Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

புதிய தலைமுறை - தலைவர்களுடன் பயணிக்கிறது. - சீமான்

Part 1

Part 2

Part 3

Part 4

 

நன்றி நாதம்ஸ்..

 

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முற்றுமுழுதான மாற்றம்..

அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்..

மக்களின் குறை கேட்க நாங்கள் வரவில்லை.. மக்களின் குறை தீர்க்க வருகிறோம்.."

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இந்த திரியையும் கொஞ்சமெட்டிப் பாருங்கப்பா.

 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12.03.2016: திருச்சி பொதுக்குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் சந்திப்பில்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14.03.2016: கும்பகோணம் தொகுதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில்..

10352613_10154092595982074_7696770836817

888_10154092596202074_347088961620553100

12832493_10154092596817074_8324395448757

1797317_10154092597017074_69709633077103

1625523_10154092597257074_68411597059055

10404256_10154092597692074_3853897879378

12821636_10154057117067074_4094604341764

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14.03.2016: அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்.

11872140_192890077751426_752022157411348

12823451_192890031084764_284306163641430

12829244_192890014418099_159305301768973

12841342_192890164418084_332148109520728

773670_192890234418077_43421623642485634

12799145_190265361347231_772762758621106

  • கருத்துக்கள உறவுகள்

சங்கர் கொலையில் ஏன் மெளனம் காக்கிறார் சீமான்?

வைகோ, சுப வீ எல்லோரும் கண்டிச்சு அறிக்கை விட்டாச்சு. அண்ணன் ஏன் மெனெக்கெடுறார்?

அண்ணி தேவர் இனம் என்பதால் புலி பதுங்கிறதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/02/2016 at 4:39 PM, goshan_che said:

காளிமுத்து போட்டோ ஏன்வைத்தீர்கள் என்ற கேள்விக்கு திக்கித்திணறீட்டாப்பல நம்ம தம்பி ?

காளிமுத்து என்ன மொழிப்போரிலயா செத்தார்? கருணாநிதி வைகோவுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பு அரசியல் செய்த்து, பின் அதை வைத்து எம் எல் ஏ ஆகி, கருணாநிதி, எம்ஜிஆர், கடைசியில் ஜெயாவை கும்பிட்டு வாழ்ந்து, நோய் வந்து செத்துப்போன ஒரு பக்கா ஊழல்வாதி காளிமுத்து.

தன்மாமனார் என்ற ஒரே காரணுத்துக்காக காளிமுத்துவை மொழிப்போர் ஈகியருடன், தாளமுத்து நடராஜனுடன் சமன் செய்யும் சீமான் எந்த மூஞ்சையை வைத்து மற்றயவர்களை இனி குடும்ப அரசியல் என்று பேசுவார்?

ஆனால் இந்த ஒன்றிலாவது பிரபாவை அடியொற்றி பின்பற்றுகிறார் சீமான்.

அண்ணன் - ஈழ விடுதலைக்கு ஏதுவும் செய்யாத தன் மாமனார் ஏரம்பு வாத்தியை, நாட்டுப்பற்றாளராக்கி, புலிக்கொடி போர்த்தினார்.

தம்பி தன் ஊழல் மாமனாரை மொழிப்போர் ஈகி என்கிறார்.

https://www.facebook.com/groups/1625075474397241/permalink/1688419138062874/

 

  • கருத்துக்கள உறவுகள்

1526739_1757796747788172_597345693551077

  • கருத்துக்கள உறவுகள்

Stern message for the voters who are interested in getting money to cast their vote

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் போஸ்ட், போட்டோ மீம்ஸ் எல்லாம் செல்லாது, செல்லாது.

இலங்கை அகதி ரவீந்திரன் மரணத்தில் ஊருக்கு முன் ஒப்பாரி வைத்த சீமான் ஏன் இன்னும் ஒரு அறிக்கை சங்கர் மரணத்தை கண்டிச்சு விடவில்லை?

தேவரும், நாடாரும் மட்டும்தான் தமிழரோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தேவரும், நாடாரும் மட்டும்தான் தமிழரோ?

 

 

நாம் தமிழர் என்று அவையள் நிக்க, இவர் எப்ப பார்த்தாலும் அதுக்குள பூந்து விசாரித்து, ஒரே சாதிக் கதை தான் கதைக்கிறார்.

எங்களுக்கு உந்த விபரம் தேவையில்லை. கள விதிகளுக்குள நிற்போம்.

உதுகள கதைக்கப் போய் நம்மூர்ல வந்து முடிந்து தேவையில்லா தலைவலி.

