Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு

Featured Replies

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129343/language/ta-IN/article.aspx

நல்ல காலம் அந்தகாலத்தில யாழ் பல்கலைக்கழகம் இல்லை. இருந்திருந்தால் பெல்பொட்டமும் போடக்கூடாது என்றிருப்பார்கள்.

27 minutes ago, நவீனன் said:

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன

நல்ல காலம் அந்தகாலத்தில யாழ் பல்கலைக்கழகம் இல்லை. இருந்திருந்தால் பெல்பொட்டமும் போடக்கூடாது என்றிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129343/language/ta-IN/article.aspx

ஆனால் பல்கலைக்கழக வாசலில் நின்று தம் அடிக்கலாம்...
தண்ணி அடிக்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129343/language/ta-IN/article.aspx

நல்லவிடயம்...வரவேற்க வேண்டிய விடயம். எமது கலை கலாச்சாரத்தை இவர்களிடம் புகட்ட வேண்டும்.

1 hour ago, ஜீவன் சிவா said:

நல்ல காலம் அந்தகாலத்தில யாழ் பல்கலைக்கழகம் இல்லை. இருந்திருந்தால் பெல்பொட்டமும் போடக்கூடாது என்றிருப்பார்கள்.

நல்ல காலம் அந்தகாலத்தில யாழ் பல்கலைக்கழகம் இல்லை. இருந்திருந்தால் பெல்பொட்டமும் போடக்கூடாது என்றிருப்பார்கள்.

ஜோர்ஜ் புஷ் பதவிக்கு வந்தவுடன்....வெள்ளைமாளிகை வேலையாளர்களுக்கு உத்தரவிட்ட முதல் வேலை....இங்கு யாருமே டெனீம் அணியக்கூடாது!!!!! காரணம் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

ஆனால் பல்கலைக்கழக வாசலில் நின்று தம் அடிக்கலாம்...
தண்ணி அடிக்கலாம் .

சைட்டும் அடிக்கலாம். ஆனால் தாடி வளர்க்கப்படாது. :rolleyes:tw_blush:

பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டிக்கொண்டு போகவேண்டும். ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் எதை கட்டிக்கொண்டு போகவேண்டும்?

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தாடியுடன் வகுப்பு எடுக்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்தப் போக்கு சரியாகத் தெரியவில்லை!

கலாச்சாரம் என்னும் பெயரில்... கட்டுப்பாடுகள் விரும்பத்தக்கதல்ல என்பது எனது கருத்து!

வெள்ளிக்கிழமைகளில் பெண்களைச் சேலை கட்டும் படி கட்டளையிடப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் எல்லை என்றே நினைக்கிறேன்!

அத்துடன் சேலை என்பது தமிழ்க்கலாச்சாரம் என்பதும் கேள்விக்குரியது!

இதுவும் ஒரு விதமான 'தலபானிசத்தை' நோக்கிய பயணமே!

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி என்பது புனிதமானது...ஆண்டவன் சந்நிதிக்கு நிகரானது!

எனவே ஆண்களையும், பெண்களையும் இரு பிரிவாகப் பிரித்து அமர வைத்தால் அரை வாசிப் பிரச்சனைகள் குறைந்து விடும் என்பது எனது கருத்து!

சிங்கள மாணவர்களுக்கு.. இந்த விதிகள் இல்லைப் போலும்! 

12718242_10153903187673959_6887102875725

  • கருத்துக்கள உறவுகள்

வெளி வேடத்தை அலங்கரிப்பதால் பண்பான மாணவர்களை உருவாக்க முடியாது. உள்மனது பண்படையும்வண்ணம் மாணவர்களை உருவாக்குபவர்களே சிறந்த ஆசிரியர்களாக விளங்க முடியும்.

உலகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்துக்குமே தலைமைதாங்கக்கூடிய திருக்குறள் என்ற பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் திருவள்ளுவர். அவரே சடாமுடியுடன்தான் உள்ளார். 

