Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

10 minutes ago, இசைக்கலைஞன் said:

 

இசை

இதுவரை சீமானுக்காக இவ்வளவு பில்டப்பையும் இணைத்தீர்கள். இப்ப தோத்தவுடன் அதற்கும் நொண்டி சாட்டுகளை இணைய்க்கிறீர்களே . உங்கட கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இசை

இதுவரை சீமானுக்காக இவ்வளவு பில்டப்பையும் இணைத்தீர்கள். இப்ப தோத்தவுடன் அதற்கும் நொண்டி சாட்டுகளை இணைய்க்கிறீர்களே . உங்கட கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

நான் இணைத்த காணொளிகள் தேர்தலுக்கு முந்தியவை. ("About a week ago" என்று உள்ளதைக் கவனிக்கவில்லையா?) அதிலேயே தமக்கு தோல்வியாக வரக்கூடியவை எவை என்பதை சொல்லிவிட்டார். அதனால்தான் மீண்டும் இணைத்தேன். ஆத்திரம் அறிவை மறைக்கும். குறைக்கும். ஆகவே வீண் விவாதங்களை தவிர்த்துவிட்டு முழுமையாக தரவுகளைப் பாருங்கள். அறிவுக்கண் கொண்டு சிந்தியுங்கள். நம்மைச் சுற்றி நடப்பவைகள் விளங்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இசை

இதுவரை சீமானுக்காக இவ்வளவு பில்டப்பையும் இணைத்தீர்கள். இப்ப தோத்தவுடன் அதற்கும் நொண்டி சாட்டுகளை இணைய்க்கிறீர்களே . உங்கட கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

கண்னை திறந்து போட்டு பாருங்கோ உலகத்தில் என்ன நடக்குது என்று , குழந்த பிள்ளைகள் அறியாமல் செய்யும் குழப்படிகளை கூட  பார்த்து ரசிக்கலாம் , ஆனால் நீங்கள் கக்கும் நஞ்சை என்னால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை , அடுத்தவர்கள் வேர்வை சிந்தி செய்த‌ தியாகத்தை கொச்சைப் படுத்தும் நீங்கள் எல்லாம் , இந்த திரியில் கருத்து எழுத தகுதி அற்றவர் , இந்த காணொளி அண்ணன் சீமான் மே 16 அல்லது 17ம் திகதி ஊடகத்துக்கு குடுத்த பேட்டி , உங்களுக்கு சீமானை பிடிக்காட்டி பேசாமை போங்கோ , சும்மா நாய் குரைக்கிர மாதிரி இதுக்கை நின்று குரைக்க வேண்டாம் :cool:

1 hour ago, இசைக்கலைஞன் said:

நான் இணைத்த காணொளிகள் தேர்தலுக்கு முந்தியவை. ("About a week ago" என்று உள்ளதைக் கவனிக்கவில்லையா?) அதிலேயே தமக்கு தோல்வியாக வரக்கூடியவை எவை என்பதை சொல்லிவிட்டார். அதனால்தான் மீண்டும் இணைத்தேன். ஆத்திரம் அறிவை மறைக்கும். குறைக்கும். ஆகவே வீண் விவாதங்களை தவிர்த்துவிட்டு முழுமையாக தரவுகளைப் பாருங்கள். அறிவுக்கண் கொண்டு சிந்தியுங்கள். நம்மைச் சுற்றி நடப்பவைகள் விளங்கும்.

 

 

4 minutes ago, பையன்26 said:

கண்னை திறந்து போட்டு பாருங்கோ உலகத்தில் என்ன நடக்குது என்று , குழந்த பிள்ளைகள் அறியாமல் செய்யும் குழப்படிகளை கூட  பார்த்து ரசிக்கலாம் , ஆனால் நீங்கள் கக்கும் நஞ்சை என்னால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை , அடுத்தவர்கள் வேர்வை சிந்தி செய்த‌ தியாகத்தை கொச்சைப் படுத்தும் நீங்கள் எல்லாம் , இந்த திரியில் கருத்து எழுத தகுதி அற்றவர் , இந்த காணொளி அண்ணன் சீமான் மே 16 அல்லது 17ம் திகதி ஊடகத்துக்கு குடுத்த பேட்டி , உங்களுக்கு சீமானை பிடிக்காட்டி பேசாமை போங்கோ , சும்மா நாய் குரைக்கிர மாதிரி இதுக்கை நின்று குரைக்க வேண்டாம் :cool:

 

1 hour ago, ஜீவன் சிவா said:

இதுவரை சீமானுக்காக இவ்வளவு பில்டப்பையும் இணைத்தீர்கள். இப்ப தோத்தவுடன் அதற்கும் நொண்டி சாட்டுகளை இணைய்க்கிறீர்களே . உங்கட கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளி அண்ணன் சீமான் மே 13ம் திகதி ஊடகத்துக்கு அளித்த பேட்டி tw_blush:

3BTX.jpg

2 minutes ago, பையன்26 said:

இந்த காணொளி அண்ணன் சீமான் மே 13ம் திகதி ஊடகத்துக்கு அளித்த பேட்டி tw_blush:

3BTX.jpg

எனது கேள்வி இதை இப்ப மறுபடியும் ஏன் இணைக்கிறீர்கள் என்பது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன எழுதி இருக்கீங்க , அதுக்கு தான் இந்த காணொளியை இணைத்தேன்:cool:

1 hour ago, ஜீவன் சிவா said:

இதுவரை சீமானுக்காக இவ்வளவு பில்டப்பையும் இணைத்தீர்கள். இப்ப தோத்தவுடன் அதற்கும் நொண்டி சாட்டுகளை இணைய்க்கிறீர்களே . உங்கட கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

இதுதான் நான் எழுதினது.

