Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண மந்திரங்கள்!

Featured Replies

நீங்களே கூறி விட்டீர்களே அவை சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு அது சிலைதான் B)

என்ன நாகரீகமாக கதைக்க வில்லை என்கிறீர்கள்... ஓ மட்டுருத்தினர் யாராவது ஓடிவந்து என்னை கண்டிக்க வேணும் எண்டு நினைக்கிறீர்களோ..??? கோயில்களிலிருக்கும் வெளிப்புறத்து சிலைகள் காமத்தை ரசத்தை தூண்டுகிறவை என்று மொழிந்தவர் நீங்கள்தான் அப்போ இல்லாத கண்ணியம் உங்களுக்கு இப்போ எப்படி வந்தது..???

அந்த சிலைகள் என்ன கருத்தை சொல்கிண்றன என்பதை சிலைகளை பார்த்ததும் தெரிந்து கொள்க்கூடிய எல்லாரையும் வயது வந்தோர் என்பார்கள்... அப்படியான பேச்சுக்களை இங்கு படம் ஒண்றை போட்டு ஆரம்பித்த நீங்கள்... கண்ணியம் பற்றியும், நாகரீகம் பற்றியும் பேசுவது வேடிக்கை...!!

சிறியவர்கள் தங்களின் உரிய வயதில் அவர்களுக்கு உகந்ததை தெரிந்து கொள்வார்கள்... மற்றது சிறுவர்களை திருமணம் ஆகாதவர்கள் எண்று விளிப்பது இல்லை... திருமணம் ஆகாதவர்களை பிரம்மச்சாரிகள் எண்றும் விளிப்பார்கள் அவர்களி சிறியவர்கள் அல்ல. ...

குறிப்பு::: நாகரீகம் பேசும் நீங்கள் பாலியல் ரீதியான படங்களை இனைத்தல் ஆகாது என்னும் களவிதியையும் தெரிந்து கொள்ளுங்கள்... கோயில்களில் இருக்கும் பாலியல் ரீதியான சிலைகள் எண்று சொன்னால் வயது வந்த எல்லாருமே புரிந்து கொள்ள முடியும்...!

Edited by தயா

  • Replies 67
  • Views 43.4k
  • Created
  • Last Reply

குறிப்பு::: நாகரீகம் பேசும் நீங்கள் பாலியல் ரீதியான படங்களை இனைத்தல் ஆகாது என்னும் களவிதியையும் தெரிந்து கொள்ளுங்கள்... கோயில்களில் இருக்கும் பாலியல் ரீதியான சிலைகள் எண்று சொன்னால் வயது வந்த எல்லாருமே புரிந்து கொள்ள முடியும்...!

இந்துமதத்தில் உள்ள நாகரீகமான சிலையின் படத்தைத்தானே இணைத்தேன் B)

கோவில் என்பது புனிதமான இடம் அங்கே அதை வைத்துக்கொள்ளும் போது :)

Edited by இலக்கியன்

இந்துமதத்தில் உள்ள நாகரீகமான சிலையின் படத்தைத்தானே இணைத்தேன் B)

கோவில் என்பது புனிதமான இடம் அங்கே அதை வைத்துக்கொள்ளும் போது :)

கோயில்களில் அந்த மாதிரியான விளக்கம் சொல்லியாசு... கோயில் களின் உள்ளே அந்த மாதிரியான சிலைகள் கிடையாது... அதுக்கான விளக்கம் சொல்லியாச்சு...

ஆனால் யாழ்களத்தில் கண்ணியம் காப்பது பற்றி நீங்கள் சொல்கிற்றீர்கள்.. அப்படி கதை எழுதும் முன்னர் அந்த கண்ணியதை வேண்டி யாழ்கள நிர்வாகம் அமைத்த விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்.. அதைதான் சுட்டி காட்டினேன்..!

கோயில்களின் வெளியே இருப்பவை போகம் உள்ளே யோகம் என்பது அர்த்தம்... அப்படியாகில் யாழ் களத்துகுள்ளே(உள்ளே) அந்த போகம் காட்டும் படங்கள் அவசியமா..?? B) B) B)

Edited by தயா

தயா!!

பாலியற் கல்வியை சரியான முறையில் எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மறுபேச்சு இல்லை. கணவன் - மனைவி இருவரிடையே உள்ள பாசப் பிணைப்பின் ஒரு அங்கமாக, இந்த பாலியற் தொடர்பு இருக்கிறது. இதை படம்போட்டு, சிலைவடித்து அறியவேண்டும் என்ற எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை. நாம் சுவாசிப்பது எப்படி ஒரு இயற்கை நிகழ்வோ அப்படித்தான் கணவன் மனைவிக்கிடையேயான இந்த பாலியல் தொடர்பும். கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை. கற்றுத் தருவதாக வெளிக்கிட்டு, காமத்தை பரப்புவதையே "சமயம்" இதுநாள்வரை செய்து வந்துள்ளது. நீங்கள் பலரும் கூறுவதுபோல், இந்த சிலை வடிப்புக்களால் சமூகம் திருந்தி அறிவை பெற்றது என்பது உண்மையானால் இன்று இவ்வளவு பாலியல் வக்கிரங்கள் நடைபெற சாத்தியம் இல்லை. இது "சமயங்கள்" எமக்கு கற்றுத் தந்த அணுகுமுறைகளில் எங்கோ பாரிய பிழை இருக்கிறது என்பதை காட்டவில்லையா?

