Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, karu said:

உலக அங்கீகாரமென்பது ஐநா போன்ற யாராவது தரும் சேட்டிபிக்கேற் அல்ல.  உலக அரங்கில் அதற்குக் கிடைக்கக்கூடிய மதிப்பு மரியாதை.  இங்கு  புலி அடையாளத்தைப் பற்றி எதையும் கூறவில்லையே!  புலி புலியாகவேயிருக்கும்.  அதற்குமுன் இரண்டு துவக்குகளைப் போட்டுவிடுவதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டுமென்கிறேன்.  தமிழீழமென்னும் நாடு மலரும்போது அதன்கொடியாக அந்த இரண்டுதுவக்கும் புலியும் இருக்கட்டுமென்று வேண்டுமானால் முடிவு செய்யலாம்.  இது வீட்டு மதிலில் கள்ளர்கள் ஜாக்கிரதையென்று போட்டு இரண்டு காவல்காரர்களைத் துவக்கோடு வரைந்து வைப்பதைப் போன்றது.  திருடர்கள் அதைப் பார்த்துப் பயப்படமாட்டார்கள்.   தமிழர்களின் அடையாளத்தை உலகில் நிறுவியவர்கள் புலிகளே!   அவர்கள் போட்டிருந்த துவக்குகள் தமிழீழத்தை அடைவதற்கான வழியைக் காட்டுவனவேயன்றி அதில் பெரிய கருத்தேதுமில்லை.  இன்றைய அரசியல், ராஜதந்திர அணுகுமுறைகளுக்குள் இந்தத் துவக்குகள் பெரிதாக எந்தவொரு அர்த்தத்தையும் தரப்போவதில்லை.    தற்காலிகமாக அதையிட்டுச் சிந்திப்பதில் தவறேதுமில்லை யென்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் அதுதான்.

துவக்கு இருப்பது ஒன்றும் பிரச்சனையே இல்லை. பல நாடுகளின் தேசியக் கொடிகளில் அரிவாள்.. கத்தி.. ஏன் சிங்களவனின் சிங்கக் கொடியில் வாள்.. எல்லாம் இருக்குது. 

சிங்களவனின் சிங்கக் கொடியில் வாள் என்னத்திற்கு இருக்குது. அவன் என்ன போராடியா சுதந்திரம் பெற்றான்... இல்லையே. 

சிங்களவனின் சிங்கக் கொடியில் இருக்கும் வாளை வைச்சு உலகம்.. சிங்களவனை என்ன தவறாகவா.. கணிப்பிட்டிருக்குது. மாறாக அவனின் இனப்படுகொலைகளைக் கூட மறைச்சு கட்டிக்காக்குதே...??! 

தமிழீழம் ஒரு ஆயுத வழிப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்ட தேசம் என்பதற்கான குறியீடு தான் துப்பாக்கிகளே தவிர அவை வன்முறையைப் பிரதிபலிப்பவை அல்ல.

நாம் எம் தேசியக் கொடியைப் பற்றி சரியாக விளங்கிக் கொண்டிருந்தால்.. அதனை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பக்குவத்தைப் பெற்றிருந்தால்.. இந்தக் குழப்பங்களுக்கு கேள்விகளுக்கே அவசியமில்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

  • Replies 52
  • Views 5.4k
  • Created
  • Last Reply

சர்வதேசம் குத்தின முத்திரை பயங்கரவாதிகள் என்று 

வீதியில் போன வெள்ளை 

குளிக்க வந்த சீனன் 

பக்கத்து வீட்டு கருப்பு இனத்தவர் 

கட்டு காசு கிடைக்காத சீமான் 

இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு புல்லரிக்கும் அறிவை மெச்சத்தான் வேண்டும் .

வீதியில் போறவன் சொல்வதை கேட்பதை விட்டு அந்த அரசு என்ன சொல்லுது என்பதை கேட்பதுதான்.

எங்களுக்கு எண்பதுகளில் விளங்கியது இன்னமும் விளங்காமல் ? 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகலாம்.  அவரவர் கருத்தை மற்றவர் மாற்ற முடியாது.  என்னைப்ஹ பொறுத்தவரை புலி இலச்சனைதான் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னமாகவும்  பாக்கு நீரிணையின் இருபுறங்களிலுமுள்ள தமிழர் தேசங்களின் அதாவது தமிழ் த் தேசியத்தின் அடையாளமாகவும் இருக்க  வேண்டும்..  தமிழீழ நாடென்று ஒன்று உருவாகும்போதுதான், தனியான கொடி அமைய வேண்டும்.  அதைவிட ஓர் தமிழீழ தேசக்கொடியை வைத்திருப்பது வண்டிலுக்குப் பின்னே மாட்டைக்கட்டியது போன்றே உலகுக்குத் தென்படும்.  இதைவிட வேறு எழுதுவதற்கில்லை. 

