Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம்!' - சிம்பு தாயார்

Featured Replies

எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம்!' - சிம்பு தாயார்

 

பீப் சாங் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சிம்புவுக்கு ஆதரவாகவும், அவர் தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி தவறாக பேசுவது தவறு என்றும், இதற்காக அவர் சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும்,  எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என்றும் கூறியுள்ளார்.

உஷா ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியின் வீடியோ இங்கே....

 

http://www.vikatan.com/news/tamilnadu/56774-we-dont-want-to-live-in-tamilnadu-simbus-mother.art

  • தொடங்கியவர்

எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம்: சிம்புவின் தாயார் கதறல்

 
சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் | படம்: வீடியோ பதிவிலிருந்து...
சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் | படம்: வீடியோ பதிவிலிருந்து...

எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம் என்று சிம்புவின் தாயார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகனின் 'பீப்' பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோ பதிவில் உஷா ராஜேந்தர் பேசியிருப்பது, "சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணிவிட்டார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் 'பீப்' போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு போலீஸ் இருக்கிறது.

24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். போலீஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியா விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், 'பீப்' சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள். நான் வருகிறேன். வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்தொரு நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே இருக்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.

சிம்பு ஒரு சாதாரண நடிகன். பத்து நடிகரோடு அவரும் ஒரு நடிகர். இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது.

தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article8024705.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு, இதைச் சொல்லோடு மட்டும் நிறுத்திவிடாமல் செயலிலும் செய்துகாட்டவேண்டும்!

  • தொடங்கியவர்

ஏதோ சின்னபையனாம்<_< அவருக்கு கல்யாணம் கூட ஆகலையாம்:grin:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக்கொள்ளுங்கோ...

ஒரு சொல்லில் முடிக்கலாம்.

என் பிள்ளை

தெரிஞ்சோ தெரியாமலோ

முன்னுக்கோ  மறைச்சோ 

தூசணம் பேசிட்டான்

அது தப்புத்தான் 

மன்னிச்சுக்கொள்ளுங்கோ...

அது இவரது வாயிலிருந்து வரவே  இல்லையே..

தொடரத்தான் போகிறது...........:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

தாய் பாசம் என்பது இதுதான். தன் பிள்ளை கொலைகாரன் என்றால் கூட எந்த தாயும் அதை மறுக்கத்தான் பார்ப்பாள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

தாய் பாசம் என்பது இதுதான். தன் பிள்ளை கொலைகாரன் என்றால் கூட எந்த தாயும் அதை மறுக்கத்தான் பார்ப்பாள்.

சரி விடுங்க

அவாவுக்கு தாய்ப்பாசம்

அப்பன் எங்க...?

2 போட்டிருக்க வேண்டாமா??

  • தொடங்கியவர்
7 minutes ago, விசுகு said:

சரி விடுங்க

அவாவுக்கு தாய்ப்பாசம்

அப்பன் எங்க...?

2 போட்டிருக்க வேண்டாமா??

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நவீனன்..

  • கருத்துக்கள உறவுகள்

தன் மகன் செய்தது பிழை என ஒப்புக்கொண்டு மனமுடைந்து வருந்தும் தகப்பன். இதுதான் தகப்பனின் பாசம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய் தந்தை பாசத்துக்கு அப்பால் சிம்பு தான் ஒரு பொறுக்கி என்பதை எப்பவோ நிரூபித்து விட்டார்! ரஜனியின் மகளை தொலைபேசியில் எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார்.ரஜனியின் மனைவி    மகள்அருகில் இருப்பது தெரிந்தும் கேட்கக்கூடாத அசிங்கமான கேள்வியெல்லாம் கேட்டிருப்பார். இதெல்லாம் சிம்புவின் பெற்றோருக்கு தெரியாததா?

நயந்தராவுடன் தனிப்பட இருந்த சிலுமிஷ படங்களை ஊடகங்களில் பரவவிட்டு அவமானப்படுத்தியதையெல்லாம் தறுதலையை பெற்ற தாய்தந்தையருக்கு தெரியாமல் இருந்ததா?

உஷா -------------- ---------------  -------    --?

