Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எமது தோல்விக்கு நாமே காரணம்": கஜேந்திரகுமார்

Featured Replies

"எமது தோல்விக்கு நாமே காரணம்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/nwux98l2p1fc

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ இது சிஐஏ சதி.

போட்டோ  ஷாப்  செய்யும்  குழுவை  நம்பி  களத்தில்  இறங்கினா  இதுதான்  நிலைமை  அண்ணே .

தமிழ்ஈழவிடுதலை புலிகளின் தியாகங்களை வாக்கு பெறுவதற்காக புலத்து ஒருங்கமைப்பு குழுவும்.கயன்குழுவும் பொதுசொத்துகளை அரசியல்வியபாரத்திற்காக அந்து மாவீரர்களை கொச்சைபுடுத்தியுள்ளனர்.இவர்களின் பொய்முகங்களை ஈழ வாழ்தமிழரின் தெளிவு புலத்து அமைப்புகளிற்கு பேர்இடி விழுந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை யு ரேன் அடிக்கச் செய்யும் அளவுக்கு த.தே.ம.முன்னணி இம்முறை தேர்தல் களத்தில் இருந்தமை சிறப்பு. இன்றேல்.சமஷ்டி/சுயாட்சி - ஒற்றையாட்சி ஆகி இருக்கும்... சம உரிமை - நல்லிணக்கம் ஆகி இருக்கும்.. சுயநிர்ணயம் - சகோதரத்துவமும் சக வாழ்வும் என்றாகி இருக்கும். 

மேலும் த.தே.ம.முன்னணியே தமிழ் தேசியக் கூட்டமைப்பை சரியான பாதையில் நிறுத்தக் கூடிய நல்ல எதிர்தரப்பு. இதனை ஈபிடிபி ஒட்டுக்குழுவோ.. சங்கரியின் கூட்டணியோ.. வரதராஜப்பெருமாளின் ஹிந்தியாவோ தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் பாதிக்கப்படாத வகையில்.. செய்ய முடியாது. 

அந்த வகையில்.. த.தே.ம.முன்னணியின் இருப்பே தமிழர்களுக்கு ஒரு அரசியல் வெற்றி தான். தேர்தலில் தற்போதைக்கு தோல்விகள் என்றாலும்.. அதுவும் தமிழர்களுக்கு பலமே. tw_blush:

தழிழ்ஈழத்தை கைவிட்டு இப்ப சமஷ்ரியை சுயநிர்ணய உரிமை சம உரிமை இவை அனைத்தும் இனத்திற்கல்ல என்பது இந்த முட்டால் வாக்குகட்சி த.தே.ம.மு விளங்கவில்லையோ.இவை அனைத்தும் தனிமனிதஉரிமை  ஐநா சாசனத்தில் எழுதபட்டுள்ளது .சமஷ்ரிஆட்சி பொருளாதாரவளத்தில் முன்னேறிய அபிவிருத்தி அடைந்தநாட்டிற்குதான் இதுசாத்தியம்  இலங்கைபோன்வறியநாட்டிற்கு ஒத்து போகுமா என்பது எனது சந்தேகம்.மக்களை உங்கள் ரீமோட்கொன்றோல் பண அறுவடை அரசியலிற்காக புலத்திலிருந்து போலிபிரச்சாரம் மேற்கொள்ளாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வறட்டு சிங்கள எஜமானர்களுக்கு கால்கழுவும் அரசியலை கைக்கொள்வதற்கு அரசியல் உரிமைக்குள் பொருண்மியத்தை திணிக்கும் கைங்கரியத்தை செய்யத் தேவையில்லை.