உண்மையில், "காதல்" என்பதை மக்களிடையே வளர்த்திருக்க வேண்டிய சமயங்கள், வேண்டாத வேலைகளால் "காமம்" என்பதையே வளர்த்து வந்திருக்கின்றன. ஒவ்வொருவரும் உங்கள் மனதுக்கு வஞ்சனை செய்யாமல், நேர்மையாக சிந்தித்தால் இதை எழுதவேண்டிய தேவைகூட இல்லை.

ஒவ்வொரு தாயும் தந்தையும் தன் பிள்ளைகளுக்கு மிகவும் பக்குவமாக, அவர்கள் பதின்ம வயதில் சிரத்தையுடன், இவைபற்றி விளக்கவேண்டியது அவசியம். அதற்காக நடுவீட்டில், வரவேற்பறையில் ஆண்-பெண் உறவை படம் எடுத்து, கட்டம்கட்டி தொங்கவிடவா முடியும்? கோவிலில் இருக்கிறது. வீட்டிலும் வைப்போம் என யாராவது கேட்கக் கூடும். முதலில் தம் பிள்ளைகள் மீது, அதிகூடிய கரிசனை செலுத்த பெற்றோர் பழக வேண்டும். எங்கள் விருப்பு வெறுப்புக்களை தூக்கி எறிந்துவிட்டு, பிள்ளைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கூர்ந்து கேட்டறிய வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை முழுதாக விளங்கி, சரியானதோர் தீர்வை நாட முடியும். இவ்வாறான எந்த அணுகுமுறையையும் சமயம் என்பது கற்பிக்கவில்லை. வெறுமனே கோவிலில் கலவியின்ப சிலை வடித்து வைப்பதால் காமம் மட்டுமே மிஞ்சும். அதுதான் இதுவரை நடைபெற்று வந்திருக்கிறது.

இவ்வளவுநாளும் இருந்தது என்பதற்காக அதை நாமும் பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கை என்பது மிகப் பிரத்தியேகமாக, ஒவ்வொரு தனிமனிதனுக்குமானது. அதன் நிறைவை தேடி, குறைகளை விட வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனுமே. இற்றைவரை, ஒவ்வொரு தனிமனிதனும் கருத்தியல் ரீதியாக ஏதோ ஒரு வகையில் இன்னொருவருக்கு அடிமையாகவே இருக்கிறோம். எமக்கேயான, எமக்கு மட்டுமேயான தனிமனித வாழ்க்கைக்கு வழிகாட்டு என்று "தெய்வங்களிடமும்", "குருவானவர்களிடமும்" இரந்து வேண்டி காலம் கடத்துகிறோம். எமது வாழ்க்கையை வாழக்கூட எமக்கு தெரியவில்லை. இதைக் கற்பித்தது எது? சமயமா? எமது கலாச்சாரமா?

மிக அழகான மனித உள்ளத்துடன், அமைதியாக வாழ இந்த சமயம், கடவுள் என்பன தேவையற்றன. நான் இதை என்னில் பரிசோதிக்காமல் வெறுமனே வார்த்தையாக கூறவில்லை. சகல மனிதர்களும் சர்வ சமனானவை என நம்புகிறேன். சாதி, மதம் என்பவை ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே பூசிக்கொள்லும் நிறங்களே.

தயா!!

பாலியற் கல்வியை சரியான முறையில் எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மறுபேச்சு இல்லை. கணவன் - மனைவி இருவரிடையே உள்ள பாசப் பிணைப்பின் ஒரு அங்கமாக, இந்த பாலியற் தொடர்பு இருக்கிறது. இதை படம்போட்டு, சிலைவடித்து அறியவேண்டும் என்ற எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை. நாம் சுவாசிப்பது எப்படி ஒரு இயற்கை நிகழ்வோ அப்படித்தான் கணவன் மனைவிக்கிடையேயான இந்த பாலியல் தொடர்பும். கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை. கற்றுத் தருவதாக வெளிக்கிட்டு, காமத்தை பரப்புவதையே "சமயம்" இதுநாள்வரை செய்து வந்துள்ளது. நீங்கள் பலரும் கூறுவதுபோல், இந்த சிலை வடிப்புக்களால் சமூகம் திருந்தி அறிவை பெற்றது என்பது உண்மையானால் இன்று இவ்வளவு பாலியல் வக்கிரங்கள் நடைபெற சாத்தியம் இல்லை. இது "சமயங்கள்" எமக்கு கற்றுத் தந்த அணுகுமுறைகளில் எங்கோ பாரிய பிழை இருக்கிறது என்பதை காட்டவில்லையா?

என்ன சொல்ல வருகிறீர்கள்..?? இதுநாள் வரை நீங்கள் சமயத்தை பின் தொடர்ந்ததாகவும். அதனால் நீங்கள் கெட்டு குட்டி சுவர் ஆகிவிட்டதாகவும் எடுத்து கொள்ளலாமா..???