ஓர் புரட்சிகர விஞ்ஞான சோசலிசப் பாதையில் தமிழர் தேசியத்தைக் கட்டியெழுப்பி அதனை தெற்காசியவின் வலுமிக் சக்தியாக உருவாக்கி, இந்திய வல்லாண்மையின் ஓர் தூணாக நிறுவ முடியுமானால் மட்டுமே சுயநிர்ணய உரிமையுள்ள தமிழீழ தாயகத்தைப் பெற்முடியுமென்பது எனது நம்பிக்கை. இதற்காக  தமிழகமும், தமிழீழமும் கைகோர்த்துச் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக்கொள்வதே ஒரே வழி.  புத்தி ஜீவிகள் சிந்தித்துச் செயற்படுவார்களாக.  எனது பதில்களுக்குக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.

என்னை பொறுத்தவரை -

இது நியாயம் .

இதைத்தானே திரும்ப திரும்ப சொல்லுகின்றோம் .உங்கட ஆசைக்கு எப்படியும் வைத்துகொள்ளுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, karu said:

இதைப்பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகலாம்.  அவரவர் கருத்தை மற்றவர் மாற்ற முடியாது.  என்னைப்ஹ பொறுத்தவரை புலி இலச்சனைதான் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னமாகவும்  பாக்கு நீரிணையின் இருபுறங்களிலுமுள்ள தமிழர் தேசங்களின் அதாவது தமிழ் த் தேசியத்தின் அடையாளமாகவும் இருக்க  வேண்டும்..  தமிழீழ நாடென்று ஒன்று உருவாகும்போதுதான், தனியான கொடி அமைய வேண்டும்.  அதைவிட ஓர் தமிழீழ தேசக்கொடியை வைத்திருப்பது வண்டிலுக்குப் பின்னே மாட்டைக்கட்டியது போன்றே உலகுக்குத் தென்படும்.  இதைவிட வேறு எழுதுவதற்கில்லை. 

ஓர் புரட்சிகர விஞ்ஞான சோசலிசப் பாதையில் தமிழர் தேசியத்தைக் கட்டியெழுப்பி அதனை தெற்காசியவின் வலுமிக் சக்தியாக உருவாக்கி, இந்திய வல்லாண்மையின் ஓர் தூணாக நிறுவ முடியுமானால் மட்டுமே சுயநிர்ணய உரிமையுள்ள தமிழீழ தாயகத்தைப் பெற்முடியுமென்பது எனது நம்பிக்கை. இதற்காக  தமிழகமும், தமிழீழமும் கைகோர்த்துச் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக்கொள்வதே ஒரே வழி.  புத்தி ஜீவிகள் சிந்தித்துச் செயற்படுவார்களாக.  எனது பதில்களுக்குக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.

சீன நலனை பாதுகாப்பதன் ஊடாகவும் ஹிந்தியாவின் ஆதரவை தக்க வைக்கலாம். சிங்களவனும் பாகிஸ்தானியும் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹிந்தியா என்பது ஈழத்தமிழருக்கும் சரி தமிழகத் தமிழருக்கும் சரி ஒரு சார்ப்பு நாடல்ல. அது தன் இருப்புக்கு இவர்களைப் பலிக்கடாவாக வைத்துக் கொண்டிருக்கவே விரும்புகிறது.

அந்த வகையில்.. இந்த ஹிந்திய எதிர்ப்பையும் மீறி.. உருவாக்கப்பட்ட.. தமிழீழத்தின் எந்த அடையாளத்தையும் தமிழர்கள் இழக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவற்றுக்கு கொடுக்கப்பட்டவை உயிர் விலைகள். அதன் பெறுமதி ஈழத்தவருக்குத் தான் அதிகம் தெரியும். அதிலும் ஈழத்தில் மண்ணிற்காகப் போராடியவர்களுக்குத் தான் தெரியும். காட்டிக்கொடுத்தவர்களுக்கு அல்ல. 

ஹிந்தியாவோடு பகைச்சுக் கொண்டும்.. பிறரின் தயவிருந்தால்.. இந்து சமுத்திரத்தில் செல்வாக்கோடு வாழலாம். உ+ம்: பாகிஸ்தான். tw_blush:

இங்கின சிலர் சந்தடி சாக்கில் நாங்களும் இதைத்தான் சொன்னம்.. அதைத்தான் சொன்னம் என்று சந்தியில் சிந்து பாடினம். அவைக்கு அவைட கொடி என்ன நிறமுன்னே இப்ப தெரியாது.

மேலும்.. புலிகள் மட்டும் பயங்கரவாதிகள் மிச்சாக்கள் எல்லாம் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அவைட கையில தூக்கி தமிழீழத்தைக் கொடுத்திட்ட கணக்கில சிலர் கதை அளக்கினம். எல்லாம் ஒரே பயங்கரவாதிகள் தான்...! 

மாலைதீவு பிடிக்கப் போய் ஹிந்தியாவிட்ட வாங்கிக்கட்டிக்கொண்டு வந்து சிங்களவனுக்குள்.. அடங்கினதோட இப்ப தான் புலிகள் உருவாக்கிவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளால வெள்ளை வேட்டில கிளம்பி இருக்கிறம். அதுவும் புலிகள் இனங்காட்டிய சிவப்பு மஞ்சள் கொடியை பிடிச்சுக்கிட்டு. பிரபாகரன் எங்கள் தம்பி என்றுக்கிட்டு. 

