Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் - மாவைக்கு விக்கி பதில்!!

Featured Replies

கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ),
தலைவர்,
தமிழரசுக்கட்சி.

அன்புடையீர்,

தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர் ஈமெயிலில் அனுப்பிய ஒரு கடிதம் வேறு எழுத்துரு (font) காரணமாக வாசிக்க முடியாமையால் அதை அனுப்பிய பிருந்தா கந்தசாமி என்பவருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம்.

 அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்லை என்று அவர்கள் நினைத்தால் அதைப் பகிரங்கமாகக் கூறலாம். உதாரணத்திற்கு கடந்த சனிக்கிழமை (13.06.2015) அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன்(பா.உ) அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

அவரது கருத்தின் பிரகாரம்  -

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள ஆறு(6) கிணறுகளை புனரமைப்பதற்காகவும் வேறு தொடர்புடைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் ரூபா ஐந்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் வலிகாமம் கிழக்கில் எட்டு(8) வீதிகளைப் புனரமைப்பதற்காக ரூபா நாற்பது மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் கேட்டிருந்தோம். அந் நிதி ஒதுக்கீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்திட்டங்களைக் கொடுத்தார்களா? வாகனங்களைப் பெற்றார்களா? என்பதை அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இங்கு கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் வெளிப்படையாக என்னென்ன தேவைகளுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனைத் தெரிவித்துள்ளார்.

 கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதிஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்ற எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரது இப் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமான ஆதாரங்களுக்கு மேலதிகமான ஆதாரங்கள் எதனையும் என்னிடம் பெறவேண்டிய தேவை இருக்காது எனக் கருதுகின்றேன்.

வடமாகாணசபையைப் புறக்கணித்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டதென்பதையும் பணம் தென்னிலங்கையில் இருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றேன்.
செயற்திட்டங்களை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவது வடமாகாணசபை அலுவலர்கள். வடமாகாணசபைக்கு இவற்றிற்கான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணசபையுடன் கலந்துரையாடல் இன்றி இப்பேர்ப்பட்ட செயல்த்திட்டங்களில் இறங்குவது ஒரே விடயம் சம்பந்தமாக இரட்டையான நடைமுறைப்படுத்தல் நடைபெற இடமளிக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். வடமாகாணசபை மூலமாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அந்நிதியம் வடமாகாணசபை மூலமாகவே ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உத்தியோகப் பேச்சாளர் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும் என விரும்புகின்றேன்.

தமிழ்த்தேசியத்திற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் .

நன்றி
அன்புடன்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்  http://www.pathivu.com/news/40943/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைக்கு கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்கி பதிலிறுக்குகிறார்:-

 

'தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பணம் பெற்றுக்கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக வெளிவந்த செய்தி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விளக்கம் கேட்டு முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்துக்கு, முதலமைச்சர் வியாழக்கிழமை (18) எழுதிய பதில் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்லை என்று அவர்கள் நினைத்தால் அதைப் பகிரங்கமாகக் கூறலாம்.

உதாரணத்துக்கு கடந்த  13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

'கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள 6 கிணறுகளை புனரமைப்பதற்காகவும் வேறு தொடர்புடைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும், வலிகாமம் கிழக்கில் 8 வீதிகளைப் புனரமைப்பதற்காக 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும் கேட்டிருந்தோம். அந்நிதி ஒதுக்கீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்றிட்டங்களைக் கொடுத்தார்களா? வாகனங்களைப் பெற்றார்களா? என்பதை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும்' என சுரேஸ் தெரிவித்திருந்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன், வெளிப்படையாக என்னென்ன தேவைகளுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்ற எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது இந்த கருத்துக்கள் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரது இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமான ஆதாரங்களுக்கு மேலதிகமான ஆதாரங்கள் எதனையும் என்னிடம் பெறவேண்டிய தேவை இருக்காது எனக் கருதுகின்றேன்.

வடமாகாண சபையைப் புறக்கணித்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டதென்பதையும் பணம் தென்னிலங்கையில் இருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றேன்.

செயற்றிட்டங்களை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவது வடமாகாணசபை அலுவலர்கள். வடமாகாணசபைக்கு இவற்றுக்கான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாண சபையுடன் கலந்துரையாடல் இன்றி இப்பேர்ப்பட்ட செயற்றிட்டங்களில் இறங்குவது ஒரே விடயம் சம்பந்தமாக இரட்டையான நடைமுறைப்படுத்தல் நடைபெற இடமளிக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

வடமாகாண சபை மூலமாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அந்நிதியம் வடமாகாண சபை மூலமாகவே ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்' என விரும்புகின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

 

அனுப்புக Home, Srilankan News
 
  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராசாவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில் கடிதம்!
[ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 04:27.10 PM GMT ]
vikki%20sir.jpg
இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), 

தலைவர், 

தமிழரசுக்கட்சி.