நான் வந்த புதிதில, ஆறுமுக நாவலரைப் பற்றி கதைக்கப் போய், அவர் சாதி வெறியர் தெரியுமோ என்று ஒருத்தர் வர, அட இதென்னடா பிரச்சனை என்று வெறுத்துப் போனேன்.

நம்ம விசுகர் வந்து அண்டைக்கு தந்த சப்போட் இல்லாட்டி, நாதமுனி அவட்... (பிறகு வேற பெயரில் வந்திருப்பேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

சீமான் இதில் மெளனம் காக்க காரணம்

1) தேவர் வாக்குகளை குறிவைக்கிறார்

2) தேவர் இனத்தில் பெண் எடுத்திருக்கிறார்.

ஜெயாவும் சீமானும் மட்டுமே இந்த கொலையை இன்னும் கண்டிக்கவில்லை. ராமதாசு கூட கண்டிச்சாச்சு.

இந்த வெக்கம் கெட்ட சாதி அரசியல் நிச்சயம் துகிலுரியப் படவேண்டியது கட்டாயம்.

நாவலர் - கடவுள்பாதி/மிருகம் பாதி - பெரும் தொண்டாற்றிய அதே வேளை பெரும் சாதிவெறியராயும் இருந்திருக்கிறார் என்பதே சார்பில்லா பார்வையாளர் சொல்வது.

தலைப்பை விட்டு விலகாமல் நாவலரை பற்றி சமயம் கிடைத்தால் இன்னோர் திரியில் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா,

ஆளை விடுங்கோ. நான் இந்த வெளயாட்டுக்கு வரல்ல!

உங்களிடம் நேரம் தாராளம் என்று புரிகிறது

I don't have that luxury !

51 minutes ago, goshan_che said:

நாமு,

சீமான் இதில் மெளனம் காக்க காரணம்

1) தேவர் வாக்குகளை குறிவைக்கிறார்

2) தேவர் இனத்தில் பெண் எடுத்திருக்கிறார்.

ஜெயாவும் சீமானும் மட்டுமே இந்த கொலையை இன்னும் கண்டிக்கவில்லை. ராமதாசு கூட கண்டிச்சாச்சு.

இந்த வெக்கம் கெட்ட சாதி அரசியல் நிச்சயம் துகிலுரியப் படவேண்டியது கட்டாயம்.

நாவலர் - கடவுள்பாதி/மிருகம் பாதி - பெரும் தொண்டாற்றிய அதே வேளை பெரும் சாதிவெறியராயும் இருந்திருக்கிறார் என்பதே சார்பில்லா பார்வையாளர் சொல்வது.

தலைப்பை விட்டு விலகாமல் நாவலரை பற்றி சமயம் கிடைத்தால் இன்னோர் திரியில் பார்ப்போம்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வரேல்ல.

அதுதான் இன்னோர் திரியில் என்று வெட்டி விட்டனான். 

Time is not the only luxury you don't have, there is also this small matter called knowledge. ?

இதே திரியை 1 ம் பக்கத்தில் இருந்து வாசிக்கவும். எத்தனை தரம், தேர்தல் வரை இனி எழுதமாட்டேன் என்று எழுதி உள்ளீர்கள் என்று புரியும்.

ஆனாலும் உங்கள் அறிவுப்பசி மீண்டும் மீண்டும் வந்து மொக்கேனப்பட வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

நானும் வரேல்ல.

அதுதான் இன்னோர் திரியில் என்று வெட்டி விட்டனான். 

Time is not the only luxury you don't have, there is also this small matter called knowledge. ?

இதே திரியை 1 ம் பக்கத்தில் இருந்து வாசிக்கவும். எத்தனை தரம், தேர்தல் வரை இனி எழுதமாட்டேன் என்று எழுதி உள்ளீர்கள் என்று புரியும்.

ஆனாலும் உங்கள் அறிவுப்பசி மீண்டும் மீண்டும் வந்து மொக்கேனப்பட வைக்கிறது.

முதல்ல இருந்து மெனக்கட்டு வாசித்தீர்களா?

