Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: இந்தியா, இலங்கை பக்தர்கள் குவிந்தனர்

Featured Replies

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: இந்தியா, இலங்கை பக்தர்கள் குவிந்தனர்

 

 
 
ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் கச்சத்தீவுக்கு சென்ற பக்தர்கள். படம் எல்.பாலச்சந்தர்.
ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் கச்சத்தீவுக்கு சென்ற பக்தர்கள். படம் எல்.பாலச்சந்தர்.

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.

இந்தியா இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை 4 மணியளவில் தொடங் கியது. இத்திருவிழாவை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் துணைத் தூதர் என்.நடராஜன், நெடுந்தீவு மறை மாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் 3,496 பேர் தங்கள் பெயர் களைப் பதிவு செய்திருந்தனர். கச்சத்தீவு செல்வதற்காக ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் தமிழக பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர்.

கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்தவர் களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மீன்வளத் துறை சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ‘லைப் ஜாக்கெட்’ வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு 93 விசைப் படகுகளில் 3,249 பயணிகள் கச்சத் தீவு புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய பக்தர்களின் பாதுகாப்புக்காக 6 கடலோரக் காவல் படை கப்பல்கள் இந்திய கடல் எல்லை வரை சென்றன. அங்கிருந்து கச்சத் தீவு வரை இலங்கை கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்புத் திருப்பலி பூஜையும், அந்தோனி யார் தேர் பவனியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா முடிவடையும். அதைத் தொடர்ந்து இரு நாட்டினரும் அவரவர் நாடுகளுக்கு திரும்புவர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article8264130.ece

 

  • தொடங்கியவர்

கச்சத்தீவு திருவிழா

 

 

கச்சத்தீவு திருவிழா

 

 

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்பு கொடுத்தல் ஆராதணைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து இன்று காலை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் பண்டமாற்றுக்கள் ஏராளமாக நடக்கும்....! இங்கிருந்து சவர்க்காரம் , தேங்காய் எண்ணை போன்றவையும் , அங்கிருந்து சறம் , பெனியன், புடவைகள் போன்றவையும்....!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குப் போனால் கச்சதீவுக்கு ஹொலிடே போகலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரசைகள் யாழ்பாண ஆயர் மூலம் பதிந்து போவார்கள். போக்குவரத்து, சகல வசதிகளும் இலங்கை நேவி செய்துகொடுக்கும்.

வெளிநாட்டுப் பாஸ்போட்காரருக்கு என்ன விதிமுறையோ தெரியாது.

எனக்கும் போக ஆசைதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இலங்கைப் பிரசைகள் யாழ்பாண ஆயர் மூலம் பதிந்து போவார்கள். போக்குவரத்து, சகல வசதிகளும் இலங்கை நேவி செய்துகொடுக்கும்.

வெளிநாட்டுப் பாஸ்போட்காரருக்கு என்ன விதிமுறையோ தெரியாது.

எனக்கும் போக ஆசைதான்.

 

இலங்கை நேவியை இதுக்குள்ள கொண்டுவர வேண்டிய தேவை என்ன என்று அறியலாமா, கோசான்?

நான் சில தடைவைகள அந்தோனியார் கோவிலுக்குப் போய் வந்திருக்கிறேன்! எல்லாமே தனிப்பட்டவர்களின் படகுகளில் தான் பயணமாக இருந்தது!

நயினாதீவுக்கு இலங்கை நேவி பயணிகளை ஏற்றிச் சென்று உதவி புரிவதென்பதோ ..உண்மை!

ஆனால் அது புத்த விகாரைக்குச் செல்லும் பாலம் வரைக்கும் தான்!

அந்த விகாரையில் இறங்கி .. அம்மன் கோவிலுக்கு நடந்தது போவதானால்.. பயணம் இலவசம்!

இல்லாவிட்டால் அம்மன் கோவில் பாலத்தில் இறங்கும் பயணிகளிடம் பணம் அறவிடப்படுகின்றது!