அன்புடையீர்,

தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர் ஈமெயிலில் அனுப்பிய ஒரு கடிதம் வேறு எழுத்துரு (font) காரணமாக வாசிக்க முடியாமையால் அதை அனுப்பிய பிருந்தா கந்தசாமி என்பவருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்லை என்று அவர்கள் நினைத்தால் அதைப் பகிரங்கமாகக் கூறலாம்.

உதாரணத்திற்கு கடந்த சனிக்கிழமை (13.06.2015) அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன் (பா.உ) அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

அவரது கருத்தின் பிரகாரம், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள ஆறு(6) கிணறுகளை புனரமைப்பதற்காகவும் வேறு தொடர்புடைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் ரூபா ஐந்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் வலிகாமம் கிழக்கில் எட்டு(8) வீதிகளைப் புனரமைப்பதற்காக ரூபா நாற்பது மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் கேட்டிருந்தோம்.

அந் நிதி ஒதுக்கீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்திட்டங்களைக் கொடுத்தார்களா? வாகனங்களைப் பெற்றார்களா? என்பதை அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இங்கு கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் வெளிப்படையாக என்னென்ன தேவைகளுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதிஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்ற எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரது இப் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமான ஆதாரங்களுக்கு மேலதிகமான ஆதாரங்கள் எதனையும் என்னிடம் பெறவேண்டிய தேவை இருக்காது எனக் கருதுகின்றேன்.

வடமாகாணசபையைப் புறக்கணித்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டதென்பதையும் பணம் தென்னிலங்கையில் இருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றேன்.

செயற்திட்டங்களை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவது வடமாகாணசபை அலுவலர்கள். வடமாகாணசபைக்கு இவற்றிற்கான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணசபையுடன் கலந்துரையாடல் இன்றி இப்பேர்ப்பட்ட செயல்த்திட்டங்களில் இறங்குவது ஒரே விடயம் சம்பந்தமாக இரட்டையான நடைமுறைப்படுத்தல் நடைபெற இடமளிக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

வடமாகாணசபை மூலமாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அந்நிதியம் வடமாகாணசபை மூலமாகவே ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப் பேச்சாளர் கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும் என விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

நன்றி 

அன்புடன் 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் 

முதலமைச்சர் 

வடமாகாணம்

vikki-letter-01.jpg

vikki-letter-02.jpg

தமிழ்வின்.COM

//மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும் என விரும்புகின்றேன்.

தமிழ்த்தேசியத்திற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் .//

 

இதை எத்தனை தடவை இங்கே  எழுதி இருப்பம்.?  எல்லாம் ராசதந்திரம்  , கதவுக்குப் பின்னால தான் செய்வம், மக்கள் இதனை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. மக்கள் வரும் தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனை போன்ற வெளிப்படையான, ஊழல் அற்ற ஒருவரை அரசியலுக்கு கொண்டுவர சம்பந்தனும் சுமந்திரனும் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது?

பின்கதவு சுமந்திரன் தன்னைப்போல் பின்கதவால் இன்னொரு கொழும்பு மேட்டுகுடியை உள்வாங்கிறார் என்றார்கள்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் விக்கியின் வரவை எதிர்த்து நேரடியாகவே அறிக்கை விட்டார்கள்.

இப்படி விக்கி அரசியல்லுக்கு வரவருதை குறுக்கே விழுந்தாவது தடுத்து விடவேண்டும் என புலவாலுகள் எழும்பி ஆடியதை அவர்கள் மறந்து விடலாம். யாழ்களத்தின் முன்னைய திரிகள் மறவாது.

இப்போ எதோ சுமந்திரனும் சம்பந்தரும் காசு வாங்கி விட்டார்கள் என கதை விடுகிறார்கள். முதல்வர் வடமாகாண எம்பிகள் சிலர் என்றே கூறினார். சம் கிழக்கு எம்பி. சும் பின்கதவு.

http://www.yarl.com/forum3/index.php?/topic/158831-ரணிலிடம்-காசுவாங்கி-விட்டார்க/#entry1116158

மேலே உள்ள திரியில் பெயர் கூறப்பட்டவர்களில் சுரேஸ் உண்மையை லேட்டாகவேனும் ஒத்துக் கொண்டுள்ளார். செல்வம், வினோ கள்ள மெளனம் காக்கிறார்கள்.

புலவாலுகள் ஒன்றை மட்டும் மறக்கக் படாது, இந்த வன்முறைக்கோஸ்டியை அதன் வாலை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதில், ஒன்று பட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதில், தமிழ் ஈழம் ஒரு வெற்றுக்கோசம் என்பதில், சுமந்திரனை விட விக்கி அதிக பற்றுறுதி உடையவர்.