சிம்பு செய்தது தவறுதான் ஆனால் அதற்கு பிறகு நடப்பெதெல்லாம் டூமச் 

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு எப்படிப்பட்ட ஒருவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வெளியிடப்படாத பாடல் ஒன்றை வேண்டுமென்றே சிம்புவை பழிவாங்கவென்றே திருடி வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் சிம்பு கெட்ட வார்தை பயன்படுத்தி இருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. பல கண்ணகிகளையும் உத்தமிகளையும் கொண்ட தமிழகத்தில் பெண்களுக்கு கற்பு அவசியமில்லை (பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்களை குறிக்காது) எண்டு சொன்ன கற்புக்கரசிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடிகை ரஞ்சிதா புகழ் நித்தி நித்திய தர்மம் போதித்தபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? 7 மணிக்கு மேல் நீ இன்பலச்சுமி என்று சூப்பர் ஸ்டார் பாட்டு பெண்ணை நாகரிகமாக கேவலமாக வர்ணித்தபோது விசிலடித்த கூட்டம் வேறா? 

Edited by வாலி

10 minutes ago, வாலி said:

சிம்பு எப்படிப்பட்ட ஒருவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வெளியிடப்படாத பாடல் ஒன்றை வேண்டுமென்றே சிம்புவை பழிவாங்கவென்றே திருடி வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் சிம்பு கெட்ட வார்தை பயன்படுத்தி இருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. பல கண்ணகிகளையும் உத்தமிகளையும் கொண்ட தமிழகத்தில் பெண்களுக்கு கற்பு அவசியமில்லை (பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்களை குறிக்காது) எண்டு சொன்ன கற்புக்கரசிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடிகை ரஞ்சிதா புகழ் நித்தி நித்திய தர்மம் போதித்தபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? 7 மணிக்கு மேல் நீ இன்பலச்சுமி என்று சூப்பர் ஸ்டார் பாட்டு பெண்ணை நாகரிகமாக கேவலமாக வர்ணித்தபோது விசிலடித்த கூட்டம் வேறா? 

எல்லாம் வாஸ்தவம்தான் இருந்தாலும் சிம்பு மன்னிப்பு கேட்காமல் இப்பிடி விதண்டாவாதம் பண்ணலாமா? 

சிம்பு இப்பிட தறிகெட்டு நடக்க சிம்புவின் அம்மாதான் காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, வாலி said:

சிம்பு எப்படிப்பட்ட ஒருவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வெளியிடப்படாத பாடல் ஒன்றை வேண்டுமென்றே சிம்புவை பழிவாங்கவென்றே திருடி வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் சிம்பு கெட்ட வார்தை பயன்படுத்தி இருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. பல கண்ணகிகளையும் உத்தமிகளையும் கொண்ட தமிழகத்தில் பெண்களுக்கு கற்பு அவசியமில்லை (பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்களை குறிக்காது) எண்டு சொன்ன கற்புக்கரசிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடிகை ரஞ்சிதா புகழ் நித்தி நித்திய தர்மம் போதித்தபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? 7 மணிக்கு மேல் நீ இன்பலச்சுமி என்று சூப்பர் ஸ்டார் பாட்டு பெண்ணை நாகரிகமாக கேவலமாக வர்ணித்தபோது விசிலடித்த கூட்டம் வேறா? 

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

14 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

அவன் அங்க பாடினதுக்கே இங்க பஞ்சாயத்து இன்னும் முடியேல்லை, இதுக்குள்ள தூசனந்த்தில கவிதை வேறையா? 

ஆகிலும் கஷ்டமா இருந்தால் இடைக்கிடை பீப் போட்டு எழுதுங்கோ.. 

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு மீது தவறு இருக்கிறது.... அதற்கான தண்டனை என்பது தவறை உணரவைத்து மன்னிப்பது ஆனால் தற்போது நடைபெறும் விடயங்கள் திட்டமிட்டு ஒருவரை பழிவாங்க எத்தனிப்பதாகவே படுகிறது. சிம்பு கடந்தகாலங்களில் செய்த சில கீழ்தரமான செயல்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இப்போது பழிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்றுதான் எண்ணவேண்டியுள்ளது. பிழை என்பது அசுர வடிவமெடுத்து சட்டங்கள் முதல்கொண்டு ஊடகங்கள் வாயிலாக தனிமனித வாழ்வை சின்னாபின்னப்படுத்த ஆரம்பித்துள்ளதை பார்க்கும்போது எவ்வளவு தூரம் இவ்விடயம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு பிறவிக்குருடன் கொக்கு பார்த்த கதைபோன்ற நிலையை உருவாக்கிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ கருத்துகள் வைக்கிறோம் என்ற பெயரால் பலரும் இதற்கு தீனியிட்டு தற்போது இதைத்தவிர வேறு எப்பிரச்சனையும் இல்லாததுபோல ஆக்கிவிட்டார்கள். அடபோங்கப்பா இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை.....