4 minutes ago, பையன்26 said:

நீங்க என்ன எழுதி இருக்கீங்க , அதுக்கு தான் இந்த காணொளியை இணைத்தேன்:cool:

சும்மா என்ன எழுதினதெண்டே வாசிக்காம தயவு செய்து கருத்திடாதீர்கள்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணை இந்த காணொளி இணைத்தன் மூலம் ,அண்ணன் சீமானுக்கு முதலே தெரிந்து விட்டது என்ன நடக்கும் என்று , இது ஒன்றும் தேர்தல் தோல்விக்காக குடுத்த காணொளி இல்லை ,ஓட்டு போட‌ ஆரம்பிக்க முன்னமே குடுத்த காணொளி , புரியுதா :cool:

1 minute ago, பையன்26 said:

இசை அண்ணை இந்த காணொளி இணைத்தன் மூலம் ,அண்ணன் சீமானுக்கு முதலே தெரிந்து விட்டது என்ன நடக்கும் என்று , இது ஒன்றும் தேர்தல் தோல்விக்காக குடுத்த காணொளி இல்லை ,ஓட்டு போட‌ ஆரம்பிக்க முன்னமே குடுத்த காணொளி , புரியுதா :cool:

ஐயோ கடவுளே இப்ப ஏன் மறுபடியும் என்பதுதான் எனது கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே இந்த உறவுக்கு நல்ல எண்னம் நல்ல புத்திய குடுப்பா , நன்பரே நீங்கள் தான் கேள்வியை ஆரம்பிச்சது , அதுக்கு தான் பதில் அளித்தேன் , போதும் இதோடு நிப்பாட்டுங்கோ :cool:

2 minutes ago, பையன்26 said:

ஆண்டவரே இந்த உறவுக்கு நல்ல எண்னம் நல்ல புத்திய குடுப்பா , நன்பரே நீங்கள் தான் கேள்வியை ஆரம்பிச்சது , அதுக்கு தான் பதில் அளித்தேன் , போதும் இதோடு நிப்பாட்டுங்கோ :cool:

விடை எழுத முதல் கேள்வியை வாசிக்கிற அளவுக்காவது புத்தியை குடுப்பா இறைவா எனது நண்பனுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணன் சீமானின் தோல்வி குறித்து , இசை அண்ணா நொண்டி சாட்டுகளை இணைக்கிறார் என்று எழுதி இருந்திங்கள் , இசை அண்ணாவும் இதை தான் சொன்னார் இந்த காணொளி அண்ணன் சீமான் தேர்தலுக்கு முதல் குடுத்த பேட்டி என்று , சரியா , இப்பவாவது புரிந்துதா இல்லை இன்னும் விளக்கம் தேவையா , அண்ணன் சீமான் இந்த பேட்டியை இன்று குடுத்து இருந்தால் நீங்கள் கேட்டதில் தவறே இல்லை , தேர்தலுக்கு முதல் குடுத்த காணொளியை இணைக்க நீங்கள் ஏதோ எல்லாம் எழுதுறீங்கள் , எல்லாம் குழப்பமாய் இருக்கு , சரி விடுங்கோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவு: ஒரு எளிய திறனாய்வு: émoticône tongue

அதிமுக கூட்டணி - 1 கோடி 76 இலட்சங்கள்
திமுக கூட்டணி - 1 கோடி 72 இலட்சங்கள்
பாட்டாளி மக்கள் கட்சி - 23 இலட்சங்கள்
தே.தி.மு.கழக,ம.ந.கூ - 19 இலட்சங்கள்
பாரதீய சனதாக் கட்சி - 12 இலட்சங்கள்
நாம் தமிழர் கட்சி - 4.5 இலட்சங்கள்

NOTA - 5.5 இலட்சங்கள்

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினை ஊழல். தமிழ்நாட்டு மக்களின் உடனடியானதும் பிரதானதுமான தேவை ஊழலற்ற அரசு.

இங்கே உள்ள விசித்திரம் என்னவென்றால் மக்கள் சொல்லி வைத்தால் போல் "நேரெதிர்" விகிதாசாரத்தில் வோட்டுப் போட்டுள்ளார்கள்.

ஊழலில் முன்னணியில் இருக்கும் அம்மா கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.

அதிமுக ஐ விடவும் ஒரு சொட்டு குறைவான ஊழல்களை செய்யவல்ல கலைஞர் கட்சி இரண்டாவது அதிகப்படியான வோட்டுகளை பெற்றுள்ளது.

திமுக ஐ விடவும் ஒரு சொட்டு குறைவான ஊழலை செய்யவல்ல பாமக மூன்றாவதாக நிற்கிறது

நான்காவது நிலையில் உள்ள மக்கள் நலக்கூட்டணி மேலுள்ள 3 கட்சிகளை போல் சிறந்த ஊழல் பேர்வழிகளை உடையது அல்ல. ஆனாலும் அர்களின் தாய்க் கட்சிகளின் வழி அதற்கான ஓரளவு தகமையைக் கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் நாலாவது இடம்.

பாரதீய ஜனதாகட்சி ஒரு அந்நிய கட்சியாக இன்னும் இருப்பதாலும் அர்கள் மீது ஊழல் விடயத்தில் மக்களுக்கு நிட்சயமற்ற நிலை இருப்பதாலும் அவர்கள் ஐந்தாவது நிலையில் உள்ளனர். எதிர்வரும் காலங்களில் முன்னேற வாய்புள்ளது.

தமிழ்நாட்டில் ஊழல் வெற்றிகரமாக மக்கள் மயப்படுத்தபட்டுவிட்டது என்பதையே இந்த தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஊழல் ஆட்சிகளுக்குப்பட்டிருந்து வரும் ஒரு தேசத்தில் ஊழலானது ஒரு பண்பாடாக, வாழ்வியல் முறையாக மாறியுள்ளது. முதலமைச்சர் முதல் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வரை ஊழலை தமது அன்றாட தொழில் முறையாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ஒரு சிறந்த "ஊழல் ஆட்சியையே" தம் ஆழ்மனதில் (In their Sub Conscious Mind ) விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய ஊழல் ஆட்சியில்தான் அடிமட்டத்தில், இடைமட்டத்தில், மேல்மட்டத்தில் எல்லாம் ஊழல் செய்வதற்கான சுதந்திரம் இருக்கும். ஊழல் செய்து வாழ விரும்பும் மக்கள் ஊழலற்ற ஆட்சி வருவதை விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் ஊழல் செய்யாதவர்களையிட்டு அச்சம் கொள்ளவும் செய்வர்.

