Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் மூட் ஸ்விங்ஸ்... ஆண்களும் புரிந்துகொள்ள!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஞாயிறு காலை 10 மணி.
 
புளூ டிக்குகள் வாழ்வளிக்கும் லவ் சாட் தொடங்குகிறது.
 
"ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே...?"
‘உனக்கே ஓவரா இல்ல? எங்க வீட்டுலயே நான்தான் சுமார் மூஞ்சி குமார்!’
 
"ஆனா, இந்த உலகத்துலயே நீதான்டா அழகன் எனக்கு!"
"சரிடி அழகி. நாளைக்கு காலேஜுக்கு 15 நிமிஷம் முன்னாடி வந்துடு. லைப்ரரியில மீட் பண்ணிட்டு, அப்புறம் க்ளாஸுக்குப் போவோம்...!"
 
"முடியாது. அரை மணி நேரம் முன்னாடி வந்துடுறேன்!"
"லவ் யூ!"
"தெரியும்!"
 
ஞாயிறு மதியம் 1 மணி.
 
"மிஸ் யூ... என்னடி பண்ணிட்டு இருக்க உயிரே?"
"என்னனு சொல்லு?"
 
"சொன்னேனே... மிஸ் யூ!"
"அறிவில்ல? நாலு அரியர் மட்டும் இருக்கு. க்ளியர் பண்ற வழியப் பாரு."
 
"என்ன கண்ணம்மா..? தலைவலி எதுவுமா... லவ் தெரபி கொடுக்கட்டுமா?"
"செருப்பு."
 
ஞாயிறு இரவு 9 மணி.
 
"செல்லம்..."
"சொல்லு...!"
 
"சாப்பிட்டியா...?"
"எரிச்சலா இருக்கு. டோன்ட் மெசேஜ்."
 
"உயிர் வாழ்றதே பார்ட்டைம் ஜாப், உனக்கு மெசேஜ் அனுப்புறதுதான் ஃபுல்டைம் ஜாப்னு வாழ்ந்துட்டு இருக்கிற என்னை..."
 
"போன வருஷம் டிசம்பர் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை... நான் 18 மேசேஜ் அனுப்பினதுக்கு அப்புறம்தான் நீ ரிப்ளை பண்ணின... ஞாபகம் இருக்கா?"
" இல்லையே!"
 
"என்ன தைரியம் இருந்தா உன் ஸ்கூல் டேஸ் இன்ஃபேச்சுவேஷன் பத்தி எங்கிட்டயே ரசிச்சு ரசிச்சு சொல்லுவ...?"
"சொல்லி ரெண்டு வருஷமாச்சே. சொன்னப்போ ‘வாலி’ சிம்ரன் மாதிரிதானே ரசிச்சு கேட்டுட்டு இருந்த..?"
 
"ரசிக்கிற மாதிரி நடிச்சேன். உள்ள எவ்ளோ ஹர்ட் ஆனேன் தெரியுமா? எத்தனை நாள் அழுதுருக்கேன் தெரியுமா?"
 
சாட் சண்டை, இருவரின் இரண்டு வருடக் காதல் நினைவுகளின் கறுப்புப் பக்கங்களை எல்லாம் அவள் கிளறி, அவனைக் கிழித்தெறியும்வரை நீண்டு, இறுதியில்...
 
"அழுது அழுது என் கண்ணே வீங்கிருச்சு. சுமார் மூஞ்சிக் குமாரு இல்லடா... நீ ரொம்ப சுமார் மூஞ்சிக் குமாரு. உன்னைப் போய்... கெட் லாஸ்ட்."
 
முடிவுற்றது.
 
"காலையில ‘அழகன்’னு ஆரம்பிச்சு, இப்போ அழுதுகிட்டே முடிக்கிறாளே? நாம எதுவுமே பண்ணலையே..?" என்று மூளை குழம்பிய அவன், அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றபோது, அவள் லைப்ரரிக்கு வருவாள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், அவள் நின்றிருந்தாள். 
 
"அய்யோ... நிக்கிறாளே..!" - சந்தோஷத்தையும் மீறி, நேற்றிரவு சண்டையின் நீட்சிக்காக நிற்கிறாளோ என, ‘சந்திரமுகி’ ஜோவைப் பார்க்கும் பிரபுவாக அவள் முன் போய் நின்றான்.   
 
"ஸாரிடா... நைட் ஏதேதோ சண்டை போட்டுட்டேன். மூட் ஸ்விங்ஸ். சரி விடு, லவ் யூ. இந்த கருப்புச் சட்டையில, ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே..!"
 