ஆனால் விகாரைக்கு வரும் சிங்களவர்கள் .. தவறாமல் ' அமுத சுரபிக்கு' வந்து அடைஞ்சு விட்டுப் போவார்கள்!

அது இலவசம்...!

கொஞ்சமாவது எங்களது பெருந்தன்மைகளையும் பற்றி இடைக்கிடை கதையுங்கள்!

அந்தோனியாருக்கு 'இலங்கை நேவி' இலவசமாக எதுவும் செய்து கொடுக்குமென்று நான் நினைக்கவில்லை!

தமிழ் பேசும் படகோட்டிகளின் பிழைப்பில் மண்ணைப் போடுகின்ற 'வர்த்தக ரீதியிலான' ஒரு உதவியாகவே அவர்களது உதவி நிச்சயம் இருக்கும்!

வெளி நாட்டு பாஸ்போட் காரர்.. இலங்கைக்குள் நுழையும் போது விசா எடுத்தால் காணும்!

அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும்!

பின்னர் எதற்காக.. இந்த எகத்தாளமான 'சீண்டல்' என்பதை விளக்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்க புங்கை,

நான் சொல்வது போருக்குப் பிந்திய ஏற்பாடுகளைபற்றி.

நான் விசாரித்தளவில் இப்போ எல்லா ஏற்பாடுகளும் நேவியே. தவிர பதிவும் அவசியம்.

சும்மா விடுடா வள்ளத்தை எண்டு போக முடியாதாம்.

வீசா எடுத்தாலும் வெளிநாட்டுக் காரருக்கு சர்வதேச கடல் எல்லை வரை போகும் அனுமதியுண்டா என்பது தெரியவில்லை.

ரொம்ப ஓவர் சென்சுடிவ் ஆகாதீங்கப்பா.

நயினை பற்றி நீங்கள் சொன்னதும் இப்போ இல்லை.

படகுகள் பெரும்பாலும் கோவிலுக்கே போகிறது. 

விகாரைக்குப் போகும் படகிலும் பிக்குகள் தவிர ஏனையோர்க்கு கட்டணமே.

பிழை இருந்தால் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அட போங்க புங்கை,

நான் சொல்வது போருக்குப் பிந்திய ஏற்பாடுகளைபற்றி.

நான் விசாரித்தளவில் இப்போ எல்லா ஏற்பாடுகளும் நேவியே. தவிர பதிவும் அவசியம்.

சும்மா விடுடா வள்ளத்தை எண்டு போக முடியாதாம்.

வீசா எடுத்தாலும் வெளிநாட்டுக் காரருக்கு சர்வதேச கடல் எல்லை வரை போகும் அனுமதியுண்டா என்பது தெரியவில்லை.

ரொம்ப ஓவர் சென்சுடிவ் ஆகாதீங்கப்பா.

நயினை பற்றி நீங்கள் சொன்னதும் இப்போ இல்லை.

படகுகள் பெரும்பாலும் கோவிலுக்கே போகிறது. 

விகாரைக்குப் போகும் படகிலும் பிக்குகள் தவிர ஏனையோர்க்கு கட்டணமே.

பிழை இருந்தால் சொல்லவும்.

ஒருத்தரும் ஓவர் சென்ஸிடிவ் ஆகவில்லை, கோஷான்!

நீங்க தான் இடைக்கிடை வந்து 'ரென்சன்' ஆக்கி விடுகிறீங்க!

 

இந்தாங்கோ சர்வதேச எல்லைக்கோடுகள்!

 

shenali12063.png

 

எல்லாத் தீவுகளும் 'உள்ளுக்கை' தான் இருக்கு!

இப்ப தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு போச்சே!

பிறகு நேவி பதிவுகள் என்னத்துக்காம்?

அந்தோனியாரும் தேடப்படுபவர்களில் ஒருவரோ?