அந்த வகையில், நடந்து முடிந்த தேர்தலானது மிகச்சிறந்த ஊழல் பேர்வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியாகவே இருந்திருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஊழல் செய்வதற்கான அதிகுறைந்தபட்ச தகமையுடைய கடைசியாக "நாம் தமிழர் " கட்சியை தமிழ்நாட்டு மக்கள் கருதுகின்றனர் என்னும் முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளது. émoticône grin

(கவனிக்க: "தமிழ்நாட்டு மக்கள் கருதுகின்றனர்." நானல்ல!)

மேலும் NOTA (None Of The Above) க்கு வழங்கப்பட்ட 5.5 இலட்சம் வாக்குகளை நோக்கும் போது தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத மக்களின் தொகை கணிசமாகவே உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் மாற்று அரசியல் சக்திகள் பலம் பெறுவதற்கான சாத்தியத்தை ஊகிக்க முடிகிறது.

பி.கு:
இது ஒரு ஆய்வுக் கணிப்பு மட்டுமே. ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உள்ள ஏனைய அரசியல் வாதிகளை விட சீமான் பரவாயில்லை அதனால் சீமானுக்கு ஆதரவாக இருக்கின்றேன். உதவாவிட்டாலும் உபத்திரபமாக இருக்கூடாது என்பது எனது கருத்து. 

சீமானுக்கு ஒரு திறந்த மடல்!!! – அமரதாஸ்

சீமானுக்கு ஒரு திறந்த மடல்!!! - அமரதாஸ்

அன்பிற்கும் நட்பிற்குமுரிய சீமான் அவர்களுக்கு…

நீண்ட காலத்திற்கு முன்னரேயே உங்களுக்கு ஒரு விரிவான மடலை எழுத நினைத்திருந்தேன். சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. தமிழகத்தில், தேர்தல் சார்ந்த அலைக்கழிவுகள் குறைந்து, இப்போது கொஞ்சம் அமைதியாக இருப்பீர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு மடலை மிகவும் சுருக்கமாக எழுதிப் பகிரங்கமாகவே வெளியிடலாம் என்று தோன்றியது. உங்களது ஆரோக்கியமான முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அதே நேரத்தில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கொள்ளும் ஆரோக்கியமற்ற, முதிர்ச்சியற்ற செயல்களையும் தோல்விகளையும் பரிசீலனை செய்யுங்கள் என்றும், தோல்விகளை ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழின நலன் சார்ந்து தொடர்ந்து பயணியுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது, உங்களோடு என்னை அடையாளப்படுத்தும் நோக்கிலானதோ உங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கிலானதோ அல்ல.

‘எல்லாளன்’ என்ற திரைப்பட முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருமுறை நீங்கள் ஈழத்துக்கு வந்திருந்தீர்கள். அப்போதுதான் முதல் முறையாக உங்களைச் சந்தித்தேன். பிறகு, அங்கு தங்கியிருந்த நாட்களில் பலமுறை சந்தித்திருக்கிறேன். உங்களோடு பயணித்திருக்கிறேன். ஈழத்தில், உங்களைப் பல நிலைகளிலும் ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆயுத ரீதியான ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், தொலைபேசியூடாகவும் பேசியிருக்கிறேன். பிறகு, நட்பின் நிமித்தம் இந்தியாவிலும் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் உங்களோடு பேச நினைத்திருந்த பல விடையங்களை விரிவாகப் பேசக் கூடிய சூழ்நிலைகள் அமைந்திருக்கவில்லை. உங்கள் நல்லெண்ணங்களையும் பலவீனங்களையும் பலங்களையும் இயல்புகளையும் நான் ஓரளவுக்கு நேரில் அறிந்தவன். இனியும் உங்களைச் சந்திக்க முடிந்தால், நீங்கள் கேட்பதற்குத் தயாராக இருந்தால் தனிப்பட்ட முறையில் உங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விடையங்கள் இருக்கும்.

ஒரு திரைப்பட இயக்குநராகவே முதலில் உங்களைச் சந்தித்தேன். அப்போது உங்களிடம் கட்சி இருக்கவில்லை. இப்போது, ‘நாம் தமிழர் கட்சி’ யினை உருவாக்கி ஒரு அரசியல் வாதியாகப் பரிணமித்திருக்கிறீர்கள். சரி பிழைகளுக்கப்பால், தமிழினத்தின் நட்புச் சக்தியாகவே உங்கள் கட்சியினைப் பார்க்கிறபடியினாலும், உங்களது சில நடவடிக்கைகளில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பதனாலும் நட்புரிமையோடு இதனை எழுதுகிறேன். உங்களது துணிச்சலான உண்மையான சில கருத்துக்களை உரிய முறையில் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்றவர்களும், உங்களது தோல்விகளில் சந்தோசப்படவும் உங்களை நக்கலடிக்கவும் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றாலும், அத்தகையவர்களுக்கான சந்தர்ப்பங்களை நீங்களாகவே சில சமயங்களில் ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறீர்கள். இது, விரிவாக உரையாடப்பட வேண்டியது.

13221250_1030837590341728_18729469221880

பொதுவெளியில் நீங்கள் முன்னெடுக்கிற காரியங்களுக்கான எதிர்வினைகள் பொதுவெளியில் வந்துகொண்டுதான் இருக்கும். ஆரோக்கியமான, நட்புரீதியான விமர்சனங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். நல்லெண்ணம் கொண்ட உங்கள் முயற்சிகளில் அங்காங்கே தவறுகள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் புரிந்துகொள்ளக் கூடியவையானாலும், உங்கள் செயல்களையும் புரிதல்களையும் மறுபரிசீலனை செய்து கொண்டு நீங்கள் முன்னேறவேண்டியது அவசியமானது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வியின் காரணங்களை நீங்கள் ஆராயவேண்டும். மோசமானவர்களும் பொருத்தமில்லாதவர்களும் சுய நலமிகளும் அதிகமதிகம் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும். அப்படியானால் தான் ஆரோக்கியமான வழிகளில் உங்களால் முன்னேற முடியும்.

