் போகின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.