Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனிற்கு ஆதரவளிப்பதில்லை! உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானம்!!

Featured Replies

பதிவு.....

காலையில் இருந்து டாயிலெட் பேப்பர் கையிருப்பு குறையுதே என்ற கவலையில் இருந்தேன்.

இனிக் கவலையில்லை, பதிவை கிழிச்சு..,....

நீங்கள் Tesco போனால் சீப்பா வாங்கலாம்

இவரை டாக்கியுடன் கூட்டமைக்க சொல்லுங்கோ ... ஆனால் டாக்கியவது கொஞ்சம் தேறும் ....இந்த சும் ...நரகத்து முள்ளு ..தமிழரின் சாபக்கேடு 

இங்கு சும்மா கத்தாமல் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாம், மக்கள் முடிவை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் யார் அப்பவும் தூற்றுகிறார்கள் என்று இருந்து பார்க்கலாம். நான் எப்பவும் மக்கள் பக்கம். அனந்தியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் விமர்சிக்கவும் பின்நிற்க மாட்டேன். மறுபடியும் சொல்கின்றேன் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால்! புலம் பெயர் சமூகத்தின் விருப்பத்தைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு முன்னால் எப்படி இளிக்கிறார்கள் ? அளவை ஆகஸ்ட் 17 ல் தெரியும் யார் உள்ளே வெளியே என.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சும்மா கத்தாமல் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாம், மக்கள் முடிவை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் யார் அப்பவும் தூற்றுகிறார்கள் என்று இருந்து பார்க்கலாம். நான் எப்பவும் மக்கள் பக்கம். அனந்தியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் விமர்சிக்கவும் பின்நிற்க மாட்டேன். மறுபடியும் சொல்கின்றேன் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால்! புலம் பெயர் சமூகத்தின் விருப்பத்தைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

தமிழ் மக்கள் எப்போதும் நம்பிக்கை தளராதவர்கள். அதனால்தான் எப்போதும் அரசியல் ரீதியாக ஒரு தீர்வை தமிழ் அரசியல் தலைமைகள் பெற்றுத் தருவார்கள் என்று தேவையான ஆதரவைக் கொடுப்பார்கள். முன்னர் தமிழரசுக் கட்சிக்கும், 70களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 80 - 90 களில் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவானவர்களுக்கும், பின்னர் கூட்டமைப்புக்கும் சளைக்காமல் வாக்கைப் போட்டு தமக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று காத்திருப்பார்கள். ஆனால் தமிழர் தலைமைகள் ஒருபோதும் நீண்ட காலத் தீர்வு நோக்கி சிந்தித்துச் செயற்படாமல் வெளியாருக்காக காத்திருப்பார்கள்.

எனவே மக்களுக்கு சரியான தகவல்களைப் பரிமாறி, கட்சிகளின் கொள்கைகளை விளங்க்படுத்தி வாக்குக் கேட்கவேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் தமிழ்க்கட்சிகளுக்கு உண்டு. ஆனால் கொள்கைகளையும், தமது திட்டங்களையும் கட்சிமட்டத்திலேயே கலந்தாலோசிக்காத கூட்டமைப்பு தமிழர்களைக் கவரும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து பாராளுமன்றம் போவதிலேயே குறியாய் இருப்பார்கள்.

முன்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி மக்களை உசுப்பேற்றிய அதே உத்தியைத்தான் காலம்காலமாகக் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கிருபன் உங்கள் கருத்துடன் நான் உடன்படுகின்றேன்.

