Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபை போராட்டம்! ஏதும் தெரியாதென்கின்றார் சம்பந்தன்!!

Featured Replies

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி வடமாகாணசபை வலியுறுத்திவருவது பற்றி தனக்கு ஏதும் தெரியாதென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இன்றைய போராட்டம் தொடர்பினில் வடமாகாணசபை உறுப்பினரான சித்தார்த்தன் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த வேளை தனக்கு ஏதும் தெரியாதென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

npc%20-1.JPG

எனினும் வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக்கோரும் வடமாகாணசபை தீர்மானம் ஜனாதிபதி,கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினில் வைத்து தெரிவித்தார்.

npc%20-3.jpg

அவ்வாறு அனுப்ப்பட்ட கடிதத்தினில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த மூன்று மாதமாக இந்த விடயம் சூடுபிடித்துள்ள நிலையினில் கட்சி தலைவர் தனக்கு ஏதும் தெரியாதென மறுதலித்துள்ளமை அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

npc%20-2.JPG

எனினும் சித்தார்த்தனால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையினில் வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பினில் நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதியுடனும் பேசுவதாக சம்பந்தன் தெரிவித்ததாக சித்தார்த்தன் தெரிவித்தார். 

http://www.pathivu.com/news/41053/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியா அரச அதிபரை மாற்ற எதுவித நடவடிக்கையும் இல்லை : மாகாண சபையில் இன்று கதவடைப்பு போராட்டம்
news
வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்றுவதற்கு வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபா மண்டபத்தின் கதவுகளை அடைத்து அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் ஏகமனதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
இன்று காலை 9.30 மணிக்கு மாதாந்த வடக்கு மாகாண சபை அமர்வு ஆரம்பிக்கப்படும் நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
கடந்த வடக்கு மாகாண சபை அமர்விலும் சபை ஆரம்பிக்கும் முன்னர் சபா மண்டபத்தில் அனைவரும் எழுந்து நின்று போராட்டம் நடாத்தினர்.
 
 
ஆனால் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
 
அதன்படி ஜனாதிபதிக்கு குறித்த பிரச்சினை தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டபோதும் இதுவரையிலும் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
 
வவுனியா மாவட்ட அரச அதிபரின்  செயற்பாடு சிறப்புரிமை மீறல் மற்றும்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதித்த செயலாகும். என்பதால் இன்றைய தினமே இதற்குரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி உறுப்பினர்கள்,அமைச்சர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறித்த பிரச்சினை தொடர்பில் மீண்டும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி  தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
 
எனினும் அதனை ஏற்காத வடமாகாண சபை உறுப்பினர்கள் 11 மணிவரை வடக்கு மாகாண சபையை ஒத்திவைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
5555%2811%29.jpg
 
55555555555555.jpg
 
55555555555555555555555555555.jpg
 
b%2891%29.jpg
 
555555555555555555%281%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=156814102623198300#sthash.YT0ghwSa.dpuf

ஒரே செய்திதான் அனாலும் ஒன்று தாயாக ஊடகம் மற்றொன்று புலத்து பமாத்து ஊடகம்.

தேவை இல்லாமல் சம்பந்தரை இதுக்குள் செத்துள்ளது. 

சம்பந்தரின் அரசியல் விமர்சிக்கப்படலாம் அனால் இப்படி பொய் கூறுதல் சரியாக படவில்லை.

 

ஒரே செய்திதான் அனாலும் ஒன்று தாயாக ஊடகம் மற்றொன்று புலத்து பமாத்து ஊடகம்.

தேவை இல்லாமல் சம்பந்தரை இதுக்குள் செத்துள்ளது. 

சம்பந்தரின் அரசியல் விமர்சிக்கப்படலாம் அனால் இப்படி பொய் கூறுதல் சரியாக படவில்லை. 

சித்தார்த்தன் இந்த விடயம் குறித்து சம்பந்தனிடம் தெரிவித்த போது தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லித் தட்டிக் கழித்து விட்டதாக மாகாணசபையில் இன்று நடைபெற்ற விவாதத்திலும் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டி தமது விசனத்தைத் தெரிவித்திருந்தனர். இன்றைய சக்தி செய்தியிலும் ஒரு உறுப்பினரின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது.

