Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகப் போராளிகள் களத்தில்! வேட்பு மனுத் தாக்கல்!

Featured Replies

ஜனநாயகப் போராளிகள்! வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. 

நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில், கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

http://www.tamil.srilankamirror.com/news/item/3459-2015-07-13-06-42-15

இன்று வட மாகாண தேர்தலில் உங்கள் ஆதரவு  யாருக்கு?
கேள்விக்கும் காரணம்  உண்டு, எனது தெரிவு மக்கள் ஆட்சிக்கான போராளிகள், உங்கள் தெரிவு என்ன? 

தமிழனின் சாபக்கேடான அப்புகாத்து அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டுவோம்!
இனத்துக்காய் நெருப்பில் நீராடி, புடம் போட்ட தங்கங்களை தேர்வு செய்வதில் கேள்விக்கே இடமில்லை,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கயவர்களின் கூடாரமாகிப் போனது, கலைப்பதை தவிர வேறு வழி இல்லை.

சரி பிழை கடவுள் என்று நீங்கள் சொல்பவரிலும் உண்டு, வித்யாதரன் சொலும் காரணங்களில் உண்மைகள் அதிகம் உள்ளது.

தனது ஊழல்களில், அதனால் வரும் தண்டனைகளில் இருந்து தன்னைக் காக்க மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவது தடுக்கப் படவில்லை.

மக்களுக்காகப் போராடிய ஒரே காரணத்தால், சிங்களத்தின் சித்திரவதைக்குப் பின்னும் மறு வாழ்வு தேடும் போராளிகளை வேலைக்கு அமர்த்தவே பயந்த சமூகம். அவர்களால் தமது சொந்த பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை  அரசியல் மூலம் மட்டுமே தேட முடியும், அதனூடாக மக்களின் உண்மையான சேவகர்களாக அவர்களால்  தான் உழைக்க முடியும் என்பதை நிரூபிக்க ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது?

நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவை.... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 
தங்கள் மீள் வரவு, நல் வரவாகுக.

A piece of history, its about Vithy, I never met him, but we share a piece of Genocide history, see Roberts reply below,
 
Dear Mr. Blake,
 
It is very happy to hear about your new job. Again, thanks for all the help and support you provide to minorities in Sri Lanka, particularly Tamils.
 
During your term, I had engage many important issues with you, your dedication and prompt action amazed me many times. The very good example, "Abduction of Mr. Vithyatharan".
 
You can be proud for rest of your life for saving him from abductors. With your current position, as a diaspora Tamil, I strongly believe, you will help Tamils to find an ever last peaceful solution for their decades long struggle for  right to self - determination.
 
God bless you,
 
Sincerely,
Akootha
 
Blake, Robert O <BlakeR2@state.gov>

4/25/09
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
to me
cleardot.gif
 
Thanks for your message.  Bob Blake
cleardot.gif

அகூதா, உங்கள் மீள் வரவு எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியினை அளிக்கின்றது.

மீண்டும் தொடர்ந்து களமாடுங்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கான/ தேர்தலில் பங்கு கொள்ளும் (சுயேட்சைக்) குழுவுக்கான பிரச்சாரத் தளமாக மட்டுமே யாழை பயன்படுத்தகூடியவர் நீங்கள் இல்லை என்று நம்புகின்றோம்

நன்றி.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... அகூதா...!

தங்கள் வரவு கண்டு..மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்!

தங்கள் மீள்வரவு காலத்தின் கட்டாயம் என்பேன்!

வருகைக்கு நன்றி!

வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி, நல்ல மாடென்று மதித்து ஒரு சூட்டோடு அனுமதி தந்த நிழலிக்கும் நன்றி.
கருத்துக் களம், களம் ஆடும் இடம் என புரிந்த உங்கள் ஆணைக்கு எப்போதும் அடங்கியே எமது கருத்துக்கள் அமையும்.   

ஜீ ஜீ  பொன்னம்பலம் vs தமிழர் கட்சிகள் 

குமார் பொன்னம்பலம் vs தமிழர் விடுதலை கூட்டணி 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் vs TNA 

இன்று தமிழர் விடுதலை கூட்டணி  தலைவர் ஆனந்தசங்கரி போடும் சூழ்ச்சி  நாடகம் தான் என்ன?

இன அழிப்பின்  மறு வடிவம் கூட இருந்தே குழி பறிப்பு.

சொந்த கட்சையே காப்பற்ற தெரியாத தமிழ் தலைமைகள், தீர்வைத் தேடி தரும் என்று எமது  சோம்பேறித்தனத்துக்கு முதுகு சொறியாமல், பகுத்தறிவால், பட்டறிவால் மக்கள் ஆட்சி போராளிகளுக்கு பிரசாரம் செய்ய களத்தில் தடை இருந்தால் தயவு செய்து முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.

இன்னும் அழுகியே  முடியாத தமிழ் பிணங்களின் மேல் அரசியலும், பிழைப்பும் நடத்தும் ஊடகங்களில் ஒன்றாக யாழும் இல்லை என்பதால் தான் இன்னும் இங்கு களமாடுகிறோம்.

  தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிக்கப் பட வேண்டிய ஒன்று, 

இவர்கள் கயவர்கள், கள்வர்கள்  என்று சமூகத்தையே கருவறுக்க துணிந்த காமுகர்கள், கீழே  உள்ள இணைப்பை பாருங்கள், இது  சம்பந்தனுக்கோ,சுமந்திரனுக்கோ மாவைக்கோ தெரியாதா?

http://www.ceylontoday.lk/90-98097-news-detail-thunukkai-ps-member-on-rape-rampage-womens-organization-alleges.html

போரால் கணவனை இழந்து, நான்கு  பிள்ளைகளையும்  விட்டு இந்த நாய்களால்  மானம் பெரிதென தாய் போய் விட்டாள், அனாதை ஆக திரியும்  பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு உழைப்பதா, இல்லை உங்களோடு களமாடி உண்மையை உணர்த்த அலைவதா?

