Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் இணைத் தலைமை தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும்! - விக்னேஸ்வரன்

Featured Replies

மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்
 
 
மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்
தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்
 
தழிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து வெளியீடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தழிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் எமது கட்சியின் ஊடாக இது தொடர்பாக தெரியப்படுத்தலாம். பல எதிர்ப்புகளை தாண்டுவது தான் ஐனநாயகம். எங்களுடைய மாறான கருத்துக்களை மற்றவர்கள் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதில் அவர்களை எதிரிகளாக நினைப்பது தவறு.
 
இது தழிழ் மக்களுடைய இயக்கம். இதில் எத்தனை பேரும் சேர்ந்து முன்வரவேண்டி எடுக்கப்பட்டுள்ள ஒரு விடயம். இந்த விடயத்திலே சகலருடைய ஒத்துழைப்பும் தேவை. ஆகையினால் அவர்களை தனித்து விடவோ?, வேண்டாம் என்று சொல்லவோ? நாம்  தழிழ் மக்கள் பேரவை கோரவில்லை. அதனால் தழிழ் மக்களுடைய  நலன் கருதி எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த கோட்பாடுக்கு இணங்க இவ் அமைப்பின் ஊடாக சேர்ந்து கைகோர்க்கும் அனைவரையும் ஒன்றினைத்து புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்..
 
தழிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை  எற்றுக் கொள்ளப்பட்டவர் வரமுடியும் என்று குறிப்பிட்டோம். அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால் அவரையும் வரசொல்லுவோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எங்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன.  தழிழ் மக்களுடைய எதிர்கால சிந்தனையிருக்கின்றன. அதே சிந்தனையில் இருப்பவர்கள் இந்த பேரவையில் வந்திருக்கின்றார்கள். அதே சிந்தனையில் வேறுபல அரசியலாளர்கள் வைத்திருந்தால் வந்து சேருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.
 
அரசியல் யாப்பு யாக்கும் போது தழிழ் மக்களுக்கான உத்தரவாதங்கள், அவற்றிக்கான பாதுகாப்புகள், புரிந்துகொள்ள வேண்டும் தெரிந்து கொள்ளவேண்டும். மக்கள் இடையில் இருந்து நிலத்தில் இருந்து ஒன்று சேர்ந்து அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கும் வண்ணமாக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்து இப்படியாக செயற்பாடுகளை பெறும் விதமாக அந்த புதிய அரசியல் யாப்பு இருக்கவேண்டும் என்ற நோக்கில் இதனை முன்னேடுத்தோம். அதற்கு இப்பேரவை அனுசரணையாக உள்ளது. அரசாங்கம் என்பது புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவது உண்மை அதில் தழிழ் மக்களுடைய பிரச்சனைகள் எந்தவகையில் என்பது தான் இன்றை எமது பேரவையின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
 
பலர் தொடர்புகளை எற்படுத்தி கொண்டு மக்களிடையே எழுச்சி வரவேண்டும், மக்களுடைய பிரச்சனையில் தீர்க்கப்படவேண்டும்.என்று கோருகின்றனர். அதனால் இந்த தழிழ் மக்கள் பேரவையினை விரிவுபடுத்தி மக்களுடைய பலமான ஒரு இயக்கமாக மாற்றவேண்டிய நிலைப்பாடு எமக்கு இருக்கின்றது. அவ்வாறான பலம் இருந்தால் தான் அரசாங்கமும் கவனத்தில் எடுக்கும் என வடமாகாண முதலைமைச்சர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பெயரில் "மக்களை"  வைத்து பிழைப்பு நடத்திய கட்சி.....
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

கட்சியின் பெயரில் "மக்களை"  வைத்து பிழைப்பு நடத்திய கட்சி.....
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்...

இப்படியும் "மக்களை" வைச்சு பிழைக்கிற ஆக்கள் இருக்கினம். tw_blush:

தமிழ் மக்கள் பேரவை அப்படி அமையாட்டில் சரி. மக்கள் பிழைக்க வழிகாட்டினால் நல்லம். tw_blush:

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் பேரவை தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றை கலக்கும்.