 

ஒற்றை வார்த்தைக்காக ஒருவன் இவ்வளவு தூரம் பாதிக்கப்படுவது உலகில் இதுவொன்றாகத்தான் இருக்கமுடியும்!!!! வல்லாறுகளின் மத்தியில் வாழும் பெண்களுக்கும், இராணுவ பிடிகளுக்குள் சிக்கியிருக்கும், சாதிய ஒடுக்குமுறைகளுக்குள் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் ஏற்படும் துன்பங்களுக்கு இப்படியான வகையில் எங்கும் போராட்டங்கள் நடந்ததாக இதுவரை நான் கேள்விப்படவில்லை. ஒற்றைச் சொல்லுக்காக கொதித்தெழும் இந்த சமூகம்........நம்பவே முடியலைப்பா..... எங்கள் இனத்தின் பெண்கள் எவ்வளவு கோரமாக வேட்டையாடப்பட்டார்களே...... அப்போதெல்லாம் சிம்பு, அனிருத் படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த அந்த மாதரணி எங்கேய்யா இருந்திச்சு? ......அவர்கள் கண்களுக்கு எங்களைத் தெரியலையா அல்லது நாங்கள் தமிழர் இல்லையா?

31 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

புத்திசாலியாக இருந்தால் தூசணவார்த்தைகளை எழுதிப்போட்டு கன்னா பின்னா கவிதை எழுதிப்போட்டு விளக்கம் கொடுத்தமாதிரி சமாளிக்கவேண்டியதுதானே... "பு" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு சொல் அந்தக்காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவுடையதாக தமிழ் அகராதியில் இருக்கிறது வாயுள்ள பிள்ளையாக இருந்தால் வாழ்க்கை வசப்படும்......கி கி... (tw_blush:அப்பாடி கு.சாவை களத்தில இறக்கி விட்டாச்சு:cool:)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

நீங்கள் தாராளமாக எழுதலாம். உங்கள் யாழ்கள கோப்புக்களில் வீட்டில் சேமித்து வைத்துக்கொள்லலாம். அதை போஸ்ட் பண்ணினால்தான் பிழை. போஸ்டே பண்ணாத உங்கள் கவிதையை எவரோ களவாடி போஸ்ட் பண்ணினால் அது உங்கள் பிழையல்ல!

சமர்க்களங்களில் எங்கள் போராளிகள் பெண்கள் உட்பட பேசாத வார்த்தையையா சிம்பு பேசிவிட்டார்? கெட்டவார்த்தை எப்போதும் கெட்ட வார்த்தைதான்!<_<

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு பிரச்சினயா?! அவனவன் அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடுறான் மழைக்குப் பிறகு.. தின்று தினவெடுத்தவன் பிரச்சினைகளுக்குத்தான் ஊடகங்களில் முதலிடம்.. :/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நான் இங்கே தூசண வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை எழுதுகின்றேன் உங்கள் கருத்து என்ன?
யாழ்கள நிர்வாகம் அனுமதிக்குமா?

என்னை பொருத்தவரையில் வரவேற்பேன் .....

 

என்ன வார்த்தை பயன் படுத்துகிறீர்கள் என்பது பொருட்டல்ல ...
என்ன சொல்ல வாருகிறீர்கள் என்பதே முக்கியம்.

 

சிற்பியின் சிலையில் உங்களளால் நிர்வாணத்தை மட்டுமே பார்க்கமுடியும் என்றால் ..?
அது சிற்பியின் தப்பா?

 

நாகரீகம்
அநாகரீகம் இரண்டும் ஒன்றர கலந்தவை
அனாகரீகத்தில்தான் நாகரீகமே வாழ்கிறது.
நாகரீகத்திற்கு முகவரியே அநாகரீகம்தான்.

 

உண்மையில் எனது எழுத்து வகுப்பில் ஒரு பெண் மாணவி
ஆண்குறியை பற்றி கவிதை எழுதி எ வாங்கினார் ... உண்மையிலேயே பிரமாதமான கவிதை. இது யுனிவேர்சிடியில் நடந்தது.
உள்ளக்கிடக்கைகளை பிறர் உணரும் வகையில் கொடுப்பதுதான்
கலை ஓவியன் வரைகிறான் சிற்பி செதுக்கிறான் கவிஞன் எழுதுகிறான்.