நன்றி 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அகூதா
தேர்தல் காலத்தில் அகூதா மீண்டும் கருத்தாட வந்துள்ளதால் களம் சூடாக இருக்கும்

வணக்கம் அகூதா தங்கள் வரவு கண்டு..மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்!

பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.

ம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.

அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்தரை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!

அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றத்தை நடுக்கக் கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை. ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்தவீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!

p18.jpg

ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி...  சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க... காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன்... ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும்,  இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன்  நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும்... எதனால்? தேர்தலால்!

‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார். ‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார். ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை. அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது?

கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும், நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும், ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?

பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும், மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும், நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும், தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா?

தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம், எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா, ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார், இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை. ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே? 
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின்  மனைவி ஜானகியை தாய் என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது. சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா? இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும். என்ன யோசித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தங்கள், சிவாஜி மன்றத்துப் பிள்ளைகள்?

ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு. அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை. ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை அல்ல... இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?

இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்? எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?

p18b.jpg

எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி - முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பலபேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?

அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் நடக்கிறது. அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம் இன்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத்தர முன்வந்திருக்கலாம்.

ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க, வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர் -நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூரார் -எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா -ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் -முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏ பதவி வேண்டும் என்பதையே உணராமல் எம்.பி-க்கு போட்டியிட்ட அண்ணா - வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு. என்ன காரணம்?

வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108193&fb_ref=Default

அருமையான கட்டுரை

நன்றி  தம்பி  அகூதா..

உங்களது மீள் வருகைக்கு நன்றிகள்..

இனியாவது தொடர்ந்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

காணாமல் போவது என்றால் சொல்லுங்கள்

எல்லோரும் ஒதுங்கிவிடலாம்

எமக்கென்ன விதியா? 35 வருடங்களுக்கு மேலாக அடிபட...

இங்கு நான் உங்களுடன் உடன்படும் விடயங்கள்

கூட்டமைப்பை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள்

தொடர்ந்து அவர்களுக்கு தலையாட்டி பயணிப்பது ஆபத்தானது

கூட்டமைப்பில் புதியவர்கள் மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள் தலைமை தாங்கணும்

இல்லாதுவிட்டால் புதிய அணி உருவாகணும்

அவசியமாக அவசரமாக செய்யப்படவேண்டியவை இவை

இதற்கு காலம் தாழ்த்த

காலஅவகாசம் கொடுக்கக்கூடாது............

if  என்று ஒன்றை எழுதுவது போல் உலகில் மொக்கை எதுவும் இல்லை .

ஆபிரகாம் லிங்கன் பிறக்காமல் இருந்திருந்தால் ,வெள்ளையன் இலங்கையை பிடிக்காவிட்டால் ,உலக யுத்தங்கள் நடந்திராவிட்டால் கட்டுரைகள் இரவிரவாக  இருந்து எழுதலாம்.

எதை எழுதினாலும்  பச்சை குத்த தானே தெளிவான ஆட்கள் இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகப் போராளிகள் யார்? அவர்கள் பின்னணி என்ன? அவர்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்று பல விடயங்கள் தெரியாத நிலை.  எனவே அவர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். அவர்கள் யாராலும் ஆட்டுவிக்கப்படாத பொம்மைகள் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா?

ஏன் அவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேராமல் தனியக் கேட்கின்றார்கள்? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  யார்? அவர்கள் பின்னணி என்ன? அவர்களுக்கு மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் வாழ்வாதார  விடயங்கள் தெரியாத நிலை.   அவர்கள் யாராலும் ஆட்டுவிக்கப்படாத பொம்மைகள் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா?

ஏன் அவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தாயகம், தேசியம், தன்னாட்சிக்காக குரல் கொடுக்கும் குரல்களை ஒதுக்குகிறார்கள்?  இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

கேள்விகள் கேட்பது இலகு, நானும் உங்களில் ஒருவன், பதில்களை சேர்ந்து தேடுவதே தமிழினத்துக்கு நன்மை என்பது அடியேன் கருத்து.

கேள்விகளே எப்பொழுதும் புதிய கதவுகளைத்திறக்கின்றன....

இனி பதில் ..?

தேடலாம்

தேடுவோம்...

Edited by விசுகு

கலக்கம் பிறக்கும் போதுதான்  நியாயம் கிடைக்கும், கீழே உள்ள ஆக்கத்தின் நாயகன் எனக்கு 2009 இல் தர மறுத்த உதவிகளுக்கு ஆதாரம் மின்னஞ்சலாக உள்ளது.

எனது வேண்டுகோள்: தமிழர் மனித உரிமை மையத்தின் சேகரிப்பில் உள்ள தமிழர் இன அழிப்பிற்கான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா? 

பின்னுரை: 2009 இல் இன அழிப்பு போர் உச்சம் பெற்ற காலகட்டத்தில் கனடிய அரசியல்வாதிகளுக்கு ஆதாரங்களை  கொடுத்து போரை நிறுத்த வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்ற அவசியத்தில் இரவு பகலாக நாங்கள் இயங்கிக் கொண்டிருந்த தருணத்தில், தரவே முடியாது என்ற திரு. ச.வி. கிருபாகரனின் சொல் எனக்கு மற்றும் கனடாவில் போரை நிறுத்த போராடிய ஒவ்வொரு தமிழனுக்கும் எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லால் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. 

