Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் தேசிய கீதம் பாடியதன் மூலம் தமிழீழ கீதம் பாடுவதை நிறுத்தியுள்ளோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலைமைக் காரி­யா­லயமான சிறி­கொ­த்தாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இது­தொ­டர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கே முயற்­சிக்­கின்­றனர். தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­ட­மை­யா­னது புதிய விட­ய­மல்ல. 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனா­நா­யக தலை­மையில் அன்று பாடப்­பட்­டது. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு பாடப்­பட்­டுள்­ளது. தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் வடக்கில் தமி­ழீழ கீதம் பாடப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்­றி­யாகும்.

அத்­துடன் நாட்டில் சிறு­பான்மை இனங்கள் மதிக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு கடந்த காலங்­களில் சர்­வ­தேச நாடு­களில் இருந்து வந்­துள்­ளது. தற்­போது அந்த குற்­றச்­சாட்­டுக்­களும் இல்­லாமல் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தே­சமும் எம்­மீது நம்­பிக்­கை­வைத்து வரு­கின்­றது.

மேலும் தேசிய கீதத்தை தமிழில் பாடி­யதன் மூலம் எதிர்­கா­லத்தில் அரபு மொழி­யிலும் பாடக் கேட்­பார்கள் என மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். நாட்டில் 10 வரு­டங்கள் ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ராகவும் மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் மூத்த அர­சியல் வாதி­யாகவும் இருந்த இவர் பாலர் பாட­சாலை மாணவன் போன்று கூறி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய மஹிந்த ராஜபக் ஷ, இந்த நாட்டில் சிறு­பான்மை இனத்­த­வர்கள் என்று எவரும் இல்லை. இங்கு எல்­லோரும் ஒரே மக்கள் என்று தெரி­வித்­தி­ருந்தார். இதன்­மூலம் சிறு­பான்மை மக்­களும் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்­பி­னார்கள்.

ஆனால் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அவரால் எது­வுமே செய்ய முடி­ய­வில்லை. மாறாக இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகளையே ஏற்­ப­டுத்­தினார். சிறு­பான்மை மக்கள் நிம்­ம­தி­யற்று வாழக்­கூ­டிய நிலை­மையே கடந்த ஆட்­சியில் இருந்­தது. தற்­போது ஜனா­தி­ப­தியும் பிர­தமரும் சிறு­பான்மை மக்­களை மதித்து அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்­து­வைக்­கும்­போது அதனை பொறுத்­துக்­கொள்­ள­மு­டி­யாமல் மஹிந்த ராஜபக் ஷ இன­வா­தத்தை தூண்டும் வகையில் கருத்து தெரி­வித்து வரு­கின்றார்.

அத்­துடன் இந்­தி­யாவில் கூட ஒரு மொழியில் தான் தேசிய கீதம் பாடப்­ப­டு­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சினர் தெரி­விக்­கின்­றனர். தேசிய கீதத்­துக்கு இந்­தியாவை முன்­மா­தி­ரி­யாக எடுக்கும் இவர்கள் அதி­கார பர­வ­லாக்­கத்­துக்கு ஏன் இந்­தி­யாவை முன்­மா­தி­ரி­யாக எடுப்­பதை எதிர்க்­கின்­றனர்? இவர்கள் அனை­வரும் தங்­க­ளது சுய­ந­லத்­துக்­கா­கவே செயற்­ப­டு­கி­ன்­றனர்.

68 வரு­டங்கள் பின் தள்­ளப்­பட்­டுள்ள எமது நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பொய்க்குற்றச்சா ட்டுக்களை தெரிவித்து மக்களின் வாழ்க்கையுடனும் பிள்ளைகளின் எதிர்காலத்துடனும் விளையாட வேண்டாம் என்றார்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசிய கீதத்தை தமிழில்  பாடினால் தமிழர்கள் தமிழீழ தேசிய கீதத்தை மறந்துவிடுவார்களா?

ரொம்ப மலிவாக சிந்திக்கிறார்கள்

தமிழீழதேசிய கீதம் தோன்ற காரணம் என்ன?

அது அப்படியே இருக்கும்வரை நீங்க என்ன கீதத்தையாவது எந்த மொழியிலாவது படியுங்கள்

அது தமிழர் தரப்பில் எந்த மாற்றங்களையும் உண்டுபண்ணாது

  • கருத்துக்கள உறவுகள்

ஆக தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் 1949 க்குப் பின் தமிழில் தேசிய கீதம் இசைக்க சிங்களவனை இணங்க வகை செய்திருக்குது.