சிற்றின்பம் என்பதில் மனைவாழ்க்கை ஒரு அங்கம் எண்டாலும் பலாவிதமான ஆசைகளும் அடங்கு கிண்றன... அதை எல்லாரும்கும் புரியும் வண்ணம் சிலைகள் அமைத்து காட்ட முடியாது... ஆனால் கேளிக்கையில் ஈடுபடும் ஆடவர் மகளீர் சிலைகளை வைத்து உள்ளார்கள்.. உள்ளே யோகத்தை அடையும் வளியையும் சொல்லி இருக்கிறார்கள்... நீங்கள் யோகி ஆக வேண்டும் எண்று சைவம் வற்புறுத்தவில்லை. போகியாகவும் இருக்கலாம்... அதை அடையும் வளிகளைத்தான் சைவம் காட்டுகிறது...

மனிதன் எப்போது மிருகம் ஆனான் எண்றால் எப்போது அவனுக்கு யார் மீதும் பயமும் எதிலும் நம்பிக்கை இல்லாமல் போனதோ அப்போதுதான்.... அதாவது மதம் மீதும், வினை பயன் மீதும்...

நான் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை மனிதன் எப்போது எண்ண தலைப்படவில்லையோ அண்று மனிதன் மிருகமாவதாற்கான விதைகள் வீசப்பட்டு விட்டன.. அந்த மனிதனை கண்டு மக்கள் பயந்தனர்.. சிலர் அவனை அளிப்பதுக்காய் அவதாரம் எடுத்து தாங்களும் மிருகமாகினர்.. அப்படி மக்கள் ஆனாதுக்கு சுயமரியாதை இயக்கத்தினர் காரணம் எண்று என்னாலும் திருப்பி உங்களுக்கு சொல்ல முடியும்...

அரசன் அண்று அறுப்பான் தெய்வம் நிண்று அறுக்கும் என்பது தமிழர் பழ மொழி... இதில் இருந்து நீங்கள் விளக்கி கொள்ள வேடியது... மனிதனை மனிதனாக வாழும் விதிகளைத்தான் சமயம் சொல்லி நிக்கிறது... அதிலிருந்து வேறுபடும் நியதிகளை சுயமரியாதை என்போர் சொல்லி கொடுக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சைவமும் இந்துவும் சரி பிற மதங்களும் சரி மனிதனை நல்வழிப்படுத்தும் மார்க்கங்களை எளிமையாகச் சொல்கின்றன. அது துறவு ரீதியா இருக்கலாம்.. இல்லறம் கண்டும் இருக்கலாம். சைவ சித்தாந்தம் துறவை மட்டுமன்றி இல்லறம் மூலம் வாழ்வைச் சந்தித்து ஒருவன் முத்திப் பேறடைவதையும் ( சலனமில்லாத் தன்மை என்று கொள்ளலாம்) தெளிவாக உரைக்கிறது.

பாலியல் என்பது சாதாரண மனித வாழ்வின் ஒரு அங்கம். அதை கணவன் - மனைவி என்ற எல்லைக்குள் வரையறுத்து வாழ்வது இல்லறத்துக்கு உதவுவதாகும்.

பாலியல் என்பதில் அறிவூட்டல் அவசியம் என்பதால்.. மதங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டிகள் என்ற வகையில் பாலியல் பற்றிப் பேசவும் தயங்கவில்லை.

சில வகை கோயிற் சிற்பங்கள்.. மதக் கோட்பாடுகளின் பிரதிபலிப்புக்கள் அல்ல. பல கோயில்களில் அவற்றைக் கட்டிய மன்னர்களின் சுய விருப்பிற்கமைய அமைந்த சிற்பங்கள் உள்ளன. அவை 100% மதத்தைப் பிரதிபலிக்காமல்.. குறித்த காலங்களில் மனித வாழ்வை.. அல்லது மன்னர்களின் வாழ்வைப் பிரதிபலித்தும் நிற்கின்றன. மன்னர்கள் மத நம்பிக்கையாளர்களே அன்றி அவர்கள் மத சிருஷ்டிப்பாளர்கள் அல்ல. மன்னர்களின் பிரத்தியேக எண்ண வெளிப்பாடுகளும் கோயில்களில் சிற்பங்களில் இடம்பெற்றுள்ள. அதை கலையாகக் காணாமல்.. இன்று மதத்தை இழிவு படுத்த சிலர் கையாள்கின்றனர். அதுதான் அவர்களின் வக்கிரத்தனமான பார்வையை எமக்கு இயம்பி நிற்கிறது.

கோயில்கள்.. மக்கள் கூடும் இடங்களாதலால்.. மக்களுக்கு அடிப்படை பாலியலை சொல்ல என்று மன்னர்கள் சில சிற்பங்களை செதுக்கச் சொல்லி இருக்கலாம். அல்லது தங்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திருக்கலாம். ஆனால் அதுவே இந்து மதத்தின் சைவத்தின் நிலை என்று சொல்வது அறியாமை. மதக் கோட்பாடுகளை சரி வர விளங்கிக் கொள்ளாததன் வெளிப்பாடு.

ஒரு மனிதன் தனது வாழ்வை தான் தான் திட்டமிட வேண்டும். மதங்கள் அல்ல. மதங்களும் அப்படிச் சொல்லவில்லை. அவை திட்டமிடப்படும் வாழ்வை சீரிய பாதையில் கொண்டு செல்ல ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் என்ன என்றுதான் சொல்கின்றன. அதுமட்டுமன்றி நிலையில்லாத இந்த வாழ்க்கையில் நிலையானது எது என்பதை இனங்காட்டுகின்றன. அதை எல்லோரும் பின் பற்றனும் என்று எந்த மதமும் கட்டாயப்படுத்தவில்லை. அதிலும் இந்து மற்றும் சைவம் கூடிய அளவு நெகிழ்வுப் போக்குள்ளவை. அதனால் தான் எதிர்விமர்சனங்களையும் மதமாற்ற வித்தைகளையும் சமாளித்து அவை மக்களின் சுதந்திர உணர்வோடு கலந்து நிற்கின்றன.