சாகாமல் தடுக்க கிடைத்த தருணத்தை வேண்டுமென்றே விட்டு விட்டு, செத்து நாறிய தமிழனின் பெயரில் வாழ்வு நடத்தும் இவர் எல்லாம் .... நான்  சொல்ல தேவை இல்லை,

ஜனநாயகப் போராளிகளை ஆதரிப்பதோ அங்கீகரிப்பதோ வேறு கதை, இந்த எதிர்பவர்களை இனம் கண்டு முகமூடி கிழித்து அவர்கள் சுயரூபம் காட்டவே இந்தக் களம் திறக்கப்பட்டுள்ளது, 

இன்று ச.வே கிருபாகரன் , இன்னும் யார் யார் என்று பார்ப்போம்,

  உங்கள் கருத்துகளை கிருபாவுடன்  பகிர்ந்து கொள்ள tchrfrance@hotmail.com

நன்றி.  

http://www.tamilwin.com/show-RUmtyHRWSVnu5B.html

ஐனநாயக போராளிகளுக்கு ஓர் திறந்த மடல்!
[ புதன்கிழமை, 22 யூலை 2015, 10:55.36 AM GMT ]
jananaayaka_poralikal_001.jpg
உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்!

என்னை நீங்கள் தெரிந்திருக்க வாய்பில்லை, சிலவேளைகளில் அறிந்திருக்கலாம். இதேபோல் உங்களை எனக்கு தெரிய, அறிய வாய்பிருக்காவிடிலும், நீங்கள் யாவரும் உங்கள் உயிர்களை அர்பணித்து சத்தியபிரமாணம் செய்து, இறுதிவரை போராடிய விடுதலை இயக்கத்தையும், அவ்வியகத்தின் மாபெரும் தலைவரையும், இவ் இயக்கத்தின் சில முக்கிய புள்ளிகளையும் பல தடவை பல மணித்தியலங்களாக சந்தித்து மனப்பூர்வமாக உரையாடி, விருந்தோம்பலும் நடத்தியவன் என்ற அடிப்படையில், சில கருத்துக்களை மிக ஆணித்தரமாக உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

இக் கருத்துக்களால் எனக்கு ஏற்படவுள்ள இடையூறுகள், சஞ்சலங்கள், மிரட்டல்கள், விபரீத முடிவுகள் போன்றவற்றை புன்னகையுடன் தமிழினத்தின் முன்னேற்றப் பாதையின் ஒரு படிக்கல்லாக என்றும் ஏற்பதற்கு தயாராகவுள்ளேன் என்பதை முன்கூட்டியே கூறவிரும்புகிறேன்.

உங்கள் தலைவர்,  எப்படியாக உங்களது விடுதலையை இயக்கத்தை ஆரம்பித்து, உலகம் வியக்கும் வகையில் எமது முதுமொழியான, �தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா� என்ற சொற்பதத்திற்கு செயல்வடிவம் கொடுத்தார் என்பதை நான் இங்கு கூறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை நன்கு அறிவேன்.

அப்படியானால் இவர் என்ன புதிதாக எமக்கு கூறப்போகிறார் என நீங்கள் எண்ணுவதிலும் நியாயம் உண்டு.

அன்று இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் முழுதான உதவி சிறிலங்காவிற்கு கிடைத்திருக்காவிடில், இன்று நீங்களும் நாங்களும் எமது சுதந்திர தமிழீழத்தின் முன்னேற்றத்திற்கான வழிவகைகள் பற்றி ஆராய்ந்து, அதற்கான வேலை திட்டங்களில் இன்று ஈடுபட்டிருந்து கொண்டிருப்போம்.

அன்று ஒட்டுக் குழுக்கள் போன்றோரின் நாசகார வேலைகளையும் நாம் மறப்பதற்கு இல்லை.

இன்று மிஞ்சியவற்றை உடைப்பதற்கு பலர் பல வடிவங்களில் வருகிறார்கள், போகிறார்கள்!

இவ் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் நிட்சயம் ஓர் பாரீய பின்னணியுடன் தான் செயற்படுவார்கள் என்பது உலக சரித்திரமும், அனுபவமும். இப்படியான செயற் திட்டங்களில் உள்ளவர்கள் அப்பாவிகளுக்கு உசுப்பேற்றி, தமது ஏஐமான்களை திருப்தி படத்துவார்கள் என்பது உலகின் புலனாய்வு பாடங்களில் ஒன்று.

அதாவது எமது விடுதலைக்கான ஆயுதப்போர், 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுற்கு வந்தவேளையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் உட்பட, உங்களில் ஆயிரக்கணக்கானோர் பட்ட, அனுபவித்த கஷ்ட நஷ்டங்களை நாம் நேரில் காணவிடிலும், சில ஊடகங்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து மிக வேதனைப்பட்டோம்.

அன்று பெரும் தொகையான பணத்தை தமது கொடுப்பனவாக சம்பாதித்த பலர், இன்று யாவற்றிலிருந்தும் ஒதுங்கி, பாரீய வர்த்தகர்களாக உலக ரீதியாக வலம் வரும்வேளையில், நாம் எமது கால் நூற்றாண்டு பணிகளை இன்றும், நாம் பெற்றுவரும் பிச்சை உதவியுடன் வாளில் தவம் செய்வதற்கு ஈடாக தொடருகிறோம்.

உங்களில் பல ஆயிரக்கணக்கனோர் எதிரியிடம் சரண் அடைந்த பொழுதும், ஒரு சில ஆயிரத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றி, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய தவிர்ந்த வேறு யாரும் இன்றுவரை தெரிந்திருக்கவில்லை.

இதில் மிஞ்சியவர்களில் சிலர், சித்திரவதை தாங்க முடியாது தமது குடும்ப உறவினர்களை காப்பாற்றுவதற்காக மூளை கழுவுதலுக்குள் அகப்பட்டுள்ளதாக அறிந்தோம். கொள்கையில் பின்னிப்பிணைந்த எவரையும், நிரந்தரமாக மூளை கழுவ முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்லாது, எமது சரித்திர ரீதியான அனுபவங்கள். இதேவேளை வேறு ஒரு பிரிவினர் பணத்தினால் மூளை கழுவப்பட்டதாகவும் ஓர் கதை உலவுகிறது.

