Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் குண்டு வெடிப்பு: 129 பேர் பலி

Featured Replies

  • தொடங்கியவர்

பாரீஸ் பயங்கரவாத தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் பலி

 

 
 
  • இடது: பெரும் துயரத்தில் பாரீஸ் மக்கள் - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுள் ஒன்று. | படம்: கெட்டி இமேஜஸ்
    இடது: பெரும் துயரத்தில் பாரீஸ் மக்கள் - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுள் ஒன்று. | படம்: கெட்டி இமேஜஸ்
  • பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
    பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.
    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.

'ஐ.எஸ். இயக்கம் தொடுத்த போர்' என்கிறார் பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிக்கரித்துள்ளது; ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

இது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் 'திட்டமிட்ட்டு தொடுக்கப்பட்ட போர்' என்று பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, துப்பாக்கி ஏந்திய 8 பேரும், ஒரு தற்கொலைப் படைத் தீவிரவாதியும் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்றும், இது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்த போர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-120%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article7875918.ece?homepage=true

  • Replies 61
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

930b6222-4aa7-49a8-a5e9-3e8ac3cde335.jpg

 Die Nationalspieler Antonio Rüdiger und Lukas Podolski nach der Ankunft in Frankfurt.

ஜேர்மன் உதைபந்தாட்ட அணி  பிராங்போர்ட்  வந்து அடைந்தது

  • தொடங்கியவர்

பிரான்ஸ் மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் ஹாலந்தே

 

 
பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே | கோப்புப் படம்.
பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே | கோப்புப் படம்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

அவரது முழு உரை:

என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் பலியாகினர். மிக அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடூரமானது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், நகரின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த ஒரு தாக்குதலும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்.

அதில் இரண்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டும். ஒன்று நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்பது. இதனால், சில பொது இடங்கள் மூடப்படலாம், போக்குவரத்து மாற்றம் செய்யப்படலாம். தேவைப்பாட்டல் போலீஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

மற்றொன்று பிரான்ஸ் நாட்டுடனான அண்டை நாடுகளுக்குச் செல்லும் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பு கருதி மூடப்படும். இதன் மூலம், பிரான்ஸில் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் யாரும் உள்ளே நுழைய முடியாது அதேபோல் இங்கு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் வெளியே தப்பிச் செல்ல முடியாது.

பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் நாம் அனைவரும் அமைதியுடன் இருப்பது மிகவும் அவசியம். அதேபோல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தியுள்ள நிலையில் நாம் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மன உறுதியுடன் இருப்போம் என நான் நம்புகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நம்மை அச்சுறுத்த வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். இந்த வேளையில் அச்சப்படாமலும் இருக்க முடியாது. ஆனால், இத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட தேசம் ஒன்று இருக்கிறது என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதன் மூலம் நாம் தீவிரவாதிகளை முறியடிக்க முடியும்.

குடிமக்களே, தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் இன்னமும் முடியவில்லை. சிக்கலான தருணங்கள் நீடிக்கின்றன. நமது பாதுகாப்புப் படையினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளிடம் இருந்து நம் தேசத்தை பாதுகாப்புப் படையினர் திறம்பட பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்.

குடியாட்சி வாழ்க! பிரான்ஸ் வாழ்க.

இவ்வாறு ஹாலந்தே பேசினார்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/article7876182.ece?homepage=true&relartwiz=true

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு அதிகார வர்க்கங்களுக்கு தேவையானவை இப்படியான தாக்குதல்கள்தான். இனிமேல் வளங்களைச் சுரண்டுவதற்கு இன்னும் சிறப்பானதொரு களம் கிடைத்துவிட்டது. (ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் மேற்கினால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பது சிறப்புச் செய்தி.)

மக்கள் மந்தைகளானால், மடிவது திண்ணம். ஆழ்ந்த இரங்கல்கள்..!

பி.கு.:  அண்மைக்காலமாக மத்திய கிழக்கில் ரஷ்யாவின் கரங்கள் மேலோங்கி இருந்தன. இந்தத் தாக்குதல்கள் அதற்கு ஒரு முடிவு கட்ட உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு, இன்றைய தாக்குதலையும் மேற்குலகின் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவது அவ்வளவு கடிணமானதாக இருக்கப் போவதில்லை. 

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு,....

இதனை எம்மவர்கள் ஆதரித்தனர் என்பது புதியதாகத்தான் உள்ளது! 

கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டி செயல்கள் இவை ,

ஆனால் மேற்குலகுகள் தமது வெளிநாட்டு கொள்கைகளை மறு பரிசீலனை செய்தே ஆகவேண்டும் .அமெரிக்க அதிபர் புஷ் தனது எட்டுவருட ஆட்சியில்  பிரிட்டன் தவிர்ந்து வேறு எந்த நாட்டினதும் ஆதரவு இல்லாமல் செய்த செயற்பாடுகள் எல்லாம் ஏற்றுகொள்ள முடியாதவை .

ஆனால் மேற்குலகுகள் தங்களது நிலையை மாற்றிக்கொள்வதற்கு எள்ளளவும் தயாராக இல்லை பயங்கரவாதத்தின் ஆணிவேர் பற்றி அக்கறை படாமல் மரத்தை வெட்டுவம் தள்ளுவம் என்று சூழுரைகின்றார்கள் .

பாலஸ்தினிய பிரச்சனையை இன்னமும் தீர்க்கமுடியாத இந்த நாடுகள் , யு என் எல்லாம்   தான் இவற்றிற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் .