இந்த இடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய அக்கறை எடுக்கவில்லை போலத் தெரிகிறது.

 

தவராசா தனது உரையில் இதயங்களை இணைக்கும் பணியி;ல ஈடுபட்டுள்ள சுமந்திரனால் இதைக் கூடச் செய்ய முடியாதா எனப்  பேசியதும் அந்தச் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தவராசாவை எல்லாம் துணைக்கு இழுக்கும், மேற்கோள் காட்டும் அளவுக்கு புலம்பெயர் அரசியல் வங்குரோத்து ஆகிவிட்டதே :(

நீங்களும் ஈபிடிபியும் இப்போ ஒரே படகில்தான் :)

தவராசாவை எல்லாம் துணைக்கு இழுக்கும், மேற்கோள் காட்டும் அளவுக்கு புலம்பெயர் அரசியல் வங்குரோத்து ஆகிவிட்டதே :(

நீங்களும் ஈபிடிபியும் இப்போ ஒரே படகில்தான் :)

யார் கூறிய கருத்து என்பது முக்கியமல்ல. அவர் அதை எந்த நோக்கத்திற்காகக் 4றினார் என்பதையும் நான் இங்கு ஆராயவில்லை. 

ஆனால்  அரசுடன் பேசி ஒரு அரசாங்க அதிகாரியைக் கூட இடமாற்ற முடியாத இவர்கள் இதயங்களால் நெருங்கி என்ன அரசியல் தீர்வைப் பெறப் போகிறார்கள்  என்ற தவராசாவின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. 

 

இதயங்களால் நெருங்கி வருகிறோம் என்று சுமந்திரன் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க மாவையோ அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்து வருகிறோம் என்று விரக்தியில் பேசும் நிலையிலும் இன்னமும் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குவதற்கும் சுமந்திரன் மற்றும்: சம்பந்தனின் 'சாணக்கிய' அரசியலுக்கு ஓ போடுவதற்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Edited by Manivasahan

 

பனை அபிவிருத்திச் சபையை  தனது தேவைக்கேற்ப தனது அமைச்சுக்குள் இணைத்து அந்த நிதியை ரிசாத் பதியுதீன் மோசடி செய்கிறார் எனக் குற்ற!;சாட்டும் தமிழரசுக் கட்சியின் தலைவர் அந்தப் பணத்தை மீட்டதாகப் பீற்றிக் கொள்கிறாரே தவிர அந்த கசற் உத்தரவை மீளப் பெறச் செய்ய சம்பந்தனும் சுமந்திரனும் ஏன் முயற்சிக்கவில்லை என இன்னமும் சொல்லவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த ரிசாத்தின் அரசியல் சாணக்கியத்திற்கு முன்னால் இதயத்தால்  நெருங்கிய சம்பந்தனதும் சுமந்திரனதும்  அரசியல் சாணக்கியம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்களா தெரியவில்லை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நாளைக்கே மகிந்த கூட்டமைப்பின் வேட்டியை உருவினாலும், நாங்க அவரோடு சேர்ந்து கூட்டமைப்பின் வேட்டியை உருவுவோம், ஏன்னா என்ன சொல்குறார் என்பதுதான் முக்கியம். ஏன், என்ன காரணத்துக்காக சொல்கிறார், அவர் வரலாறு முக்கியமில்லை. செம லாஜிக்.

சுமந்திரனின் நகர்வால் பெரிதாய் ஏதும் கிடைத்து விட்டதாய் யாரும் சொல்லவில்லை.

புல வால்களின் வங்குரோத்து அழிவு அரசியலை விட இது பரவாயில்லை அவ்வளவே.

 

  • கருத்துக்கள உறவுகள்

தவராசாவை எல்லாம் துணைக்கு இழுக்கும், மேற்கோள் காட்டும் அளவுக்கு புலம்பெயர் அரசியல் வங்குரோத்து ஆகிவிட்டதே :(

நீங்களும் ஈபிடிபியும் இப்போ ஒரே படகில்தான் :)

தவராசாவின் கருத்தைத் துணைக்கு அழைக்கும் நிலை வந்து விட்டது  என்பதை விட.....
மாகாணசபை உறுப்பினர் தவராசா அவர்கள் எல்லாம் இப்படிக் கேள்வி கேட்கும் நிலையை யார் உருவாக்கினார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.:)