இப்படியான பல கதைகள் உலவினாலும், புலி பசித்தாலும் புல்லு தின்னாது என்பதையும் நாம் அறிவோம். உங்களின் சரித்திரங்கள் சாதனைகளை நாம் மிகவும் கவனமாக ஆரயுமிடத்து,

ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது நீங்கள் யாவரும் சரித்திரம் படைத்த விடுதலை வீரர்கள் மட்டுமல்லாது தற்போதைய நிலையில் செய்வதறியாத அப்பாவிகள்! இன்னும் இருட்டினிலிருந்து ஓர் சிறிய துவாரத்தினூடாக வெளிச்சத்தை பார்க்கிறீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு  த. தே. கூ ஆரம்பிக்கப்பட்ட வேளையில், உங்கள் தலைவர் விரும்பியிருந்தால், உங்கள் சகாக்கள் பலரை த. தே. கூ மூலமாக பாரளுமன்றம் அனுப்பியிருக்க முடியும். உங்கள் தலைவர் இதை ஏன் செய்வதற்கு முன்வரவில்லை என்பதை, என்னைவிட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

த. தே. கூ சில தவறுகளை செய்கிறார்கள் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதேவேளை தமிழீழ மக்களிடையே மிகவும் பலம் பொருந்திய த. தே. கூ. னை எந்த தேர்தலிலும் ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது என்பதை, உங்களை வம்பிற்கு இழுத்துள்ள தற்போதைய தரகர் உட்பட யாவரும் அறிவார்கள்.

அப்படியானால், திடீரென �ஜனநாயக போராளிகள்� என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, எந்தவித விதிகள் யாதார்தங்களை மதியாது, த. தே. கூவிடம், இவ் அமைப்பில் உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் போட்டி போட இடம் கொடுங்கள் என, உங்கள் தரகர் கேட்பது நியாயமானதா? போராளிகளான உங்களிற்கு, இத்தரகருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் விசித்திரமானது!

இவ் அடிப்படையில், கடந்த சில நாட்களாக பல ஆய்வுக் கட்டுரைகைள், செய்திகளை பல ஊடகங்களில் படித்து வருகிறோம். இங்கு உள்ள முக்கிய வினா என்னவெனில், இத் தரகர் உங்களை தேடி வந்தாரா? அல்லது நீங்கள் இவரை தேடிச் சென்றீர்களா? இத் தரகர் உங்களை தேடி வந்துள்ளாரானால், அக் கட்டுரைகள் செய்திகளில் பிரசுரமாகியுள்ளவற்றை நீங்கள் நிட்சயம் மிக அழமாக ஆராய்வது மட்டுமல்லாது, இதற்கான உடன் நடவடிக்கையில் நீங்கள் இறங்க வேண்டும்.

உண்மையில் இத் தரகருக்கு முன்னாள் போராளிகளில் மிக அக்கறை இருந்திருந்தால், நீங்கள் யாவரும் இராணுவத்தின் சித்திரவதையிலிருந்து விடுபட்டு எந்தவித அடிப்படை உதவிகளும் இல்லாது வாழ்ந்த வேளையில், இவர் எந்த அமைப்பை ஆரம்பித்தார்? என்ன என்ன உதவிகளை செய்தார்? செய்ய முன்வந்தார் என்பதை நீங்கள்ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வெளிப்படையாக கூறுவதானால், தமிழீழ விடுதலை போராட்டம், விடுதலை போராளிகள் போன்ற விடயத்தில், உங்கள் தரகரிடம் எமக்கு பல யாதார்தமான ஆதாரங்களுடனான வினாக்கள் உள்ளன.

உங்களிற்கு எழுதப்படும் இம் மடலுக்கு உங்கள் தரகரினால் மறுதலிக்க முடியுமானால், எமது வினாக்களை வெளிப்படையாக பிரசுரிக்க தயாராகவுள்ளேன். அவ் வினாக்கள் எவையும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது அல்ல என்பதை இங்கு உறுதியாக கூறுகிறேன்.

உடன் பிறவா சகோதர, சகோதரிகளே!

உங்களிற்கு தற்பொழுது தரகரினால் ஊட்டபட்டுள்ள, தேர்தல் ஈடுபாடு எனச் சொல்லப்படும் மாயா ஜாலா வித்தைகள், இரு சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

ஒன்று, த. தே. கூ.பின் வாக்கு வங்கியை சிதறடிப்பதன் மூலம், த. தே. கூ.விலிருந்து பிரிந்து செல்லப்பிள்ளை அரசியல் நடத்துபவர்களுக்கு துணை போவது!

அடுத்து நீங்கள் யாரும் இத் தேர்தலில் வெற்றி பெறாத கட்டத்தில், உங்கள் உயிர்களை அர்பணித்து சத்திய பிரமானம் செய்து உலகளாவிய ரீதியில் பெரும் புகழுடன் வாழ்ந்த உங்கள் தலைவரும், இவருடைய அமைப்பிற்கும், தமிழீழ மக்களிடையே ஆதராவு கிடையாது என்ற அபகீர்த்தியை உருவாக்குவதற்காகவே, நீங்கள் யாவரும், உங்கள் தரகரினால் களம் இறகப்பட்டுள்ளீர்கள்.

சுருக்கமாக கூறுவதானால், முன்பு ஆயுதப் பலத்தினாலேயே உங்கள் விடுதலை அமைப்பு, மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்கள் என்று நிரூப்பிப்பதற்காக உங்கள் தரகருக்கு கொடுக்கப்பட்ட வேலை திட்டமே இது.

உங்களை பாவித்து தனது ஏஜமான்களை திருப்பதிப்படுத்தப் போகிறார் தரகர். உங்கள் நகர்வுகள் சர்வதேச அரசியலுக்குள் எவ்வளவு தூரம் பாவிக்கப்படுகிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா?

