Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவின்... தாயார் மாரியம்மாள் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vaiko’s Mother Mariammal death

வைகோ.... தாயார் மாரியம்மாள் காலமானார்.
திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் அவருக்கு வயது 95. 

வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார். 

அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்றது நினைவிருக்கலாம். 

இதனிடையே தனது தாயாரின் மரணச் செய்தி பற்றிய தகவல் அறிந்த உடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு விரைந்துள்ளார். பொதுவாழ்வில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர், டெல்லி முதல்வர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக டெல்லி சென்றிருந்த வைகோ, இன்று காலையில் சென்னை திரும்பினார். காலையில் தாயார் மரணமடைந்த செய்தி அறிந்த உடன் உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு செல்ல இருப்பதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தகவல் தற்ஸ் தமிழ்-

வைகோ ஐயா... உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு எடுத்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக, பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
வைகோ தாயாரின் இறுதிச் சடங்கு நாளை கலிங்கப்பட்டியில் நடைபெறுகிறது
 
ma12.jpg
 
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு திருநெல்வேலியில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 98.
 
நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை தனியார்    மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்தார். தில்லியில் இருந்து நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த வைகோ அவர்கள், இன்று காலை விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றார். திருநெல்வேலிக்கு வைகோ வருகின்ற தகவலை அவரது தம்பி ரவிச்சந்திரன் தாயாரிடம் தெரிவித்து இருக்கின்றார். 
 
திடீரென, காலை 9.05 மணி அளவில் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
 
மாரியம்மாள் என்ற பெயருக்கு ஏற்ப, கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் வாரிவாரி உணவு அளித்துப் பசியாற்றி, பண்பின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். அரசியல் களத்தில் வைகோவுக்குப் பக்கபலமாக இருந்தார்.  சோதனைகள் சூழ்ந்த வேளைகளில் எல்லாம் ஆறுதலும் தேறுதலும் தந்தார். எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர் மாரியம்மாள்.
 
நெருக்கடி நிலை காலத்தில் சேலம் சிறையில் வைகோவைச் சந்தித்தபோது, ‘மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் நம்ம ஐயாவை விடுதலை செய்து விடுவார்களாமே? என்று வயற்காட்டுப் பெண்கள் சொன்னதை வைகோவிடம் மாரியம்மாள் கூறினார். 
 
‘அதற்கு நீங்கள் என்னம்மா சொன்னீர்கள்?’ என்று வைகோ கேட்டபோது, ‘என் மகன் கொலை செய்தானா? கொள்ளை அடித்தானா? எதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்? அந்த அம்மா (இந்திரா காந்தி) எத்தனை ஆண்டுகள் என் மகனைச் சிறையில் அடைத்துவைத்து இருப்பார் என்று சொன்னேன்’ என்றார் மாரியம்மாள்.  
 
முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது; தொண்டைக்குழியில் ஜீவன் உள்ளவரை போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்ற உணர்வை ஊட்டியவர்.
 
இலங்கையில் இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் களத்தில் நின்றபோது, காயம்பட்டுக் கை, கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37  விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக்கும் மேலாக வைத்துப் பராமரித்து உணவு அளித்துப் பாசம் காட்டிப் பாதுகாத்தவர் மாரியம்மாள்.
 
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டபோது கலிங்கப்பட்டி வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினர், தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கழற்றியபோது, ‘அந்தப் படத்தை ஏன் எடுக்கின்றீர்கள்? ‘அந்தப் பிள்ளையும் என் மகன்தான். அதைக் கழற்றாதீர்கள்’ என்று சொல்லித் தடுத்தார்.
 
செண்பகவல்லி அணைக்கட்டைப் புதுப்பிக்கக் கோரி வாசுதேவநல்லூரில் வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி, கலிங்கப்பட்டியில் நடைபெற்ற பல்வேறு அறப்போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் அனைத்திலும் முன்வரிசையில் பங்கேற்றவர். உடல் நோயையும் பொருட்படுத்தாமல், சொட்டுத் தண்ணீரும் பருகாமல் உறுதியை வெளிப்படுத்தினார்.
 
2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்விச் செய்தி கேட்டுக் கிராமத்துப்  பெண்கள் அழுதபோது, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள்; அதனால் என் மகன் ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்கு முன்பே தெரியும்’ அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.   
 