இதில.. இவை அவை என்று கொண்டு. ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகளின் சரித்திரம்.. அம்னாஸ்ரியிடம் உள்ளது. tw_blush:

Edited by nedukkalapoovan

2 hours ago, பெருமாள் said:

வேல்ஸ் வெள்ளையின முதியவரிடம் வழி கேட்க்க வழியை சொன்னப்பின் சிரித்தபடியே சகஜமாக 

எங்கிருந்து எந்த நாட்டில் இருந்து  வருகிறாய் ? ஸ்ரீ லங்கா 

வாட் ?

மீண்டும் சொல்கிறன் தெரியவில்லை 

அது எங்கிருக்கிறது? ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் .

அப்படியா எனது காரை கடந்த அந்த வேல்ஸ் பகுதி முதியவர் காரின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் (ஓசி பேப்பர் ?) பழசு அதில் உள்ள புலிக்கொடி படத்தை பார்த்து விட்டு நீ தமிழா ?  கேள்வி ஆம் என்று தலயை ஆட்ட "எனக்கு நன்றாக தெரியும் " 

இதுதான் யதார்த்தம் இதுக்கு மேல் வேறு ஒன்றும் எழுத வேண்டிஇங்கு  இருக்காது .

சிறிலங்கா என்ற நாட்டை பற்றியே தெரியாத வெள்ளை புலி கொடியை பார்த்து தமிழா என்று கேட்பதை நினைத்து புல்லரித்து தப்பிவிட்டீர்கள் ,

இலங்கை பிரச்சனை தெரிந்த வெள்ளை என்றால் புலிக்கொடியை பார்த்து தமிழோ என்று  கேட்டு ஓமென்றால் நாலு சாத்து சாத்தி அனுப்பியிருக்கும் .

தலை தப்பியது உலகம் தெரியாத வெள்ளை என்றபடியால .

தொடர்ந்து அப்படியானவ்ர்களையே சந்தியுங்கள் பிடரிக்கு சேதமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்  யதார்த்தத்தைச் சிந்தியுங்கள்.  காலம் கனிந்து வருகிறது நாம் அதனைப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.  இல்லாத ஊருக்குப் போகும்வழி தேடுவது போல சீனாக்காரனை நம்பி மோசம் போக முடியாது.  சரி!  நன்றி.  இரவு 12 ஐத்தாண்டிவிட்டதால் நிறைவு செய்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, karu said:

கொஞ்சம்  யதார்த்தத்தைச் சிந்தியுங்கள்.  காலம் கனிந்து வருகிறது நாம் அதனைப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.  இல்லாத ஊருக்குப் போகும்வழி தேடுவது போல சீனாக்காரனை நம்பி மோசம் போக முடியாது.  சரி!  நன்றி.  இரவு 12 ஐத்தாண்டிவிட்டதால் நிறைவு செய்கிறேன். 

ஹிந்தியாவை நம்பி அழிந்து போவதைக் காட்டிலும் சீனனை நம்பினால்.. வியட்நாம்.. வடகொரியா மாதிரியாவது.. பாதுக்காப்பட வாய்ப்புள்ளது. நாங்கள் ஹிந்தியாவைப் பற்றி நன்கு சிந்தித்துத் தேறிவிட்டோம். :rolleyes:tw_blush:

யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் சீன இராணுவமும் கடற்படையும் தங்க இடமளித்தால் போதும்..  நாங்கள் அடைய நினைப்பதை அடைய சீனன் உதவுவான். அப்புறம் ஹிந்தியா அமெரிக்கா பின்னாடி சுடுகுது மடியப்பிடின்னு தான் ஓட வேண்டி இருக்கும். அதனால் தான் சிங்களவனை நிறுத்தி வைத்து எம்மை அடிமைகளாக்கி உள்ளனர். இந்த நிலையில் காலம் கனிகிறது என்று.. ஹிந்தியாவை நம்பச் சொல்வது போல் கொடுமை ஏதும் இல்லை. தமிழர் தேசத்தின் அழிவுக்கு முழுக் காரணமும் ஹிந்தியா. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

சிறிலங்கா என்ற நாட்டை பற்றியே தெரியாத வெள்ளை புலி கொடியை பார்த்து தமிழா என்று கேட்பதை நினைத்து புல்லரித்து தப்பிவிட்டீர்கள் ,

இலங்கை பிரச்சனை தெரிந்த வெள்ளை என்றால் புலிக்கொடியை பார்த்து தமிழோ என்று  கேட்டு ஓமென்றால் நாலு சாத்து சாத்தி அனுப்பியிருக்கும் .

தலை தப்பியது உலகம் தெரியாத வெள்ளை என்றபடியால .