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி, பிரபாவையும் பார்த்துதான் கேள்வி கேட்டார். கேள்விகளை அவர்கள் எப்போதும்தான் கேட்டார்கள். என்ன அப்போ அவர்கள் அரசியல் உங்கள் அரசியலுக்கு 180 பாகை எதிர். இப்போ கிட்டத்தட்ட சமாந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அவையிண்ட காலம் சரியில்லை, தமிழீழத்துக்கான போராட்டத்தில இருந்து கூட்டமைப்புக்கு எதிரான போராட்டத்திலை கழுதை தேய்ஞ்சு கட்டெறும்போ இல்லாட்டி கடியெறும்போ ஆன நிலையின இருக்கினம். இப்ப காசுசேக்கிறத்துக்கு ஏதாவது சாக்குப்போக்கு வேணுமே அதுதான் இந்த கறுமம் கெட்ட நிலை. கூட்டமைப்பு இலங்கையில பலமான அரசியல் சக்தியாக இருக்குது எதிர்காலத்திலும் இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.  புலவியாபாரிகள் எத்தினையோ குதிரைகளிலை ஏறிப்பாக்கினம் ஆனால் ஒரு குதிரையும் சரிவர மாட்டன் எண்டுது. விக்கினேசுவரனை விழுத்தலாம் எண்டு பாக்கினம். அது சரிவராது. இந்தியாவை மீறி விக்கினேசுவரன் சம்பந்தரை எதிர்க்க மாட்டார்.  இப்ப ஒரே ஒரு தெரிவு புலம்பெயர் அசூல்ராசாக்களுக்கு இருக்கு. அதுதான் ஈபிடீபி. டக்கிளஸ் அங்கிளை வளைச்சுப் பாக்கலாமே? அதாலை நிறைய பலன் கிடைக்கும்,<_<

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி, பிரபாவையும் பார்த்துதான் கேள்வி கேட்டார். கேள்விகளை அவர்கள் எப்போதும்தான் கேட்டார்கள். என்ன அப்போ அவர்கள் அரசியல் உங்கள் அரசியலுக்கு 180 பாகை எதிர். இப்போ கிட்டத்தட்ட சமாந்திரம்.

புலிகள் < > டக்கி 180 பாகை எதிர்

சம் சும் < > டக்கி 180 பாகை எதிர் 

 

இதில் யார் சரி 

நல்ல காமெடி , இந்த சம்பந்தன் தான் ஏதோ அரசியல் சனாக்கியனாம் ... அந்தாள் கொழுவி விட்டுட்டு கூத்து பார்க்கின்றார் .. விக்கி ஐயாவுடன் நேரடியாக எதிர்க்கும் பலம் இல்லாத காரணத்தால் மாவையை பலிக்கடா ஆக்கி உள்ளார் ... குள்ள நரி என்பது குளறி மாவைக்கு இன்னும் புரியவில்லை ....

கட்சிக்குள் அவர்களுக்குள் பிரச்னையை உருவாக்கி ஒருமாதிரி கூட்டமைப்பை இல்லாமல் செய்யும் ரணிலின் ஏவலால் தான் இந்த சம்பந்தன் ...

இவருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஏதோ புலி வால் என்று புலம்புகின்றார்கள் ... சம்பந்தன் மாதிரி நரி வால் இல்லை நாங்கள் .. 

ஏமாற்றும் இந்த நரி அரசியல் வாதிகளிடம் இருந்தும் தமிழ் மக்களை காப்பதுவும் புலிகள் தான் ...அதனை தான் புலிகள் செய்கின்றார்கள் ...நரி வால்களுக்கு ஏன் பொத்திக்கொண்டு வருகின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தாலும்  புலி என்று காலைத்தூக்கியது போக

இப்பொழுது புலம்..

 

கடிச்சது நம்மவீட்டு விக்கியர் என்பதே மறந்து போகுது...

அந்தாள் என்ன பண்ணும்

உருவாக்கியதையே அழிக்கும் 

உண்டவீட்டுக்கே இரண்டகம் செய்தா??