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்துக் கலிங்கப்பட்டியில் பெண்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்தார். 
 
சசிபெருமாள் மறைவுச் செய்தி கேட்டவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு, கலிங்கப்பட்டி மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் எனப் போராட்டக்களத்திற்குத் தாமாகவே வந்து நடுத்தெருவில் அமர்ந்தார். செய்தி அறிந்து வைகோ அங்கே சென்றார். போராட்டம் வெடித்தது. கலிங்கப்பட்டி மதுக்கடை மூடப்பட்டது. தமிழகம் எங்கும் பெண்கள் களத்திற்கு வந்தனர். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்தது.  
 
மறுமலர்ச்சி தி.மு.கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றவர். ‘முக்கியமான மாநாடுகள் நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் இறந்துபோய், நிகழ்ச்சிக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாதே’ என்று கூறுவாராம்.
 
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று இரவு திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை இயற்கை எய்தினார். 
 
மாரியம்மாள் இறுதி நிகழ்வுகள், நாளை காலை (7.11.2015) காலை 11 மணி அளவில் கலிங்கப்பட்டியில் நடைபெறும்.
 
‘தாயகம்’    
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
06.11.2015
 
 

===============================================================================================

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும். 

 

 

 

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..., அண்ணனின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்...!!

ஆழ்ந்த இரங்கல்கள்....!!!

ஆழ்ந்த இரங்கல்கள்..!

பொடா சட்டத்தில் வைகோ கைதான சூழலில் அந்த தாய் கலிங்கப்பட்டி வீட்டில் இருக்கிறார். பெரும் படைகளுடன் வீட்டில் நுழைந்த காவல்துறை வீட்டில் மாட்டப்பட்டிருந்த தலைவர் பிரபாகரனின் படத்தை நீக்க முற்ப்பட்ட போது "அதுவும் என் மகன் தான். அந்த மகனின் படத்தை நீக்க விடமாட்டேன்" என்று நெஞ்சுயர்த்தி தடுத்த, விடுதலை போராட்டத்தின் ஆழம் அறிந்த தமிழீழ பற்றாளர் அந்த தாய்.

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

12189523_1011721288888718_23918643617997

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை தனியார்    மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்தார்.
 
திடீரென, காலை 9.05 மணி அளவில் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.

 

25-1443164098-cho-ramasamy.jpg

இறப்பிலும்.... நல்ல இறப்பு, நோயால்... அவஸ்தைப் பட்டு, கட்டிலில் மாதக் கணக்காக படுத்திருந்து......  அழுந்தி இறப்பது என்று இரு வகைப்படும். வைகோவின் தாயார் பூரண வாழ்க்கை வாழ்ந்து, 12 மணித்தியாலங்களில் அவரை... இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்டான். இது அவரவர் தம் வாழ் நாளில் செய்த பாவ, புண்ணியங்களை வைத்து ஆண்டவன்  தீர்மானிப்பான் என்று சொல்வார்கள். 

மாதக் கணக்கில், மூக்கில்... குழாய் செருகிய படி.....  கஸ்ரப்படும், சோ என்ற ஆளை நினைக்க வேதனையாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

25-1443164098-cho-ramasamy.jpg

இறப்பிலும்.... நல்ல இறப்பு, நோயால்... அவஸ்தைப் பட்டு, கட்டிலில் மாதக் கணக்காக படுத்திருந்து......  அழுந்தி இறப்பது என்று இரு வகைப்படும். வைகோவின் தாயார் பூரண வாழ்க்கை வாழ்ந்து, 12 மணித்தியாலங்களில் அவரை... இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்டான். இது அவரவர் தம் வாழ் நாளில் செய்த பாவ, புண்ணியங்களை வைத்து ஆண்டவன்  தீர்மானிப்பான் என்று சொல்வார்கள். 

மாதக் கணக்கில், மூக்கில்... குழாய் செருகிய படி.....  கஸ்ரப்படும், சோ என்ற ஆளை நினைக்க வேதனையாக உள்ளது.

நல்லவர்களை எவ்வித அழுந்துதலும் இல்லாமல் ஆண்டன் தன் பாதம் அழைத்துவிடுவார் என முன்னோர்கள் சொல்ல கேள்விப்பட்டுளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடமைபட்ட ஒருவர் !
அனுதாபங்கள் !

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.