Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துனிசிய அனுபவம் பகிர்வு சிறப்பு தமிழ்சிறீ அண்ணா. எங்களுக்கும் நண்பிகள் அங்க இருக்கினம்.. போய் நாட்டையும் அவையையும் சந்திக்க விருப்பம். அடுத்த முறை துனிசியா தான். tw_blush:

  • 6 months later...
  • Replies 104
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2.10.2015 at 0:02 PM, nedukkalapoovan said:

உங்கள் துனிசிய அனுபவம் பகிர்வு சிறப்பு தமிழ்சிறீ அண்ணா. எங்களுக்கும் நண்பிகள் அங்க இருக்கினம்.. போய் நாட்டையும் அவையையும் சந்திக்க விருப்பம். அடுத்த முறை துனிசியா தான். tw_blush:

துனிசியாவில் நின்ற நாட்களில்.... பழகக் கிடைத்த பெரும்பாலானவர்கள் நட்புடனும், இனிமையாகவும் பழகினார்கள் நெடுக்ஸ். நிச்சயம் உங்களுக்கும் அது ஒரு மறக்க முடியாத சுற்றுலாவாக இருக்கும் என்பது நிச்சயம். போகும் போது.... கூடியவரை  கடற்கரையை ஒட்டிய நகரங்களை தேர்ந்தெடுத்துப் போவது நல்லது நெடுக்ஸ்.tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

########

தவிர்க்க முடியாத காரணத்தால்.... இந்தக் கட்டுரையை தொடர்ந்து எழுதமுடியாமல் போய் விட்டதற்கு வருந்துகின்றேன். தொடர்ந்து வாசித்த  பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், ஆரம்பித்த ஒரு கட்டுரையை.... முடிக்காமல் இருப்பது சரியாகப் படவில்லை என்பதாலும், இந்தக் கட்டுரையை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். உங்களுக்கும் சம்மதமா? 

3 minutes ago, தமிழ் சிறி said:

########

தவிர்க்க முடியாத காரணத்தால்.... இந்தக் கட்டுரையை தொடர்ந்து எழுதமுடியாமல் போய் விட்டதற்கு வருந்துகின்றேன். தொடர்ந்து வாசித்த  பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், ஆரம்பித்த ஒரு கட்டுரையை.... முடிக்காமல் இருப்பது சரியாகப் படவில்லை என்பதாலும், இந்தக் கட்டுரையை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். உங்களுக்கும் சம்மதமா? 

இது என்ன கேள்வி தலைவா? விரைவில் தொடருங்கள். துனீஷியா அழுகு பொம்மைகளின்ன படங்களையும் இணைத்துவிடுங்கள்
சகாறா மாதிரி தேன் குடித்த அனுபமிருந்தாலும் எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வந்தியதேவன் said:

இது என்ன கேள்வி தலைவா? விரைவில் தொடருங்கள். துனீஷியா அழுகு பொம்மைகளின்ன படங்களையும் இணைத்துவிடுங்கள்
சகாறா மாதிரி தேன் குடித்த அனுபமிருந்தாலும் எழுதுங்கள்

வந்தி, அந்த அழகு பொம்மைகளை படம் பிடித்திருந்தால்...  கையை வெட்டிப் போடுவாங்கள் எண்ட பயத்தில, 
கறுப்புக் கண்ணாடிக்குள்ளாலை பார்த்து ரசித்தது மட்டும் தான்...  118.gif
வல்வை சகாறா தேன் குடித்த கதை... எப்ப நடந்தது.

5 minutes ago, தமிழ் சிறி said:

வந்தி, அந்த அழகு பொம்மைகளை படம் பிடித்திருந்தால்...  கையை வெட்டிப் போடுவாங்கள் எண்ட பயத்தில, 
கறுப்புக் கண்ணாடிக்குள்ளாலை பார்த்து ரசித்தது மட்டும் தான்...  118.gif
வல்வை சகாறா தேன் குடித்த கதை... எப்ப நடந்தது.

