Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் காமலீலைகளில் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கை சுவரொட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.

இந்த சுவரொட்டி விரிவுரை மண்டபங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன.

12744266_952292914853723_52975110725698612243231_952292941520387_176623523067517

http://www.newtamils.com/fullview.php?id=24549

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது,

கிஸ் அடிக்கிறதும், பக்கத்தில நெருக்கமா  ஜோடியா உட்காருரதும் காமலீலையா?

உதுக்கு நோட்டீஸ் வேற.

கம்பஸ் பெடி பெட்டயள் கொஞ்சம் முன்ன பின்ன தான், அதுக்காண்டி, இப்படியா பரிசு கெடுக்கிறது யாழ்பாணத்தின்ற பெயர? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே எங்கடையள் கண்டி.. கொழும்பென்டு.. மடியில கிடந்து புரளுதுங்க.. அப்ப அவய்ங்களும் நோட்டீஸ் ஒட்டனும் போல. இந்த விசயத்தில எங்கட படிப்பாளிகள் சுத்தமென்டு இல்லை. ஒரு சிலர் விதிவிலக்கு.. எங்களைப் போல நல்ல பிள்ளைகளும் இருந்திருக்கினம். tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மனங்களால் பிளவுபட்ட இரு இனங்களும் ஒட்டமுடியாது  என்பதற்கு படித்தவர்களே சாட்சி தருகிறார்கள்...

எங்களுக்கு எதையும் ஒழிச்சு செய்துதான் பழக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

இது சரி என்றுதான் எனக்கு படுகின்றது ....

உணர்ச்சி என்பது தூண்டுதலினால் வருவது.
யாழில் யாரும் இப்படி கைகோர்த்து காதலித்து திரிவதில்லை 

உள்ளூரில் படிப்போடு ஐக்கியமாகிதான் பல்கலைகழகம் போகிறார்கள் 
அங்கு இப்படி உணர்சிகளை தூண்டும் செயல்கள் இருப்பது 
கண்டிக்க தக்கது.

சிலர் கெட்டு போகிறார்கள் என்பதால் ...
ஒட்டுமொத்த சமூகம் கெட வேண்டும் என்று எதிர்பார்ப்பது 
அடாவடி தனம்.

சுற்றம் சூழல் 
மனிதனை பாரிய அளவில் பாதிக்கிறது 
இதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது 
கொஞ்சம் முயற்சித்தால் புரியும் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

என்னப்பா இது,

கிஸ் அடிக்கிறதும், பக்கத்தில நெருக்கமா  ஜோடியா உட்காருரதும் காமலீலையா?

உதுக்கு நோட்டீஸ் வேற.

கம்பஸ் பெடி பெட்டயள் கொஞ்சம் முன்ன பின்ன தான், அதுக்காண்டி, இப்படியா பரிசு கெடுக்கிறது யாழ்பாணத்தின்ற பெயர? :cool:

தமிழர்களின் குறுகிய புத்திக்கு இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

தமிழர்களின் குறுகிய புத்திக்கு இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

இதில் என்ன குறுகிய புத்தி இருக்கிறது ??

யாழ் பல்கலைகழகம் ஒன்றும் காமசூத்ரா பட்டபடிப்பு கழகம் இல்லையே ?

மேலை நாட்டில் பிகினியோடு திரிகிறார்கள் என்பதால் 
எமது குளக்கரையிலும் திரிவதுதான் பெரும் புத்தியா ?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, ஏன் சிங்களவர்களுக்கு மாத்திரம் இந்த சுவரொட்டி, யாழ் தமிழ் மாணவர்கள் எல்லோரும் என்ன உத்தம புத்திரர்களா? பல்கலை கழக வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம். எல்லாவற்றையும் இனவாத / பிரதேசவாத கண்ணேடு பார்க்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

இதில் என்ன குறுகிய புத்தி இருக்கிறது ??

யாழ் பல்கலைகழகம் ஒன்றும் காமசூத்ரா பட்டபடிப்பு கழகம் இல்லையே ?

மேலை நாட்டில் பிகினியோடு திரிகிறார்கள் என்பதால் 
எமது குளக்கரையிலும் திரிவதுதான் பெரும் புத்தியா ?? 

யாழ் மணிக்கூட்டு வீதி.. யாழ் நாவலர் வீதி.. யாழ் பிரவுன் வீதி.... யாழ் அரசடி வீதி.. யாழ் கந்தர்மடம் வீதி.. யாழ் குமாரசாமி வீதி.. இங்கினை எல்லாம் ஒவ்வொரு சி சி ரி வியை பூட்டி வைச்சிட்டுப் போட்டுப் பாருங்க.. நம்ம யாழ் பல்கலைக்கழகக் கண்மணிகள் எவ்வளவு பக்குவமா.. காதல் லீலை பண்ணுகினம் என்று தெரியும். யாழ் நகரை அண்டி இவர்களால் உருவாக்கப்பட்ட பல "லவ் லேன்" களே இருந்துள்ளன. இதில் விடுதலைப்புலிகள் காலத்தில் கூட இந்தச் சேட்டை தீர்ந்ததில்லை. ஆனால் அடங்கி இருந்தது என்பது என்னவோ உண்மை.