வளர்முக நாடான சீனா.. வளர்ந்த பிரதேசமான ஹொங்காங்கை தனக்குள் இழுக்க முனைந்த போதும்.. ஹொங்காங் மக்கள் தமது அரசியல் உரிமை என்பதை தக்க வைக்க தனித் தேசமா சீன நாட்டுக்குள் இருக்கும் உடன்பாட்டுக்குள் வந்தார்கள். ஒரு கம்னீசிய நாட்டிலேயே இது சாத்தியமென்றால்.. சனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லிக் கொள்ளும் திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட சிறீலங்காவில் இது மிகவும் இலகுவாக சாத்தியப்படுவதோடு.. தமிழர்களின் பிரதேசத்தை தமிழர்களின் மனித பொருண்மிய வள பயன்பாட்டில் முன்னேற்றவும்.. சிங்கள தேசம் அதன் மனித பொருண்மிய வளப் பயன்பாட்டில் தான் முன்னேறிக் கொள்ளவும்.. ஒரு தேசிய இனம் மற்றதின் சுமையை சுமந்து இரண்டும் வறுமையில் இருப்பதைக் காட்டிலும் அல்லது ஒன்று மற்றையதை விஞ்சி நின்று பிரச்சனைப்படுவதிலும்.. இரு தேசக் கோட்பாடு அரசியல் ரீதியில் மட்டுமன்றி பொருண்மிய ரீதியிலும்  இலங்கை என்ற நாட்டைப் பலப்படுத்தும். அத்தோடு இனங்கள் சம அரசியல்.. பொருண்மிய இலக்குகளை எட்டி பிரச்சனைகள் இன்றி வாழும் நிலை தோன்றும்.

இதனை விரும்பாமல்... ஒற்றையாட்சிக்குள்.. நல்லிணக்க நயவஞ்சகத்துக்குள்.. சகோதரப் பாசாங்குப் பதத்துக்குள்.. சிங்கள எஜமானர்கள் கிள்ளிப் போடுவதை அள்ளிக் கொண்டு திண்ணையில் பிச்சை எடுத்து வாழவும்.. தமிழர்களின் வளம் உழைப்பு மற்றும் பொருண்மியத்தை சிங்களம் அதிகம் உறிஞ்சி தான் வாழ்ந்து கொள்ள அனுமதிப்பதோடு தமிழர்கள் தமக்கான அரசியல் உரிமை இன்றி சிங்களவர்களின் விருப்பு வெறுப்பை புரிந்து வாழக் கேட்பதும் நவீன மானுட உலகில் மிகவும் மோசமான ஒரு அரசியல் வாழ்வாக அமைவதோடு...... இருக்கும் பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக வளர்க்கவே அது வழி செய்யும். அது தமிழினத்தை நிரந்தர சிங்கள அடிமைகளாக்கவே வழி சொல்வதாகவும் அமையும். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... செய்வது, 
நெடுகவும் கையை கட்டி, வாயைப் பொத்தி, குனிஞ்சு நிண்ட பழக்கம் லேசிலை விட்டுப் போகாது.
சூடு, சுரணை வாறதுக்கு.... உடம்பிலை... ஒரிஜினல் தமிழ்  ரத்தமும் ஓடவேணும் நெடுக்ஸ்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்குக் காரணம் புலிவால்களை நம்பி இறங்கியதும். முட்டாள் தனமான புலிவால் விசில் ஊடகங்களும்!

  • கருத்துக்கள உறவுகள்

இது கஜேந்திரகுமாருக்கு, தோல்வியே இல்லை.  300% வாக்கு வங்கி அதிகரித்து இருக்கு.
6 வாக்குகளால், கூட்டமைப்புக்கு...... 6´வது இடத்தை கிடைக்காமல் பண்ணியிருக்கு.
ஆனாபடியால்.... இது கஜேக்கு... மாபெரும் வெற்றி.:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எமது "தோல்விக்கு" நாமே காரணம்.

-கஜே-

இது தோல்வியே இல்லை

- ஜேர்மன் தேசியத்தலைவர்-

மற்றும்

- லண்டன் தேசத்தின் குரல் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்விக்குக் காரணம் புலிவால்களை நம்பி இறங்கியதும். முட்டாள் தனமான புலிவால் விசில் ஊடகங்களும்!

இப்ப  இவரு  கவலைப்படுறாரா இல்லை  சந்தோசப்படுறாரா?   புலிவாந்தி மாதிரி எனக்கு தெரியேல்லை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எமது "தோல்விக்கு" நாமே காரணம்.