ஈழம் சார் விடையங்களை அதிகமதிகம் முன்னிறுத்திய உங்கள் நடவடிக்கைகள் உங்களுக்கான தமிழக அரசியல் செல்வாக்கை, இருப்பை உறுதி செய்து கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகப் பலராலும் பார்க்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாததல்ல. இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கான தடை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் அவர்களை அங்கிருந்துகொண்டே பகிரங்கமாகப் போற்றுவதும் அவர்களை முன்வைத்து அரசியல் செய்வதும் உங்களது துணிச்சலுக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகவும் நோக்கப்படுகிறது. ஈழம் சார் விடையங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அதன் தலைவருக்கும் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினை, உங்கள் நிதானமான செயல்களில் காட்டவேண்டுமென்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாகவும் பெருமளவுக்கு ஆரோக்கியமாகவும் முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியிலான ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் என்ற முறையில், அப் போராட்டமானது ஈழத்தில் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்களை, நீங்கள் உற்று நோக்க வேண்டும். உங்கள் கடந்த காலத்தை மிகைப்படுத்தியோ திரிபு படுத்தியோ பேசுகிறீர்கள் என்று பலரையும் நினைக்க வைக்கிறீர்கள். குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான உங்களது தொடர்புகள் குறித்த கருத்துக்கள் சர்ச்சைகளுக்குரியவை.

13220521_1030836747008479_98023281443090

ஈழ அரசியல் நிலைமைகளை , தமிழக அரசியல் நிலைமைகளை, இந்திய அரசியல் பின்னணியிலும் சர்வதேச அரசியல் பின்னணியிலும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். தவிரவும், ஈழ அரசியல் நிலைமைகளும் தமிழக அரசியல் நிலைமைகளும் வெவ்வேறானவை. ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதனால் இரண்டு இடங்களிலும் நிலைமைகள் ஒரேமாதிரியானவையல்ல. ஈழம் சார்ந்த தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளும் ஆதரவு நிலைப்பாடுகளும் கண்ணியமாகவும் பக்குவமாகவும் கையாளப்படவேண்டியவை. தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்வேறு நெருக்கடிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் ஈழத்தவர்களுக்கான மோசமான சிறைகள் போன்ற ஈழம் சம்மந்தப்பட்ட சிக்கலான, அக்கறைகொண்டு செயற்பட வேண்டிய விடையங்களில் அதிகம் கவனமெடுங்கள். உலக அளவில் மிகவும் வலிமையான ஊடகமாக இருக்கும் சினமாவை, அரசியல் சார்ந்தும் திரைத்துறை சார்ந்தும் இருக்கும் உங்களால் ஈழத் தமிழின நலன் சார்ந்தும் ஈழத் தமிழினத்தின் நெருக்கடியான வாழ்வு சார்ந்தும் பயன்படுத்த முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்படியானவற்றிலிருந்து உங்களது ஈழ அக்கறைகளை விரிவுபடுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். மேலும், தமிழகத்தில் இயங்கக் கூடிய நட்பு சக்திகளை இனங்கண்டு, இயன்றவரையில் ஒன்றினைந்த பலமாகி ஜனநாயக ரீதியில், செயற்படுவதே ஆரோக்கியமானது.

13244034_1030837240341763_40027924702071

13217325_1030837293675091_14397080506464

ஒரு விடையம் சாத்தியமாகாது என்று கணித்து, அதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டியதில்லை. எதையும் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை முதலில் உருவாக்க வேண்டும். நேர்மையான முயற்சிகள் கூட, நிதானமான பக்குவமான வழிமுறைகள் மூலமே வெற்றிபெறும் என்பது இன்றைய உலக யதார்த்தமாக இருக்கிறது. தேர்தல் அரசியல் மூலம் ஆட்சியதிகாரத்துக்கு வந்து, தமிழனத்துக்கு நீங்கள் ‘நல்லது’ செய்ய நினைத்தால் அது தவறல்ல. தெளிவான சுயவிமர்சனங்களுடன் கூடிய செயற்பாடுகள் அதற்கு அவசியமானவை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, உசுப்பேத்தி, ஆசை வார்த்தைகள் கூறிக் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தமிழகத்தின் ஏனைய கட்சிகள் போல உங்களது கட்சியும் ஆகிவிடக்கூடாது. தயவு செய்து உங்கள் பேச்சுக்களிலும் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். எதை எப்படிச் சொல்வது, எதை எப்படிச் செய்வது என்ற தெளிவான திட்டங்களோடு இருங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையினையும் கடக்கவேண்டியிருக்கிற தூரத்தினையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

– அமரதாஸ் –

http://thuliyam.com/?p=27371

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையினையும் கடக்கவேண்டியிருக்கிற தூரத்தினையும் கவனத்திலெடுக்க வேண்டும். //

நான் மேலே இணைத்துள்ள காணொளியில் சீமான் இதைத்தான் சொல்லியிருக்கின்றார். "பாதை சரியானது; ஆனால் பயண தூரம்தான் சற்று நீளமானது."

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Mani Senthil
1 hr · 
 

இனவாதம் என்கிற சொல் பரந்துப் பட்ட பொருளை உடையது. உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகளும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டுதான் நிகழ்ந்தன. இந்திய பெரு நிலத்தில் இனவாதத்தினை கொண்டே அரசியல் நடவடிகைகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.

முதலில் வெள்ளையருக்கு எதிராக இந்தியர் என கட்டமைக்கப்பட்ட இனவாதம்.

நீண்ட காலமாக நடப்பில் இருக்கிற, தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிற பார்ப்பனர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட திராவிடர் என்கிற இனவாதம்.

ஒரு தேசிய இனத்தின் வளர்ச்சிப் போக்கில், அடைகிற படிப்பினைகள், நிகழ்ந்த அழிவுகள் -இழிவுகள் இவற்றினைக் கொண்டு ஏற்பட்டு இருக்கிற நாம் தமிழர் என்கிற தமிழ்த்தேசிய இனவாதம்.

அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி பேசும் சமூகக் குழுக்களின் நலனை உரத்துப் பேசும் அந்தந்த இனங்களின் இனவாதம்.

இவ்வாறு எழுதிக் கொண்டே போகலாம்.

இதில் மதிப்புமிகு அண்ணன் திருமா அவர்கள் நம்மை இனவாதம் பேசுகிறவர்கள் என்று அழைத்தால் ....

திராவிடவாதிகளை என்னவென்று அவர் அழைப்பார்..?

அது இனவாதம் என்றால்... கண்டிப்பாக சீமானும் ,சீமான் தம்பிகளும் இனவாதிகளே.

இதில் வருத்தங்கொள்ள எதுவும் இல்லை.

தேர்தலில் தோற்று விட்டாதலேயே கொண்டிருக்கும் தத்துவங்களும்,இலக்குகளும் தோற்று விட்டன என்றால்...

இங்கு அனைவரும் தோல்வியுற்றவர்களே.,, அண்ணன் திருமா உட்பட.

************************************************************************************************************

சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன்

7 hrs · 
 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் களத்தில் மக்களை சந்தித்த
களப்போராளிகள் கவனத்திற்கான பதிவு:

நாம் 2014 மே 24ல் திருச்சி மாநாட்டில் இரண்டு லட்சம்பேருக்குமேல் கூடிக்கலைந்தோம் அல்லவா..ஆனால் 2லட்சம்பேரின் குடும்ப வாக்குகள் நண்பர்கள் வாக்குகள மற்றும் பொதுவான நடுநிலையானவர்களின் வாக்குகள் அதுபோக தமிழ்தேசியத்தை முன்வைக்கும் இயக்கங்கள் அவர்கள்சார்ந்த குடும்ப வாக்குகள் என்று வெளிநாட்டு வாழ் தாயகத்தமிழர்களின் குடும்ப வாக்குகள் என்று 10 சதவீதத்திற்குமேல் நாம் வாக்குகளை வாங்கி இருக்கவேணடும் இதுதான் நாம் நிதர்சனமாக பெற்றிருக்கவேண்டிய வாக்கு எண்ணிக்கை இதற்கும் கூடுதலாக இருக்குமே ஒழிய குறைவதற்கு வாய்ப்பே இல்லை..
தமிழ்த்தேசியத்தை முலையிலேயே அதுவும் முதல்தேர்தளிலேயே நசுக்கி விடவேண்டும் என்ற இந்திய ஒன்றியத்தின் திட்டத்தின் முதல்வேலையாய்...
இந்த இயந்திர வாக்குப்பதிவில் இந்தியாவின் உதவியால் திராவிடத்தின் சூழ்ச்சியாலும் தமிழ்த்தேசியத்த
ை ஒடுக்கவும் அடக்கவும் உளவியல் ரீதியாக தமிழ் மக்களிடம் எழுச்சிப்பெற்று
விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது இதற்கு தேர்தள் ஆணையத்தின் முழு ஒப்புதலோடு இந்த தேர்தள் நடத்தப்பட்டுள்ளது...
உதாரணத்துக்கு எங்கள் உளுந்தூர்பேட்டை தொகுதி
வேட்பாளரும் நானும் ஒரே ஊர்தான்... எங்கள் கிராமத்தில் 2 வாக்குச்சாவடி மொத்தம் 1650 வாக்குகள் அதில் எங்களுக்கு முதல்வாக்கு இயந்திரத்தில் பதிவானது 17 வாக்குகளும் இரண்டாவதாக 9 வாக்குகள் பதிந்துள்ளது..
எங்கள் கணக்குப்படி உறுதியாக வீட்டிற்கு ஒரு ஓட்டு என்றாலும் 500க்குமேல் பிறகு எங்கள் குடும்ப வாக்குகள் எண்ணிக்கை தாண்டியிருக்க வேண்டும்
ஆனால் மொத்தம் 26 வாக்குகளே பதிந்துள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது...
மேலும் நம் கட்சி செல்வாக்கான ஊர்களில் 2வாக்குகளே பதிந்துள்ளது..
அப்போ என்ன நடந்துள்ளது
என்பது ஆராயக்கூடிய விடயம்...
இதை இப்படியே விட்டுவிடமுடியாது...
எனவே வேட்பாளர்கள் தங்கள் நம்பிக்கையான வாக்கு அதிகமாக வாங்கும் பகுதிகளில் எதிர்பார்த்தது எவ்வளவு ஆனால் பதிந்தது எவ்வளவு என்று வேட்பாளரோ அல்லது அந்தந்த தொகுதி முகநூல் பதிவாளரோ எடுத்துக்காட்டுடன் முகநூல் மற்றும் பகிரியில் தனித்தனியாக தொகுதி பகுதிவாரியாக பதிவிடுங்கள்...
இப்பதிவினை போகிரபோக்கில் அலட்சியம் செய்யாதீர்கள் முக்கியமாக பகிருங்கள்...
இனி இயந்திர வாக்குப்பதிவினை இல்லாமல் செய்வோம்..
பழைய சீட்டு ஓட்டுப்போடும் முறையை கொண்டுவரவேண்டும்...
மின்னனு வாக்குப்பதிவுகளால் முறைகேடுகள் நடத்த நூறு விழுக்காடு சாத்தியம்...
அமெரிக்க போன்ற வளர்ந்த வள்ளரசு நாடுகளில் மின்னனு வாக்குமுறை நிராகரிக்கப்பட்டு சீட்டுவாக்குமுற
ை தற்போதும் நடைமுறையில் உள்ளது என்பதும் நாம் கவனித்தில் கொள்ளவேண்டியதே...
சும்மா மக்களை குறைகூறுவது வெற்று வேலைதான்...
மக்கள் நமக்கு வாக்களித்துள்ளார்கள் ஆனால் அந்த வாக்குகள் எங்கே போனது...?

படிக்க, யோசிக்க, பகிர்க....

நாம்தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சீமான் வாழ்த்து!

ntkseemanobn.jpg

சென்னை: ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

" பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு என் புரட்சி வாழ்த்துகள். முதன்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்கி, ஓய்வற்று.. உறக்கமற்று போராடிய ஆயிரக்கணக்கான இலட்சிய உறுதிக் கொண்ட என் உயிர்த் தம்பிமார்களை,தளபதிகளை நாம் தமிழர் கட்சி கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.