இன்றும் நல்லூரில் பல்லாயிரம் மக்கள் கூடுகிறார்கள் என்றால்.. அந்த மக்களின் மனதில் உள்ள குறைகளை முருகன் என்பவர் நீக்கிறாரோ இல்லையோ.. இந்த இக்கட்டான சூழலிலும் மக்கள் ஒன்று கூடி சமூகமாகி.. ஒருவருக்கு ஒருவர் தங்களின் துயரங்களை மனதுருகி..வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதானது.. மக்கள் மன நிலை ரீதியில் தாம் ஒரு சமூகத்துள் இருப்பதை நினைவுறுத்தி மனங்களில் தன்னம்பிக்கை உணர்வை கட்டியெழுப்ப உதவி இருக்கும். மனிதனின் மனநிலையை அறிந்து தான்.. சில மத அனுட்டானங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பாராட்டப்பட வேண்டியவை. அதேவேளை பல மூடநம்பிக்கைகள்.. மதங்கள் சொல்லும் வழிமுறைகளுக்கு மாறாக திரிவுபட்டு நிற்கின்றன. அவை களையப்படவும் இனங்காட்டப்படவும் வேண்டும்.

காதல் இன்றி.. அன்பு இன்றி ஒரு மனிதனால் வாழ முடியும் என்றால் நிச்சயம் மதங்கள் இன்றி.. சமயம் இன்றியும் வாழவும் முடியும். ஒரு மனிதனின் மனதளவில் எழும் மகிழ்ச்சி என்பதை இன்னொருவரின் மனதில் எழும் மகிழ்ச்சி என்பதோடு ஒப்பு நோக்குதல் 100% சரியானதல்ல. மகிழ்ச்சிக்குரிய சூழல்.. காரணிகள் என்பன மாறுபடலாம். சிலர் கோவிலில் மக்களோடு கூடி அளவளாவி மகிழ்வர்.சிலர் கோயிலின் வடிவமைப்பை ரசித்து மகிழ்வர்... சில கோயிலில் இசைக்கும் இசையில் மகிழ்வர்.. சிலருக்கு கோயில் என்றாலே மகிழ்ச்சி எழாது.. இப்படி மகிழ்ச்சி என்பது மாறுபடுவது ஆளாளுக்கு. ஒருவர் தான் மதத்தால் மகிழவில்லை.. ஆனால் பிறவற்றால் மகிழ்ந்திருக்கிறேன் என்பதறாக எல்லோரும் அந்தப் பிறவற்றால் மகிழ்ந்திருப்பர் என்றில்லை. ஆனால் கோயில்கள் பல்லாயிரம் மக்களின் மன மகிழ்ச்சியை ஏதோ அவர்களுக்குரிய மனநிலைக் கேற்ப பிரதிபலிக்கவே செய்கிறது என்பதை நாம் சுலபமாக நிராகரிக்க முடியாது. இசை எப்படி எல்லோரையும் கவர்ந்திழுக்கிறதோ.. அங்கும் மகிழ்ச்சி மட்டம் வேறுபடுகிறது.. அதுபோல கோயில்களுக்கும் அந்தத் தன்மை உண்டு. அது எம்மதத்தவராக இருப்பினும்.

என்னால் நாலு நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும்.. ஆட்களே இல்லாத போது கோயில் சூழலில் இருக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் வேறுபாட்டை உணர முடிகிறது. அதுவும் நந்தவனம் போய் மாலை வேலையில்.. அங்குள்ள இயற்கைக்குள் ஒருமிருத்து இருக்கும் போது வரும் மகிழ்ச்சியே தனி. அப்படி உணர முடியாதவர்களும் உலகில் இருக்கலாம். அவர்களுக்கு கோயில்கள்.. வெறும் மாட்டுக் கொட்டகைகளாகத் தெரிவதில்.. தப்பும் இல்லை..!

சிலர் திருமணமாகி.. மனைவியை குழந்தையாக எண்ணி நடத்துவர்.. சிலர் தோழியாக்கி மகிழ்வர்.. சிலர்.. மந்திரியாக்கி மகிழ்வர்.. சிலர் அரசியாக்கி மகிழ்வர்.. சிலர் தாயாக்கி மகிழ்வர்.. சிலர் தாயாகக் கண்டு மகிழ்வர்.. சிலர் வேலைக்காரியா வைச்சிருந்து மகிழ்வர்.. சிலர் தன்னை மனைவியில் காண்பர்.. சிலர் கொடுமைப்படுத்தி மகிழ்வர்.. சிலர் கொண்டாடி மகிழ்வர்.. சிலர் அலங்கரிச்சு மகிழ்வர்.. சிலர் வங்கியாக கருதி பணம் பிடிங்கி மகிழ்வர்.. இப்படி.. பெண்களும்.. ஆண்களை பலவாறு கண்டு மகிழக் கூடும். ஆனால் அவர்கள் ஆண்களை தாங்கள் மகிழ்வதாகக் காட்டிக் கொள்வதில் கொஞ்சம்.. கஞ்சத்தனமானவர்கள். பெண்களின் சுயநலம் அதற்கு இடமளிக்காது. இப்படித்தான் மனிதர்கள் பல விதம்...! உருவம் கிட்டத்தட்ட மனிதன் என்றிருப்பினும்.. உள்ளங்கள்.. உருவத்தை விட அதிகம் மாறுபாடானவை. அந்த உள்ளங்களைக் கூட ஒருங்கிணைக்க வைக்கக் கூடிய சக்தி கோயில்களுக்கு உண்டு. எவர் எது சொன்னாலும் இதுதான் இன்றை வரை நிஜம். :lol::)

