Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி   sun_sales_001.jpgஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் மனைகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார்.

பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார்.

மேலும் பிரபல ஓன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம் வழியாக சூரியனின் பகுதியை ஒரு சதுர மீற்றருக்கு ஒரு யூரோ (ரூ. 71.30) என்று கட்டணம் நிர்ணயித்து விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களையடுத்து இ-பே நிறுவனம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மரியா டுரன் கணக்கைத் தடை செய்தது.

இதனையடுத்து மரியா, ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சோலார் பேனல் மூலம் தமக்கு சொந்தமான சூரியனின் பகுதியை பயன்படுத்திய வகையில் தமக்கு 7,500 பவுண்டுகள் கட்டண பாக்கி வரவேண்டியது உள்ளதாகவும், ஆனால் இதுவரை தனக்கு அந்த கட்டணம் வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார்.

அவரின் வழக்கை நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம் என இ-பே நிறுவனம் முன்வந்ததையும் மரியா நிராகரித்துவிட்டார்.

மேலும், நட்சத்திரத்தையோ அல்லது வேறு எந்த ஒரு கிரகத்தையோ எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாடக்கூடாது என சர்வதேச ஒப்பந்தம் உள்ளது உள்ளபோதிலும், தாம் தனிநபர் என்பதால் தம்மை அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றும் மரியா கூறியுள்ளார்.

sun_sales_002.jpg

sun_sales_003.jpg

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் தான் law கதைக்கிறார். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் தான் law கதைக்கிறார். :)

நல்லாய் தான் law கதைக்கிறார். :)

பிரான்சிலும் இப்படியொருத்தர் எனது கடைக்கு வருவார் (பிரேசில் நாட்டைச்சேர்ந்தவர்)

கடிதங்கள் எழுதித்தருவார்

அதை நான் கணணியில் எழுதி பிரதி எடுத்துக்கொடுப்பேன்

அதன் போது அதனை வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்

அவர் இந்த உலகமே தன்னது என்பார்

அவரது கடிதங்களில் உள்ள விடயங்கள்

தனது இரத்தம் அத்தனை ரத்தக்குரூப்புக்களையும் உடையதாம்

அவரது பெயர் பிரான்சுவா என வருகுதாம்

அதனால் பிரெஞ்சு தனக்குத்தான் சொந்தமாம்

பிரெஞ்சுக்காரர்கள் கள்ளர்களாம்

தனது பெயரை அவர்களது நாட்டிக்கு வைத்துவிட்டார்களாம்

தனது நிறம் நீலமாம்

அதிலும் பிரெஞ்சுக்காரர்கள் தமது கொடியில் தனது நீலநிறத்தை களவெடுத்து பாவிக்கிறார்களாம்

தனது சொல்லை அமெரிக்கா கேட்டிருந்தால் இரட்டைக்கோபுர தாக்குதலைத்தடுத்திருக்கலாமாம்

இப்படிப்பல

மாதத்துக்கு இரண்டு மூன்று கடிதம் போடுவார்

பணம் அள்ளி அள்ளி வைத்து செலவளிப்பார்

இறுதியில் எனக்கே மனச்சாட்சி கேட்காமல் இனி வராதே எனக்கலைத்துவிட்டேன்

அவர் கடிதம் அனுப்பும் இடங்கள்

பிரெஞ்சு ஐனாதிபதியிலிருந்து

சவூதி மன்னன்

பாப்பரசர்  வரை....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மற்றயோர் மடத்தனம் செய்யும் போது சிரிக்கும் நாங்களே........

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் என முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு சொல்லுவோமே...

அது போலத் தான் இதுவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ விளையும் சம்பாவும் ,பொன்னியும் ,வேம்பும் ,மஞ்சளும் பேட்டன்ட் என்று வெள்ளை உரிமை கொன்டாடும்போது இந்த அம்மணி ஒன்றும் குறைந்து விடவில்லை .முதலில் சூரியனில் இருந்து கரண்டு எடுகின்ரன்  என்று அலப்பறை பண்ணும் பக்கத்து வீட்டு  வெள்ளையை இவவிட்டை புடிச்சு குடுக்கணும்  :D  :icon_idea:

மற்றயோர் மடத்தனம் செய்யும் போது சிரிக்கும் நாங்களே........

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் என முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு சொல்லுவோமே...

அது போலத் தான் இதுவும்.

ஒன்றுபட்ட சிறி லண்கவிற்குள்ள தீர்வு என்றும் சிலர் மூஞ்சிய சீரியஸா வைச்சு கொண்டு 67 வருசமா லூசு கதை கதைக்கினம்.

அது போலவா இதுவும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றுபட்ட சிறி லண்கவிற்குள்ள தீர்வு என்றும் சிலர் மூஞ்சிய சீரியஸா வைச்சு கொண்டு 67 வருசமா லூசு கதை கதைக்கினம்.

அது போலவா இதுவும்?

