Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு முள்ளிவாய்க்கால் அழிவு என்பது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது. முள்ளிவாய்க்கால் இழப்பு என்பது பாரிய இனவழிப்பின் உச்சம் என்பது தெரியாமல் எல்லாவற்றையும் புலிகள் மீதும் புலிகளின் தலைமை மீதும் போட்டுவிட்டுத் தப்பிக்கலாம் என நினைக்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில்   ஏற்பட்ட இழப்பிற்கு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் காரணமாக இருப்பது இவர்களுக்குத் தெரியவில்லை.
புலிகளால் தான் தமிழர்களுக்கு அழிவு என்று கூறும் அறியாமையை என்ன செய்யலாம்.

அதைவிட முக்கியம் சிங்களவர்கள் தந்திரமாக நடத்தி முடித்த ஆட்சி மாற்றத்தை தமிழர்களுக்குச் சாதகமானதாக காட்ட முயலும் எம்மவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.

மீண்டும் ஒரு போராட்டம் சம் சும் போன்றவர்களின் சுய நல அரசியலால் மட்டுமே உருவாக வாய்ப்புள்ளது.

புலிகளின் செயற்பாடுகளைக் கூறி மற்றைய உறவுகளை மட்டம் தட்டுவதை விடுத்து சுமந்திரன் சம்பந்தர் போன்றவர்களின் பிழையான அரசியற்செயற்பாடுகளை விமர்சித்து அப்படியும் திருந்தாவிட்டால்  அவர்களைத் தமிழர்களின் அரசியற்பாதையிலிருந்து விலக்கி வைத்து ஈழப்பிரச்சனைக்கு சரியான தகுந்த தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது தான் இன்றைய நிலைக்குச் சரியானதாக இருக்கும் !!

  • Replies 107
  • Views 7.2k
  • Created
  • Last Reply
21 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலலில் மக்களை அங்கு வாழ்வதற்க்கு ஊக்குவிக்க வேணும்.

ஏறத்தாள 17 லட்சம் பேர் குடி பெயர்ந்துள்ளதாக சில தினங்களிற்கு முன்னர் யாழில் பதிவிட்டிருந்தார் ஒருவர். இதில் நானும் அடக்கம். இது தவிர்க்க முடியாமல் நடந்த விடயம். எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பதன் மூலமாகவே இது தொடராமல் செய்யலாம். யார் செய்வது எப்படிச் செய்வது என்று தெரியாது. ஆனால் செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:
22 hours ago, வாலி said:

இன்கே பிரச்சினை என்னவென்றால் நீங்கள் சொன்ன சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தல் என்பதுதான்.  மொழிப் பிரச்சினையைக்கூட ஓரளவு வெற்றிகொண்டுவிடலாம் என நினைக்கின்றேன். ஆனால் இந்த பௌத்த பேரினவாதச் சிந்தனை அற்ற அரசியல் யாப்பு என்பதே முக்கியமான பிரச்சினை. இதனை வெற்றிகொள்வதே சவாலான விடயம்.  இதனை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதனால் சாதித்துவிடமுடியாது. தீர்வுக்கான வரைபு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அதனையே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.  பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இனைந்துதான் தீர்வை பெறவேண்டும் என்ற நிலை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. 

22 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள மொழிக்கும், பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு இருக்கும்வரை இந்த வேலைத்திட்டத்தினை வெற்றியாக்கமுடியாது.

இரு பகுதிகளை கொண்ட ஒரு பிரச்சினைக்கு இரு பகுதியினரும் மனம் விரும்பி ஏற்கும் தீர்வு தவிர வேறு எந்த தீர்வும் நிலையான தீர்வாக அமையாது. இதற்கு உள்ள ஒரே ஒரு விதிவிலக்கு இரண்டில் ஒரு பகுதி முற்றாக அழிந்து போவதாகும். போர் இதனையே சாதிக்க முயலும். போரில்லாத தீர்வு இரு பகுதியினராலும் மனம் விரும்பி ஏற்றுகொள்ளும் தீர்வாக அமைய வேண்டும். 

சிங்களவர் உலகில் பூர்வீக மக்களாக வாழும் ஒரே நாடு இலங்கை. இந்த நாட்டில் தான் சிங்கள இனம் உருவானது.  அவர்களின் பண்பாடும், வரலாறும் இந்த  நாட்டிலேயே பேணி பாதுகாக்க பட முடியும். அதை செய்ய ஒரு அரசாங்கம் தேவை. இலங்கை அரசாங்கம் ஒன்றே அவர்களுக்கு உள்ளது. ஆகவே சிங்கள மக்களின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு நியாயபூர்வமாக இருக்கிறது. இதை தமிழர் தரப்பு வெளிப்படையாகவும் தெளிவாகவும் அதற்குரிய முன்னுரிமை கொடுத்து ஏற்றுக்கொள்ளும் வரை சிங்களவர்கள் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றி மனம் விரும்பி பேச முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

Edited by Jude

19 minutes ago, Jude said:

உங்கள் கருத்தே எனதும்.

24 minutes ago, Jude said:

சிங்களவர் உலகில் பூர்வீக மக்களாக வாழும் ஒரே நாடு இலங்கை. இந்த நாட்டில் தான் சிங்கள இனம் உருவானது.  அவர்களின் பண்பாடும், வரலாறும் இந்த  நாட்டிலேயே பேணி பாதுகாக்க பட முடியும். அதை செய்ய ஒரு அரசாங்கம் தேவை. இலங்கை அரசாங்கம் ஒன்றே அவர்களுக்கு உள்ளது. ஆகவே சிங்கள மக்களின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு நியாயபூர்வமாக இருக்கிறது.