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நண்பர்கள் நெடுக்காலபோவானும், தூயவனும் வேறு வேறு தலைப்புக்களிலும் "வெற்றிவேல் சரியான விளக்கத்தைக் கொடுத்து விட்டார்" என்று புளுகாங்கிதப்பட்டு கருத்து எழுதிக் கொண்டிருப்பதால், மீண்டும் ஒரு முறை இதில் என்னுடைய விளக்கத்தை எழுத வேண்டி இருக்கிறது.

நான் இங்கே மொத்தமாக நான்கு விதமான மந்திரங்களை இணைத்திருக்கிறேன். அதில் மூன்றிற்கு இதுவரை யாரும் விளக்கம் சொல்லவில்லை. முதலாவதாக நான் தந்த "சோமன், கந்தர்வன், அக்கினி" பற்றிய மந்திரத்திற்கு மட்டுமே வெற்றிவேல் விளக்கத்தை சொல்லியிருக்கிறார்.

ஆனால் நான் இந்த மந்திரத்திற்கு சில பார்ப்பனர்கள் வேறொரு விளக்கத்தை தந்து சமாளிப்பது உண்டு என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்

ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள் - இப்படி நான் இந்த தலைப்பை ஆரம்பித்த போது சொல்லியிருக்கிறேன்

சில பார்ப்பனர்கள் வேறு ஒரு அர்த்தம் சொல்லவது நான் சொன்ன முதலாவது மந்திரத்திற்குத்தான். சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் அவளுக்கு அதிபதியாக இருந்தார்கள், காத்து வைத்திருந்தார்கள், தந்தை போன்று இருந்தார்கள் என்று வேறு விளக்கம் சொல்வார்கள். - இப்படி மந்திரங்களை இணைத்த அன்றைக்கே ராஜாதிராஜாவுடன் விவாதம் நடத்திய போது சொல்லியருக்கிறேன்

ஆகவே நண்பர்களே! வெற்றிவேல் ஒன்றும் புதிதாக எனக்குத் தெரியாத ஒரு விளக்கத்தை தரவில்லை. இப்படி ஒரு விளக்கம் இருக்கிறது என்று நேர்மையாக நான் அறிவித்தது உங்களுக்கு அன்றைக்கு புரியவில்லை என்றால், அது என் தவறு அல்ல.

நான் இன்றைக்கும் சொல்கிறேன். நான் அன்றைக்கு சுருக்கமாக சொன்னது போன்ற, பின்பு பல மாதங்கள் கழித்து வெற்றிவேல் விரிவாக சொன்னது போன்ற ஒரு விளக்கத்தை சில பார்ப்பனர்கள் சொல்லி சமாளிக்கிறார்கள் என்பது உண்மை. இதை நான் மறுக்கவில்லை.

ஆனால் நண்பர்களே! ஆராய்ந்து பார்க்கும் அறிவு உங்களுக்கு இருக்கிறது அல்லவா?

யாரோ ஒருவரின் பெயரைச் சொல்லி "உன்னுடைய மனைவிக்கு அவர்தான் எல்லாம் போல் இருக்கிறது" என்று ஒருவர் சொன்னால், அதை அவர் அப்பாவித்தனமாக உள்நோக்கம் எதுவுமின்றியும் சொல்லலாம். விகல்பமாகவும் சொல்லலாம்.

எந்த எண்ணத்தோடு அவர் உங்கள் மனைவியைப் பற்றி சொல்கிறார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

சொல்பவர் எப்படியானவர்? அவர் சொல்கின்ற போது அவருடைய முகக்குறிகள் எப்படியிருந்தன? அவர் பொதுவாக பெண்களைப் பற்றி எப்படிக் கதைப்பவர்? - இப்படியான கேள்விகளை எழுப்பித்தான் கண்டுபிடிப்பீர்கள்.

இப்படி நான் கேள்விகளை எழுப்பி, ஆராய்ந்து இந்த மந்திரம் அப்பாவித்தனமாக "சோமனும், கந்தர்வனும், அக்னியும் காவல்காரர்கள்" என்று சொல்லவில்லை என்று சொல்கிறேன்.

விகல்பமான சிந்தனையோடு உங்களுக்கு மனைவியாக போகறவளை இதற்கு முன்பு சோமனும், கந்தர்வனும், அக்னியும் மனைவியாக கொண்டிருந்தார்கள் என்று சொல்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

என்னுடைய குற்றச்சாட்டிற்கு இந்து மத வேதங்களும், புராணங்களும், சாத்திரங்களும் பெண்ணை எப்படிப் பார்க்கின்றன? எப்படி இழிவு படுத்துகின்றன போன்றவைகளை ஆதாரமாக வைக்கிறேன்.