இப்போதுள்ள கேள்வி நாம் என்ன செய்வது என்பது. வெறும் புலிப்புராணத்தை பாடி காலத்தை நகர்த்தப் போகின்றோமா அல்லது எமது எதிர்காலத்திற்காக ஏதாவது பண்ணப் போகின்றொமா என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதப் போர் முடிவடைந்ததோடு இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இன்றைய யதார்த்த நிலையில் என்ன மாதிரியான அரசியல் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்ற உரையாடலாவது தேவை. இதற்குப் புலிப்புராணம் தேவையில்லை. தலைவர் பிரபாகரனால் எடுக்கமுடியாத தமிழீழத்தை வேறு யாரும் எடுக்கப்போவதில்லை என்பதைப் புரியாதவர்கள் காலம் நகர்வதை உணராதவர்கள். அவர்களைத் தாண்டி சாதாரண தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலை இன்னமும் எட்டப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அரசியல் விடுதலையை கூட்டமைப்பு பெற்றுத் தராது என்பதுதான் கடந்த பத்தாண்டு காலமாக அவர்களின் அரசியல் செயற்பாட்டில் இருந்து கற்றுக்கொண்டது.

தற்போதைய நிலையில் தமிழீழம் என்பது சாத்தியமற்றது என்பதுடன் அரசியல் ரீதியிலான குறைந்த பட்ச உரிமைகளைப் பெற்றுக் கொள்வதே அதற்குச் சரியான வழியாக இருக்க முடியும்.

ஆனால் நேற்று அரசியலுக்கு வந்த ஹக்கீம் பதியுதீன் போன்றவர்கள் தம் இனம் தொடர்பில் காட்டும் தீவிரப் போக்கையும் றாஜதந்திரத்தையும் கூடக் காட்டத் தெரியாத எங்கள் பழுத்த அரசியல் தலைமைகள் தமது அரசியல் லாபத்தை மட்டுமே கருத்தில கொள்கிறது.

ஒரு சிறிய உதாரணம். 

அண்மையில் தமிழ் மக்களின் வழங்களீல் ஒன்றைச் சுரண்டும் நோக்கில் பனை அபிவிருத்திச் சபையை பலவந்தமாக தனது அமைச்சுக்குள் இழுத்துக் கொள்ள அரசை நிர்ப்பந்தித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட வைத்து விட்டார் பதியுதீன். 

இதன் காரணமாக அவர் கையகப்படுத்திய பணத்தை தாம் விடுவித்து விட்டதாக பத்திரிகையாளர் மாநாட்டில் மார் தட்டும் மாவை சேனாதிராசா இந்தத் திணைக்களம் எவ்வாறு பதியுதீனின் அமைச்சிற்குள் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டது என்பது குறித்து அரசிடம் நியாயம் கேட்கவில்லை.

ஒரு திணைக்களத்திற்கு நிகழ்ந்த அநியாயத்தைக் கூடத் தட்டிக் கேட்கமுடியாமல் இதயங்களால் இணைந்து எதனைக் காணப் போகிறார்கள்.

தலைவர் பிரபாகரனால் எடுக்கமுடியாத தமிழீழத்தை வேறு யாரும் எடுக்கப்போவதில்லை என்பதைப் புரியாதவர்கள் காலம் நகர்வதை உணராதவர்கள். அவர்களைத் தாண்டி சாதாரண தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலை இன்னமும் எட்டப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உண்மை, ஆனால் இதை எப்படி புரிய வைப்பது. எப்படி முன்னோக்கி நகர்த்துவது. இதுதான் எனது கேள்வி.

இங்கு சும்மா கத்தாமல் ஆகஸ்ட் 18 வரை பொறுக்கலாம், மக்கள் முடிவை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் யார் அப்பவும் தூற்றுகிறார்கள் என்று இருந்து பார்க்கலாம். நான் எப்பவும் மக்கள் பக்கம். அனந்தியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் விமர்சிக்கவும் பின்நிற்க மாட்டேன். மறுபடியும் சொல்கின்றேன் தாயக தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால்! புலம் பெயர் சமூகத்தின் விருப்பத்தைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

இதுவே எனது முடிவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய மாவட்ட விருப்பு வாக்கு முறையில் தேர்தல் நடப்பதால் யாழில்தான் சுமந்திரன் வெல்ல வாய்ப்பு அதிகம். என்னதான் கரி அடிக்கடி குடாநாட்டவரை போட்டுத்தாகினாலும் ( அதில் உண்மை இல்லாமல் இல்லை) யாழில்தான் சுமந்திரனை, அவர் அரசியலை வரவேற்கும் பக்குவம் உள்ள மக்கள் செறிவாக உள்ளனர். தவிர யாழ் பூர்வீகம் உள்ளவர் யாழில் கேட்பதுதான் முறை.

