Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி

Featured Replies

'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி

 
simbu_2309363f.jpg
 

எங்கள் தலைவர் சிம்புவை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறி, அவரது வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் 4 பேர் முன் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இவ்வழக்கு டிசம்பர் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், சென்னை போலீஸார் சிம்புவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சிம்புவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இன்று காலை தி.நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பு அவருக்கு ஆதரவாக 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

சிம்பு ரசிகர்களில் ஒருவரான 'கெட்டவன்' ரமேஷ், "'ஒஸ்தி' படத்தில் "வாடி வாடி க்யூட் பொண்டாட்டி" என்று பெண்களைக் கொஞ்சும் வகையில் பாடியிருக்கிறார். பெண்களை போற்றும் வகையில் நல்ல பாடல்களை பாடுவது தான் தலைவர் சிம்புவின் வழக்கம். 'பீப்' பாடல் இறுதிச் செய்யப்படாத பாடல். அதிலும் கூட ஏன் காதலித்துவிட்டு பெண்களைத் திட்டுகிறீர்கள்.

உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் வரிகள் இருக்கிறது. அதை விடுத்து எங்கள் தலைவரை சிக்க வைக்க வேண்டும் என்றே அவரை கைது செய்ய முயற்சிகள் நடக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது எங்கள் தலைவரைக் காப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8014209.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா.... நேத்து அடிசிச்கிட்டு போன வெள்ளத்துல நனைஞ்ச உன் உடுப்பு ஈரமே இன்னும் காயல ... அதுக்குள்ளே நீ  தீக்குளிக்க முயற்சி பண்ணுறியே ...
படவா ராஸ்கல் முதல்ல நீ போய் உன் ஈர உடுப்ப மாத்து ..அப்புறம் கொளுத்துரது, எரிக்கிறது பார்த்துக்கலாம் ...
இம்மாம் பெரிய சென்னை மழைக்குமாட நீங்க பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கல.tw_weary:tw_weary:

  • தொடங்கியவர்

1010617_744869285647902_1936074100075954

சிம்பு ரசிகர்கள் தி.நகர்அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி .

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை வெறுமன வேடிக்கை மட்டும் பார்த்திருந்தால் அடுத்தமுறை இப்பிடி நடக்காது.. tw_blush:

  • தொடங்கியவர்

முன்ஜாமீன் கேட்டு சிம்பு மனு!

 

சென்னை: மாநிலம் முழுக்க கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்பு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

simbu%20600.jpg

இந்த மனு மீதான விசாரணை நாளை(22.12.2015) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/56654-simbu-petition-for-bail.art

  • கருத்துக்கள உறவுகள்

11204973_629827767157881_693055584457152

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:

'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி

Drei grüne Kanister. Benzinkanister auf weißem Hintergrund. 3d Lizenzfreie Bilder - 14007000

எத்தனை கலன் எரிபொருள் தேவை என்பதை மட்டும் சொல்லுங்கள். தாராளமாக அனுப்பி வைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
12 hours ago, நவீனன் said:

முன்ஜாமீன் கேட்டு சிம்பு மனு!

 

சென்னை: மாநிலம் முழுக்க கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்பு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

simbu%20600.jpg

இந்த மனு மீதான விசாரணை நாளை(22.12.2015) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/56654-simbu-petition-for-bail.art

Breaking Now
 
நடிகர் சிம்புக்கு முன்ஜாமீன் தர பெண் வக்கீல் சங்கம் மற்றும் காவல் துறை எதிர்ப்பு
 
பீப் பாடலை கேட்டபின் உத்தரவிடுமாறு நீதிபதியிடம் காவல்துறை கோரிக்கை
 
பாடலை எழுதும் முன் யோசிக்க வேண்டும் - நீதிபதி ராஜேந்திரன்
 
பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க போலீசுக்கு நீதிபதி உத்தரவு
 
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கை மாலை ஒத்திவைத்தார் நீதிபதி
 

Read more at: http://tamil.oneindia.com/
  • தொடங்கியவர்

பீப் பாடல் விவகாரம்: சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு!

 

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிம்புவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

விசாரணையில், அந்தப் பாடலை கேட்டபிறகு தீர்ப்பு வழங்கவும் நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி பாடலை கேட்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

hc%20simbu%20one.jpg

மேலும், பீப் பாடல் குறித்த அரசின் விளக்கத்தைக்  கேட்கவும், மனுதாரர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத்தினரின்  வாதம் கேட்கவும் வழக்கு விசாரணை இன்று(செவ்வாய்) பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/56695-tn-government-bail-resistant-simbu.art

  • தொடங்கியவர்

நடிகர் சிம்புவுக்கு முன்ஜாமீன் கூடாது: தமிழக அரசு வாதம்

 
நடிகர் சிம்பு | கோப்புப் படம்
நடிகர் சிம்பு | கோப்புப் படம்

சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெண்களை கொச்சைப்படுத்தி சமூக வலைதளங்களில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை மற்றும் சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த 2 வழக்குகளிலும் தனக்கு முன்ஜாமீன் அளிக்க கோரி சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி பி.ராஜேந்திரன் மேற்கொண்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், ''பீப் பாடல் மூலம் பெண்களை தரக்குறைவாக சித்தரித்து, இழிவுபடுத்தியுள்ளனர். இந்த பாடலின் தாக்கம் சிறுவர்களையும், குழந்தைகளையும் பாதிக்கும்.