2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, இன்று கணிசமான வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி தனது தனித்துவத்தை அரசியல் களத்தில் பதிவு செய்து இருக்கிறது. புள்ளியில் இருந்து தொடங்குவதாக அறிவித்த நாம், எவ்வித சாதி, மத, அதிகார, பணப் பலமும் இல்லாது, கருத்துப் பரப்புரை மூலமாகவே லட்சக்கணக்கான மானத்தமிழர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளோம். எளிய பிள்ளைகளாகிய நாம் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைச் சேகரித்து, தமிழக அரசியல் தளத்தில், புதிய நம்பிக்கைகளோடு, நிகரற்ற அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ளோம்.

இந்தத் தேர்தலில் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்வைத்து, சமூகநீதி தத்துவத்தை வேட்பாளர்கள் தேர்விலேயே உறுதிசெய்து, புறக்கணிக்கப்பட்ட தமிழ்தேசிய இனத்தின் ஒற்றைக் குரலாய் தமிழக வீதிகளில் நாம் தமிழரின் இளையோர் எழுப்பிய 'எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே' என்கிற முழக்கத்தின் அதிர்வு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற வசந்தத்தின் இடிமுழக்கம். இந்த தேர்தலில் எமது தம்பிகளும், தளபதிகளும் கடைக்கோடி தமிழருக்கும் இனமான தமிழினத்தின் அரசியலை, அதன் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்ததே நமக்கான முதல் வெற்றியாகக் கருதுகிறேன்.

அரசியல் அதிகாரத்தை அடைய முனைகிற தேர்தல் பாதை புதிதாய் தொடங்குகிற எவருக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினை அளித்ததில்லை.காலங்காலமாக தேர்தல் வழி என்பது அதிகாரத்தினை தங்கள் கரங்களுக்குள் வைத்திருப்பவரின் அராஜகத்தாலும், அடாவடியாலும், துரோகத்தாலும், அதிகாரத்தாலுமே நிரம்பியிருக்கிறது. இம்முறை இவ்வனைத்தையும் தாண்டி நாம் தமிழர் தம்பிகள் தமிழக வீதிகளில் முன்னெடுத்த வலுவான கருத்தியல் பரப்புரையால் இன்று நிகழ்ந்திருக்கிற தமிழ்தேசிய அரசியலுக்கான அங்கீகாரம் நமக்கு கிடைத்து இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியாளர்களின் சுயநல,பித்தலாட்ட பதவி அரசியலால் தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு முரண்களை பெரிதாக்கி தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்திக் குளிர்காயும் திராவிட அரசியல்வாதிகளின் அற்பநோக்கத்தினால், தமிழினத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சாதியகட்டமைப்பு இறுக்கமாகியுள்ளது.

அதன் வெளிப்பாடாய் தமிழகத் தேர்தல் களத்தில், சாதிய அடையாளமும், சாதிவாரி தொகுதிகளும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து, தமிழர் ஓர்மை அரசியலுக்கு எதிரியாக நிற்கின்றன.
இந்தத் தேர்தல் களம் நமக்கு பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தந்திருக்கிறது. இன்று கசப்பானதாக இருக்கும் நமது அனுபவங்களே நாளை தமிழினத்திற்கான விடியலை பெற்றுத்தரும் பாடங்களாக நமக்கு அமையும் என நம்புவோம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்தையும், அனைத்து உயிரினங்களையும் நேசித்த தமிழன் இன்று சாதியாகவும், மதமாகவும் கட்சியாகவும் பிரிந்து தனக்கான ,தனது சந்ததிக்கான தேவையறியாது வாழ்நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான் என்பதையும் நாம் கண்கூடப் பார்த்தோம்.

நாம் நமது வருங்காலப் பிள்ளைகளுக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தில் இருக்கிறோம். காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அடைகிற இலட்சியப் பயணத்தில் இடையறாது பயணிக்கிறோம். இது பெரும் பயணம். பல தடைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியே தொடர்ந்து பயணிக்கவேண்டும். இன்று நமக்கான தேர்தல் வெற்றி கனியாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்கிற மான உணர்ச்சியை கடைக்கோடி தமிழனின் உள்ளத்திலும் கூட இன்று நாம் வெற்றிக்கரமாக புகுத்தியிருக்கிறோம்.

சுடும் வெயிலில்,கொட்டும் வியர்வையில், பொருளாதார, சாதீய,மத பின்புலம் என எவையும் இல்லாது நாம் மேற்கொண்ட நம் இனநலனிற்கான நமது முயற்சிகள் வெற்றியடையாமல் போயிருக்கலாம். ஆனால் இன்று விதைத்து இருக்கும் தமிழின நலனிற்கான இந்த விதைப்பு இன்று இல்லாமல் போனாலும் ஒரு நாள் முளைத்தே தீரும். அன்றைய தினத்தில் நம்மை பீடித்திருக்கும் தேசிய,திராவிட,சாதி,மத .சுயநல,பிழைப்பு சக்திகள் நம்மை விட்டு அகலும்.

ஆகவே நாம் தமிழர் தம்பிகளும், தளபதிகளும் சற்றும் நம்பிக்கை இழக்காமல், 'இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எங்கள் வழிகாட்டி' என்ற தலைவரின் வரிகளை மனதிலே ஏந்தி, அடுத்தக்கட்ட நகர்வில் கவனம் செலுத்துவதே இனக்கடமையாகும். தமிழ்த்தேசிய இனத்தின் அனைத்து விதமான அடிமைத்தளைகளும் உடைத்து நொறுங்கும் வல்லமை நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அது கைகூடும் வரையில் நமது இலட்சிய பயணம் தளராது தொடரும் என்று உறுதியேற்போம்.