-கஜே-

இது தோல்வியே இல்லை

- ஜேர்மன் தேசியத்தலைவர்-

மற்றும்

- லண்டன் தேசத்தின் குரல் -

முதல்ல கஜேந்திரகுமாரின் பேட்டியை முழுமையாகக் கேட்கவும். நாங்கள் யாழில் என்ன எழுதி வந்தமோ.. அதையே அவரும் பிரதிபலித்துள்ளார். 

அவரின் பார்வையில்.. மக்களிடம் இன்னும் ஆழமாக தாங்கள் ஊடுருவி இருக்கலாம் என்பதில் தான் தோல்வி.

எங்களைப் பொறுத்த வரை மக்கள் நம்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. குறைந்தது சமஷ்டி.. சுயநிர்ணயம்.. சம உரிமை என்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி. அதையே தான் தாயக.. தமிழக.. உலகத் தமிழ் மக்களில் 90% பேரும் விரும்பினம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி அடுத்த தேர்தலில "ஆழ ஊடுருவும் படையணி" ஒன்றை அமைத்திட வேண்டியதுதான்!:grin::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

2010 விஞ்ஞாபனதிலே கூட்டமைப்பு சமஸ்டி பற்றி சொல்லி விட்டது.

இவங்க இழுத்து வந்தாங்களாம். காமெடி.

போராளிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்களுக்கு விழுப்புண்ணடைந்த நிலையில் வாழ்கை நடத்த கஸ்ரப்படும் போராளிகளை பற்றி தெரியுமா….?

தேசியம் பேசி முன்னாள் போராளிகளின் துணையோடு பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்கள் போராளிகளின் வாழ்வாதரத்திற்கு என்ன செய்தார்?

பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்இ மக்களுக்கும் மாதாந்த கொடுப்பணவு பெற்றுகொடுக்கும் விதத்தில் ஏதாவது ஏற்பாடு செய்தார்களா..?

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களுடைய குரலாக பாராளுமன்றம் அனுப்பினால் நீங்கள் உங்களுடைய தேவைகலை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் இது சரியா?

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்?
அன்று உங்கள் நாடகம் தெரியாமல் வீரனாக நினைத்தவர்கள் இன்று காறி துப்புகிறார்கள் என்பது தெரியுமா?

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் போராளி சாவுக்கு காரணம் என்ன ? இதற்கு கஜேந்திரர்கள் பதில் சொல்லியாக வேண்டு

கஜேந்திரகுமாரும் கடைசியில் வெள்ளை கொடிதானா .:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 கஜேந்திரகுமாரின் செயற்பாடுகள் மந்த நிலையை அடையவும் அதனால் மக்கள்  போராளிகள் பேரிழப்புக்களை அடையவும் காரணம் சம்பந்தனின் அசமந்தப் போக்கு. இந்தியப் படை நடவடிக்கையின் போது அமிர்தலிங்கம் சென்னையில் பதுங்கி இருந்து ரப்பர் செல் அறிக்கை விட்ட அதே வகையில் தான்.. 2009 மே இல் சம்பந்தன் தரப்பு சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு இந்தியாவின் நகர்வுகளுக்கு குறுக்கே நிற்காது சொந்த இனத்தை இன அழிப்புக்குள் தள்ளியது.  

இவை ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. உண்மைகளைப் பேசவல்ல சந்திரநேரு போன்றவர்களே இந்தக் குற்றச்சாட்டுக்களை பலமாக இப்ப தான் முன் வைத்துள்ளனர். இன்று சம்பந்தன் அம்பாறை மீது கருசணை கொள்ள சந்திரநேரு சம்பந்தன் அங்கு செயற்பாடாது விட்டதை குற்றம் சாட்டி ஊடகங்களில் செய்திகளை கொண்டு வந்ததும் ஒரு காரணம்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு கூட்டுத் சதி. அதில் சில இணைத் தலைமைநாடுகள்.. சில பிராந்திய நாடுகள்.. சில வல்லரசுகள்.. சில உலக மயமாதலால் இலாபம் அடையும் ஐநா அமைப்புக்கள்... சிங்களம்.. சில மிதவாதிகளாக தம்மை இனக்காட்டிக் கொள்ள விரும்பும் சிங்கள ஹிந்திய விசுவாச அரசியல்வாதிகள்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. சில முஸ்லீம் குழுக்கள்.. மற்றும் கூட்டமைப்புக்குள் உள்ள சில குள்ளநரிகள் என்பனவும் காரணம். அந்த வகையில் தான் முள்ளிவாய்க்கால் போர்க்குற்ற விசாரணை என்பது இழுத்தடிக்கப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தக் குற்ற அறிக்கை ஏலவே வெளிவந்து விட்டது. அந்த யுத்தம் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நடந்த ஒன்று. 