சமூக வலைதளங்களில் உடனடியாக நிறுத்தும் வாய்ப்பு இல்லாததால் உலகம் முழுக்க ஏற்கெனவே பரவிவிட்டது. எனவே, பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று வாதாடினார்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நளினி இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதில் சிம்புவுக்கு எதிரான மனுவில் தன்னையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8018080.ece?homepage=true

  • தொடங்கியவர்
சிம்புவைக் கைது செய்ய போலீசாருக்கு எந்தத் தடையும் இல்லை!- உயர் நீதிமன்றம்
 
 

 சென்னை: ஆபாச பாடலை உருவாக்கிப் பாடிய சிம்பு மற்றும் அனிருத்தைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நடிகர் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. அனிருத் கைதிலிருந்து தப்பிக்க கனடாவிலேயே பதுங்கியுள்ளார். அவரது தந்தையிடம் மீண்டும் சம்மனை வழங்கியுள்ளனர் போலீசார்.

 

இன்று சிம்பு தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்தார். மேலும் சிம்பு, அனிருத்தின் பீப் பாடலை அவர் உணவு இடைவேளையின்போது கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அரசுத் தரப்பில். பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையின்போது, சிம்புவுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்றனர். பின்னர் இந்த வழக்கை வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி. சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதே நேரம், போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றால், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் உத்தவிட்டார்.

 

அனிருத் தகரப்பில் முன்ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவரும் இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு வரவேண்டும் என கோவை மற்றும் சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆகவே அனிருத்தைக் கைது செய்யவும் போலீசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே கனடாவிலிருந்து அவரை சென்னை திரும்ப போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்

#‎BREAKINGNEWS‬ |

● ஆபாச பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவை பிடிக்க மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

● சிம்பு, அவரது நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளாரா என காவல்துறை விசாரணை

● டெல்லி, மும்பை, ஐதராபாத்தில் உள்ள அவரது நண்பர்கள் பட்டியலையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

 

Breaking Now தலைமறைவான சிம்புவை பிடிக்க ஆந்திர, கேரளா மாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரம்

Read more at: http://tamil.oneindia.com/
  • தொடங்கியவர்
பீப் பாடல்: தப்பி ஓடி தலைமறைவான சிம்பு- ஹைதராபாத், பெங்களூரில் பதுங்கல்? வலைவீசும் 3 தனிப் படைகள்!!
 

 சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் தலைமறைவான நடிகர் சிம்புவைப் பிடிக்க சென்னை காவல் துறையின் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் நாள்தோறும் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தப்பிச்சென்ற சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் சென்னை காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

 

பீப் பாடல்

ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் சிம்புவின் முன்ஜாமீன் மனுவுக்கு பதில்மனு ஒன்றை போலீஸ் தாக்கல் செய்யவும், ஜனவரி 2 ம் தேதி சிம்பு ஆஜராக வேண்டும் என்பதன் கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் போலீஸ்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிம்புவைக் கைது செய்ய

மேலும் இந்த வழக்கில் போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றும், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் நீதிபதி உத்தவிட்டார்.

சிம்பு தலைமறைவு

சிம்புவிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு சிம்பு இல்லை. மேலும் கடந்த 10 நாட்களாக அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு சிம்பு தலைமறைவாக இருக்கிறார் என்ற முடிவிற்கு வந்த போலீசார் சிம்புவை தேடும் பணியில் தற்போது இறங்கி உள்ளனர்.

3 தனிப்படைகள்

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நடிகர் சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் சிம்பு இல்லை என்பதால் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

மேலும் சிம்புவைப் பற்றி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிம்புவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களை தற்போது போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சிம்பு கைது

இந்த வழக்கில் சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில், காவல் துறையினர் வேகமாக சிம்புவை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். பீப் பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார்? என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர

அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமையகத்துக்கு சென்னை போலீசார் மெயில் ஒன்றையும் அனுப்பி,பீப் பாடலை இணையத்தில் வெளியிட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

முதல் முறை அனுப்பிய மெயிலுக்கு சரியான பதில் வராத நிலையில் 2-வது முறையும் போலீசார் இந்த மெயிலை அனுப்பி இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தட்ஸ்தமிழ்.கொம் இன்னாள்... தமிழ் ஒன்இன்டியா.கொம் ஆக்களுக்கு சிம்புன்னா ஏதோ பிரச்சனை. அந்தக்காலத்தில இருந்து சிம்புவோட ஒரே கேந்தி.