 

தமிழ் மக்கள் பேரவை தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றை கலக்கும்.
 தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் மக்கள் பேரவை இரண்டாம் கட்ட கூட்டம் யாழ்.பொது நூலக கருத்தரங்கு மண்டபத்தில் ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெற்றது.
 
அக் கூட்டத்தில் இணைத்தலைவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைசர் அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் முதல் சில விசித்திரமான விளைவுகளையும் விமர்சனங்களையும் நான் பார்த்துக் கவனித்து வருகின்றேன். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சி உதயம் என்றது ஒரு செய்தி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கட்சி என்றது இன்னொரு செய்தி. தேர்தலில் தோற்றவர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டு என்றது மற்றுமொரு செய்தி. உங்கள் கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று பல மின்னஞ்சல்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்துமே பிழையான அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளும் கருத்துக்களும் என்று முதற்கண் கூற விரும்புகின்றேன்.
 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் திரு.சம்பந்தன் அவர்களை நான் கொழும்பில் சந்தித்தேன். பல விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அப்போது எமது பேரவையின் உண்மை நிலையை, அந்தஸ்தை, குறிக்கோளை, தூரநோக்குகளை அவருக்குத் தெளிவு படுத்தினேன்.
 
 
அப்போது அவர் கூறினார் - “மக்கள் இயக்கமாக ஒரு இயக்கம் பரிணமிப்பதை நாங்கள் வரவேற்க வேண்டும். மக்கள் மட்டத்தில் இருந்து சகலரதுங் கருத்துக்களும் கரிசனைகளும் வெளியிடப்பட வழியமைத்துக் கொடுக்கப்படுமானால் அதுவே ஜனநாயகம்” என்றார். வேறு பல விடயங்களையும் அவர் அப்போது குறிப்பிட்டார். அவை பற்றியும் பேசிக் கொண்டோம். ஆனால் அவரின் இந்தக் கருத்து யாவராலும்
 
 
மனதிற்கு எடுக்கப்பட வேண்டும். மக்களின் கருத்துக்களை அறியும் ஒரு நடவடிக்கையாகவும், மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்களை ஒழுங்கு படுத்தி வெளியிடும் நிறுவனமாகவும், மக்கள் நலம் காக்க வேண்டிய மக்கட் பிரதிநிதிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும், எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமாகவுமே தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்துள்ளது. 
 
எல்லா மட்டத்தில் இருந்தும் எல்லோரையும் ஒருங்கிணைத்து முன் செல்வதே பேரவையின் குறிக்கோள். இக்குறிக்கோளானது 2013ம் ஆண்டின் எமது மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளுக்கு இசைவானதாகவே இருக்கின்றது.
 
 
எமது பேரவையில் அரசியல்வாதிகளின் பங்கு பற்றல் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை எழுப்பியுள்ளனர். இத்தருணத்தில் ஒரு நடந்த கதையொன்றைக் கூற ஆசைப்படுகின்றேன். 1959ம் ஆண்டில் சுமார் மூன்று மாதங்களுக்கு இலங்கையின் காபந்து பிரதமராக இருந்தவர் திரு.விஜயானந்த தகநாயகா அவர்கள். அவர் டுPP என்ற ஒரு புதிய கட்சியைத் தாபித்துத் தகைமையுள்ள சிறந்த பலரைப் போட்டியாளர்களாக நியமித்துத் தேர்தலில் நின்றார். சுமார் 100 பேர்களைக் கொண்ட அந்தக் கட்சியில் இருந்து எவருமே தேர்ந்தெடுக்கப்படவில்லை. அத்தiனைபேரும் தேர்தலில் தோற்றார்கள் பிரதமராக இருந்த அவரும் தோற்றார். தோற்றதும் அவர் மனந் துவண்டு விடவில்லை. தேவேந்திரமுனை அல்லது டொன்றா என்ற இடத்தில் இருந்து பருத்தித்துறை வரையில் நடை பவனியில் சென்று பல ஆலயங்களைத் தரிசித்தார். மக்களைச் சந்தித்தார். அடுத்த தேர்தலில் அவர் நின்று அதில் பிரமாதமாக வென்றார். 
 