54 minutes ago, Paanch said:

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஒன்றை பற்றி எமக்கும் ஒரு கருத்து இருக்கும் 
அதை நாம் வெளிபடுத்தும்போது வெளியல் இருந்து அதற்கு நேர் 
எதிரான கருத்துக்கள் தோன்றலாம். பின்பு இரண்டையும் கூட்டி கழித்தே 
ஒரு கருத்தை தெளிவு படுத்த முடியும்.

யாழ் பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் ஏன் நிர்வாணமாக போக முடியாது ? 

அல்லது யாரும் நிர்வாணமாக வர கூடாது என்று ஒரு விதிமுறையை 
யாழ் கம்பஸ் போட்டால் 
உங்களுடைய கருத்து எதுவாக இருக்கும் ? 

அதை ஏற்றுகொள்ளும் தன்மை உங்களிடம் இருக்குமா ?
நிர்வாணமாக யாரும் வரகூடாது என்பதை ..
எந்த தளத்தில் இருந்து ஆதரிப்பீர்கள் ? 

கருத்தியல் என்பது தற்கால சமூக நிலையில் இருந்தே நிறுவ முடியும் 
வள்ளுவரின் காலத்தில் ஆழகான பெண்கள் ஆண்களுக்கு முட்வேட்டிவிடும் 
சலூன்கள் மூலைக்கு மூலை இருந்திருந்தால் ....?
ஒருவேளை வள்ளுவரும் முடி வெட்டியிருக்கலாம். அதை இல்லை என்று எங்கிருந்து நிறுவுவது ?

யாழ் கம்பஸ் என்பது ...
யாழ் மண்ணை 
யாழ் மக்களை 
யாழ் வாழ் மக்களின் கலை கலாச்சாரத்தை 
உள்ளடக்கியதாக இருப்பதில் எனக்கு தனிப்பட எந்த எதிர் கருத்தும் கிடையாது.

தமிழர்களின் உடையாக சேலை கி. மு 1450இல் இருக்கவில்லை எனபதை 
வைத்து தற்போதைய யாழ் பெண்களை அறிமுகம் செய்யும் உடையாக சேலை 
இல்லை என்பது விரண்டா வாதம். 

அதற்கு யாழ் யுனி சிறப்பாக பதில் கொடுக்கமுடியும் இந்த விதிமுறைகள் 
எல்லாம் தற்போது கல்வி கற்பவர்களுக்கு மட்டுமே உரிய. கிமு 1450 ஆண்டு மாணவிகள் 
இதை கடைபிடிக்க தேவை இல்லை என்று. 

பல் கலை  கழகம் 
இது பலருக்கு வேறு விதமாக விளங்குகிறது என்று நினைக்கிறேன்.
யாழ் யுனி இந்த பெயருக்கு என்ன அர்த்தமோ அதனோடுதான் போகிறார்கள்.

சில மேட்டுகுடிகள் இதில் மட்டுமல்ல பலவாறு அவப்போது 
பல்டி அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு பழமொழி சொல்வார்கள் 
அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். 
அப்படிதான் பல யாழ் மேட்டுக்குடிகளின் குடை பிடிப்பு.

இங்கு மேலை நாட்டில் பரம்பரையாக வாழும் பெண்கள் நாகரீகமாக 
உடை உடுத்துவார்கள் சில யாழ் தமிழர்கள் அவர்களுக்கு திறந்து காட்டிக்கொண்டு 
திரிவார்கள்.
இது இடம் பொருள் சூழல் அறியாத அறியாமை தவிர 
அதில் பெருமை ஒன்றுமில்லை.

பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் 
அதற்குமுன்பு "சுதந்திரம்" என்றால் என்ன என்று தெரியவேண்டும். 