என்னால் இதை ஏற்க முடியவில்லை. அதற்காக சிறுபாண்மை இனத்தவரை அடக்கி ஆள வேண்டுமா? ஒரு அரசு என்பது தனது மக்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். வலுக்கட்டாயமான குடியேற்றங்கள், மற்றைய இனங்கள் மீதான அரச சார்பு வன்முறைகள், திட்டமிடப்பட்ட இன விகிதாசார மாறுதல்கள் ஏன்? தென் இலங்கையில் குடியிருக்கும் தமிழர்கள் தமது சொந்த பொருளாதாரத்தில் குடியேறினார்கள். அதே போல சிங்களவர்களும் எமது பிரதேசத்தில் குடியேறட்டும். நான் அதற்கு எதிரில்லை. ஆனால் அரச உதவிகளுடன் குடியேற்றப்பட்டால் அது பிழை. அவர்களின் இருப்பைத் தக்க வைக்க நாம் பலிக்கடாக்களாக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சிங்கள பண்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதும் அதை பாதுகாப்பதும் சிறுபான்மை இனங்களை அடக்கி ஆண்டு செய்யப்பபடுவதல்ல. இலங்கையில் இவ்வளவு காலமும் இவ்வாறாக தவறான முறையில் இந்த முன்னுரிமை பயன்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைக்க ஒரு கட்டுமானம் தேவை.

இதற்கான ஒரு கட்டுமான வரைவை ஒரு வருடத்துக்கு முன் ஆக்கி மும்மொழிகளிலும் இலங்கை மக்கள் தலைவர்களுக்கு அனுப்பி இருந்தேன். நீங்களும் அவற்றை பார்க்கலாம்:

http://fathersara.info/solution/English.pdf

 http://fathersara.info/solution/Tamil.pdf  

http://fathersara.info/solution/Sinhala.pdf

வன்முறை பயனற்றது. அது எல்லோரையும் அழிக்கும் - இன்றுவரை எல்லோரையும் அழித்து வருகிறது.

குடியேற்றம் பிரச்சினயே அன்றி பிரச்சினைக்கான காரணம் அல்ல. பிரச்சினைக்கான காரணங்களில் முக்கியமானவை தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளாததும், தமிழர்கள் சிங்களவர்களின் உரிமைகளை மனம் விரும்பி வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாததும் ஆகும். வட-கிழக்கு முதலமைச்சர் ஆரம்ப காலத்திலும் இன்று சம்பந்தன் - சுமேந்திரன் ஆகியோரும் இந்த அடிப்படை காரணங்களை அகற்ற முயற்சிக்கிறார்கள். எழுபது ஆண்டு கால அடக்குமுறை ஆட்சியும் முப்பது ஆண்டு கால கோர யுத்தமும் பாதித்த இந்த நாட்டு மக்கள் ஒன்று-இரண்டு ஆண்டுகளில் தமது அடிப்படை பிரச்சினையான மற்றவர்களின் உரிமைகளை ஏற்று கொள்ளும் பக்குவமின்மையை களைந்து விடும் சாத்தியம் குறைவு. இதற்கு காலம் எடுக்கும். படிப்படியாக மாற்றம் வரும்.

குடியேற்றத்தை பற்றி எனக்கு தனிக்கட்ட அனுபவம் இருக்கிறது. அறுபதுகளில் இலங்கை அரசு கிளிநொச்சியில் ஐந்து ஏக்கர் தோட்ட காணியும் ஒரு ஏக்கர் வயல் காணியும் வழங்கியது. தமிழ் இளைஞர்கள் அதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஏற்கனவே அரச உத்தியோகம் செய்த எனது தந்தையார் போன்றவர்கள் இந்த காணிகளை பெற்று அவற்றை வளப்படுத்தினார்கள். பின்னர் ஏழுபதுகளில்  பூநகரியில் அரசு ஐம்பது ஏக்கர் காணிகளை கசுக்கொட்டை செய்கைக்காக வழங்கியது. அதே கதை தான்., அரச ஊழியர்களும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுமே இந்த காணிகளில் ஆர்வம் காட்டினார்கள். இளைஞர்கள் அரச உத்தியோகம் கேட்டார்கள். கிடைக்கவில்லை. ஆயுதப்போரட்டத்துக்கு போனார்கள். என்பது வீதம் சிங்கள மக்கள் வாழும் நாட்டில் சிங்களம் பேச தெரியாமல் எப்படி மக்களுக்கு தமிழ் அரச ஊழியர்கள் சேவை ஆற்ற முடியும்? அரசு காணிகளை வழங்கியது. தமிழர்கள் உதாசீனம் செய்தார்கள். ஆகவே சிங்கள மக்களுக்கு வழங்கியது. அந்த மக்கள் இடம்விட்டு இடம் பெயர்ந்து மொழி தெரியாத பிரதேசத்தில் காடுகளை களனி ஆக்கினார்கள். அவர்கள் பரம ஏழைகள். படிப்பறிவு அற்றவர்கள். அவர்கள் அரச உத்தியோகம் கேட்டு ஆயுதப்போராட்டம் செய்யாமல் காட்டில் களனி செய்தார்கள். அரசும் உதவியது.