1949 இற்குப் பிறகு புலிகள் இயற்றி மக்களைப் பாடவைச்ச தமிழீழ தேசிய கீதத்திற்கு உள்ள மதிப்பு.. எதிர்கட்சி தலைவர் வரிசையில் உட்கார்ந்த தமிழ் சட்டாம்பி அரசியல்வாதிகளின் அரசியலுக்கு இருக்கவில்லை என்பது சிங்களவன் என்ன வகையான அரசியலை தமிழ் மக்களிடம் எதிர்பார்க்கிறான்.. என்ன வகையான அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுப்பதை இட்டு அச்சத்துடன் அதேவேளை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை சிங்களவனுக்கு தருகுது என்பதை இது இனங்காட்டுகிறது.

சிங்களவனுக்கு தமிழீழத் தேசியக் கொடியான.. புலிக்கொடி மீதும்.. தமிழீழ தேசிய கீதம் மீதும்.. மாவீரர் தினம்.. மாவீரர் அடையாளங்கள்.. மற்றும்.. நாடு கடந்த தமிழீழ அரசு மீதும் உள்ள பயம்.. பக்தி.. எதிர்கட்சி வரிசையில் இருக்கிறவையில் ஒரு சத வீதம் கூட இல்லை. தமிழ் மக்கள் இதனை தெளிவாக விளங்கிக் கொண்டு எதனை முன்னெடுப்பது... எதனை கைவிடுவது என்பதில் மக்கள் தெளிவோடு இருக்க வேண்டும்.

மாவீரர்களின் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டவை தான்.. இன்னும் எதிரி பிச்சையாகப் போடும்.. அற்ப சொற்ப சந்தோசங்களுக்கும் காரணம். அவற்றை கைவிட்டால்.. அதுவும் கிடைக்காது. !!!!!!!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இது??

12670429_10153625368423801_2915403135105

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

அப்போ இது??

12670429_10153625368423801_2915403135105

இது நடந்தது கிளிநொச்சியில்..

ஒருவேளை கிளிநொச்சி இலங்கையில் இல்லையோ என்னமோ...

தமிழீழத்தை தமிழ்மக்கள் விட்டுவிட்டனர் என அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டது சொல்லி

சில நாட்களில் பாடசாலை மாணவர்களால் வைக்கப்பட்ட இல்லவிளையாட்டுப்போட்டியின் காட்சி இது.

பொடியளோட விளையாடக்கூடாது என்பது அவருக்குத்தெரியும்....

தமிழிழ தேசிய கீதம் இப்படி ஒன்று இருக்கா ?

நான் கேள்விப்படவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தேசிய கீதம் பாடியதை நிறுத்தி உள்ளோம் இது அமைச்சர். தமிழீழ படத்தை போட்டுள்ளார்கள் கிளிநொச்சி மாணவர்கள்.இந்த விளக்கம் தெரியவில்லை சிலருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய கீதமாகிய.. கொடிப்பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பிர்ச்சினையை எப்படித் ஒரு தேசியகீதத்தை வைத்து அரைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வென்றுகொண்டே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் ஒலித்த தமிழீழ தேசிய கீதப் பின்னணி இசை...

உது புலிப்பாட்டு ,

இனி நாட்டில் எக்காலமும் ஒலிக்காது .யாரும் விரும்பினால் ஒழிச்சு கேட்கலாம் .

தேசிய கீதம் ,தேசிய மலர் ,தேசிய பறவை 

தேசிய தலைவர் 

புலிகள் சொன்னால் சரியோ அனைவரும் ஏற்கவேண்டும் அல்லோ 

1 hour ago, nunavilan said:

தமிழில் தேசிய கீதம் பாடியதை நிறுத்தி உள்ளோம் இது அமைச்சர். தமிழீழ படத்தை போட்டுள்ளார்கள் கிளிநொச்சி மாணவர்கள்.இந்த விளக்கம் தெரியவில்லை சிலருக்கு. 

தமிழ் ஈழம் அனைத்து தமிழர்களின் விருப்பு அது புலிகளுக்கு மட்டும் ஆனதல்ல அது கூட விளங்காமல் .......

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் அதற்கு முக்கியமாக உயிரை கொடுத்து பாடுபட்டவர்கள். மிச்ச ஆட்களை பற்றி தமிழ் மக்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

பாடுபட்டு படிச்சதற்கு எல்லாம் மார்க்ஸ் கொடுக்கமாட்டார்கள் விடை சரியாக இருக்கவேண்டும் .

பாடு பட்டு படிச்சு முட்டை வாங்கின ஆட்களின் லிஸ்டில் தான் அவர்களும் அடக்கம் .