புலமும் தாயகமும் ஒரே பாதையில் போவது சிலருக்கு கடுப்பாகத்தான் இருக்கும்

ஆனால் அது தான் நிலையான நிரந்தர தீர்வாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது அவையிண்ட காலம் சரியில்லை, தமிழீழத்துக்கான போராட்டத்தில இருந்து கூட்டமைப்புக்கு எதிரான போராட்டத்திலை கழுதை தேய்ஞ்சு கட்டெறும்போ இல்லாட்டி கடியெறும்போ ஆன நிலையின இருக்கினம்.

நாங்கள் எப்போதுமே கடியெறும்புகள்  தான் ஆனால் கூட்டமைத்தான் இபோது கட்டெறும்பாகி நிக்கினம். அதுவும் சிலருக்குச் சந்தோசம்.

அடுத்த கட்டம் மத்தியில் இணக்கம் மகாணத்தில் குதர்க்கம் என்ற நிலையுடன் கூட்டமைப்பும் அழிந்து விடும்.
இது தான் எங்கள் ஆதங்கம்

வட மாகாண விடயங்களில் சம்பந்தன் ஐயா தலையீடு செய்வதில்லை ,விக்கியர் எத்தனையோ தடவைகள் ஜனாதிபதியை சந்தித்தவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி பெற்றதை ஜனாதிபதிக்கு சொன்னவர் , ஏன் இந்தப்பிரச்சனையை கதைக்கவில்லை .

 

மாகாண திட்டக்குழுவை கூட்டி சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கேட்டிருந்தால் நிலைமையை சுமுகமாக கையாண்டிருக்கலாம் .

 

நா---க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தூக்குவதுமாதிரி என்ன பிரச்சனை என்றாலும் சம்பந்தன் ஐயாவை குற்றம் சாட்டாமல் பலருக்கு சாப்பாடு செமிக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு தெரிவதெல்லாம்.. சம்பூர் மயம்.

சம்பூர் முக்கியப்பட்டது சம்பந்தனுக்கு வாக்கு அரசியலாகிவிட்டது. பாவம் அந்த மக்கள் இன்னும் தீர்வின்றி. இதில சம்பந்தன் வாகரை.. அம்பாறை.. தென்னமரவடி.. என்று சம்பந்தப்பட முடியுமோ. அதுக்க வடக்குக்கு வேற கூப்பிடுறேள். அவரால் இப்ப முடிஞ்சதெல்லாம்.. சம்பூர் பற்றி ஒரு போலி அறிக்கை.. சிங்கள சுதந்திரதினத்துக்கு விசிட் அடிச்சு கொட்டாவி விடுவது மட்டும் தான். அதை விட ஐயாட்ட அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும்மை கீழ்தரமாய் விமர்சித்த படியே, அவர்கள் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்போர்களின் வங்குரோத்து தனத்தை என்ன செய்வது?

ஏன் உங்கள் பேச்சை கேட்டு ஆடும் கஜன் அண்ட் கஜன், அல்லது சிவாஜி அல்லது அனந்தியை கொண்டு ஏதாவது ஆக்க பூர்வமாய் செய்யலாமே?

அவர்களுக்கு அறிக்கை விடுவதை தவிர வேறேதும் தெரியாதா? அல்லது தேத வுக்கு வெயிட்டிங்கா?

அம்பாறை, மணலாறு, வவுனியா யாழ் என எங்கு என்ன நடந்தாலும் சம் சும் மட்டுமே போடு காய்களா?

ஒரு மாவீரர் குடும்பத்து மாடு வாங்கி கொடுக்கவே எங்களுக்கு எவ்வளவு காலம் பிடித்தது? விசுகு எவ்வளவோ சிறப்பாக செயல்ப்பட்டும்? அந்த சின்ன விசயத்துக்கே இப்படி என்றால் ஏமாத்தும் சிங்களவர்களோடு அரசியல் செய்வது என்ன விளையாட்டா?

அடங்கி போனல் கருணாவை மிதிப்பது போல் மிதிப்பார்கள்.

எதிர்த்து நிண்டால் தேதவை முடித்தது போல் முடிப்பார்கள்.

இதுக்கிடையாளேதான் சைக்கிள் ஓடவேண்டும் சம் சும்.

இங்கே சிலர் இலங்கை அரசியல் ஏதோ புலத்தில் பெட்டிக்கடை நடத்துவது போலவும், சிங்களவன் தருவதை சம் சும் குறுக்கே விழுந்து தடுப்பது போலவும் எழுதுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.