தொடர்ந்து அப்படியானவ்ர்களையே சந்தியுங்கள் பிடரிக்கு சேதமில்லை 

இந்த திரியில் உங்களை ஒரு பொருட்டாகவே கருத்துக்கள் வைப்பவர்கள் எடுக்கவில்லை என்றவுடன் என்னிடம் வந்து உங்க பிடரிக்கு நீங்களே அடித்து கொண்டு நிற்கிறது இங்கு லண்டனில் ஓடும் தமிழர்களின் கார்களில் புலிக்கொடி படம் போட்டு ஓடுபவர்களின் பிடரிகளின் சேத விபரங்கள் ஒவ்வொரு மாதமுமும் அனுப்பி வைக்கிறன் உங்களுக்கு சந்தோசமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

இப்படித்தான் 90இன் இறுதியில் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடையில் புதிதாக ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். ஆள் புலிகளுக்கு எதிரானவர், கடையில் அடிக்கடி அரசியல் விவாதம் நடைபெறும். ஒருநாள் கடைக்கு வரும் கறுவல் இவரை பார்த்து "ஹலோ ரமில் ரைகர்" என்று சொல்லிவிட்டான், இவரும் எள்ளும் கொள்ளும் வெடிக்க செம சூட்டில் இருந்த வேளை கூட வேலை செய்யும் பெடியனும் இவரை செமநக்கல். அடுத்த நாள் அந்த கறுவலை இவர் றோட்டில் கண்டு "நீ எப்படி என்னை ரமில் ரைகர்" என்று சொல்லுவாய் என்று கேமை கேட்க அவன் பிரித்து மேய்ந்து விட்டான். 

ஆபிரிக்கன், பிரித்து மேய்ந்து விட்டான் என்றால்....  அந்தப் பெடியனுக்கு....பல்லு, கில்லு கொட்டுண்டு போச்சா......tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கன், பிரித்து மேய்ந்து விட்டான் என்றால்....  அந்தப் பெடியனுக்கு....பல்லு, கில்லு கொட்டுண்டு போச்சா......tw_blush:

முகம் வீங்கி மூக்காலையும் வாயாலையும் இரத்தம் ஓட கடைக்குள் ஓடி வந்து "பொலிசுக்கு அடி பொலிசுக்கு அடி" என்று இவர் கத்த அந்த நேரத்திலும் கூட வேலை செய்யும் பெடியன் "என்ன பொலிசுக்கு அடிச்சு போட்டியளோ" என்று கேட்டு நக்கல். இரண்டு கிழமைக்கு மேல் ஆள் ஐஸ் கட்டியோட. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இதே போல் வல்வை டெலோ குழந்தை நவம் என்றால் தெரியும் அவரின் முக்கிய பொழுது போக்கு புலிதலைமையை திட்டுவதுதான் .மப்பில் வரும்போது இரண்டு கறுவல் இவரை பார்த்து வழமையான எ ....டைகர்  என்று விட்டாங்கள் அவருக்கு பொத்து கொண்டு கோபம் வந்துவிட்டுது அவங்களை கூப்பிட்டு அரசியல் பாடம் எடுக்க அவங்கள் அப்ப நீ உண்மையாவே புலி இல்லையா ?இவர் ஆம் என்றவுடன்  "லிசின் என்று தங்கடை தொழில் கத்தியை காட்டி எல்லாத்தையும் உருவி விட்டாங்கள் நல்ல கடும் குளிரில் விறைக்க விறைக்க குளிர் ஜக்கட்டயும் உருவி விட்டாங்கள் நண்பர்களின் வீட்டுக்கு இரண்டு மணி நேரம் கால்நடையாகவே வந்து சேர்ந்தார் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள் பின்னணியில்

TCC - BTF மோதல் TCC – BTF மோதல்

கடந்த மே மாதம் 18ம் திகதி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் இரண்டு புலம்பெயர் குழுக்களிடையே அருவருப்பான மோதல் ஒன்று நடைபெற்றிருப்பதை ஊடகங்கள் மறைத்திருக்கின்றன. இந்த மோதல் இன்னும் அதிகமாகி சமூகத்தை மேலும் சிதைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தெளிவுபடுத்துவதும், இதன் பின்னால் செயற்பட்ட அழிவு சக்திகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதும் எதிர்காலத்தில் மோதலைத் தவிர்ப்பதும் அவசியமானது.

மோதல் என்பதைவிட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மீதான தாக்குதல் என்பதே சரியாயானது என்பதைத் தகவல்கள் கூறுகின்றன.

TCC அமைப்பு தாக்குதலை ஆரம்பித்தது என்பதை அவர்களே நிராகரிக்கவில்லை. தாம் வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணம் புலிச் சின்னம் தாங்கிய கொடியை BTF ஏந்தவில்லை என்பதே. . பிரித்தானிய போன்ற சட்ட ஒழுங்குகள் இறுக்கமாக உள்ள நாடு ஒன்றிலேயே TCC இன் வன்முறை இது முதல்தடைவையல்ல.

TCC வன்முறையில் ஈடுபடுவதும் அதனை நியாயப்படுத்துவதற்கு என பிழைப்புவாதக் கும்பல் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருப்பதும், வன்முறையை அப்பிழைப்புவாதிகள் நியாயப்படுதுவதும் வழமையானது.

இந்த நிலையில் பீரீஎப் இன் சார்பில் பேசவல்ல ஒருவரைத் தொடர்புகொண்ட வேளையில் வழங்கப்பட்ட தகவல்களையும் அதன் பின்னர் பெறப்பட்ட பொதுவான தகவல்களையும் அடிப்படையாக்கொண்டு நடந்த சம்பவங்களின் சாராம்சத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் இங்கே தருவதற்கு முயற்சிக்கிறோம்.