இத்தனைக்கும் தமிழ் ஒன்இன்டியா.கொம் நடிகைகளின் அரைகுறைப்படங்கள்.. பெண்கள் "அந்த" விசயத்தில்.. அது இது.. இப்படி ஆபாசச் செய்தி போட்டே பிழைப்பு நடத்துது. இதெல்லாம் சிம்புக்கு வகுப்பெடுப்பது தான் மகா கொடுமை. முடியல்ல.... ! ************

Edited by நியானி
ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

சிம்புவைப் பிடிக்க களம் இறங்கிய 2 தனிப்படைகள்!

 

சென்னை: நடிகர் சிம்பு - அனிருத் உருவாக்கிய பீப் பாடல் சர்ச்சையில் அடுத்த கட்ட திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பாடலுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படை போலீசார் களம் இறங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை மற்றும் சென்னை போலீஸார், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று நடிகர்  சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தொடர்பான விசாரணையில், சிம்புவுக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை  வரும் ஜனவரி 4 ம் தேதிக்கு தள்ளி வைத்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.

actor%20simbu%20one%20pic.jpg

இந்நிலையில், நடிகர் சிம்பு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறடு. அவரைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிம்பு எங்கு இருக்கிறார், அவரின் தொடர்பில் யார் யார் இருக்கிறார்கள்? அவர் தமிழ் நாட்டில் இருக்கிறாரா அல்லது ஆந்திரா,கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சிம்பு கைது செய்யப்படும் சூழல் உள்ளதாகவே தெரிகிறது.

போலீசாரிடம் கேட்டபோது, " சிம்புவின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவரின் ட்விட்டர் பதிவுகளும் கண்காணிப்பில் உள்ளன. ட்விட்டர் பக்கத்தை இயக்குவது சிம்புதானா அல்லது அவரின் நெருங்கிய நண்பர்கள்  யாராவது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இயக்குகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அளித்த புகாரின் பேரிலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த வழக்கின் பேரிலும்  சிம்புவைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவரை நெருங்குவோம்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/56758-beep-song-special-teams-formed-to-nab-simbu.art

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தில் சறுக்கியதை சிம்புவில் பிடிக்க முயற்சி..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஸார் சொல்லுவதில் உடன்படுகின்றேன். அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வருகின்றது. அம்மாவின் ஊழல் போக எஞ்சியிருந்த கொஞ்ச ஆதரவையும் வெள்ளம் கொண்டுபோயுருச்சு! அதுக்காக சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது சிம்பு வசமாகச் சிக்கினார். 

இருந்தாலும் இந்த சிம்பு பயலை கொஞ்சம் தட்டிவைப்பது நல்லதுதான்.

இது அவருக்கும் அனிருத்துக்கும் ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரிய விவகாரமில்லை, இதை விட பல பிரச்சனைகள் இருக்கு, போதாத காலம். சினிமாத்துறையில்  தமிழனை தலை எழுப்ப விட மாட்டாங்கள் .

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23.12.2015 at 3:25 PM, இசைக்கலைஞன் said:

வெள்ளத்தில் சறுக்கியதை சிம்புவில் பிடிக்க முயற்சி..! tw_blush:

பெரிய அரசியல் சித்துவிளையாட்டுக்கள் பின்னணியில் இருக்கின்றனதான்.....ஆனாலும் தம்பி பாவிச்ச வசனம் சிக்கல் வசனம்.:cool:

என்ரை பேரப்பிள்ளை தாத்தா இந்த பாட்டை பாடிக்காட்டுங்கோ எண்டு கேட்டால் நான் என்னெண்டு பாடிக்காட்டுறது??????tw_anguished:
நான் இஞ்சை பாடினாலே நிரந்தர தடை.......வீட்டிலை பாடினால் எக்கதியோ??????? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

என்ரை பேரப்பிள்ளை தாத்தா இந்த பாட்டை பாடிக்காட்டுங்கோ எண்டு கேட்டால் நான் என்னெண்டு பாடிக்காட்டுறது??????tw_anguished:
நான் இஞ்சை பாடினாலே நிரந்தர தடை.......வீட்டிலை பாடினால் எக்கதியோ??????? tw_blush:

அதுகள் எல்லாம் அறியுங்கள். நீங்கள் வெட்கப்படாமல் படலாம் கு.சாண்ணா.tw_blush:

அதுகள் கேட்கிற பாட்டுக்கள் இப்படியும் இருக்கு..

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.