கடந்த இரு மாதங்களாகத் தமிழகத்தெருக்களெங்கும் அயராது உழைத்த தம்பிகளும், தளபதிகளும் தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளறிந்து துணைநிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள், மக்களுக்காக வந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதனூடாகவே தமிழக அரசியல் களத்தை வென்றெடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்த்தேசிய கருத்தியலையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசேர்க்க உதவிய அனைவருக்கும், என் மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன்.

நடைப்பெற்று முடிந்திருக்கிற 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்திருக்கிற தீர்ப்பினை நாம் மதிக்கிறோம். மீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துக்களைப் பதிவுசெய்கிறோம். தேர்தல் அறிக்கையில் அதிமுக வழங்கியுள்ள மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுவதுதான் நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கிற நன்றி கடன் ஆகும். மேலும் தமிழ்த்தேசிய இனத்தின் நீண்டகால கோரிக்கையான இராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டுள்ள ஏழு தமிழர் விடுதலையையும் பதவியேற்கிற புதிய அரசு உறுதியோடு காலம் தாழ்த்தாமல் நிகழ்த்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்கிற எங்களது முழக்கத்தினை மதித்து ,எங்கள் மீது நம்பிக்கை செலுத்தி வாக்களித்த என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நெருக்கடியான சூழலில் எங்களுக்குத் தோள் கொடுத்து, ஆதரித்து, ஊக்கமளித்து நின்ற உலகத்தமிழர்களுக்கு எங்கள் ஆழ்மன நன்றியறிதலை பதிவுசெய்கிறோம். புதிய அரசியல் சக்தியான எம்மை ஆதரித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு, தொலைக்காட்சி தோழர்களுக்கு, இணைய வழி உறவுகளுக்கு அனைவருக்கும் நாங்கள் இச்சமயத்தில் உளமார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  " என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/politics/64485-ntk-seeman-greetings-to-tn-cm-jayalalithaa.art

  • கருத்துக்கள உறவுகள்

UPRIw.jpg

தேர்தலுக்கான சின்னம் வாங்கி ஒரு மாதமேயான நாம் தமிழர்களின் உழைப்பு என்னைப்பொருத்தவரை வீண்போகவில்லையென்பது நமக்கு வந்துகொண்டிருக்கும் வாக்கு விழுக்காடுகள் தெளிவாக காட்டுகிறது. ஐம்பதாண்டுகால அரசியல் பூதங்களை வீழ்த்துவதென்பது சற்று கடினம்தான் என்றாலும் தொடர்ந்து களமாடினால் அவர்களை வீழ்த்துவதுமட்டுமல்ல, வேரோடு பிடிங்கியெரியும் வலிமையும் நமக்கு இருக்கிறதென்பதை நாம் அனைவரும் மனதில்கொண்டு உறுதியாக மனம்தளராமல் பயணிக்கவேண்டும். இவ்வளவு குறுகியகாலத்திற்குள் குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு நமது சின்னம் பதிந்திருக்கிறதென்றால் பாருங்கள். இதுதான் வெற்றி. இனிதான் நமது பயணம் இன்னும் வேகமாக இருக்கவேண்டும். களமாடிய அத்துனை உறவுகளுக்கும் புரட்சிகர வணக்கங்களும் வாழ்த்துகளும்
தமிழ் மகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி.. தமிழகத்தில் மாற்றம் ஒன்றே குறிக்கோள் என்று தொடர்ந்து தளர்வின்றி இயங்குவதற்கு பாராட்டுக்கள். அண்ணன் சீமானின் வழிநடத்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்காலத்தில் பெரும் வெற்றிகளைக் குவிக்க... தற்காலத்தில் நன்கு திட்டமிட்டு மக்களை நெருங்கிச் செயற்படுவதே நல்லது ஆகும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர் விடுதலையை காலந்தாழ்த்தாமல் செய்யவேண்டும் – ஜெ அரசிடம் சீமான் வேண்டுகோள்

May 24, 2016 | Filed under: அரசியல்,தமிழகம் | Posted by: admin

1-115-e1464053531872.jpg

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு என் புரட்சி வாழ்த்துகள்.  முதன்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்கி, ஓய்வற்று.. உறக்கமற்று போராடிய ஆயிரக்கணக்கான இலட்சிய உறுதிக் கொண்ட என் உயிர்த் தம்பிமார்களை,தளபதிகளை நாம் தமிழர் கட்சி கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன். 2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, இன்று கணிசமான வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி தனது தனித்துவத்தை அரசியல் களத்தில் பதிவு செய்து இருக்கிறது. புள்ளியில் இருந்து தொடங்குவதாக அறிவித்த நாம், எவ்வித சாதி, மத, அதிகார, பணப் பலமும் இல்லாது, கருத்துப் பரப்புரை மூலமாகவே லட்சக்கணக்கான மானத்தமிழர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளோம். எளிய பிள்ளைகளாகிய நாம் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைச் சேகரித்து, தமிழக அரசியல் தளத்தில், புதிய நம்பிக்கைகளோடு, நிகரற்ற அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ளோம். இந்தத் தேர்தலில் மாற்றத்திற்கான  எளிய மக்களின் புரட்சியை முன்வைத்து, சமூகநீதி தத்துவத்தை வேட்பாளர்கள் தேர்விலேயே உறுதிசெய்து, புறக்கணிக்கப்பட்ட தமிழ்தேசிய இனத்தின் ஒற்றைக் குரலாய் தமிழக வீதிகளில்  நாம் தமிழரின் இளையோர் எழுப்பிய ‘எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே’ என்கிற முழக்கத்தின் அதிர்வு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற வசந்தத்தின் இடிமுழக்கம்.  இந்த தேர்தலில் எமது தம்பிகளும், தளபதிகளும்  கடைக்கோடி தமிழருக்கும் இனமான தமிழினத்தின் அரசியலை, அதன் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்ததே நமக்கான முதல் வெற்றியாகக் கருதுகிறேன்.