1 hour ago, Jude said:

சிங்களவர் உலகில் பூர்வீக மக்களாக வாழும் ஒரே நாடு இலங்கை. இந்த நாட்டில் தான் சிங்கள இனம் உருவானது.  அவர்களின் பண்பாடும், வரலாறும் இந்த  நாட்டிலேயே பேணி பாதுகாக்க பட முடியும். அதை செய்ய ஒரு அரசாங்கம் தேவை. இலங்கை அரசாங்கம் ஒன்றே அவர்களுக்கு உள்ளது. ஆகவே சிங்கள மக்களின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு நியாயபூர்வமாக இருக்கிறது. இதை தமிழர் தரப்பு வெளிப்படையாகவும் தெளிவாகவும் அதற்குரிய முன்னுரிமை கொடுத்து ஏற்றுக்கொள்ளும் வரை சிங்களவர்கள் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றி மனம் விரும்பி பேச முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

சிங்களவர் உலகில் பூர்வீக மக்களாக வாழும் ஒரே நாடு இலங்கை. இந்த நாட்டில் தான் சிங்கள இனம் உருவானது.  அவர்களின் பண்பாடும், வரலாறும் இந்த  நாட்டிலேயே பேணி பாதுகாக்க பட முடியும். அதை செய்ய ஒரு அரசாங்கம் தேவை. இலங்கை அரசாங்கம் ஒன்றே அவர்களுக்கு உள்ளது. ஆகவே சிங்கள மக்களின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு நியாயபூர்வமாக இருக்கிறது. இதை தமிழர் தரப்பு வெளிப்படையாகவும் தெளிவாகவும் அதற்குரிய முன்னுரிமை கொடுத்து ஏற்றுக்கொள்ளும் வரை சிங்களவர்கள் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றி மனம் விரும்பி பேச முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

இலங்கை சிங்களவர் உலகில் பூர்வீகமாக வாழும் நாடு என்பதும் சிங்கள இனம் இலங்கையில் தோற்றம் பெற்றது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிடச் சிங்கள இனம் தோற்றம் பெறுவதற்கு முன்னரே ஈழ மண்ணின் ஆதிக் குடிகளாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. இதையே சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகின்றது. மணியாசனம் தொடர்பாக இரண்டு நாக அரசர்களுக்கிடையே போர் நடந்ததாகவும் அங்கு புத்தர் தோன்றி சமாதானம் செய்துவைத்ததாகவும் மகாவம்சம் எடுத்துரைக்கின்றது. அப்போது சிங்கள இனம் இலங்கையில் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதும் நாகர் இனம் தமிழரின் பழங்குடி மக்கள் என்பதும் மிகமிக முக்கியமானது. மேலும் மணிமேகலை காப்பியத்திலும் மணிபல்லவத்தில் நிகழ்ந்த இரண்டு நாக அரசர்களின் யுத்தம் குறித்துச் சொல்லப்படுகின்றது. மணிமேகலை சங்ககாலத்துக் காப்பியம் எனவே அது கி.மு. 300 க்கும் கி.பி. 300 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மகாவம்சம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் மகாநாம தேரரினால் எழுதப்பட்டது. மணிபல்லவத்தில் அதாவது நயினாதீவில் ஒரு பௌத்த கோயில் இருந்ததாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. இதுவே நயினாதீவில் இன்றிருக்கும் நாகவிகாரையாகும். இதன் உரிமையாளர்கள் தமிழர் என்பதும் தமிழ் பௌத்தர் இலங்கையில் சிங்களவர் தோற்றம் பெறுவதற்கு முன்னரே இருந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். பௌத்த கோயில் இருக்கும் இடமெல்லாம் சிங்களவருக்கானது என்பது ஓர் அடாத்தான ஆக்கிரமிப்புத் தவிர வேறில்லை. தமிழரின் தொடக்க சமயம் பௌத்தம் என்பதும் அது ஆரிய வருணாச்சிரம சமயங்களின் ஆதிக்கத்தினால் அழிந்துபோனதும் சிங்களம் பௌத்த சமயத்துக்கு ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. சிங்களவர்களுக்கென கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பண்பாடோ கலாசாரமோ இருந்ததில்லை. பௌத்ததுடன் ஒன்று கலந்து தமக்கென புதிதாக ஒரு பண்பாட்டையும் கலாசாரத்தையும் திட்டமிட்டு வடிவமைத்துக் கொண்டார்கள். இன்றும் சிங்களப் பண்பாடு மற்றும் கலாசாரத்துடன் போத்துக்கேய பண்பாடும் கலாசரமும் தாக்கம் செலுத்துவதை காணலாம்.

எனவே சிங்களப் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய நியாயம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் தமிழரின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தி, தமிழரின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய நியாயம் பன்மடங்கு இருக்கின்றது.

Edited by வாலி

2 hours ago, வாலி said:

வாத்தியார் எனக்கு மற்ற ஆக்களுக்கு கணக்குப் படிப்பிக்கேலாது. நீங்கள் கொடுத்த தரவுகளைக் கூட்டிப் பார்த்தால் 89.5%  தான் வரும். அது உங்கள் பிரச்சினை மட்டுமல்ல உங்களுக்கு ஊக்கம் கொடுத்தவரின் பிரச்சினையும் கூட.

இனி விடயத்துக்கு வருவோம். கீழ்வரும் இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் இணைப்பில் 146 ஆம் பக்கம் முழுத் தரவுகளும் இருக்கின்றது 

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport/FinalReport.pdf

2012 இல் சிங்களவர் 74.9% இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர் 4.1% இலங்கைச் சோனகர் 9.3%

1981 இல் சிங்களவர் 74.0% இலங்கைத் தமிழர் 12.7% இந்தியத் தமிழர் 5.5% இலங்கைச் சோனகர் 7.0%

இங்கு தமிழர்களின் சனத்தொகைப் பரம்பல் வீழ்ச்சிக்கு பொருளாதார அகதிகள் மேற்கத்தைய தேசங்களுக்குப் பெருமளவு புலம்பெயர்ந்தமை, தொடர்ச்சியான யுத்ததினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை அதிலும் இனவிருத்திக்கு ஏதுவான இளைஞர்கள் அதிகம் பலியாகியமை, பல்வேறு காரணங்களினால் தமிழர்கள் அதிகளவு வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளாமை முதலிய காரணங்களைச் சொல்லலாம். மறுபுறத்தே இலங்கைச் சோனகர் 2.3% ஆலும் சிங்களவர் 0.9% ஆலும் அதிகரித்து இருக்கின்றனர். முக்கியமாக இலங்கைச் சோனகரின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் வாரிசுகளை அதிகளவில் உருவாக்குவதே முக்கிய காரணமெனினும் தமிழரின் விகிதம் குறைகின்றபோது மற்றைய இனங்களின் விகிதம் புள்ளிவிபரப் பட்டியலில் அதிகரித்தே காணப்படும். 