அல்லது இந்தியாக்காரன் உள்ள பூந்திருவான் எண்ட பயமோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

புங்க்ஸ்,

நீங்க காட்டிய படத்தில் உள்ள தீவுகளில் கச்சதீவப் பாருங்கோ IMBL ஐ ஒட்டினாப் போல இருக்கெல்லே அதுதான் காரணம். எல்லை வரைக்கும் ஒரு 5000 தொகையாக மக்கள் ஒரேநாளில் போன, யார் போயினம் யார் வருகீனம், கேரள கஞ்சா வருகுதோ எண்டு பார்க்கத்தானாக்கும் பதிவு.

நீங்க கடைசியா எப்ப ஊருக்குப் போனனியள்?

நான் விசாரிச்ச மட்டில், நீர்வசதி, இறங்குதுறை அமைப்பு மற்றும் உணவுக்கடைகள், மலசலகூடம் முதலுதவி என்று நேவிநல்ல உதவி எண்டு தான் கேள்வி.

கேள்விப்பட்டதை சொல்லுறன். டென்சன் வேண்டாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சதீவு எண்ட பெயர் கூடுதலாய் எங்கடை சனம் எல்லாருக்கும் பிரசித்தமானது பண்டமாற்றம் எண்ட விசயத்தாலை தான். மற்றும்படி அங்கை அந்தோனியார் தனிமையிலை தான். :cool:

3 hours ago, ரதி said:

இலங்கைக்குப் போனால் கச்சதீவுக்கு ஹொலிடே போகலாமா?

உழைச்ச காசை கச்சதீவு கடல்லை இரண்டு ஹொட்டல் கட்டினால்  காசு மலை மழையாய் கொட்டுமடி தங்கச்சி.:cool:tw_blush:

இப்பவெல்லாம் அமேரிக்கா ஊடாக பயணம் செய்யும்போது பெரிய கெடுபிடிகள் .

இப்பத்தானே ஈராக் யுத்தம் முடிந்துவிட்டது பின் லாடன் அழிந்துவிட்டார் முன்னர் மாதிரி கெடுபிடி இல்லாமல் விடுங்கள் என்று கேட்க முடியமா ?

வரலாறுகளில் இருந்துதான் எல்லோரும் பாடம் கற்கின்றார்கள் .

எமக்கு அரசியல் தீர்வு வந்தாலும் முன்னைய இலங்கை திரும்ப வராது  பல விடயங்களில் மாற்றமும்  வராது ஆனால் மக்கள் அதற்கு பழக்க பட்டுவிடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, arjun said:

இப்பவெல்லாம் அமேரிக்கா ஊடாக பயணம் செய்யும்போது பெரிய கெடுபிடிகள் .

இப்பத்தானே ஈராக் யுத்தம் முடிந்துவிட்டது பின் லாடன் அழிந்துவிட்டார் முன்னர் மாதிரி கெடுபிடி இல்லாமல் விடுங்கள் என்று கேட்க முடியமா ?

வரலாறுகளில் இருந்துதான் எல்லோரும் பாடம் கற்கின்றார்கள் .

எமக்கு அரசியல் தீர்வு வந்தாலும் முன்னைய இலங்கை திரும்ப வராது  பல விடயங்களில் மாற்றமும்  வராது ஆனால் மக்கள் அதற்கு பழக்க பட்டுவிடுவார்கள் .

 

4 minutes ago, arjun said:

இப்பவெல்லாம் அமேரிக்கா ஊடாக பயணம் செய்யும்போது பெரிய கெடுபிடிகள் .

இப்பத்தானே ஈராக் யுத்தம் முடிந்துவிட்டது பின் லாடன் அழிந்துவிட்டார் முன்னர் மாதிரி கெடுபிடி இல்லாமல் விடுங்கள் என்று கேட்க முடியமா ?

வரலாறுகளில் இருந்துதான் எல்லோரும் பாடம் கற்கின்றார்கள் .

எமக்கு அரசியல் தீர்வு வந்தாலும் முன்னைய இலங்கை திரும்ப வராது  பல விடயங்களில் மாற்றமும்  வராது ஆனால் மக்கள் அதற்கு பழக்க பட்டுவிடுவார்கள் .

நீங்கள் கூறியது உண்மை.. அர்ஜுன்!