எனவே தேர்தலில் தோல்வி அடைபவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற கருத்து மறைய வேண்டும். எமக்குக் கருத்துக்களே முக்கியம். கருத்துக்கள் எங்கிருந்து வரினும் அவை நன்மை பயப்பனவெனின் அவற்றின் கர்த்தாக்கள் யாவர் என்று பார்க்காமல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும்.
 
 
தேர்தலில் தோற்றவர்தானே என்றெல்லாம் நாங்கள் எமது மக்களின் மாண்மை மறந்து அநாகரிகமாகப் பேச விழைவது இனியேனும் நிற்பாட்டப்பட வேண்டும். ஒருவர் தேர்தலில் ஒருமுறை தோற்று விட்டால்; மக்கள் அவரை என்றென்றும் புறக்கணித்து விடுவார்கள் என்று அர்த்தமில்லை. 
 
அதுமட்டுமல்ல. ஒரு மக்கள் இயக்கத்தில் மாற்றுக் கருத்துக்கள்தான் முக்கியம். எல்லாவிதமான கருத்துக்களும் ஆராயப்பட வேண்டும். நாம் வென்று விட்டோம்; எனவே எமது கருத்துத்தான் சரி என்று நாம் எண்ணுவது மடமை. ஆகவே கருத்துக்களுக்கு முதலிடம் கொடுப்பதே எமது கடப்பாடாகும் என்று கூறி வைக்கின்றேன்.
 
 
எமது மக்கள் இயக்கம் கருத்துக் கணிப்பில்த்தான் ஈடுபட முனைந்துள்ளது. தனி மனிதர்களின் தலைமையை நாங்கள் குறை கூறவில்லை.. ஆனால் வருங்காலத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு தனி மனித விருப்பு, வெறுப்பு, அறிவு, ஆற்றாமை என்பவற்றில் மட்டுந் தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியை நாம் முன்னெடுக்கின்றோம். 
 
அது மட்டுமல்ல. இது வரை காலமும் தனிமனிதர்களைத் தமது வலைகளுள் விழச் செய்யுஞ் சதிகளில் அரசாங்கங்கள் வெற்றியைக் கண்டு வந்துள்ளன. ஆனால் தனி மனிதர்களுக்குப் பின்னால் மக்களின் ஆளணி திரண்டு நிற்கின்றது என்று கண்டால், அப்பேர்ப்பட்ட ஆளணியினரும் அத் தனிமனிதர்கள் போல் சகலதையுஞ் சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவுகளுக்கு வந்துள்ளார்கள் என்று கண்டால், அரசாங்கங்கள் தனிமனிதப் பேரங்களில் ஈடுபடாது இனரீதியான, பாதிக்கப்பட்ட மக்கள் மன ரீதியான தொடர்பாடல்களில் ஈடுபடவேண்டி வரும்.
 
 
அந்த விதத்தில் பார்க்கும் போது எமது தமிழ் மக்கள் பேரவை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறுதான் அது கடமையாற்றும்.
 
நிலமட்டத் தமிழ் மக்களைக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இணைத்து திடமான ஒரு அரசியல்ப் பலத்தை வெளிப்படுத்த இந்த அப்பியாசம் வழி வகுக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.
 
 
இப்பொழுதே தமிழர்கள் யாவரும் சேரப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகின்றது. இதில் ஒரு விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 
 
எந்தக் கட்சியாக இருந்தாலும் சிங்கள மக்களிடையே தமிழர்கள் சம்பந்தமாகச் சில பொதுக் கருத்துக்கள இருந்து வருவதை நாங்கள் உய்த்துணர வேண்டும். தமிழர்களைத் தழைக்க விட்டால் எமக்கு ஆபத்து என்ற ஒரு அடிப்படைக் கருத்து அங்கு சென்ற நூற்றாண்டிலிருந்து நிலவுகின்றது. 
 
