Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

Featured Replies

200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

news

யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார்.

யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனை வெகு சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான ஒரு வருடமும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்து, நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி அன்று பாரிய நடைபயணம் ஒன்றினையும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த பண்புகளையும், சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன், அந்த நடை பயணத்தினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நடை பயணத்தின் மூலம் மத்திய கல்லூரியின் பெருமையும், பண்புகளையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=114994172230452909

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரிக்கு எனது வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் பாரம்பரியக் கல்விச் சாலைகளில் மிகவும் முக்கியமானதும் பல துறைகளில் சாதனை புரிந்ததும்  'யாழ் மத்திய கல்லூரி' !

கிரிக்கட் மட்சுகளின் போது மட்டும் எமது பரம்பரை எதிரியாக இந்தக் கல்லூரி மாற்றம் கண்டு விடும்!

இந்து பருப்பு.. என்ற தூற்றல்... சென்றல் செருப்பு.. என்பதால் நிவர்த்தி செய்யப்பட்டு விடும்! அவ்வளவு தான்!

மற்றும் படிக்கு.. வேம்படிக்கு அருகாமையில் இது அமைந்திருப்பது..நாம் அனைவருமே ஒரு பொறாமையுடன் பார்க்கும் பெருமையும் இதற்கு உண்டு!

பல்லாண்டு காலம் வாழ்ந்து.. வளரட்டும்...யாழ். மத்திய கல்லூரி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மற்றும் படிக்கு.. வேம்படிக்கு அருகாமையில் இது அமைந்திருப்பது..நாம் அனைவருமே ஒரு பொறாமையுடன் பார்க்கும் பெருமையும் இதற்கு உண்டு!

உந்த விசயத்திலை உங்கை கன பேருக்கு பயங்கர வயித்தெரிச்சல்..:grin: :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர் அவர்கள் கல்வி கற்ற பாடசாலை என்பதால், இந்தக் கல்லுரி மேலும் சிறப்பு பெறுகின்றது.
200 ஆண்டுகள் நீண்ட வருடம். மேலும் பல நூற்றாண்டுகள், மத்திய கல்லுரி தனது கல்விப் பணியை தொடர வாழ்த்துக்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆரம்பக் கல்வியில் குறித்த காலத்தை யாழ் மத்தியில் தான் கற்றேன். அதன் பின் தான் இந்துக் கல்லூரிக்கு சோதனை பாஸ் பண்ணிப் போனது.  நான் ஆரம்பக் கல்வியை மத்தியில் கற்ற போது மத்திய கல்லூரி 175 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருந்தது. அதுக்குள்ள 200 ஆயிட்டுது.  அந்த வகையில் இந்துவின் மைந்தன் மட்டுமன்றி..மத்தியின் மைந்தனும் கூட. 

யாழ் மத்திய கல்லூரி இன்று தேசிய பாடசாலைகளில் ஒன்று, யாழ் இந்து.. வேம்படி.. ஹாட்லி என்று வெகு சில பாடசாலைகளே தேசிய பாடசாலை அந்தஸ்தை வடக்கில் பெற்றுள்ளன. 

யாழ் மத்திய கல்லூரி இணையத்தளம் புதிய பொலிவுடன்:  http://www.jcc.lk/

200 ஆண்டுகள் கடந்தும் வாழிய யாழ் மத்திய கல்லூரி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
மற்றும் படிக்கு.. வேம்படிக்கு அருகாமையில் இது அமைந்திருப்பது..நாம் அனைவருமே ஒரு பொறாமையுடன் பார்க்கும் பெருமையும் இதற்கு உண்டு!

உந்த விசயத்திலை உங்கை கன பேருக்கு பயங்கர வயித்தெரிச்சல்..:grin: :cool:

அரிவரி தொடங்கி உயர்தரம் வரை மாணவனாகவும் பிறகு ஒரு வருடம் தொண்டர் ஆசிரியராகவும் இருந்தேன்! நம்புங்கள்! வயித்தெரிச்சல் பொறாமைப் படும் அளவுக்கு அங்கே ஒன்றும் இல்லை!  :grin:

யாழ் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்!!

