Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர் மன்றம்!

Featured Replies

பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர் மன்றம்!
 
பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய்  ரசிகர் மன்றம்!
தீபாவளி, புதுவருட நாட்களில் சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேகம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள்.
 
இந்நிலையில் விஜயின் தெறி திரைப்படம் வெளியான இன்றைய புத்தாண்டு நாளில் விஜய் நற்பணி மன்றத்தினரால் யாழ்.செல்லா திரையரங்கில்   பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். 
 
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு காலணி,புத்தகப்பை மற்றும் வறுமை கோட்டிலுள்ள இரு குடும்ப தலைவிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்களையும்  வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வழங்கி வைத்தார். 
 
சினிமா கதாநாயகர்களின் கட்டவுட் வைக்கிறார்கள், அதற்கு பாலபிஷேகம் செய்கின்றனர் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற இச்சூழலில் “தளபதி” ரசிகர்களின் இந்த செயற்பாடு முன்னுதாரணமாக திகழ்கின்றது.
 
இதேவேளை கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று வெளிவந்த 'தல" வேதாளம் திரைப்படத்தின் போதும் தல ரசிகர்கள் விசேட தேவையுடையோருக்கு உதவிகள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
                                                        vijay1.jpg
 
                                                        vijAY3.jpg
 
                                                        vijay222.jpg
 
                                                        theri111.jpg
 
                                                        school1211.jpg
 
                                                        vijay111.jpg
 
இது ஒரு ஆபத்தான முன்மாதிரி. இவர்கள் நடிகர்களின் விசிறியாக மட்டுமே இருப்பது நாட்டுக்கு நல்லது. நடிகரின் பெயரால் தமிழ்நாடு போல பொது சேவை செய்வது புறப்பட்டு அரசியலிலும் நுழைய இடம் இருக்கிறது. இந்த செய்தி தமிழ்நாடு போல் ஈழமும் வந்துவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, hasan said:

உண்மை..ஹாசன்!

சின்னக் குழந்தைகளுக்கு மக் டோனால்ட்ஸ் போன்றவை சின்னச் சின்னச் பொம்மைகளை இலவசமாகக் கொடுப்பது போலத் தான் இதுவும்!

நாளடைவில் அந்தக் குழந்தைகள் மச்கோஸ் உணவுக்கு அடிமையாக விடும்!

1280x720-ZFG.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காமினி பொன்சேக்காவுக்கு ரசிகர் மன்றம் வைக்கவில்லை என்று நினைத்து சந்தோசப்படுவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனைபேர் தன்னலமில்லாமல் சமூகத்திற்காக போராடி வீழ்ந்த மண்ணில மக்களை நேசிச்ச ஒருத்தங்களோட பேராட கிடைக்கல உதவிசெய்ய.? பரதேசியோட பேராடா கிடச்சுது உங்களுக்கு? கடவுளே தமிழ்சமூகத்தை புத்தி எல்லாம் பேதலுச்சதுகள் நிறைஞ்சதாய் ஏன் படைச்சாய்?.

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, hasan said:

இது ஒரு ஆபத்தான முன்மாதிரி. இவர்கள் நடிகர்களின் விசிறியாக மட்டுமே இருப்பது நாட்டுக்கு நல்லது. நடிகரின் பெயரால் தமிழ்நாடு போல பொது சேவை செய்வது புறப்பட்டு அரசியலிலும் நுழைய இடம் இருக்கிறது. இந்த செய்தி தமிழ்நாடு போல் ஈழமும் வந்துவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

5 hours ago, புங்கையூரன் said:

உண்மை..ஹாசன்!

சின்னக் குழந்தைகளுக்கு மக் டோனால்ட்ஸ் போன்றவை சின்னச் சின்னச் பொம்மைகளை இலவசமாகக் கொடுப்பது போலத் தான் இதுவும்!

நாளடைவில் அந்தக் குழந்தைகள் மச்கோஸ் உணவுக்கு அடிமையாக விடும்!

1280x720-ZFG.jpg

34 minutes ago, Thirdeye said:

எத்தனைபேர் தன்னலமில்லாமல் சமூகத்திற்காக போராடி வீழ்ந்த மண்ணில மக்களை நேசிச்ச ஒருத்தங்களோட பேராட கிடைக்கல உதவிசெய்ய.? பரதேசியோட பேராடா கிடச்சுது உங்களுக்கு? கடவுளே தமிழ்சமூகத்தை புத்தி எல்லாம் பேதலுச்சதுகள் நிறைஞ்சதாய் ஏன் படைச்சாய்?.