புலவாலுகள் ஒன்றை மட்டும் மறக்கக் படாது, இந்த வன்முறைக்கோஸ்டியை அதன் வாலை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதில், ஒன்று பட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதில், தமிழ் ஈழம் ஒரு வெற்றுக்கோசம் என்பதில், சுமந்திரனை விட விக்கி அதிக பற்றுறுதி உடையவர்.

 

அடடடா! இதை அன்றே விக்கியரை கொண்டு டி.எஸ். டல்லி, பண்டாவுடன் ஒப்பந்தந்தம் போட்டு காற்றில் பறக்கவிட்ட செல்வநாயகம், தேர்தல்கால அப்பாப்பிள்ளை, "பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது" புகழ் மாவை போன்றோருக்கு சொல்லி இருக்கலாம்! ஏன் அண்ணை, எல்லாத்துக்கும் புலவாலுகளை, நாயுக்கு எங்கை அடித்தாலும், முன்னம்காலை தூக்குவது போல, நோகுறீர்கள்.

 

சரி தனித்தமிழீழம் வேண்டாம் என்று சிங்கக்கொடி உயர்த்தி, இதயங்களால் ஒன்றுபட்டு, புலவாலுகளை பின்வாசல் மாமாவை கொண்டு இழுத்த உங்களுக்கு ஏதாவதை சிங்களம் தந்ததா? பற்றுக் கொண்ட விக்கியர் எப்பவோ அழத்தொடங்கீட்டார், முந்தநாள் மாவையார் ஒப்பாரி வைச்சு அழுகிறார். போய்ச்சேர்ந்து அழுங்கோ! நாளை தேர்தல் அறிவிக்க பின்வாசல் முதல் பற்றுக்கொண்ட விக்கியர் வரை வல்வை போய் பிரபாகரன் வீட்டு முன் நின்று வீர வசனம் பேசுவார்கள், பொறுத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நோபசோ,

சிங்களன் செல்வா முதல் பிரபா வழி சுமந்திரன் வரை எல்லா தமிழ் தலைமைகளையும் தான் ஏமாத்துறான்.

அது அவன்ற கெட்டித்தனம்.

இன்னும் 100 வருடத்தில் அமந்திரன் என்ற ஒரு தமிழ் தலைவர் இருந்தா அவரையும் ஏமாத்துவான்.

எதோ கஜேந்திரன் கோஸ்டி வெண்டா மட்டும் சிங்களவனுக்கு தண்ணி காட்டிப் போடுவினமே?

அல்லது புலத்தில் உருத்திர குமார், நெடியவன் வகையறாக்கள் செய்யும் மொக்கு அரசியலில் சிங்களவனை மடக்க முடியுமே?

மக்கள் முன் இருக்கும் தெரிவுகளில், குறைவாக ஏமாற்றுப் படக்கூடிய தெரிவு சம்-சும்-விக் இணைதலைமையே.

  • கருத்துக்கள உறவுகள்

.

, சுமந்திரனை விட விக்கி அதிக பற்றுறுதி உடையவர்.

 

பிரபாகரனை விட விக்கி பயங்கரமானவர் என்று சிங்கள மக்கள் நினைக்கின்றார்கள்......பயங்கரவாதத்தை அழித்திவிடலாம் ஆனால் ....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களை அப்படி நினைக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஊழல் இன்மை, என்ற ஒன்றை தவிர பிரபாவுக்கு எல்லா வகையிலும் 360 பாகை நேர் எதிரானவர் சிவி.

மீண்டும் ,மீண்டும் இங்கே  பொய்கள் குறிப்பிடப்பட்ட நப ரால் எழுதப்படுகிறது.  விக்கினேசுவரன்  அவர்கள் முதலமைச்சர் வேட்பாளாராக  வேண்டும் என்று சொன்ன ஒருவரில் நானும் ஒருவன். என்னைப் போல் பலரும் புலத்தில் இருந்து அவருக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். அதற்காக சம்பந்தர், மனோகனேசன் போன்ரோருடன் பல புலத் தமிழ் அமைப்புக்களும் தனி நபர்களும் பேசி உள்ளோம் .    விக்கினேசுவரன் அவர்களுடன் புலத் தமிழர்களுக்கு புலிகள் காலத்திலேயே பல தொடர்புகள் இருந்ததன. வெறும் யாழ்க் களத்தை வாசித்து விட்டு இது தான் உலகம் என்றிருப்பவர்களுக்கு இப்படி மடத் தனமான கருத்துக்களை மட்டுமே எழுதமுடியும் .     