பாரிஸ் தாக்குதலை நேரில் பார்த்தவர் விபரிக்கிறார் - தமிழ்வடிவம் - குளோபல் தமிழ்செய்திகள்-

கறுப்பு உடையணிந்த ஓருவர் மிகவும்நேர்த்தியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொள்வதை கண்டேன்”

பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை சேர்ந்த உளவியல் மருத்துவர் மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழில் - குளோபல் தமிழ்செய்திகள்:-

 
 
நாங்கள் அந்த உணவகத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நின்றிருந்த வேளை முதலாவது பட்டாசுசத்தத்தை கேட்டோம்,நாங்கள் திரும்பிப்பார்த்த வேளை 185சென்டிமீற்றர் உயரமுள்ள நபர்  ஓருவரை கண்டேன், அவர் நின்றிருந்த விதம், அவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்  என்பதை எனக்கு உணர்த்தியது.
 
அவர் துப்பாக்கிபிரயோகம் செய்பவர் காணப்படுவது போன்று காணப்பட்டார், வலது காலை முன்நோக்கி நகர்த்தி அவரது இடது காலில் பின்நோக்கி நின்று கொண்டிருந்தார், அவரது இடது தோளில் துப்பாக்கி காணப்பட்டது, என்னால் மகஜின்களையும் பார்க்கமுடிந்தது.
 
அவர் அணிந்திருந்த அனைத்தும இறுக்கமானவைகளாகவும், கறுப்பு நிறத்திலும் காணப்பட்டன.
 
மோதலில் ஈடுபட்டுள்ள படைவீரர் ஓருவர் எவ்வாறு தோற்றமளிப்பார் என நீங்கள் சிந்தித்தால் அதற்கு பொருந்தக்கூடிய விதத்தில் இவர் காணப்பட்டார்,அவர் தனது இடது கையால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட வண்ணமிருந்தார்,அவை தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தொழிற்சார் தன்மைகொண்ட துப்பாக்கி பிரயோகங்களாக காணப்பட்டன.
 
எனக்கு முன்னாள் உள்ள உணவுவிடுதியில் கதிரையில் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு நபர்களை அவர் தனது துப்பாக்கி பிரயோகத்தின் மூலம் கொன்றார்,அவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காவதையும் நிலத்தில் வீழ்ந்து பலியாவதையும் நான் கண்ணால் கண்டேன்.
 
அதன் பின்னர் அவர் தனது துப்பாக்கியை இடம்மாற்றி கார்சாராதியின் கதவின் ஊடாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்,அதன் பின்னர் அவர் அந்த உணவுவிடுதிக்குள் செல்வதை நான் பார்த்தேன், அவர் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார், அவ்வேளையே நாங்கள் பாதுகாப்பிற்காக ஓடதொடங்கினோம்.
 
எங்களால் 15 முதல் 20 வரையிலான துப்பாக்கிவேட்டுகளை கேட்கமுடிந்தது  அதன் பின்னர் அனைத்தும் தீடீர் என மௌனமாகியது.
 
துப்பாக்கி பிரயோகம் நின்றவுடன் நாங்கள் உள்ளே சென்றோம்,உணவுவிடுதியின் முன்பகுதியில் வைத்து சுடப்பட்டமூவரும் அங்கேயே வீழ்ந்து கிடந்தனர்,பின்னர் நாங்கள் தாக்குதலிற்கு இலக்கான வெள்ளை காரைநோக்கி சென்றோம்,பொதுமக்கள் அந்த காரின் சாரதியை காப்பாற்றி வெளியில் தூண் ஒன்றில் அமர்த்தியிருந்தனர்  அவர் மரணித்துக்கொண்டிருந்தார்.
 
நாங்கள் அந்த இடத்திலிருந்து புறப்படுவதற்கு தயாரான வேளை பொலிஸ்கார்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் வருவதை பார்த்தோம்,தப்பிவீடு சென்றுவிடுவோம் என மனது சொன்னாலும்,சமூக அக்கறை காரணமாக பொலிஸாருடன் மீண்டும் சம்பவ இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம்,
 
பொலிஸார் எங்களை துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்ற உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்றனர்,அது மிகவும் பயங்கரமானதாக காணப்பட்டது,நாங்கள் அங்கு 10 முதல் 15 பேரை பார்த்தோம் அவர்கள் ஓன்றில் மரணித்திருக்கவேண்டும் அல்லது படுகாயம் அடைந்திருக்கவேண்டும்.
 
மருத்துவ உதவியாளாகள் அங்கு வந்திருந்தனர் அவர்கள் காயம் அடைந்தவர்களிற்கு சிகிச்சையளித்த வண்ணமிருந்தனர், நாங்கள் பல உடல்களை பார்த்தோம், வயிற்றில் சுடப்பட்ட நபர் ஓருவரை பார்த்தோம்,அந்த இடம் மிகவும் அச்சமூட்டுவதாக காணப்பட்டது, எங்கும் குருதிபெருக்கெடுத்திருந்தது, திரைப்படங்களில் நாங்கள் காணும் குருதிக்கும் நிஜ வாழ்க்கையில் பார்க்க கூடிய குருதிக்கும் இடையிலான வித்தியாசத்தை நான் உணர்ந்தேன், நிஜவாழ்க்கையில் அது சற்று கனதியானது.
 
 
நாங்கள் எவராவது வாகனத்தில் அல்லது மோட்டார்சைக்கிளில் தப்பிசெல்வதை  பார்த்தோமா என பொலிஸார் விசாரித்தனர்,நாங்கள் குறிப்பிட்ட துப்பாக்கிதாரி தப்பிப்பதற்கு இலகுவான வீதியிலேயே உயிரை பாதுகாப்பதற்காக மறைத்திருந்தோம்,நாங்கள் சில கார்களிற்கு நடுவில் மறைந்திருந்தோம் ஆனால் எவரும் தப்பிசெல்வதை காணவில்லை.
 
பொலிஸார் எங்களிடமிருந்து சாட்சியங்களை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு எங்களை அழைத்துசென்றனர்,நாங்கள் பார்த்த அந்த துப்பாக்கிதாரி கைதுசெய்யப்படவில்லை.
 