நிலைமை இவ்வாறிருக்க, நீங்கள் உங்கள் பூச்சாண்டி காட்டலுக்கு முகவரியற்ற மற்றும் பிழையான தகவல்களை தந்த இணையத்தை நம்பி இருப்பது வேடிக்கையானது.  போரில் காவுகொடுக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் இனி மீண்டழவைக்க இயலாத நிலையில் இப்போது தமிழினம் செய்யக் கூடியது ஆகக் குறைந்தது ஒரு தம்பதியர் 3 குழந்தைகளையாவது பெற்றெடுத்தல் (இதிலும் போரின் தாக்கம் இருக்கும்), பொருளாதார அகதிகளை மீண்டும் வரவழைத்தல் (இவர்கள் ஒருபோது வரமாட்டார்கள், விசில் குஞ்சுகளே இவர்களில் பெரும்பான்மையானோர்).  <_<

நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள். நன்றி.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி பொய் புரட்டுகளை கூறி தம்மை தாமே ஏமாற்றிக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. 30 வருட போர் நடக்கும் போது விசிலடிக்கேக்க எமது இனம் அழிவது தெரியவில்லை..அனால் இப்ப சுமந்திரன் செய்யும் அரசியலால் தான் இலங்கையில் இனம் அழிய போகுதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

எனவே சிங்களப் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய நியாயம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் தமிழரின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தி, தமிழரின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய நியாயம் பன்மடங்கு இருக்கின்றது.

இலங்கையிலும் பார்க்க பன்மடங்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அங்கு தமிழர் வரலாறு நிறைந்து காணப்படுகிறது. தமிழ்நாடு மாநில அரசு தமிழ் மொழி, பண்பாடு  மற்றும் வரலாறு பற்றி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிங்களவர்களுக்கோ இலங்கை அரசு ஒன்றே இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் தமிழரின் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும்  இலங்கை அரசிடம் சிங்கள பண்பாட்டை பேணுவதில் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு சமமான முக்கியத்துவம் கேட்கிறீர்கள். சமமான முக்கியத்துவம் கொடுக்கும் போது சமமான அளவில் பொருள், நிலம், பணம் அதற்கு தேவை. தமிழுக்கு தமிழ்நாடு இருக்கும் நிலையில் இது நியாயமா? நீங்கள் சிங்களவராக இருந்தால் இதை நியாயம் என்று பார்ப்பீர்களா? எப்படி இந்த கோரிக்கையை சிங்களவர்கள் மனம் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Jude said:

தமிழகத்து தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தாய்த் தமிழொடு சமஸ்கிருதமும் விரவி நின்ற மணிப்பிரவாள நடை மலையாளமாக மாற்றம் காண்டு மளையாளிகளாக தனித்தன்மையாக விளங்குவதைப் போலவே ஈழத் தமிழினமும் தமக்கென சிறப்பான மொழிநடைகொண்டு தனித்துவமான பண்பாடு கலாசாரம் கொண்ட இனமாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தாக்கம் மலையாளிகளிடம் இருப்பது போலவே ஈழத் தமிழர்களிடமும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. காரணம் பண்டைய தமிழகம் என்பது இன்றைய கேரளத்தையும் ஈழத்தையும் சேர்ந்தே இருந்திருக்கின்றது. ஈழத் தமிழினத்தின் வரலாறு பண்பாடு என்பது தமிழகத்தின் பண்பாடு வரலாறு என்பனவற்றிலிருந்து வேறுபட்டது என்பது துணிபு. எனவே ஈழத்த் தமிழரின் வரலாறும் பண்பாடும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. ஈழத்தில் தமிழரின் உண்மையான வரலாறு வெளிக்கொண்டுவருமிடத்து மகாவம்சத்து மகாநாம தேரரின் புனைவுகளும் அதி தீவிர சிங்களத் தேசியவாதிகளின் போலியான கட்டுக்கதைகளும் பொய்யாகிவிடும் என்பதே சிங்களத்திடம் இன்று இருக்கும் பெரும் பயம். அந்தப் பயத்தினை சமானிய சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் தான். இதற்கு தமது வெற்றுவேட்டு வாய்ஸ் சவடல்களால் மகுடி ஊதியவர்கள் அன்றய தமிழ்த்தலைவர்களும்தான். 

ஈழத்தின் தமிழும் வரலாறும் பண்பாடும் ஈழத்தில்தான் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர தமிழகத்தில் அல்ல. நான் சிங்களவனாகவோ அல்லது ஒரு தமிழனாகவோ இருந்து இதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒரு மனிதனாக இருந்து சொல்லிவிட்டே போகலாம். சிங்களத்துக்கு நிகராக தமிழும் இலங்கையில் மதிக்கப்படும் வரை மட்டுமே இலங்கையில் நிரந்தர தீர்வு சாத்தியம். அது பௌத்த பேரினவாதம் இல்லாமல் போகும் நிலையிலேயே முழுச் சாத்தியமாகும். 