ஆண்கள் தண்ணி அடித்தால் நாமும் அடிப்போம் என்பது 
அடாவடித்தனம் அது சுதந்திரம் இல்லை. (அதற்காக் பெண்கள் யாரும் குடிக்க கூடாது என்பது எனது வாதமில்லை. ஆண்கள் குடித்தால் நாமும் குடிப்போம் என்பது சுதந்திரம் இல்லை என்பதே எனது வாதம்) 

அங்கு இப்படி இருக்கு .... இங்கு இப்படி இருக்கிறது .... என்பது ஒரு வாதமில்லை.
"யாழ் பல்கலைகழகம்" எப்படி இருக்கிறது என்பதில்தான் 
யாழ் மக்களுக்கு பெருமை!
யாழ் மண்ணை எல்லா துறைகளிலும் முன்னேற்ற கூடிய மாணவர்கள் அங்கிருந்து வெளிவர வேண்டும்.
அந்த 4-5  வருட  காலத்தில் கல்வி பண்பு கலை கடமை கட்டுபாடு மேம்பாடு போன்று ஒரு மனிதனுக்கு 
தேவையான அனைத்தையும் சொல்லிகொடுக்கும் இடமாக இருக்க வேண்டும்.

காசு தா டிகிரி தருகிறேன் ....
எனும் நிலையை அங்கு ஒப்பிட முடியாது.

  • தொடங்கியவர்

யாழ். பல்கலை: புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை

160225164231_jaffna_university_624x351_w
 மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ். பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைகழகத்திலும் சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிவகாந்தன் தனுஜன், மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வருவதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டபோதிலும் பிற கட்டுப்பாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.

மாணவிகளை மாத்திரம் சேலை கட்டி வருமாறு கூறுவதை ஆணாதிக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160225_jaffna_students

எனது இரண்டு அக்காமார் பல வருடங்களின் முன் யாழ். பல்கலையில் கற்றவர்கள். புடவை கட்டிக்கொண்டு பல்கலை செல்வதில் உள்ள இடர்ப்பாடுகள் அதனை அனுபவித்தவர்களுக்கு புரியும். புடவை வாங்குவதற்கும், இரவிக்கை தைப்பது, நேரம் மினக்கடுவது இதற்கு எல்லாம் யாழ். பல்கலை பேரவை நிதியுதவியும் கொடுப்பார்களா? புடவை கட்டிக்கொண்டு தெருவில் துவிச்சக்கக்கரவண்டி மூலம் பல்கலை செல்வது பாதுகாப்பானதா? யாழ். பல்கலை பேரவை விட்டால் மாணவிகளின் வீட்டிற்கு சென்று புடவையே கட்டிவிடுவார்கள் போல் உள்ளது.

வகுப்பறைகளில் Denim, T-Shirt அணிவதை தவிர்ப்பது எப்படி யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க உதவும்? இதற்கு விஞ்ஞான விளக்கமும் கொடுப்பார்களோ?

அங்கே ஐ.எஸ்.ஐ.எஸ் பெண்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளிற்கும் இங்கேயும் பெரிதாய் வித்தியாசம் இல்லை போல் தெரிகின்றது. இங்கே Micro level, அங்கே Macro level. அவர்களும் கலாச்சாரம் பண்பாடு என்றுதான் சொல்கின்றார்கள். இவர்களும் அதே. 

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் யாழ் பல்கலையில் தாம் ஓர் முன்மாதிரியாய் நடப்பது வேறு. மாணவர்களின் மீது தமது விருப்பங்களை திணிப்பது வேறு. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வேட்டி, புடவை கட்டிக்கொண்டு வகுப்பறைக்கு போகலாம், தாடி, மீசையை அகற்றலாம். தாம் கலாச்சாரம், பண்பாடு என்று நினைப்பவற்றின் அடிப்படையில் வாழ்ந்து காட்டலாம். அவற்றுடன் உடன்பட்டால் அவர்களை மாணவர்களும் பின்பற்றுவார்கள். இப்படி எதேச்சையான விதிமுறைகள் இயற்றுவது மாணவர்களின் சுதந்திரமான கற்றல் நடவடிக்கைகளுக்கு தீங்கானது. பதின்மவயதை தாண்டி பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்களின் மீது ஒழுக்கம் எனும்பேரில் திணிப்புக்களை மேற்கொள்வது நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கலைஞன் said:

இப்போதைய யாழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் ஒரு இந்தியப் பட்டதாரி என்று அறிகிறேன்! இது ஒரு அரசியல் நியமனமாக இருக்கக் கூடுமென்பதால்.. மேலதிக கருத்தெழுதலை வேண்டுமென்றே தவிர்க்கின்றேன்!