மோதல்கள் தொடர்பான பீரீஎப் இன் கருத்து:

“முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேடையை அமைப்பதகென பிரித்தானியத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்து பிரித்தானிய போலிஸ் பிரிவிடம் அனுமதி பெற்றிருந்தது. ரீசீசீ ஐச் சேர்ந்த சிலர் பீரீஎப் இற்கு முன்னதாகவே மேடை அமைக்கப்படுவதற்கான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

TCC இன் வன்முறை TCC இன் வன்முறை

அங்கு பீரீஎப் மோதலைத் தவிர்த்துக்கொண்டு மேடை அமைப்பதற்கு சற்றுத் தொலைவில் வேறு இடத்தைத் தெரிந்தெடுத்துக்கொண்டது. அதன் பின்னர் மேடையை வாகனம் ஒன்றில் கொண்டுவந்த பீரீஎப் இனரை ரீசீசீ குழுவினர் இடைமறித்து தங்களை மக்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிரட்ட ஆரம்பித்தனர். வாய்த்தர்க்கம் தள்ளுமுள்ளு என்பன அதிகரிக்கும் அந்த இடத்தில் மதுரா என்றழைக்கப்படும் ரீசீசீ இன் முக்கிய உறுப்பினரும் நின்றிருந்தார்.

இக்குழுவிலிருந்து பீரீஎப் சுதாகரித்துக்கொண்டு மேடை அமைப்பை முடித்துவிட்டு அங்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மேடையில் ஏறி அமர்ந்த ரீசீசீ குழுவினர் கொடி ஏற்றாமைக்கான காரணத்தை பீரீஎப் கூறியாகவேண்டும் என மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் அங்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் சிலர் நிகழ்வை விட்டு விலகிச் சென்றனர். இவ்வேளையில் இந்த நிகழ்வுகள அனைத்தையும் பதிவு இணையத்தளத்தின் எழுத்தாளர் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார். ரீசீசீ இன் பின்னணியில் செயற்படும் ரஞ்சித் என்ற இவர் மோதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கியமானவர்.”

உலகம் முழுவதும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. ஈழத் தமிழர்களின் போராட்டம் மட்டுமே இவ்வளவு இலகுவாகவும் விரைவாகவும் உலக சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒரு சில நாடுகளின் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் சிறிய மூலை ஒன்ற்றினுள் மனிதகுலத்தின் ஒரு பகுதி அழித்துச் சிதைக்கப்பட்ட போதும் உலகின் மனிதாபினானிகள் மத்தியில் அவை எடுத்துச்செல்லப்படாமல் அழிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் புலம்பெயர் அமைப்புக்களே. பல்ஸ்தீனிய விடுதலைப் போராட்டமாகட்டும், குர்தீஸ் மக்களின் விடுதலைப் போராட்டமாகட்டும். பிலிப்பைன்ஸ் விடுதலைப் போராட்டமாகட்டும், ஏன் இந்திய மாவோயிஸ்டுக்களின் போராட்டமாகட்டும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஜனநாயகவாதிகள் மத்த்யிலும் மக்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லப்பட்டு சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் மட்டும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக குறுகிய வட்டத்தினுள் முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் அதன் கூறான ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசை கையாளும் அதே வேளை அமெரிக்க அணியின் பின்னால் புலம்பெயர் அமைப்புகள் அணிவகுக்க, மொத்தப் போராட்டமும் அமெரிக்க அணியிடமும் அதனூடாக இலங்கை அரசிடமும் முடக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கான காரணம் தற்செயலானதல்ல. தெளிவாகத் திட்டமிடப்பட்டுச் நகர்த்தப்படும் செயற்பாடாகும். உலகின் விடுதலைப் போராட்டங்களிலிருந்து மாறுபட்டு திட்டமிட்டு அழிக்கப்பட்டதன் பின்னணியில் பிரித்தானிய உளவுத்துறையும் செயற்பட்டிருக்கிறது.

இச் செயற்பாட்டின் மற்றொரு ஆதாரமாக அமைந்தது அடையாளங்களாகும். ரீசீசீ ஐப் பொறுத்தவரை, அவர்கள் முன்வைக்கும் ஒரே அரசியல் இதுதான் “புலி இலச்சனை பதிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடியை ஏந்தாத அனைவரும் துரோகிகள்” என்பதே அவர்களின் முழு முதற் கோட்பாடு.

LTTE-Flagஇக் கொடியை துக்கிக்கொண்டு தெருக்களில் செல்பவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்களாகட்டும். மைத்திரி அரசின் அடிமையாகளாகட்டும், இலங்கை அரசிற்கு ஆயுதம் வழங்கி ஊக்குவித்த பிரித்தானிய அரசின் உளவாளிகளாகட்டும் அவர்கள் ரீசீசீ இன் ஆசீர்வாதம் பெற்று அதன் போராளிகள் வட்டத்தினுள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவ்வாறு கொடியைக் கொண்டு செல்ல மறுக்கும் அனைவரும் அவர்களைப் பொறுத்தவரை துரோகிகள். அவர்கள் இலங்கை அரசிற்கு எதிரானவர்களாயினும், மக்களுக்குக்காக உயிரைக் கொடுக்கத் தயாரானவர்களாயினும் துரோகிகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இதன் மறுபக்கத்தில் இலங்கையில் முள்ளிவாய்க்காலின் பின்னால் நடத்தப்படும் அழிவுகளுக்கு எதிராக ரீசீசீ இதுவரை எதையாவது முன் நகர்த்தியிருக்கிறதா எனக் கேட்டால் பதில் கிடையாது. மாவீரர் தினம் வரும் வரைக்கும் காத்திருந்து, அதில் கிடைக்கும் வருமானததை பகிர்ந்துகொள்ளும் வியாபாரத்தைத் தவிர ரீசீசீ இதுவரைக்கும் எதையும் சாதித்ததில்லை.