குறிப்பிட்ட சம்பவம் பற்றிய தகவல் அடிப்படைகள் இன்றி கற்பனையில் அனுமானங்களை மேற்கொண்டு , தமது குறுகிய நோக்கத்தை அல்லது கருத்தை எல்லாம் தெரிந்தவர்  போல்  எழுதுவது, மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக புலத்தில் தமது நேரம், பணம் செலவழித்து செயற்படுபவர்கள் மேல் எந்த அடிப்படைகளும்  இன்றி வைக்கப்படும் நக்கல், நையாண்டி பொய்க் குற்றச் சாட்டுக்கள் தமிழர்களின்  போராட்டத்தைப் பாதிக்கும். இது பாதிப்பு எதுவும் அற்ற விளையாட்டு  அல்ல. யாழ்க் களத்தின் தற்போதைய நிர்வாகம் /மட்டுறுதினர்கள் இவை பற்றிச் சிந்தப்பது போல்  தெரியவில்லை.         

மாவை தற்போது பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் கொடுக்கப் போகிறாராம் .

விக்னேஸ்வரன் அவர்களை முன்னணி வேட்பாளராக நியமிக்க சம்பந்தன் நினைத்த போது கூட்டமைப்புக்குள் வேறான கருத்துகள் இருந்தது சிலர் மாவை அவர்களை கொண்டு வர முயன்றார்கள் ஆனால் சம்பந்தன் விக்னேஸ்வரன் அவர்களை இங்கே முன்னிறுத்தியது ...ஒன்று- அவர் புலி எதிர்ப்பு என்றில்லை ஆனால் புலிகளுடன் சம்பந்த படாத ஒருவர் சுமந்திரன் மாதிரி ...ஆனால் எல்லதலமைகளையும் சிங்களம் ஏமாற்றியது போல் விக்னேஸ்வரன் அவர்களையும் மகிந்த செருப்பு மாதிரி வைத்திருந்து தாடி டாக்கியை முன்னிறுத்தியதால் தான் விக்னேஸ்வரன் அவர்கள் கோபம் கொண்டார் ... அடி வாங்கின பின்னர் தான் திருந்தி நல் வழிக்கு வந்தார் கிட்டத்தட்ட தேசியம் என்பதை ஒத்து கொண்டார் .
 
தேசியத்தலைவர் சொன்னதை இங்க கொஞ்ச பேர் எப்பவும் புலி எதிர்ப்பாளர் மாதிரி அவரும் ஏற்று கொள்ளவில்லை .ஆனால் ஒன்று ரோசம் உள்ள மனுஷன் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற மாதிரி ...
 
இதனை சம்பந்தன் செய்த நல்ல வேலை என்று இங்க கொஞ்ச பேர் . சுமந்திரன் மாதிரி  விக்னேஸ்வரன் இருப்பார் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் ...நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ...
 
அப்படி இருந்தும் அனந்திக்கு மக்கள் பெரும்பான்மை வாக்கு போட்டு சம்பந்தனுக்கு ஒரு செய்தியையும் சொல்லி உள்ளார்கள் . புலிகளுக்கு பின்னால் என்று ஒன்று இல்லை எப்பவும் புலிகள் தான் தமிழ் மக்கள என்பதை ... எழிலனின் மனைவி என்பதை தவிர அனந்திக்கு வேறு எதாவது அடையாளம் மக்கள் மத்தியில் உண்டா ? .
 
புலி எதிர்ப்பாளர்கள் என்னதான் எழுதினாலும் மக்கள தேசியத்தலைவரையும் புலிகளையும் தமது நெஞ்சினில் இருந்து பிரித்து பார்க்க மாட்டார்கள் ... கூட்டமைப்பு என்பது தலைவரால் கோர்க்கப்பட்ட ஒரு சக்தி ... இதில் இருக்கும் வரை தான் எவருக்கும் மதிப்பு அத்துடன் தேசியம் என்ற உணர்வுடன் இருப்போரை மட்டும் ஆதரிப்பார்கள் .. இல்லாவிடில் விக்னேஸ்வரன் மாதிரி ஒரு தனி அடையாளம் இருக்க வேண்டும் ...
 
உதாரணமாக , சங்கரியை சம்பந்தன் பிழையாக கோர்த்து பார்த்தார் என்ன நடந்தது ....
அதே மாதிரி கஜன் குழுவினர் வெளியே போனார்கள் இருந்தும் தேசியத்திக்கு ஆதர்வனவர்களாக இருந்தாலும் எறிந்தார்கள் .. அதில் தான் தலைவரின் சக்தி புரிய வேண்டும் .மக்கள் தெளிவாக உள்ளார்கள் ..
 
