Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது - முதலமைச்சர் சி.வி

Featured Replies

புதிய அரசு தருமென காத்திருப்பது மடமை: வட மாகாண முதலமைச்சர்:-

wigneswaran_CI.jpg

யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தை தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை புதிய அரசில் உள்ள சந்திரிக்கா, ரணில், மைத்திரி தருவார்கள் என காத்திருப்பது மடமை என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்புங் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். 

எமது வளங்கள் பல விதங்களில் பாதிப்படைந்துள்ளன. வளங்கள் சில சூறையாடப்பட்டு பிற மாகாணங்களுக்குக் கரவாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

எம் நாளாந்த வாழ்க்கை வழமைக்குத் திரும்ப வேண்டுமெனில் இராணுவத்தினர் எமது மண்ணில் இருந்து வெளியேற வேண்டும். “நாங்கள் யாவரும் சகோதரர்கள் எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும் சுமூகமான உறவுகள் உருவாகட்டும்”  என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம்மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.

எமது மாணவ சமுதாயத்திற்கு மேற்படி தொடர் இராணுவப் பிரசன்னம் பலவிதமான பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது. ஆயுதந் தாங்கிய அரச படைகள் அச்சுறுத்தும் இயல்பினைக் கொண்டவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வளவுதான் மக்களைத் தம்வசங்கவருமுகமாக ஒரு இராணுவம் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல.

பொலிசார் வேறு, இராணுவம் வேறு. பொலிசார் ஆயுதத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பொலிசார் மக்களுடன் மக்களாக மக்கள் நலம் கருதி கடமையாற்ற வேண்டியவர்கள். அவ்வாறான கடப்பாடு எதுவும் இராணுவத்திற்கு இல்லை. நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு அரச படையே இராணுவமும், கடல்படையும்.

எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால் நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை.

அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்திற்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள்.

2009க்கு முன்னரான கிருஷாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை. ஆனால் தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திர தாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சிறந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.

எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாகச் சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது. காரணம் அந்த அளவுக்குச் சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை விதைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள்.

தமிழர்களுக்குத் தயை காட்டினால் தமக்குத் தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் தர அடையாளம் போட மாட்டார்களோ என்ற பயத்தில் எல்லாச் சிங்கள அரசியல் தலைவர்களும் கரவாகத்தான் எமக்கு உறுதிமொழிகளைத் தருகின்றார்கள். இது அபாயகரமானது.

1955ம் ஆண்டில் சேர் ஜோன் கொத்தலாவல என்ற அப்போதைய பிரதம மந்திரி வடமாகாணம் வந்து தீவுப் பகுதிகளில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப் போவதாக அறிவித்தார். 1956ம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திரு.S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் 24 மணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார்.

சிங்கள மக்கள் பெருவாரியாக பண்டாரநாயக்க அவர்களுக்கு வாக்களித்துத் தேர்தலில் வெற்றி வாகை சூட வழி வகுத்தனர்.

பின்னர் தமிழர்கள் வெகுவாக ஆட்சேபித்ததால் நியாயமான தமிழ்மொழிப் பாவனைக்கான ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்தார். உடனே அவரின் வீட்டின் முன் சுமார் 200 பௌத்த பிக்குமார் கூடினர். கூடி பிரதமரை வெளியே அழைத்து என்ன சொன்னார்கள் தெரியுமா?

நாங்கள் யாவரும் மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைப் பதவியில் ஏற்றியது தமிழ் மொழிக்கு நியாயமான இடம் கொடுக்கவா? இல்லை. சிங்களம் மட்டும் நாடு பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவியைத் தந்தோம் என்றார்கள்.