 

அவரின் பயணக்கதையை வாசிக்கவில்லையா, அதில் குறிப்பிட்டிருந்தார்,
தேன் குடித்த பேதை போதையில் தள்ளாடியதும் அதன் பின் நடந்தவற்றையும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்....தமிழ் சிறி அண்ணா! 118.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஓகோ தொடரட்டும் உங்கள் பயண அனுபவங்கள் என்னதான் அந்த இடுப்பு டான்சு இருக்கே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ??

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் சிறீ....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, முனிவர் ஜீ said:

ஆஹா ஓகோ தொடரட்டும் உங்கள் பயண அனுபவங்கள் என்னதான் அந்த இடுப்பு டான்சு இருக்கே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ??

அலையுறாங்க......tw_smiley:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நடமாட்டம்  ஏற்பட்ட பிறகு இந்தச் சிப்பிகளை காணக் கிடைக்காது. நல்ல நடையுடன்,  அழகிய காட்சிகளையும் கண்ட திருப்தியுடன் எட்டு மணி போல் ஹோட்டலுக்கு திரும்ப மற்றவர்களும் எழும்பி, காலை உணவுக்குப் போக என்னை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..... (Posted 2 Oct 2015)´ன் தொடர்ச்சி.....  33.gif

கன நேரமாக.... காத்துக் கொண்டிருந்த மனிசி, பிள்ளைகளின்.... முகச் சுழிப்புக்களையும், திட்டுக்களையும், நக்கல்களையும்.... 49.gif சமாளிக்க  நல்ல இடம் குளியலைறை தான்..... என்ற படியால்,  உடம்பெல்லாம்.....  ஒரே உப்புக் காத்து பட்டு,    " நச... நச..."  எண்டு இருக்குது என்று,  என் பாட்டில் கதைத்துக்  கொண்டு,  "டக்கெண்டு"   ஒரு காக்கா குளியல் குளித்தால்.... நல்லாய் இருக்கும் என்று சொல்லி விட்டு, அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல்...  குளியல் அறைக்குள் பூந்து.... சின்ன ஒரு குளியல் போட்டு ட்டு வந்த பின்... அவர்களின் கோவம் ஆறியிருந்தது. (இதைத் தான் நான்... எதிர் பார்த்தேன்) 48.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அலையுறாங்க......tw_smiley:

ம்கும் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் நளவெண்பாவில் அன்னம் தமயந்தியின் இடுப்பை வர்ணிதிருக்கும் சின்ன வண்டு சிறகடித்து பறக்கும் போது அதில் உண்டாகும் காற்றில் வளையுமாம் அந்த இடுப்பு. அப்படிப்பட்ட எடுப்பான இடுப்புகள் மேல் உடல் ஆடாது இடுப்புத்தான் ஆடும் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bdl5s.jpg

கருத்துப் பகிர்வுடன், ஊக்கமும் தந்த....  நெடுக்ஸ், வந்தியதேவன், புங்கையூரான், சுவி, நந்தன், முனிவர் ஜீ  ஆகியோருக்கு நன்றி. Smiley

காலை உணவை முடித்து விட்டு,  முதல் நாள் பேசி  திட்டமிட்ட படி.... ஒரு துனீசியருடன்  அவரின் மினி பஸ்ஸில்... நகரத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று எமது குடும்பத்தவர் மட்டும், அவருடன் நகரின் மத்தியை நோக்கி  பயணித்தோம். அவர் அங்குள்ள சந்தை, மற்றும் அங்குள்ள கடைகளில் எம்மை அங்கு பொருட்கள் வாங்க அங்குள்ள கடைகாரர்களால்  நியமிக்கப் பட்டவர் என்று.... சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம். அப்போது  எமது முட்டாள் தனத்தை யோசித்து....  கடிந்து கொண்டாலும் Smiley , இதிலிருந்து... சாமர்த்தியமாக தப்புவதே சிறந்த வழி என்று யோசித்து... அவர் கூட்டிச் சென்ற நகைக்கடை, தரை விரிப்புக்கடை போன்றவற்றில் எமக்கு எதுகும் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால்.... அங்கு வியாபாரம் செய்யும் கடைக்காரர், பிலாக்காய்ப் பால் மாதிரி ஒட்டிக் கொண்டு, வாங்கச் சொல்லி  அரியண்டம் தந்து கொண்டு இருந்தார்கள். 