நாங்கள் பார்த்த இடங்களில் எல்லாம் துப்பாக்கிபிரயோகத்தை தற்கொலை தாக்குதல்களை நேரில் பார்த்த பலர் இருந்தனர்,
 
சிலர் உடல்களின் கீழே சிக்கிக்கொண்டவர்கள்,உடல்களை அகற்றிவிட்டு ஊர்ந்துவெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்,உடல்களிற்கு மேலேயே வீழ்ந்து கிடந்த சிலரும் உள்ளனர்.
 
அனைவருக்கும் அந்த நிமிடங்கள் மிகவும் பயங்கரமானவையாகவே காணப்பட்டன.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125928/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதல்... ஐஎஸ்ஐஎஸ்... உலகம் உணர வேண்டிய 8 உண்மைகள்! - மருதன்

 

வ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் மூன்று நோக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

1) அச்சுறுத்துவது

எதிரிகள் என்று யாரை முடிவு செய்கிறார்களோ அவர்களை அச்சுறுத்தும் பொருட்டு அவர்களைச் சேர்ந்திருக்கும் குழுவைத் தாக்கி அழிப்பார்கள். இந்த எதிரிகள் இன அல்லது மத ரீதியிலான குழுக்களாக இருக்கலாம், ஏதேனுமொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த மக்களாகவோ, அந்நாட்டின் அரசாங்கப் பிரநிதிகளாகவோ இருக்கலாம்.

paris%20attack01.jpg

2) ஒருங்கிணைப்பது

இந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொள்வதற்குக் காரணமே நீங்கள்தான். உங்கள் துயரங்களை நீக்கத்தான், உங்கள்  நோக்கங்கள் நிறைவேறவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்து பாடுபடுகிறோம் என்பதை உணர்த்தி மக்கள் ஆதரவைத் திரட்ட முயல்வார்கள். ஏதேனும் ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களாக இந்த மக்கள்கூட்டம் இருக்கும்.

3) பிளவுபடுத்துவது

தாங்கள் ஆதரிக்க விரும்பும் பிரிவினருக்கும், எதிர்க்க விரும்பும் பிரிவினருக்கும் இடையில் பகை வளரவேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். அந்தப் பகையுணர்வைத் தீவிரப்படுத்த தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

வெள்ளி இரவு பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200 பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வைத்தும் இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய எட்டு பேரும் இறந்து விட்டனர். ஒருவர் காவல் படையினரால் சுடப்பட்டிருக்கிறார்; மற்றவர்கள் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ஒரு தரப்பும் இல்லை, அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்று இன்னொரு தரப்பும் இன்று முழுக்க இணையத்தில் வாதிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், சற்று முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வமான ஒப்புதல் கடிதம் இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் கிட்டத்தட்ட முற்றுபெற்றுவிட்டது.

பிரெஞ்சு, அரபு மொழிகளிலும் ஆடியோ வடிவிலும் வெளிவந்திருக்கும் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* கவனமாக டார்கெட்டைத் தேர்ந்தெடுத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம்.

* பாலியல் தொழிலுக்கும், ஆபாசத்துக்கும் தலைநகரகரமாக விளங்கும் பாரிஸில் தாக்குதல் நடந்திருப்பது சரியே.

* நடந்துகொண்டிருப்பது சிலுவை போர். ஐரேப்பாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் ஒரு நாடுதான் பிரான்ஸ்.

* முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகள்மீது குண்டுகள் வீசி போர் தொடுப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதிதான் ஏற்படும்.

paris%20attack02.jpg

* தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய சகோதரர்களுக்கு அல்லா துணையிருப்பார்.

* மற்றபடி, இது ஓர் ஆரம்பம் மட்டுமே.

அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே செல்லவும் : <https://news.siteintelgroup.com/Jihadist-News/is-claims-paris-attacks-warns-operation-is-first-of-the-storm.html>

இந்த அறிக்கை உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால்தான் வெளியிடப்பட்டது என்பது உறுதியாகும் பட்சத்தில், மேலே நாம் பார்த்த மூன்று நோக்கங்களும் இந்தத் தாக்குதல்களில் வெளிப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

1) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் பிரெஞ்சு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அந்நாட்டு அரசியல் தலைமையையும் மக்களையும் அச்சுறுத்தும் நோக்கில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

2) பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப் போர் என்று அந்தத் தாக்குதலுக்கு ஒரு தார்மிக நியாயம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

3) மேலை நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

தி கார்டியனில் இதனை ஆராய்ந்துள்ள ஜேசன் பர்க், கூடுதலாக அல் காயிதாவையும் சந்தேகித்துள்ளார். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது அல் காயிதாவே நினைவுக்கு வருகிறது என்கிறார் அவர். ஐ.எஸ்.ஐ.எஸ், அல் காயிதா இரண்டும் இணைந்தும் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்பது வேறு சிலரின் நம்பிக்கை.

ஒரு காலத்தில் ஜிகாதி தீவிரவாதத்தின் தந்தையாகக் கருதப்படும் அல் காயிதா இன்று சுருங்கிய கட்டெறும்பாக மாறிக்கிடக்கிறது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ தனது ஆக்டோபஸ் கரங்களை நாலாபக்கமும் படரவிட்டபடி பரவிக்கொண்டிருக்கிறது. ஈராக், சிரியா என்று தொடங்கி பல நாடுகளில் இஸ்லாமிய காலிஃபைட் அரசை நிறுவவேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நீண்ட கால லட்சியம். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் என்று ஒரு மாபெரும் கூட்டணி தமக்கு எதிராகத் திரள்வதைக் கண்டு சினம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ், இவர்கள் அனைவரையும் எதிரிகளாக அறிவித்து போர் தொடுத்திருக்கிறது. பாரிஸ் தாக்குதல் என்பது அந்தப் போரின் ஒரு பகுதி மட்டுமே.

இதுபோக, பிரிட்டனைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதும், பாரிஸ் தாக்குதலுக்கு ஒரு முக்கியக் காரணம். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் போரில் பிரெஞ்சு வீரர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.