அவ்வப்போது ராஜபக்ச பிரித்தானியா வருகின்ற போதும், ஜெனீவாவில் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற போதும், புலிக் கொடிகளுடனும், பிரபாகரனின் உருவப்படத்துடனும் பொதுமக்களை அழைத்துச் சென்று ‘எமது மண் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்’ என முழக்கமிடுவதைத் தவிர இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையுடனான உருவப்படத்தைக் கண்ட ஐரோப்பியப் பொதுமக்கள் அவரை இலங்கை இராணுவ அதிகாரிகளில் ஒருவர் எனக் கேட்ட சம்பவங்களும் உண்டு.

குறுக்கு வழிகளில், தமக்கு ஆதரவானவர்களை இணைத்துக்கொண்டு ஒரு சந்தர்ப்பவாதிகள் கூட்டம் ஒன்றை தோற்றுவித்துள்ள இக் குழுவினரை இன்று இயக்குவது பிரித்தானிய உளவுத்துறை என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்திருக்கிறோம். இதன் மேலதிக ஆதாரங்கள் இக் கட்டுரையைத் தொடர்ந்து முன்வைக்கப்படும்.

இன்று ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் செயற்படும் மக்களவை, நாடுகடந்த தமிழீழம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை இணைத்து அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதே வேளை பிரித்தானிய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக ரீசீசீ இயங்குவதற்கான ஆதாரங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும்.

எந்த அரசியல் திட்டமும் இல்லாமல் புலி இலச்சனை பதிக்கப்பட்ட கொடி ஒன்றை கைகளில் ஏந்தி ‘எமது தலைவர் பிரபாகரன்’ என பிரித்தானியத் தெருக்களில் வலம் வருவத மட்டுமே போராட்டம் என மக்களை நம்பவைத்து ஏமாற்றிய ரீசீசீ குறித்த கொடியை ஏந்தாத அனைவரும் துரோகிகள் எனக் கூறுவதற்கான காரணம் எதனையும் முன்வைக்காதது போல பீரீஎப் கொடியை ஏந்தக்கூடாது என்பதற்கும் எந்த வலுவான காரணத்தையும் முன்வைக்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஏழு வருடங்களில் போராட்டத்தை அழித்த ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளும் அவற்றால் இயக்கப்படும் இலங்கை அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளன. அழிவுகள் திட்டமிட்ட வேறு வடிவங்களில் தொடர்கின்றன. பல்தேசிய நிறுவனங்களால் தேசியப் பொருளாதாரம் அழிக்கப்பட அவற்றை ஆதரிக்கும் அரசியல் வாதிகள் அழிவைத் துரிதப்படுத்துகின்றனர். நில ஆக்கிரமிப்பும் அழிப்பும் தொடர்கின்றன. சுன்னாகம் அழிப்பிற்குப் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனம் புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்களின் முகவர்களான சீ.வீ.விக்னேஸ்வரன், ஐங்கரனேசன் ஆகியோரால் பாதுகாக்கப்படுகின்றது. நுகர்வுக் கலாச்சாரம் எமது தேசியக் கலாச்சாரத்தைப் பிரதியிட அந்த இடைவெளிக்குள் சிங்கள பௌத்த பேரினவாதம் தனது நிலைகளை நிறுவிக்கொள்கிறது.

ரீசீசீ பிரித்தானிய உளவுத்துறையின் செல்லப்பிள்ளை என்றால், பீரீஎப் பிரித்தானிய அரச அதிகாரத்தின் அடிவருடிகள் போன்று செயற்படுகின்றனர். உலகின் பதினாறுக்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள். வன்னி இனப்படுகொலையின் பின் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தியாகங்களையும் அவலங்களையும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியங்களிடம் ஒப்படைத்து அதன் ஊடாக இலங்கை அரசிடம் ஒப்படைத்த குற்றச் செயலுக்கு பிரித்தானியத் தமிழர் பேரவையும் துணை சென்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் இந்த இரண்டு அமைப்புக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இந்த ஏகாதிபத்தியங்களும் அவற்றின் நேரடி முகவர்களுமேயாகும்.

http://inioru.com/confrontation-tcc-and-btf/

  • கருத்துக்கள உறவுகள்
 
"இந்த நிலையில் பீரீஎப் இன் சார்பில் பேசவல்ல ஒருவரைத் தொடர்புகொண்ட வேளையில்"
ஏன் இவருடைய பெயரை வெளிப்படுத்த தயக்கம்?
பிரித்ததானிய உளவுத்துறையின் செல்லப்பிள்ளை ரீசீசீ என்றால் ரீசீசீ தான் பலம் வாய்ந்தது. 
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இன்னொரு தனக்குத்தானே மண் போட்டுள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹஹஹ..புலிகளே இல்லையாம்.. இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியல.. சிங்களவனுக்கு இதுகள பாத்தா சிரிப்பு சிரிப்பா வரும்.. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

மீண்டும் இன்னொரு தனக்குத்தானே மண் போட்டுள்ளது .