இழந்தவைகள் எப்பவுமே.. இழந்தவைகளாகவே இருக்கும்!

எம்மை அறியாமலே..எமது சுதந்திரங்களை இழந்து கொண்டே வருகிறோம்!

இது எமக்கு மட்டுமல்ல... சிங்களவனுக்கும் பொருந்தும்!

 

Just now, புங்கையூரன் said:

 

நீங்கள் கூறியது உண்மை.. அர்ஜுன்!

இழந்தவைகள் எப்பவுமே.. இழந்தவைகளாகவே இருக்கும்!

எம்மை அறியாமலே..எமது சுதந்திரங்களை இழந்து கொண்டே வருகிறோம்!

இது எமக்கு மட்டுமல்ல... சிங்களவனுக்கும் பொருந்தும்!

 

தென்னாபிரிக்காவில் அமைதி வந்ததே இரு இனங்களும் அதை உணர்ந்தபடியால் தான் .

எங்களுக்கும் அப்படி ஒருகாலம் வரும் எப்ப என்பதுதான் கேள்வி 

  • தொடங்கியவர்
களைகட்டிய கச்சதீவு திருவிழா...
 
21-02-2016 07:09 PM
Comments - 0       Views - 66

article_1456062054-jiuhj.jpg

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, இம்முறையும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்களின் வெள்ளத்தினால் களைகட்டியது.

கொடியேற்றம் மற்றும் நற்கருணை வழிபாட்டுடன் நேற்று சனிக்கிழமை (20) மாலை ஆரம்பமான திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து இரவு திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இரவு முழுவதும் கண்விழித்து வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்தலில் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பங்கேற்று அந்தோனியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர். (படங்கள்: ஜே.ஏ. ஜோர்ஜ், வே. தபேந்திரன்)

article_1456062092-kachdivu.jpgarticle_1456062100-12751943_975746049129article_1456062107-12752035_975746009129article_1456062114-12765727_975746195796article_1456062121-12773188_975746219129article_1456062127-20160220_102855.jpg

- See more at: http://www.tamilmirror.lk/166610/%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-#sthash.NVooFcRd.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

குசாஅண்ணா,அன்றாடம் உழைச்சும் கையில் ஒரு சதம் மிச்சமில்லை...செத்தால் எடுத்துப் புதைக்க அரசாங்கம் இருக்குத் தானே என்ட நம்பிக்கையில் உயிர் வாழ்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருவிழாக்கள் கூத்துக்கள் எல்லாம்.. உள்ள பிரச்சனைகளை மறைக்க போடுற பெரிய வட்டங்கள். திருவிழா முடிஞ்சதும்.. பிரச்சனை புட்டுக்கிட்டு கிழம்பும். இதுதான் ஹிந்திய உபகண்ட அடிமைகளின் வழமை. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

குசாஅண்ணா,அன்றாடம் உழைச்சும் கையில் ஒரு சதம் மிச்சமில்லை...செத்தால் எடுத்துப் புதைக்க அரசாங்கம் இருக்குத் தானே என்ட நம்பிக்கையில் உயிர் வாழ்கிறேன்.

சகோதரி

வரவு

செலவை எழுதி வாருங்கள்

சில மாற்றங்களை அறிவீர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

சகோதரி

வரவு

செலவை எழுதி வாருங்கள்

சில மாற்றங்களை அறிவீர்கள்.....

இங்கிலாந்தில் பொதுவாகச் சொல்வார்கள்.. எவ்வளவு பெரிய வேலையில் எவ்வளவு பெரிய சம்பளத்தில் இருக்கிறீங்க என்பதல்ல முக்கியம்  எவ்வளவு மாதம் சேமிக்கிறீங்க என்பது தான் முக்கியம். 

நம்மவர்கள்.. இந்த நாட்டின் நிதிக் கொள்கையை விளங்கிக் கொள்ளாமல் ஊர் பாணியில் வாழத் தலைப்பட்டால்.. மிச்சம் பூச்சியமே. சீட்டுப் போட்டு வேண்டிற நகை தான் மிஞ்சும். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.