200 ஆண்டில் கால் பதிக்கும் மத்திய கல்லூரிக்கு எனது வாழ்த்துக்கள் .

அண்ணருடன் இழுபட்ட அந்த மத்திய கல்லூரியை மறக்கமுடியுமா ? அந்த மைதானத்தில் மூன்றாம் வகுப்பில் கிரிக்கெட்  பார்க்க தொடங்கி பின்னர் நாட்டை விட்டுவெளியேறும் வரை அதைதொடர்ந்தேன் .

வேம்படி ,யாழ் நூலகம் ,சுப்பிரமணியம் பூங்கா ,மணிக்கூட்டு கோபுரம் ,ரிம்மர் ஹால் ,புல்லுகுளம் ,Open air theater என்று அந்த சூழலே ஒரு அழகுதான் . 

இன்னும் கொஞ்சத்தை மறந்து விட்டீர்கள் பண்ணை கடற்கரை, ரீகல்,றியோ தியேட்டர்:grin: அதை விட மெயின் ரோட்டில் கிரிக்கெட் பட் கடை :)

இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு நவீன் .அது இப்ப வேண்டாம் .

  • தொடங்கியவர்

இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு நவீன் .அது இப்ப வேண்டாம் .

போனா போகுது எடுத்து விடுங்கோ:grin: இனி ஒழித்து மறைத்து என்ன செய்ய போறியல்<_<

ம்ம் ..... வேம்படி பெட்டைகளை ஆரியக்குளத்தடி வரை நாய்க்குட்டி கலைச்ச மாதிரிக் கலைச்சது ...... இப்படி எத்தனை....

வேம்படிப் பெட்டைகள் ஆட்டகாசம் சுண்டுக்குளி பெட்டைகள் தான் ஓக்கே பெடியளும் சென் ஜோன்ஸ்தான் :grin::grin:

யாழ் மத்திய கல்லூரிக்கு எனது வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலுள்ள பலர் மத்திய கல்லூரியின்... பழைய மாணவர்கள் போலுள்ளது. வோல்கானோவும்.... யாழ். மத்திய கல்லூரியில் தான் படித்தவர்.
நானும் நான்காம் வகுப்பு வரை, அங்கு தான் படித்தேன். பின்பு தான்.. யாழ் இந்துவுக்கு மாறினேன்.
என்னுடன்... நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திர குமாரனும், அவரின் தம்பி சந்திரகுமாரும் ஒரே  வகுப்பு மாணவர்கள்.
இதை.... முதல் பதிவில் எழுதியிருந்தால்...., தற்பெருமை பேசுகிறார் என்று, ஆராவது சொல்வார்கள் என்பதால்... அதனைப்  பற்றி எழுதவில்லை.
இப்ப... மற்ற ஆக்களும்... எழுதிய படியால், நான் உண்மையை எழுதாமல் இருப்பது தப்பு என்பதால் தான் ... எழுதினேன். :grin:

இதில என்ன தற்பெருமை இருக்கு .

வெட்க படவேண்டிய விடயம் :grin:

உண்மை தான் த.சி! மத்திய கல்லூரிக்கு எல்லாருடனும் தொடர்பிருக்கு! டக்ளசும் பிரான்சில் இருக்கும் அவரது சகோதரரும் மத்திய கல்லூரி தான். அமரர் ராஜதுரை அதிபராக வந்த போது டக்ளஸின் ஆதிக்கம் மத்திய கல்லூரியில் ஓங்கியிருந்தது, இப்போதும் தொடர்கிறது.