கண்டனம் தெரிவிக்கும் அப்றேசென்டிங்களா,

அப்ப எம் ஜி ஆருக்கும், சிவாஜிக்கும் மன்றம் வைத்தபோது அன்று அவர்கள் செய்த சிரமதானங்கள் பல, அனேகமாக தெரிவதில்லை. ஏனெனில் மக்கள் அலட்டிக் கொள்வதில்லை. ஊடகங்களும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

எம் ஜி ஆர், சிவாஜி புதிய படங்கள் வரும் போது, நல்லூர் மணியம் வரையும் கட் அவுட் ஓவியங்களை பார்க்க, திருவிழா மாதிரி கூட்டம் இருக்கும்.

மணியத்தாருக்கு பரிசுகள் கொடுத்து, தமது ஹீரோக்களை மிக கம்பீரமாக காட்ட, கோரி உற்சாகப் படுத்திய ரசிகர்கள் கூட்டம் இருந்ததே. வெலிங்டன் தியேட்டரில் வசந்த மாளிகை 250வது நாளுக்கு கலண்டர் அடித்து, அன்றைய தினம் படம் பார்த்தவர்களுக்கு கொடுத்த ரசிகர்களும் இருந்தார்கள்.

இப்போ இவர்கள் செய்யும் போது, இன்றைய விரைவு தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் முழுவதும் தெரிகிறது. இன்றும் கூட, எம்மைப் போல் அல்லாது, அங்குள்ள மக்கள் அலட்டிக் கொள்வதில்லை.

குடி கெட்டு விடாது. மக்களின் ஒரு பொழுதுபோக்கு அம்சம். நல்ல விடயமாயின் பாராட்டுவோம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

2 தையல் மிசின் எமது மக்களுக்கு கிடைத்திருக்கு..

யாரு குத்தியும் அரிசியானால் சரி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது சரி நாதமுனி.. ஆனால் இவர்கள் அந்தபடங்களில் வாற தாதா,பஞ்சாயத்து,குழுச்சண்டை,பாலியல்வண்புணர்வு பொன்றவற்றை நடைமுறையிலும் செய்துபார்க்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thirdeye said:

நீங்கள் சொல்வது சரி நாதமுனி.. ஆனால் இவர்கள் அந்தபடங்களில் வாற தாதா,பஞ்சாயத்து,குழுச்சண்டை,பாலியல்வண்புணர்வு பொன்றவற்றை நடைமுறையிலும் செய்துபார்க்கிறார்கள்

அதைத் தடுக்க பொலிசும், எங்கண்ட ஜட்ஜ் ஐயா இளம்செளியனும் அந்த மாதிரி விறைப்பா நிக்கினம்.

இருக்கட்டும்: கமலம் கொலை, ஆனையிறவு உப்பளக் கொலை என்று பழைய கொலைகள் ஒன்றும் கேள்விப் பட வில்லையோ ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்றுக்கொள்கிறேன் நாதமுனி. உங்கள் கருத்தில் யதார்த்தம் இருக்கு. ஆனால் இந்தியா மாதிரி அரசியல சினிமா தீர்மானிக்கிற அளவுக்கு மாறாம இருந்தா போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Thirdeye said:

ஏற்றுக்கொள்கிறேன் நாதமுனி. உங்கள் கருத்தில் யதார்த்தம் இருக்கு. ஆனால் இந்தியா மாதிரி அரசியல சினிமா தீர்மானிக்கிற அளவுக்கு மாறாம இருந்தா போதும்.

அதை நாம் தான் பார்த்துக்கொள்ளணும் ராசா...

அவர்களையும் கொஞ்சம் அனுபவிக்க விடுங்கள் .

வசந்தமாளிகை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கட் அவுட் கட்டி மகிழ்ந்த இளைஞர் கூட்டம் தான் இனப்பிரச்சனை வந்த போது அத்தனையும் துறந்து போராடபோனவர்கள் .

இந்த வயதில் சூழ்நிலைதான் பல விடயங்களை திர்மானிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Thirdeye said:

ஏற்றுக்கொள்கிறேன் நாதமுனி. உங்கள் கருத்தில் யதார்த்தம் இருக்கு. ஆனால் இந்தியா மாதிரி அரசியல சினிமா தீர்மானிக்கிற அளவுக்கு மாறாம இருந்தா போதும்.