உடனே அந்தச் சட்டவரைவைப் பண்டாரநாயக்க அவர்கள் பிக்குகள் முன்னிலையிலேயே கிழித்தெறிந்து விட்டார். அடுத்த வருடம் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையேன் உங்கள் முன்னிலையில் இன்று இதைக் கூறுகின்றேன் என்றால் நாம் கரவாகக் காரியமாற்றினால் தப்பி விடலாம் என்று எண்ணுகின்றோம். அது அவ்வாறு நடப்பதில்லை. இன்று கரவாகத் தமிழர்களுக்கு நாம் உரிய உரித்துக்களைப் பின்னர் பெற்றுக் கொடுப்போம் என்று கூறுவோரை அவர்கள் பதவிக்கு வந்தபின் அவர்களுக்கு வாக்கை அளித்த பெருவாரியான சிங்கள மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை. இன்றே நாங்கள் எல்லோருடனும் வெளிப்படையாக ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இதைத்தான் நாங்கள் செய்வோம். என்று சிங்களத் தலைவர்கள் கூற வேண்டும். இதுதான் எமக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கூற வேண்டும். கரவாக காரியங்கள் ஆற்றக் கூடாது என்றே கூறி வைக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120077/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவில் நிறைய ஆரோக்கியமான சிந்தனை மாற்றங்கள். மக்களின் உளதிறனை அறிந்து செயற்பட விளைவது வரவேற்கத்தக்கது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்போதும் இப்படித்தான் இருந்தார். நாம்தான் லேட்டாக விளங்கி கொண்டுள்ளோம்.

விக்கி ஐயாவில் நிறைய ஆரோக்கியமான சிந்தனை மாற்றங்கள். மக்களின் உளதிறனை அறிந்து செயற்பட விளைவது வரவேற்கத்தக்கது. :icon_idea:

விக்கி அவர்களை எனக்கு 1995ம் ஆண்டு முதல் அவரது உரை ஒன்றை கேட்டதில் இருந்து எனக்கு நல்ல மரியாதை, அவர் என்றும் தமிழ் இனத்துக்கு துரோகம் இழைக்க மாட்டர் என்று தெரியும், ஆனால் உங்களை போன்றோர் தான் அவர் ஏதோ கொழும்பில் இருந்தபடியால் அவர் தமிழ் இன துரோகி என்று பட்டம் கட்டி விட்டு இப்போது அவர் நல்லவர் வல்லவர் என்று வாழ்த்துகிறீர்கள். இதற்கு ஆங்கிலத்தில் prejudice என்று குறிப்பிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே தெற்கோடு உறவாடி தான் பெற முடியும் என்ற நம்பியவர்.. இன்று தெற்கில் கெஞ்சிப் பெற முடியாது என்பதை உணர்த்துகிறார். தெற்கோடு கரவாக.. அதுதான்.. எழுதப்படாத ஒப்பந்தங்கள் செய்து.. எதனையும் சாதிக்க முடியாது என்றும் சொல்கிறார். இது அவரை உள்ளெடுத்த...மிஸ்டர் சம்பந்தனின் கரவு அரசியலுக்கு எதிர்மாறான சிந்தனைப் போக்கு. 

விக்கி ஐயா..வின் கருத்தோட்டத்தில் நிறைய மாற்றம். இராணுவம் முகாம்களுக்குள் முடங்கினால் போதும் என்ற நிலையில் இருந்து அது போர்க்குற்ற இராணுவம் இங்கு இருக்கப்படாது என்ற துணிச்சல் அப்ப இல்ல.. இப்பதான் வந்திருக்குது. ஆனால் சிலருக்கு அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் விக்கி ஐயா அவர்கள் எதிர்பார்த்தது போல் கரவு.. சோர அரசியலுக்குள் நிற்கவில்லை என்பது தான். :lol::icon_idea:

டாசு அண்ணே.. விக்கி ஐயாவே சாட்சியம் அளித்திருக்கிறார்.. தான் தெற்கில் வாழ்ந்த போது கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து இன்று வடக்கில் அந்த மக்களோடு வாழும் நிலையில்.. அந்த மக்களின் உணர்வுகள் என்ன என்பதை தெளிவாக உணர்ந்து அதற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று.