அது மட்டும் அல்ல! இந்த மந்திரம் மணமகனை நோக்கி தெளிவாகச் சொல்கிறது "நீ இவளுக்கு நான்காவது ஆள்". இதற்குப் பிறகும் உங்களுக்கு ஒரு விளக்கம் தேவையா?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் சபேசன் தம்பி

நீங்கள் மேலால் பந்தி மேய்ஞ்சு புது அர்த்தம் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். என்ன நான் சொல்லுறது?

அட நாங்கள் அதை வழமைபோல் 4 ஆவது காவலாளி பாதுகாவலன் என்று விளக்கம் கொடுக்க முடியாதா? :D

இன்றய நவீன பாதுகாப்பு கட்டமைப்புகளான முப்படைகள் உடன் புலநாய்வுப்படை சேர்ந்து 4 முனை பாதுகாப்பு அரண் கூட எங்கடை இந்து மதத்தில இருந்து தான் வந்தது எண்டு நிறுவி ஜநாவில கொடி ஏத்தேலாதோ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது. உங்கடை இந்து மதமோ? உப்படி அடிக்கடி கொள்கை மாத்துறதால தான் உங்களை யாரும் நம்புறதில்லை கண்டியளோ! உண்மையில பெரியார் சீடர் நீங்கள் தான்.

என்னது. உங்கடை இந்து மதமோ? உப்படி அடிக்கடி கொள்கை மாத்துறதால தான் உங்களை யாரும் நம்புறதில்லை கண்டியளோ! உண்மையில பெரியார் சீடர் நீங்கள் தான்.

சாச்சா... பெரியாரின் சீடர்க்களுக்கு தண்ணிக்கும், சாப்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியும்... இரண்டையும் பிரசாதம் எண்ட மாட்டினம்... :unsure:

  • தொடங்கியவர்

வெற்றிவேல்!

நீங்கள் "நெத்தியடி" என்ற தலைப்பில் நடக்கின்ற விவாதத்தில் மற்றைய மந்திரங்கள் தவறு என்றும், அப்படியான மந்திரங்கள் இல்லை என்றும் சொல்லியிருப்பதாக குறிப்பிட்டுள்ளீhகள்.

நான் இங்கே தேடிப் பார்த்துவிட்டேன். அப்படி எதுவும் என்னுடைய கண்ணுக்குப்படவில்லை. வேலைப் பழு என்றும், இரண்டொரு நாட்களில் இதமான பதில் தருவதாகவும் கவிதைதான் எழுதியிருக்கிறீர்கள்.

இப்பொழுது தீடிரென்று "அப்படி மந்திரங்களே இல்லை" என்று சொல்கிறீர்களே! என்ன இது?

அத்துடன் முதலாவது மந்திரத்திற்கு நீங்கள் தந்த விளக்கம் குறித்து இங்கே எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை.

முக்கியமாக நீங்கள் சில வயதுக் குறிப்புக்களை தந்துள்ளீர்கள். இதை எதன் அடிப்படையில் தருகிறீர்கள்?

16 வயது வரை என்று ஒரு வரையறை செய்கிறீர்கள்? அப்படி என்றால் 14 வயதில் திருமணம் செய்கின்ற பெண்ணிற்கு இந்த மந்திரம் சொல்வது இல்லையா?

;மாப்பிள்ளைக்கு இந்த பாதுகாவலர்கள் தேவை இல்லையா?

நீங்கள் தெரிந்து கொண்டே தவறான விளக்கங்களைக் கொடுத்து தமிழ் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வாழ்வதற்கு வழி செய்கிறீர்கள்:

வெற்றிவேல்!

நீங்கள் "நெத்தியடி" என்ற தலைப்பில் நடக்கின்ற விவாதத்தில் மற்றைய மந்திரங்கள் தவறு என்றும், அப்படியான மந்திரங்கள் இல்லை என்றும் சொல்லியிருப்பதாக குறிப்பிட்டுள்ளீhகள்.

நான் இங்கே தேடிப் பார்த்துவிட்டேன். அப்படி எதுவும் என்னுடைய கண்ணுக்குப்படவில்லை. வேலைப் பழு என்றும், இரண்டொரு நாட்களில் இதமான பதில் தருவதாகவும் கவிதைதான் எழுதியிருக்கிறீர்கள்.

இப்பொழுது தீடிரென்று "அப்படி மந்திரங்களே இல்லை" என்று சொல்கிறீர்களே! என்ன இது?

அத்துடன் முதலாவது மந்திரத்திற்கு நீங்கள் தந்த விளக்கம் குறித்து இங்கே எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை.

முக்கியமாக நீங்கள் சில வயதுக் குறிப்புக்களை தந்துள்ளீர்கள். இதை எதன் அடிப்படையில் தருகிறீர்கள்?

16 வயது வரை என்று ஒரு வரையறை செய்கிறீர்கள்? அப்படி என்றால் 14 வயதில் திருமணம் செய்கின்ற பெண்ணிற்கு இந்த மந்திரம் சொல்வது இல்லையா?

;மாப்பிள்ளைக்கு இந்த பாதுகாவலர்கள் தேவை இல்லையா?