இந்தமுறை சுரேஸ் பாடு கஸ்டம் போலத்தான் இருக்கு. நல்லவிசயம்.

கூட்டமைப்பை இன்னும் கொஞ்சம் கிளீன் பண்ணின மாரியும் அமையும்.

ஜீவன் சொல்வது போல் மக்கள் மத்தியில் இம்முறை ரெண்டு வேறு பட்ட தெரிவுகள் உண்டு. ஒன்று கூட்டமைப்பு சொல்லும்/செல்லும் பாதை. மற்றயது அதி தீவிர ததேமு பாதை. இந்த ரெண்டில் ஒன்றுதான் மக்கள் தேர்வாக இருக்க முடியும்.

நான் நினைக்கிறேன் மக்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பின் பாதையையே தெரிவார்கள் என. மாறாக  ததேமு ஒரு பெரு வெற்றியை பெற்றால்- மக்கள் மனதை மாற்றி கொண்டார்கள் என ஏற்றுக்கொண்டு அவர்களின் கொள்கைக்கு ஒரு அவகாசம் வழங்கத்தான் வேண்டும்.

கிருபன் சொல்வது போல் கூட்டமைப்பை இகழ்வது ரொம்ப ஈசி. ஆனால் தமிழர் அரசியல் வேறு முஸ்லீம் அரசியல் வேறு. அவர்கள் எப்போதும் ஆட்சியில் பங்குதாரகி தமக்குரிய பங்கையும் எமக்கும் சேரவேண்டுயதையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போவதுதான் வழமை.

பனை அபிவிருத்தி சபை, உப்பளம் இப்படிப் பல.

இது நாம் செல்வா காலத்தில் இருந்து அரசில் சேராமல், முரண்டு அரசியல் செய்வதால் வரும் பக்க விளைவு.

மாறி யோசித்த பொன்னம்பலம், ராஜதுரை, கனக ரத்தினம், கிசோர் எல்லோரும் மக்களால் தூக்கியடிக்கப் பட்டனர்.

இபோதும் டக்கி, விஜயகலாவின் அரசியலுக்கு பெரு வரவேற்பில்லை.

இதயத்தால் இணைவோம் என சொன்னதுக்கே சும் பலருக்கு எனிமி நம்பர் வன்.

ஆக தமிழ் வாக்காளர் சமூகம் கூலுக்கும் ஆசைப் பட்டு மீசைக்க்கும் ஆசைப்பட முடியாது.

மூன்றில் ஒரு தெரிவுக்கு நாம் வந்தாகவேண்டிய காலம் இது.

1) முஸ்லீம்களைப் போல் அன்றாட அரசியல் செய்யப் போகிறோமா?

2) ததேமு போல் அதிதீவிர தமிழ்த் தேசிய அரசியல் செய்யப் போகிறோமா?

3) இல்லை கூட்டமைப்பு போல் மிடில் பாத் அரசியல் செய்யப் போகிறோமா?

தெரிவு 1 எம் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும்

2 அழிவை தர ஏதையும் தராது.

3 ஒரு ரெண்டும் கெட்டான் நிலை. 

இதுவரைக்கும் மக்கள் 3 ஐயே தெரிந்தனர்.

இனி எப்படியோ?

உப்பிடி கேள்வி கேட்டு குழப்ப வேண்டாம்.

