Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.
Mohanay February 05, 2016 Canada

fraud.jpeg

காப்பீட்டு மோசடி “நடன இயக்குநர்” ஒருவர் ரொறொன்ரோவின் பிசியான வீதிகளில் 13 வாகன மோதல்களை நடாத்திய குற்றத்திற்காக வியாழக்கிழமை மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
குற்றவியல் அமைப்பொன்றின் தலைவர்களில் ஒருவரான 38வயதுடைய உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசு என்பவர் ஒரு டசின் கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளை போலியான வகையில் காயப்பட்டவர்கள் என காட்டி 1.5மில்லியன் டொலர்கள் வரையிலான பொய்யான காப்பீட்டு கோரிக்கைளை பெற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார்.
இத்தொகையில் 1.2மில்லியன் டொலர்கள் திருநாவுக்கரசுவின் வணிக கணக்கில் சென்றுள்ளதாதவும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு மீளளிப்பாக டொலர்கள் 375,000ஐ செலுத்துமாறு கட்டளையிடப்பட்டள்ளது.
இந்த மோசடியில் இரண்டு டிரக் சாரதிகள், உதிரிப்பாக பழுது பார்க்கும் கடைகள் மற்றும் மறுவாழ்வு கிளினிக்குள் என்பனவும் திருநாவுக்கரசுவின் “இந்த மிகவும் சிக்கலான” மோசடியில் இழுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உணர்கொம்பாக இவர் இருந்துள்ளதாக ஒன்ராறியோ உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோன் மக்கஹோன் தெரிவித்தார்.
2007 மேயில் இத்தகைய ஒரு போலி விபத்து ஸ்காபுரோவில் திசை மாறியதால் மனிதன் ஒருவரை நிரந்தரமாக மூளைக்காயத்திற்கு ஆளாக்கியது
திருநாவுக்கரசு இந்த வருட ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2007ல் 17 குற்றங்கள் செய்ததாகவும் இவற்றில் ஒரு குற்றவியல் அமைப்பில் கட்டளை செய்தமை, மோசடி மற்றும் குற்றவியல் அலட்சியம் காரணமாக உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களும் அடங்குகின்றன.
திருநாவுக்கரசு ஆறு வயதாக இருக்கும் போது இவரது பெற்றோர் மற்றும் சகோதரி இலங்கையில் வெட்டிக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990ல் கனடா வந்தவர்.
மூன்று பிள்கைளின் தந்தை. கடந்த வருடம் மனநல ஆலோசயை நாடியதுடன் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்றவர். ஆனால் 2007ல் மன ஆரோக்கியம் ஒரு பிரச்சனையா இருந்தமைக்கு சாட்சியங்கள் இல்லை.
“நான் செய்தது சரியான தவறு. அதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்” என மொழிபெயர்பாளர் ஊடாக தெரிவித்தார்.
இன்னமும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட மற்றய குற்றங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரங்கேற்றும் வாகன மோதல்கள் துரதிஷ்ட வசமாக ரொறான்ரோவில் பொதுவானவை எனவும் கனடாவில் இந்த மோதலின் தலைநகரம் ரொறொன்ரோ பெரும்பாகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

- See more at: http://www.canadamirror.com/canada/56608.html#sthash.I4WLMpvz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலும் வெள்ளை வானோடு அலைகிறது ஒரு கூட்டம். தமிழர்களுக்கு "நற்" பெயரை சம்பாதித்துக் கொடுக்கிறார்கள்.. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கின்றதப்பா

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அங்கின இருந்தது. அதையும் அறவே இல்லைன்னு ஆக்கிட்டு இருக்காங்க. :rolleyes:

எப்போதும் களவு செய்து பிடுபடுபவன் மட்டும் தான் வெளிச்சத்திற்கு வருகின்றான் தண்டனையும் பெருகின்றான் .இவர் 13 

விபத்துகளை உருவாக்கியவர் ,

நூறுக்கு மேலே விபத்துக்களை உருவாக்கி பெரும் முதலாளிகள் ஆகி இன்று சமூகத்தில் பெரும்புள்ளியாக பவனி வருபவர்கள் பலர் .

எல்லாவற்றிருக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் .

எமது கார்கள் இரண்டுதரம் இப்படி அடிக்கபட்டன .வேண்டுமென்றே மோதிய அந்த காரில் ஒரு பெண்ணும் இருந்தார் .அம்புலன்ஸ் வர அவர் நடித்த நடிப்பு இருக்கே சொல்லிமாளது .

யாழில் முன்னர் விபரமாக எழுதியிருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வலைப்பின்னலில் வேற்று நாட்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். பிடிபடுவது சிறியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பற்றிய விபரம் தெரிந்தால் 
உடனே போலீசில் போட்டுகொடுத்து விட வேண்டும்.

