Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது

Featured Replies

பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது
 

article_1462772713-Arasst02.jpg-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்களைக் கைது செய்யப் பொலிஸார் சென்றவேளை, அவர்களில் ஒருவர் பொலிஸார் மீது வாள்வெட்டை மேற்கொள்ள முயன்றுள்ளார். 

இவர்களிடமிருந்து கோடாரி, கைக்கோடாரி, மூன்று வாள்கள், இரும்பு பட்டம், மூன்று இரும்பு பொல்லுகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. 

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தட்டாதெருப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் தொடர்புபட்டிருந்த நிலையில், சிவில் பொலிஸாரினால் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டால் அவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படவில்லை. 

எனினும், குறித்த இரண்டு பேரும், மேலும் இரண்டு பேருடன் இணைந்து நாளுக்கு நாள் அதிகமான குற்றச் செயல்களைச் செய்து வந்தமையால், நால்வரும் கைது செய்யப்பட்டனர். 

சந்தேகநபர்கள் நால்வரும் பாரதூரமான 9 குற்றச்செயல்களுடன் நேரடித் தொடர்பு உள்ளமை அவர்களின் வாக்குமூலத்தின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளது. 

தாங்கள் இரு குழுக்களாகச் செயற்பட்டு இவ்வாறு கொள்ளையடித்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளனர். கொள்ளையடித்த பொருட்களில் பலவற்றை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். 

இவர்களுடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/171769/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.lUqDScOF.dpuf
  • தொடங்கியவர்

யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி கைது!

2 hours Ago | 824 |

800358363aa3ce6436f08ffe836d6433aea.jpg

யாழில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் கொண்ட கும்பலில் அண்மையில் தட்டாதெருச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான செந்தூரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற கொள்ளை, வாள்வெட்டு, வழிப்பறி ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள், கைக்கோடரிகள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பன மீட்கப்பட்டன.

 

யாழ். இந்துக் கல்லூரியின் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரத்தினசிங்கம் செந்தூரன் என்பவரே பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபராவார்.  இவரின்  வழிநடத்தலின் கீழ், பழிவாங்கும் செயற்பாடுகளில் இந்தக் கும்பல் முன்னர் ஈடுபட்டதுடன், காலப்போக்கில் கொள்ளை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. இவர்களுடன் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளனர். இந்தக் கும்பலின் பின்னணியில் செயற்படும் குறித்த நபர் யாழ்.நகரின் ஒட்டுமொத்த குற்றச் செயல்களின் தலைவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம், நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை, மோட்டார் சைக்கிள் திருடிச் சென்றமை, வழிப்பறிக் கொள்ளை, களவு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை, சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளினை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச் செயல்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல குற்றச்செயல்களில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

                                                           d13ed759b0a03369539014569f31b594.jpg

                                                           2274c7d12b1dd31d7ee83ea92ed0e9a7.jpg

http://onlineuthayan.com/news/jaffna/cEs2VVlkU2Vsdms9

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் 

சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை,

26 minutes ago, நவீனன் said:

இது தான் கைது செய்ததற்கான உடனடிக் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாவை அச்சுறுத்திவந்த 'ரொக் டீம்' சிக்கியது.!

Published by Rasmila on 2016-05-09 17:02:10

 

arrest.jpg

யாழ்.குடாவை வாள் வெட்டுச்சம்பவங்களால் அச்சுறுத்தி வந்த பிரதான ஒருங்கிணைந்த குற்றக் குழுவாக கருதப்படும் 'ரொக் டீம்' எனும் பெயர்கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ். பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பதிவான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவே இவர்களை கைது செய்துள்ளது. 

5 பேர் கொண்ட இந்த கும்பலானது தனு ரொக் எனப்படும் 20 வயதான சந்தேக நபரினால் வழி நடத்தப்பட்டு வந்துள்ளதும் அக்கும்பலில் 18 வயதுடைய யாழ். பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரத்தினசிங்கம் செந்தூரன் எனும் மாணவனும் உள்ளடங்குவதாகவும் ஏனைய சந்தேக நபர்களும் அதே பாடாசலையின் பழைய மாணவர்கள் எனவும் வட பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

