Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது தமிழர்களின் கடமை: சம்பந்தன்

Featured Replies

article_1437994515-gdh.jpg

யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

அடுத்து அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் ஒரு ஸ்திரமான நாடாளுமன்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் போன்றவர்களின் பங்களிப்பு மிக அதிகமாக தேவைப்படும்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே தற்பொழுதைய காலத்தில் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான அணுகுமுறையாகும். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இந்த அணுகுமுறைக்கு மகத்தான வரவேற்பு இருக்கின்றது. இதற்கமைய, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக அணுகுவதில் தம்பி சுமந்திரன் கடந்த காலங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எங்களுடைய பிரச்சனைகளை கூறி, அவற்றுக்கான தீர்வுகளை எடுத்துரைக்கின்ற சந்தர்ப்பத்தில், சட்ட நுணுக்கமும் அறிவுப்பின்புலமும் உள்ள சுமந்திரன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, 

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த வாக்களிப்பின் பயனாக நாம் சுமந்திரனை கடந்த நாடாளுமன்றத்துக்கு அனுப்பினோம். வலிகாமத்தின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவது முதல், சம்பூரின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக வென்றெடுப்பது வரை சுமந்திரனின் பங்களிப்பு மிக மகத்தானது. அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச அரங்கிலே அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயமாக மாற்றியமைத்த பெருமையும் சுமந்திரனையே சாரும். தமிழ் மக்களின் உணர்வுகள், பிரச்சினைகள் போன்றவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளை பெறுவதை நோக்கி செயலாற்றுகின்ற ஒருவரே சுமந்திரன் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/150972#sthash.213YHOzk.dpu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்துக்குக் கடன் செய்வது தான் ... சம்பந்தரின் கடமை போலும்!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே....
சம்பந்தன், சுமந்திரனுக்கும்.....
சுமந்திரன், சம்பந்தனுக்கும்....
மாறி, மாறி...... முதுகு சொறிஞ்சு கொண்டிருக்க வேண்டியது தான்.....
நீங்க இரண்டு பேரும்.... தேர்தலுக்கு பின், பின்னங்கால் பிடரியில் பட.... ஓட்டம் எடுப்பதை... பார்க்கத்தானே போகின்றோம்.File:Smiley running.gif

இந்த இரண்டு கோஷ்டியும் மாறி மாறி சொரிய தான் சரி .....காணி விடுவிப்பு சும் செய்த சாதனையோ ....போங்கடா நீங்களும் உங்கள் பொய் பிரட்டும் .....தேர்தல் நெருங்க மட்டும் தாசிகள் மாதிரி உங்கள் நடவடிக்கை இருக்கின்றது ..... 

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமத்தின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவது முதல், சம்பூரின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக வென்றெடுப்பது வரை சுமந்திரனின் பங்களிப்பு மிக மகத்தானது. அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச அரங்கிலே அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயமாக மாற்றியமைத்த பெருமையும் சுமந்திரனையே சாரும். தமிழ் மக்களின் உணர்வுகள், பிரச்சினைகள் போன்றவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளை பெறுவதை நோக்கி செயலாற்றுகின்ற ஒருவரே சுமந்திரன் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

சம்பந்தனுக்கும் ,மாவைக்கு வாக்கு போடாமல் சுமத்திரனுக்கு வோட்டு போட்டு அவரை மட்டும்  பாராளுமன்றம் அனுப்புவோம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுமந்திரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது தமிழர்களின் கடமை: சம்பந்தன்

ஏனப்பு இரண்டுபேரும் சேர்ந்து நித்திரை தூங்கப்போறியளே..:grin:

சுமத்திரனை MP  ஆக்கிரதும் வேலீல போற ஓனானை வேட்டிகை விடுறதும் ஒண்டுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, 

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த வாக்களிப்பின் பயனாக நாம் சுமந்திரனை கடந்த நாடாளுமன்றத்துக்கு அனுப்பினோம். வலிகாமத்தின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவது முதல், சம்பூரின் காணிப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக வென்றெடுப்பது வரை சுமந்திரனின் பங்களிப்பு மிக மகத்தானது. அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச அரங்கிலே அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயமாக மாற்றியமைத்த பெருமையும் சுமந்திரனையே சாரும். தமிழ் மக்களின் உணர்வுகள், பிரச்சினைகள் போன்றவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகளை பெறுவதை நோக்கி செயலாற்றுகின்ற ஒருவரே சுமந்திரன் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

எல்லாமே சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன்  என்றால்....