இது இன்னொருவின் பினாமி இனியொரு. இப்படி இப்ப நிறைய இணையக் காளான்கள் முளைக்கவிடப்பட்டுள்ளன. இந்திய.. சொறீலங்கா உளவுப் படைகளால்... அவற்றிற்கு அடிவருடும் ஒட்டுக்குழுக்கும்பல்களால். இது எல்லாம் கடந்த காலங்களிலும் நடந்தவை தானே. காலம் இவற்றை எல்லாம் கடந்து போகும்.

301765_408912409133508_1673824839_n.jpg?

575457_408913469133402_278165000_n.jpg?o

ஒஸ்திரேலியச் தொழிற்சங்கக் கூட்டமைப்புக் கட்டிடத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றிவைக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி. (2012)

உண்மையும் சத்தியமும் தர்மமும் வலியது. அதுவே இறுதியில் நிலைக்கும். குழப்பங்களும் குழப்பவாதிகளும் கூடும் மேகங்கள் போல.. தற்காலிக நிழல்கள் படரலாம்.. உண்மைகள் இருளுக்குள் ஓளிக்கப்படலாம்.. படுவது போல் தோன்றும். ஆனால் சூரியனை தகர்க்க முடியாது.  tw_blush:

Edited by nedukkalapoovan

30 வருசமா வன்முறைகளை விசிலடித்து ஊக்குவித்தது இப்ப யாழில வாள் வெட்டு கலாச்சாரமாவும் புலம்பெயர் தேசங்களில குழு வன்முறை கலாச்சாரமாவும் வந்து நிக்குது. கொடி பிடிக்க ஆசைப்பட்டால் ஓரமா போய் கொடியோட ஒரு நிகழ்வை வைக்கிறது..அதை விடுத்து இப்படி அடுத்தவர்களை வெருட்டுவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. 
நினைவு தினங்களை குழப்பும் இந்த ரவுடி கும்பல்களின் மீது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும். சிறைக்குள்ள கறுவல்களிடம் நாலு சாத்து வாங்கினார்களென்டா வாலையும் கொடியையும் சுருட்டி வைப்பார்கள். 

On 23/05/2016 at 2:03 AM, MEERA said:

முகம் வீங்கி மூக்காலையும் வாயாலையும் இரத்தம் ஓட கடைக்குள் ஓடி வந்து "பொலிசுக்கு அடி பொலிசுக்கு அடி" என்று இவர் கத்த அந்த நேரத்திலும் கூட வேலை செய்யும் பெடியன் "என்ன பொலிசுக்கு அடிச்சு போட்டியளோ" என்று கேட்டு நக்கல். இரண்டு கிழமைக்கு மேல் ஆள் ஐஸ் கட்டியோட. 

அஹா அடுத்தவன் ரத்தம் வழிய அவதிபடும் போதும் அவன் புலி தேவாரம் பாடாத ஒரே காரணத்தினால அவனது கஷ்டம் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. சொந்த இன இளைஞர்கள் டயர் போட்டு எரிந்து சாம்பலானதையே நியாயப்படுத்தும் ஒரு கீழ்தரமான கூட்டத்திடம் இதை தவிர வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தெனாலி said:

தனது தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய போராளிகளை இழிவு படுத்தும் ஒருவன்... தமிழனே அல்ல.
அவன்... தன்னுடைய வாயால், ஆபிரிக்கனிடம் அடி வாங்கியது.... வரவேற்கப் படக் கூடியதும், மிக்க மகிழ்சியானதுமான விடயம்.
எந்த நாட்டிலும், எவன் தனது இனத்துக்கு..... எதிராக இருக்கின்றானோ... அவனை அந்த இனம், தண்டிக்கும். இது தான் யதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தெனாலி said:

அடி வாங்கினவருக்கு இது வீங்கின வேலைதானே, கறுவல் அவரை அவ்வாறு அழைத்ததால் இவர் குறைந்து விட்டாரா?

சொந்த தமிழ் மக்களை சிங்களவன் அழித்ததை  நியாயப்படுத்தும் ஒரு கீழ்தரமான கூட்டத்திடம் இதை தவிர வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது தான்.

"தம்பி மாரை கொன்றவனுக்கு வாழ்த்து பாடினாய்,
உன் தங்கை கற்பை தின்றவனுக்கு மாலை சூடினாய்.
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாள்ளும் இல்லை நேர் வழி.."