அவர்கள் காதல் தொடரட்டும். நாம் இப்போதாவது மேட்டருக்கு வருவோம்.
 
மூட் ஸ்விங்ஸ்( Mood swings) 
 
பெண்கள் காரணமே இல்லாமல் திடீரென மூட் அவுட் ஆவதும், கோபம், எரிச்சல், அழுகை என்று தன்னை வருத்தி, தன் அன்புக்கு உரியவர்களைப் படுத்தியெடுத்துவிட்டு, பின்னர் தானாகவே சகஜமாகி, சரியாகிவிடுதையும் பார்த்திருப்போம். இந்த மூட் ஸ்விங்ஸ், அடிக்கடி அவர்களுக்கு நிகழும். காரணம்... அவர்களின் மாதவிலக்கு நாட்களை ஒட்டி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்.
 
என்ன நிகழ்கிறது பெண்ணுக்குள்?
 
ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி, பொதுவாக 28 நாட்கள். அந்த சுழற்சியில் அவள் ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் ஹார்மோன். மாதவிலக்கு முடிந்த நாளில் இருந்து சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன் லெவல், இரண்டு வாரங்களில் உச்சம் தொட்டிருக்கும். கருமுட்டை வெளியானதுக்குப் (ஓவுலேஷன் - Ovulation ) பிறகான மூன்றாவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோனின் லெவல் வடிய ஆரம்பிக்கும். மேலும், புரொஜெஸ்டிரானின் ஹார்மோன் லெவலிலும் மாற்றங்கள் ஏற்படும். நான்காவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் படிப்படியாகச் சரியும். இதுதான், மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் நாட்கள். 
 
சுழற்சியின் இறுதி வாரம், 21 - 28 நாட்கள் வரையிலான முன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்கள், பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. அந்நிலைதான் மூட் ஸ்விங்ஸ். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும். 
 
ஹார்மோன்களின் விளைவாக உணர்ச்சிகள் அவளை உயரத்தில் எடுத்துச்சென்று நிறுத்தி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு என விளையாடும். ஆத்திரம், மனச்சோர்வு என இருவேறு மனநிலைகளில் பந்தாடப்படுவாள். மிகச் சிலருக்கு இந்த மூட் ஸ்விங்ஸின் வீரியம் மிகக் கடுமையானதாக இருக்கும். தற்கொலை மனநிலைவரை இழுத்துச் செல்லும். அப்படியானவர்கள், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 
l.png
 
பெண்ணின் நுண் உணர்வுகளோடு விளையாடும் இந்த மூட் ஸ்விங்ஸ் ஆட்டம், ஒரு வாரம், நான்கு நாட்கள், இரண்டு நாட்கள், ஒரு நாள் என ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் உடல்நிலையைப் பொருத்து நீடிக்கும்; சில மணி நேரங்களில்கூட தோன்றி மறையலாம். அவளுக்கு மாதவிலக்கு ஆரம்பிக்கும் நாளில், ஹார்மோன்களின் லெவல் முற்றிலும் வடிந்து சமதளத்துக்கு வருவதுடன், அவளின் அத்தனை மன ஊசலாட்டங்களும் அந்த நாளில் சட்டென மறைந்துபோகும். பின் மாதவிலக்கு முடிவில் இருந்து, மீண்டும் படிப்படியாக எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் அதிகரிக்கும் விளையாட்டு ஆரம்பமாகும். 
மாதம் ஒருமுறை மூட் ஸ்விங்ஸ்!
 
காதலியோ, மனைவியோ மாதம் ஒருமுறை காரணமே இல்லாமல் கத்தினாலும், கண்ணீர்விட்டாலும் கைகோத்து அவளை அதிலிருந்து கரைசேர்க்க வேண்டியதில், ஆண்களுக்கும் பொறுப்புண்டு. அவளைப்படுத்தும் ஊசலாட்டம் அவளால் தவிர்க்க முடியாத, அவள் கைமீறிய விஷயம். அதைப் புரிதலுடன் பொறுத்துக்கொள்ளும் அன்பே, அந்நாட்களுக்கான மருந்து.
 