அடிசக்கை அம்மன் கோயில் புக்கையெண்டானாம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

...ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார்.

...

மேலும், நட்சத்திரத்தையோ அல்லது வேறு எந்த ஒரு கிரகத்தையோ எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாடக்கூடாது என சர்வதேச ஒப்பந்தம் உள்ளது உள்ளபோதிலும், தாம் தனிநபர் என்பதால் தம்மை அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றும் மரியா கூறியுள்ளார்.

tamilwin.com

ஒருவேளை அவர் மகாபாரத 'குந்தி' யாக இருப்பாரோ?

ஏனெனில் கணவனின் 'சக்தி'யை மற்றவர்களுக்கு மனைவி விட்டுக்கொடுக்க மறுப்பது நியாயம் தானே? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை அவர் மகாபாரத 'குந்தி' யாக இருப்பாரோ?

ஏனெனில் கணவனின் 'சக்தி'யை மற்றவர்களுக்கு மனைவி விட்டுக்கொடுக்க மறுப்பது நியாயம் தானே? :)

குந்தி இல்லையாம்....!  :o

அவவின் முந்தைய பெயர் சசிதேவியாம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குந்தி இல்லையாம்....!  :o

அவவின் முந்தைய பெயர் சசிதேவியாம்! :icon_idea:

சசிதேவி, இந்திரனின் மனைவியாயிற்றே? :o

என்ன சொல்ல வருகிறீர்கள் புங்கை? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சசிதேவி, இந்திரனின் மனைவியாயிற்றே? :o

என்ன சொல்ல வருகிறீர்கள் புங்கை? :lol:

சாயாதேவியை சசிதேவி என்று எழுதிவிட்டேன் வன்னியன்! :o

எல்லாம் ஒன்டுக்குள்ளை ஒண்டு தானே! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட சிறி லண்கவிற்குள்ள தீர்வு என்றும் சிலர் மூஞ்சிய சீரியஸா வைச்சு கொண்டு 67 வருசமா லூசு கதை கதைக்கினம்.

அது போலவா இதுவும்?

விக் உங்களை பார்த்து பொறாமை படும் விடயம் இதுதான் அழகாக,அமைதியாக  பதில் கருதிடல் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட சிறி லண்கவிற்குள்ள தீர்வு என்றும் சிலர் மூஞ்சிய சீரியஸா வைச்சு கொண்டு 67 வருசமா லூசு கதை கதைக்கினம்.

அது போலவா இதுவும்?

ம்ம்ம

ஐம்பதுக்கு ஐம்பதையே காணாது என்றவர்களல்லோ... :(

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் இப்படியொருத்தர் எனது கடைக்கு வருவார் (பிரேசில் நாட்டைச்சேர்ந்தவர்)

கடிதங்கள் எழுதித்தருவார்

அதை நான் கணணியில் எழுதி பிரதி எடுத்துக்கொடுப்பேன்

அதன் போது அதனை வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்

அவர் இந்த உலகமே தன்னது என்பார்

அவரது கடிதங்களில் உள்ள விடயங்கள்

தனது இரத்தம் அத்தனை ரத்தக்குரூப்புக்களையும் உடையதாம்

அவரது பெயர் பிரான்சுவா என வருகுதாம்

அதனால் பிரெஞ்சு தனக்குத்தான் சொந்தமாம்

பிரெஞ்சுக்காரர்கள் கள்ளர்களாம்

தனது பெயரை அவர்களது நாட்டிக்கு வைத்துவிட்டார்களாம்

தனது நிறம் நீலமாம்

அதிலும் பிரெஞ்சுக்காரர்கள் தமது கொடியில் தனது நீலநிறத்தை களவெடுத்து பாவிக்கிறார்களாம்

தனது சொல்லை அமெரிக்கா கேட்டிருந்தால் இரட்டைக்கோபுர தாக்குதலைத்தடுத்திருக்கலாமாம்

இப்படிப்பல

மாதத்துக்கு இரண்டு மூன்று கடிதம் போடுவார்

பணம் அள்ளி அள்ளி வைத்து செலவளிப்பார்

இறுதியில் எனக்கே மனச்சாட்சி கேட்காமல் இனி வராதே எனக்கலைத்துவிட்டேன்

அவர் கடிதம் அனுப்பும் இடங்கள்

பிரெஞ்சு ஐனாதிபதியிலிருந்து

சவூதி மன்னன்

பாப்பரசர் வரை....

மறக்காமல் காசை வாங்கினியல் தானே?:o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சூரியனில் இருந்து கரண்டு எடுகின்ரன் என்று அலப்பறை பண்ணும் பக்கத்து வீட்டு வெள்ளையை இவவிட்டை புடிச்சு குடுக்கணும் :D:icon_idea:

அவர் சொன்னது சரிதானே, பெருமாள்.

எல்லா சக்திகளுக்கும் மூலம் சூரியர் தானே. வயர்லெஸ் போன் போல, சோலர் பனல் மின் மூலமூம் அவர் தானே.