மற்றவர்கள்.....?

பாவம் தம்மைத்தாமே

இவர்களை தெரிவு செய்யும் மக்களை இவ்வாறு கேவலப்படுத்தவேண்டாம்.....

அவரை கேட்க்காமல் கொள்ளாமல் தேசியபட்டியலிலை அனுப்பியதாலை தான் கூட்டமைப்புக்கு இவ்வளவு பிரச்னையும் அதுக்க திருப்பியும் அனுப்பச்சொல்லுறார் ஐயா.....

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்பத்தான் முக்கிய கடமை. இதைச் செய்து முடிச்சிட்டா... தமிழ் மக்களுக்கு அடுத்த நிமிசமே விடிவு கிடைச்சிடும். சம் சும் கும்பல் நல்லாவே முதுகு சொறியக் கற்றுக் கொண்டிருக்குதுங்க. இது தான் அதுகள் செய்த 50 ஆண்டுகால அரசியல் என்பது. :grin:

சம்மந்தரின்  அரசியல் முன்னாள்  நாம்  எல்லோரும்  கன்றுக்குட்டிகள் .:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பின்கதவால் வந்தபொழுதே செய்யும் தவறுகளை நியாயப்படுத்துபவரை மக்களால் தெரிவு செய்யப்பட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதற்காக வரை வெல்ல வைக்க இந்தப்பாடுபடுகின்றனர்.

பின்கதவால் வந்தபொழுதே செய்யும் தவறுகளை நியாயப்படுத்துபவரை மக்களால் தெரிவு செய்யப்பட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதற்காக வரை வெல்ல வைக்க இந்தப்பாடுபடுகின்றனர்.

இவரைக் கட்டாயம் அனுப்ப வேண்டும். அப்போது தான் 2016ம் ஆண்டில் தனது சட்டத்துறை நுணுக்கங்களின் மூலமும் அறிவுத் திறனின் மூலமும் சமஸ்டியை வாங்கித் தனது கறுப்புக் கோட்டிற்குள் வைத்துக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் தருவார்.

கற்றோர் என்றால் புலிகளுக்குத்தான் அலர்ஜி என்று நினைச்சன்  வாலுகளும் அதே அதே .

சுமந்திரன் ,விக்கி போன்ற  நாலு விஷயம் தெரிந்தவர்களை அரசியலுக்கு  கொண்டுவர சம்பந்தன் நினைத்தால் இந்த கோஸ்டி விடமாட்டுது போல கிடக்கு .

கல்வி மட்டும் ஒரு சிறந்த தலைவனை உருவாக்க முடியாது.

தமிழ்நாடு இதுவரை சந்தித்த மிகச் சிறந்த முதலமைச்சர் யாரென்றால் அது காமராஜர் தான். இலங்கையில் மிகச் சிறந்த நிர்வாகத்துடன் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் சிறப்புடன் முன்னெடுத்த பிரேமதாச கற்றவர் அல்ல. 

ஆனாலும் கற்றவர் என்பதற்காகவே வாக்களிக்க வேண்டும் என கூத்தணியின் சார்பில் கூவுவது தெரிகிறது. அதனால் தான் கல்வி மட்டும் ஒரு இனத்தின் விடிவினைப் பெற்றுத் தரப் போதுமானதல்ல 

கல்வியுடன் மக்களை ஏமாற்றும் தந்திரம், தேர்தலுக்கு முன்னர் ஒன்றையும் தேர்தலின் போது இன்னொன்றையும் கூறும் குள்ளநரிததனம் எல்லாம் சேர்ந்து விடடால் அது மிக ஆபத்தானது.