திரு கைலாசபதி, திரு. வித்தியானந்தன், திரு பொன் பாலசுந்தரம் பிள்ளை போன்றவர்கள் அலங்கரித்த பதவிக்கு.. ஒரு இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியே பொருத்தமானவர் என்பது எனது கருத்து!

இந்தியப் பல்கலைக் கழகங்கள் பெரும்பாலும்.. கல்லூரி போன்றே இயங்குகின்றன என அறிகின்றேன்! அதனால் தான் இந்தக் கட்டுப்பாடுகள், யாழ் பல்கலைக் கழகத்திலும் திணிக்கப்படுகின்றன எனக் கருதுகின்றேன்!

சேலை, வேட்டி என்பதில் எனக்குப் பிரச்சனை இல்லை! பல் கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு என்ன உடை அணிந்து வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுவதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இன்றைய வேண்டுகோள்களே...நாளைய சட்டங்களாகுகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்! 

இசை போன்று அங்கு கல்வி பயின்றவர்கள் ... மேலதிக விளக்கம் தருவது நன்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடம் நடக்கிற இடத்திலை கிஸ் அடிச்சு சட்டைக்காலை கையை விட்டு மொத்தங்களை தேட வெளிக்கிட்டால் இல்லாத பொல்லாத சட்டங்கள் எல்லாம் வரத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

பாடம் நடக்கிற இடத்திலை கிஸ் அடிச்சு சட்டைக்காலை கையை விட்டு மொத்தங்களை தேட வெளிக்கிட்டால் இல்லாத பொல்லாத சட்டங்கள் எல்லாம் வரத்தான் செய்யும்.

றீகல் தியேட்டர் இருந்த காலத்திலை இப்படி ஒரு பிரச்சனையும் வரேல்லை குமாரசாமி அண்ணை! :D

அதைத் திரும்பக் கொண்டு வர வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

றீகல் தியேட்டர் இருந்த காலத்திலை இப்படி ஒரு பிரச்சனையும் வரேல்லை குமாரசாமி அண்ணை! :D

அதைத் திரும்பக் கொண்டு வர வேணும்!

அதை நாங்கள் தியட்டரில செய்தோம் .....உவங்கள் படிக்கிற இடத்தில முயற்சி செய்து இருக்கிறாங்கள்......இந்திய இராணுவமும் எதோ சட்டம் போட்டவையள் உந்த பொம்பிளை பிள்ளைகளின் உடுப்பு விடயத்தில்....குட்டை பாவடை போட்டுகொண்டு சைக்கிள் ஒடக்கூடாது என்று...

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

ஒன்றை பற்றி எமக்கும் ஒரு கருத்து இருக்கும் 
அதை நாம் வெளிபடுத்தும்போது வெளியல் இருந்து அதற்கு நேர் 
எதிரான கருத்துக்கள் தோன்றலாம். பின்பு இரண்டையும் கூட்டி கழித்தே 
ஒரு கருத்தை தெளிவு படுத்த முடியும்.

கருத்தியல் என்பது தற்கால சமூக நிலையில் இருந்தே நிறுவ முடியும் 
வள்ளுவரின் காலத்தில் ஆழகான பெண்கள் ஆண்களுக்கு முட்வேட்டிவிடும் 
சலூன்கள் மூலைக்கு மூலை இருந்திருந்தால் ....?
ஒருவேளை வள்ளுவரும் முடி வெட்டியிருக்கலாம். அதை இல்லை என்று எங்கிருந்து நிறுவுவது ?

எனது கருத்தின் முதல் பந்தியை விட்டு இரண்டாம் பந்தியை விவாதத்திற்கு எடுத்துள்ளீர்கள். முதல் பந்தியிலே இன்றைய நவீன விஞ்ஞான உலகிலும் பல்கலைக் கழகத்திலிருந்தும் மாணவ மாணவிகள் எந்நிலையில் வெளிவரவேண்டும் என்று என் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.