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தக் குற்ற அறிக்கைக்கு ஒப்ப தான் இதுவும் வரும். ஆனால் அங்கு ஹமாஸ் இன்னும் ஆளும் தரப்பாக உள்ளது. இங்கு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக யுத்தத்தின் ஒரு தரப்பு ஏலவே சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்ட நிலையில்.... இந்த யுத்தக் குற்ற அறிக்கையில் எஞ்சி இருக்கப் போவது சிங்கள அரசும் அதன் படைகளும் மட்டும் தானா இல்லை.. புலிகளும்.. இந்த யுத்தத்தை கொண்டு நடத்த உதவிய அனைத்து சக்திகளுமா என்பதைப் பொறுத்து தான் நடவடிக்கைகள் இருக்கும். 

இந்த யுத்தக் குற்ற அறிக்கையில் அமெரிக்காவின் ஈடுபாடு அது தான் இழைத்த குற்றங்களை மறைக்க நிச்சயம் பாடுபடுவதோடு தனக்கு சார்ப்பான ஒரு சிங்கள அரசுக்கு அதிகம் சங்கடம் ஏற்படா வகைக்கு நகர்வுகளைச் செய்யும்.. இந்தியாவும் அதுக்கு ஒத்துழைக்கும் தன்மையே காணப்படுகிறது.

ஆனாலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிப்பட வேண்டும். அதற்கான நீதி மறுக்கப்படுவதை உலகம் உணர வேண்டும். அதன் அடிப்படையில்.. தமிழ் மக்களின் எதிர்கால அரசியல்.. வாழ்வியல்.. பொருண்மியம் அமைய உலகம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர அழுத்தங்கள் தரப்பட வேண்டும். யுத்தக் குற்றவாளிகள்.. இனப்படுகொலையாளர்கள் மானுடத்துக்கு எதிரான குற்றத்துக்கான தண்டனையை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். 

சம்பந்தன்.. கஜேந்திரன் மற்றும் எல்லோரும் விட்ட தவறுகளை பேசி முதன்மைக் குற்றவாளிகளை தப்பிக்க காரியமாற்றுவதை ஒட்டுக்குழுக்களும்.. பீஸ்மர் போன்ற ஒட்டுக்குழு சிங்கள அரச ஆதவாளர்களும் கைவிடுவது நல்லது. tw_angry:

Edited by nedukkalapoovan

யார் ஒட்டுகுழுக்கள் என்பதை வட கிழக்குமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி காட்டியுள்ளனர். அடுத்த கேள்வி இவ்வளவு பெருநிதியை ரொட்டிகடை மக்கள்சொத்துக்களின் வருமானம் புலபாடசாலைகளின் வருமான் மாவீரர்களை சொல்லி சேர்க்கும் நிதிகள் விளையாட்டுவிழாக்கள் இவ்வளவு வருமானமும் 2009திலிருந்து சுமார் 6வருடவருமானம் அந்தமக்களிற் உதவிசெய்வதாக தான் சொல்லபடுகிறது அதுவும் இரகசிமாக அப்ப அந்த உதவிபெறும் மக்க்ள சுமார் 40000 குடும்பம் என்று பார்தாலும் இவர்கள் ஏன் த.தே.ம.முன்னிக்கு வாக்களிக்னவில்லை?????nedukkalapoovam