ஜனநாயக நாடுளில் காணகிடைத்தாக ஒன்று சர்வாதிகார நாடுளில் பார்க்கலாம் ,சதாம் ,கடாபி ,அசாத் இவர்களின் கட் அவுட்டுகளும் அவர்களை புகளும் செய்திகளும் தான் நிறைந்து இருக்கும் .

நானே ராஜா நானே மந்திரிதான் அவர்கள் பொலிசி அதற்குதான் உங்கள் தலைவரும் ஆசைப்பட்டார் சரிவரவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

உது புலிப்பாட்டு ,

இனி நாட்டில் எக்காலமும் ஒலிக்காது .யாரும் விரும்பினால் ஒழிச்சு கேட்கலாம் .

தேசிய கீதம் ,தேசிய மலர் ,தேசிய பறவை 

தேசிய தலைவர் 

புலிகள் சொன்னால் சரியோ அனைவரும் ஏற்கவேண்டும் அல்லோ 

புலிகள் சொல்லேல்ல.. தமிழீழத்துக்கான எல்லாம் அடிப்படைகளையும் இனங்காட்டினார்கள் அதனைக் கட்டி அமைத்தார்கள்.

எவ் எம் மைக்கில தமிழீழம் யாரும் அமைக்கலாம்.. நடைமுறையில்.. அதுவும் பூகோள நலன்கள் தானே வந்து அமையக் கூடிய சூழல் மிகுந்த ஒரு பிராந்தியத்தில்.... ஒரு ஆக்கிரமிப்பு அரச இயந்திரத்தை.. இராணுவத்தை.. வென்று அதனை அமைப்பது என்பது.. புலிகளால் தான் சாத்தியப்பட்டது. சாத்தியப்பட்ட போது தமிழீழத்துக்கான அனைத்து அடையாளங்களையும் நிறுவ புலிகள் பின்நிற்கவில்லை.

மேலும் கொடிப்பாடலை இயற்றியது.. பாடியது.. புலிப் போராளிகளே அல்ல. சாதாரண தமிழ் மக்கள். புலிகள் அதனை அங்கீகரித்து நின்றார்கள். அதுதான் புலி.. இப்பவும் பெருவாரியான தமிழ் மக்களின் இதயத்தில் வாழக் காரணம். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

ஜனநாயக நாடுளில் காணகிடைத்தாக ஒன்று சர்வாதிகார நாடுளில் பார்க்கலாம் ,சதாம் ,கடாபி ,அசாத் இவர்களின் கட் அவுட்டுகளும் அவர்களை புகளும் செய்திகளும் தான் நிறைந்து இருக்கும் .

நானே ராஜா நானே மந்திரிதான் அவர்கள் பொலிசி அதற்குதான் உங்கள் தலைவரும் ஆசைப்பட்டார் சரிவரவில்லை .

சில சில நாடுகளுக்கு சர்வாதிகாரம்தான் பொருந்தும். அது அங்கு உள்ள  மக்களின் ஒற்றுமையைப் பொறுத்தது. அவர்களை அழித்தபின் அந்த நாடுகள் சின்னாபின்னமாகி இருப்பதை நாம் இப்போ கண்கூடாகவே காண்கிறோம். தமிழினத்துக்கும் சர்வாதிகாரம்தான் பொருந்தும். ஏனென்றால் எங்களில் பலர் காசுக்கும் சுகபோகங்களுக்கும் விலைபோகும் பச்சோந்திகள், புல்லுருவிகள். 

Edited by Eppothum Thamizhan

30 minutes ago, Eppothum Thamizhan said:

சில சில நாடுகளுக்கு சர்வாதிகாரம்தான் பொருந்தும். அது அங்கு உள்ள  மக்களின் ஒற்றுமையைப் பொறுத்தது. அவர்களை அழித்தபின் அந்த நாடுகள் சின்னாபின்னமாகி இருப்பதை நாம் இப்போ கண்கூடாகவே காண்கிறோம். தமிழினத்துக்கும் சர்வாதிகாரம்தான் பொருந்தும். ஏனென்றால் எங்களில் பலர் காசுக்கும் சுகபோகங்களுக்கும் விலைபோகும் பச்சோந்திகள், புல்லுருவிகள். 

சர்வாதிகாரம் கொண்ட புலிகளின் ஆட்சியை விட்டு எதுக்கு நீங்கள் துண்டை கானம் துணிய கானம் என்று ஓடி போனீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தெனாலி said:

சர்வாதிகாரம் கொண்ட புலிகளின் ஆட்சியை விட்டு எதுக்கு நீங்கள் துண்டை கானம் துணிய கானம் என்று ஓடி போனீர்கள்?