நீங்கள் தெரிந்து கொண்டே தவறான விளக்கங்களைக் கொடுத்து தமிழ் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வாழ்வதற்கு வழி செய்கிறீர்கள்:

இதற்கென்று நான் ஒதுக்கி வைத்து இருந்த நேரத்தை தான் "நெத்தியடி" இலும், பாரதி பற்றிய விவாதத்திலும் ஸ்வாஹா பண்ணிவிட்டீர்களே. நாளை அல்லது செவ்வாய் கிழமை பதில் தருகிறேன். :lol:

மற்றது, அப்படியான மந்திரங்கள் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் எழுதியுள்ள மந்திரங்களின் சொற்கள் பல வடமொழி அகராதியிலேயே இல்லை. இத்தனை தவறான சொற்களை வைத்துக் கொண்டும் எப்படி விளக்கம் தருவது? அவற்றின் மூலநூல்களின் விபரம் தாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாச்சா... பெரியாரின் சீடர்க்களுக்கு தண்ணிக்கும், சாப்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியும்... இரண்டையும் பிரசாதம் எண்ட மாட்டினம்... :lol:

........... பாப்பான் தந்த பிரசாதத்த நக்குி திண்ட நன்றியுணர்வு இங்க யாழ் களத்தில வெளிவருது........................

  • 3 months later...
  • தொடங்கியவர்

திருமண மந்திரங்கள் பற்றி இங்கே உள்ள விவாதங்களைப் படித்திருப்பீர்கள். இங்கே சில கேள்விகள் இன்னமும் பதில் அளிக்கப்படாமலேயே இருக்கின்றன.

நாம் கேட்ட சில கேள்விகளுக்கு மட்டும் அல்ல, மந்திரங்களுக்காக வாதாடியவர்கள் எம்மைப் பார்த்து கேட்ட சில கேள்விகளுக்கும் எம்மால் இதுவரை பதிலளிக்கப்பட வில்லை. இன்றைக்கு சில பதில்களை தருகின்றேன்

நான் தந்த மந்திரங்களில் எழுத்துப் பிழையிருக்கிறது என்றும், அதனால் அந்த மந்திரங்கள் தனக்கு விளங்கவில்லை என்றும் வெற்றிவேல் கூறியிருந்தார்.

இதனையடுத்து மந்திரங்களை தொடர்ந்து தேடிப் பார்த்தேன். ஆனால் இந்த மந்திரங்களைப் பற்றி எழுதியுள்ள ராமானுஜதாத்தாச்சாரியார் (சமஸ்கிருதம் நன்கு கற்ற ஒரு பார்ப்பனர்) நான் எழுதியது போன்றுதான் எழுதியிருக்கிறார். நான் எழுதியதில் ஒரிரு எழுத்துப் பிழைகள்தான் இருக்கின்றன. அவர் எழுதியதை அப்படியே தருகின்றேன்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்

விஸ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது

இந்த இரண்டு மந்திரங்களுக்கும் நான் சொன்ன அர்த்தத்தைதான் தாத்தாச்சாரியாரும் தந்திருக்கின்றார்.

நான் தந்த சோமன், அக்னி, கந்தர்வன் ஆகியோர் கணவனாக இருந்தது பற்றிய மந்திரங்களுக்கு சிலர் வேறு விளக்கம் தருவார்கள் என்று சொல்லியிருந்தேன். அதே போன்று வெற்றிவேலும் "இந்த மூவரும் பாதுகாவலர்களாக இருந்தார்கள்" என்று சொன்னார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு களத்தில் உள்ள சில இந்துத்துவவாதிகள் புல்லரித்துப் போய் நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

வேதங்களும் புராணங்களும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சித்தரிக்கும் சோமன், அக்னி, கந்தர்வன் ஆகியோர் தமது மனைவிக்கு "பாதுகாவலர்களாக" இருந்தார்கள் என்ற செய்தியைக் கேட்டு அறிவுள்ள யாருமே மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.

அத்துடன்

மாப்பிள்ளைக்கு இந்தப் பாதுகாவலர்கள் தேவை இல்லையா என்ற கேள்விக்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

அது கிடக்கட்டும்.

ஆனால் பெண்ணிற்கு உரியவர்களாக ஏற்கனவே மூன்று பேர் இருந்தார்கள் என்பது, தந்தையினதோ, பாதுகாவலரினதோ ஸ்தானத்தில் அல்ல என்பதை உறுதிப்படுத்த திருமணத்தில் சொல்லப்படும் இன்னும் ஒரு மந்திரத்தை தருகின்றேன்.

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா

அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ

உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே

அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி

இந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?

விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!

உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!

மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. அவர்களுக்கு மனைவியாக்கி, தேவர்களுக்கு மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி........ இப்படித்தான் இந்த மந்திரங்கள் இருக்கின்றன.

தமிழர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். மதம் என்ற பெயரிலும் மந்திரம் என்ற பெயரிலும் தன் மனைவியையும், தன் தாயையும் கொச்சைப்படுத்துவதை மானம் உள்ளவன் பொறுக்க மாட்டான்.

இந்த மந்திரங்களை காக்கும் நோக்கில் இதற்கு வேறு விளக்கங்களை கொடுத்து தமிழர்களை ஏமாற்றுவதையும் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும்.

இந்துக்களின் திருமணத்தில் இருந்த எத்தனையோ சடங்குகள் இன்றைக்கு இல்லை. திருமணத்தில் பசுக்களை வெட்டும் சடங்கு இந்துத் திருமணத்தில் இருந்தது.

பின்பு பௌத்த, ஜைன மத வருகைகளின் பின்பு அது நின்றது. மந்திரங்கள் மட்டும் மாறவில்லை.