இந்தப் பரந்த பழைய மாணவர் கூட்டம் இருப்பதற்கு காரணம் ,  பணம், அந்தஸ்து, மதம் என்று எதுவும் பாராமல் எல்லோரையும் கதவு திறந்து அரவணைக்கும் மத்திய கல்லூரிக் குணம் தான். ஒரு சில சமயங்களில் யாழ்களத்தில் என்னுடைய மதம் சார்ந்து ஒரு சிலர் கருத்துச் சொன்ன தருணங்களில் நான் மத்திய கல்லூரியைத் தான் நினைத்துக் கொள்வேன். யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலைகளுள், ஒரு மதத்தோடு தன்னை எக்காலத்திலும் அடையாளப் படுத்திக் கொள்ளாத கல்லூரி மத்திய கல்லூரி மட்டும் தான்! 1990 இல் என்று நினைக்கிறேன், சில யாழ் பாடசாலைகளில் சரஸ்வதி சிலை இருப்பது போல மத்திய கல்லூரியிலும் வைக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியர் குழாம் அதிபருக்கு ஆலோசனை சொன்னது. சரஸ்வதி சிலை மட்டும் வைத்தால் மற்றைய மதங்களை புறக்கணிப்பது போலாகி விடும் என்று எல்லா மத அடையாளங்களும் பிரதான வாசலை ஒட்டிய ஒரு மேடையில் நிறுவப் பட்டன. புத்தர் சிலையொன்றும் அதில் அடக்கம். இப்படியான ஒரு முன்மாதிரியான வேலையைச் செய்தது வேறு யாருமல்ல!, நயினைக் கவிஞரும், மாவீரர் வானதியின் தகப்பனாருமான அதிபர் திரு. சண்முகநாதபிள்ளை அவர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன தற்பெருமை இருக்கு .

வெட்க படவேண்டிய விடயம் :grin:

நான்.... மாறின பள்ளிக்கூடத்துக்கு....
எனக்குப் பின்னாலை , அதிபர் சபாலிங்கமும் வந்தது தான்.... வெட்கப் பட வேண்டிய விடயம். Smiley

  • தொடங்கியவர்

பச்சை கைவசம் இல்லை ஜஸ்டின், இனி நாளைதான்:)

உண்மை தான் த.சி! மத்திய கல்லூரிக்கு எல்லாருடனும் தொடர்பிருக்கு! டக்ளசும் பிரான்சில் இருக்கும் அவரது சகோதரரும் மத்திய கல்லூரி தான். அமரர் ராஜதுரை அதிபராக வந்த போது டக்ளஸின் ஆதிக்கம் மத்திய கல்லூரியில் ஓங்கியிருந்தது, இப்போதும் தொடர்கிறது.

இந்தப் பரந்த பழைய மாணவர் கூட்டம் இருப்பதற்கு காரணம் ,  பணம், அந்தஸ்து, மதம் என்று எதுவும் பாராமல் எல்லோரையும் கதவு திறந்து அரவணைக்கும் மத்திய கல்லூரிக் குணம் தான். ஒரு சில சமயங்களில் யாழ்களத்தில் என்னுடைய மதம் சார்ந்து ஒரு சிலர் கருத்துச் சொன்ன தருணங்களில் நான் மத்திய கல்லூரியைத் தான் நினைத்துக் கொள்வேன். யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலைகளுள், ஒரு மதத்தோடு தன்னை எக்காலத்திலும் அடையாளப் படுத்திக் கொள்ளாத கல்லூரி மத்திய கல்லூரி மட்டும் தான்! 1990 இல் என்று நினைக்கிறேன், சில யாழ் பாடசாலைகளில் சரஸ்வதி சிலை இருப்பது போல மத்திய கல்லூரியிலும் வைக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியர் குழாம் அதிபருக்கு ஆலோசனை சொன்னது. சரஸ்வதி சிலை மட்டும் வைத்தால் மற்றைய மதங்களை புறக்கணிப்பது போலாகி விடும் என்று எல்லா மத அடையாளங்களும் பிரதான வாசலை ஒட்டிய ஒரு மேடையில் நிறுவப் பட்டன. புத்தர் சிலையொன்றும் அதில் அடக்கம். இப்படியான ஒரு முன்மாதிரியான வேலையைச் செய்தது வேறு யாருமல்ல!, நயினைக் கவிஞரும், மாவீரர் வானதியின் தகப்பனாருமான அதிபர் திரு. சண்முகநாதபிள்ளை அவர்கள்! 

உண்மைதான் ஜஸ்டின் அங்கு எல்லோரும் படித்தார்கள். ஒரு கிறிஸ்தவ பாடசாலையாக இருந்த போதும் வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனையில் எப்போதும் இந்துமத பிராத்தனைகள்தான் நடந்ததாக நினைவு.