மாவீரர் தான்! அது தான் சொன்னேனே! உங்கள் 'பேரறிவுக்கு' முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

நமது சிற்றறிவு அம்புட்டு தான் தல! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

vote-012சீமானின் தலித் விரோத சாதி அரசியல்

http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/ 

தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான்,  பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக்  கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான்,  இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.  அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு  ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும்  ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

ஒரு சாதி வெறியனை பிரபாகரனின் தம்பி என்று கொண்டாடுவதை விட மாவீரகளை வேறு எந்த வகையிலும் அவமதித்து விட முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணியில் இணைந்தது தெலுங்கர் முன்னேற்ற கழகம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தெலுங்கர் முன்னேற்ற நிறுவனத் தலைவர் ஜி. காமாட்சி நாயுடு தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர். திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி. காமாட்சி நாயுடு தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்தத மாநில நிர்வாகி, பொதுச்செயலாளர் என்.சந்திரபாபு நாயுடு - பொருளாளர் பிரசன்ன பாண்டியன் - அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் க.பொன்முடி, இராணிப்பேட்டை ஆர்.காந்தி தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறைச் செயலாளர் இரா.கிரிராஜன், சட்டத்துறை துணைச் செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/telungu-parties-join-dmk-alliance-249053.html

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நேர்காணல் - தலைவர்களுடன் நியூஸ்7 தமிழ் - 14மார்2016

Part 01

Part 02

Part 03

Part 04

Part 05

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முகநூல் நட்பின் பதிவு:

சில மாதம் முன் என்னை சிந்திக்க வைத்து திசை மாற்றிய முக்கிய பதிவு..
நான் ஏன் இனவாதியானேன்?
ஏன் எனக்கு திராவிடம் முதல் எதிரி?

1.தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் முதல் தெற்கெல்லை குமரி வரை தெலுங்கர், கன்னடர், மளையாளிகளிடம் பறிபோக மிச்சமிருக்கும் கோவனத்துண்டு தமிழகத்தின் நிலமும், வணிகமும், அரசியலும் வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசும் ஜரிகை தலைப்பாகை வந்தேறிகளின் வசமானது எப்படி?

2.ஆரியர் அடிமைப்படுத்திய வரலாற்றைப் பேசும் திராவிடப் பொரச்சியவாதிகளின் நொள்ளைக் கண்களில் 14ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஆண்டு அடிமைப் படுத்திய நாயக்கர்கள் வரலாறு தெண்படுவதில்லையே எப்படி?

3.ராசராசன்களைத் தோண்டியெடுத்து போஸ்ட்மார்டம் செய்து வர்ணாசிரமவாதி என ஆய்வறிக்கை வழங்கும் திராவிட பகுத்தறிவுப் பொங்கப் பானைகள், "கர்நாடகத்துக் கடம்ப பேரரசன் மயூரவர்மன் அரசவையில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்டதே மனுதர்ம சட்டம்" என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மட்டும் முன்வாசலிலும் பின்வாசலிலும் வாழைப்பழத்தைத் தினித்துக்கொண்டு பம்முகின்றனரே எப்படி?

4.முகமதியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி வந்தேறிய வடுக இனப்பெண்கள் மேனாமினுக்கி சிலுக்கு உடை தரித்திருக்க, எம்குலப் பெண்கள் ரவிக்கையின்றி தண்ணீர்குடம் சுமக்கப் பனிக்கப்பட்டது எப்படி? சிலுக்கு உடை மினுக்கிகளின் சொர்கபுரி வாசலுக்குள் எம்மன்னர்களின் சிற்றரசுகள் சமாதியானது எப்படி?

5.வேட்டைநாய்களுடன் பிழைக்க வந்த வெண்ணைகள் பாளையக்காரனாவும், நிலவுடைமை சமீன்தாராகவும் ஆனதெப்படி? ஆட்டுத்தலைக்கும், கம்பங்கதிருக்கும், கள்ளுமொந்தைக்கும் ஆதித்தமிழரின் அடிமடி எழுதி வாங்கப் பட்டது எப்படி?

6.வள்ளலாரும், வைகுண்டரும், இரட்டைமலையாரும் மறைக்கப்பட்டு வடுக இனவெறி பொரச்சியாளர்கள் மட்டும் பெரியார்களாக கட்டமைத்துக் காட்டப்பட்டது எப்படி?

7.நட்சத்திரங்களையும், காலத்தையும், கோள்களையும், வான்வெளியையும் கணித்து பிரபஞ்சத்தின் அசைவையே ஒற்றை ஓலைக்குள் சுருக்கி எழுதிய எம் சித்தர்களின் அறிவியலும், முன்னோரை வழிபட்ட எம் தமிழ்க்குடியின் மெய்யியலும் குருட்டு பகுத்தறிவாளர்களின் வறட்டு வாதங்களால் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப் பட்டது எப்படி?