அரசியல் அதிகாரத்தை அடைய முனைகிற தேர்தல் பாதை புதிதாய் தொடங்குகிற எவருக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினை அளித்ததில்லை.காலங்காலமாக தேர்தல் வழி என்பது அதிகாரத்தினை தங்கள் கரங்களுக்குள் வைத்திருப்பவரின் அராஜகத்தாலும், அடாவடியாலும், துரோகத்தாலும், அதிகாரத்தாலுமே நிரம்பியிருக்கிறது. இம்முறை இவ்வனைத்தையும் தாண்டி நாம் தமிழர் தம்பிகள் தமிழக வீதிகளில் முன்னெடுத்த வலுவான கருத்தியல் பரப்புரையால் இன்று நிகழ்ந்திருக்கிற தமிழ்தேசிய அரசியலுக்கான அங்கீகாரம் நமக்கு கிடைத்து இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியாளர்களின் சுயநல,பித்தலாட்ட  பதவி அரசியலால் தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு முரண்களை  பெரிதாக்கி தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்திக் குளிர்காயும்  திராவிட அரசியல்வாதிகளின் அற்பநோக்கத்தினால், தமிழினத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சாதியகட்டமைப்பு இறுக்கமாகியுள்ளது. அதன் வெளிப்பாடாய் தமிழகத் தேர்தல் களத்தில், சாதிய அடையாளமும், சாதிவாரி தொகுதிகளும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து, தமிழர் ஓர்மை அரசியலுக்கு எதிரியாக நிற்கின்றன.

இந்தத் தேர்தல் களம் நமக்கு பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தந்திருக்கிறது. இன்று கசப்பானதாக இருக்கும் நமது அனுபவங்களே நாளை தமிழினத்திற்கான விடியலை பெற்றுத்தரும் பாடங்களாக நமக்கு அமையும் என நம்புவோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உலகத்தையும், அனைத்து  உயிரினங்களையும் நேசித்த தமிழன் இன்று சாதியாகவும், மதமாகவும் கட்சியாகவும் பிரிந்து தனக்கான ,தனது சந்ததிக்கான தேவையறியாது வாழ்நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான் என்பதையும் நாம் கண்கூடப் பார்த்தோம். நாம் நமது வருங்காலப் பிள்ளைகளுக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தில் இருக்கிறோம். காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அடைகிற இலட்சியப் பயணத்தில் இடையறாது பயணிக்கிறோம்.  இது பெரும் பயணம். பல தடைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியே தொடர்ந்து பயணிக்கவேண்டும். இன்று நமக்கான  தேர்தல் வெற்றி கனியாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்கிற மான உணர்ச்சியை கடைக்கோடி தமிழனின் உள்ளத்திலும் கூட இன்று நாம் வெற்றிக்கரமாக புகுத்தியிருக்கிறோம்.

சுடும் வெயிலில்,கொட்டும் வியர்வையில், பொருளாதார, சாதீய,மத பின்புலம் என எவையும் இல்லாது நாம் மேற்கொண்ட நம் இனநலனிற்கான நமது முயற்சிகள் வெற்றியடையாமல் போயிருக்கலாம்.  ஆனால் இன்று விதைத்து இருக்கும் தமிழின நலனிற்கான இந்த விதைப்பு  இன்று இல்லாமல் போனாலும் ஒரு நாள் முளைத்தே தீரும். அன்றைய தினத்தில் நம்மை பீடித்திருக்கும் தேசிய,திராவிட,சாதி,மத .சுயநல,பிழைப்பு சக்திகள் நம்மை விட்டு அகலும்.

ஆகவே நாம்தமிழர் தம்பிகளும், தளபதிகளும் சற்றும் நம்பிக்கை இழக்காமல், ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எங்கள் வழிகாட்டி’ என்ற தலைவரின் வரிகளை மனதிலே ஏந்தி, அடுத்தக்கட்ட நகர்வில் கவனம் செலுத்துவதே இனக்கடமையாகும். தமிழ்த்தேசிய இனத்தின் அனைத்து விதமான அடிமைத்தளைகளும் உடைத்து நொறுங்கும் வல்லமை நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அது கைகூடும் வரையில் நமது இலட்சிய பயணம் தளராது தொடரும் என்று உறுதியேற்போம்.

கடந்த இரு மாதங்களாகத் தமிழகத்தெருக்களெங்கும் அயராது உழைத்த தம்பிகளும், தளபதிகளும் தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளறிந்து துணைநிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள், மக்களுக்காக வந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதனூடாகவே தமிழக அரசியல் களத்தை வென்றெடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்த்தேசிய கருத்தியலையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசேர்க்க உதவிய அனைவருக்கும், என் மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன்.

நடைபெற்று முடிந்திருக்கிற 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்திருக்கிற தீர்ப்பினை நாம் மதிக்கிறோம். மீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துகளைப் பதிவுசெய்கிறோம். தேர்தல் அறிக்கையில் அதிமுக வழங்கியுள்ள மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுவதுதான் நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கிற நன்றிக் கடன் ஆகும். மேலும் தமிழ்த்தேசிய இனத்தின் நீண்டகாலக் கோரிக்கையான  இராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டுள்ள ஏழு தமிழர் விடுதலையையும் பதவியேற்கிற புதிய அரசு உறுதியோடு காலம் தாழ்த்தாமல் நிகழ்த்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்கிற எங்களது முழக்கத்தினை மதித்து ,எங்கள் மீது நம்பிக்கை செலுத்தி வாக்களித்த என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நெருக்கடியான சூழலில் எங்களுக்குத் தோள் கொடுத்து, ஆதரித்து, ஊக்கமளித்து நின்ற உலகத்தமிழர்களுக்கு எங்கள் ஆழ்மன நன்றியறிதலை பதிவுசெய்கிறோம். புதிய அரசியல் சக்தியான எம்மை ஆதரித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு, தொலைக்காட்சி தோழர்களுக்கு, இணைய வழி உறவுகளுக்கு அனைவருக்கும் நாங்கள் இச்சமயத்தில் உளமார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு  சீமான் கூறியிருக்கிறார்.

http://www.tamizhvalai.com/?p=4377

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்.. சீமானின் வழிமுறையில்.. மக்களை நெருங்க முயலும் ஜெ அம்மையார். இதுவே நாம் தமிழர் இயக்கத்தின் சாதனை தான். tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.