Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை

Featured Replies

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை

தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த  நோதிநாதன்  சீகரன் 192 புள்ளிக்களைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.

                                                       

http://onlineuthayan.com/news/970

 

பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....
மீண்டும் தரப்படுத்தலை கொண்டுவந்திடுவாங்களோ தெரியவில்லை

Edited by putthan

  • தொடங்கியவர்

புலமைப் பரிசில்: முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்

புலமைப் பரிசில்: முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன.

இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர்.

இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள மாணவர்கள் விபரங்கள் வருமாறு:

01 - கவிந்திரா உணந்தென்ன - கனகசிரிபுர வித்தியாலயம், கம்பளை - 196 புள்ளிகள்

01 - ஆர்.டப்ளியூ.எம்.கவிஸ்க வணிகசேகர - மாகுர கனிஸ்ட வித்தியாலயம் - 196 புள்ளிகள்

01) மெலனி விஜேசிங்க - ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலயம், உஸ்ஸபிடிய - 196 புள்ளிகள்

02 - ஓஷானி கஷினிகா கயாஷானி - உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம், உடுபத்தாவ - 195 புள்ளிகள்

02 - ஜீ.கே.தரிந்தியா கௌரி பெரேரா - கிரிபிடிய கனிஸ்ட வித்தியாலயம் - வெயன்கொட - 195 புள்ளிகள்

02 - நிஹார மதுசங்க - களனிய ஜனாதிபதி வித்தியாலயம் - மஹர - கடவத்தை - 195 புள்ளிகள்

02 - ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் - பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் - ஹங்வெல்ல - 195 புள்ளிகள்

02 - டப்ளியூ.ஏ.துலாப் நெதுல் விஜேசேகர - உடுபில கனிஸ்ட வித்தியாலயம் - 195 புள்ளிகள்

03 - சவிந்ர அமான் - சிறி தம்ம வித்தியாலயம் - அக்மீமன - 194 புள்ளிகள்

03 - கமிது சஸ்மிக - ஜீ.த.எஸ். குலரத்ன க.வி - அம்பலாந்தோட்டை - 194 புள்ளிகள்

03 - சஞ்சன் அபேதீர - தங்காலை ஆதர்ஷ கனிஸ்ட வித்தியாலயம் - தங்காலை - 194 புள்ளிகள்

http://tamil.adaderana.lk/news.php?nid=73289&mode=lead

புலமைப் பரிசில்: முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்



02 - ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் - பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் - ஹங்வெல்ல - 195 புள்ளிகள்
 

இப்பவெல்லாம் தமிழ் பெயர் கண்ணுல படுகுதேயில்லை. இது ஏதோ கொஞ்சம் தமிழ் மாதிரி தெரியுது.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் இடம் பெற்ற மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் இடம் பெற்ற மாணவர்கள்

 

 
 

தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மகளிர் உயர்தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளதுடன், கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெகதீசன் கர்ஜிதன் என்னும் மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 2ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் அதிபர் க.கதிர்காமநாதன் தெரிவிக்கையில்!

´எமது பாடசாலையில் கடந்த வருடத்தினை விட இவ்வருடம் அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

அவ்வகையில் 52 மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அவர்களுள் ஜெ.கர்ஜிதன் என்னும் மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும், கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்தோடு ஜ.யோபிக்கா-169, நி.அஜிஷேக் - 165, சி.தனுஜன்-163, ஜி.துஷ்யந்தன்-157, ர.லயனல்ராஜ்-154 என ஆறு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=73299

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசில் பரீட்சை அடிப்படை தெரியாததுங்க செய்தி எழுதுவதால்.. தமிழ்பெயர்கள் வரவில்லை. சிங்கள மொழி மூலம் பரீட்சை பெறுபேறுகள்.. தமிழ் மொழி மூலப் பரீட்சைப் பெறுபேறுகளும் ஒன்றல்ல. நாங்கள் சிங்கள தேசத்தில்.. யுனில இருந்த போது சிங்களவன் ஆங்கில வினாத்தாளில் சிங்களத்தில் எழுதினாலும் புள்ளி வழங்குவார்கள். நாங்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் எழுதி ஆகனும். தமிழில் எழுதினால்.. தெரியும் தானே என்ன நடக்குமுன்னு. அதுவும் ஒரு தமிழன் கையில் மாட்டிச்சு... யுனியை விட்டே துரத்து மட்டும் ஓயான். அப்படித்தான்.. ஊடகங்கள் இப்ப சிங்களவனை தமிழினிடத்தில் முன்னிலைப்படுத்துவதை தான் செய்யுது. காரணம்.. இன ஒற்றுமையை வளர்க்கினமாம்.. எல்லா தளத்திலும். 