சிங்களவன் எங்கட மண்ணுக்கு வந்து காதல் லீலை பண்ணுறான் என்றால்.. அதற்கு அவனின் ஆக்கிரமிப்பு படை நிற்பது முக்கிய காரணம். அதனை மறுப்பதற்கில்லை. எங்கட இத்தனை ஆயிரம் மாணவர்கள் படிக்க வடக்கில் ஒன்று.. கிழக்கில் ஒன்று இரண்டு பல்கலைக்கழகங்கள் தான். தெற்கில் மேற்கில் அப்படியல்ல. மிச்சம் 13... 14 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் என்ன மண்ணாங்கட்டிக்கு சிங்களவன் இங்க வரணும் என்ற கேள்வி இருக்குது. எங்கடை மாணவர்கள் கண்டிக்கும் மொரட்டுவவுக்கும் கொழும்புக்கும் போக வேண்டி வந்தது.. இங்க பாடம் படிக்க வழியில்லை என்பதாலும்.. விசேட தகமைகள் காரணமாகவும்.

ஆனால்.. சிங்களவனுக்கு என்ன தேவை இருக்கு. அதையே கண்டிக்க வக்கில்லாத யாழ் பல்கலைக்கழக நிர்வாகம்.. இதை கண்டிச்சு என்னத்தை வெட்டிப் புடுங்கிடுவினம்.

மேலும்.. இங்க இருந்து அங்க போற எம்மவர்கள் எப்படி நடந்துக்கினம்.. ஏதோ கண்டதை காணாதது போல. இவர்களின் நடத்தை பார்த்திட்டு அங்குள்ள சிங்களவன் கேட்பது.. புலிகள் லவ் பண்ணக் கூடவா தடை போட்டார்கள். அவ்வளவு மோசமான ஆட்களா அவர்கள் என்று.

ஆக.. நாங்கள் எத்தனையையோ எம் சார்ப்பில் திருத்த வேண்டி இருக்கு. அதைச் செய்யாமல்.. சிங்களவனை கூப்பிட்டு நடுவீட்டு திண்ணையில குந்த வைச்சிட்டு.. அப்படிச் செய்யாத இப்படிச் செய்யாத என்றால்... விளைவு இதுதான்..

இதையும் படியுங்க...

SL Police entices Sinhala students to confront Tamil students at University of Jaffna

[Thu, 11 Feb 2016, 23:20 GMT]

Jaffna University Student Union representatives told TamilNet on Thursday that the Sinhala Police of the occupying Colombo was attempting to create confrontations between Tamil and Sinhala students at the university with the motive of using the opportunity to target and suppress the politicised sections of Tamil students at the University of Jaffna. A group of Sinhala students from South intervened in an on-going clash involving two groups of BCom Tamil students. They were backing one of the groups. Using the episode, Sinhala policemen entered the campus and ‘advised’ three Sinhala students to get admitted to Jaffna hospital. The SL police was now trying to twist it as a Tamil - Sinhala ethnic clash and to target Tamil activists using among the students, the representatives of the JUSU told TamilNet.

http://www.tamilnet.com/

இதெல்லாம்.. சிங்களக் கூலியாக மாறியுள்ள.. யாழ் பல்கலைக்கழக நிர்வாகமே.. சில விடயங்களை மறைக்க இன்னொன்றை முன்னிறுத்திறதா தெரியுது. பல்கலைக்கழகங்களில் தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களை தண்டிக்க கேள்வி கேட்க பல்கலைக்கழக ஒழுங்கு விதிகள் இருக்குத்தானே. அப்படி இருக்க.. இதென்ன நோட்டீசு...இது என்னத்துக்கு அவசியம்.. அப்படின்னா.. பல்கலைக்கழக ஒழுங்கு விதியை அமுல்படுத்த முடியாத நிலையில் சிங்கள மாணவர்களும் சிங்கள இராணுவமும் ஆட்சியும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வைச்சிருக்கா. அப்படின்னா.. அதை பகிரங்கமா ஊடகங்களைக் கூட்டிச் சொல்லுங்க. மக்களும் வெளி உலகும் உணர்ந்து கொள்ளட்டும்.. அங்க என்ன நடக்குது என்று. ஏன் மூடி மறைக்கனும்...??!:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

ஐயா, ஏன் சிங்களவர்களுக்கு மாத்திரம் இந்த சுவரொட்டி, யாழ் தமிழ் மாணவர்கள் எல்லோரும் என்ன உத்தம புத்திரர்களா? பல்கலை கழக வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம். எல்லாவற்றையும் இனவாத / பிரதேசவாத கண்ணேடு பார்க்காதீர்கள்.

சுவரொட்டியில் தமிழர் சிங்களவர் என்று பிரிவினை இல்லையே ...?
யார் செய்தார்களோ ?
அவர்களை இனி செய்யாதீர்கள் என்கிறார்கள் ....

உங்களோடு வாதம் பிரதி வாதம் செய்வது எனது நோக்கம் அல்ல 

நாம் நம்புகிறேன் இது சரி என 
பிழை என்போரிடம் ..... என்ன பிழை என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

பள்ளி வளாகத்திற்குள் ...
இது தேவை இல்லாத விடயம்.

அது தேவை என்பவர்கள் 
சினிமாவோ  ஏதும் கச முசா பூங்காவோ போகாலாமே ? 