நீங்கள் உண்மையில் விசுவாசமாக அரசியல் செயற்பாடுகளில் இணைய விரும்பினால், முதற்படியாக, இன்றே நீங்கள் யாவரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் பங்கு கொள்வதிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து, உங்கள் மாபெரும் தலைவரினால் உருவாக்கப்பட்ட த. தே. கூ.வின் எதிர்வரும் தேர்தல் வெற்றிக்கு விசுவசமாக உடன் உழையுங்கள். இதன் மூலம் நீங்கள் நிட்சயம் த. தே. கூ. வின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வீர்கள்.

இலங்கைத்தீவின் தமிழ் மக்களாகிய நாம், கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற தேர்தலில் பங்குகொள்கிறோம், தொடர்ந்தும் பங்கு கொள்வோம்.

ஆகையால், அடுத்து வரும் 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உங்களில் சிலர் த. தே. கூ. சார்பாக போட்டியிடுவதற்கு நிட்சயம் அவர்கள் இடம் கொடுப்பார்கள். ரோம் நகரம் இரவோடு இரவாக கட்டப்பட்டது அல்ல என்பதை நீங்கள் நிட்சயம் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன்.

இச் செயற் திட்டங்களுக்கு கபடமான செயற் திட்டங்கள் அடங்கிய தரகர் யாரும் உங்களிற்கு தேவையில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி கொள்கிறேன். தரகர்கள் எப்பொழுது தமது லாபத்தில் தான் அக்கறை கொண்டவர்கள் என்பதை நீங்கள் நிட்சயம் அறிவீர்கள்.

இதற்காக உங்கள் விடுதலை அமைப்பின் அரசியல் ஆலோசகரின் பெயரை யாரும் ஏலத்தில் விற்பதற்கோ, அல்லது அவரின் பெயரின் பின்னால் மறைந்து நின்று, உங்கள் போன்றோர் மீது சவாரி செய்வதோ, ஓர் சௌகரியமான வேலை திட்டம் அல்ல!

கூடிய விரைவில் சந்திக்கு வராத சங்கதிகள்; சில வெளியிடப்படும் வேளையில், நீங்கள் அவற்றை பார்த்து, நாங்கள் இப்படியானவருடன் தான் சம்பந்தப்பட்டோமா? என எண்ணிக் கவலைப்படாமல் இருப்பதற்காகவே, இத் திறந்த மடலை உங்களிற்கு எழுதுவதற்கு முடிவு செய்துள்ளேன்.

பேய்க்காட்டப்படுபவன் இருக்கும் வரை பேய்க்காட்டுபவனும் இருப்பான் என்ற முது மொழிக்கு விதிவிலக்காக நீங்கள் யாவரும் வாழ வேண்டும்.

இத் தரகர் மட்டுமல்லாது, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிடையே பல குழப்பங்களை உண்டுபண்ணி, இவர்களிடையே பல பிரிவுகளை வெற்றிகரமாக ஏற்படுத்திய பலர், தற்பொழுது தமக்கு எந்தவித சம்பந்தமுமில்லாத துறைகளில், அல்லலுறும் வடக்கு கிழக்கு மக்களிடையே ஏமாற்று வியாபாரங்கள் பலவற்றை உவ்விடத்தில் செய்வதையும் நாம் அறிவோம்.

இவர்களும் பாரீய பின்னணியின் அடிப்படையிலேயே துணிகரமாக உவ்விடத்தில் குடிகொண்டுள்ளார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

உடன் பிறவா சகோதர, சகோதரிகளே!

நீங்கள் பல யாதார்தமான உண்மைகளை சிந்திக்க தவறிவிட்டீர்கள்.

உதாரணத்திற்கு எதிர்வரும் தேர்தலில், ராஜபக்ச குடும்பம் வெற்றி பெற்றால், உங்கள் நிலை மட்டுமல்லாது, உங்கள் மற்றைய சகாக்கள், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் நிலை என்ன ஆகப்போகிறது?

நீங்கள் ராஜபக்ச அரசுடன் ஒத்துப்போனால், நீங்கள் யாவரும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து வேலை செய்வதாக கூறி பட்டம் சூட்டப்படுவீர்கள், அல்லது அவ் அரசினால் துன்புறுத்தப்படுவீர்கள்.

அடுத்து, நீங்கள் சார்ந்த அமைப்பு மீதான தடை இன்றும் - சிறிலங்கா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.

அத்துடன் வெளிவரவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்படவுள்ள சில குற்றச் சாட்டுக்களிற்கு, பதில் கூற வேண்டிய நிலைக்கு நீங்கள் யாவரும் நிர்பந்திக்கப்படுவீர்கள்.

இதுபோன்ற பல புயல்களிற்குள், தற்போதைய நிலையில் நீங்கள் சிக்குள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

அண்ணன் சிவாஜிலிங்கத்தின் துணிவில், முயற்சியில் சில விமர்சனங்களிருந்தாலும்,  இவரது அரசியல் நகர்வை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இது போல் நீங்கள் இத் தேர்தலிருந்து வாபஸ் பெற்றதும்,

உலகத் தமிழர்களே உங்களை பாராட்டுவார்கள். நிட்சயம் உங்கள் விடயங்களில் யாவரும் அக்கறைசெலுத்துவார்கள்.

த. தே. கூ.வை  எதிர்த்து வெல்ல முடியாது என்பதற்கு இரு நல்ல உதாரணங்களை இங்கு கொடுக்க விரும்புகிறேன்

ஒன்று தனக்கு 80, 000 வாக்குகள் விழுந்தன என ஆணவமாக கொக்கரித்தவர்,  சுதந்திர வேட்பளாராக நின்று த. தே. கூட்டமைப்பை எதிர்த்து, தனது செல்வாக்கை நிரூபிக்க தவறியதை நீங்கள் கண் முன்னே பார்த்திருப்பீர்கள்.

அந்த 80, 000 வாக்குகளும் த.தே.கூ.விற்கு உரிய வாக்குகள் என்பது தற்பொழுது நிரூபனமாகியுள்ளது.