கடைசியாக ஒற்றையாட்சியை விட ஒருஅங்குலமும் நகர மாட்டோம் என்னும் சிங்கள அரசும் சமஸ்டியே தீர்வு தமிழன் மண்டியிட்டு அரசியல் செய்ய முடியாது என  மயிர்கூச்செறியப் பேசும் கூத்தமைப்பும் சர்வதேச தலையீடின்றிப் பேசி 2016 இல்  எப்படித் தீர்வோடு வருவார்கள் என படித்தவர்கள் யாராவது படிக்காத என் போன்றவர்களுக்கு சொல்லித் தந்தால் நல்லது. 

இந்தப் படித்த தலைவர் 2 முறை சிரச ரிவியின் சடன நிகழ்ச்சிக்கு வந்த போது எங்கள் பிரச்சினையை நாங்கள் எங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம் சர்வதேச தலையீடு அவசியமில்லை. அதனை வலியுத்துவது கடும்போக்குடைய மிகச் சிறிய எண்ணிக்கையிலான தமிழர்களே என விளக்கமாகச் சொன்னார்.

இந்த நீகழ்ச்சியின் ஒளிப்திவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் இணைத்து விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு படிதவர்கள் என்றாலே எங்களுக்கு அலர்ஜி !

நாலு விஷயம் தெரிந்தவர்களை என்று எழுதியதை கவனிக்கவில்லை போலிருக்கு .

அதைவிட உங்கள் உதாரணத்தையும் கருத்த்துகளையும் வாசிக்க சிரிப்பை அடக்கமுடியவில்லை .அப்ப பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் காமராஜர்,பிரேமதாச மாதிரி வளருங்கோ .

பிள்ளைகளின் படிப்பை  பற்றி திரி திறந்து பக்கம் பக்கமாக புழுகுவது பிறகு படிப்பு முக்கியமில்லை என்ற கதை வேறு .எம்மவர் எல்லோருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று தெரியும் அதை பற்றி பெருமைபடுவதிலும் தவறில்லை ஆனால் சந்தர்ப்பதிற்கு ஏற்ப கதையை பிரட்ட கூடாது .

மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளினது அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் அதுதான் .அதை பார்த்து சிரிப்பவர்களும் நாம்தாம் .

படிப்புத் தேவையில்லை என்று நான் எங்கும் குறிப்பிட வில்லையே.

படித்தவர்களில் தம்மினத்தைக் காட்டிக் கொடுத்து சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு அடுத்தவர் பிள்ளைகளை உசுப்பேற்றீப் போராடச் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.

படிக்காமல் மக்களுக்காக அரசிய்ல செய்து நாட்டின் தலைவர்களானவர்களும் இருக்கிறார்கள். 

ஆக படிப்பு மட்டும் ஒரு சிறந்த அரசியல் தலைவனை உருவாக்கி விட முடியாது என்பதை நான் மட்டுமல்ல சிறீலங்காவில் தற்போது அரசியல்வாதிகளுக்கான ஒழுக்கக் கோவையை உருவாக்கும் அமைப்பும் ஒத்துக் கொண்டுள்ளது.

காரணம் அரசியல்வாதிகளுக்காக குறைந்த பட்ச கல்வித்தகுதியாக உயர்தரப் பரீட்சையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்திற்கு அனேகமாக அந்தக் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட விடயம் இதுதான் தலைமைத்துவப் பண்பு என்பது கல்வியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது அல்ல. இதற்கு பல உதாரணங்களையும் அவர்கள் சுட்டியுள்ளனர். அதில் ஒருவர் ரணசிங்க பீரேமதாச

  • தொடங்கியவர்

article_1438139527-cartoon2.jpg

நாலு விஷயம் தெரிந்தவர்களை என்று எழுதியதை கவனிக்கவில்லை போலிருக்கு .