என்னத்தை சொன்னாலும் சம்பந்தருக்கும் சுமந்திரனுக்குன் எதிராக கருத்து எழுதுவதுதான் ரெண்டு.

என்னை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு  2/3 மற்றும் த தே மு -1/3 உம வெல்ல சாத்தியம்  உள்ளது .உண்மையில் மக்கள் த தே கூ இணை விட்டு வேறு தெரிவுக்கு போக விரும்ப மாட்டார்கள் ஆனால் இந்த முறை சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் நகர்வுகள் தெளிவானதாக இல்லாததால் வெறுப்பில் உள்ளார்கள் .

சிங்களவனுடன் எங்கள் தேவைகளை மறைத்து அணுகி சென்ற எல்லா முயற்சிகளும் இறுதியில் ஏமாற்ற பட்ட அனுபவம் 40 வருடங்களாக உள்ளது (ஆயுத போராட்டத்தை தவிர்த்து) . இனியும் விட்டு கொடுத்து காதலித்து அரசியல் என்ற பம்மாத்து விளையாட்டை ஆதரிக்க தமிழர் ஒன்றும் பாப்பாக்கள் இல்லை ...

பேச வேண்டும் ஆனால் விட்டு கொடுப்புகளுக்கு இடம் இருக்க கூடாது ...எத்தனை காலம் உருண்டு ஓடினாலும் எங்கள் அடிப்படையான தேவைகள் மாறப்போவதில்லை . அதில் என்ன விட்டு கொடுப்பு ..
தமிழருக்கு கொஞ்சம் கொடுத்தாலும் சிங்களத்தின் வாக்குகளை இழப்போம் என்று சிங்கள் அரசியல் வாதிகளின் அரசியல் உள்ள போது நீங்கள் மட்டும் என்ன புடலங்காய் அரசியல் செய்கின்றீர்கள் .

விக்னேஸ்வரன் கொண்டு வந்த இன அழிப்பு தீர்மானம் எவ்வளவு காலத்தால் முக்கியமானது ஏதாவது கண்டன தீர்மானம் சம்பந்தன் வெளியிட்டாரா ? இதில் என்ன விட்டு கொடுப்பு அரசியல் உள்ளது ...
கேவலம் .... . நீங்கள் இருவரும் காதலித்து காமம் பண்ணுகின்ற அரசியலா சிங்களவனுடன் செய்ய போறிங்கள் ... என்ன தமிழர் இன்னும் முட்டாள்கள் என்றா நினைகீறிர்கள் .

என்னதான் கொஞ்சினாலும் குலாவினாலும் சிங்களவன் தர மாட்டான் .ஆதலால் தெளிவான ஒரு நிலைப்பாட்டை முதலில் சிங்களத்துக்கு அறிவியுங்கள் .. அதன் படி கொள்கை தளராது பேசுங்கள் ...
முடியாவிட்டால் வெளி உலகத்திக்கு போய் பேசுங்கள் ...இந்தியாவை மட்டும் நம்பாமல் ...
உண்மையான ராஜதந்திரம் என்பது சிங்களவனுடன் கொஞ்சி குலாவும் அரசியல் அல்ல ...புலிகளுக்கு உலக நாடுகளை கொண்டு சிங்களம் எப்படி செக் வைத்ததோ அதே மாதிரி வெளி நாடுகளுடன் பேசி சிங்களத்தை மாட்ட முயற்சி செய்யுங்கள் ..அது சுலபமான விடயம் அல்ல ஆனால் முயற்சிக்க வேண்டும் ...

புலிகள் கேட்ட தமிழருக்கான தீர்வு தந்தை செல்வாவால் முன் வைக்கப்பட்டது ஆனால் இப்ப அது நடை முறை சாத்தியம் இல்லாவிட்டலும் அதன் உண்மையை எப்பவாவது நீங்கள் உலக நாடுகளுக்கு சொல்லி உள்ளீர்களா ? புலிகளை ஆதரிக்க தேவை இல்லை ஆனால் அவர்கள் கொண்டு வந்த அல்லது வெளிக்கொணர்ந்த தமிழ் மக்களின் அரசியல் தேவைகள் உண்மைதானே .. அதனை சொல்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ? 