அரேபியர்கள்,  தமது  பொருளை விற்க... ஒரு மணித்தியாலமும் சளைக்காமல், தமது கடையில் உள்ள பொருட்கள் அத்தனையையுமே.... எடுத்து, விரித்து காட்டுவார்கள். அதன் படம்தான்  மேலே உள்ளது. நகைக் கடையிலும்.... இதே விளையாட்டுத்தான். 22 கரட் நகை போடும் தமிழனுக்கு.... 14 கரட் நகையை காட்டினால்....  "புலி, பசித்தாலும்.... புல்லைத் தின்னாது"  என்று நகைக்  கடைக்காரனுக்கு விளங்கியிருக்காது Smiley.   அந்த அரியண்டம் ஒரு மணித்தியாலத்துக்கு மேல்.... நீடித்ததால்.... ஏதாவது ஒரு சிறிய  நில விரிப்பு  துண்டு ஒன்றை வாங்கிக் கொண்டு ஹோட்டேலுக்குப் போவம் என்று  மனைவியும் கூற... அரை மனதுடன்,  ஒன்றை வாங்கிக் கொண்டு...  வெளியே வந்தால், எம்மைக் கூட்டி வந்தவர்...  துனிசியா ஒரிஜினல் "லெதர் ஜக்கெற்"  மலிவாக விற்கும் இடங்களை காட்டுகின்றேன் வாங்கோ... அங்கே  போவம் என்றார். எங்களுக்கு... ஒன்றும் வேண்டாம் நேரே... எமது ஹோட்டேலுக்கு பஸ்சை விடு என்று கூறி, சில வாக்குவாதங்களின் பின் ஹோட்டேல் வந்து சேர்ந்தோம்.

இதில்..... முக்கியமாக கவனிக்க வேண்டியது, முன் பின் தெரியாத இடங்களுக்குப் போகும் போது.... எமக்கு முன்  ஹோட்டேலில் சுற்றுலாப் பயணிகளாக   வந்தவர்களின் ஆலோசனையும், அனுபவத்தையும் கேட்டு அறிந்து கொண்டு செல்வது உதவியாக இருக்கும். அங்கு தங்கியிருப்பவர்கள்.... நிச்சயமாக  மனம் திறந்து உண்மையை சொல்வார்கள். எமது அன்றைய.... நகர சந்தை அனுபவத்தை, தாமதமாக மற்றவர்களிடம் கூறியபோது.... அவர்களும் அந்த  நபரின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, கிடைத்த விரும்பத்தகாத அனுபவத்தை பெற்றுக் கொண்டதை அறிந்து,  நாம் மட்டும் ஏமாறவில்லை, மற்றவனும் ஏமாந்து இருக்கிறான் என்று மனதுக்குள்,  அல்ப சந்தோசம் ஏற்பட்டது Smiley. இப்படியான ஹோட்டேல் வாசல்களில்.... அங்கு சிறு முகவர்கள் காத்திருப்பார்கள். அவர்களை ஹோட்டேல் நிர்வாகம் ஒன்றும் செய்ய முடியாது என்பதால்.... நாம் அவதானமாக இருப்பது நல்லது. 