Edited by வாலி

யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கையில் பலர் காலமாக இந்த குடிசன விகிகிதாசாத்தை பற்றி எழுதிக்கொண்டே வந்தார்கள் .

நாட்டு பற்று எள்ளளவு இல்லாத தமிழர்களும் யுத்தத்தின் விளைவு என்னவென்று தெரியாத புலிகளும் தான் இவற்றிற்கு ஒரே காரணம் .

புலிகள் எண்பதுகளிலேயே இதை தெளிவாக சொன்னார்கள் ."அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது சாம்பல் மேடு "என்று .புலிகள் மண்ணுக்காகத்தான் போராடினார்கள் மக்களுக்காக அல்ல .

பல நாட்களுக்கு பிறகு விவாதம் கருத்து ரீதியில் சிறப்பாக போக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் புலிதிட்டிச்சாமியார் அதை குழப்ப ஓடி வந்துவிட்டார். 

On 12/5/2015, 12:18:45, trinco said:

இங்கு சுமந்திரனுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகிறேன். நம்ம சுமந்திரன் ஒரு ஜாம்பவான். இருந்து பாருங்கள் காலம் பதில் சொல்லும். சுமந்திரனின் வாரிசாக அவரின் மகன் அல்லது மகள் இதே போல வீரவசனத்தை பேசி தமிழ் அரசியலில்   வெற்றி பெறுவர். எல்லோரும். வியக்கும். வண்ணம் இலங்கை அரசியலிலும் சொத்து சுகம் சேர்த்து மிக சந்தோசமாக நம்ம சுமந்திரன் வாழ்வார்.

அவர் ஒரு சட்டமேதை. அதனால் மிக திறமையாக சட்டம் தன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தனது அரசியல் விளையாட்டை காட்டி பேரப்பிளைகள் மட்டுமல்ல அவரது பூட்டப் பிள்ளைகளுக்கு கூட சொத்து சேர்த்து தனது வாழ்வில் பெரிய வெற்றியை பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு தமிழர். 

இதுவா கருத்து ரீதியில் சரியாக போகின்றது என்று நீங்கள் சொல்வது .

இதற்குள் வாத்தியார் செம கொமடி விடுகின்றார் முள்ளிவாய்கால் அழிவிற்கு எல்லோரும் பொறுப்பு ஏற்கவேண்டுமாம் 

பிரேக் இல்லாத கார் என்று ஆயிரம் தர கொண்டுபோய் இடித்து விட்டு பிரேக் இல்லை என்று சொன்ன நாங்களும் பிழையை ஏற்கவேண்டுமாம் .

நல்லா சொல்லுறாங்கப்பா தீர்ப்பு .

நான் இங்கு எனது பின்னூட்டதை பற்றி சொல்லவில்லை. வாலி,ஜூட் இருவரும் ஆக்கபூர்வமாக நடத்தும் விவாதத்தையே குறிப்பிட்டேன். அதைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லையா? அந்த நல்ல அறிவு ரீதியான விவாத்த்தை குழப்பினதுமல்லாமல் வியாக்கியானம் வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோரும் ஈழ மக்களின் விடுதலை பற்றித்தானே விவாதிக்கின்றார்கள்.
கருத்துப் பதிவு செய்கின்றார்கள்
 எந்தப்பாதை செரியானதாக   இருக்கும் என்பதில் தான் பலரிடையே கருத்து மோதல்கள் உருவாகின்றது.
அந்த வகையில் போராடப்போன அனைவரும் போற்றப்படும் வேளையில் மற்றவர்கள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விதான் முக்கியமாக வருகின்றது.

வன்னியில் போராட்டம் வலுவடைந்த போது வடக்கிலும் கிழக்கிலும்
என்ன நடந்தது?
புலம்பெயர் நாடுகளில் வீதியில் மக்கள் இறங்கியபோது அதிக பட்ச மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?
இதுதான் என்னுடைய கேள்வியும் நிலைப்பாடும்.

ஆயுதப்போரட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் ஏன் வேறுவழியில் போராட முயற்சிக்கவில்லை?
கூட்டமைப்புக் கூட இதுவரை இணக்க அரசியல் என்பதைவிட வேறு ஏதாவது வழியில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அகிம்சை வழியிலாவது முன்னெடுக்கின்றதா?

அடுத்து சிங்கள மக்களின் மன நிலையில் இருந்து தமிழர்கள் ஏன் சிந்திக்க வேண்டும் ?
சிங்கள மக்களை இதுவரை புரிந்து கொண்டது போதாதா?
அறுபது வருடங்களுக்கு மேலாகத் தமிழர்கள் ஈழத்தில் அல்லல்ப்படுவதைப் பார்த்து ஏதாவது ஒரு சிங்கள அமைப்பு சிங்கள மக்களைத் திரட்டிப் பாரிய அளவிலான போராட்டத்தைத் தீவிரவாத சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது சிங்கள இனவாத அரசுகளுக்கெதிராகவோ செய்தார்களா?

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதக் கட்சிகளை ஆதரிக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் புரிந்துணர்வு உள்ளது என்று எதிர்பார்ப்பதும்
சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தாங்களாகவே முன்வந்து ஒரு தீர்வை வைப்பார்கள் என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் சுய நல அரசியலே தவிர வேறொன்றுமில்லை.

அர்ஜுன் அண்ணை  சில கருத்துக்கள் பலருக்கு நகைச்சுவையாக இருக்கும்.
பல கருத்துக்கள் சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்
எல்லோரும் ஒரே கோணத்தில் சிந்திப்பதில்லை
சிந்திப்பவர்களின் மன நிலையையும் மற்றவர்கள் புரிந்துகொள்ள முனைவதில்லை.
சரி சேர்ந்து விவாதிப்போம்
எப்போவாவது ஒரு நாள்  80 களில் சிந்தித்தது போன்று மீண்டும் நாங்கள் இருவரும் ஒரே கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்பது எனது அவா!!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வந்த முக்கிய நோக்கம் .. இந்தியாவின் 'ஊத்தை'  வேட்டியை .. வெள்ளை வேட்டி ஆக்குவதற்குத் தான்..!

அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்!

இனி.. அடுத்த அத்தியாயத்தை இந்தியாவுக்காக எழுத ஆரம்பித்துள்ளார்!

அதுக்குத் தான் இந்த ஆவேசம்! 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

தமிழகத்து தமிழர்களை விட ஈழத் தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தாய்த் தமிழொடு சமஸ்கிருதமும் விரவி நின்ற மணிப்பிரவாள நடை மலையாளமாக மாற்றம் காண்டு மளையாளிகளாக தனித்தன்மையாக விளங்குவதைப் போலவே ஈழத் தமிழினமும் தமக்கென சிறப்பான மொழிநடைகொண்டு தனித்துவமான பண்பாடு கலாசாரம் கொண்ட இனமாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தாக்கம் மலையாளிகளிடம் இருப்பது போலவே ஈழத் தமிழர்களிடமும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. காரணம் பண்டைய தமிழகம் என்பது இன்றைய கேரளத்தையும் ஈழத்தையும் சேர்ந்தே இருந்திருக்கின்றது.

நாம் மலையாளிகள் போல தமிழக தமிழரல்லாத வேறு இனத்தவர் - சங்க காலத் தமிழிலில் இருந்து மருவிய மொழி பேசும் ஈழவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் எமது சமயம் பௌத்தம் என்றும் கூறுகிறீர்கள். இதை சிங்கள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஏன் தமிழர்களில் பலரும் இதை அறியவில்லை. இன்றும் சிங்கள மக்கள் எமது உறவினர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கள்ளமாக இலங்கைக்கு வந்து குடியேறுவதாகவும் நினைத்து வருகிறார்கள்.

உண்மையில் சிங்கள மக்களின் மனம் விரும்பிய ஆதரவுடனான தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையும்.  சிங்கள மக்கள் ஈழவர் பற்றிய  உண்மையை அறிந்தால், அதுவும் நாம் இன்றைய தமிழக தமிழர் அல்ல - மலையாளிகள் போல வேற்று இனத்தவர் - ஈழத்தின் பூர்விக ஈழவர் மேலும் பௌத்தர்கள் என்று அறிந்தால் அவர்கள் ஆதரவு தரக்கூடும்.

  1. நாம் இன்று தமிழர்கள் அல்ல - ஈழவர்கள். மலையாளம்  போல எங்கள் மொழி தமிழில் இருந்து மருவிய ஒரு மொழியே அன்றி தமிழகத்தில் புழங்கும் தமிழ் அல்ல.எமது மொழி ஈழ மொழி. சிங்களவர் தமது பழைய மொழியை ஹெல பாஷா என்பார்கள் அது தமிழில் ஈழ மொழி என்றாகும். ஆகவே எங்கள் இரு இனத்துக்கும் பொதுவான ஈழ மொழி இந்த நாட்டில் பாதுகாக்க படவேண்டும். ஈழ மொழியில் இருந்து வந்த சிங்களமும் இன்று ஈழத்து "தமிழர்" பேசும் ஈழ மொழியும் சமமாக பாதுகாக்க பட வேண்டும். குறிப்பாக தமிழக தமிழின் ஆதிக்கத்தில் இருந்தும் கலப்பில் இருந்தும் பாதுகாக்க பட வேண்டும். இதற்கு சிங்கள மக்களும் இலங்கை அரசும் ஆதரவு தர வேண்டும்.
  2. ஈழ மொழி பேசும் எமக்கும் சக ஈழ மக்களான சிங்கள (சிங்க ஹெல - சிங்க - ஈழ ) மக்களுக்கும் பொதுவான சமயமான பௌத்தம் தேசிய மதமாக நாடுமுழுவதும் முன்னெடுக்க பட வேண்டும்.

மேற்படி இரண்டு கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து தமிழர் தலைமை இலங்கை அரசுடன் பேச முன் வந்தால் ஈழ மொழியும் (நீங்கள் கூறியபடி இது மலையாளம் போல வேறு மொழி - இன்றைய தமிழக தமிழ் அல்ல), சிங்களம் போல அரசின் ஆதரவுடன் மேம்படும் சாத்தியம் உள்ளது. மேலும் நாம் எமது சமயமான பௌத்தத்தை அரசின் அங்கீகாரம் மற்றும் ஆதரவுடன் எமது பிரதேசத்தில் வளர்த்தெடுக்க வழி ஏற்படும்.

18 hours ago, Jude said:

இதற்கான ஒரு கட்டுமான வரைவை ஒரு வருடத்துக்கு முன் ஆக்கி மும்மொழிகளிலும் இலங்கை மக்கள் தலைவர்களுக்கு அனுப்பி இருந்தேன். நீங்களும் அவற்றை பார்க்கலாம்:

ஜூட்,
இணைப்பிற்கு நன்றி. உங்களைப் போன்று புலம் பெயர்ந்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் இதுவும் ஒன்று. நான் எப்போதும் தீர்வு ஒன்று வருமாயின் காவல்துறை அதிகாரம் எமக்கு வேண்டுமென்று கூறுவேன். உங்களது காவல்துறை பற்றிய பிரச்சனைக்குரிய தீர்வு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. நிதி சம்பந்தப்பட்ட தீர்வில் நேரடியாக வெளிநாட்டு உதவுகளைப் பெறவும், வெளிநாட்டு முதலீடுகளை சுயமாக நாம் பெறுவதற்கான வழிமுறையும் அவசியம் என்பது எனது கருத்து.