56 minutes ago, nedukkalapoovan said:

யாழ் மணிக்கூட்டு வீதி.. யாழ் நாவலர் வீதி.. யாழ் பிரவுன் வீதி.... யாழ் அரசடி வீதி.. யாழ் கந்தர்மடம் வீதி.. யாழ் குமாரசாமி வீதி.. இங்கினை எல்லாம் ஒவ்வொரு சி சி ரி வியை பூட்டி வைச்சிட்டுப் போட்டுப் பாருங்க.. நம்ம யாழ் பல்கலைக்கழகக் கண்மணிகள் எவ்வளவு பக்குவமா.. காதல் லீலை பண்ணுகினம் என்று தெரியும். யாழ் நகரை அண்டி இவர்களால் உருவாக்கப்பட்ட பல "லவ் லேன்" களே இருந்துள்ளன. இதில் விடுதலைப்புலிகள் காலத்தில் கூட இந்தச் சேட்டை தீர்ந்ததில்லை. ஆனால் அடங்கி இருந்தது என்பது என்னவோ உண்மை.

சிங்களவன் எங்கட மண்ணுக்கு வந்து காதல் லீலை பண்ணுறான் என்றால்.. அதற்கு அவனின் ஆக்கிரமிப்பு படை நிற்பது முக்கிய காரணம். அதனை மறுப்பதற்கில்லை. எங்கட இத்தனை ஆயிரம் மாணவர்கள் படிக்க வடக்கில் ஒன்று.. கிழக்கில் ஒன்று இரண்டு பல்கலைக்கழகங்கள் தான். தெற்கில் மேற்கில் அப்படியல்ல. மிச்சம் 13... 14 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் என்ன மண்ணாங்கட்டிக்கு சிங்களவன் இங்க வரணும் என்ற கேள்வி இருக்குது. எங்கடை மாணவர்கள் கண்டிக்கும் மொரட்டுவவுக்கும் கொழும்புக்கும் போக வேண்டி வந்தது.. இங்க பாடம் படிக்க வழியில்லை என்பதாலும்.. விசேட தகமைகள் காரணமாகவும்.

ஆனால்.. சிங்களவனுக்கு என்ன தேவை இருக்கு. அதையே கண்டிக்க வக்கில்லாத யாழ் பல்கலைக்கழக நிர்வாகம்.. இதை கண்டிச்சு என்னத்தை வெட்டிப் புடுங்கிடுவினம்.

மேலும்.. இங்க இருந்து அங்க போற எம்மவர்கள் எப்படி நடந்துக்கினம்.. ஏதோ கண்டதை காணாதது போல. இவர்களின் நடத்தை பார்த்திட்டு அங்குள்ள சிங்களவன் கேட்பது.. புலிகள் லவ் பண்ணக் கூடவா தடை போட்டார்கள். அவ்வளவு மோசமான ஆட்களா அவர்கள் என்று.

ஆக.. நாங்கள் எத்தனையையோ எம் சார்ப்பில் திருத்த வேண்டி இருக்கு. அதைச் செய்யாமல்.. சிங்களவனை கூப்பிட்டு நடுவீட்டு திண்ணையில குந்த வைச்சிட்டு.. அப்படிச் செய்யாத இப்படிச் செய்யாத என்றால்... விளைவு இதுதான்..

இதையும் படியுங்க...

SL Police entices Sinhala students to confront Tamil students at University of Jaffna

[Thu, 11 Feb 2016, 23:20 GMT]

Jaffna University Student Union representatives told TamilNet on Thursday that the Sinhala Police of the occupying Colombo was attempting to create confrontations between Tamil and Sinhala students at the university with the motive of using the opportunity to target and suppress the politicised sections of Tamil students at the University of Jaffna. A group of Sinhala students from South intervened in an on-going clash involving two groups of BCom Tamil students. They were backing one of the groups. Using the episode, Sinhala policemen entered the campus and ‘advised’ three Sinhala students to get admitted to Jaffna hospital. The SL police was now trying to twist it as a Tamil - Sinhala ethnic clash and to target Tamil activists using among the students, the representatives of the JUSU told TamilNet.

http://www.tamilnet.com/

இதெல்லாம்.. சிங்களக் கூலியாக மாறியுள்ள.. யாழ் பல்கலைக்கழக நிர்வாகமே.. சில விடயங்களை மறைக்க இன்னொன்றை முன்னிறுத்திறதா தெரியுது. பல்கலைக்கழகங்களில் தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களை தண்டிக்க கேள்வி கேட்க பல்கலைக்கழக ஒழுங்கு விதிகள் இருக்குத்தானே. அப்படி இருக்க.. இதென்ன நோட்டீசு...இது என்னத்துக்கு அவசியம்.. அப்படின்னா.. பல்கலைக்கழக ஒழுங்கு விதியை அமுல்படுத்த முடியாத நிலையில் சிங்கள மாணவர்களும் சிங்கள இராணுவமும் ஆட்சியும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வைச்சிருக்கா. அப்படின்னா.. அதை பகிரங்கமா ஊடகங்களைக் கூட்டிச் சொல்லுங்க. மக்களும் வெளி உலகும் உணர்ந்து கொள்ளட்டும்.. அங்க என்ன நடக்குது என்று. ஏன் மூடி மறைக்கனும்...??!:rolleyes:

உங்கள் வாதம் நியமானதாக ஒரு பக்கம் இருந்தாலும்.

யாழ் கம்பஸ் வளாகத்திற்குள் இது வேண்டாம் என்பது சரி என்றுதான் நான் சொல்கிறேன்.

யாழில் நாம செய்யாத என்னத்தை 
இவங்கள் புதுசா புடுங்க போறாங்கள் ...?

அது வேறு ...
ஆனா இந்த காதல் வேலை லீலை மற்ற மாணவர்களின் 
உணர்வை தூண்டி படிப்பை கெடுக்கும் என்பது திண்ணம்.