அதனை சம் சும் , மாவை அல்லது சுரேஷ் எவராக இருப்பினும் ஏதோ உங்கள் வல்லமைக்கு போடுகின்ற வாக்கு என்று தப்பு கணக்கு போட வேண்டாம் ...
 
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா மட்டுஸ்,

இந்த மொக்குப் பயல் கோசானின் கருத்துக்கள் பெரியவாவை எரிச்சலடைச் செய்யுதாம். கருத்துச் சுதந்திரமாவது மண்ணாவது, வந்து வெட்டட்டாம்.

விக்கியை கைத்தாங்கலாய் கூட்டி வந்ததே அண்ணன் தானாம்.

சொந்த காசெல்லாம் செலவழிச்சாராம் ( வேணாம் அழுதுருவேன்).

யாழ் ஒன்றும் மாவரிக்கப் மட்டுமே பயன்படும் ஒன்றரைப் பேப்பர் அல்ல. பஜனை பாடி விட்டுப் போக.

இங்கே தர்க்கம் நிகழும். அதுக்கு தில் இல்லாட்டி தர்கிக்க வருவானேன்?

சிலர் தம்மை பற்றி தாமே எழுப்பிய ஈகோ பொய்விம்பத்தை தாமே நம்பியும் விடுவார்கள்.

என் சிக்நேச்சரை வாசியுங்கள்.

ஏன் எரிச்சலைகிறீர்கள் எனப் புரியும்.

தமிழரின் தலைவிதியை  தலைவர் இவர்களிடம் தான் ஒப்படைத்துவிட்டு  சென்றுவிட்டார் .

முன்னர்  புலிகள் சொன்னதை  வாய் மூடி கேளுங்கோ என்று சொன்னதை போல  இப்ப தாங்கள் சொல்வதையும்  வாய் மூடி கேக்கட்டாம் .

தப்பி பிழைத்தவர்களையும் அழிக்கின்றதற்கு நல்ல திட்டம் வைத்திருக்கின்றார்கள் போல கிடக்கு . :lol:

மக்கள் தேவைக்காகவே பணம் பப்றறதாக மாவை சொல்லியிருக்கிறாராம்.  இதை அப்பவே வெளிப்படையாகச் சொல்லிப் போட்டு காசை வாங்கி மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம்.  

 

மக்களை அடிக்கடி போய்ப் பாக்கிறதுக்கு சொகுசு வாகனம் தேவை தானே அது தான் சும்ஸ் சொகுசு வாகனம் வாங்கியிருக்கலாம்.

 

ஆனால் என்ன 70 களிலை மக்களுக்கு சேவை செய்யிறதுக்காக சிறிமா அரசாங்கத்திட்டை காசை வாங்கின அல்பிரட் துரையப்பாவை துரோகி துரோகி எண்டு மேடைக்கு மேடை விழித்து அவரைப் பொட்டுத் தள்ளுங்கோ எண்டு இளைஞர்களைத் தூண்டி விடாமல்  அமிர் மாவை சம்பந்தன் ஆக்கள் அகிம்சையைப் போதிச்சிருந்தால் அத்தனை அழிவுகளும் வந்திருக்காது. தொடர்ந்து அங்கை காசை வாங்கி இங்கை மக்களுக்கு செலவளிச்சிருக்கலாம்.

 

 

மக்களுக்கு சேவை செய்யிறதுக்காக அரசாங்கத்தோடைட சேர்ந்த பொத்துவில் கனகரத்தினத்தை "போகாதே போகாதே என் கனகா.. பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்' எண்டு பாட்டுப் பாடி அவரைப் போடச் சொல்லி மறைமுகமாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

 

 

நோபசோ,

சிங்களன் செல்வா முதல் பிரபா வழி சுமந்திரன் வரை எல்லா தமிழ் தலைமைகளையும் தான் ஏமாத்துறான்.

அது அவன்ற கெட்டித்தனம்.

இன்னும் 100 வருடத்தில் அமந்திரன் என்ற ஒரு தமிழ் தலைவர் இருந்தா அவரையும் ஏமாத்துவான்.

 

 

 

அண்ணோய், சே கோசான்,

 

தொடர்ந்து எழுதுகிறீர்கள்

 

1) ஆயுதப்போராட்டம் சரிவராது

2) அகிம்சைப்போராட்டம் பிரயோசனமில்லை

3) ஒன்றுபட்ட இலங்கை

4) ..

 

அதுகளுக்கு மேல..

 

சிங்களவன் தொடர்ந்து ஏமாத்துறான், இன்னும் 100 வருடங்களுக்கும் அதைத்தான் செய்வான். என்றும் எழுதுகிறீர்கள்!

 

ஆமா, அப்ப நீங்கள் எங்க நிக்கிறீங்கள்? எதை செய்யலாம்? என்பதை தெளிவாக சொல்லூங்கோண்ணா???

