Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 
புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டகாரர்கள், போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்கள் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவு தளத்தை உடைக்கும் செயற்பாட்டில் மைத்திரிபால சிறிசேன ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கூட்த்தின் வேலை.tw_anguished:

  • தொடங்கியவர்
ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்!
[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 09:58.58 PM GMT ]
german_arpaddam_001.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரின் வருகையை  கண்டித்தும், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக இலங்கை அரசு தான் செய்த/ செய்துவருகின்ற இன அழிப்பை மூடி மறைப்பதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

தமிழினப் படுகொலையை மூடி மறைத்து இலங்கை்கு நற்பெயரை உண்டாக்கவும் இம் மாநாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை
வலுப்படுத்தவும் வருகை தரும் ஜனாதிபதியை எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த பல்லின வர்த்தக நிறுவனங்கள், மக்கள், அரச தரப்புகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் கவனம் பெற்றதோடு தமிழ் இளையோர் அமைப்பால் துண்டுப்பிரசுரமும் பெற்றுக்கொண்டனர்.

பலத்த பாதுகாப்புடன் மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி கண்டன ஆர்ப்பாட்டத்தை கவனித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கைகளை அசைத்தும் காட்டியபடி சென்றுள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேசியக்கொடியை வானுயர உயர்த்தி அசைத்ததோடு அவரை நோக்கி இனப்படுகொலையாளி மைத்திரி என கோசம் இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

german_arpaddam_002.JPG

german_arpaddam_003.JPG

german_arpaddam_004.JPG

german_arpaddam_005.JPG

german_arpaddam_006.JPG

german_arpaddam_007.JPG

german_arpaddam_008.JPG

german_arpaddam_009.JPG

german_arpaddam_010.JPG

german_arpaddam_011.JPG

german_arpaddam_012.JPG

german_arpaddam_013.JPG

german_arpaddam_014.JPG

german_arpaddam_015.JPG

http://www.tamilwin.com/show-RUmuyCScSWft5D.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி வந்த மைத்திரிக்கு எதிராக.. ஒருத்தரும் போராடேல்லை என்று கவலைப்பட்டவை.. கழுவி ஊத்தினவை.. கண்ணில.. இந்தத் திரி இன்னும் படவில்லை என்று நினைக்கிறப்போ.. உலகத்தில் எத்தனை கண்ணை மூடின மனிதப் பூனைகள் வாழ்கின்றன என்று கணக்கெடுக்க முடிகிறது. tw_blush:

நன்றி தமிழ் இளையோர் அமைப்பினரே. குறிப்பாக மாணவ சமூகத்தினரே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இலங்கை அதிபருக்கு எதிரான இந்த  20 பேருக்கும் குறைவானோர் கலந்துகொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் வரவேற்கத் தக்கது.  இன்னும் 2 கொடிகளைக் கூடக் கொண்டுபோயிருக்கலாம். "தமிழீழ காவல்" துறையினர் கலந்துகொள்ளாததுதான் பெரிய குறை. 

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணி 6 பேர் போராடிவிட்டார்கள்.

வெற்றி

வெற்றி

அடுத்து தமிழ் ஈழந்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

கோடி மக்கள் சார்ப்பாக ஒற்றை ஒபாமா முடிவெடுக்க முடியும் என்றால்... பல ஆயிரம் தமிழர்கள் சார்பில்.. 10 மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது கூட கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஜனநாயகத்தை மதிக்கும் உலகம் உணரும். ********* எள்ளி நகையாடவே செய்யும். tw_blush:

Edited by நியானி
பண்பற்ற வார்த்தை தணிக்கை

  • தொடங்கியவர்

12741892_1053743561352568_47773500780007

President Maithripala Sirisena arrives at the Sri Lanka - Germany business forum in Berlin

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தவறு புலிகளின் தவறுன்னு இன்னும் ஒரு கூட்டம் கொக்கரிச்சுக்கிட்டு திரியுது..

புலிகளின் தவறு என்பது ஒப்பீட்டளவில் யதார்த்த அளவில் மிகவும் சிறியது..

ஈழப்போராட்டத்தில்..

சிங்களத்தின் தவறு - 80% என்றால்..

ஹிந்தியனின் சுயநலத் தவறு - 70% என்றால்..

அமெரிக்கனின் வல்லாதிக்க விரிவாக்கத் தவறு - 60% என்றால்..