இன்சுரன்ஸ் காரன் என்ன தனது வங்கி கணக்கில் இருந்தா எடுத்து கொடுக்கிறான் 
அதை பிறகு எங்களிடம் தான் அவன் வசூலிக்க போகிறான்.

அவர்கள் சுத்தி வளைத்து எம்மிடம்தான் கொள்ளை அடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கின்றதப்பா

தவறு செய்த தனிப்பட்ட ஒருவனின் போக்கை கண்டிப்பதை விட்டு ஒட்டு  மொத்த புலம் பெயர் தமிழர்களை சாடுவது அறிவுபூர்வமாக இல்லை.
மஹிந்த குடும்பம் (மகன்மார்) செய்த ஈனச்செயல்களுக்காக ஒட்டு மொத்த சிங்கள இனத்தையே  கள்ளர்களாகவும் கயவர்களாகவும் பார்க்கலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கறுப்பி said:

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.


மூன்று பிள்கைளின் தந்தை. கடந்த வருடம் மனநல ஆலோசயை நாடியதுடன் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்றவர். ஆனால் 2007ல் மன ஆரோக்கியம் ஒரு பிரச்சனையா இருந்தமைக்கு சாட்சியங்கள் இல்லை.
 

கனடாவில் மன நோயாளிகள் ஏன் அதிகமாக உருவாகின்றனர்... ???

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர்ச்சி குன்றி ஐந்தாம் அறிவு கூட செயடபடாத பலர் 
இப்போ இணையத்தில் எழுதுகிறார்கள் 

அதோடு ஒப்பிடும்போது அதில் வியந்துகொள்ள ஏதுமில்லை.

ஊரை கொள்ளையட்டிக்கும் தலைவர்களை கொண்ட உலகில் 
ஜேசு பயங்கரவதியாகி கொலையாகி போய்  இன்று 2016 வருடம் கடந்து விட்டது 

அதற்கிடையில் மனித இனம் பல நூறை பார்த்துவிட்டது 
சாத்தான் வேதம் ஓதினால் .........
கடவுள் மனநோயாளிதான் !
அதில் மனிதர்கள் வியக்க என்ன இருக்கிறது ? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அநியாயத்தை செய்து உழைக்க நமக்கு ராசியில்லை என்ற மன வருத்தமும் இங்கு இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மோசடிகளைச் செய்து குறுக்குவழியில் முன்னுக்கு வருவது எல்லா சமூகத்திலும் உள்ளதுதான். அண்மையில் வேல்ஸ் பகுதியில் சேர்ந்த வெள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.co.uk/news/uk-wales-south-east-wales-35122026

பல இலட்சம் தமிழர்கள் இருக்கும் கனடா, ஐரோப்பாவில் ஒரு சிலர் மோசடி செய்து சம்பாதிப்பது உண்மையே. ஆனால் நாணயமாக இருக்கும் மிகப் பெரும்பாலானவர்களை மறந்து, கள்ள வழியில் முன்னேறுபவர்கள்தான் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்ற பிம்பத்தைக் கட்டுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2016 at 3:02 PM, கிருபன் said:

இப்படியான மோசடிகளைச் செய்து குறுக்குவழியில் முன்னுக்கு வருவது எல்லா சமூகத்திலும் உள்ளதுதான். அண்மையில் வேல்ஸ் பகுதியில் சேர்ந்த வெள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.co.uk/news/uk-wales-south-east-wales-35122026

பல இலட்சம் தமிழர்கள் இருக்கும் கனடா, ஐரோப்பாவில் ஒரு சிலர் மோசடி செய்து சம்பாதிப்பது உண்மையே. ஆனால் நாணயமாக இருக்கும் மிகப் பெரும்பாலானவர்களை மறந்து, கள்ள வழியில் முன்னேறுபவர்கள்தான் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்ற பிம்பத்தைக் கட்டுவது தவறு.

உந்த கள்வர்களை விட்டு விட்டு, கல்வியில் நம் தமிழர்கள் செய்யும் அபார வெற்றியினை பேசலாமே.

மருத்துவத் துறையில், தொழில் துறையில் சாதனை படைக்கிறார்களே.

அவை குறித்து பேச மாட்டோமா?

இன்று டோனி ப்ளையரையும், டேவிட் காமரோனையும் நம் தமிழர் குறித்து கரிசனை கொள்ள வைத்த, சிங்களவரையே வெருள வைக்கும், புலத் தமிழர் அரசியல் பலம்....

அட விடுங்கப்பா.... ஒன்று ரெண்டு பூச்சிகளும் இடையே வரும்.கண்டு கொள்ளாமல் நடந்து செல்வோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.