 

சும்மா பம்மாத்துக்கு எழுதுவதை நிறுத்துங்கள்

அண்ணோய், உங்கள் அதே வசனங்களைத்தான் ஒட்டுக்குழு மாணிக்கங்களும் தொடர்ந்து கூறுகிறார்கள். என்ன மாற்றுத்தீர்வு என்றால்? கொட்டாவிதான்!

 

உங்களுக்கு தெரியும் நம்ம பழசுகள் சிலவேலைகளில் கூறுவார்கள் ... "தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது" .. என்று வைக்கற்பட்டடை நாய்களை! அதேதான் :icon_mrgreen:

நோபசோ,

சிங்களன் செல்வா முதல் பிரபா வழி சுமந்திரன் வரை எல்லா தமிழ் தலைமைகளையும் தான் ஏமாத்துறான்.

அது அவன்ற கெட்டித்தனம்.

இன்னும் 100 வருடத்தில் அமந்திரன் என்ற ஒரு தமிழ் தலைவர் இருந்தா அவரையும் ஏமாத்துவான்.

 

 

அண்ணோய் கோசே, 

 

பின்வாசல் ஒருகாலமும் ஏமாரப்படமாட்டார். ஏன் தெரியுமோ? அவரும் சிங்களத்தின் நாடகத்தில் ஒரு பங்காளர். தமிழ் மக்களுக்காக சிங்களத்தால் வளர்த்தெடுக்கப்படும் தலைவர்.

 

தெரியவில்லையா, அங்கு எமக்கு ஒன்றும் மைத்திரியின் சிங்கல அரசால் செய்யப்படாத இடத்தே, இங்கு புலத்துக்கு சிங்களத்தின் மாமாவாக வந்து வேலை செய்ததை?

  • கருத்துக்கள உறவுகள்

பூனை வெளியில் வந்து விட்டது,பணம்பெற்றது உண்மை எனில் இதை அப்போதே தெரிவித்திருக்க வேண்டும்.அதை விட்டு முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஒன்றும் தெரியாதவர்கள் போல விளக்கக் கடிதம் அனுப்பியது ஏன்?முதல்வர் பயந்து விடுவார் என்ற கணிப்பிலா?முதல்வர் தனது கருத்தில் உறுதியாக இருந்து பதில் கடிதம் எழுதியதும் வேறு வழியின்றி ஒப்புக்கு அறிக்கை விடுவது உண்மை வெளிவந்தவுடன் நல்ல பிள்ளையாக மாறுவதற்கா?முதலமச்சர் ஊடாக இந்த விடயம் வெளிவராவிட்டால்இந்தப்பணம் முழுமையாக மக்கள் தேவைக்குப் பயன்பட்டிருக்குமா?மாகாணசபைக்குத் தெரியாமல் நீங்கள் எப்படி அபிவிருத்திக்குப் பணம் பெற முடியும்?மாகாண சபையின் அதிகாரத்தை நீங்களே குறைத்தால் அது எப்பிடிச் சரியாகும்?அபிவிருத்தி செய்வது மாகாண சபையின் வேலை.நீங்கள் அரசியல் வேலையைப் பாருங்கள்.அரசியல்கைதிகள் விடுதலை,மீள்குடியேற்றம்,இனஅழிப்பு ,போர்க்குற்ற விசாரணையைப் துரிதப்படுத்தல்,போன்ற சர்வதேச மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு போர்க்குற்றத்தை நீர்த்துப் போகும் கள்ளச்சந்திப்புக்களை நிறுத்துங்கள்.சானவைம்,சுனாவும் இந்த விடயத

விடயத்தில் மெளனம் காப்பது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழைகளுக்கு அப்பால்....

 

தமிழருக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரேயொரு தீர்வு மாகாணசபை மட்டுமே

அதை நாம் பலப்படுத்தணும்

அதனூடகவே எல்லா அபிவிருத்திகள் கொடுப்பனவுகள் திட்டங்கள் எலலாவற்றையும் செய்யணும்

ஒருமுகப்படுத்தணும். இப்படி எதைச்செய்தாலும் அது கூட்டமைப்பையே பலப்படுத்தும்.

 

 

மாறாக தனிப்பட்ட ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் 

தத்தம் தொகுதி என்று நிற்பதும்

அதனை தாம் தனியே செய்ய முயல்வதும்

நாமே நம் தலையில் மண்ணள்ளிப்போட்டது போல்

மாகாணசபையையும் பலவீனப்படுத்தி

கூட்டமைப்பையும் பலயீனப்படுத்தும்

சம்பந்தப்பட்டவர்கள் உணரணும்

அதுவே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு

வேண்டுகோள் எல்லாமே....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம்! விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை! மாவை சேனாதிராசா
[ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2015, 09:22.12 AM GMT ]
mavaiii.jpg
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பெருமளவு நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என கூறப்படும் கருத்துக்களில் உன்மையில்லை. என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம் எனவும் கூறியிருக்கின்றார்.