புலிகள் பற்றி பேசினால் பயங்கரவாதம் என்று நீங்கள் நினைத்தால் அது இன்னும் சிங்களவனின் பொய் குற்ற சாட்டை நீங்களும் நியாயப்படுத்துவது போல் தானே ஆகி விடும் ... அடிப்படை தேவைகளை கேட்ட புலிகளை பயங்கரவாதிகள் என்று சிங்களவன் சொல்லும் போது ... நீங்கள் என்ன செய்ய வேண்டும் .. புலிகளை ஆதரிக்க தேவை இல்லை ஆனால் அவர்களின் கோரிக்கைகள் தமிழரின் தேவைகள் எல்லாம் எங்களது தொடரும் வரலாறு என்பதை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் ...

சிங்களவன் இப்பவும் பயங்கராவதம் செய்கின்றான் நீங்கள் இப்பவும் அடிமை அரசியல் செய்கின்றீர்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, ஆனால் இதை எப்படி புரிய வைப்பது. எப்படி முன்னோக்கி நகர்த்துவது. இதுதான் எனது கேள்வி.

வெரி சிம்பல் ....கருத்தென்ற பெயரில் புலிகளை ,புலம் பெயர் வால்களை தூக்கி  போட்டு தாக்கினால் மட்டும் போதும் 
முன்னகர்ந்து விடும் ...சிங்களவன் அப்படியே மகிழ்ந்து விடுதலையை தூக்கி தந்துவிடுவான் . தெரியாத ஊருக்கு வழி காட்ட இப்படி எத்தனை பெயரோ 

அப்படி இல்லை.

நான் புலிகளின் போர்குணம், போர்திறமைகள், இலட்சியத்திற்காக உயிரையே துச்சமாக மதிக்கும் தன்மை, இலட்சியப்பிடிப்பை என்றுமே ஏற்றுக் கொண்டவன். ஆனால் அவர்களது இலட்சியப்பிடிப்பு  பிழையாக வழிநடத்தப்பட்டது என்பதே எனது கருத்து. எப்பவுமே நாம் வளைந்தால் உடைந்துவிடுவோம் (தேத இந்திய இராணுவ காலத்தில் கூறியது) என பயந்தால் அது எமது உரிமைக்கான போராட்டமாக இருக்க முடியாது. போரியல், இராணுவ அறிவுகளை எல்லாரும் மெச்சத்தக் அளவில் வளர்த்திருந்தவர்கள் அரசியல், ராஜதந்திர ரீதியில் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு.

சிங்களவன் பொதுமக்களை கொல்கின்றான் என்றால் நாமும் பொதுமக்களை கொல்ல வேண்டுமா, தவிர்த்திருக்கலாம். சகோதரப் படுகொலைகள்,  மக்கள் மீதான ஆயுத மிரட்டல்களும் தவிர்த்திருக்கப்பட வேண்டியவையே. தனி நபர்கள் மீதான தாக்குதல்கள், அரசியல் படு கொலைகள், அரசியல் நபர்கள், பொதுமக்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்கள், சிறு பிள்ளைகளை இராணுவத்தில் உள்வாங்கல், கட்டாய ஆள்சேர்பு இவ்வாறு எத்தனையோ விடயங்களைக் கோட்டை விட்டதால்தான் - பயங்கரவாதி பட்டம். இவைகளைத் தவிர்த்து எமது பிரச்சனையை வெறும் இராணுவக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்ததன் விளைவுதான் எமது இன்றைய நிலை. நான் என்றுமே புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவனல்ல. எனது மக்களுக்காகவாவது திருந்த வேண்டும் என்று கடைசிவரை ஆசைப்பட்டவன்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.