பின்... நகரத்துக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படும் போது எல்லாம்.... "ரக்சிக் காரனைக்" கூட நம்பாமல்,  பொது போக்குவரத்து சேவையான பஸ்ஸில் போய் வருவது, எமக்கு மிக வசதியாக  இருந்ததுடன்.. நினைத்த நேரம், நினைத்த இடத்தில் ஏறி இறங்க வசதியாகவும் இருந்தது.  அப்படித்தான்.... பஸ்ஸில் போய்க் கொண்டு இருக்கும் போது... கருவாட்டுக் கடை ஒன்றை கண்டு, மணியடித்து, குடும்பத்தினர் எல்லோரையும்... பஸ்சை விட்டு  இறங்கும் படி வைத்து விட்டேன். நாங்கள்... "ரவுணுக்கு" போக இன்னும் கனதூரம் இருக்கு, இப்ப ஏன் இங்கு இறங்கினீங்கள் என்று... மனைவி புரியாமல் கேட்க.... Smiley  "ரவுணில்" இல்லாத கடை ஒன்று இங்கு இருக்கு என்று சொல்லி விட்டு... கருவாட்டுக் கடையின் முன் போய் நிற்க.... மனைவியும், பிள்ளைகளும் என்னைப் பார்த்த கோபப் பார்வையை.... இப்பவும் மறக்க முடியாது. அவர்கள் எனக்குப் பேசிய பேச்சுக்கள்... "கருவாட்டு வாசத்திற்கு" முன், பெரிதாக தெரியவில்லை..  Smiley

(தொடரும்.....)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ் சிறி!

வளமான தேசங்களில் வாழ்பவர்கள் தங்கள் நாட்டுக்கு வரும்போது,,தங்கள் பொருட்களை விற்க..உள்ளூர் வாசிகள் அதிகம் பிரயத்தனப் படுவார்கள்! அது சில வேளைகளில் சுற்றுலாச் செல்பவர்களுக்கு ;அரியண்டமாக' இருந்தாலும்...அதுவே அவர்களது வாழ்வாதாரமாகும்!

பொதுவாக.. மன்னிக்க வேண்டும்..நான் வாங்கப் போவதில்லை! உங்கள் நேரத்தை மற்றவர்களுடன் செலவிடுங்கள் என்று கூறினால் தொல்லை தர மாட்டார்கள்!

மேலுள்ளது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!

நானும் ஒரு கருவாட்டு விரும்பி தான்!

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி என்ற தெய்வங்கள் எதையும் வாங்க விடாது, வாங்கினால் அவற்றை முழுதாய் அனுபவிப்பது அவங்கள்தான்....!  tw_blush:

தொடருங்கள்....!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புங்கையூரன் said:

தொடருங்கள் தமிழ் சிறி!

வளமான தேசங்களில் வாழ்பவர்கள் தங்கள் நாட்டுக்கு வரும்போது,,தங்கள் பொருட்களை விற்க..உள்ளூர் வாசிகள் அதிகம் பிரயத்தனப் படுவார்கள்! அது சில வேளைகளில் சுற்றுலாச் செல்பவர்களுக்கு ;அரியண்டமாக' இருந்தாலும்...அதுவே அவர்களது வாழ்வாதாரமாகும்!

பொதுவாக.. மன்னிக்க வேண்டும்..நான் வாங்கப் போவதில்லை! உங்கள் நேரத்தை மற்றவர்களுடன் செலவிடுங்கள் என்று கூறினால் தொல்லை தர மாட்டார்கள்!

மேலுள்ளது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!

நானும் ஒரு கருவாட்டு விரும்பி தான்!

உண்மைதான் புங்கை. இப்படியான ஒவ்வொரு இடங்களிலும்.... பல குடும்பங்கள்... வியாபாரத்தையும், வாடகை வண்டியுடனும், தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறார்கள். ஆனால்... போன இடத்தில் நில விரிப்பை வாங்கும் இடத்துக்கு கொண்டு போய் விட்டவுடன் கொஞ்சம் கடுப்பாகி விட்டது.  மற்றும்படி.... அவர்களும் ஏதோ வகையில் பிழைக்க வேண்டும் தானே.

அவுசில்.... கருவாடு உற்பத்தி செய்கின்றவர்களா? அல்லது இறக்குமதி செய்து தமிழ் கடைகளில் விற்கிறார்களா.
இங்கு.... நெதர்லாந்திலிருந்து கொண்டு வருவார்கள், அல்லது ஸ்பெயின் காரரின் கடைகளிலும் வாங்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

மனைவி என்ற தெய்வங்கள் எதையும் வாங்க விடாது, வாங்கினால் அவற்றை முழுதாய் அனுபவிப்பது அவங்கள்தான்....!  tw_blush:

தொடருங்கள்....!!

