Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பதில் பிரச்சினையில்லை - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பதில் பிரச்சினையில்லை - அரசாங்கம்

[ Tuesday,2 February 2016, 04:19:58 ]   
Vajira-Abeywardena.jpg

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபேயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம் எந்தவொரு அரச நிகழ்விலும் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் இசைக்க முடியும் என பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியுள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது புதிய நிகழ்வு அல்லவென சுட்டிக்காட்டிய அமைச்சர், 1948 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் பல அரச நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதத்தை கிளிநொச்சியில் வைத்து சிங்கள மொழியிலும் மாத்தறையில் வைத்து தமிழ் மொழியிலும் இசைப்பதில் எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் பல விடயங்களை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜனவரி 8 மற்றும் ஓகஸ்ட் 17 இல் பெற்ற தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து இன ஒருமைப்பாட்டை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/17999

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இல்லாததை தாற மாதிரி.. இருந்ததை புடுங்கிட்டு.. இப்ப அதை வைச்சு அரசியல். இதில எங்கடையள் சிலது அதிசயம் நடந்துகிட்டு இருக்கு.. என்ற கணக்கில்...... முடியல்லடா.. உங்கள் திருவிளையாடல். ஊத்தை அரசியல். எம்மை அழிச்சவன் மெல்ல மெல்ல தப்பிப் பிழைச்சுக்கிட்டு இருக்கான். நாங்க...??! முதலில் எங்கடையளுக்கு ஆண்டவன் நல்ல பொதுப்புத்தியைக் கொடுக்கனும். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கறுப்பி said:

தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பதில் பிரச்சினையில்லை - அரசாங்கம்

அப்பாடா.....அரைவாசிப்பிரச்சனை முடிஞ்சுது :cool:
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பாடா.....அரைவாசிப்பிரச்சனை முடிஞ்சுது :cool:
 
அப்போ

இன்னும் அரைவாசிப்பிரச்சினை இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்கள் அது தான் புலம் பெயந்தவர்கள் எல்லாம் எங்கடை பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அங்கு போய் விகிதாசரத்தை பெருக்கி நில்த்தை வசப்படுத்திக் கொள்வது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்கள் அது தான் புலம் பெயந்தவர்கள் எல்லாம் எங்கடை பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அங்கு போய் விகிதாசரத்தை பெருக்கி நில்த்தை வசப்படுத்திக் கொள்வது தான்.

ஈழத்தமிழன் புலம்பெயராது அங்கேயே முடங்கியிருந்தால்??????

சிங்களம் எப்படி அரசியல் செய்திருக்கும் என்று ஒருகணம் சிந்தித்து பாருங்கள்!

இவ்வளவு போர் அழிவுகளிலும் மீண்டு சுயநிலைக்கு மக்கள் வாழ்க்கை திரும்பியிருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்?

சுமந்திரன்?
சம்பந்தன்?
மைத்திரி?
மகிந்த? 

36 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் புலம்பெயராது அங்கேயே முடங்கியிருந்தால்??????

சிங்களம் எப்படி அரசியல் செய்திருக்கும் என்று ஒருகணம் சிந்தித்து பாருங்கள்!

இவ்வளவு போர் அழிவுகளிலும் மீண்டு சுயநிலைக்கு மக்கள் வாழ்க்கை திரும்பியிருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்?

சுமந்திரன்?
சம்பந்தன்?
மைத்திரி?
மகிந்த? 

யாரப்பா  அது சுமந்திரன், அவர் என்ன செய்யிறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Dash said:

யாரப்பா  அது சுமந்திரன், அவர் என்ன செய்யிறார்?

இவர்தான் அவர்!

47 minutes ago, குமாரசாமி said:

இவர்தான் அவர்!

அடடா இவரா அவர் , தமிழரின் வருங்கால தலைவர் என தற்கால தலிவரால் அறிமுகமானவர்.

அவுஸ்த்திரேலிய பயணத்துக்கு பிறகு ஒரு மாதிரியாக தான் திரியிறார்.

நாட்டில் குண்டு வேடிக்காதா நாற்பது சனம் சாகதா வீட்டில் வேலை இடத்தில் நாங்கள் வெடி கொழுத்தி மகிழமுடியாதா என்று போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் நெஞ்சம் கலங்குவது புரியுது .

வாரவிடுமுறைகளில் பொங்குதமிழ் தமிழ் பாடல்கள் என்ன உணர்ச்சி நடனங்கள் என்ன இப்போ எதுவும் இல்லாமல் தவிப்பது புரிகின்றது .

பாவம் நாட்டில் உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்கு எந்த பாஷையில் தேசிய கீதம் பாடினாலும் பாடிவிட்டு சந்தோசமாக இருக்கட்டும் ,

பிரச்சனை தீராவிட்டால் வெடி வைக்க இன்னோமுருவர் வராமலா விடப்போகின்றார் .

பொறுத்து இருங்கள் மீண்டும் ஆடிப்பாடலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

என்றிலிருந்து நீங்கள் இப்படிபுலி விரோத கொள்கை மாறி தமிழின விரோத கொள்கையாலராக மாறினீர்கள்.