நேற்று மாலை பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள், கைக்கோடரிகள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் அந்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார். அத்துடன் சந்தேக நபர்களுக்கு சுவிஸர்லாந்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பணம் வங்கி ஊடாக அனுப்பட்டுள்ளமையும் அதனை 'மோட மாமா' என அறியப்படும் நபர் ஒருவரே அனுப்பியுள்ளதாகவும் அதன் பின்னணி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

 

இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,

வடக்கில் பெருகி வரும் வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை கைது செய்யவும் அவற்றை கட்டுப்படுத்தவும் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ.பெர்ணான்டோவின் நேரடி கண்காணிப்பில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.பெரேரா, வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.கணேசநாதன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தம்மிக ஜயலத் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

அதன்படி இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பானது யாழ்.பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கேரலகே தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிரதான பொலிஸ் பரிசோதகர் கேரலகேயின் கீழ் அதன் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் முஜித்த, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் ஆகியோரின் கீழான சிறப்பு விசாரணைக் குழுவினரே  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போதே, விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினம் மாலை யாழ்;ப்பாணம் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20), கல்வியன் காடு, புலவர் வீதியை சேர்ந்த பாடசாலை மாணவனான  ரட்ணசிங்கம் செந்தூரன் (18), கோப்பாய் காளி கோவிலடியை சேர்ந்த கிசோக் என அழைக்கப்படும் பசுபதி கோபால், உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் நிசாந்தன்(23) ,கோப்பாய் தெற்கு பகுதியை சேரந்த சிறி ரஞ்சன் இராகுலன் (22)  ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைதான சந்தேக நபர்களிடம் சிறப்பு விசாரணைகளை நடத்திய பொலிஸார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்களைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம், நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை,  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை போன்ற சம்பவங்களுடன் தொடர்பிருக்கின்றமையை உறுதி செய்துகொண்டனர்.  

அத்துடன் சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளிளை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 9 குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமையையும்  உறுதி செய்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை மேலும் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்த பெருமளவு பணம் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போதே சுவிஸ்லாந்தில் உள்ள 'மோட மாமா' என  குறிப்பிடப்படும் நபர் ஒருவர் இந்த ரொக் டீம் எனப்படும் குற்றக் குழுவுக்கு நிதியுதவி அளித்துள்ளமைக்கான ஆதாரங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த நபர் சுவிஸ்லாந்தில் இருந்து இந்த குழுவுக்கு யாழில் குற்றங்களுடன் கூடிய சூழலை உருவாக்க பணம் வழங்கினாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுவிஸ்லாந்தில் உள்ள நபர் இந்த குழுவுக்கு பணம் வழங்கியமைக்கான காரணம், அதன் நோக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். குற்றத்தடுப்புப் பிரிவு, சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று யாழ். பிரதான  நீதிவான் சதீஷ் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

(எம்.எப்.எம்.பஸீர்) 

 

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

உயர் தர வகுப்பில் கற்கும் ஒரு மாணவன் இப்படியான குற்றச்செயல்களை செய்வானா என்று அதிர்ந்து போனேன். ஒருவேளை போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவனாக இருக்கலாம். எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஒரு மாணவனாக இருந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களை செய்வது சாத்தியமா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vanangaamudi said:

உயர் தர வகுப்பில் கற்கும் ஒரு மாணவன் இப்படியான குற்றச்செயல்களை செய்வானா என்று அதிர்ந்து போனேன். ஒருவேளை போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவனாக இருக்கலாம். எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஒரு மாணவனாக இருந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களை செய்வது சாத்தியமா?

அடாவடித்தனத்தினால்த் தான் உயர் தர வகுப்பிற்க்கு போனாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

உயர் தர வகுப்பில் கற்கும் ஒரு மாணவன் இப்படியான குற்றச்செயல்களை செய்வானா என்று அதிர்ந்து போனேன். ஒருவேளை போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவனாக இருக்கலாம். எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஒரு மாணவனாக இருந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களை செய்வது சாத்தியமா?

அண்ணை அது எனது உங்களது கால உயர்தரவகுப்பு 
இப்போது உயர்தரத்திட்க்கு போவதே இப்படி வேலைகள் செய்யத்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவ காடைகளின் இந்த ஆட்டம் கூடிய சீக்கிரம் நிறுத்தப்பட வேண்டும்.

1 hour ago, colomban said:

தமிழ் மாணவ காடைகளின் இந்த ஆட்டம் கூடிய சீக்கிரம் நிறுத்தப்பட வேண்டும்.