அடுத்து,  2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மாபெரும் வெற்றி அடைந்த இருவரும், த. தே. கூ.விலிருந்து பிரிந்து 2010ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, கட்டுக் காசையும் இழந்த செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்குள் ஓர் சுவாரஷ்சியமான செய்தியை உங்களிற்கு கூற வேண்டும்.

கடந்த வருடம், த.தே.கூ.விற்கு உரிய 80, 000 வாக்குகளில் வெற்றி பெற்றவரை, ஜெனிபாவில் ஐ. நா. கட்டிடத்தில் கண்டு உரையாடிய வேளையில்,  த.தே.கூ.வுடன் மோதி கஷ்டப்படாதீர்களென புத்திமதி கூறி, உதாரணத்திற் த.தே.கூவிலிருந்து பிரிந்து சென்று கட்டுக்க காசை இழந்தவர்களை பாருங்களென கூறினேன்.

அவர் உடனடியாக, அவர்கள் இருவரும் எப்படியாக அப்படியொரு வெற்றியை பெற்றார்களென்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தேர்தல் உத்தியோகத்தர்களாக வேலை செய்த எமக்கு,  இவர்களிற்கு எத்தனை கள்ள வாக்குகள் போடப்பட்டது என்பது பற்றி நன்றாக தெரியுமென பச்சையாக கூறிவிட்டார்.

இவ்விடயத்தில் நான் அன்று அதிர்ச்சியில் திகைத்து நின்ற விடயத்தை, இன்று வெளிப்படையாக தருகிறேன்.

ஆகையால் தவறுகள் செய்வது மனித இயல்பு. சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்ளாது திருத்தி கொள்வது புத்தி படைத்தவர்களின் கடமை. த. தே. கூ.வினர் செய்யும் தவறை நீங்கள் தேர்தலில் போட்டி போடுவதன் மூலம் ஒரு பொழுதும் திருத்தி கொள்ள முடியாது.

உங்கள் தரகர் உங்களை பாதாள குழியில் தள்ளுவது மட்டுமல்லாது, உங்கள் விடுதலை அமைப்பின் முப்பது வருடகால போராட்டத்தின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் போகிறார் என்பது தான் உண்மையான யாதார்தம்.

ஆகையால், உடனடியாக இத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் என்ற பெயருடன், சுயேட்சையாக போட்டியிடுவதிலிருந்து நீங்கள் யாவரும் தயவு செய்து வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்படித் தான் வாழ்வேன் என்பவருக்கு ஒரு வாழ்க்கை, எப்படியும் வாழலாம் என்பவரும் பல வாழ்க்கை உண்டு. ஆனால் மானம் கெட்ட வாழ்க்கை தேவையா? எனது நண்பர் தாராகி சிவராமிற்கு என்ன செய்தார்கள் என்பதை நான் நன்கு அறிந்தும் - அப்பாவியான உங்களிற்கு சில யாதார்தமான உண்மைகளை உணர்த்துவதற்காக இம்மடலை எழுதுகிறேன்.

இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை சந்திக்க தயாராகவுள்ளேன்.

சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டேன், இனி உங்கள் விருப்பம். 

ச. வி. கிருபாகரன்,
tchrfrance@hotmail.com

எனது பதில் கிருபன் 'என' கேட்ட கேள்விக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். கேள்விகள் பலவாறாக அமைந்தாலும் உண்மைக்கு பதில் ஒன்றுதானே கிருபன்?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் தனக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்றுப் பிழைக்கப் பலர் இருப்பார்கள் என்று உணர்ந்திருந்தார் என்பதை அண்மையில் யாழ் களத்தில் வாசித்ததுதான் நினைவுக்கு வருகின்றது.

ஜனநாயகப் போராளிகள் அமைப்பில் இணைந்த முன்னாள் போராளிகள் நேர்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை வைத்து அரசியல் நடத்துபவர் நம்பகத்தன்மையானவரா? அவர் மகிந்தவுக்கு விலைபோனவர் என்றும், தமிழர்களது வாக்குகளைப் பிரிக்க மகிந்த பெருமளவு பணத்தை அள்ளிவழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில் உள்ளது? இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்லித் தப்பிக்கலாம் என்பது தெரியாமல் இல்லை.

மேலும் இந்த ஜனநாயகப் போராளிகள் ஒரு ஆசனம் கூடக் கிடைக்காமல் தோற்றால் அது புலிகள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு துளியும் இல்லை என்ற பிரச்சாரத்திற்கு என்ன பதில் உள்ளது?

எனது தனிப்பட்ட கருத்தின்படி எவரும் தமது கொள்கைகளை முன்வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் மக்களை ஏமாற்றும் வகையில் சொல்லில் ஒன்று செயலில் ஒன்றான இரட்டைவேடதாரிகளை அம்பலப்படுத்தவேண்டும். இது கூட்டமைப்பு, ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அனைவருக்கும் பொருந்தும்.

1977 இல் எதிர் கட்சியாக அமர்ந்து வட்ட மேசை, சதுரமேசை, இசை நாற்காலி(musical chair) விளையாடி அதிலும் தோற்று சென்னையில் அஞ்ஞாத வாசம் பூண்டு, சென்னைக்குப் பறந்ததில் இயற்கை கொல்லாமல் விட்டதில் மிச்ச சொச்சமான கூத்தணியும் காலப்போக்கில் அதனோடு இணைந்த வரலாற்று எச்சங்களும் தமிழனை பிரதி நிதிப்படுத்தவே தகுதியில்லாத கோமாளிகள் . 

2016 இல் தமிழருக்கு தீர்வு என்று சம்பந்தன் வாக்கு கேட்குமளவுக்கு, தமிழனின் அரசியல் பகுத்தறிவு மழுங்கி விட்டதா?

வாக்களித்து வாக்களித்து ஏமாந்தது போதும், இம்முறை வாக்கே அளிக்காது விட்டால் என்ன?, அல்லது யார்  எவரேன்றே தெரியாத, எங்களை யார் எவரேன்றே தெரியாமல் எங்களுக்காக போராடி மறைந்தோரில் எஞ்சியோருக்கு வாக்களித்தால் என்னவாகும்?  