-தீபிகா
 
  • கருத்துக்கள உறவுகள்

//காதலியோ, மனைவியோ மாதம் ஒருமுறை காரணமே இல்லாமல் கத்தினாலும், கண்ணீர்விட்டாலும் கைகோத்து அவளை அதிலிருந்து கரைசேர்க்க வேண்டியதில், ஆண்களுக்கும் பொறுப்புண்டு. அவளைப்படுத்தும் ஊசலாட்டம் அவளால் தவிர்க்க முடியாத, அவள் கைமீறிய விஷயம். அதைப் புரிதலுடன் பொறுத்துக்கொள்ளும் அன்பே, அந்நாட்களுக்கான மருந்து.//

நல்லதொரு கட்டுரை. பகிர்விற்கு நன்றி பிழம்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அட இதில் இவ்வளவு விசயம் இருக்கா, தெரியாமல் நிறையச் சன்டைகள் பிடிச்சாச்சு....!

போகட்டும் , இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள் மக்களே...!  அவள் கர்ப்பமாகி விட்டால்  10 + 2 = ஒரு வருடம்  நிம்மதியாய் இருக்கலாம்....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி என்னத்தை........காடு வா வா எண்டுது...வீடு போ போ எண்டுது :(

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான விளக்கங்களுடன் நெடுக்கரை எதிர் பார்க்கும் யாழ் உறவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இனி என்னத்தை........காடு வா வா எண்டுது...வீடு போ போ எண்டுது :(

அடச்ச நான் உங்க கிட்ட நெறைய எதிர் பார்த்தேன் எதாவது வாரி வழங்வீர்கள் என்று எதிர் காலத்தில் தேவைப்படும் என்று ??

22 minutes ago, ஈழப்பிரியன் said:

விஞ்ஞான விளக்கங்களுடன் நெடுக்கரை எதிர் பார்க்கும் யாழ் உறவுகள்.

ஹாஹா ஏதாவது கொண்டு வருவார் ?

எங்கேயாவது தூர்வாரிக்கொண்டு இருப்பார்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

விஞ்ஞான விளக்கங்களுடன் நெடுக்கரை எதிர் பார்க்கும் யாழ் உறவுகள்.

இதெல்லாம் விஞ்ஞான விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டவை. சிலதை விஞ்ஞானத்தால் விளக்கலாம். இதை எல்லாம் விளக்க வெளிக்கிட்டா விஞ்ஞானம் தான் வலுவிழந்து போகும்.

பெண்களிடம் இயற்கயாக வரும், செயற்கையாக வரும் இப்படிப்பட்ட இன்னொரென்ன ஸ்விங்களை எல்லாம் எதிர்கொள்ளுற சக்தி இருக்கிறவன் தான்.. பொண்ணுங்களோட சகிச்சுக்கிட்டு வாழலாம். மான ரோசம் பார்க்கிறவன்.. பேசாம பிரமச்சாரியாவதே சிறப்பு. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

விஞ்ஞான விளக்கங்களுடன் நெடுக்கரை எதிர் பார்க்கும் யாழ் உறவுகள்.

இப்ப சந்தோஷமா...! எங்களையெல்லாம் பகிரங்கப் படுத்துவதில் அப்படியென்ன  ஆர்வம் உங்களுக்கு....! நெடுக்கர் உடுக்கு அடிக்கமுதலே சன்னதம் கொள்வார், இப்ப கேட்கணுமா...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்கு அடித்தல் என்றால் என்ன சுவி :grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

உடுக்கு அடித்தல் என்றால் என்ன சுவி :grin:

Afficher l'image d'origineAfficher l'image d'origine

சிவபெருமானின் கையில் அல்லது சூலத்தில் கட்டியிருக்கும் சிறிய மத்தளம் போன்ற தோல் வாத்தியம்.  இது கோயில்களில், குடுகுடுப்பைக் காரர்களிடம் இருக்கும். சாமியாடும் சிறிய கோயில்களில் அந்த சாமியை ஆடவைக்க உடுக்கை வேகமாய் அடிப்பர். அப்போது சாமியின் ஆட்டமும் குறி சொல்லுறதும் வேகமாய் இருக்கும்.சில கோயில்களில் அந்தப் பூசாரியிடம் சாமி நேரத்துக்கே வந்து ஆடத் தொடங்கிவிடும்.  அதைத்தான் உடுக்கு அடிக்க முதலே சன்னதம் கொள்ளுறது என்டு சொல்லுறது....!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

"உடுக்கை இழந்தவன் கை போல்..... " என்றொரு பழமொழி இருக்கு. 
அதுக்கு... என்ன, அர்த்தம் சுவி.  Smiley

Dayata Kirula தயட்ட கிருல்ல கண்காட்சி மேடையில் மாகாணங்களுக்கிடையிலான கலாச்சாரப் போட்டியில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வல்வையின் பாரம்பரிய உடுக்கு வாத்தியக் கலைஞர்கள்

colomban இன் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, suvy said:

சூலம்,குறி என்றால் என்ன ...தலீவா

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இனி என்னத்தை........காடு வா வா எண்டுது...வீடு போ போ எண்டுது :(

குமாரசாமி அண்ணை, 
மருத்துவ உலகிலும்  முன்னணி வகிக்கும், ஜேர்மனி நாட்டில் வசித்துக் கொண்டு.....
காடு, வீடு என்று... பெருமூச்சு விடுவதை, மிக வன்மையாக கண்(ண)டிக்கின்றேன்.
40 வயதை... கடந்த ஆண்களுக்கு, இப்ப கன, விதம் விதமான குளிசைகள் எல்லாம்,
மருந்துக்  கடையில, டாக்குத்தரின் கையெழுத்து இல்லாமல்,  சும்மா... வாங்கலாமாம்.
அதை  ஒருக்கா..... ட்றைவ், சாரி.... றை (Try) பண்ணி பாருங்களேன். Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுவும் தப்பா அபிப்பிராயம். பொதுவாக ஆண்களில் பாலியல் உச்சத்தொழிற்பாடுகள்.. 20 - 24 மற்றும் 40 -45 வரை இருக்குமாம். பெண்களில் 16 - 21, 30 - 35 என்கிறார்கள்.. பாலியல் ஆராய்ச்சியாளர்கள். (இது ஒரு பருமட்டான எல்லை தான்.)

நீங்கள் 40 வயசில குளுசை விழுங்க நிற்கிறீங்க. tw_blush:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

இதுவும் தப்பா அபிப்பிராயம். பொதுவாக ஆண்களில் பாலியல் உச்சத்தொழிற்பாடுகள்.. 20 - 24 மற்றும் 40 -45 வரை இருக்குமாம். பெண்களில் 16 - 21, 30 - 35 என்கிறார்கள்.. பாலியல் ஆராய்ச்சியாளர்கள். (இது ஒரு பருமட்டான எல்லை தான்.)

நீங்கள் 40 வயசில குளுசை விழுங்க நிற்கிறீங்க. tw_blush:tw_angry:

இதுவும் தப்பான ஆராய்ச்சி முடிவு,நாங்க இப்பவும் கம்பு மாதிரி நிக்கிறம்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

"உடுக்கை இழந்தவன் கை போல்..... " என்றொரு பழமொழி இருக்கு. 
அதுக்கு... என்ன, அர்த்தம் சுவி.  Smiley

அது ஜட்டி போடாமல் வேட்டி கட்டுற ஆட்களுக்குச் சொன்னது, உங்களுக்கில்லை....! tw_blush:

2 hours ago, நந்தன் said:

சூலம்,குறி என்றால் என்ன ...தலீவா

சூலம்: அதுதான் சிவனுடன் நட்டுக்கொண்டு நிக்குது...!

குறி: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது..., மேலும் வீட்டில் காணாமல்போன பாக்குவெட்டியிலிருந்து ஓடிப்போன பத்தினிவரை எங்கிருக்கினம், கிடைக்குமா கிடைக்காதா என்று குத்துமதிப்பாய் சொல்லுவது....! 

எனி மோர் டவுட் ப்ளீஸ்....!!  tw_blush:

4 hours ago, தமிழ் சிறி said:

"உடுக்கை இழந்தவன் கை போல்..... " என்றொரு பழமொழி இருக்கு. 
அதுக்கு... என்ன, அர்த்தம் சுவி.  Smiley

1 hour ago, suvy said:

அது ஜட்டி போடாமல் வேட்டி கட்டுற ஆட்களுக்குச் சொன்னது, உங்களுக்கில்லை....! tw_blush:

தமிழ் சிறீ, சுவி அண்ணையிண்ட பதிலை பாக்க இது எதுக்கோ ஞாபகத்தில வருகுது. சரியாக 50 செக்கனில் 1:45 வரை இருந்து பார்க்கவும். 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

இதுவும் தப்பான ஆராய்ச்சி முடிவு,நாங்க இப்பவும் கம்பு மாதிரி நிக்கிறம்tw_blush:

நின்று வேலையில்ல நந்தன், நீங்களும் உங்கள் உடுக்கை அடித்து சன்னதம் கொள்ள வேண்டும்.:grin:

10 hours ago, நவீனன் said:

Dayata Kirula தயட்ட கிருல்ல கண்காட்சி மேடையில் மாகாணங்களுக்கிடையிலான கலாச்சாரப் போட்டியில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வல்வையின் பாரம்பரிய உடுக்கு வாத்தியக் கலைஞர்கள்

colomban இன் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன்..:grin:

நன்றி சுவி / நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.