8.தமிழர்கள் மட்டும் பலியான இந்தியெதிர்ப்புப் போரின் பலன்களை எல்லாம் திராவிடர் மட்டும் அறுவடை செய்தது எப்படி?

9.பள்ளனும், பறையனும், தேவனும், வண்ணியனும், நாடாரும், கோனாரும் வெட்டிக்கொண்டு சாக நாயக்கனும்,ரெட்டியும்,மார்வாடியும் தமிழ்நிலத்தில் உல்லாச கானம் பாடி உவகையடைவது எப்படி?

10.தமிழ்ப்பூசாரிகள் உண்டக்கட்டிக்கும், உருண்டைச் சோத்துக்கும் மணியடித்துக் கொண்டிருக்க தமிழகத்திலுள்ள பெரும்பாலான வருமானம் கொழிக்கும் கோயில்கள் தெலுங்குப் பிராமணர்கள் வசமானது எப்படி?

11.இசைக்கே இலக்கனம் வகுத்துக் கொடுத்த தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, எங்கள் காதுகளில் பால்டாய்ல் ஊற்றுகிறதே எப்படி?

12.உலகிற்கே பொதுமறை வகுத்தளித்த எம்பாட்டன்கள் கோலோட்சிய இலக்கிய உலகில், பிறப்புறுப்புகளை வெட்டவெளிச்சாமாக விளிக்கும் சரோஜாதேவி வகையறா வேற்றின இலக்கியவாதிகளே புற்றீசலாகக் கிளம்புவது எப்படி?

13.தமிழகத்தின் பலம்பொருந்திய திரைஊடகத்தை வந்தேறிகளின் கவர்ச்சிப் பொறியாக்கி தமிழகத்தை ஆளும் வடுகர்களையே பன்றியிட்ட குட்டிகளாய் பிதுக்கித் தள்ளுகிறதே எப்படி?

14.ஊராட்சி உறுப்பினராவதற்கே தமிழன் ததிங்கினத்தோம் தாளமிட்டுக் கொண்டிருக்க தமிழகத்தின் ஆட்சி அதிகார குடுமி மட்டும் வடுகர்களிடம் சிக்கி சீவி சிங்காரித்து சிரித்து நிற்கிறதே எப்படி?

எல்லாவற்றுக்கும் மேலாக, போர்தொடுத்த இந்தியத்திற்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த திராவிட ஆட்சியாளர்களின் கயமைத்தனத்தை தாங்கமுடியா ஆத்திரத்தில் வெந்து தனிந்த ஈழத்துச் சாம்பல் மேட்டில் நான் தமிழின வெறியனானேன்!

இனவெறியன் என்பதில் பெறுமை கொள்கிறேன்...

 
Photo de Shanthini Sritharan.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2016 at 0:51 PM, goshan_che said:

நாமு,

சீமான் இதில் மெளனம் காக்க காரணம்

1) தேவர் வாக்குகளை குறிவைக்கிறார்

2) தேவர் இனத்தில் பெண் எடுத்திருக்கிறார்.

ஜெயாவும் சீமானும் மட்டுமே இந்த கொலையை இன்னும் கண்டிக்கவில்லை. ராமதாசு கூட கண்டிச்சாச்சு.

இந்த வெக்கம் கெட்ட சாதி அரசியல் நிச்சயம் துகிலுரியப் படவேண்டியது கட்டாயம்.

நாவலர் - கடவுள்பாதி/மிருகம் பாதி - பெரும் தொண்டாற்றிய அதே வேளை பெரும் சாதிவெறியராயும் இருந்திருக்கிறார் என்பதே சார்பில்லா பார்வையாளர் சொல்வது.

தலைப்பை விட்டு விலகாமல் நாவலரை பற்றி சமயம் கிடைத்தால் இன்னோர் திரியில் பார்ப்போம்.

Quote

 

உடுமலைப்பேட்டையில் சங்கரின் ஆணவக் கொலையை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் வருகிற திங்கள்கிழமை(21/03/2016)அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கேட்டத்தில் நடக்க உள்ளது நாங்கள் வெறும் அறிக்கையை மட்டும் கொடுத்துட்டு காணாமல் போகும் அரசியல் நகுடபாண்டிகள் கிடையாது முதலில் களத்துல இறங்கும் புரட்சியாளர்கள் காதல் ரசம் பொழிவதுபோல் வாய் மொழி வசனங்களை அள்ளி விலாசும் மட்டமான அரசியல்வாதிகள் கிடையாது ஒடுக்கபடுபவர்கள் பக்கம் நிற்க்கும் கிளர்ச்சியாளர்கள்....