ஆகவே தமிழர்களுள் சிலரை நாங்கள் எங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெரிய கட்சிகளின் தலைமைப் பீடங்களிடையே பொதுவாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை எமக்குச் சார்பாகப் பாவிக்க வேண்டும். ஆனால் எழும்ப விடக்கூடாது என்பது அவர்கள் குறிக்கோள்.
 
 
ஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் எமது தமிழ் மக்கள் சிலரிடையே அப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்து நிலவுவதுதான் மனவருத்தத்தைத் தருகின்றது.
 
 
மூன்று முக்கிய விடயங்களை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். முதலாவது விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வின அடிமட்ட மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தனியார்களும், தரகர்களும் தகுந்த ஒரு தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள். அந்த அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்டு, எமது சாதாரண மட்ட மக்களையும் படித்த மக்களையும் நாம் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாக இயங்குவது எமது அரசியல் தலைவர்கள் எம் சார்பில் திடமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம்அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
 
இரண்டாவது அரசியல் சிந்தனைகள் வேறு; நடைமுறை அரசியல் வேறு. இது வரை காலமும் எமது மக்கள் நடைமுறை அரசியல் என்ற சகதிக்குட்பட்டுத்தான் நின்றுழந்து வந்துள்ளார்கள். அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா, அவரா இவரா என்பதுதான் எமது கரிசனையாக இருந்தது. ஆனால் தெற்கில் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான அவர்களின் அடிப்படை எண்ணங்கள் பொதுவானதாகவே இருந்து வந்துள்ளன. இப்பொழுது கூடப் பாருங்கள். ஒருவர் தமிழர் சார்பில் கதைத்தால் மற்றவர் அதற்கு எதிராகக் கதைக்கின்றார். கடைசியில் எமக்குத் தருவதாகக் கூறி எதையுந் தந்தபாடில்லை. ஆகவே “நீ தருவதாகக் கூறு! நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். பின்னர் “நான் என்ன செய்ய? அவர்கள் எதிர்க்கின்றார்கள்” என்று ஒன்றையும் கொடுக்காமல் விடுவோம்” என்ற முறையிலேயே காரியங்கள் நடந்து கொண்டு வருகின்றன.
 
அது மட்டுமல்ல. எமது தமிழ் மக்கட் தலைவர்கள் எவ்வளவு தான் அறிவில், ஆற்றலில் சிறந்தவர்களாக இருந்தாலும் புகழ்ச்சிக்கும் மாயமாலங்களுக்கும் இலேசில் அடிமைப்படுவர்களாகக் காணப்பட்டு வந்துள்ளார்கள். 1930ம் ஆண்டுகளில் சிங்களவர் மட்டும் மந்திரிசபையை (Pயn ளுinhயடய ஊயடிiநெவ) வகுக்க கருத்துக் கூறியது ஒரு தமிழ்க் கணிதப் பேராசிரியரே என்று கூறுவார்கள். காக்காயை வாய் திறந்து பாடும் என்று கூறும் நரி போல “நீங்கள் தான் மிக மிகக் கெட்டிக் காரர். எமக்கு இதைச் சொல்லித்தாரும்” என்று அப்போதைய நரிகள் கோரியதும் எமது தமிழ்க் காக்கை வடையைத் தவற விட்டு விட்டது. இது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே ஒரு மக்கள் அணி பின்னால் இருந்து நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றவுடன் காக்காய்கள் வடையைக் கீழே விழுந்து விடாது கெட்டியாப் பிடித்துக் கொள்வன என்பது எமது எதிர்பார்ப்பு.
 