ஐ திங் அண்ணன் 83இல் கொழும்பில் இருந்து யாழ்பாணம் ஓடியவர்களை பற்றி கதைக்கிறார் என்று ....
சாரி அப்ப நாங்கள் யாழில் தான் இருந்தோம். 

18 hours ago, arjun said:

உது புலிப்பாட்டு ,

இனி நாட்டில் எக்காலமும் ஒலிக்காது .யாரும் விரும்பினால் ஒழிச்சு கேட்கலாம் .

தேசிய கீதம் ,தேசிய மலர் ,தேசிய பறவை 

தேசிய தலைவர் 

புலிகள் சொன்னால் சரியோ அனைவரும் ஏற்கவேண்டும் அல்லோ 

உங்களுடைய புலிபாட்டை உங்கள் வசமே வைத்திருங்கள் ......

இலங்கை தேசிய கொடி 
எல்லோராலும் ஏற்கபட்டதா ???

எல்லோரும் என்றால் யார் ?

22 minutes ago, தெனாலி said:

சர்வாதிகாரம் கொண்ட புலிகளின் ஆட்சியை விட்டு எதுக்கு நீங்கள் துண்டை கானம் துணிய கானம் என்று ஓடி போனீர்கள்?

தாங்கள் ஓடியது மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பங்களையும் வெளிநாடு இழுத்தவர்கள் தான் புலிகளின் நல்லாட்சி பற்றி பேசுகின்றார்கள் .

வன்னியில் இருந்தவர்கள் வெளிநாடு வர பாஸ் எடுக்க பட்டபாடு உலகம் அறியும் .

வேஷம் போட்டு மேடையில் ஏறத்தான் இவர்கள் லாயக்கு .

39 minutes ago, Maruthankerny said:

ஐ திங் அண்ணன் 83இல் கொழும்பில் இருந்து யாழ்பாணம் ஓடியவர்களை பற்றி கதைக்கிறார் என்று ....
சாரி அப்ப நாங்கள் யாழில் தான் இருந்தோம். 

நோ நோ..நான் யாழிலும் வன்னியிலும் புலிகளின் ஆட்சியில் விட்டால் போதும் என்று அமெரிக்காவுக்கு ஓடிபோய் அங்கிருந்து தமிழருக்கு சர்வாதிகாரம் தான் நல்லது அதுவும் போக மகிந்தவின்ட சர்வாதிகாரம் இன்னும் கொஞ்ச நாள் இருந்து தமிழரை வதைச்சிருக்கலாம் அதை வைத்து நாங்கள் ஏதாவது எடுத்திருக்கலாம் என்று கவலை படுபவர்களை பற்றி தான் கதைக்கிறன். 

22 minutes ago, arjun said:

தாங்கள் ஓடியது மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பங்களையும் வெளிநாடு இழுத்தவர்கள் தான் புலிகளின் நல்லாட்சி பற்றி பேசுகின்றார்கள் .

வன்னியில் இருந்தவர்கள் வெளிநாடு வர பாஸ் எடுக்க பட்டபாடு உலகம் அறியும் .

வேஷம் போட்டு மேடையில் ஏறத்தான் இவர்கள் லாயக்கு .

இவர்களில் பலர் யூடியூப்பில ஓயாத அலைகள் விடியோ பார்த்து இன உணர்வு பெற்றவர்கள்..இவர்களிடம் இதை விட வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீல நிறம் கூடாது என்று பிரச்சாரம் செய்தால் 
பச்சை நிறம் நல்லது என்று 
நம்பி திரிக்கிறார்கள் சிலர் என்று நினைக்கிறேன்.

கடைசியில ... நீல நிறம் அறியாதவர்களுக்கு 
அது விளம்பரமாகி போய்விடுகிறது.

சாதாரண மனித அறிவு 
ஏன் ?
எதற்கு ?
எப்படி ?
என்ற கேள்விகளை தானகவே கொண்டுவிடும்.
அதலால் நீல நிறம் இன்னொரு நிறமாகி விடுகிறது.

ஆறாம் அறிவு சிலருக்கு  ஏன் சரியாக செயல்படுவதில்லை ?? 