நீங்க என்ன இடையில புகுந்து எங்களுக்கு புது வகுப்பெடுக்கிறீங்க. அண்ணே முதலில்.. அவதானிங்க. அப்புறம்.. எழுதுங்க. அதைச் செய்யாமல்.. சும்மா மேற்கோள் காட்டி எழுதிப் பயனில்லை. விக்கி ஐயா 1995 இல் அரசியலுக்குள் வரும் ஒரு நிலையில் கூட இருக்கவில்லை. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்த திரியில் கருத்துப் பரிமாற்றதுக்கு இடமிருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

நீயா, நானா ஆட்டம் ஆட இப்போதெல்லாம் சலிப்பாய் இருக்கிறது. வயது போய்விட்டதோ அல்லது இதைதான் முதிர்சி என்பார்களோ யாமறியோம்.

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா என்பதல்ல. நிலைப்பாட்டு மாற்றங்களை இனங்காட்டி அவசியமான மாற்றங்கள் வாழ்த்தி வரவேற்பது தான் எம் மக்களுக்கு அவசியமான.. ஆரோக்கியமான அரசியல் நடத்த உதவும். மாறாக.. சிங்களவனை தாஜா பண்ணி.. கூஜாவில தூக்கி வைக்கும் அரசியல் மீண்டும் எம்மை சிங்களப் பேரினவாத சகதிக்குள் தள்ளி மூழ்கடிக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால் நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை.

அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்திற்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்."

விக்கி நிறையவே மாறிவிட்டார். அசல் தமிழரசு கட்சி அரசியல்வாதியாகிவிட்டார். எதுவுமே உருபபடியாக செய்யாமால் இனவாதம் கக்கியே தமிழ் வாக்குகளை வெல்லலாம் என்ற சூக்குமத்தை கற்றுவிட்டார். விசேச தமிழ் மொழி பிரயோக சட்டத்தை பண்டாரநாயக்க கிழி த்தெறி ந்ததாக கூசாமல் பொய் சொல்கிறார். சிறுமிகளை வல்லுறவு செய்து கொலை செய்தவனை ஆத்மீக குருவாக கொண்டவருக்கு, அந்தக் கொலையாளிகளை விடுவிக்க மோடிக்கு கடிதம் எழுதியவருக்கு பொய் சொல்லுவது அதனை கடினமில்லை. தமிழர்களின் WEEKPOINT அவருக்கு புரிந்துவிட்டது. இனி சாகுமட்டும் ஒன்றுமே செய்யாமல் தலைவர்தான்.

இல்லையே தெற்கோடு உறவாடி தான் பெற முடியும் என்ற நம்பியவர்.. இன்று தெற்கில் கெஞ்சிப் பெற முடியாது என்பதை உணர்த்துகிறார். தெற்கோடு கரவாக.. அதுதான்.. எழுதப்படாத ஒப்பந்தங்கள் செய்து.. எதனையும் சாதிக்க முடியாது என்றும் சொல்கிறார். இது அவரை உள்ளெடுத்த...மிஸ்டர் சம்பந்தனின் கரவு அரசியலுக்கு எதிர்மாறான சிந்தனைப் போக்கு. 

விக்கி ஐயா..வின் கருத்தோட்டத்தில் நிறைய மாற்றம். இராணுவம் முகாம்களுக்குள் முடங்கினால் போதும் என்ற நிலையில் இருந்து அது போர்க்குற்ற இராணுவம் இங்கு இருக்கப்படாது என்ற துணிச்சல் அப்ப இல்ல.. இப்பதான் வந்திருக்குது. ஆனால் சிலருக்கு அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் விக்கி ஐயா அவர்கள் எதிர்பார்த்தது போல் கரவு.. சோர அரசியலுக்குள் நிற்கவில்லை என்பது தான். :lol::icon_idea:

டாசு அண்ணே.. விக்கி ஐயாவே சாட்சியம் அளித்திருக்கிறார்.. தான் தெற்கில் வாழ்ந்த போது கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து இன்று வடக்கில் அந்த மக்களோடு வாழும் நிலையில்.. அந்த மக்களின் உணர்வுகள் என்ன என்பதை தெளிவாக உணர்ந்து அதற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று.