9 hours ago, தெனாலி said:

30 வருசமா வன்முறைகளை விசிலடித்து ஊக்குவித்தது இப்ப யாழில வாள் வெட்டு கலாச்சாரமாவும் புலம்பெயர் தேசங்களில குழு வன்முறை கலாச்சாரமாவும் வந்து நிக்குது. கொடி பிடிக்க ஆசைப்பட்டால் ஓரமா போய் கொடியோட ஒரு நிகழ்வை வைக்கிறது..அதை விடுத்து இப்படி அடுத்தவர்களை வெருட்டுவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. 
நினைவு தினங்களை குழப்பும் இந்த ரவுடி கும்பல்களின் மீது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும். சிறைக்குள்ள கறுவல்களிடம் நாலு சாத்து வாங்கினார்களென்டா வாலையும் கொடியையும் சுருட்டி வைப்பார்கள். 

அஹா அடுத்தவன் ரத்தம் வழிய அவதிபடும் போதும் அவன் புலி தேவாரம் பாடாத ஒரே காரணத்தினால அவனது கஷ்டம் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. சொந்த இன இளைஞர்கள் டயர் போட்டு எரிந்து சாம்பலானதையே நியாயப்படுத்தும் ஒரு கீழ்தரமான கூட்டத்திடம் இதை தவிர வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது தான். 

எந்த விடயத்திற்கும் வன்முறை தீர்வல்ல .அது ரவுடிகளின் ஆயுதம் .

வன்முறைக்கு சர்வதேசம் கொடுத்த பரிசு கண்ணால் கண்டோம் தானே .

5 hours ago, MEERA said:

அடி வாங்கினவருக்கு இது வீங்கின வேலைதானே, கறுவல் அவரை அவ்வாறு அழைத்ததால் இவர் குறைந்து விட்டாரா?

சொந்த தமிழ் மக்களை சிங்களவன் அழித்ததை  நியாயப்படுத்தும் ஒரு கீழ்தரமான கூட்டத்திடம் இதை தவிர வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது தான்.

"தம்பி மாரை கொன்றவனுக்கு வாழ்த்து பாடினாய்,
உன் தங்கை கற்பை தின்றவனுக்கு மாலை சூடினாய்.
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாள்ளும் இல்லை நேர் வழி.."

புலி புராணம் பாடவில்லை என்றால் அவர்கள் சிங்களவனை நியாயப்படுத்துகிறார்கள் என்று மொக்குத்தனமா சிந்திப்பதை முதிலில் நிறுத்த வேண்டும். 

இப்படி வன்முறைகளை ஊக்குவிக்கும் அடுத்தவர் அழிவில் சுய இன்பம் பெறும் ஒரு கூட்டம் ஒரு தலைமுறையோடு இல்லாமல் போனது தான் நிம்மதி. 

7 hours ago, தமிழ் சிறி said:

தனது தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய போராளிகளை இழிவு படுத்தும் ஒருவன்... தமிழனே அல்ல.
அவன்... தன்னுடைய வாயால், ஆபிரிக்கனிடம் அடி வாங்கியது.... வரவேற்கப் படக் கூடியதும், மிக்க மகிழ்சியானதுமான விடயம்.
எந்த நாட்டிலும், எவன் தனது இனத்துக்கு..... எதிராக இருக்கின்றானோ... அவனை அந்த இனம், தண்டிக்கும். இது தான் யதார்த்தம். 

உங்கள் பிள்ளைகளாவது இப்படி வன்முறை பிரியர்களாக வளர மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தெனாலி said:

புலி புராணம் பாடவில்லை என்றால் அவர்கள் சிங்களவனை நியாயப்படுத்துகிறார்கள் என்று மொக்குத்தனமா சிந்திப்பதை முதிலில் நிறுத்த வேண்டும். 

இப்படி வன்முறைகளை ஊக்குவிக்கும் அடுத்தவர் அழிவில் சுய இன்பம் பெறும் ஒரு கூட்டம் ஒரு தலைமுறையோடு இல்லாமல் போனது தான் நிம்மதி. 

நீங்கள் முதலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆராயாமல் மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்த வேண்டும். 

விளக்கம் இல்லாமல் எழுதி, சுய இன்பம் பெறும் இந்த கூட்டம் எப்ப திருந்தப் போகிறதோ? 

On 24/05/2016 at 8:25 AM, Thirdeye said:

ஹஹஹ..புலிகளே இல்லையாம்.. இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியல.. சிங்களவனுக்கு இதுகள பாத்தா சிரிப்பு சிரிப்பா வரும்.. 

ஏன் நான் சிரிக்க மாட்டேனா?  சிரிக்கிறனே!

என்னையும் சிங்களம் எண்டு சொல்ல வேண்டாம்   ப்ளிஸ் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2016 at 9:49 AM, திராவிட மாணவன் said:

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர் ஒற்றுமை அடையாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

அட திருட்டு திராவிடம் இங்கேயும் எட்டிப்பாக்குதா ....?
மக்களே அவதானம் பொது எதிரிகள் வருகிறார்கள் ...நீங்கள் புலிகளை பற்றி எப்படியாவது பிடுங்குபடுங்கள் ..
ஆனால் திராவிடம் பொது எதிரி ...ஞாபகம் வைத்துகொள்ளுங்கள் 
                                                                                                  (உபயம் :சை கோ)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.