சடங்குகளை நிறுத்தியது போன்று இந்த மந்திரங்களையும் நிறுத்த வேண்டும்

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

வசம்பு வேறொரு பகுதியில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே பொருத்தமாக இருப்பதால் இங்கே அதை தருகிறேன்.

ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இரண்டு புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன

1. இந்து மதம் எங்கே போகிறது?

2. சடங்குகளின் கதை

நான் சொன்ன விடயங்களுக்கு "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்தில் 151,152, 157ஆம் பக்கங்களிலும் "சடங்குகளின் கதை" என்ற புத்தகத்தில் 141ஆம் பக்கத்தில் இருந்து 150ஆம் பக்கம் வரையிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அத்துடன் விவாஹ மந்த்ரார்த்த போதினி" என்ற நூலிலும் சுவாமி சிவானந்த சரசுவதியின் "ஞானசூரியன்" என்று நூலிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

அந்தப் புத்தகங்களையும், பக்கங்களையும் scan செய்து இங்கே இணைப்பது என்றாலும் நான் இணைக்கிறேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை. நானாக ஒரு மந்திரத்தை உருவாக்கி அர்த்தங்களையும் எழுதுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். திருமண மந்திரங்கள் பற்றிய சர்ச்சையில் என்ன நடந்தது.

சமஸ்கிருதம் ஓரளவு தெரியும் என்று சொன்ன வெற்றிவேலும் நான் செய்த அதே மொழி பெயர்ப்பைத்தான் செய்தார். ஆனால் "பதி" என்ற சொல் நான் சொன்னது போன்று "கணவன்" என்ற அர்த்தத்தை தராது என்றும், "பாதுகாவலன்" என்ற அர்த்தத்தை தரும் என்று வாதிட்டார்.

ஆகவே சர்ச்சை ஒரு சொல்லால்தான் வந்தது. அதுவும் வேதங்களும் சாத்திரங்களும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவளுடைய கணவன்தான் என்று சொல்கின்ற போது, மந்திரங்களை காப்பதற்காக அர்த்தத்தை மாற்றி அவர் வாதாடினார்.

மற்றையபடி மொழி பெயர்ப்பு ஒன்றாகத்தான் இருந்தது. என்னுடைய மொழி பெயர்ப்புகள் சரி என்பதற்கு இதையும் ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

Edited by சபேசன்

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)

 

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

 

இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

 

மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

 

மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

 

ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.

 

மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

 

இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.

 

எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

 

இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

 

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா

தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப

பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம

கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...

 

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

 

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.

 

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

 

என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ

பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா

அவபத்ய நாம....

 

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

 

உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

 

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.

 

இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.

 

இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.

 

இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்

 

 

 

தொடரும்....

 

http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இருந்தததால் 
எல்லாவற்றையும் மீண்டும் வாசித்தேன்.

ஒரு மனிதன் 
அவனை படைக்க ஒரு கடவுள் 

இதற்கு இடையில் ஒருவரை நீங்கள் இடை தரகராக 
(ஐயர்) ஒருவரை கொண்டுவரும்போதே 
இரண்டு விடயங்களை ஒப்புக்கொள்கிறீர்கள்.

ஒன்று கடவுளுடன் உங்களுக்கு தொடர்பு கொள்ள தகுதி இல்லை 
(நீங்கள் கடவுளால் புறக்கணிக்க பட்டவர்) 
மற்றது பிராமணர் உங்களிலும் மேலானவர் 
கடவுளால் ஏற்றுக்கொள்ள படடவர். 

மேலே இருக்கும் மந்திரங்கள் ஆபாசமாக எனக்கு தெரியவில்லை 
ஒருவரை இடை தரகராக நீங்கள் கொண்டு வந்ததே நீங்கள் கடவுளை 
நம்பாத காரணத்தால்தான். நீங்கள் கடவுளின் படைப்பு என்று நம்பி இருந்தால் 
நீங்களே நேரிடையாக கடவுளுடன் உறவை பேணி இருப்பீர்கள்.

இடைத்தரகர் ஒருவரின் வேலையே சமரசம் பேசி உங்களுக்கு 
கிடைக்க கூடியதை பெற்றுத்தருவதுடன் ...... வாடிக்கை யாளர்களை 
மனமகிழ்வாக வைத்தருப்பதுதான். 

நீங்கள் கேட்பதே உலகில் இல்லாத ஒன்று 
இதில் இடை தரகருக்கு வாடிக்கையாளர்களை 
மனமகிழ்வோடு ஏமாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கிறது 
அவர்கள் விளங்காத பாஷையில் கச்சிதமாக செய்கிறார்கள்.

5 வருடம் கழித்து 2023இல் ஒரு பெண் சீடர் செய்தியார்களை சந்தித்து 
சுவாமி நித்தியானந்தா என்னை படுக்கைக்கு அழைத்தார் ... அதனால் நான் 
மான்பங்குபட்டு விட்டேன் என்று கதறி கண்ணீர் மல்க செய்தி கொடுத்தால்.
நாம் நித்தியை சாட முடியுமா ?? 
அந்தாள் அடுத்தவனுக்கு ஒரு சோலி சுரட்டு இல்லாமல் கொக்கு பிடிக்க 
தானே குளம் கட்டி மீன் விட்டு கஸ்டர பட்டு உழைத்து கொண்டு இருக்கு 
அந்த ஜீவனை சாட முடியுமா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.