உடைகள், தாடி, மீசைகளைக் கொண்டு ஒருவருடைய அறிவுத் திறனை மதிக்கத் தேவையில்லை என்பதற்காகவே வள்ளுவர் உதாரணமாக வந்தார். வள்ளுவர்காலத்திலும் முடிவெட்டும் வசதி இருந்திருப்பதை மறுக்க முடியாது. இல்லையெனில் மழித்தலும் நீட்டலும் என்ற குறள் அவரிடமிருந்து வந்திருக்காது. 

ஒருவருடைய கல்வி அறிவு என்பது சுயநலமாக இல்லாது, இருக்கும் இடத்தை மட்டும் மேம்படுத்துவதாகவும் இல்லாது அது உலகத்தையும் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதே எனது சிந்தனை. ஆடை அணிகள் என்பது எந்த வடிவில் இருந்தாலும் அது மாணவ மாணவிகளும் தங்கள் மானத்தைக்காப்பதற்கு அணிவதாக இருக்கவேண்டுமே தவிர, அவை அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படக்கூடாது.

பழக்க வழக்கங்கள் பருவத்துக்கு ஏற்றவாறும், அவை அங்கு வரம்பு மீறாமல் இருப்பதற்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதிகாரத்தின் ஊடாகத் திணிக்கப்படும் கல்வியறிவால் மனிதனின் வாழ்க்கை செழிக்கலாம், சுயமாகச் சிந்திக்கும் சுதந்திரமான ஆற்றல் அங்கு அற்றுவிடும். எத்துணை அறிவைக் கல்வியால் பெற்றிருந்தாலும் பிரச்சனைகள் தோன்றும்போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு பிறருடைய தயவை நாடவேண்டிய நிலையை அது உருவாக்கும். கல்வியறிவில் சிறந்துவிளங்கும் தமிழினம் இன்று அதற்குச் சாட்சியாக உள்ளது.
 
  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Paanch said:

தொடர்வதால் ...........உங்களுடைய கருத்துக்களை நிராகரிக்கிறேன் என்பது அதன் பொருள் இல்லை.
இருகரையிலும் நின்று பார்க்கவேண்டும் என்பதால்தான் ....

சில கருத்துக்களுக்கு பதில் இருக்கிறது ஆனால் அது சென்றாடையாது என்பதால் எழுதவில்லை.
அமெரிக்காவிலேயே கை ஸ்கூல் பெண்கள் இஸ்டம் போல உடுத்த முடியாது வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் 
இப்போ 80வீதம் இந்த யோகா பான்சை தடை செய்திருக்கிறார்கள்.
ஆ ஊ என்றால் தலிபான்கள் இடத்திற்கு பல்டி அடிக்கும் கருத்துகளுடன் இதை விவாதிக்க முடியாது.

தலிபான்கள் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள்.
அதற்கும் ஒரு பெண்ணானவள் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இடையில் 
பாரிய இடைவெளி இருக்கிறது.

எனது முதலாவது கேள்வியே ...
ஏன் யாழ் யுனிக்கு ஏன் நிர்வாணமாக போக முடியாது என்பதுதான் ?

தலிபான்கள்  கலிபான்கள் என்பவர்கள் அதற்கு பதில் எழுதினால்தான் அதில் இருந்து தொடரலாம். 

ஆயிரம் வருடங்கள் முன்பே பூமியின் சுற்றளவு இதுதான் என்று நிறுவிய மேதைகள் 
நிர்வானமாகத்தனே அலைந்தார்கள் 
எங்களுடைய பல சித்தர்களும் நிர்வாணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
சாக்ரடிஸ் ஆடையே அணிந்ததில்லையே ?
அறிவுக்கும் கல்விக்கும் ஆடைக்கும் சம்மந்தம் உண்டு என்று யார் சொன்னார் ?