மூன்றாவது கட்சிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் தற்போது உதித்துள்ளது. கட்சி வேண்டாம் என்று நான் கூறவில்லை. கட்சிகளின் நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், நோக்குகள் யாவையும் வெளிப்படைத்தன்மையுடனும் நிபுணத்துவச் செறிவுடனும் செயல்ப்படுத்தப் பட வேண்டும். ஒரு வேளை கட்சிகளினால் இதனைச் செய்ய முடியாதிருந்தாலும் அவற்றிற்குப் பக்கபலமாக
 
நின்று பலதையும் அடியெடுத்துக் கொடுக்கும் வண்ணம் இந்தப் பேரவை செயற்பட இருக்கின்றது.
 
உதாரணத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இராணுவ முகாம்கள் இருக்கின்றன, எங்கெங்கே இருக்கின்றன, கிட்டத்தட்ட எத்தனை போர் வீரர்கள் அங்கு இருக்கின்றார்கள் என்ற தகவலை ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி கேட்கும் போது பதிலிறுக்க வேண்டியிருந்தால் எமது பேரவை அவற்றிற்கான தரவுகளைச் சேகரித்துத் தரும் என்று நம்புகின்றேன்.
 
எனவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் கட்சிகளுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரானதல்ல. தமது தனித்துவத்தை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கும் ஒரு இயக்கம் அல்ல. மாறாக மக்கள் நலம் நாடும் ஒரு மக்கள் இயக்கம் அது. இதன் தலைமைத்துவம் தனி மனிதர்களின் செல்வாக்கில் கட்டி எழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த, மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது. இதில் விக்னேஸ்வரன் பங்கு அனுசரணை வழங்குவதே. இதை வைத்துத் தாவிப்பிடிக்கப் பார்க்கின்றான் விக்னேஸ்வரன் என்பதெல்லாம் தாவிப் பிடிததுப் பழகிப் போன தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களின் தாறுமாறான தவறான கருத்துக்கள்.
 
எமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழுமூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:

எனவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் கட்சிகளுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரானதல்ல. தமது தனித்துவத்தை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கும் ஒரு இயக்கம் அல்ல. மாறாக மக்கள் நலம் நாடும் ஒரு மக்கள் இயக்கம் அது. இதன் தலைமைத்துவம் தனி மனிதர்களின் செல்வாக்கில் கட்டி எழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த, மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது. இதில் விக்னேஸ்வரன் பங்கு அனுசரணை வழங்குவதே. இதை வைத்துத் தாவிப்பிடிக்கப் பார்க்கின்றான் விக்னேஸ்வரன் என்பதெல்லாம் தாவிப் பிடிததுப் பழகிப் போன தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களின் தாறுமாறான தவறான கருத்துக்கள்.

ஜட்ச் ஜட்ச் தான். சாதாரண சட்டாம்பி சட்டாம்பி தான்.  இதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறம்.. ஐயா. தொடர்ந்து.. நல் வழிப்படுத்துங்கள்.. வரவேற்ப்போம்... வந்துதவுவோம். tw_blush:

29 minutes ago, நவீனன் said:

இரண்டாவது அரசியல் சிந்தனைகள் வேறு; நடைமுறை அரசியல் வேறு. இது வரை காலமும் எமது மக்கள் நடைமுறை அரசியல் என்ற சகதிக்குட்பட்டுத்தான் நின்றுழந்து வந்துள்ளார்கள். அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா, அவரா இவரா என்பதுதான் எமது கரிசனையாக இருந்தது. ஆனால் தெற்கில் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான அவர்களின் அடிப்படை எண்ணங்கள் பொதுவானதாகவே இருந்து வந்துள்ளன. இப்பொழுது கூடப் பாருங்கள். ஒருவர் தமிழர் சார்பில் கதைத்தால் மற்றவர் அதற்கு எதிராகக் கதைக்கின்றார். கடைசியில் எமக்குத் தருவதாகக் கூறி எதையுந் தந்தபாடில்லை. ஆகவே “நீ தருவதாகக் கூறு! நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். பின்னர் “நான் என்ன செய்ய? அவர்கள் எதிர்க்கின்றார்கள்” என்று ஒன்றையும் கொடுக்காமல் விடுவோம்” என்ற முறையிலேயே காரியங்கள் நடந்து கொண்டு வருகின்றன