சிங்கள மொழி மூல வினாத்தாளும்.. தமிழ் மொழிமூல வினாத்தாளும் ஒன்றல்ல. வெறும் மொழிபெயர்ப்பல்ல அங்குள்ளமை.  அந்த வகையில் பெறுபேறுகளை சரிநிலையில் வைத்து ஒப்பிட முடியாது. தனிய தனிய தான் நோக்க வேண்டும். tw_blush:

எதுஎப்படியோ.. ஒரு போட்டிப் பரீட்சையில்.. அதுவும் இந்தக் குட்டி வயசில்.. பெற்றோரின்றஆசிரியர்களின்.. ரோதனைகளை தாண்டி வென்ற குட்டிகளுக்கு வாழ்த்துக்கள். வெல்லத்தவறிய குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

 

  • தொடங்கியவர்

 
 
சாதனையாளர்கள்...
 
08-10-2015 01:31 PM
Comments - 0       Views - 68

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த புதன்கிழமையன்று வெளியாகின. அதில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களில் சிலர்... 

article_1444291845-Batti_01st.jpg

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஷினியா 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார் என அதிபர் திருமதி. இ.கணகசிங்கம் தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்) 

article_1444293807-Batti_02nd.jpg

கல்குடா கல்வி வலயத்திலுள்ள சந்திரகாந்தன் வித்தியால மாணவன் ஜெகதீசன் கர்ஜிதன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)

article_1444294000-Batti_03rd_01.jpgarticle_1444294012-Batti_03rd_02.jpgarticle_1444294021-Batti_03rd_03.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள், இம்முறை மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு வலயத்திலுள்ள மெதடிஸ்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் முகம்மட் ஜவாஹிர் அகமட் முஷார்ப்- 189, மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள வவுணதீவு கரடிவெட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த சுதாகர் அஸ்வினி- 189 புள்ளிகளையும்; பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர். 

கரவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மேலும் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

article_1444294110-Jaffna.jpg

யாழ். சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவன் நோதிநாதன் வசீகரன்-192 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்) 

article_1444294209-Trinco1st.jpg

திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தனுக்ஷனா சிவா- 184 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: ஏ.எஸ்.எம்.யாசீம்)

article_1444294296-Trinco.jpg

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களான எஸ்.ஏ.சம்ஹான் மற்றும் எச்.எம்.எம்.சம்ஹான் ஆகிய இருவரும் 170 புள்ளிகளையும் எஸ்.ஏ.அன்சீப் 165 புள்ளியையும் பெற்றுள்ளனர் என அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தெரிவித்தார். (படப்பிடிப்பு: நஹீம் முஹம்மட் புஹாரி)

article_1444294396-Thirukovil.jpg

ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட விவேகானந்தா பாடசாலை மாணவி கமலேந்திரன் சிவர்;சிகா -180 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட மட்டத்தில் 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். (படப்பிடிப்பு: வி.சுகிர்தகுமார்)

article_1444294487-Pandiruppu06.jpg

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில், ஆர்.அத்தீப் அஹமட் -167, எல்.ஹிமாத் அஹமட் செயினுதீன்-164, ஏ.முஹம்மட் ஆக்கிப்- 163, எம்.என்.பாத்திமா அப்னா-161, எம்.எப்.முஹம்மட் ஆணிஸ் மற்றும் ஏ.ஆர்.பாத்திமா தூபா ஆகியோர்- 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என்று அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப் தெரிவித்தார். (படப்பிடிப்பு: பி.எம்.எம்.ஏ.காதர்)

article_1444294568-Mullaitheevu.jpg

முல்லைத்தீவு வலயக்கல்வி வலயத்;துக்குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், நஸார் நஸ்மன் அஹ்மத்-173, ஜவாத் ஜெஸ்லான்- 171, அப்துல் லதீப் முஹம்மது லுத்பி-160 புள்ளிகளையும் பெற்று சித்தி பெற்றுள்ளனர் என்று அதிபர் ஏ.சி.ரியாஸ் தெரிவித்தார். (படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)

article_1444294652-Kandy.jpg

கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை அல்-முனவரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 17 மாணவர்கள், இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என்று அதிபர் ஜே.பௌசுர் றஹ்மான் தெரிவித்தார். (படப்பிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)