இன்றைய தினம் காலை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

https://youtu.be/ihPoVyc6

குறித்த விடயம் தொடர்பாக சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முதலமைச்சர் கூறியதாக சில செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து இணைய ஊடகங்களிலும், இந்த நிதி பெற்றுக் கொண்டதான செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே. அவர்கள் மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்காக நிதியை கேட்டிருக்கிறார்கள். நானும் கூட 2.5 மில்லியன் ரூபா நிதியை கேட்டிருக்கிறேன்.

அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டைப் பைக்குள் வைப்பதற்கான நிதி கிடையாது. அது மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக பயன்படுத்தப்படும் நிதியாகும். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்று விட்டார்கள் என விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை.

இந்நிலையில் விடயம் தொடர்பாக முதலமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெளிவுபடுத்தலுக்காக கடந்த 11ம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு முதலமைச்சர் நேறறைய தினம் பதில் கடிதம் எழுதியிருக்கின்றார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நானும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியிருக்கின்றோம். அதில் முக்கியமாக சில விடயங்களை நாங்கள் பேசியிருப்பதுடன், சில தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருக்கின்றோம்.

மேலும் இதனால் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படாது. நாம் மேலும் ஒற்றுமையாக செயறப்படுவோம் என்பதை முதலமைச்சரும், நாங்களும் தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை இன்றைய சந்திப்பில் நாங்கள் குறிப்பிட்ட விடயம். நிதி அமைச்சரால் 2015ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட அறிவிப்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட வரவுசெலவுத்திட்ட அபிவிருத்தி நிதி 10மில்லியன் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுப் பின் அந்நிதி வழங்கப்படவில்லை.

மொத்தமான வடக்கு கிழக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 13கோடி(1300லட்சம்) ரூபாய் கொடுக்கப்படவில்லை. என்பதை அறிந்திருக்கவேண்டும்.

இது தொடர்பில் பின்வருவனவற்றை தங்கள் கவனத்திற்கு தருகிறேன். (01) 2015 ஏப்ரல் மாதம் பிரதமருடன் சம்மந்தன் தலைமையில் அரலி மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதனை கருத்தில் கொண்டு பனம்பொருள் சபை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

முதலில் அச்சபை மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வருவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. மாகாணசபைக்குள் அந்த விடயம் வரவில்லை. உடன் மீள்குடியேற்ற அமைச்சுக்காவது மீண்டும் மாற்றவேண்டும் என கேட்டிருந்தோம்.

எமது சமூகத்தில் சமூகரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருக்கும் மக்களில் திக்கம் வடிசாலையை செயற்படுத்த முடியாமல் எம்மிடம் நிதி கேட்கிறார்கள். என்ற போது தேவையான 2.5மில்லியன் ரூபாவை (25 லட்சம் ரூபா) நிதியமைச்சிலிருந்து ஒதுக்கலாம் என பிரதமர் கூறினார்.

அந்த நிதியை கூட அமைச்சர் றிஷாட் முடக்கிக் கொண்டார். அந்த நிதியை தவிர வேறு எந்த நிதியும் அப்போது எம்மால் கோரப்படவில்லை. அந்த நிதி பனை அபிவிருத்தி சபைக்கு ஊடாக, அந்தச் சங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். அந்தச் சபையின் தலைவர் மற்றும் பெரும்பாலான இயக்குனர்கள் எம்மால் நியமகிக்கப்பட்டவர்களே.

பனம்பொருள் சபை மாகாணசபைக்கு வரவேண்டும் என்றும் நாம் வாதாடியிருக்கின்றோம். தற்போதும் அந்த விடயம் மாகாணசபைக்கு உரியதல்ல. மீள்குடியேற்ற அமைச்சே உப்பள விடயத்தையும் கையாளுகிறது.

(02) இரண்டாவதாக மீள்குடியேற்ற அமைச்சு வலி,வடக்கு, வளலாய், சம்பூர் பிரதேசங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு அமைச்சிடம் நிதி போதாமலிருப்பதாக யாழ்.செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அந்த அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அதன் பின் அரசாங்க அதிபரிடமும் மீள்குடியேற்ற அமைச்சு செயலாளாரிடமும் பெற்ற நிதி மதிப்பீட்டையாவது, வழங்கவேண்டும் என நானும் சுமந்திரனும் பிரதமரிடம் நாடாளுமன்ற கட்டத்தில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த விடயமும் மீள்குடியேற்ற அமைச்சுதான் தற்போதும் கையாளுகின்றது. மீள்குடியேற்றத்திற்கு போதிய நிதி கோருவது எமது கடமையாகும்.