சின்ன திருத்தும் - போலி தமிழின விரோதி .பலர் சொல்லுவார்கள் அவர்கள் கிடக்கட்டும் என்று ஆனால் அதை கிழிப்பதில் எனக்கு ஒரு சுகம் 

அதை கிழித்த ஒரு சின்ன பெருமையும் இருக்கு .

நான் மட்டும் அல்ல பலர் இப்ப எங்கள் பக்கம் தான் பாவம் இப்பவும் சிலர் பழைய நினைவுகளுடன் உழருகின்றார்கள் .

நாட்டில் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபட்ட கூட்டமைபிற்கு ஆதரவு அழிக்கும் நான் தமிழின விரோதி 

தமிழர்களுக்கு எது வித தீர்வும் கிடைக்க கூடாது என்று ஒற்றைகாலில் நிற்பவர்கள் தமிழின ஆதாரவாளர்கள் .

செம கொமடி .

தமிழ் இனம் அழிய கூடாது ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பவன் தமிழின விரோதி 

வகை தொகையாக தமிழன் சாக விசில் அடிப்பவன் தமிழின ஆதரவாளன் .

அண்ணைக்கு மேடையில் பாட்டு பாட ,பாட்டு போட ,நாடகம் போட நாலு தமிழன் நாட்டில் சாகத்தான் வேண்டும் போல .

  • கருத்துக்கள உறவுகள்
  • An impeachment motion could be brought against President Maithripala Sirisena if he allows the National Anthem (NA) to be sung in Tamil violating the Constitution,
  • Former President Mahinda Rajapaksa today slammed the decision to sing the National anthem in Tamil during the independence day celebrations on Thursday.
  •  
  • இந்திய சினிமாப் பக்கங்களையே பார்த்துக்கொண்டு இருக்காமல் நாட்டில சிங்களவன், தமிழன் என்ன சொல்லுறான் என்பதையும் கொஞ்சம் வாசிக்க / கேட்க வேண்டும். அப்போதான் தெளிவா கதைக்கலாம். .... செம கொமடி  :cool:

உதுவேல்லாம் என்ன செய்தி தம்பி ,ஆழ்ந்த அனுதாபங்கள் 

உதைவிட மோசமான அறிக்கை  விட்டவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு இருந்ததை பார்த்த ஆட்கள் நாங்கள் .

பத்து போத்தல்கள் அடித்தவன் கம் என்று படுத்திருக்க அரை போத்தல் அடித்தவன் புசத்துவது தான் இங்கு நடக்குது .

தம்பியை சிறுவன் என்று நினைத்தன் இல்லை குழந்தையாய் இருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

உதுவேல்லாம் என்ன செய்தி தம்பி ,ஆழ்ந்த அனுதாபங்கள் 

உதைவிட மோசமான அறிக்கை  விட்டவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு இருந்ததை பார்த்த ஆட்கள் நாங்கள் .

பத்து போத்தல்கள் அடித்தவன் கம் என்று படுத்திருக்க அரை போத்தல் அடித்தவன் புசத்துவது தான் இங்கு நடக்குது .

தம்பியை சிறுவன் என்று நினைத்தன் இல்லை குழந்தையாய் இருக்கின்றார் .

அண்ணே எவன் அறிக்கை விட்டான், எப்ப அறிக்கை விட்டான் என்பது முக்கியம் இல்லை...
என்னத்தை விட்டான் என்பது தான் முக்கியம். :)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

என்றிலிருந்து நீங்கள் இப்படிபுலி விரோத கொள்கை மாறி தமிழின விரோத கொள்கையாலராக மாறினீர்கள்.

சசி சிலதுகளுக்கு எந்தத்திரியை திறந்தாலும் அதுக்குள்ளே புலியையும் புளிவால்களையும் இழுத்தாத்தான் இரவு நித்திரை வரும். இது ஒரு வகை மனோ வியாதி. 
வார விடுமுறையில் களியாட்டங்களை பற்றிக்கதைக்கிறதுகள் எல்லாம் ஒவ்வொருநாளும் மப்பும் சினிமாவுமா இருந்து கொண்டு மற்றதுகளுக்கு அட்வைஸ் பண்ணுதுகள். 
இதுல அவர் பல போலி முகத்தை கிழிச்சிட்டாராம், இப்ப எல்லாரும் அவற்றை பக்கமாம். மற்றவை எல்லாம் தமிழன் செத்தால் விசிலடிக்கிற கூட்டமாம், எந்த உலகத்தில இருக்கிறார் தெரியேல்லை.

"சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும்."- 1949 ஆம் ஆண்டின் சுதந்திர ஞாபகார்த்த விழாவுக்கான அழைப்பிதழிலில்...
2016-02-03 22:54:26

சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும். 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி, இலங்கைச் சுதந்திரமடைந்து முதலாவது வருட நிறைவு விழா  அழைப்பிதழ்....

14627sri-lanak-1949--600.jpg

 (நன்றி: என்.கே. அஷோக்பரன்)

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14627#sthash.rQKZafnL.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.