டக்லஸ் மாத்திரம் அல்ல மதிவதனியும் உயர்தரம் அங்குதான் படித்தார். ஒரு 8 அல்லது 9 மாணவிகள் வெள்ளை சேலையில் வருவார்கள். அவர்களில் ஒருவராக அவரும் இருந்தார் என்று சில வருடங்களுக்கு முன் அறிந்தேன். அது E.K சண்முகநாதன் அதிபராக இருந்த காலத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

தானா.சினா! வெட்கப் பட்டது காணுமோய்! Dial it down!

வெஸ்லியன் மெதடிஸ்த மிஷனினால் ஆரம்பிக்கப்பட்ட யவ்னா வெஸ்லியன் இங்க்லிஷ் ஸ்கூல் என்பதே யாழ் மத்திய கல்லூரியின் பழைய பெயர். இந்த பெயர் மாற்றத்தினைச் செய்தவ்ர பாதிரியார் பீட்டர் பேர்சிவல் அவர்கள். ஆரம்பத்தில் வேம்படியும் சென்றலும் மெதடிஸ்த மிசன் பாடசாலைகளே.

வெள்ளி பிரார்த்தனை பிரதான முன்றலில் நடக்கும் அதே நேரம் கிறிஸ்தவ பிரார்த்தனை ஆசான் பிலிப்நேரி (இப்போது மொன்றியலில் இருக்கிறார்!) தலைமையில் இன்னொரு மண்டபத்தில் நடைபெறும். முஸ்லிம்கள் படித்த காலங்களில் அவர்களின் பிரார்த்தனையும் நடைபெற்றது. சரஸ்வதி பூசையைக் கொண்டாடும் அதே உற்சாகத்துடன் கிறிஸ்மஸ் ஒளிவிழாவையும் கொண்டாடுவார்கள். இவையெல்லாம் அப்போது சாதாரணமான விடயங்களாகக் கடந்து போயின. மத்திய கல்லூரிக்கு வெளியே வந்து உலகத்தைப் பார்த்த போது தான் எவ்வளவு முற்போக்கான சுதந்திரமான ஒரு வீட்டுக்குள் 13 வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம் என்று உறைத்தது! கனாக் காலம் நவீனன்!  :)

ம்ம் இருக்கலாம் ஜஸ்டின் எனக்கு உண்மையில் இப்போ நினைவில்லை.இந்த பிராத்தனை நடைபெறும் நேரம் அதிகமாக பத்திரிகை படிக்க யாழ் நூலகம் போய் விடுவது.:grin: திரும்பி வரும் நேரம் பிடிபட்டு அதிபரின் அறைக்கு முன் உள்ள மரத்தின் கீழ் நிற்பதுதான்:shocked:

நான் 5 ஆண்டுகள்தான் மத்திய கல்லூரியில் அதன் பின்பு இந்து கல்லூரி.

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்லியன் மெதடிஸ்த மிஷனினால் ஆரம்பிக்கப்பட்ட யவ்னா வெஸ்லியன் இங்க்லிஷ் ஸ்கூல் என்பதே யாழ் மத்திய கல்லூரியின் பழைய பெயர். இந்த பெயர் மாற்றத்தினைச் செய்தவ்ர பாதிரியார் பீட்டர் பேர்சிவல் அவர்கள். ஆரம்பத்தில் வேம்படியும் சென்றலும் மெதடிஸ்த மிசன் பாடசாலைகளே.

யாழ் மத்திய கல்லூரியின் ஆரம்பம் எப்படி என்று தெரியாது வாலி.
அங்கு....கல்லூரி இல்லப் போட்டிகள் நடக்கும் போது...
நான்கு பிரிவாக இருக்கும். அதில் நீங்கள் கூறிய.... பேர்சிவல் என்ற பெயரிலும், ஒரு அணி இருந்தது.
நான்... "வில்க்ஸ்" அணி. நீல நிறம். மற்றைய ... இரண்டு பெயர்கள் மறந்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.