அதை ஏன் ஆதரிக்க வேண்டும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இது சரி என்றுதான் எனக்கு படுகின்றது ....

உணர்ச்சி என்பது தூண்டுதலினால் வருவது.
யாழில் யாரும் இப்படி கைகோர்த்து காதலித்து திரிவதில்லை 

உள்ளூரில் படிப்போடு ஐக்கியமாகிதான் பல்கலைகழகம் போகிறார்கள் 
அங்கு இப்படி உணர்சிகளை தூண்டும் செயல்கள் இருப்பது 
கண்டிக்க தக்கது.

சிலர் கெட்டு போகிறார்கள் என்பதால் ...
ஒட்டுமொத்த சமூகம் கெட வேண்டும் என்று எதிர்பார்ப்பது 
அடாவடி தனம்.

சுற்றம் சூழல் 
மனிதனை பாரிய அளவில் பாதிக்கிறது 
இதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது 
கொஞ்சம் முயற்சித்தால் புரியும் !

மருதர்,

பேராதனை பல்கலைகழகம் சூழலில் இந்த விசயம் குறித்து அங்கின படிச்ச ஆக்களை பிடிச்சுக் கேட்டுப் பாருங்கோ. கொடுபுக்கிளால சிரிப்பினம்.

அங்க என்ன நோட்டிசா ஒட்டி இருக்கினம்? :love:

இப்படியான ஓர் சுவரொட்டி கனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில் அனுமதிக்கப்படுமா என்று நினைத்துப்பார்த்தேன், இதுவரை கண்டதில்லை. மற்றவர்களின் கல்வி கற்றலிற்கு அசெளகரியம் கொடுக்காதவகையில் காதலை பரிமாறுவதில் தவறுள்ளதாக தெரியவில்லை. Romance என்பதன் தமிழாக்கம் காமலீலையா? :rolleyes:

1 hour ago, Maruthankerny said:

யாழ் கம்பஸ் வளாகத்திற்குள் இது வேண்டாம் என்பது சரி என்றுதான் நான் சொல்கிறேன்.

யாழில் நாம செய்யாத என்னத்தை 
இவங்கள் புதுசா புடுங்க போறாங்கள் ...?

அது வேறு ...
ஆனா இந்த காதல் வேலை லீலை மற்ற மாணவர்களின் 
உணர்வை தூண்டி படிப்பை கெடுக்கும் என்பது திண்ணம்.

அதை ஏன் ஆதரிக்க வேண்டும் ? 

யாழ் பல்கலை வளாகத்திற்குள் காதல் லீலைகள் 70ம் 80ம் ஆண்டுகளில் நடைபெறவில்லையா? இப்போதுள்ள யாழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கேட்டால் தம்காலத்து நிலமையை சொல்வார்களே! காதலில் ஈடுபட்டவர்களின் படிப்பு, எதிர்காலம் எல்லாம் தொலைந்துவிட்டதா? அல்லது காதலில் ஈடுபடாமல் நல்லபிள்ளையாக இருந்தவர்கள் எல்லாம் படிப்பில் சிறந்தும் வாழ்க்கையில் மேலோங்கியும் உள்ளார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

மருதர்,

பேராதனை பல்கலைகழகம் சூழலில் இந்த விசயம் குறித்து அங்கின படிச்ச ஆக்களை பிடிச்சுக் கேட்டுப் பாருங்கோ. கொடுபுக்கிளால சிரிப்பினம்.

அங்க என்ன நோட்டிசா ஒட்டி இருக்கினம்? :love:

உங்கள் கருத்தை வசிக்க எனக்கு ஒரு டிவி ப்ரோக்ராம் தான் நினைவு வருது 

விஜய் டிவியில் ஒருவர் வெளுத்து விளாசினார் ...

தான் நெதர்லாந்தில் ஒரு செக்ஸ் எக்ஸ்போ விற்கு போனதாம்.
அங்கு தனது பாஸ்போட்டை பார்த்துவிட்டு ..
நீ காமசூத்ரா எழுதிய இடத்தில் இருந்து வந்திருக்கிறாய் என்று 
தனக்கு டிக்கெட் இல்லாமலேயே உள்ளுக்கு விட்டார்களாம்.
 
அதனால் தமிழ் நாட்டில் எல்லோரும் கோவில் தெரு வீதிகளிலும் 
காமத்தில் ஈடுபடலாம் என்றார்.
நாம் காம சூத்திரம் எழுதிய நாட்டில் வாழ்பவர்கள் என்றார்.

சூழல் சூற்றாடல் பற்றியதுதான் எனது கருத்து.
இங்கு நான் படித்த போது எடுத்த படங்கள் இருக்கு 
இப்படி எல்லாம் இருந்தோமா என்று நானே கேட்குமாதிரி இருக்கு.
அப்ப அப்படி எல்லா இடமும் இருக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கு????

  • கருத்துக்கள உறவுகள்

பலகலைக்கழக வாழ்வு ஒருவரது வாழ்க்கையைப் பண்படுத்துகின்றது !

எனது நண்பர்கள் பலர் (தமிழர்கள் உட்பட) அந்தக் காலத்துக் காதல் பறவைகள் தான்!

காமம் வேறு.... காதல் என்பது வேறு..!

இவ்வாறு அறிவித்தல்கள் போட்டுத் தமிழினம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது!