சிங்களத் தலைமைகளையும்.. சொறீலங்காவையும் நல்லதுன்னு சொல்லிக்கிட்டு அலையுற எங்கட கூட்டம் படிக்க வேண்டிய விளங்க வேண்டிய முக்கிய விசயம் இது. tw_blush:

விக்கி ஐயா முதலில் கருத்து கந்தசாமியாக இருப்பதை விடுத்து முதலமைச்சர் பதவியை வைத்து இருக்கும் நிதியை வைத்து மக்களுக்கு நாலு நல்ல விடயம் செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்து தெனாலி அவர்களே இந்தக் கருத்தை சுமத்திரனிடமும் கூறுங்கள். அவர்கள்தான் அரசாங்கத்துடன் நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள் தமிழருக்கு ஏதாவது சலுகைகளைப் பெற்றுத்தரலாம். குறைந்த பட்சம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை.

37 minutes ago, புலவர் said:

 கருத்து தெனாலி அவர்களே இந்தக் கருத்தை சுமத்திரனிடமும் கூறுங்கள். அவர்கள்தான் அரசாங்கத்துடன் நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள் தமிழருக்கு ஏதாவது சலுகைகளைப் பெற்றுத்தரலாம். குறைந்த பட்சம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை.

சுமந்திரன் அறிக்கைகள் மட்டும் வெளியிடுவதை விடுத்து ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடும். அதே சமயம் முதலமைச்சரும் அவருக்குரிய அதிகாரங்களை வைத்து பல விடயங்கள் செயலாம்..கிடைக்கும் நிதி அரைவாசி திரும்ப போகிறது என்று வேறு குற்றச்சாட்டு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் அவர்கள் நேற்றைய வரதராஜப்பெருமாள் சாரின் செவ்வியை அடிக்கடிபோட்டுப்பார்த்து சிலவிடயங்களைக் கற்றுக்கொள்ள முற்படவேண்டும்! 

கீழே இணைப்பு உள்ளது: 

http://www.yarl.com/forum3/topic/167945-அரசியல்-களம்-24122015/#comment-1153857

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் தெளிவான தலைமைத்துவத்துக்கு இன்னுமொரு உதாரணம் இந்த உரையும் அதன் பின் தொடரவுள்ள செயற்பாடுகளும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழரசு said:

ஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் எமது தமிழ் மக்கள் சிலரிடையே அப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்து நிலவுவதுதான் மனவருத்தத்தைத் தருகின்றது.

என்ன செய்வது எசமானர் விசுவாசம் அப்படி 

 

6 hours ago, தமிழரசு said:

காக்காயை வாய் திறந்து பாடும் என்று கூறும் நரி போல “நீங்கள் தான் மிக மிகக் கெட்டிக் காரர். எமக்கு இதைச் சொல்லித்தாரும்” என்று அப்போதைய நரிகள் கோரியதும் எமது தமிழ்க் காக்கை வடையைத் தவற விட்டு விட்டது. இது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே ஒரு மக்கள் அணி பின்னால் இருந்து நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றவுடன் காக்காய்கள் வடையைக் கீழே விழுந்து விடாது கெட்டியாப் பிடித்துக் கொள்வன என்பது எமது எதிர்பார்ப்பு.

சபாஷ் ...ஐயா மிகச்சரியான எதிர்பார்ப்பு .....என்னசெய்வது சிலபேருக்கு செவிட்டையில் போட்டு தான் வழிக்கு கொண்டுவரவேண்டும் ....

இப்பதான் எனக்கு விக்கி ஐயாவின் லெவல் விழங்குது .....கிட்டவே நிக்கமுடியாது ....ஆனால் அது விளங்க நம்மிடமும் கொஞ்சம் விசயம் இருக்க வேண்டும் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

''தமிழ் மக்கள் பேரவையின் உதயத்திற்கு சம்பந்தர் ஒத்துகொண்டார் என்றால் இதற்கு சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்னவாயிருக்கும். ஆமா இனி ஆப்புத்தான் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.