அதைவிட உங்கள் உதாரணத்தையும் கருத்த்துகளையும் வாசிக்க சிரிப்பை அடக்கமுடியவில்லை .அப்ப பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் காமராஜர்,பிரேமதாச மாதிரி வளருங்கோ .

பிள்ளைகளின் படிப்பை  பற்றி திரி திறந்து பக்கம் பக்கமாக புழுகுவது பிறகு படிப்பு முக்கியமில்லை என்ற கதை வேறு .எம்மவர் எல்லோருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று தெரியும் அதை பற்றி பெருமைபடுவதிலும் தவறில்லை ஆனால் சந்தர்ப்பதிற்கு ஏற்ப கதையை பிரட்ட கூடாது .

மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளினது அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் அதுதான் .அதை பார்த்து சிரிப்பவர்களும் நாம்தாம் .

மணிவாசன் சொல்கின்ற கருத்தை கூட விளங்காத இவர் தான் படிப்பு பற்றி கதைக்கிறார் ...சம்பந்தன் சுமந்திரன் மாதிரி படித்த எருமைகளுக்கு போய் முதுகு சொரிய தான் லயக்கு ....

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக ...இதன் அர்த்தம் புரியுமோ அர்ஜுன் ?   சம் சும் வெறும் படிப்பு மட்டும் தான் .... 

article_1438139527-cartoon2.jpg

நன்றி ஆதவன் ஒரு சிங்கள கார்ட்டூன் வரைபவருக்கு விளங்கும் யாதார்த்தம் இங்கு குத்தி முறியும் சிலருக்கு விளங்கவில்லை .

மீண்டும் சம்சும் பதவிக்கு வந்தால் அங்கு மிச்சமுள்ள   தமிழனும் காணாமல் போவார்கள் . சம் சும் சிங்கள கொடியை சாமரமாய் பாவித்து சிங்களவருக்கு வீசிக்கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டிய உடனடித் தேவை இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கௌரவமான ஆயுத மௌனிப்புக்குப் பின்னர் தமிழர் தரப்பை அரசியலில் பலவீனமாக்கிவிட்டால் இருக்கின்ற எச்சசொச்ச உரிமைகளை அல்லது ஓரணியில் நிண்டு பேரம்பேசும் வலமையை அடக்கிவிடலாம் எனச் சரியாகக் கணித்துச் செயற்படுகின்றது. அதன் பின்னணியில் சிங்கள காட்டூனிஸ்ட் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். இதனையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் தனது முயற்சியில் செவ்வனே செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்த யதார்த்தம் பலருக்கு விளங்குதாக்கும்!  

அது சரி இவ்வளவு பேரம் பேசும் சக்தியை வைத்து இவ்வளவு காலமும் என்னத்தை செய்தீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

2009 இக்கு முன்னர் புலிகளின் ஆயுதம் எந்தவொரு சிறந்த வாய்ப்பினையும் இல்லாமல் செய்து இருந்தது 2009 -  2015 வரை புலி ஆதரவுடன் வந்து புலியையே இல்லாமல் செய்த) மகிந்தவின் அராஜக ஆட்சி இருந்தது. மகிந்த அகற்றப்பட்டவுடன் புலிகள் இல்லாத முதலாவது அரசியல் மேடை இது இப்போது தான் எமது பேரம் பேசும் ஆற்றலுக்கு களம் கிடைத்திருக்கிறது. 

Edited by வாலி

நன்றி பதிலுக்கு வாலி ஒரு சிறு சம்பவம் 

முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் தொடர்கிறது: பா.அரியநேத்திரன்/// இது செய்தி 

மக்களின் கேள்வி "உங்களுடைய கூட்டமைப்பு தானே இனிமேல் அப்பிடி எல்லாம் நடக்காது என்று சொல்லி மைத்திரியை ஆதரித்து மக்களிடம் வாக்கு கேட்டீங்க... இப்ப இப்பிடி புலம்பிட்டு இருந்தா எப்பிடி?"

இது போல்தான் உங்களுடைய கணிப்பு 

தமிழனுக்கு என்ன செய்தீர்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.