அதெண்டால்..... உண்மை. 
வீட்டுக்கு, வீடு வாசல்படி போலுள்ளது சுவி. Smiley

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

பஸ்ஸில் போய்க் கொண்டு இருக்கும் போது... கருவாட்டுக் கடை ஒன்றை கண்டு, மணியடித்து, குடும்பத்தினர் எல்லோரையும்... பஸ்சை விட்டு  இறங்கும் படி வைத்து விட்டேன். நாங்கள்... "ரவுணுக்கு" போக இன்னும் கனதூரம் இருக்கு, இப்ப ஏன் இங்கு இறங்கினீங்கள் என்று... மனைவி புரியாமல் கேட்க.... Smiley  "ரவுணில்" இல்லாத கடை ஒன்று இங்கு இருக்கு என்று சொல்லி விட்டு... கருவாட்டுக் கடையின் முன் போய் நிற்க..

என்னதான் ஊர்விட்டு ஊர் மாறினாலும்..................ஏன் சந்திரமண்டலத்துக்கு போனாலும் எங்கடை சனத்தின்ரை உந்த பிறவிக்குணத்தை அணுகுண்டு போட்டும் அழிக்கேலாது.:cool:

ம்....சிறித்தம்பி பயணக்கட்டுரை அந்தமாதிரி போகுது.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2016 at 9:16 AM, புங்கையூரன் said:

தொடர்ந்து எழுதுங்கள்....தமிழ் சிறி அண்ணா! 118.gif

என்னாது... தமிழ்சிறி அண்ணாவா...???

இதெல்லாம் ரொம்ப ஓவர் புங்கை, சொல்லிப்புட்டன்..

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ...
கருவாடு கருவாடு .... என்று இழுக்காமல் 
ஒரு மச்ச படம் ஒன்றை போடுங்கள் அப்பத்தான் திரி ஜொலிக்கும்.
எமக்கும் துனிசியாவை புரிந்துகொள்ள இலகுவாய் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்னதான் ஊர்விட்டு ஊர் மாறினாலும்..................ஏன் சந்திரமண்டலத்துக்கு போனாலும் எங்கடை சனத்தின்ரை உந்த பிறவிக்குணத்தை அணுகுண்டு போட்டும் அழிக்கேலாது.:cool:

ம்....சிறித்தம்பி பயணக்கட்டுரை அந்தமாதிரி போகுது.tw_thumbsup:

பாராட்டுக்கு, நன்றி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

என்னாது... தமிழ்சிறி அண்ணாவா...???

இதெல்லாம் ரொம்ப ஓவர் புங்கை, சொல்லிப்புட்டன்..

அட.... நைசாக "புங்கையூரான்"  இதை வேறு பதிந்ததை... இப்ப தான் கவனித்தேன்.
புங்கை அண்ணா.... இது ரொம்ப ஓவர் சொல்லிப் போட்டன். Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

சிறி அண்ணா ...
கருவாடு கருவாடு .... என்று இழுக்காமல் 
ஒரு மச்ச படம் ஒன்றை போடுங்கள் அப்பத்தான் திரி ஜொலிக்கும்.
எமக்கும் துனிசியாவை புரிந்துகொள்ள இலகுவாய் இருக்கும்.

Tunisie-Tunis-jeunesfilles_20091215_Oliv

Tunisian%28AFP%29.jpg

இது ஓகேயா.... மருது. Smiley
(கோப்பிலிருந்து எடுக்கப் படம்)

சிறியண்ணை, இதுக்கு எங்க ஏரியா பறவாயில்லை போல இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Surveyor said:

சிறியண்ணை, இதுக்கு எங்க ஏரியா பறவாயில்லை போல இருக்கு

உண்மையாகவா.... சேர்வயர். நான் நம்பமாட்டேன்.
உங்கள் ஊர் படங்களையும் பார்த்துள்ளேன். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைக்கின்றேன்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.