நீங்க என்ன இடையில புகுந்து எங்களுக்கு புது வகுப்பெடுக்கிறீங்க. அண்ணே முதலில்.. அவதானிங்க. அப்புறம்.. எழுதுங்க. அதைச் செய்யாமல்.. சும்மா மேற்கோள் காட்டி எழுதிப் பயனில்லை. விக்கி ஐயா 1995 இல் அரசியலுக்குள் வரும் ஒரு நிலையில் கூட இருக்கவில்லை. :lol::icon_idea:

முதலில் அவர் அப்படி பேட்டி அளித்தாலும் அவை சில அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்டவை, அதை விட நான் அவரது உரையை ஒரு அரசியல்வாதியின் உரையாக அவதானிக்கவில்லை, நான் குறிப்பிட்ட உரையானது சைவ மதத்தை பற்றியதாகும், அப்போது அவர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், என்னுடைய எண்ணக்கரு என்னவென்றால் தனது பின்னனி மீது பற்று கொண்ட ஒருவராகவே தென்பட்டார், ஒரு சைவர்கா இருந்தூ தனது மதம் மீது அவர் வைத்திருந்த பற்று நிச்சயமாக அவருக்கு தனது இனம் மீதும் இருக்கும் என்றே நான் நம்பினேன், அதை அவர் காப்பாற்றுகிறார் அடகி தான் நான் குறிப்பிட்டேன்

சிறுமிகளை வல்லுறவு செய்து கொலை செய்தவனை ஆத்மீக குருவாக கொண்டவருக்கு, அந்தக் கொலையாளிகளை விடுவிக்க மோடிக்கு கடிதம் எழுதியவருக்கு பொய் சொல்லுவது அதனை கடினமில்லை.

விக்கி ஐயா அப்படி கடிதம் எழுதியதாக குறிப்பிடுவது தவறு, அவர்களின் ( கொலையாளிகளின் )குடும்பத்தினர் தாம் எழுதிய கடிதத்தை முதலமைச்சர் / மாகாணசபை முலமாக அனுப்பி வைத்தார் .

Edited by sivayarl

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்போதும் இப்படித்தான் இருந்தார். நாம்தான் லேட்டாக விளங்கி கொண்டுள்ளோம்.

2010இற்கு முன் அவர் தமிழர்களுக்கு செய்த 5 பாரிய சிறப்பான விடயங்களை 
உதாரனத்திட்கு காட்ட முடியுமா ?
அறிந்து கொள்வதற்காக ......
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் காட்ட முடியாது.

ஏனெண்டால் ஒரு வக்கீல்,மஜிஸ்ரேட், மாவட்ட நீதிபதி, மேன்முறையீட்டு நீதிபதி,உயர் பின் உச்ச மன்ற நீதிபதி, இடையில் விரிவுரையாளர் இப்படி, ஒரு அதிகம் மக்கள் தொடர்பின்றி, அரசியல் செய்ய, பேச முடியாத இடத்தில் இருந்தார்.

ஆனால் எதோ ஒருவகையில் அவருடன் பரிச்சயமாகியோர்கு, பொதுவாழ்வில் தூய்மை, ஊழல் இன்மை மற்றும் இனப்பிணக்கு சம்பந்தமான அவரின் சிந்தனைப் போக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இப்போ சீவி வெளிகாட்டும் நிலைப்பாடு அவரை தெரிந்தோர்க்கும் ஒன்றும் புதிதோ ஆச்சரியமோ இல்லை.

நிச்சயம் யாழ்வாழ்க்கை அவரின் போக்கில் ஒரு 5% பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் ther core of his character and thinking has always been there.

ஆச்சரியமாய் இருக்கலாம் - ஆனால் சீவி 2010 க்குப் பின்னும் சொல்லும் படியாக ஒன்றும் செய்யவில்லை என்பதே உண்மை.

மாகாண சபையை ஊழல் இலாலமல் நடத்துகிறார். சொல்ல வேண்டிய செய்திகளை, சொல்ல வேண்டிய மேடைகளில் சொல்கிறார்.

ஆனால் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு, மாகாண சபைக்கு போலீஸ் காணி அதிகாரங்களை பெறல். இப்படி பலதில் பேச்சு இருக்கிறது, செயல் இல்லை.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை பற்றி கதைப்பதே இல்லை. பிரேமானந்தாவின் ஆக்களின் கடிதத்தை மோடிக்கு அனுப்புமுன், எம் அரசியல் கைதிகள் பற்றி சிற்சேனவுக்கு ஒரு SMSஆவது அனுப்பி இருக்கலாம்.