சார்லி ஹெப்டோ தாக்குதல் முடிவடைந்து இன்னும் ஓராண்டுகூட முடியாத நிலையில், அதைவிடக் கடுமையான இன்னொரு தாக்குதலை பிரான்ஸ் சந்தித்திருக்கிறது. பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைப் பெயரிட்டுக் குறிப்பிட்டு கண்டித்திருக்கிறார். இது எங்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போர்; விரைவில் பழிக்குப் பழி வாங்கப்படும் என்றும், கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்திருக்கிறார். அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் ஒரு நீங்கா இருளுக்குள் நுழைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கிறது பிரான்ஸ் மட்டுமல்ல, லெபனானின் தலைநகரம் பெய்ரூத்திலும் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. இதில் 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 200 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

paris%20attack03.jpg

அதிர்ச்சியூட்டும் இந்நிகழ்வுகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இவற்றுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்?

1) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரத்தன்மை கொண்ட வாஹாபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்துச்செல்ல துடிக்கிறது. இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவுஜீவிகள் முன்னெடுக்கவேண்டும். வெறுப்பு அரசியலையும், சிந்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இயக்கங்களிடம் இருந்து அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைத் தனிமைப்படுத்தவேண்டும்.

2) ஹாலண்டே சொல்வதைப் போல் பலமடங்கு தீவிரத்துடன் இரக்கமற்ற முறையில் பதிலடி கொடுப்பது சரியான தீர்வு அல்ல. ஜிகாதி ஜானுக்குப் பழிவாங்க பாரிஸ். பாரிஸுக்குப் பழிவாங்க இன்னொரு ஜிகாதி ஜான் என்று ஆரம்பித்தால் முடிவே இராது. நிலைமை மேலும் தீவிரமடையும்.

3) பாரிஸ் தாக்குதலோடு சேர்த்து பெய்ரூத் தாக்குதலும் அதே தீவிரத்தன்மையுடன் அணுகப்பட வேண்டும். வளர்ந்த நாட்டைச் சேர்ந்த மக்களுக்கும், பின்தங்கிய நாட்டைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

4) ஒவ்வொரு மதமும் தனக்குள் இருந்து கிளைத்தெழும் பிழையான சக்திகளை அடையாளம் கண்டு உள்ளிருந்தே தகர்க்க வேண்டும்.

5) மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஒரு தீவிரவாதப் போரைக் கண்டிக்கும்போது அந்த மதத்தைச் சேர்ந்த அனைவரையும் சேர்த்து பழிக்கக்ககூடாது.

6) கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு இடையில் பகையை வளர்க்க விரும்பும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கங்களுக்கு நாம் மறைமுகமாகக்கூட உதவிடக்கூடாது. இஸ்லாமோஃபோபியா ஒழிக்கப்படவேண்டும். ஜிகாதி பீதி, இஸ்லாமியத் தீவிரவாதம் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தி அப்பாவி இஸ்லாமியர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது. இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும்.

7) தீவிரவாதத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டே இருப்பது வீண். வேரை ஆராயவேண்டும். பிரச்னைகள் தோன்றும் சமூகங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். முறையான அரசியல், சமூக, வரலாற்று நோக்கில் தீர்வுகள் காணப்படவேண்டும்.

சுதந்தரம், சமத்துவம், சகோதரத்தும் ஆகிய முழக்கங்களை உலகுக்கு வழங்கிய நாடு பிரான்ஸ். அந்த முழக்கங்களுக்கு மெய்யாகவே உயிர் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

8) தீவிரவாத இயக்கங்களைப் போலவே நாமும் விளைவுகள் குறித்து யோசிக்காமல், பெரும் நாசங்களை விளைவிக்க வேண்டியதில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான பெரும் போர் என்று சொல்லி ஜார்ஜ் புஷ் இதைத்தான் செய்தார். அது பலனளிக்கவில்லை என்பதையே பாரிஸும், பெய்ரூத்தும் நமக்கு உணர்த்துகின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=55068

7 hours ago, ragunathan said:

இஸ்லாமிய அடைப்படைவாதம் முற்றாகக் களையெடுக்கப்படவேண்டும் என்பதனையே இந்த காட்டேறிகளின் தாக்குதல்கள் மீண்டும் காட்டி நிற்கின்றன.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மேற்குலகின் மேலுள்ள காழ்ப்புணவின்பால் தான் பேசுகிறார்களேயன்றி, சுயசிந்தனையுடன் பேசவில்லை என்பது தெரிகிறது.

ஐஸிஸ் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், பாலஸ்தீனத்துக்காகவோ அல்லது வேறெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்காகவோ போராடவில்லை. மாறாக மனித நாகரீகம் தோன்றாத காலப் பகுதிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மிருகங்களின் மதமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தினனை உலகம்  முழுதும் பரப்பும் நோக்கில்த்தான் செயற்படுகிறார்கள் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேசமும், சிங்கள இனவாதிகளும் மட்டும்தான் காரணம் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்.

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு, இன்றைய தாக்குதலையும் மேற்குலகின் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவது அவ்வளவு கடிணமானதாக இருக்கப் போவதில்லை. 

 

நன்றி ரகுநாதன்

  • தொடங்கியவர்
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்பட்டது
 

பாரிஸ்: பாரிசில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1386938

 

பிரான்சில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

 

 

பாரிஸ்: பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூட்டங்கள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1386907

 

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அடையாளம் கண்டுபிடிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் ஒருவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் டி.என்.ஏ., சோதனை நடத்தியதில், தாக்குதலில் ஈடுபட்டது பிரான்சை சேர்ந்த நபர் என்பது உறுதியாகியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்: பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஆம்ஸ்டர்டாம்: டுவிட்டர் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரான்சுக்கு சொந்தமான ஏர் பிரான்ஸ் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆமஸ்டர்டாமில் தரையிறக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1386834

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

இஸ்லாமிய அடைப்படைவாதம் முற்றாகக் களையெடுக்கப்படவேண்டும் என்பதனையே இந்த காட்டேறிகளின் தாக்குதல்கள் மீண்டும் காட்டி நிற்கின்றன.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மேற்குலகின் மேலுள்ள காழ்ப்புணவின்பால் தான் பேசுகிறார்களேயன்றி, சுயசிந்தனையுடன் பேசவில்லை என்பது தெரிகிறது.