உலகம் அழிந்தா விடும்? சிந்திப்போம்!  

கிருபன்,

வெல்வது தோற்பதை அலசி இருந்தால் உலகில் எந்த ஒரு போராளியும் இருந்திருக்க மாட்டான், மாற்றமே நடந்திருக்காது. சொந்த சுயநலன்களுக்காக ஒரு இனத்தின் தலை விதியையே பணயம் வைக்கும் வாதங்கள் இன்று பலருக்கு சரியாகப் படலாம், வரலாறு அதற்கு வைத்த ஒரே பெயர் துரோகம்.

2009 இல் கருணா சொன்னதை அவனே மறுதலித்து இன்று வெட்கப்படுகிறான், அப்போது 2009 இல் அதன் பெயர் துரோகம், இன்று அதன் பெயர் வரலாறு! 

இதில் நீங்கள் யார் என்று .............................................................................................. 

  • கருத்துக்கள உறவுகள்

Former LTTE cadres may get five seats - Intelligence reports reveal

BY Mirudhula Thambiah

Recent intelligence reports reveal that Crusaders for Democracy (CFD) of former LTTE cadres will have favourable results in the upcoming General Elections scheduled for 17 August. Accordingly reports state that there are chances for this party that is contesting under Independent Group 4 in the Jaffna District will secure at least five seats.

CFD functioning under the co-ordination of Nadesapillai Vithiyatharan, former journalist who was alleged to have LTTE links is carrying out silent campaigns in the Jaffna District according to its candidates.
Despite various criticisms CFD candidates emphasize that they have extra qualifications to enter the democratic struggle. They were rejected by the Tamil National Alliance (TNA) as untouchables. TNA during nominations pointed out that if the CFD is given a chance to contest under their list, the international community will reject their claims and treat them as terrorists.

Confident
However, now the CFD candidates are confident that they have explained their position and plans to the people in Jaffna to win over their minds to secure victory in the General Elections.
Ganeshalingam Chandralingam (38), a former LTTE militant who is one of the CFD candidates, told Ceylon Today that as soon as he completed rehabilitation he was involved in agriculture, yet he was unhappy to see his people struggling due to the repercussions of the war even after six years.
"I decided to step into the democratic struggle to satisfy my people. They are still battling every minute to uplift their living standards. They still have problems increasing day by day," he said.

Struggle
Chandralingam further said, in 2009 people struggled when the war was at its peak, their plights were not addressed properly by the 22 TNA parliamentarians. "We expected them to resign from their posts, but they did nothing. Instead they disappointed the people. During the 2010 parliamentary elections we were in prison undergoing rehabilitation. What did they do? Nothing!" he said.
He said despite all these disappointments former LTTE members approached the TNA for nominations to at least fulfil the demands of the people by working under a united framework, but they rejected our request on false allegations.
There had been always allegations on politicians over their educational qualifications. Chandralingam stressed that most of the CFD candidates have extra qualifications. They have lost their limbs or, are carrying shrapnel pieces in their bodies as they were wounded in the battle. He said the former militants sacrificed themselves not for personal gains.

Disabled
"Most of the candidates representing CFD are disabled or carrying shrapnel pieces in their bodies. All 10 of us have at least completed our O/Ls; some of us have even passed A/Ls. We were particular in selecting candidates. But injuries in our bodies are extra qualifications. We did our role for our people," he said.
Sivanathan Naveendra (32) said he has faith in the people that the mandate will be given to his party on 17 August at the General Elections.
He further stressed that when the TNA denied nominations he personally felt disappointed as he had plans to serve the people by jointly working with the TNA, but that was just another dream. In reality TNA was different. "We thought the TNA was our mouthpiece, but they made use of our sacrifices for their own propaganda," he said.

Terrorists
While another former LTTE militant Rasiah Kirubaharan(31), who lost one of his legs in the battle field said they cannot be rejected by anyone calling them terrorists. "We have undergone rehabilitation respecting the laws of the country. I completed my rehabilitation programme in 2010. People like me who are partially disabled were released early. So now, none can label us as terrorists," he said. "Do you know that many of our people are psychologically affected after the shocking incidents they had to face during the war. I'm a psychologist. If we get a chance to enter Parliament, a plan will be definitely adopted to address psychological problems of the war-affected people," he said.
Kumaravelu Agilan, another differently able candidate from the CFD said, 60 per cent of the youth in the North are low wage earners as they lack employment opportunities. "I'm disabled, I have completed A/L but I don't have a job. Many youth in the North are facing the same problem.
Many politicians collected my curriculum vitae during every election in the North from the time I was released from rehabilitation in 2011 promising employment opportunities but in reality they didn't make any attempt to help us," he said.

Employment opportunities
Agilan further said he will ensure employment opportunities for the youth in the Northern Province if the CFD enter Parliament.
CFD Coordinator Nadesapillai Vithiyatharan said his party contesting under Independent Group 4 will propose a 10 year plan as the election manifesto as the party expects to enter Parliament for another five years.
CFD candidates further rejected the allegations about the links with former President Mahinda Rajapaksa and his backing their political claim. " Why should we obtain assistance from the former President? We have no necessity to have links with a southern leader. This is a false propaganda to tarnish our reputation àmong the people to undermine our party. People know our sacrifices," they said.

Opportunities
Meanwhile, TNA coalition leaders who were once militants in the Northern and Eastern Provinces emphasized that time period to decide on nominations for former LTTE militants were few thus they were not in a position to accept their claim.
They also highlighted that the militants should be given opportunities to carry out their democratic struggle on the Sri Lankan political platform.

