Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையில் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bc499fcd01c6ba5bb4af77f61cc14cf6.jpg

லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

f0c43b92e2a14ba6ce01c4e507e518af.JPG

1dd2fd43b1cc0f495e5fac52afa388d7.JPG

74ee4e1692bc791c6e5806f69f02734b.JPG

இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

- See more at: http://www.paasam.com/news/495.html#sthash.OppqHhHo.dpuf

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

'புடிச்சு' உள்ளார போட்டுடாதீங்கோ, ஊருக்கு அனுப்புங்கோ. கோடாலி தூக்கின கை மண்வெட்டி தூக்கி அழகா வெவசாயம் செய்யும்.

ஊரில இங்கிலீஸ் பேசுற, ரவூடி என்று கொஞ்சம் மருவாதை இருக்கும் எல்லோ?

ஐயோ தீவிரவாதிகளை இங்க அனுப்பாதேங்கோ ப்ளீஸ்.............

1 hour ago, Nathamuni said:

'புடிச்சு' உள்ளார போட்டுடாதீங்கோ, ஊருக்கு அனுப்புங்கோ. கோடாலி தூக்கின கை மண்வெட்டி தூக்கி அழகா வெவசாயம் செய்யும்.

ஊரில இங்கிலீஸ் பேசுற, ரவூடி என்று கொஞ்சம் மருவாதை இருக்கும் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் நான் கூறியது போல: அரசியல் கருத்துகளை ஒடுக்க நாம் றௌடிகளை ஊக்குவித்தால், இப்படியான றௌடிகள் உருவாவதைத் தடுக்க இயலாது! பிரான்சில் நடந்தது, கனடாவில் நடந்து முடிந்து விட்டது, அவுசில் இப்ப ஆரம்பிக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இன்னொரு திரியில் நான் கூறியது போல: அரசியல் கருத்துகளை ஒடுக்க நாம் றௌடிகளை ஊக்குவித்தால், இப்படியான றௌடிகள் உருவாவதைத் தடுக்க இயலாது! பிரான்சில் நடந்தது, கனடாவில் நடந்து முடிந்து விட்டது, அவுசில் இப்ப ஆரம்பிக்கிறது!

அவுசா?

டாக்குத்தர்அய்யா, உது பிரிட்டன் கோஸ்டி, திருப்பி அனுப்பினாப்பிறகு அவுஸ் வருவினம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...........மாவீரர் தினம் நெருங்கும் வேளையில் இப்படி.............

பிரான்ஸ் லாக்குனர் ரவுடிகள் லண்டன் போய்டினமோ?

3 hours ago, Surveyor said:

ஐயோ தீவிரவாதிகளை இங்க அனுப்பாதேங்கோ ப்ளீஸ்.............

ஊருக்கா ஐயோ வேண்டாம். உங்கையே வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை ரவுடியள் இங்கீலீஸ் கதைச்சுப் பழக வேணாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கறுப்பி said:

ம்...........மாவீரர் தினம் நெருங்கும் வேளையில் இப்படி.............

அவுங்க நல்ல ரவுடிங்க. இது சிங்கள அரசின் சதியாக இருக்குமென சந்தேகமாக உள்ளது ஏனென்றால் இது மாவீரர் தினம் நெருங்குகையில் நடந்திருக்கிறபடியால்.

  • கருத்துக்கள உறவுகள்

படுகாயமடைந்தது மேல் லோகம் போயிட்டுது மற்றைய இரண்டும் கவலைக்கிடம்.