சுற்றம் 
சூழல் 
கலை 
பண்பாடு 
மேம்பாடு 
இவற்றிற்கும் பல்கலைகழகத்திற்கும் தொடர்பு உண்டு என்பதுதான் உண்மை.

இவளவு காலமும் டீச்சர்மார் முழுப்பேரும் சேலையுடன்தான் சையிக்கிளில் பள்ளிபோனார்கள் 
ஒரு வெள்ளிகிழமை போவதற்கு சேலை இழுக்கிறது ? 

இதுவே ஓவரு வெள்ளியும் பார்டி  டிரஸ் கோர்ட் கருப்பு காஞ்சிபுரம்தான் கட்டவேண்டும் என்றால் 
எடுத்து செருகிக்கொண்டு போட்டோ எடுத்து பேஸ்புக்கிலும் போட்டுகொள்வார்கள் 
இங்கிருப்பவர்கள் உடனே விழுந்தடித்து லைக் போடுவார்கள்.

சீருடை எல்லாம் உலகில் ஏன் இருக்கிறது ?
இதுதான் அணியவேண்டும் என்பது எப்படி தலிபான் ஆகி போகிறது ? 

அடக்குமுறைக்கும் 
சீர்திருத்ததிட்கும் நிறைய இடைவெளி இருக்கிறது .

எமது மண் முன்னேறாமல் கிடப்பதற்கு ஒரே காரணம் படித்தவர்கள் யாரும் இல்லாததால்தான்.
புத்தகத்தை பாடமாக்கி பரீட்சை பாஸ் பண்ணுவது 
யுனி போனால் எதோ யாரும் செய்யாதை செய்தது போல பந்தா கட்டுவது 
இவற்றை வெறும் 5 வீதம்தான் கடந்து அறிவை வளர்க்கிறது. 

பின்பு இங்கின எழுதும் ஒருசிலரை போல படிச்சவன் படிச்சவன் 
என்று தாமே எழுதுவது மற்றவன் பல் இளித்துவிட்டு போகிறான்.

நான் படித்திருந்தால் அதை எனது செயல்கள்தான் காட்டவேண்டும் 
அடுத்தவன் பார்த்து சொல்லவேண்டும் இவர் படித்தவர் என்று.

யாழில் அறிவாளி என்று கை நீட்டி யாரையாவது காட்ட முடிகிறதா ?
எந்த ரோட்டில் திரும்பினாலும் கல்லூரி   
மாணவர்கள் இருக்கும் வீடெல்லாம் படி படி என்ற சத்தம்.
எல்லோருக்கும் அறிவு இருக்கிறது  அதை மூலதனமாக்கி சமூகத்திற்கு அளிக்க 
இந்த பந்தா ஒன்றுதான் தடுக்கிறது.

அறிவு பசி இருப்பவன் இடத்தில் சமூக விழிப்புணர்வு எப்போதும் இருக்கும் 
அவன் கல்வி வளகத்திட்குள் காதலிச்சு கைபிடித்து அலைவேன் என்று அடம்பிடிக்க மாட்டான்.
அதுதான் கல்வி என்று பூதாரம் காட்ட மாட்டன்.
திறந்து விட்டால்தான் படிப்பு வரும் என்று பரபரப்பு காட்டமாட்டன்.
அவனுக்கு அறிவை மேம்படுத்த உயர் கல்விதான் வேண்டும்.
ஆனால் நிலைமை அங்கு வேறாக இருக்கிறது. 

மருதங்கேணியின் முதலாவது கேள்வி:

"யாழ் யுனிக்கு ஏன் நிர்வாணமாக போக முடியாது?"

இந்த கேள்விக்கு சிறந்த பதில் கேள்வியை கேட்பவர் ஒருநாளைக்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு நிர்வாணமாய் சென்று அதன் அனுபவங்களை பெற்றுக்கொள்வதுதான். முடியாதது என்று ஒன்றும் இல்லை. மருதங்கேணி முயற்சி செய்துபார்த்துவிட்டு எங்களுடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். tw_grin:

UoJ_logo.png

மெய்பொருள் காண்பது அறிவு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.