People's Liberation Organization of Tamil Eelam ( PLOTE) Leader Dharmalingam Sidtharthan said, "I welcome their decision to step into democratic politics. At the present context there is no room for an armed struggle even in the near future. They only came to see us on the beginning of the nomination day on 6 July. I told them they were very late.
I also told them that their last minute decision will make rifts within TNA. We respect their commitment to the Tamil cause as they sacrificed their lives. But I would like to point out that people behind them have ulterior motives."
Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) Leader Suresh Premachandran said, "All militants have the right to participate in the democratic process. They should be welcomed by the public and those in politics. Around 10,000 fomer LTTE militants have undergone rehabilitation and now they have the right to adjust to the democratic process. I'm also a member of a politico-militant organization,"

Nominations
Tamil Eelam Liberation Organization (TELO) Leader Selvam Adaikkalanathan said, "former LTTE cadres did not receive nominations since we felt they need to work more among the people to contest in an election. Also they approached us for nominations at the last moment. If we give them nominations and if they lose at the elections it would be a huge loss for their previous struggle."
However, the former LTTE militants told Ceylon Today that the Tamil leaderships in the North have failed to address the needs of the people and thus they have decided to enter politics to address the Tamil cause.

http://www.ceylontoday.lk/90-99269-news-detail-former-ltte-cadres-may-get-five-seats-intelligence-reports-reveal.html

https://www.youtube.com/watch?v=7Eg6qWy75n4&feature=youtu.be

Check Sumanthiran's comments

Introduction, ஜனநாயகப் போராளிகள் அமைப்பு,

https://www.youtube.com/watch?v=tLXBtrffsX0

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா ஓடினர்!
-------------------------------------------------------------------------------------

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. எமது கூட்டமைப்பினர் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது இந்தியா அவர்களை கூப்பிட்டிருந்தது. கூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் கதை முடிகின்றது. இந்தியாவுடன் போவோம் எனக் கருதியிருந்தார்கள். இதன் போது எனது தொலைபேசிக்கும் அழைப்பு வந்தது. நான் கதைத்தேன்.

அப்போது தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பினர் எங்கே நிற்கிறார்கள்? அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். நான் அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்கள் என தெரிவித்திருந்தேன். உடனடியாக புலித்தேவன் என்னிடம் சொன்னார் அவர்கள் இந்தியா செல்வதை நிறுத்தும் படி ஏனெனில் இவர்களை இந்தியாவில் வாயை மூடிக்கொண்டு இருக்க வைத்துவிட்டு யுத்தத்தை முடிப்பதற்கு இந்த அரசாங்கமும் இந்தியாவும் பார்கிறது என்றார். நான் இதனைக் கூறியபோது கூட்டமைப்பினர் அதனை கணக்கு எடுக்கவில்லை. அன்றிரவே இந்தியா சென்று விட்டனர். அவர்கள் யத்தம் முடிந்த பின்னே வந்து இறங்கினார்களெனவும் அவர் தெரிவித்தார்.

-pathivu.com

http://www.pathivu.com/news/41931/85//d,article_full.aspx

மீண்டும் சுமந்திரன் பிரசார கூட்டம் பிசுபிசுத்தது!

sumanthiran.pngவடமராட்சியினை தொடர்ந்து  தென்மராட்சி உசன்; சிறீமுருகன் விளையாட்டுக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமந்திரனின் பெரும் எடுப்பிலான பிரச்சாரக்கூட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது.மாலை 5.30மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த கூட்டத்திற்கு இரவு 8.30 மணிவரை மக்கள் எவரும் வரவில்லை.

வடமாகாணசபை உறுப்பிணர் சயந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சீற்றத்துடன் இசைக்கலைஞர்களை திட்டித் தீர்த்துள்ளார். பிற்பகல் 5.20 மணிக்கு கூட்டத்திடலுக்கு வந்த சுமந்திரன் காத்திருக்க 7 மணியளவில் அங்கு வந்த மாவையும்  வெறிச்சோடிய மைதானத்தை பார்த்ததும் நின்ற இடம் தெரியாமல் ஓடிவிட்டார்.இருந்தும் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் 8.50 மணியளவில் ஒரு 50 பேரை திரட்டி விட்டு பெருமெடுப்பிலான கூட்டம் சிறு குழு கூட்டமாக முடிந்தது.எனினும் சக வேட்பாளர்கள் எவரும் இன்றியே கூட்டம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா ஓடினர்!
-------------------------------------------------------------------------------------

http://www.pathivu.com/news/41931/85//d,article_full.aspx

மீண்டும் சுமந்திரன் பிரசார கூட்டம் பிசுபிசுத்தது!

sumanthiran.pngவடமராட்சியினை தொடர்ந்து  தென்மராட்சி உசன்; சிறீமுருகன் விளையாட்டுக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமந்திரனின் பெரும் எடுப்பிலான பிரச்சாரக்கூட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது.மாலை 5.30மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த கூட்டத்திற்கு இரவு 8.30 மணிவரை மக்கள் எவரும் வரவில்லை.

வடமாகாணசபை உறுப்பிணர் சயந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சீற்றத்துடன் இசைக்கலைஞர்களை திட்டித் தீர்த்துள்ளார். பிற்பகல் 5.20 மணிக்கு கூட்டத்திடலுக்கு வந்த சுமந்திரன் காத்திருக்க 7 மணியளவில் அங்கு வந்த மாவையும்  வெறிச்சோடிய மைதானத்தை பார்த்ததும் நின்ற இடம் தெரியாமல் ஓடிவிட்டார்.இருந்தும் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் 8.50 மணியளவில் ஒரு 50 பேரை திரட்டி விட்டு பெருமெடுப்பிலான கூட்டம் சிறு குழு கூட்டமாக முடிந்தது.எனினும் சக வேட்பாளர்கள் எவரும் இன்றியே கூட்டம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூடம் போனசனம்/ படிப்பறிவுள்ள சனம் எல்லாரும் புலன்பெயர்ந்திட்டினம். எல்லோ....:grin:
அங்கையிருக்கிற சனம் இன்னும் திருந்தவேயில்லை...:)

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இப்ப அங்கை நிண்டு உழைக்காமல் எப்ப எப்பிடி நிண்டு தமிழ் மக்களுக்காக உழைக்கப்போயினமாம்? :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.