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஒட்டுகுழுக்கள் என்பதை வட கிழக்குமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி காட்டியுள்ளனர். அடுத்த கேள்வி இவ்வளவு பெருநிதியை ரொட்டிகடை மக்கள்சொத்துக்களின் வருமானம் புலபாடசாலைகளின் வருமான் மாவீரர்களை சொல்லி சேர்க்கும் நிதிகள் விளையாட்டுவிழாக்கள் இவ்வளவு வருமானமும் 2009திலிருந்து சுமார் 6வருடவருமானம் அந்தமக்களிற் உதவிசெய்வதாக தான் சொல்லபடுகிறது அதுவும் இரகசிமாக அப்ப அந்த உதவிபெறும் மக்க்ள சுமார் 40000 குடும்பம் என்று பார்தாலும் இவர்கள் ஏன் த.தே.ம.முன்னிக்கு வாக்களிக்னவில்லை?????nedukkalapoovam

வடக்கில் ஒரேயொரு ஆசனம்.. வென்ற ஒட்டுக்குழு ஈபிடிபி தான் தனிய நின்றது. அது 1990 இல் இருந்து சிங்களப் படை இருப்போடு வென்று கொண்டு தான் இருக்கிறது. அதன் சூட்சுமம் உலகம் அறியும். அது தான் மனித உரிமைகள் கண்காணிப்பகம்.. மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் இவற்றை பகிரங்கமாவே பராமிலிரரி அமைப்புக்கள் என்று சொந்த மக்களை சித்திரவதை செய்யும் அமைப்புக்கள் என்றும் இவற்றை.. பிரகடனப்படுத்தி உள்ளன. வாக்குப் போட்ட யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு ஆங்கில அறிவு கம்பியோ என்னவோ..??!tw_blush:

மேலும் புளொட் ஒட்டுக்குழு.. வவுனியாவில் வைத்து மக்களால் தோற்கடிக்கப்பட்டு.. அரசியல் அனாதைகளாப்பட்டு.. பின் இப்போ தமிழ் தேசிய நிழலில் அடைக்கலம் தேடி அங்கு மக்களை ஏய்கிறது. இந்த அமைப்பும் சர்வதேச அளவில் மோசமான அமைப்புக்களில் மனித உரிமைகளை மதிக்காத ஒன்றாக வரையப்பட்டுள்ளது.

மேலும் கருணா குழு.. பிள்ளையான் குழு ஒட்டுக்குழுக்கள். இவையும் சர்வதேச அளவில் மோசமான அமைப்புக்களாக இன்னும் மனித உரிமைகளை மதிக்காத அமைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவை கிழக்கு மக்களால் விரட்டி அடிக்கப்பட்டு விட்டன. முன்னைய தேர்தல்களில் எப்படி வென்றார்கள் என்ற சூட்சுமம் வெளியில் வந்திட்டுது. அதே வகையில் சித்தார்த்தன்.. சரவண்பவன்..சுமந்திரனின் விருப்பு வாக்கு ரகசிங்களும் ஓர்  நாள் அம்பலத்துக்கு வரும். 

இதனை எல்லாம் வாக்குப் போட்ட தமிழ் மக்கள்.. (பாவம் தமிழ் மக்கள் அவர்களின் பெயரால் யார் யார் வாக்குப் போட்டார்களோ...?) அரசியல் மனித உரிமைகள் சொந்த இன நலன்கள் விளங்கி வாக்குப்போட்டனர் என்று விளக்க முனையும்.. நீங்கள் தான் பாவம். கண்றாவியாக காட்சி அளிக்கிறீர்கள். த.தே.ம.முன்னணி அல்ல. tw_blush:

இந்த அமைப்புக்கள் இன்றும் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.. சம்பந்தன் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக இவற்றை தன் மடிக்குள் வைத்துக் கொண்டு.. தன் கை இரத்தக்கறை படியாத அரசியல் செய்வதாக.. தமிழ் மக்களின் பாசையில் சொன்னால்.. மக்களுக்கு பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். tw_angry:

ஏன் டக்கிளஸ் உங்க ஐரோப்பா கனடாவில் திறந்துள்ள பிட்சா கடை வருமானம் எங்க போது.. சித்தார்த்தன்.. கருணா.. பிள்ளையான். சொந்த மக்களை சித்திரவதை செய்த பின் விடுவிக்க.. வாங்கும் கப்பம் எங்க இருந்து வருகுது.. இவற்றையும் கணக்கில் போடவும். ஒரு முன்னாள் போராளியை விடுவித்து அவரை அவரின் குடும்பத்தோடு இணைக்க.... சுமார் 25 இலட்சம் முதல் ஒரு கோடி வரை கப்பம் வாங்கப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. இவை பற்றி பீஸ்மரோ.. ஒட்டுக்குழு அபிமானிகளோ வாயும் திறப்பதில்லை. திறந்தால் நாறிடும் என்றாக்கும். இந்தப் பணம் புலம்பெயர் தேசங்களில் இருந்து தான் போகுது. tw_blush:

சும்மா விசமத்துக்கு உண்மைகளை மறைத்து எழுதும் பீஸ்மர் போன்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் அளிப்பது வீண் வேலை என்றே தெரிகிறது. விளங்கிக் கொள்ளும் பக்குவமும் இல்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

தலைவர் கை அசைத்தால் மக்கள் வாக்களிப்பார்கள் பகீஷ்கரியுங்கள் என்றால் பகீஷ்கரிப்பார்கள் செய் அல்லது செத்துமடி என்ற கோட்பாடோடு போரடியவர்கள். ஆனால் நீங்கள் அதுவும் புலத்து கூழ் அமைப்புக்கள் அவர்களின் வேட்கையை விற்று பிழைப்பு நடத்தும் கூட்டத்தின் கதையை அந்த மக்கள் கேட்கபோவதில்லை ஏன் என்றால் மக்கள் போரட்டததுடன் வாழ்ந்தவர்கள் சோம்பேறி கூட்டத்தின் போத்திலுக்கு பத்தி எழுதும் பேர்வழிகளின் எழுத்துக்களை எடுத்து இங்கு போட்டு வியாபாரம் மட்டும் தான் செய்யமுடியும் அந்த மக்கள் துல்லியமாக தான் வாழ்கிறார்கள் நெடுக்க்ஷ் காலுக்கும் முழங்காலிற்கும் முடிச்சுபோடுகிறார் இவரும் கொத்ரொட்டிகூட்டத்தை சேர்ந்த ஒரு பெரும் வியாபாரிபோல????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சரியான கட்சி எனில் ஏன் ஜனநாயக போராளிகள் கட்சி உதயமானது?

போருக்குப் பின்னைய கால கட்டத்தில் போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவிகள் புரிந்திருந்தால் அந்த விபரங்களை தர முடியுமா?

உங்கள் அனைவராலும் துரோகிப் பட்டம் கட்டப்பட்ட கே.பி.யால் போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் பிள்ளைகள், பொதுமக்களின் பிள்ளைகள் மற்றும் கல்வி கற்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு உதவ முடியுமானால் ஏன் கஜேந்திரகுமார் அணியால் செய்ய முடியாது?

அது சரி, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செலவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நெடியவன் குழு 15 லட்சத்துக்கும் அதிகமான பணத்தினை அனுப்பியது. அப்போது போட்டியிட்டு தோல்வியடைந்த பொருளியல் ஆசிரியர் வரதராஜன், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வசதியானவர் என்பதனால் அவருக்கு பணம் கொடுக்கத் தேவை இல்லை என்று கருதி இவர்கள் தமக்கான பணத்தினை பங்கிட்டு எடுத்து விட்டனர்.

வெளிநாட்டில் இருந்து பணம் வந்த தகவலை அறிந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எங்கே தனது பணம் எனக் கேட்க பங்கிட்டு எடுத்துக்கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர் தனது பங்கினைத் தர வேண்டும் என அதில் உறுதியாக நின்று அந்தப் பணத்தினைப் பெற்று இருக்கின்றார்.