வள்ளுவன் இன்றிருந்தால்...மருந்து குடித்து மரணித்திருப்பான்!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கலைஞன் said:

இப்படியான ஓர் சுவரொட்டி கனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில் அனுமதிக்கப்படுமா என்று நினைத்துப்பார்த்தேன், இதுவரை கண்டதில்லை. மற்றவர்களின் கல்வி கற்றலிற்கு அசெளகரியம் கொடுக்காதவகையில் காதலை பரிமாறுவதில் தவறுள்ளதாக தெரியவில்லை. Romance என்பதன் தமிழாக்கம் காமலீலையா? :rolleyes:

யாழ் பல்கலை வளாகத்திற்குள் காதல் லீலைகள் 70ம் 80ம் ஆண்டுகளில் நடைபெறவில்லையா? இப்போதுள்ள யாழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கேட்டால் தம்காலத்து நிலமையை சொல்வார்களே! காதலில் ஈடுபட்டவர்களின் படிப்பு, எதிர்காலம் எல்லாம் தொலைந்துவிட்டதா? அல்லது காதலில் ஈடுபடாமல் நல்லபிள்ளையாக இருந்தவர்கள் எல்லாம் படிப்பில் சிறந்தும் வாழ்க்கையில் மேலோங்கியும் உள்ளார்களா? 

100 வருடம் முன்பு யாழில் பெண்கள் மேல் சட்டை இல்லாது திரியவில்லையா ??

முனேற்றம் 
சட்டம் 
விதிமுறைகள் 
என்பன காலத்தின் தேவையால் நன்மை கருதி பிறப்பவை.
எப்படி இருந்தோம்? என்பது   
எங்கு போக வேண்டும் ? என்பதை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்.

அதிலும் கீழாக இறங்கலாம் என்பதற்கு உதரணமாக இருக்க கூடாது.

யாழில் நான் வளர்ந்த சூழலில் யாரும் காதலர்கள் 
கைகோர்த்து கொஞ்சி ரோமன்ஸ் பண்ணி திரிந்ததை காணவில்லை 
அதனால் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை.
(காதல் என்பது பருவ வயது உணர்வாக இருந்து கொண்டது)

கொழும்புக்கு வந்தேன் 
எனக்கும் அந்த நோய் பற்றி கொண்டது 

இது எனக்கு மட்டுமல்ல ...
இது மிகவும் சாதாரண விடயம் 
என்று சைகொலோஜி படிக்கும்போது 
பின்பு படிக்க நேர்ந்தது.

சுற்றமும் சூழலும் ஒரு மனிதனை பெருதும் பாதிக்கிறது.
அப்படி இருக்கும்போது ...
படிக்கும் இடத்தை படிப்பதற்கு ஏற்றால்போல் அமைப்பதில்
என்ன பெரிய குற்றம் இருக்கிறது ?? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

தமிழர்களின் குறுகிய புத்திக்கு இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

தமிழர்களோடு தமிழர்போலவே வாழ்ந்து தமிழினத்திற்கு குழிபறிப்பவர்களும் நிறையவே உள்ளதை ஈழவிடுதலைப்போராட்டம் துல்லியமாகக் காட்டித்தந்துள்ளது. இந்நிலையில் இவர்களைப் போன்றவர்களை இனம்காணுவதை விட்டு ஒட்டுமொத்தத் தமிழரையும் இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.  
 
12 minutes ago, புங்கையூரன் said:

பலகலைக்கழக வாழ்வு ஒருவரது வாழ்க்கையைப் பண்படுத்துகின்றது !

எனது நண்பர்கள் பலர் (தமிழர்கள் உட்பட) அந்தக் காலத்துக் காதல் பறவைகள் தான்!

காமம் வேறு.... காதல் என்பது வேறு..!

இவ்வாறு அறிவித்தல்கள் போட்டுத் தமிழினம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது!

வள்ளுவன் இன்றிருந்தால்...மருந்து குடித்து மரணித்திருப்பான்!

இருந்த பச்சையை போட்டு முடித்துவிட்டேன்

காதல் என்பது மனிதரின் மனத்தில் இருந்து எழும் ஒரு உணர்வு. இது நேர்சரியில் வந்தாலென்ன, யூனியில் வந்தாலென்ன. இது கேவலமில்லை, எமது கலாச்சாரம் காலம் காலமாக காதல், காமம் மனித வாழ்க்கையுடன் ஒன்றிய ஒரு விடயமாகவே கருதியது. படிக்க வந்த இடத்தில் காதலா? என்று கேட்பவர்கள் ஏன் போராட வந்தவர்களிற்கு காதல் என்று கேட்கவில்லை. காமமா என்பவர்கள் எப்படி இலங்கை தீப்பிடித்து எரிந்த போது தலைவர் மூன்று பிள்ளைகளைப் பெற்றார்கள் என்பதுபற்றியும் தெளிவில்லை.

உபதேசம் ஊரவனுக்கு மட்டுமே, உனக்கில்லைடா குஞ்சுகளா - என்ஜாய்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

பலகலைக்கழக வாழ்வு ஒருவரது வாழ்க்கையைப் பண்படுத்துகின்றது !

எனது நண்பர்கள் பலர் (தமிழர்கள் உட்பட) அந்தக் காலத்துக் காதல் பறவைகள் தான்!

காமம் வேறு.... காதல் என்பது வேறு..!

இவ்வாறு அறிவித்தல்கள் போட்டுத் தமிழினம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது!

வள்ளுவன் இன்றிருந்தால்...மருந்து குடித்து மரணித்திருப்பான்!