:D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விக்,

கண்டது சந்தோசம்.

ஒன்று பட்ட இலங்கை என்பது கனவல்ல நிஜம். சிலருக்கு பல்லாயிரம் மக்களை பலிகொடுத்து இந்த பாடத்தை படிக்க வேண்டி இருந்தது.

ஒன்று பட்ட இலங்கைக்குள் கெளரவமான தீர்வு என்பது மிக கஸ்டமான ஆனால் அடையகூடிய இலக்கு.

தமிழ் ஈழம் என்பது நகைப்புக்கிடமான கற்பனை.

சூரியனினால் தான் உலகம் இயங்குகிறது என்பது கற்பனை அல்ல நிஜம்.

சூரிய சக்தியால், பெற்றோலிய பாவனையை பிரதியீடு செய்யலாம் என்பது கஸ்டமான ஆனால் அடையகூடிய இலக்கு.

சூரியனே எனது என்பது நகைப்புக்கிடமான கற்பனை.

செக்கு மாட்டை வயலில் உழ விட்டால் அதுக்கு ஒன்றும் விளங்காது. அதன் விளங்கு திறன் எல்லாம் அதுக்குப் பரிசயமான செக்கை சுற்றி வருவதிலே மட்டுப் பட்டுவிடும்.

உங்கள் கருத்துக்கு விசிலடிச்ச பலருக்கு நான் எழுதியது நிச்சயம் விளங்கியிராது.

இதுக்கு பின்னால் வரும் பின்னோட்டங்களே நான் சொல்வத்கற்கு சாட்சியாய் அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது சரிதானே, பெருமாள்.

எல்லா சக்திகளுக்கும் மூலம் சூரியர் தானே. வயர்லெஸ் போன் போல, சோலர் பனல் மின் மூலமூம் அவர் தானே.

:D

இல்லைங்க அவர் வெள்ளை  பூட்டுவது சோலார் பனல் எனக்கு அதன் கணக்கீடுகள் குழப்பமானவை தான் பூட்டுவது மட்டுமல்லாமல் என்னயும் பூட்டு என்று டாச்சர்  அதன் 25 வருட கணக்கீடு என்னுடைய வீட்டு கூரையில் ஓசியில் இருக்குமாம் வருமானம் விகிதாசாரமாம் விளங்காத சூத்திரம் அலன் இன்றுடன் இரண்டாவது முறையாக சோலார் பனல் நோண்ட வெளிகிட்டு கீழே விழுந்து அம்பிலன்சில் போறார் .ஒரு மூன்று கிழமைக்கு நிம்மதி . :mellow:

மின் சார கொம்பனிகள் அனுப்பும் அநியாய பில்லைக் சும்மா கட்டாமல் இந்த வழியே சேமிக்க முடியுமோ என்று கொஞ்சம் வடிவாக விசாரியுங்கள்.
 
அரசும். உள்ளூர் அரசும் (council) மானியம் அளிக்கின்றனர். சாதாரண வீட்டுக்கு போதுமான மின்சாரம் வழங்குகிறதாம்.  :icon_mrgreen:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானியம்  என்றால் vat கிடையாது மற்றபடி வருஷத்துக்கு 6 மாதம் 5 மணிநேரம் பகல் உள்ள நாடு பிரியோசனம் கனக்க இருக்காது என என்  நினைப்பு .led பல்புகளின் வரவுக்கு பின் வீட்டில் உள்ள அனைத்து பல்புகளும் led தான் பாதுகாப்பு லைட் உள்ளடங்கலாக அதனால் 40 வீதம் சேமிக்கின்றேன் மலிவான விலையில் led வாங்க http://www.ledhut.co.uk/சில தளங்கள் உள்ளன. 

இப்படித்தான் அலனின் Teslaகாரின் கதையும் கார் வருமட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுக்கொண்டு இருந்தார் வாங்கி 1 மாதத்தில் tesla அவரின் வாழ்க்கையின்  முதலாவது எதிரி ஆகியது .

அந்த கதை பின்பு சொல்கிறன்.

அலன் சோலார்பனல் பூட்டி நான்கு வருடங்கள் ஆகி விட்டன நேற்று கடும் வெயில் கிடக்கபடாமல் உருஆடி இருப்பார் மிலிட்டரி உடம்பு சீக்கிரம் வந்து விடுவார் கெட்வெல் காட்டை அவரின் மனைவியிடம் குடுத்தாச்சு .ஒரு medoc வைன் காணும் உங்களின் விசாரிப்புக்கு என்ன ஒரு 2 மணி நேரம் அறுவை தான் . :rolleyes:   
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அலன், ஒரு வைன்போத்தலுக்காக எதை எல்லாம் தாங்க வேண்டி கிடக்கு.

அவர் எந்த போரத்தில போய் அழுகிறாரோ;)

டெல்சா கார் 55k ஆமே. நீங்கள் படு ரிச்சான இடத்துலதான் இருக்கிறியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.