article_1444294755-Karaitheevu.jpg

காரைதீவு க/மு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், ஜெயசிறில் பேருஷ்ஜன்-172, ரஜீவன் சரஸ்திகன்- 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். இந்த பாடசாலையிலர் ஐந்து வருடங்களின் பின்னர் இருவர்; சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படம்: நடராஜன் ஹரன்) 

article_1444294841-Anitha_Thalawakala.jp

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின்  மாணவி அனிதா பாஸ்கர்- 180 புள்ளிகளைப் பெற்று  நுவரெலியா மாவட்டத்தில்  11ஆம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். (படப்பிடிப்பு: எஸ். சுஜிதா)

article_1444294924-Marutham.jpg

கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். (படம்: பி.எம்.எம்.ஏ.காதர்)

article_1444294998-Nawalapitty.jpg

நாவலப்பிட்டி இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.வினோஜா ஷிரோனி-157 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார். 

article_1444295187-Kalmunai_-1st.jpgarticle_1444295197-Kalmunai_-2nd.jpgarticle_1444295205-Kalmunai_-3rd.jpg

கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவன் மதுரா கிருஸ்ண சைதன்னியன்-189 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் எம்ஆர்.முகம்மட் மரீஸ-186 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் காரைதீவு ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை மாணவி ரமேஸ் குமார் கஜினி-185 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். (படம்: பி.எம்.எம்.ஏ.காதர்) 

article_1444295282-Rathnapura.jpg

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

இப்பரீட்சையில், காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பிரிவில் இரத்தினபுரி மாவட்டத்தில் முதலாம், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றுள்ளனர். (படம்: சிவாணி ஸ்ரீ)

- See more at: http://www.tamilmirror.lk/156023/ச-தன-ய-ளர-கள-#sthash.Qt8PNsvT.dpuf

புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

 

Edited by தமிழினி

புலமைப் பரிசில் பரீட்சை அடிப்படை தெரியாததுங்க செய்தி எழுதுவதால்.. தமிழ்பெயர்கள் வரவில்லை. சிங்கள மொழி மூலம் பரீட்சை பெறுபேறுகள்.. தமிழ் மொழி மூலப் பரீட்சைப் பெறுபேறுகளும் ஒன்றல்ல. நாங்கள் சிங்கள தேசத்தில்.. யுனில இருந்த போது சிங்களவன் ஆங்கில வினாத்தாளில் சிங்களத்தில் எழுதினாலும் புள்ளி வழங்குவார்கள். நாங்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் எழுதி ஆகனும். தமிழில் எழுதினால்.. தெரியும் தானே என்ன நடக்குமுன்னு. அதுவும் ஒரு தமிழன் கையில் மாட்டிச்சு... யுனியை விட்டே துரத்து மட்டும் ஓயான். அப்படித்தான்.. ஊடகங்கள் இப்ப சிங்களவனை தமிழினிடத்தில் முன்னிலைப்படுத்துவதை தான் செய்யுது. காரணம்.. இன ஒற்றுமையை வளர்க்கினமாம்.. எல்லா தளத்திலும். 

சிங்கள மொழி மூல வினாத்தாளும்.. தமிழ் மொழிமூல வினாத்தாளும் ஒன்றல்ல. வெறும் மொழிபெயர்ப்பல்ல அங்குள்ளமை.  அந்த வகையில் பெறுபேறுகளை சரிநிலையில் வைத்து ஒப்பிட முடியாது. தனிய தனிய தான் நோக்க வேண்டும். tw_blush:

எதுஎப்படியோ.. ஒரு போட்டிப் பரீட்சையில்.. அதுவும் இந்தக் குட்டி வயசில்.. பெற்றோரின்றஆசிரியர்களின்.. ரோதனைகளை தாண்டி வென்ற குட்டிகளுக்கு வாழ்த்துக்கள். வெல்லத்தவறிய குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள். tw_blush:

நெடுக்ஸ் உங்கள் பதிலைப் பார்த்த போதே எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனாலும் சில விடயங்களை தெரிந்து தெளிந்த பின்னர் எழுதலாம் என்பதால் இக் கால தாமதம்.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் வினாத்தாள்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் (ஆமா இப்ப ஆங்கிலத்திலும் உள்ளதாம்) வெறும் மொழி பெயர்ப்புகளே. இலங்கையில் முதல் 17 இடங்களில் எந்த தமிழ் மாணவனும் இல்லை என்பதை இளைப்பாறிய யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளரிடம் கதைத்த போது கூறினார்.

இதற்குள்ள போய் உங்கட யூனியையும் சேர்த்து நல்லாத்தான் கதை விட்டிருந்தீர்கள். தெரியாவிட்டால் தெரிந்தவரிடம் கேட்டு அறிந்து எழுதவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.