ஐஸிஸ் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், பாலஸ்தீனத்துக்காகவோ அல்லது வேறெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்காகவோ போராடவில்லை. மாறாக மனித நாகரீகம் தோன்றாத காலப் பகுதிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மிருகங்களின் மதமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தினனை உலகம்  முழுதும் பரப்பும் நோக்கில்த்தான் செயற்படுகிறார்கள் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேசமும், சிங்கள இனவாதிகளும் மட்டும்தான் காரணம் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்.

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு, இன்றைய தாக்குதலையும் மேற்குலகின் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவது அவ்வளவு கடிணமானதாக இருக்கப் போவதில்லை. 

 

தங்கள் நேர்மையான கருத்துக்கு நன்றி ரகுநாதன்.

பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பலரை, பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

151114163041_belgium_man_arrest_512x288_
பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெல்ஜியத்தில் பலர் கைதாகியுள்ளனர்.

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அடுத்து, இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துளளார் என பெல்ஜியப் பிரதமர் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


151114141943_paris_security_tightened_ap
பாரிஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மிகக் கொடூரமான இத்தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த காலத்தில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கான பதிவுகள் உள்ளன என்றும் பிரெஞ்ச் அரசின் தலைமை வழக்கறிஞர் பிரான்சுவா மொலீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

151114152317_paris_shops_closed_512x288_
பாரிஸ் நகரின் பல இடங்களில் கடைகள் சனிக்கிழமை(14.11.15) மூடியிருந்தன

அனைத்து தாக்குதல்தாரிகளும் தானியங்கி கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்திருந்ததுடன் தற்கொலை அங்கியும் அணிந்திருந்தனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸுவா ஒலாந் அறிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151114_parisattack_belgiumarrests

  • தொடங்கியவர்

பாரிஸ் படுகொலைகள்:மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிப்பு

 
  • உயிரிழந்தவர்களுக்கு பல்தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    AP உயிரிழந்தவர்களுக்கு பல்தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  • காவல்துறையினர் கூடுதல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
    Getty காவல்துறையினர் கூடுதல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாரிஸ் படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டுகோள்

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருவதற்காக தமது நகரம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பாரிஸின் மேயர் அனா ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் வார இறுதியில் செல்லும் பகுதியை குறிவைத்து இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் பாரிஸ் மேயர் கூறுகிறார்.

அங்கு நடைபெற்றுள்ள தாக்குதல்களை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மக்கள் வந்துசெல்லும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.

 

எதிர்வரும் வியாழக்கிழமை வரை அனைத்து பொதுக்கூட்டங்களுக்கும், மக்கள் ஒன்று கூடுவதற்கும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நகரிலுள்ள மக்கள் ரத்த தானம் செய்யுமாறு பாரிஸ் மாநகர கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் கொடூரமானத் தாக்குதலகளில் உயிரிழந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு பாரிஸ் நகரவாசிகள் பல்வழிகளில் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7878333.ece

  • தொடங்கியவர்

பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்தடிருந்த அதிவேக ரயில் TGV   Straßburg  நகருக்கு அருகில் தடம்புரண்டு Rhein-Marne ஆற்றில்  விழுந்ததில் ஆக குறைந்தது  10 பேர் பலி.

60 தொழில்நுட்பவியளார்கள் அந்த ரயிலில் இருந்துள்ளார்கள்.

 

Zug in Frankreich entgleist - mindestens zehn Tote. Rettungskräfte durchsuchen das Wrack des verunglückten TGV. Der Zug ist während einer Probefahrt in der Nähe von Straßburg entgleist und in den Rhein-Marne Kanal gestürzt. (Quelle: Reuters/Vincent Kessler)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட கம்போடிய உணவகம் ஒன்றில் வேலை செய்த தமிழர் ஒருவரும் இந்தச் சம்பவங்களில் கொல்லப்பட்டதாக பிரான்சிலிருக்கும்  உறவினர் ஒருவர் கூறினார். சரியாகத் தெரியவில்லை.:shocked:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, நவீனன் said:

சிரிய ராணுவ நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்டதா பிரான்ஸ்?

பாரீஸில் பட்லாகன் திரையரங்கு வெளியே சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸார் | படம்: ராய்ட்டர்ஸ்.
பாரீஸில் பட்லாகன் திரையரங்கு வெளியே சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸார் | படம்: ராய்ட்டர்ஸ்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான பிரான்ஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் செயலாக பாரீஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாரீஸில் பட்டாக்லான் கலையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜனாசக் கூறும்போது, எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாக கேட்டது. அவர்கள் "இது உங்கள் அதிபர் ஹாலந்தேவின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், இராக் குறித்தும் தீவிரவாதிகள் பேசியதாக அவர் கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

போர்க்களத்தை விரும்பும் நாடுகள் போர் அவலங்களைதான் அனுபவிக்கும். 
இவர்கள் வாயால் பேசியிருந்தால்....அவர்களும் வாயால் பேசியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக எதுவும் இல்லை.

இது ஜெருசலதினை முஸ்லிம்கள் கையில் இருந்து மீட்க, கிறிஸ்தவர்கள் அன்று பல நூறாண்டுகளாக நடாத்திய சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சி தான்.