2 minutes ago, Maruthankerny said:

எனக்கு எட்டாம் அறிவு இருக்கு அடுத்தவனுக்கு ஐந்தறிவு தான் இருக்கு என்று நினைத்தால் இப்படித்தான் தனக்கும் விளங்காமல் மற்றவனுக்கும் விளங்காமல் எழுத தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தெனாலி said:

நோ நோ..நான் யாழிலும் வன்னியிலும் புலிகளின் ஆட்சியில் விட்டால் போதும் என்று அமெரிக்காவுக்கு ஓடிபோய் அங்கிருந்து தமிழருக்கு சர்வாதிகாரம் தான் நல்லது அதுவும் போக மகிந்தவின்ட சர்வாதிகாரம் இன்னும் கொஞ்ச நாள் இருந்து தமிழரை வதைச்சிருக்கலாம் அதை வைத்து நாங்கள் ஏதாவது எடுத்திருக்கலாம் என்று கவலை படுபவர்களை பற்றி தான் கதைக்கிறன். 

இவர்களில் பலர் யூடியூப்பில ஓயாத அலைகள் விடியோ பார்த்து இன உணர்வு பெற்றவர்கள்..இவர்களிடம் இதை விட வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது. 

ஓ நீங்க என்ன பற்றி பேசுறது  ...??
 
நாங்கள் எரியிற வீட்டில் என்ன புடுங்கலாம் என்று 
புடுங்கி வாழ்பவர்கள் !

நான் சுத்த யாழ்ப்பான தமிழனின் பிள்ளை!

ஒரு ஐரோப்பிய நாட்டில் புலி அடிச்சது என்றுதான் அகதி அந்தஸ்த்து கோரினேன்.
பழைய போட்டோவும் கொடுத்து .... ஆதாரம் கொடுத்தேன்.
பூசவில் இருந்த ஐ டி யும் கொடுத்தேன் 
உடனேயே அக்சர் பண்ணி குடியுரிமை தந்தார்கள்.

அப்படியே ஒரு கல்லூரிக்கு அப்பளை பண்ணி அமெரிக்காவிற்கு பல்டி அடிச்சேன். 

அதலாதான் ....
தமிழில் தேசிய கீதம் பாட சுணக்கம் ஆனதோ ?

அல்லது 
உங்களுக்கு தனிப்பட ஏதும் குத்து வலி வருகுதா ?? 

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கு சிலபேருக்கு ஒருவிதமான வயிற்றெரிச்சல். போராடியது பிழை, வெளிநாட்டுக்கு போனது பிழை, கொத்து ரொட்டி சாப்பிட்டது பிழை. தங்களைத் தவிர, மற்றவர்கள், நாளாந்தம் கையேந்தி உண்டு, கைகட்டி, வாய்பொத்தி  அடிமை வாழ்வு வாளேலை என்கின்ற கொதி. நல்லது செய்கிறார்களாம். தங்களைப் பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்காக அவர்களுக்கு பிடித்தவர்களை இழுத்து வந்து துகிலுரிகிறார்கள். இதெல்லாம் ஆத்தாதவன் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தெனாலி said:

சர்வாதிகாரம் கொண்ட புலிகளின் ஆட்சியை விட்டு எதுக்கு நீங்கள் துண்டை கானம் துணிய கானம் என்று ஓடி போனீர்கள்?

நாங்கள் ஒன்றும் உங்களைப்போல போராட்டத்துக்கு முதலே ஓடிவந்து அசைலம் அடிச்சு டோல் காசில சொம்பறிகளா இருக்கவில்லை. போராட்டத்துக்கு ஒருவரை அனுப்பிவிட்டுத்தான் வந்தனாங்கள்.அதுவும் வேலை எடுத்துக்கொண்டுதான் வந்தனாங்கள்.
 
நீங்கள்தான் அவங்களை காலிலை விழுந்து கும்பிடோணும். இல்லாட்டி உங்கடை அறிவுக்கெல்லாம் கனடாவை நினைச்சுக்கூட பார்க்கமுடியுமே.இப்பவும் ஏதாவது ஒரு மதவிலை இருந்து சின்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கொண்டு இருந்திருப்பீர்கள்.
19 minutes ago, satan said:

 இங்கு சிலபேருக்கு ஒருவிதமான வயிற்றெரிச்சல். போராடியது பிழை, வெளிநாட்டுக்கு போனது பிழை, கொத்து ரொட்டி சாப்பிட்டது பிழை. தங்களைத் தவிர, மற்றவர்கள், நாளாந்தம் கையேந்தி உண்டு, கைகட்டி, வாய்பொத்தி  அடிமை வாழ்வு வாளேலை என்கின்ற கொதி. நல்லது செய்கிறார்களாம். தங்களைப் பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்காக அவர்களுக்கு பிடித்தவர்களை இழுத்து வந்து துகிலுரிகிறார்கள். இதெல்லாம் ஆத்தாதவன் செயல்.

புரிந்ததிற்கும் பகிர்வுக்கும் நன்றி.

இதைத்தானே அப்பு இவ்வளவு காலமா நாங்களும் சொல்லுறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.