எதுவும் வரம்பு மீறி செல்லும்போதுதான் 
உலகில் விதிமுறைகள் பிறக்கின்றன 

காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு 
சட்டம் 
போலிஸ் 
எல்லாம் இருக்கவில்லை 

அவனே நாட்டுக்குள் வந்த பின்பு 
அவனே எல்லாவற்றையும் உருவாக்கினான்.

இப்போ யாழில் கம்பஸில் இருப்பவர்கள் யாரும் காதலிக்க கூடாது 
என்று சொன்ன மாதிரி திரியை மாற்றியாச்சு ....
இனி என்ன குறை ?
மற்ற கூட்டமும் தரை இறங்கி விட்டது 
இனி யாழில் மக்கள் காதலாகி கசிய வேண்டியதுதான்.

ஒரு ஒவ்வாமை தோன்றும்போது 
அதை விதிமுறைகள் மூலம் மனிதன் கடந்து போகிறான் 
இது உலகில் எல்லா இடமும் நிகழும் சாதாரண விடயம்.

காதலை பற்றி இதில் காருதாட ஒன்றுமில்லை.

கம்பசை படிக்கும் சூழ்நிலைக்கு உகந்ததாக மாற்றுவது ??
காதலர் பூங்காவக மாற்றுவது ?

இரண்டிற்கும் இடைபட்ட இடத்தில் நாம் 
விவாதிக்க முடியும்.

காதலர்  பூங்காவாக மாற்றுவது என்றால் ?
எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை 

ஏன் மாற்றவேண்டும் ?
என்று அறிய விரும்புகிறேன் என்று ஏற்கனவே இங்கு மேலே நான் எழுதி இருக்கிறேன்.

கம்பஸில் காதலர்கள் உரசி திரிவது 
வகுப்பறையில் கொஞ்சி குலாவுவது 
எப்படி ஆரோக்கியபடும் ??

என்று அறிய விரும்புகிறேன். 

5 minutes ago, Maruthankerny said:

எதுவும் வரம்பு மீறி செல்லும்போதுதான் 
உலகில் விதிமுறைகள் பிறக்கின்றன 

வரம்பு என்றால் என்ன?
அது யாரால் ஏன் உருவாக்கப்படுகிறது?

பிளீஸ் கொஞ்சம் புரியவையுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

உங்கள் கருத்தை வசிக்க எனக்கு ஒரு டிவி ப்ரோக்ராம் தான் நினைவு வருது 

விஜய் டிவியில் ஒருவர் வெளுத்து விளாசினார் ...

தான் நெதர்லாந்தில் ஒரு செக்ஸ் எக்ஸ்போ விற்கு போனதாம்.
அங்கு தனது பாஸ்போட்டை பார்த்துவிட்டு ..
நீ காமசூத்ரா எழுதிய இடத்தில் இருந்து வந்திருக்கிறாய் என்று 
தனக்கு டிக்கெட் இல்லாமலேயே உள்ளுக்கு விட்டார்களாம்.
 
அதனால் தமிழ் நாட்டில் எல்லோரும் கோவில் தெரு வீதிகளிலும் 
காமத்தில் ஈடுபடலாம் என்றார்.
நாம் காம சூத்திரம் எழுதிய நாட்டில் வாழ்பவர்கள் என்றார்.

சூழல் சூற்றாடல் பற்றியதுதான் எனது கருத்து.
இங்கு நான் படித்த போது எடுத்த படங்கள் இருக்கு 
இப்படி எல்லாம் இருந்தோமா என்று நானே கேட்குமாதிரி இருக்கு.
அப்ப அப்படி எல்லா இடமும் இருக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கு????

காமசூத்திரா எழுதியது இந்தியா அல்ல. இந்திய துணைக் கண்டத்தில் வட பகுதியில் இருந்த ஒரு ராஜ்யம். 

இந்தியா, பிரிட்டிஷ் காரன் உருவாகியது. விஜய் டிவி தமிழர் இது புரியாமல், தமிழரை,இந்தியாவினுள் உள்வாங்கி, காம சூத்திரத்துக்கும் தமிழனுக்கும் முடிச்சுப் போடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

எதுவும் வரம்பு மீறி செல்லும்போதுதான் 
உலகில் விதிமுறைகள் பிறக்கின்றன 

காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு 
சட்டம் 
போலிஸ் 
எல்லாம் இருக்கவில்லை 

அவனே நாட்டுக்குள் வந்த பின்பு 
அவனே எல்லாவற்றையும் உருவாக்கினான்.

இப்போ யாழில் கம்பஸில் இருப்பவர்கள் யாரும் காதலிக்க கூடாது 
என்று சொன்ன மாதிரி திரியை மாற்றியாச்சு ....
இனி என்ன குறை ?
மற்ற கூட்டமும் தரை இறங்கி விட்டது 
இனி யாழில் மக்கள் காதலாகி கசிய வேண்டியதுதான்.

ஒரு ஒவ்வாமை தோன்றும்போது 
அதை விதிமுறைகள் மூலம் மனிதன் கடந்து போகிறான் 
இது உலகில் எல்லா இடமும் நிகழும் சாதாரண விடயம்.

காதலை பற்றி இதில் காருதாட ஒன்றுமில்லை.

கம்பசை படிக்கும் சூழ்நிலைக்கு உகந்ததாக மாற்றுவது ??
காதலர் பூங்காவக மாற்றுவது ?

இரண்டிற்கும் இடைபட்ட இடத்தில் நாம் 
விவாதிக்க முடியும்.