சரியாக ஆய்வு செய்தால், இது மதச் சண்டையே தான். நீள்கிறது, இன்னும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

500யூறோ குடுத்து ஜரோப்பிய நாடுகளில் துப்பாக்கியும் தோட்டாவும் சமூகவிரோதக்கும்பல்களிடம் வேண்டக்கூடியதாக இருக்கும்போது தீவிரவாதிகள் எதுக்கு ஆயுதத்தை தம்முடன் கொண்டுவரப்போகிறார்கள்..?

  • கருத்துக்கள உறவுகள்

8 துப்பாக்கிதாரிகள் இறந்ததாக கூறப்பட்டாலும் சிலர் தப்பியுள்ளார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

//மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.//

வந்த களைப்பு, தீருவதற்கு இடையில்,  சிரியாக் காரனும்..... ஆரம்பிச்சுட்டான்.

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதலில் வெடித்து சிதறிய தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார்

பாரிஸ் தாக்குதலில் வெடித்து சிதறிய தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார்

 
பாரிஸ் நகரில் உள்ள இசை அரங்கத்தின்மீது மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்திய ஒரு தீவிராவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்சில் நடைபெற்ற பெரிய அளவிலான தற்கொலைப்படை தாக்குதலாக கருதப்படும் இந்த கோரச் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவனின் பெயர் ஓமர் இஸ்மாயில் மொஸ்தபாயி (29) என அவரது சிதைந்த விரலை வைத்து பிரான்ஸ் பொலிசார் இன்று அடையாளம் கண்டுள்ளனர்.

அவனது அண்ணன் மற்றும் தந்தையை கைது செய்து, இரகசிய இடத்தில் வைத்து விசாரித்துவரும் பொலிசார், பலியான மனித வெடிகுண்டின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கால்பந்தாட்ட மைதானம் மற்றும் இரு இசை அரங்களில் நேற்று முன்தினம் மனித வெடிகுண்டுகளாக மாறியும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட எட்டு பேரும் பலியாகிவிட்ட நிலையில், இந்த தாக்குதலின் வீரியத்தையும், வேகத்தையும் பார்க்கும்போது, இதில் ஈடுபட்டுவர்கள் அனைவரும் ஈராக் அல்லது சிரியாவுக்கு சென்று அங்கு தீவிர பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மைதானத்திற்குள் நுழைய முயன்ற மனித வெடிகுண்டு : யூரோ கால்பந்து இடமாற்றப்படுமா?

 

பிரான்சில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகளின் முக்கிய இலக்கா ஜெர்மனி- பிரான்ஸ் அணிகள் மோதிய ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம்தான் இருந்துள்ளது. இந்த போட்டியை காண, 80 ஆயிரம் மக்கள் திரண்டிருந்த நிலையில், மைதானத்திற்குள் ஒரு மனித வெடிகுண்டு நுழைய முயன்று தடுக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

france%201.jpg

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியை காண வந்திருந்ததால்,  மைதானத்தின் அனைத்து நுழைவு வாயிலிலும் போலீசார்  கண்கொத்தி பாம்பாக இருந்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், உடல் முழுக்கு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயன்ற நபர் ஒருவரை பாதுகாவலர்கள் பிடித்துள்ளனர். அவரிடம் போட்டியை காண்பதற்கான நுழைவுச் சீட்டு இருந்துள்ளது. பிடிபட்ட அந்த மனித வெடிகுண்டுவை உடனே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் அப்புறப்படுத்தினர்.

அதாவது இந்த தொடர் தாக்குதலின் முதல் இலக்கு அதிக கூட்டம் கூடும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம் இருந்துள்ளது. மைதானத்திற்குள் மட்டும் வெடிகுண்டு வெடிக்கச்ச வைத்து விட்டால், கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருப்பார்கள். இதுதான் தீவிரவாதிகளின் முதல் நோக்கமாக இருந்துள்ளது. நல்ல வேளையாக இது நடக்கவில்லை.

ஆனால் பிரான்ஸ் நேரப்படி இரவு 9.20 மணியளவில் ஸ்டேட் டி பிரான்ஸ்  மைதானத்திற்கு வெளியேதான் முதல் மனித வெடிகுண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் முதல் மனித வெடிகுண்டு வெடித்தில், 3 பேர் இறந்துள்ளனர்.இந்த வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் மைதானத்திற்குள்ளும் கேட்கிறது. ஆனால் பிரான்சில் கால்பந்து போட்டிகள் நடக்கும் போது இது போன்று பட்டாசுகள் வெடிக்கச் செய்வது வழக்கமென்பதால் யாரும் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கு பின், அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வி.ஐ.பி பாக்சில் இருந்து மைதானத்தின் பாதுகாவலர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

france%20.jpg

அடுத்து 9.25 மணிக்கு லா கார்லின்,லா பெடிட் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தொடர்ந்து 9.29 மணியளவில் டி லா ரீபப்ளிகா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்தனர். 9.38 மணிக்கு லா பெல்லா மதுபாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து 9.43 மணியளவில் ஒரு கடையில்  வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பலியானார்.

பின்னர் 9.49 மணியளவில் பதாச்சன் இசை ஹாலில் நுழைந்த 4 தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொடர் தாக்குதலில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்தது இந்த இடத்தில்தான். பின்னர் இரவு 10 மணியளவில் நடந்த கடைசி தாக்குதலில், துப்பாக்கி சூட்டுக்கு 4 பேர் இறந்து போனார்கள். இப்படியாக 121 பேர் இறந்துள்ளனர்.

பாரிசில் இது போன்ற தாக்குதல் நடப்பது குறிப்பாக கால்பந்து மைதானத்தை தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில்தான் நடைபெற உள்ளது. இதுவரை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்க உள்ளன.

கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை 2000ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டிக்கு பின், பிரான்சில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா இது. இதனால் இந்த போட்டியை மிக பிரமாண்டமாக நடத்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.  பிரான்சில் உள்ள 10 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் தலைநகர் பிரான்சில் உள்ள 'ஸ்டேட் டி பிரான்ஸ் 'மற்றும் 'செயின்ட் டி பிரின்சஸ் ' ஆகிய இரு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தற்போதுள்ள சூழலில்,  ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இந்த கால்பந்து தொடருக்கு பிரான்ஸ் நாட்டால் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இன்னும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும் ஐரோப்பிய கோப்பைத் கால்பந்து தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=55073

  • கருத்துக்கள உறவுகள்

Paris terror attacks: Why has France been targeted again?

The Paris attacks have outraged the world. But, sadly, they will not have surprised the French authorities

  share-fb.svg    
5K
  share-tw.svg    
 
  share-p.svg    
2
  share-in.svg    
58
  share-share.svg    
5K
  share-email.svg
Email
 
 

This video isn't encoded for your device

 
 

Every Western capital knows that Islamist extremists would love to strike a blow at its heart. But few are so tantalising a target as Paris.

Why?

The short answer is that France fights jihadists worldwide; has one of the largest Muslim populations in Europe – and arguably the most divided society. It also has a steady stream of guns pouring in from across continental Europe's porous borders. It is a potent, explosive mix – as shown by the Charlie Hebdo attacks of January, and now the Paris shootings.

"This is for Syria," one of the Paris attackers reportedly said. But he could have said it was for Mali, or Libya, or Iraq.

Indeed, France takes pride in its proactive stance against Islamists worldwide, especially in the face of what is frequently seen as British and American retreat. Over 10,000 French troops are currently deployed abroad – over 3,000 in Western Africa, 2,000 in Central, and 3,200 in Iraq.

French fire brigade members aid an injured individual near the Bataclan concert hall following fatal shootings in ParisFrench fire brigade members aid an injured individual near the Bataclan concert hall following fatal shootings in Paris  Photo: REUTERS

French intervention in Mali, against al Qaeda in the Islamic Maghreb, in 2013 was seen as pivotal in the weakening of the jihadi group. A fortnight ago a leader of an AQIM affiliate urged his followers to attack France in retaliation for their presence in the region.

And last week President Francois Hollande announced that France will deploy an aircraft carrier in the Persian Gulf to assist the fight against the Islamic State in Iraq the Levant (Isil), setting him on a collision course with the Islamist leaders.

 

 

A key problem, however, is internal.

The feelings of isolation and exclusion can be overwhelming, with few high profile Muslim role models in business or politics. France's stridently secular state, the banning of the burka and the power of the Front National have not helped to ease tensions between communities.

Mohamed Merah, the Toulouse shooter of 2012, grew up in a tough banlieu, began as a small-time delinquent, was sent to prison, and emerged a hardened jihadi with "meaning" in life.

Mehdi Nemouche, author of the May 2014 murder of four people in Brussels, was also radicalised in prison – travelling to Syria when he was freed and then coming back to attack the Jewish museum.

Chérif Kouachi and Amedy Coulibaly both followed a similar trajectory of lack of opportunity, descent into criminality, prison and radicalisation.

Inside France's prisons, 70 per cent of the inmates are estimated to be Muslims – by law, France cannot ask a person to state their religion, so official data is unavailable. In England and Wales, by comparison, Muslims account for 14 per cent of the prison population, according to Home Office statistics, and five per cent of the population nationwide.

paris-container-1_3500600b.jpg

In the aftermath of the Charlie Hebdo attacks The Telegraph reported howFrance was struggling with radicalisation inside its prisons, and unlike Britain had very few Imams to enter the cells, and limited de-radicalisation programmes. In April Rachida Dati, the former justice minister and now a special rapporteur on radicalisation, told this paper that France was not doing enough to fight the power of Islamist radicals behind bars.

And another constant source of concern for the French authorities is the ease with which weapons can be trafficked into France.

Belgium has long struggled with illegal arms; it is believed the Charlie Hebdo attackers sourced their weapons there. The Balkans are also favoured shopping destinations; the years of conflict there during the Balkan Wars have left the region awash with cheap, nondescript weapons.

The result is a powder keg atmosphere.

We do not yet know who carried out the horrendous Paris attacks, and why. But, sadly, it is something that the French authorities knew could happen at any time.

 