மிதவாத சுயநல அப்புக்காத்து தமிழ் அரசியல்வாதிகளின் தவறு - 50% என்றால்..

ஆயுத ஒட்டுக்குழுக்கள்.. காட்டிக்கொடு குழுக்களின் தவறு - 40% என்றால்..

புட்டுக்கு தேங்காய் பூ முஸ்லீம்களின் தவறு - 35% என்றால்..

தமிழ்நாட்டு உசுப்பு திராவிட அரசியல் வாதிகளின் தவறு - 30%

தமிழ் படிச்ச சோம்பேறிகளின் தவறு.. சோர அரசியலுக்கு ஆயத்தமாகும் தவறு - 45%

புலிகளின் தவறு வெறும் - 20% தான்.

இதில் வெளிநாட்டுக்கு ஓடனும் வெறி.. அகதித் தமிழரின் தவறு வேறு - 50% என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதை எல்லாம் கண்ணில காட்டாமல்.. புலிகளின் தவறு.. புலிகளின் தவறு என்பது தான் தவறான கருத்தியலாகும். அதையே பல யாழ் உறவுகள் வாந்தி.. புலி வாந்தி.. காழ்புணர்வு.. ஒட்டுக்குழு அராஜகவாதம்.. இப்படி பல வகைகளில் இனங்காண்கிறார்கள். tw_blush:

இதனையும் பதிவிட வேண்டியது இங்கு கட்டாயமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இருகிறதே 100% இதுக்க அண்ண ரமணா ரேஞ்சில் இவ்வளவு சதவீதம் காட்டுதே.

........... எனக்குத்தான் கணக்கு விளங்கேல்ல.

Edited by நியானி
ஊகமான விடயம் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

OVERLAP0.png

OVERLAP2.png

overlap percentage.. ஏன்னா.. ஒருத்தர் தவறுக்கு மற்றவரும் பொறுப்பு என்ற வகையில்.. தவறுப் பட்டை வெளியில் (spectrum) தவறுகள் ஒன்றை ஒன்று மேற்பொருந்திச் செல்கின்றன. புலிகளின் தவறுகளுக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. பிறரின் தவறுகளும் தூண்டல்களும் காரணம். அதையும் பதியனுங்கோ. அதனால் தூய தவறுச் சதவீதம் சாத்தியமில்லை இங்கு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"...........

ஆனாலும் தூய சதவீதம் இதில் சாத்தியமே. Pure maths படிச்ச வாலி போன்ற ஆக்களிடம் விளக்கம் கேட்கவும்.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

OVERLAP0.png

OVERLAP2.png

overlap percentage.. ஏன்னா.. ஒருத்தர் தவறுக்கு மற்றவரும் பொறுப்பு என்ற வகையில்.. தவறுப் பட்டை வெளியில் (spectrum) தவறுகள் ஒன்றை ஒன்று மேற்பொருந்திச் செல்கின்றன. புலிகளின் தவறுகளுக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. பிறரின் தவறுகளும் தூண்டல்களும் காரணம். அதையும் பதியனுங்கோ. அதனால் தூய தவறுச் சதவீதம் சாத்தியமில்லை இங்கு. tw_blush:

Fast Fourier Transform எல்லாம் பாவித்து அடிப்படையே இல்லாத சதவீதங்களை உருவாக்க முடியாது. இவையெலாம் noise floor க்கு கீழ் போய்விடும். இனி multi-rate signal processing, game theory with rational/irrational players என்று பல தியரிகளைக் கொண்டு தமிழர்களின் இன்றைய இயலாத நிலைக்கு புறக்காரணிகளைத் தீர்மானிக்கலாம்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யார் கண்டா உலகமே திரண்டு தியரி போட்டு தமிழனை அடக்கி ஆள முற்படும் போது..... எதுவும் சாத்தியமாகலாம்.

மேலும் எமது போராட்டத்தில் புலிகளின் தவறு என்று ஒரு தவறில்லை. யாரோ ஏதோ ஒரு காரணி முன்னர் விட்ட தவறில் இருந்து எழுந்த தவறு தான் புலிகளை தவறிற்கு இட்டுச் சென்றிருக்கும்.