#‪#‎நாங்கள்‬ திரும்பவும் சொல்கிறோம் நாம் தமிழர் கட்சி மற்றும் ஒரு அரசியல் கட்சி கிடையாது மாற்று அரசியல் புரட்சி.....

 

திங்கட் கிழமை ஆர்ப்பாட்டம் வைத்திருக்கிறார்களாம்.. தேவர் சாதியில் பொண்ணு எடுத்து வாக்குகள் பறிக்கும் தந்திரமா? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா அண்ணன் ஒரு மாதிரி முழிச்சுகிட்டார். சமூகவலைதளங்களில் கேட்கப் பட்ட கேள்விகள் அண்ணரை 3 நாளுக்கப்பறாமாச்சும் கும்பகர்ண தூக்கம் கலைத்து எழ வைத்தது சந்தோசம்.

அதுசரி அறிக்கையும் கொடுத்து கூட்டமும் போட்டா அண்ணர் குறைஞ்சிடுவாராமா?

ஏனிந்த 3 நாள் தாமதம்? நான் அடிக்கிறமாரி அடிக்க நீங்க அழுகிறமாரி அழுங்கன்னு ஒப்பத்தம் போட நாழி ஆகுமா இல்லையா? கூடவே கயல் அண்ணி (ஆமா அண்ணருக்கும் அண்ணிக்கும் வயது வித்தியாசம் பெரியார் மணியம்மை ரேஞ்சாமே? இதிலயாவது பெரியாரின் பேரன் ஆகட்டும் ). வேற கண்டிசன் போட்டிருக்கும்.

எல்லாத்தையும் தாண்டி ஒருவாறு ஒரு முடிவு எடுக்கவே அண்ணருக்கு 3 நாள் தேவைப்பட்டிருக்கு.

இவர்தான் கச்சதீவ மீட்க போறார் ? கருமம்.

பிரபாகரன் என்ன, பொன்சேக்காவின் கால்தூசுக்கும் பெறமாட்டார் இந்த பொண்டாட்டி தாசர்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னெண்டு தெரியேல்லை உங்கை கொஞ்சப்பேருக்கு தான் தன்ரை இனம் மொழி பாசம் நாடு எண்டு கதைக்கிறவனை கண்டால் மிளகாய்த்தூள் படக்கூடாத இடத்திலை பட்டமாதிரி துடிச்சுக்கொண்டு திரியினம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

Seeman funny speech on TN Politicians

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்பாடா அண்ணன் ஒரு மாதிரி முழிச்சுகிட்டார். சமூகவலைதளங்களில் கேட்கப் பட்ட கேள்விகள் அண்ணரை 3 நாளுக்கப்பறாமாச்சும் கும்பகர்ண தூக்கம் கலைத்து எழ வைத்தது சந்தோசம்.

அதுசரி அறிக்கையும் கொடுத்து கூட்டமும் போட்டா அண்ணர் குறைஞ்சிடுவாராமா?

ஏனிந்த 3 நாள் தாமதம்? நான் அடிக்கிறமாரி அடிக்க நீங்க அழுகிறமாரி அழுங்கன்னு ஒப்பத்தம் போட நாழி ஆகுமா இல்லையா? கூடவே கயல் அண்ணி (ஆமா அண்ணருக்கும் அண்ணிக்கும் வயது வித்தியாசம் பெரியார் மணியம்மை ரேஞ்சாமே? இதிலயாவது பெரியாரின் பேரன் ஆகட்டும் ). வேற கண்டிசன் போட்டிருக்கும்.

எல்லாத்தையும் தாண்டி ஒருவாறு ஒரு முடிவு எடுக்கவே அண்ணருக்கு 3 நாள் தேவைப்பட்டிருக்கு.

இவர்தான் கச்சதீவ மீட்க போறார் ? கருமம்.

பிரபாகரன் என்ன, பொன்சேக்காவின் கால்தூசுக்கும் பெறமாட்டார் இந்த பொண்டாட்டி தாசர்.

 

 

அதிகாரபூர்வ அறிக்கை எதையும் என்னால் பெற முடியவில்லை. ஆனால் மணி செந்தில் இதை கண்டித்திருக்கிறார். இவர் முக்கிய பொறுப்பில் உள்ளவர்.

அதுசரி.. ராமதாஸ் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர் எழுந்தே போய்விட்டார். இப்போது கண்டித்துள்ளார். ஐயாவும் அம்மாவும் ஒரு அறிக்கை கூட விடவில்லை. என்ன பண்ணலாம்? 

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.