Friday 13th Paris attacks
Times quoted refer to GMT
20.20
paris-27_3500595a.jpg
Spectators gather on the pitch of the Stade de France stadium. Photo: AFP
Three explosions take place near the Stade de France football stadium during a friendly between France and Germany attended by 80,000 spectators, including French President Francois Hollande. One person is killed, along with three suicide bombers.
20.30
paris-18_3500566a.jpg
Service personnel working outside the restaurant. Photo: Reuters
At around the same time of the explosions at the Stade de France militants launched an attack on the Petit Cambodge Cambodian restaurant in Rue Bichat, in the city's 10th arrondissement, killing 12 people. The nearby Le Carillon bar was also attacked. Militants then launched another attack on the Casa Nostra pizzeria in Rue de la Fontaine au Roi, killing five.
20.40
paris_attacks_La_B_3500843a.jpg
Forensic police search for evidences outside the La Belle Equipe cafe. Photo: Getty Images
Militants launch an attack on La Belle Equipe in Rue de Charonne, spraying the terrace bar with bullets and killing 18 people in gunfire which witnesses say lasted "two, three minutes".
21.30
Wounded-people-are_3500624a.jpg
Wounded people are evacuated outside the Bataclan theatre. Photo: EPA
An hour after US rock group Eagles of Death Metal took to the stage, black-clad gunmen wielding AK-47s and wearing suicide vests stormed into the Bataclan concert hall in Boulevard Voltaire, shooting at hundreds of screaming concert-goers. At least 82 people died in the attack.
21.30
French President Francois Hollande, immediately evacuated from the Stade de France, where he was watching the soccer match, goes to the interior ministry to monitor the situation.
21.30
The police say that at least 18 have been killed.
21.57
Prime Minister David Cameron said on Twitter: “I am shocked by events in Paris tonight. Our thoughts and prayers are with the French people. We will do whatever we can to help.”
22.07
paris-hollande-sta_3500790a.jpg
French President Francois Hollande receives a call in the security control room at the Stade de France. Photo:
The deputy mayor of Paris tells CNN that at least three people died at Stade de France.
22.16
Opposition leader Jeremy Corbyn said on Twitter: “My thoughts are with the people of Paris tonight. We stand in solidarity with the French. Such acts are heinous and immoral.”
22.28
paris-21_3500572a.jpg
Police officers gather outside the Bataclan concert venue in Paris. Photo: EPA
French emergency services activate Plan Rouge to tackle the large numbers of casualties.
22.30
paris-28_3500596a.jpg
Wounded people are evacuated from the Stade de France. Photo: EPA
Parisians used the #PorteOuverte hashtag to search for or offer safe places for those fleeing the violence. The hashtag was soon trending.
22.43
A new toll of at least 35 dead.
22.46
President Obama delivered a speech at the White House, expressing solidarity with the people of Paris and calling the attacks terrorist acts. "Those who think that they can terrorise the people of France or the values that they stand for are wrong."We are reminded in this time of tragedy that the bonds of liberte, egalite, fraternite, are not just the values French people share, but we share."Those go far beyond any act of terrorism or the hateful vision of those who perpetrated the crimes this evening."
22.50
portal_paris-franc_3500725a.jpg
An emotional French president Francois Hollande closed the borders and declared a state of national emergency.
23.30
Reports emerge of French taxi drivers turning off their meters and offering passengers free rides home. A citywide curfew was put in place, the first since 1944.
23.30
Death toll is updated to at least 120.
23.30
paris-bataclan-res_3500767a.jpg
People receive medical attention after being evacuated from the Bataclan theatre. Photo: AP
Police storm the Bataclan, ending their operation 30 minutes later. At least 82 people are killed in the concert hall attack. The four attackers are killed. Three die after activating their suicide vests and the fourth is shot dead.
Saturday, November 14
00.46
paris-eiffel-army_3500772a.jpg
French soldiers patrol the area at the foot of the Eiffel Tower. Photo: AFP
At least 1,500 soldiers have been called upon to patrol the streets of Paris.
03.30
According to investigators, eight attackers were killed, of whom seven blew themselves up.
03.30
Schools, markets, museums and major tourist sites in the Paris area are closed and sporting fixtures cancelled.
09.50
Hollande calls the attacks "an act of war... committed by a terrorist army, the Islamic State, against France, against... what we are, a free country". He declares three days of national mourning.
09.50
The Islamic State claims responsibility for the attacks.
12.00 Saturday
paris-bartaclan-st_3500650a.jpg
A victim is wheeled out of the Bataclan concert hall. Photo: REUTERS/Charles Platiau
By noon on Saturday French officials had put the provisional death toll at 127 people from the combined attacks, with 180 injured and 99 people in hospital in critical condition.

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/11995505/Paris-attacks-Why-has-France-been-targeted-again.html

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் சிரியா அகதிகள் போன்று பதுங்கியுள்ள தீவிரவாதிகள்: அதிர்ச்சி தகவல்கள்!

 

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று மேலும் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுள்ளதாகவும் அதற்காக பல்வேறு இடங்களில் சிரியாவின் அகதிகள் போன்று பதுங்கியுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிஸில் 7இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தாக்குதலில் 128 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து பாரிஸில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. பாரிஸ் நகர எல்லைகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

france.jpg

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிர்ச்சி தகவலாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஐரோப்பாவில் சிரியா நாட்டின் அகதிகள் போன்று போலியாக பதுங்கியிருந்து உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. 

பாரிஸ் கொடூரத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டு தற்கொலை தீவிரவாதிகள், சிரியாவில் இருந்து போலியாக அதிகள் போன்றுவந்து பதுங்கியிருந்தனர் என்று ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பாரிஸில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு பேர் அகதிகள் பாஸ்போர்ட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கிரீஸ் வந்து உள்ளனர். தற்கொலை தாக்குதல் நடத்தியவர் உடலில் இருந்து பிரான்ஸ் நாட்டு போலீசார் கைப்பற்றிய சிரியா அகதியின் பாஸ்போர்ட்டில்  கிரிஸ் நாட்டு பதிவு எண்  உள்ளது. அதனால் இரண்டு தீவிரவாத குழுக்கள் சிரியாவில் இருந்து துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு பயணத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தாக்குதல் நடத்திய மற்றொருவனிடம் இருந்து எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் எகிப்தில் எடுக்கப்பட்டதை காட்டுகிறது என்று செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இத்தகைய தகவல்கள் பிரான்ஸ் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது என்று விமர்சிக்கப்பட்டு உள்ளது. இரண்டு பேர் கிரீஸ் நாட்டிற்கு கடந்த மாதம் வந்து உள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்து உள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் இஸ்சொன்னேவில் இருந்துவந்த மொஸ்டேபை இஸ்மாயில் உமர் என்று பிரான்ஸ் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

செர்பியா மீடியா மற்றொரு தீவிரவாதியின் பெயரை வெளியிட்டு உள்ளது. அவன் அகமத் அல்முகமது என்றும் பாரிஸ் செல்லும் வழியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ம் தேதி ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டின் லெரோஸ் தீவிற்கு வந்துஉள்ளான் என்றும்  தெரிவித்து உள்ளது. இவர்கள் அகதிகளாக சிறிய படகில் வந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தகவல்களையடுத்து ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=55075

  • தொடங்கியவர்

பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை (வீடியோ)

 

பாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரின்  பாட்டகிலான்  தியேட்டரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.அப்போது அவர்களுடன் கலந்து இருந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத்  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தியேட்டரின் வெளிப்புறம் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

அந்த பரபரப்பு வீடியோ இங்கே...      

 

http://www.vikatan.com/news/article.php?aid=55082

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.