 

தமிழில் வரும் பிட்டு படங்கள எல்லாம் யார் வீட்டில் இருந்து வருகிற்றது ?
அவகள்  சீலையை உரிந்துவிட்டு படுக்கும்போது ........ போகாத கற்பு சிம்பு பாடி போய்விட்டதா ??

  • கருத்துக்கள உறவுகள்

லீனா மணிமேகலை என்பவர் இதைவிட மிகவும் மோசமாக பல லெஸ்பியன் கவிதைகள் எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

லீனா மணிமேகலை என்பவர் இதைவிட மிகவும் மோசமாக பல லெஸ்பியன் கவிதைகள் எழுதியுள்ளார்.

அவர் அவர் தெரிந்ததை எழுதுகிறார்கள் .....

 

அறிஞர்கள் அறிவுசார் புலன் பெற்றவர்கள் ...
சமூகத்திற்கு தேவையானவற்றை கொடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
அப்பவே வந்திருந்தா தேடும் அவசியமே வந்திருக்காது... சிம்பு குறித்து போலீஸ் விளக்கம்
 

சென்னை: புகார் அளிக்கப்பட்டதும் நடிகர் சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தால், தற்போது அவரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் ‘யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள அந்தப் பாட்டிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

வழக்கு... பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் இரு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
 
தலைமறைவான சிம்பு... இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத், இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டார். ஆனால், சிம்பு எங்கிருக்கிறார் என்றே இல்லை. தலைமறைவாக உள்ள சிம்புவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
கைது நடவடிக்கை... இது தவிர சிம்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்திவைத்து விட்டார். இதனால், சிம்புவைக் கண்டதும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
 
தாயார்... இந்நிலையில் நேற்று சிம்புவின் தாயார் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சிம்புவின் நிலை குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருந்தார்.
 
நேரில் விளக்கம் தந்திருந்தால்... ஆனால், இவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது சிம்பு தான் என்கின்றனர் போலீசார். வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவரே நேரில் வந்து விளக்கம் அளித்து சென்றிருந்தால் நாங்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.
 
தென்தமிழகத்தில் தான்... இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிம்புவை இப்போது நாங்கள் தேடி கண்டுபிடித்தால் கைது செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். அவர் வெளிநாடுகளுக்கு இது வரை தப்பிச் செல்லவில்லை. தென் தமிழகத்தில்தான் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த இருக்கிறோம்" என்றார்.
 
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-clarified-simbu-issue-243077.html
  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு செய்தது கேவலத்திலும் கேவலம் தான்...தமிழ்நாட்டு அரசு செய்வது அதை விடக் கேவலம்...இந்தப் பிரச்சனையை வைத்து வெள்ளப் பிரச்சனையை கவர் பண்ணிட்டுது...காட்டிக் கொடுத்த பாவி யார்?... அனிருத் வழி தரப்பாய் இருக்க கூடும்...அனிருத் எப்படியும் தப்பிடுவார்...பாவம் சிம்பு மாட்டிக்கிட்டார்...சிம்பு போல ஆட்களுக்கு நல்லதொரு பாடம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சிம்பு செய்தது கேவலத்திலும் கேவலம் தான்...தமிழ்நாட்டு அரசு செய்வது அதை விடக் கேவலம்...இந்தப் பிரச்சனையை வைத்து வெள்ளப் பிரச்சனையை கவர் பண்ணிட்டுது...காட்டிக் கொடுத்த பாவி யார்?... அனிருத் வழி தரப்பாய் இருக்க கூடும்...அனிருத் எப்படியும் தப்பிடுவார்...பாவம் சிம்பு மாட்டிக்கிட்டார்...சிம்பு போல ஆட்களுக்கு நல்லதொரு பாடம்

சிம்பர் பிஞ்சில முத்தின கேஸ்தான்.

ரஜனி மகள், தனுஸ் மனைவியாக முன்னர், சிம்பரின் காதலி, பின்னர், நயன், ஹன்சிகா... என்று தெரிந்த பட்டியல். இவைதான் சிம்பர், பெண்கள் என்றால் use and throw என்ற நினைப்பு வர காரணம்.

இப்படி தலயில ஒரு சின்ன தட்டு விழுந்தால் தான் ஆள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.