(03) அடுத்ததாக காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானத்தள அபிவிருத்தி தொடர்பாக, சென்ற ஆட்சிக் காலத்திலேயே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவிடமும் பின்னர் தற்போது முன்மொழியப்பட்ட விடயம் என்னவெனில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானத்தள அபிவிருத்திக்கு மக்களின் நிலத்தை அபகரிக்காமல் வடக்கே கடலின் பக்கமாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதுதான்.

சென்ற மாதம் விமானத்தள அபிவிருத்தி பற்றிய திட்டவரைபு கடல்பக்கமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆவணம் அரசாங்கத்தினால் என்னிடம் தரப்பட்டுள்ளது. அந்த விடயம் மத்திய அரசுக்குரியது அதற்குரிய பாரிய நிதியை சர்வதேச நாடுகளிடம் கோருவது பொறுப்புடையதாகும்.

இதுபற்றி இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடமும் இந்தியாவிலும், இலங்கையிலும் பேசியிருக்கின்றோம். துறைமுகம் ஆழப்படுத்தல் விமான ஓடுபாதை திருத்துதல் என்பன அப்போது இந்தியாதான் பொறுப்பேற்றிருந்தது.

(04) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பற்றியும் இந்தியாவில் உள்ள அகதிகளை இலங்கைக்கு அழைப்பது மற்றும் மீனவர் பிரச்சினை பற்றியும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடமும் இந்திய பிரதமர் மோடியுடனும் பேசியிருக்கின்றோம். இவை யாவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அத்தியாவசிய கடமைகளாகும்.

மேற்குறிப்பிட்ட வகைகள் சில உதாரணங்களாகும். ஆனால் இணைத்தளங்களில் எனக்கு 26 மில்லியன் தெற்கில் வைத்து தரப்பட்டதாக கூறும் செய்தி எனது 50 வருட அரசியல் வாழக்கையை களங்கப்படுத்தியிருப்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இச்செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாம் எந்த அரசிடமிருந்தும். அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதம் பணத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டு கூறுவேன். இது மிகவும் பொய்யான ஒரு செய்தி. ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு பின் பக்கம் பக்கமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோரம் போய்விட்டார்கள் என வெளியிடுவார்கள்.

இச்செய்திகள் விமர்சனங்கள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைப்பனவாகும். விரைவில் ஒரு பொதுத்தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இத்தகைய செய்திகள் மற்றும் விமர்சனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பெரிதும், பாதிக்கும் என்றே கவலையடைகின்றோம்.

ஏதோ தெற்கிற்கு அழைத்து எங்கள் சட்டைப்பைக்குள் பாரிய நிதியை வைத்துவிட்டதைப் போல பல செய்திகள் வருகின்றன. இதுபற்றி நாம் பதில் கூறும் பொறுப்புடையவர்கள். நம் எல்லோருக்கும் ஒரு கூட்டுப்பொறுப்பு உள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இதன் பொருட்டு எதிர்வரும் நாட்கள், இம்மாதம் 27 அல்லது 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் மாகாணசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் அடங்கிய ஒரு இணைப்பு குழு கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என எண்ணியிருக்கின்றேன்.

இரா.சம்பந்தனிடத்திலும் இதுபற்றி தெரிவித்துள்ளேன். இத்தகைய முரண்பாடுகள் இனிமேல் எழாமல் இருக்கவேண்டும். ஒரு பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு உழைப்போம் என நம்புகின்றேன். என்றார்.

tamilwin.com

"இந்நிலையில் இன்றைய தினம் காலை முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நானும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியிருக்கின்றோம். அதில் முக்கியமாக சில விடயங்களை நாங்கள் பேசியிருப்பதுடன், சில தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருக்கின்றோம். மேலும் இதனால் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படாது. நாம் மேலும் ஒற்றுமையாக செயறப்படுவோம் என்பதை முதலமைச்சரும், நாங்களும் தீர்மானித்துள்ளோம்."

 

- இதை முன்னரே செய்திருந்தால் மூக்கு உடை பட்டிருக்கமாட்டியல் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் சொல்லுவது 100 வீதம் உண்மை.

விக்கியும் இதைப் போய் சிறிசேனவிடம் சொல்லாமல் ஒரு கூட்டத்தை கூட்டி விசாரிச்சிருக்கலாம்.

இப்படி சந்தி சிரிக்கிறமாரி நடந்தா - அதை வைத்து புலவாலுகள் சந்தில சிந்து பாடத்தானே செய்வார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.