விதவைகள் மறுவாழ்வில் ஓரளவுக்கு நல்ல செயல்பாடு உண்டு.

இதை விட காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடயத்தில் சம், சும் செயல்பாடு எவ்வளவோ திறம்.

கடிதம் அனுப்பியதை விடுவோம். நியாயமான தமிழ் மொழி பாவனை சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டுவந்ததை அவர் அறியாதவரா? அதன் மூலம்தான் நாங்களும் நீங்களும் தமிழில் படிக்கவும் வட கிழக்கில் அரச அலுவல்களை தமிழில் செய்யவும் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் முடிந்ததை மறந்து விட்டாரா?

விக்கி அவர்கள் கொழும்பில் இருந்தவர் என்றபடியால் தமிழனின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் மற்றைய இனங்களுக்கு ஆதரவாக இருப்பர் என்றே எதிர்பர்த்தனர்,ஆனால் அவர் அப்படி இல்லாமல் தமிழரின் அரசியல் எதிர்பார்ப்புடனும் தமிழரது தேவைகளுக்கும் ஆதராவாக இருப்பது இந்த திரியில் வந்திருக்கும் இருவருக்கு பிரச்சனையக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா அரசியலுக்கு வர முன்னரே தமிழர் களின் உரிமைகள் தொடர்பாக ஆரோக்கியாகன கருத்துக்களை முன்வைத்தவர். அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில் சம்பந்தரின் சில கருத்துக்களை சொன்னாலும் வரலாறு அவரைப் புடம் போட்டுள்ளது. முதலமைச்சர் பதவியானது தமிழ்மக்களோடு நெருங்கிப் பழகவும் தமிழர்களின் அரசியல் விருப்பு என்ன என்பதையும் அவருக்கு உணர்த்தியுள்ளது. .அதனால்தான் தமிழர்களின் அரசியல் விருப்புக்கு எதிராக ததேகூட்டமைப்பின் தலைமை செயற்பட்டாலும் அவர்களின் கருத்துக்கு எதிராகவும் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்தும் செயலாற்றி வருகிறார்.ததேசியக் கூட்டமைப்புக்கு சரியான தலைமையாக அவரைப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் காட்ட முடியாது.

ஏனெண்டால் ஒரு வக்கீல்,மஜிஸ்ரேட், மாவட்ட நீதிபதி, மேன்முறையீட்டு நீதிபதி,உயர் பின் உச்ச மன்ற நீதிபதி, இடையில் விரிவுரையாளர் இப்படி, ஒரு அதிகம் மக்கள் தொடர்பின்றி, அரசியல் செய்ய, பேச முடியாத இடத்தில் இருந்தார்.

ஆனால் எதோ ஒருவகையில் அவருடன் பரிச்சயமாகியோர்கு, பொதுவாழ்வில் தூய்மை, ஊழல் இன்மை மற்றும் இனப்பிணக்கு சம்பந்தமான அவரின் சிந்தனைப் போக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இப்போ சீவி வெளிகாட்டும் நிலைப்பாடு அவரை தெரிந்தோர்க்கும் ஒன்றும் புதிதோ ஆச்சரியமோ இல்லை.

நிச்சயம் யாழ்வாழ்க்கை அவரின் போக்கில் ஒரு 5% பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் ther core of his character and thinking has always been there.

ஆச்சரியமாய் இருக்கலாம் - ஆனால் சீவி 2010 க்குப் பின்னும் சொல்லும் படியாக ஒன்றும் செய்யவில்லை என்பதே உண்மை.

மாகாண சபையை ஊழல் இலாலமல் நடத்துகிறார். சொல்ல வேண்டிய செய்திகளை, சொல்ல வேண்டிய மேடைகளில் சொல்கிறார்.

ஆனால் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு, மாகாண சபைக்கு போலீஸ் காணி அதிகாரங்களை பெறல். இப்படி பலதில் பேச்சு இருக்கிறது, செயல் இல்லை.

குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை பற்றி கதைப்பதே இல்லை. பிரேமானந்தாவின் ஆக்களின் கடிதத்தை மோடிக்கு அனுப்புமுன், எம் அரசியல் கைதிகள் பற்றி சிற்சேனவுக்கு ஒரு SMSஆவது அனுப்பி இருக்கலாம்.

விதவைகள் மறுவாழ்வில் ஓரளவுக்கு நல்ல செயல்பாடு உண்டு.

இதை விட காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடயத்தில் சம், சும் செயல்பாடு எவ்வளவோ திறம்.

நன்றி !

அவரோடு நெருங்காத யாருக்கும் அறிய வாய்பில்லை என்று நீங்களே சொல்லும்போது.

இவரை பற்றி சந்தேகத்துடன் வைக்கபட்ட முன்னைய கருத்துக்களில்

ஏதும் பிழை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தான் நல்லவர் என்று இவர் இப்போது நிறுவி வருகிறார்.

இன்னொரு விடயம் ....(எனது சொந்த பார்வை)

சம் சும் பார்ட்டி ரலினின் இன்னொரு முகம் வரும் தேர்தலில் வாக்கு வேட்டையை

குறிவைத்து சில விடயங்கள நடந்துகொண்டு இருக்கலாம்....

அதற்கு இவர்கள் உரிமை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்.

மகிந்தவுடன் இவர்கள் நடத்திய எல்லா பேச்சுவார்த்தையும் வெற்றியாவே முடிந்தது.

ஏன் இப்போ பழைய அரசை சாடுகிறார்கள்?

இவர்கள் யாருடன் பேசினாலும் தலயாட்டி பொம்பைகள்தான் தமது இருப்புக்கு

ஒரு நட்டமும் இல்லை என்றால் சவுண்டு விடுவார்கள்.

விக்கி அவர்கள் பேச வேண்டியதை பேசிவருவதால் ...

இவர் சிங்கள அரசிற்கு எப்போதும் எதிரிதான்.

தந்தி டிவிக்கு ரணில் கொடுத்த பேட்டியில் ஒரு கேள்வி ........

நிலங்களை விடுவிக்காது  இருக்க உங்களை எது தடுக்கிறது ?

பதில்: எதுவும் இல்லை.

இதுதான் முன்னாள்  இந்நாள் பின்னாள் என்னாள் சிங்கள அரசு முகம்கள்.

இவர்களுக்கு வெள்ளை அடித்து தமது வாழ்வை பார்ப்பது சம் சும் வேலை.

தான் சிங்களவர்களுடன் இருந்த நட்பினால் நிட்சயமாக தன சொல்லுக்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று கனவு கண்டார் ஆனால் சிங்களம் தாங்கள் யார் என்பதை அவருக்கும் தெளிவாக புரிய வைத்தது ... ஆனால் சம் சும் இணை காட்டிலும் இவர் உண்மையானவர் தான் புரிந்து விட்டார் சிங்களம் எப்படி என்று ..
 
ஆனால் எங்கட பழமை அரசியல் ஆசாமிகள் தான் இப்பவும் கள்ளத்தனமாக இருக்கின்றார்கள ...
அரசாங்கம் தானாகவே விடுவிக்கும் காணிகளுக்கு தங்கள் தான் காரணம் என்று சொல்கின்ற கோமாளிகள் தான் சம் சும் .   
 
மாகாணசபை மற்றும் 13 ஆம் திருத்தத்தில் ஒன்றும் இல்லை வெறும் போலி என்று அப்பவே சொன்ன எங்கள் தலைவரை தான் பயங்கரவாதியாம் .... என்ன உலகமடா ?

இனி இந்த திரியில் கருத்துப் பரிமாற்றதுக்கு இடமிருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

நீயா, நானா ஆட்டம் ஆட இப்போதெல்லாம் சலிப்பாய் இருக்கிறது. வயது போய்விட்டதோ அல்லது இதைதான் முதிர்சி என்பார்களோ யாமறியோம்.

நன்றி, வணக்கம்.

விக்கி ஐயாவும் சம் சும் போல அற்பத்தமான அரசியல்வாதியாய் இருப்பார் எண்ணி ஏமாந்த சலிப்பு உங்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.