இப்ப கட்டாய ஆள்பிடிப்பு என்பது புலிகளின் தவறாகச் சொல்லப்பட்டாலும்.. களச் சூழல்.. போராட்ட தேவை உணர்ந்து மக்கள்.. பங்களிக்காமல் ஓடி ஒதுங்கும் போது... புலிகள் என்ன செய்ய முடியும்..?! இராணுவத்தை விட்டு சிங்கள இளைஞர்கள் ஓடிய போது சிறீலங்கா அரசு வீடு வீடாகப் போய் தேடிப் பிடிச்சு சண்டையில் விடல்ல... அதை ஏன் யாரும் குறை சொல்வதில்லை...??! ஏனெனில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். புலிகள் ஓயாத அலைகளின் போது பங்கர் வெட்டப் பிடிக்கல்ல.. அப்ப வராத குற்றச்சாட்டு இப்ப எப்படி வருகுது..??! சரி மக்களா தேவை உணர்ந்து பங்களிச்சிருந்தால்.. புலிகளுக்கு ஏன் பிடிக்கனும் என்று தோன்றப் போகுது...??! 

அண்மையில் பிரிட்டனில் கூட படையில் சேர மக்கள் பின்னடிக்கிறார்கள் என்று குறை வந்திச்சுது. இப்போ கவர்ச்சிகர விளம்பரங்களூடு ஆட் சேர்ப்புக்கு முனைகிறார்கள். இதே ஒரு யுத்த காலமாக இருந்தால்.. பிரிட்டன் கவர்ச்சிகர விளம்பரமா செய்து கொண்டிருக்கும். கட்டாய இராணுவச் சேவைக்கு அழைப்பு விட்டிருக்கும். எல்லாரும் லைனில போய் நிண்டிருக்க வேண்டியான்.. புறுபுறுத்துக் கொண்டு. சேர்ச்சில் செய்தார் தானே அப்படி. யாரும் சேர்ச்சிலை வசை பாடல்ல...??!

மேலும் ஒரு உதாரணத்திற்கு சேர்த்ததை.. எதுக்கு துறைக்குள் இழுத்துச் செல்கிறீர்கள்.

இன்னொரு உதாரணம்.. கிருபண்ணா வந்து துறைசார்ந்து குழப்பி அடிப்பதால்.. சிம்பிள் உதாரணம்..

. ucm074741.gif

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தம்பி நெடுக்கால போவான்,
யாரப்பா இந்த ஈட்டர்ஸ்? உவங்கள் என்னத்தையாம் சாப்பிடுரான்கள்?
கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்களேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

தம்பி நெடுக்கால போவான்,
யாரப்பா இந்த ஈட்டர்ஸ்? உவங்கள் என்னத்தையாம் சாப்பிடுரான்கள்?
கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்களேன். :)

புலி விழுங்கிட்டு என்று எல்லாத்தையும் தமிழனிடம் இருந்து விழுங்கிறாங்க பாருங்க.. அவங்களே தான். பிறகு இங்க வந்து.. கொட்டம்.. எஜமானன் சிங்களன் வந்திட்டான்.. நமக்கு கொண்டாடமுன்னு. இதுங்க தாங்கள் எதுக்கு ஆயுதம் தூக்கினது என்ற தெளிவே இல்லாமல் தூக்கித் தொலைச்சிருக்குதுங்க. பாவம் இதுகளை நம்பி போய் செத்த மக்கள்.  tw_angry:

Edited by nedukkalapoovan

எல்லாம் ஓரளவு சரி ஆனால்

புலிகளின் தவறு வெறும் 0 என்றுதான் நான் நினக்கின்றன் :unsure:

1 hour ago, arjun said:

எல்லாம் ஓரளவு சரி ஆனால்

புலிகளின் தவறு வெறும் 0 என்றுதான் நான் நினக்கின்றன் :unsure:

ராஜீவையும் பிரேமதாசாவையும் போட்டு போராட்டத்திற்கு சங்கு ஊதின புலிகளின் தவறு 20% 
லண்டனுக்கு ஓடிப்போய் இப்ப இந்த சதவீகித கணக்கு எழுதியவர் உட்பட புலம்பெயர்ந்தவர்கள் தவறு 50% . :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நெடுக்கரின் கணக்கு ரொம்ப சரி 

முதல் 30% தவறில் இருந்துதான் ....

மற்ற 20% மும் 
மிகுதி 50% வந்திருக்கு !

நெடுக்கருக்கு சாதகமாக யார் யார் எல்லாம் 
எழுதுகிறார்கள் பாருங்கள் 
tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.