ஆமா. இதுக்கு கைது பண்ணினா சிலர் வந்து மறுபடியும் சொறி லங்கா தேவையில்லாமல் இளைஞர்களை கைது பண்ணுது என்பார்கள் - ஓகேயா 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு யாரும் இங்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. இவ்வளவு நீளம் போகுமட்டும்  காவர்த்தூதர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இளஞ்செழியன் களத்தில் இறங்குமட்டும் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்களாக்கும். இப்ப முடிந்ததை ஏன் முதலே செய்யவில்லை?

யாழ்ப்­பாணம் நக­ரப்­ப­குதி புற­ந­க­ரங்­களில் அண்­மைக்­கா­ல­மாக கொள்­ளை­ய­டித்தல், வாள்­வெட்டு சம்­ப­வங்கள் உள்­ளிட்ட சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ். குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர்   ஞாயிற்­றுக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர். 

 

16526DSC_0129.jpg

 

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து உள்ளூர் கைக்­குண்­டுகள், வாள், கத்தி, கைக்­கோ­டரி உள்­ளிட்ட ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ளர்.

 

 கைது செய்­யப்­பட்ட இக்­கு­ழு­வினர் மீது யாழ்ப்­பாணம், சுன்­னாகம்,கோப்பாய் ,மானிப்பாய் பகு­தியில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பா­டுகள் பல மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

 

இத­ன­டிப்­ப­டையில்  இந்தக் குழு­வி­னரை கைது செய்வதற்காக யாழ்­. குற்றத்­த­டுப்பு பிரி­வினர் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். இதன் போது இந்த ஐவரும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆயு­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

 

16526police16.jpg

 

இக்­கு­ழு­வினர் கடந்த மாதங்­களில் இடம்பெற்ற கொள்ளை, மோட்டார் சைக்கிள் அப­க­ரிப்பு, அத்­து­மீறி வீடு­டைப்பு, சொத்­துக்­க­ளுக்குச் சேதம் விளை­வித்தல், வாள் வெட்டு  உள்­ளிட்ட சட்­ட­வி­ரோத சம்பவங் களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும், அத்­துடன் இக்­கு­ழு­வுக்கு “மானிப்பாய் தனு ரொக்” என அழைக்­கப்­படும் நபரே தலை­வ­ராக செயற்­பட்டு  வந்­துள்­ள­தா­கவும்  ஆரம்ப விசா­ர­ணை­யி­லி­ருந்து தெரிய வரு­வ­தாக பொலிஸார் கூறினர். 

 

இக்­கு­ழு­வினர் யாழ்ப்­பாணம் பொலிஸ் எல்­லைக்­குட்­பட்ட பகு­தியில்   இடம்­பெற்ற முக்­கிய சட்ட விரோத செயற்­பா­டு­களில் முன்­னிலை வகித்­துள்­ளனர்.

 

தட்­டார்­தெரு  சந்தி பகுதி வாள்­வெட்டு, கொக்­கு­வில இந்­துக்­கல்­லூரி அதிபர், ஆசி­ரியர் வீடு­டைப்பு, கொக்­குவில் பகு­தியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் அப­க­ரிப்பு, கந்­தர்­மடம், அரி­யாலை பகுதி வீடு­டைப்பு, சுற்­றுலா பய­ணிகள் பஸ் உடைப்பு, நாயன்மார் கட்டு வீடு­டைப்பு, மோட்டார் சைக்கிள் அபகரிப்பு ஆகியவற்றுடன் இவர்களுக்கு நேரடியாக தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

16526police16.jpg

 

கைது செய்யப்பட்டுள்ள இக்குழுவினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

http://metronews.lk/article.php?category=news&news=16526#sthash.o02wX3RT.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக இந்தக் கும்பல் கைதுசெய்யப்படாது இருந்தமைக்குக் காரணமாக, நிச்சயம் அரசியல்வாதிகள் சிலரும் காரணமாக இருந்திருப்பர். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா. இதுக்கு கைது பண்ணினா சிலர் வந்து மறுபடியும் சொறி லங்கா தேவையில்லாமல் இளைஞர்களை கைது பண்ணுது என்பார்கள் - ஓகேயா 

அட ஆமாப்பா ??

எங்க  கிட்ட வழக்கறிஞர்களும் இருக்குறார்களே ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.