இந்திய நடிகர்கள் இங்கு வரப்போவதில்லை.

இங்கு சினிமாவாயின், அர்ஜுன் அண்ணா எடுத்து நான் வில்லன், நீங்க கீரோ ஆக நடித்தால், அரசியலுக்குப் போகலாம்.

என்ன நான் சொல்லுறது சரியோ ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இந்திய நடிகர்கள் இங்கு வரப்போவதில்லை.

இங்கு சினிமாவாயின், அர்ஜுன் அண்ணா எடுத்து நான் வில்லன், நீங்க கீரோ ஆக நடித்தால், அரசியலுக்குப் போகலாம்.

என்ன நான் சொல்லுறது சரியோ ?

நீங்க வேற..

அவரும் கன காலமாக எடுக்கிறதுக்கத்தான் ஆட்களைத்தேடுகிறார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, விசுகு said:

நீங்க வேற..

அவரும் கன காலமாக எடுக்கிறதுக்கத்தான் ஆட்களைத்தேடுகிறார்...

என்ன படம்? 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Thirdeye said:

என்ன படம்? 

நீங்க எடுக்கத்தயாரா??

அர்யூன் அண்ணா

அர்யூன் அண்ணா

அர்யூன் அண்ணா...

படம் எடுக்க அனைத்தும் எப்பவோ தயார் பண்ணியாசு ,

துட்டுக்கு நான் எங்கிட்டு போவேன் .tw_dissapointed:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, arjun said:

படம் எடுக்க அனைத்தும் எப்பவோ தயார் பண்ணியாசு ,

துட்டுக்கு நான் எங்கிட்டு போவேன் .tw_dissapointed:

துட்டில்லாம என்னத்த தயார் பண்ணினீங்கள்?tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பஜட் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

3 minutes ago, MEERA said:

என்ன பஜட் ?

நீங்க எடுக்கத்தயாரா??

அர்யூன் அண்ணா

அர்யூன் அண்ணா

அர்யூன் அண்ணா..

26 minutes ago, MEERA said:

என்ன பஜட் ?

பட்ஜெட் எல்லாம் கிடையாது. சங்கர் படம் மாதிரி, படம் எடுத்து முடியத்தான் பட்ஜெட் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று "தெறி" படம் பார்த்ததில், இப்படியொரு கேள்வியை காவல்துறை உயர் அதிகாரியிடம் ஊடகவியலாளர் கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளதை அறிவீர்களா? what.gif

சினிமா படம் எடுப்பது கடலில உப்பை போட்டுவிட்டு திருப்ப எடுப்பதுமாதிரி ,

படம் நன்றாக வந்தாலும் போட்ட முதல் கிடைப்பது மிக கஷ்டம் .பட விழாக்களுக்கு தெரிவுசெய்யபாடால் கொஞ்ச பணம் கிடைக்கும் அல்லது நாலு நாடுகள் சுற்றி பார்க்கலாம் .

லெனின் எடுத்த  படம் 1999 ,Gun and a Ring .இரண்டுமே நல்ல படங்கள் பல பட விழாக்களுக்கும் சென்றது ஆனால் போட்ட முதல் திரும்பவில்லை .Gun and a Ring $100,000 முடிந்தது என்று நினைக்கின்றேன்.

லெனின் இப்போ மூன்றாவது படம் எடுக்கின்றார் .அதைவிட பெரிய பட்ஜெட் என்று நம்புகின்றேன் .

சென்ற மாதம் நான் பார்த்த சுமதியின் "நியோகா " $30,000 போட்ட முதல். எவ்வளவு வசூல் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்  .

பிரச்சனை இதுதான் நீங்கள் எப்படி நல்ல படம் எடுத்தாலும் சனம் வராது .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

இப்ப படமா?

பணமா??

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காலத்தில் ஜெமினி கணேசன் ஊர் பக்கம் வந்ததாக சொல்லி கொள்வார் அம்மம்மா அப்போதிருந்தே ரசிகர்கள் இருக்குறார்கள் ஆனால் என்ன ரசிகர்கள் சொல்லி கொள்ளும் படி இருந்தார்கள் ஆனால் இப்ப உள்ள சிலர் மட்டுமே சொல்லும் படியாக உள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.