எல்லாவற்றிற்கும் முதல் எமது அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டு சமுக நிலை ஒன்று இலங்கையில் தோன்றுமாயின், காலப் போக்கில் எமக்கென்று ஒரு நிலப்பரப்பு தேவை எனும் வாதம்கூட அடிபட்டுப் போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பழைய தமிழரின் வரலாறுகள் மற்றும்  சிங்களத்தின் நிலை பற்றிய எழுத்துக்கள் நன்றாகவே உள்ளன

ஆனால் பலநூறு வருடங்களாக வன்முறையாலும் சதிகளாலும் நன்கு திட்டமிடப்பட்டு

கருவறுக்கவேண்டும் என உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் சிங்களஇனம்

திடீரென அவற்றிலிருந்தெல்லாம் பின்வாங்கி

அவற்றையெல்லாம் தப்பென்றுணர்ந்து

தமிழரோடு இணைந்து ஒரு தீர்வைப்பெறுதலே 

இரு இனங்களும் வாழவழி என செயற்படப்போகிறது என நம்புவோமாயின்

தமிழரின் தியாகத்தையும் இழப்புக்களின் வலியையும்

தமிழரைவிட சிங்களம் இனங்கட்டு இருப்பது ஒன்றே காரணமாக முடியும்

அவ்வாறாயின் இந்த சிறுபான்மை இனத்தின் சிறு பலத்துடன் 

தமது தியாகங்களாலும் தீரத்தாலும் சிங்கள பெரும்பான்மைக்கு உணர்த்தியவர்கள் யார்???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் ஜூட் இணைத்ததைப் பார்த்தீர்களோ அறியேன். ஆனால், புலிகளின் தியாகத்தினால் மட்டுமே சிங்களவர்கள் தீர்வுக்கு வரத் தலைப்படுவர் என்ற வாதத்திற்கு ஆதாரம் இல்லை. மேலுள்ள கருத்துகளும், ஜூட்டின் ஆவணமும் ஒரு எளிமையான மனித நடத்தை அடிப்படையில் தான் தீர்வைப் பிரேரிக்கின்றன: எல்லோருக்கும் வேண்டியதை மற்றவரிடமிருந்து எதையும் பறிக்காமல் கொடுத்து விடுதல்" என்பதே அந்த அடிப்படை. புலிகளின் தியாகம் அளப்பரியது தான். ஆனால் உங்கள் மேல் வியாக்கியானம் ஆதாரங்கள் அற்றது!

தமிழ் இனத்தை பலமடைய செய்யாத இடத்து எந்த ஒரு வரலாறும்,  சேறடிப்பும் தற்பெருமையும் தமிழர்களுக்கு தீர்வை கொண்டு வர வகை செய்ய போவது இல்லை...  பலமாக இல்லாதபொழுதுகளில்  ஏற்படுத்த பட்ட ஒப்பந்தங்களும் சரி பேச்சுவார்த்தைகளும் சரி முறிவிலேயே போய் முடிந்தன...

இப்போது இருக்கும் நிலைக்கு மேல் கூட்டமைப்பாலோ இல்லை சுமத்திரனாலோ ஏதும் செய்ய முடியாது... 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

விசுகர், நீங்கள் ஜூட் இணைத்ததைப் பார்த்தீர்களோ அறியேன். ஆனால், புலிகளின் தியாகத்தினால் மட்டுமே சிங்களவர்கள் தீர்வுக்கு வரத் தலைப்படுவர் என்ற வாதத்திற்கு ஆதாரம் இல்லை. மேலுள்ள கருத்துகளும், ஜூட்டின் ஆவணமும் ஒரு எளிமையான மனித நடத்தை அடிப்படையில் தான் தீர்வைப் பிரேரிக்கின்றன: எல்லோருக்கும் வேண்டியதை மற்றவரிடமிருந்து எதையும் பறிக்காமல் கொடுத்து விடுதல்" என்பதே அந்த அடிப்படை. புலிகளின் தியாகம் அளப்பரியது தான். ஆனால் உங்கள் மேல் வியாக்கியானம் ஆதாரங்கள் அற்றது!

மன்னிக்கணும் நான் ஜூட்டின் ஆவணத்தை வாசிக்கவில்லை

அதைப்பற்றி நான் எழுதவுமில்லை.

ஏதோ ஒன்று சிங்களவர்களை தீர்வு நோக்கி தள்ளுகிறது என்றால் நிச்சயம் அதற்கு காரணமானவர்கள் மதிக்கப்படணும் என்பதே எனது கருத்து.

அந்த இடத்திலிருந்தே எதுவும் தமிழர்களால் தொடங்கப்படணும்.

மற்றும்படி

கீழே காத்து எழுதியது போல் 

எம்மிடையே ஆன ஒற்றுமையும் பலமும்

தமிழருக்கான தீர்வு சார்ந்து ஒத்தநடவடிக்கைகளுமே  சிங்களவர்க்கான செய்தியாக இருக்கமுடியும்.

அதைக்குலைக்கும் எந்த நடவடிக்கையும் எமக்கு தற்பொழுது தேவையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பந்தி: புலிகளின் தியாகம் மதிக்கப் படவேணும். ஆனால், அவர்களின் தியாகத்தால் சிங்களவர்கள் தீர்வுக்குத் தள்ளப் படுகிறார்கள் என்பது உங்கள் அபிப்பிராயம் மட்டுமே, நிரூபிக்கப் பட்ட உண்மையல்ல!