இங்கே இதனை நான் பொய்யாக கூறுகின்றேன் என நீங்கள் எழுதுவீர்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதனை என்னிடம் கூறியவர்களே அவர்கள்தான்.

ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை கஜேந்திரகுமாரின் பாட்டனார், தந்தையார் சேகரித்து வைத்துவிட்டு போய் இருக்கின்றார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உங்களுக்கு கிளைமோர் கதை கூறியவரின் விண்ணாணம் இன்னும் புரியவில்லையா இப்போ தேசிய முன்னணியிலிருந்து ஒருவர் வண்டில் ஓடியிருக்கிறார். 

கேபியிடம் புலியின் காசு இருக்கிறது சிங்கத்தின் கூண்டில் பத்திரமாக இருக்கிறார் தன்னை உத்தமனாக காட்ட கோத்தாவின் பணிப்புரையில் அந்த "சேவையை" ஆரம்பித்தார் இனியும் தொடர்வார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சரியான கட்சி எனில் ஏன் ஜனநாயக போராளிகள் கட்சி உதயமானது?

போருக்குப் பின்னைய கால கட்டத்தில் போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவிகள் புரிந்திருந்தால் அந்த விபரங்களை தர முடியுமா?

உங்கள் அனைவராலும் துரோகிப் பட்டம் கட்டப்பட்ட கே.பி.யால் போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் பிள்ளைகள், பொதுமக்களின் பிள்ளைகள் மற்றும் கல்வி கற்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு உதவ முடியுமானால் ஏன் கஜேந்திரகுமார் அணியால் செய்ய முடியாது?

அது சரி, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செலவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நெடியவன் குழு 15 லட்சத்துக்கும் அதிகமான பணத்தினை அனுப்பியது. அப்போது போட்டியிட்டு தோல்வியடைந்த பொருளியல் ஆசிரியர் வரதராஜன், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வசதியானவர் என்பதனால் அவருக்கு பணம் கொடுக்கத் தேவை இல்லை என்று கருதி இவர்கள் தமக்கான பணத்தினை பங்கிட்டு எடுத்து விட்டனர்.

வெளிநாட்டில் இருந்து பணம் வந்த தகவலை அறிந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எங்கே தனது பணம் எனக் கேட்க பங்கிட்டு எடுத்துக்கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர் தனது பங்கினைத் தர வேண்டும் என அதில் உறுதியாக நின்று அந்தப் பணத்தினைப் பெற்று இருக்கின்றார்.

இங்கே இதனை நான் பொய்யாக கூறுகின்றேன் என நீங்கள் எழுதுவீர்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதனை என்னிடம் கூறியவர்களே அவர்கள்தான்.

ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை கஜேந்திரகுமாரின் பாட்டனார், தந்தையார் சேகரித்து வைத்துவிட்டு போய் இருக்கின்றார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.

தமிழ் மக்களுக்கான ஒரு சரியான அரசியல் தலைமைகள் உருவாகும் வரை கோமாளித்தனங்களுக்கு பஞ்சம் இல்லை ....

யார் ஒட்டுகுழுக்கள் என்பதை வட கிழக்குமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி காட்டியுள்ளனர். அடுத்த கேள்வி இவ்வளவு பெருநிதியை ரொட்டிகடை மக்கள்சொத்துக்களின் வருமானம் புலபாடசாலைகளின் வருமான் மாவீரர்களை சொல்லி சேர்க்கும் நிதிகள் விளையாட்டுவிழாக்கள் இவ்வளவு வருமானமும் 2009திலிருந்து சுமார் 6வருடவருமானம் அந்தமக்களிற் உதவிசெய்வதாக தான் சொல்லபடுகிறது அதுவும் இரகசிமாக அப்ப அந்த உதவிபெறும் மக்க்ள சுமார் 40000 குடும்பம் என்று பார்தாலும் இவர்கள் ஏன் த.தே.ம.முன்னிக்கு வாக்களிக்னவில்லை?????nedukkalapoovam

காசு கொடுத்தவனே  கவலைப்படவில்லை  சும்மா றோட்டில போறவர் எல்லாம் கணக்கு கேட்கினம்...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.