காதலர்  பூங்காவாக மாற்றுவது என்றால் ?
எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை 

ஏன் மாற்றவேண்டும் ?
என்று அறிய விரும்புகிறேன் என்று ஏற்கனவே இங்கு மேலே நான் எழுதி இருக்கிறேன்.

கம்பஸில் காதலர்கள் உரசி திரிவது 
வகுப்பறையில் கொஞ்சி குலாவுவது 
எப்படி ஆரோக்கியபடும் ??

என்று அறிய விரும்புகிறேன். 

மருது, எதையும் கட்டுப்படுத்த முனையும் போது தான்... எதிர்ப்புகள் கிளம்புகின்றன!

பேசாமல்.. சுவர்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டாமல்.. பெரிது படுத்தாமல்.. சம்பந்தப் பட்டவர்களைத் தனியாக அழைத்து அறிவுறுத்தியிருக்கலாம்! விஷயம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கும்! சம்பந்தப் பட்ட மாணவர்கள் அனைவரும் நிச்சயமாகப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள்! அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கும் தகைமை உள்ளவர்கள்! அது தனி மனித சுதந்திரம்! இவற்றில் தலையிட நாங்கள் யார்? கலாச்சாரக் காவலர்களாக எம்மை நாமே நியமித்துக் கொள்கிறோம்! நீங்கள் கருதுவது போல..கட்டிப்பிடித்தல்களோ... உறவுகளோ.. விரிவுரைத் தியேட்டர்களில் ஏற்பட்டிருக்காது! அவ்வாறு நடந்திருந்தால், சம்பந்தப் பட்டவர்களை விரிவுரை மண்டபத்திலிருந்து.. அல்லது பல்கலைக் கழகத்திலிருந்தே வெளியேற்றும் அதிகாரம்... விரிவுரையாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இருக்கின்றது!

தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு நல்ல உதாரணம்! பக்கத்தில் இருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் படம் பாக்கும் உங்கள் கவனம் சிதறுகின்றது என்று வைத்துக் கொள்வோம்! என்ன செய்வீர்கள்? துண்டுப் பிரசுரம் ஓட்டுவீர்களா? வேறு தூரத்தில் உள்ள இருக்கைகளில் போய் இருப்பீர்களா?

காதலிப்பவர்கள் எல்லாம் காவாலிகள் என்பதை எமது வளர்ப்பு முறை எம்மில் ஆழமாகப் புதைத்து விட்டது! அதனால் தான் எமக்கு இவ்வாறான செயல்கள் ஆத்திரமூட்டுகின்றன என நினைக்கிறேன்!இந்த மாதிரி நம்பிக்கைகளால் எந்தனை தற்கொலைகள்...ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு எமது கிணறுகளும், வேப்பமரத்துக் கொப்புகளும், தண்டவாளங்களும், சாட்சி கூறும்! 

கதவுகளை நாம் இறுக்க மூடுவதால் தான்.. எத்தனையோ பெண்கள்.. விலை கொடுத்து மணமகனை வாங்கவியலாதவர்கள் பெருமூச்சுக்களின் கொதிப்பில்.. தங்கள் இளமையைத் தொலைத்து விடுகின்றார்கள்!

இது எனது கருத்து மட்டுமே மருது!

நிச்சயமாக் இன்னுமொரு பத்து வருடங்களில் உங்கள் கருத்தாகவும் இது நிச்சயம் இருக்கும் என்பது எனது அனுமானம்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

காமசூத்திரா எழுதியது இந்தியா அல்ல. இந்திய துணைக் கண்டத்தில் வட பகுதியில் இருந்த ஒரு ராஜ்யம். 

இந்தியா, பிரிட்டிஷ் காரன் உருவாகியது. விஜய் டிவி தமிழர் இது புரியாமல், தமிழரை,இந்தியாவினுள் உள்வாங்கி, காம சூத்திரத்துக்கும் தமிழனுக்கும் முடிச்சுப் போடுகிறார். 

துணை கண்டம் இணை கண்டம் எல்லாம் அப்போ அப்படிதான் இருந்தது 
வள்ளுவர் காமத்துப்பால் வடிக்கவில்லையா ?
எமது கோவில்களில் எல்லாம் காமலீலை சம்மந்தமான 
சிற்பம் இல்லையா ??

4 minutes ago, புங்கையூரன் said:

மருது, எதையும் கட்டுப்படுத்த முனையும் போது தான்... எதிர்ப்புகள் கிளம்புகின்றன!

பேசாமல்.. சுவர்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டாமல்.. பெரிது படுத்தாமல்.. சம்பந்தப் பட்டவர்களைத் தனியாக அழைத்து அறிவுறுத்தியிருக்கலாம்! விஷயம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கும்! சம்பந்தப் பட்ட மாணவர்கள் அனைவரும் நிச்சயமாகப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள்! அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கும் தகைமை உள்ளவர்கள்! அது தனி மனித சுதந்திரம்! இவற்றில் தலையிட நாங்கள் யார்? கலாச்சாரக் காவலர்களாக எம்மை நாமே நியமித்துக் கொள்கிறோம்! நீங்கள் கருதுவது போல..கட்டிப்பிடித்தல்களோ... உறவுகளோ.. விரிவுரைத் தியேட்டர்களில் ஏற்பட்டிருக்காது! அவ்வாறு நடந்திருந்தால், சம்பந்தப் பட்டவர்களை விரிவுரை மண்டபத்திலிருந்து.. அல்லது பல்கலை கழகத்திலிருந்தே வெளியேற்றும் அதிகாரம்... விரிவுரையாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இருக்கின்றது!

தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு நல்ல உதாரணம்! பக்கத்தில் இருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் படம் பாக்கும் உங்கள் கவனம் சிதறுகின்றது என்று வைத்துக் கொள்வோம்! என்ன செய்வீர்கள்? துண்டுப் பிரசுரம் ஓட்டுவீர்களா? வேறு தூரத்தில் உள்ள இருக்கைகளில் போய் இருப்பீர்களா?

காதலிப்பவர்கள் எல்லாம் காவாலிகள் என்பதை எமது வளர்ப்பு முறை எம்மில் ஆழமாகப் புதைத்து விட்டது! அதனால் தான் எமக்கு இவ்வாறான செயல்கள் ஆத்திரமூட்டுகின்றன என நினைக்கிறேன்!இந்த மாதிரி நம்பிக்கைகளால் எந்தனை தற்கொலைகள்...ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு எமது கிணறுகளும், வேப்பமரத்துக் கொப்புகளும், தண்டவாளங்களும், சாட்சி கூறும்! 

கதவுகளை நாம் இருக்க மூடுவதால் தான்.. எத்தனையோ பெண்கள்.. விலை கொடுத்து மணமகனை வாங்கவியலாதவர்கள் பெருமூச்சுக்களின் கொதிப்பில்.. தங்கள் இளமையைத் தொலைத்து விடுகின்றார்கள்!

இது ஆனது கருத்து மட்டுமே மருது!

நிச்சயமாக் இன்னுமொரு பத்து வருடங்களில் உங்கள் கருத்தாகவும் இது நிச்சயம் இருக்கும் என்பது எனது அனுமானம்!

எனது தனிபட்ட எண்ணமும் கருத்தும் வேறானது 

விரிவுரை மண்டபத்தில் 
பல முறை ஈட கூடாக இருந்திருக்கிறார்கள் 

மாணவர்கள் பலமுறை  முறைப்பாடு செய்திருக்கிறார்கள் 

நிர்வாகம் பல முறை உரியவர்களுடன் பேசி இருக்கிறார்கள்.

இவை எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளாக இருப்பதால்.
அதை கம்பஸ் வளாக எழுதபட்ட பொலிசியாக மாற்றி 
மாணவர்களுக்கு அறிய கொடுத்திருக்கிறார்கள் 

இவை யாவும் செய்தியில் இருக்கு 
இதை ஒட்டியே எனது கருத்தும் இருக்கிறது 

இப்படி எல்லாம் செய்திருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இப்போ இருக்கிறது. 

இனி அடுத்த கட்டம்தான் 
உரியவர்கள் மீது நடவடிக்கை என்று நினைக்கிறேன்.

(எனக்கு தனிப்பட பெண்கள் கலாச்சாரம் பாண்பாடு என்று மூடி முடங்குவது பிடிப்பதில்லை. அளவுக்கு அதிகமாக தலைமுடி வளர்ப்பது  போன்றவை முன்னேறியா நாடுகளில் இவை காணாமலே போய்விடுகிறது.
இடம் காலம் பொருள் முக்கியமில்லையா ? ) 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரிதான்!

நான் எழுத வந்த விஷயம் பிழையான தொனியைத் தந்து விட்டது போல உள்ளது!

தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு நல்ல உதாரணம்! பக்கத்தில் இருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் படம் பாக்கும் உங்கள் கவனம் சிதறுகின்றது என்று வைத்துக் கொள்வோம்! என்ன செய்வீர்கள்? துண்டுப் பிரசுரம் ஓட்டுவீர்களா? வேறு தூரத்தில் உள்ள இருக்கைகளில் போய் இருப்பீர்களா?

காதலிப்பவர்கள் எல்லாம் காவாலிகள் என்பதை எமது வளர்ப்பு முறை எம்மில் ஆழமாகப் புதைத்து விட்டது! அதனால் தான் எமக்கு இவ்வாறான செயல்கள் ஆத்திரமூட்டுகின்றன என நினைக்கிறேன்!இந்த மாதிரி நம்பிக்கைகளால் எந்தனை தற்கொலைகள்...ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு எமது கிணறுகளும், வேப்பமரத்துக் கொப்புகளும், தண்டவாளங்களும், சாட்சி கூறும்! 

கதவுகளை நாம் இறுக்க மூடுவதால் தான்.. எத்தனையோ பெண்கள்.. விலை கொடுத்து மணமகனை வாங்கவியலாதவர்கள் பெருமூச்சுக்களின் கொதிப்பில்.. தங்கள் இளமையைத் தொலைத்து விடுகின்றார்கள்!

மேலே் எழுதப்பட்ட  வரிகளை மற்றும் கருத்தில் எடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியனைத்து கன்னத்தில் அன்புடன் முத்தமிடுவது காமலீலை இல்லை, அதற்காக, குய்யோ முறையோ என அலட்டிக்க தேவையில்லை என்டது நம்ப கட்சி.

 நெருப்பெண்டு சொன்னாலே, வாய் சுடுதே என்ற ரீதியில பதறக்கூடாது.

20ல் ஆடி முடியாமல், 60ல் ஆடியென்ன பலன் 

உங்க எதிர்கருத்து கோஸ்டிகள் .... 60 ஜ நெருங்கும் அநேகமாய்.

 :grin:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.