இரண்டாவது: திரும்பவும் முதல் சதுரத்தில் தான் நீங்கள், எனக்கு அதிர்ச்சியில்லை .உங்களைப் பொறுத்தவரை தமிழர்களின் ஒற்றுமையென்பது வெறும் துதியை மட்டும் பாடி பாடங்கள் எதுவும் கற்க மறுக்கும் ஒரு அணியோடு எல்லாரும் சேர்ந்து மௌனமாக நடத்தல்! என் கருத்து: அது ஒற்றுமையல்ல, கள்ள மௌனம்! 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

மைத்திரியின் இறுதிப்பேச்சில் அவர் சொல்லியிருப்பது

தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க இடமளிக்காமல் தமிழருக்கான தீர்வு அவசரமாக  காணப்படணும்

இதன் நிரூபணம் என்ன???

விமர்சனம் என்பதற்கும்

தூற்றுதல் என்பதற்குமான புள்ளியில் நான் தெளிவாக இருக்கின்றேன்

ஒரு போதும் தூற்றுதலை செய்யாமல் செய்யப்படும் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு செய்ததில்லை

ஆனால் எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு

உயிரையே கொடுத்தோரை வசை பாடுவதைத்தான் எதிர்க்கின்றேன்

எதிர்ப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6 December 2015 at 17:45:46, Jude said:

சிங்கள பண்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதும் அதை பாதுகாப்பதும் சிறுபான்மை இனங்களை அடக்கி ஆண்டு செய்யப்பபடுவதல்ல. இலங்கையில் இவ்வளவு காலமும் இவ்வாறாக தவறான முறையில் இந்த முன்னுரிமை பயன்பட்டு வருகிறது. அதை மாற்றி அமைக்க ஒரு கட்டுமானம் தேவை.

இதற்கான ஒரு கட்டுமான வரைவை ஒரு வருடத்துக்கு முன் ஆக்கி மும்மொழிகளிலும் இலங்கை மக்கள் தலைவர்களுக்கு அனுப்பி இருந்தேன். நீங்களும் அவற்றை பார்க்கலாம்:

http://fathersara.info/solution/English.pdf

 http://fathersara.info/solution/Tamil.pdf  

http://fathersara.info/solution/Sinhala.pdf

அதிக முயற்சியுடன் ஆய்வுகள் செய்து மும்மொழியிலும் வரைந்த திட்டத்தை மேலோட்டமாகப் படித்தேன். எல்லா விடயங்களையும் ஆராய்ந்து முன்மொழியப்பட்ட இந்த ஆவணத்தை ஆறுதலாக வேறு ஒரு திரியில் விவாதித்தால் நல்லது. இப்படியான ஆவணத்தை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்துவதே அவர்களிடம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆர்வம் இல்லையென்றுதான் காட்டுகின்றது.

தமிழர்களும், சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைதான் தொடர்கின்றது. இந்த நிலை மாறும்வரை இலங்கையில் பிரச்சினைகள் தொடரவே செய்யும். அதிகாரம் உள்ள அலகு ஒன்றை தமிழர்களிடம் கையளிக்க சிங்களவர்கள் முன்வரமாட்ட்டார்கள். அதிகாரம் இல்லாத மாகாணசபை போன்ற தீர்வினால் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

மைத்திரியின் இறுதிப்பேச்சில் அவர் சொல்லியிருப்பது

தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க இடமளிக்காமல் தமிழருக்கான தீர்வு அவசரமாக  காணப்படணும்

இதன் நிரூபணம் என்ன???

விமர்சனம் என்பதற்கும்

தூற்றுதல் என்பதற்குமான புள்ளியில் நான் தெளிவாக இருக்கின்றேன்

ஒரு போதும் தூற்றுதலை செய்யாமல் செய்யப்படும் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு செய்ததில்லை

ஆனால் எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு

உயிரையே கொடுத்தோரை வசை பாடுவதைத்தான் எதிர்க்கின்றேன்

எதிர்ப்பேன்.

இது நிரூபிப்பது புலிகள் செய்த தியாகம் சிங்களவர்களை அசைத்து விட்டது என்பதல்ல! அப்படி ஆகவில்லை என்பதற்கு முப்பது வருடத்தில் எவ்வளவோ சம்பவங்களும் சாட்சிகளும் நிரம்பிக் கிடக்கின்றன விசுகர்!

புலிகளின் தியாகம் இரத்தமும் சதையுமாக இருந்த போதே சிங்களவரின் வன்மம் தான் கூடியது, இதயம் இளகவில்லை. நீங்கள் எதையும் மைத்திரியிடம் இருந்து விளங்கிக் கொள்ளலாம், உங்கள் உரிமை. எனக்கு விளங்கியதின் படி மைத்திரி-ரணில் எப்போதும் மொத்த சிறிலங்காவின் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயற்படுவதால் இந்த வாக்கியம் வந்தது! புலிகள் இல்லாத போர் ஓய்ந்த நிலையின் நன்மைகள் சிங்களத் தலைவர்களின் சமாதான ஆர்வத்தை இன்னும் கூட்டுகிறது! சர்வதேசமும் பின்னால் நின்று தள்ளுகிறது, அவ்வளவே!

மற்றபடி, தூற்றுதல் என்பது எப்போதும் புலிகளை விமர்சிப்போரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை! ஒரு சாதாரண கேள்வி, விமர்சனம், உண்மையான தகவல் புலிகள் பற்றிச் சொன்னாலே இன விரோதி, துரோகி , கூலி என்று திட்டுதல் புலி ஆதரவாளர்களின் வழமையான துலங்கல். இதெல்லாம் உங்களுக்குத் தூற்றுதலாகத் தெரியாமல் புலியை விமர்சனம் செய்வது மட்டும் தூற்றுதலாகத் தெரிவது வேடிக்கை! ஆனால், புதிய தகவல் அல்ல!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.