சம்பவம் நடந்த பின் மக் எம்பியும் பொலிஸ்சும் உள்ளூர் தமிழ் தலைகளுடன் அவசர அவசரமாய் ஓடுபட்டு கதைச்சினம் வெள்ளம் தலைக்குமேல் போன பின்பு,

இவ்வளவு அளப்பரைகுள்ளும் பிடிபட்டவர்களில் பாதிபேர் வெளியில் எடுத்து விட்டு  பிழைப்பு நடத்துவது நம்ம தமிழ் அப்புக்காத்து கூட்டம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Justin said:

இன்னொரு திரியில் நான் கூறியது போல: அரசியல் கருத்துகளை ஒடுக்க நாம் றௌடிகளை ஊக்குவித்தால், இப்படியான றௌடிகள் உருவாவதைத் தடுக்க இயலாது! பிரான்சில் நடந்தது, கனடாவில் நடந்து முடிந்து விட்டது, அவுசில் இப்ப ஆரம்பிக்கிறது!

கொடுக்கல் வாங்கல் / சட்டிபானை / பெட்டை பேடு பிரச்சனையள் ஒரு புறம் இருக்க....

உங்கடை முடிச்சு இருக்கே!!!!  wow

சொல்லி வேலையில்லை. tw_thumbsup:tw_thumbsup:tw_thumbsup:

எதையோ...எங்கையோ இருக்கிறதை....சம்பந்தமில்லாத இடத்திலை புகுத்தி நியாயம் தேடும் புத்திமான்கள். :cool:

7 hours ago, Nathamuni said:

'புடிச்சு' உள்ளார போட்டுடாதீங்கோ, ஊருக்கு அனுப்புங்கோ. கோடாலி தூக்கின கை மண்வெட்டி தூக்கி அழகா வெவசாயம் செய்யும்.

ஊரில இங்கிலீஸ் பேசுற, ரவூடி என்று கொஞ்சம் மருவாதை இருக்கும் எல்லோ?

2008இற்கு முன்பு அனுப்பப்பட்டதுகள் கனக்க மாற்றுக்கருத்துமாணிக்கங்களாக இராணுவத்துடன் இணைந்து செயலாற்றினார்கள்! ... அப்போ பல ரவுடி கும்பல்களை இங்கே அனுப்பியதும், சில கும்பல்களுக்கு பின்புலமாக இருந்ததும் இலங்கை திருநாடே! ... 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பரிச்சயமான இடம்! ஆனால் இப்ப ரச் விட்டுப்போயிற்று.

வாழ்க வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு ஊர் சாதிகளை.. ரவுடிகளை உருவாக்கி மக்களை வாள்.. கத்தி.. கொலை அச்சுறுத்தல் மத்தியில் வைத்திருந்து... அதன் மூலம் அரசியல் செய்யும் தமிழக திராவிட கீழ்த்தர ஆட்சி முறைமையை வடக்குக் கிழக்கிலும் அன்றொரு காலத்தில் அமுலாக்கிய தமிழ் அரசியல்கட்சிகள் தான்.. இந்த ரவுடிசத்தின் மூதாதையர்கள்.

போராட்ட காலத்தில் அவை தாயகத்தில் இருந்து ஒழிக்கப்பட.. ஓடிவந்ததுகள் கொண்டு வந்து சேர்த்த மிச்சசொச்சங்கள் தான்.. இன்றைய புலம்பெயர் ரவுடிசத்தின் புலம்பெயர் மூதாதைகள்.

இந்த ரவுடிசம்.. எங்கிருந்தாலும் ஆபத்தானது. அதனை தமிழினத்தில் இருந்து அழிக்கனுன்னா.. தமிழன் வாழும் இடமெங்கும்.. தமிழகத்தில் பிரதானமாக.. இதனை அழிக்கும் சிந்தனை பரவ விடப்பட வேண்டும். தமிழ் பட நாயகர்களின் ரவுடிசத்தில் இருந்து அது ஆரம்பித்தால் நன்றாக அமையும்.

ஆயுதத்தை காட்டி ரவுடிகளை தற்காலிகமாக அடக்கலாம். சட்டத்தைக் காட்டி அவசரத்துக்கு அடக்கலாம். ஆனால் சமூகச் சீர்திருத்தம் மூலமே நிரந்தரமாக அகற்றலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.