Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !

Featured Replies

  • தொடங்கியவர்
2 hours ago, தமிழ் சிறி said:

படத்தில்.. எல்லைக்கு, நடப்பட்டுள்ள, மரக் கட்டைகள்  (குத்திகள்)  எல்லாம், ஏன் மேல் பக்கம் கூராக உள்ளது.
ஏனென்றால்.... இங்கு, கூரான  பக்கத்தை, அந்த,  ஈர  மண்ணில் இடித்து இறக்குவது வழமை.
நீங்களும்.... ஐரோப்பாவில், இருந்த படியால், 
எங்கடை சனம், கதியாலை....தலை கீழாய் நட்டுப் போட்டினமோ... என்று தெரியவில்லை.
அல்லது...  கூர் பக்கம், மேலே இருக்க.... சமய நம்பிக்கைகளும் காரணமாக இருக்குமோ...... 
மண்டை... மீண்டும்.... விறைக்குது.  34.gif

இராணுவம் எல்லாத்தையும் இங்கு தலைகீழாகத்தான் செய்யுது. உதாரணத்துக்கு நடேஸ்வரா கல்லூரி மைதானத்தை தோட்டமாக்கிவிட்டு ஒரு தோட்டத்தை மைதானமாக்கி இருக்கிறார்கள். ஒரு கோவிலில் இருந்த அம்மன் விக்கிரகத்தை எடுத்துவிட்டு தூபியில் இருந்த அம்மன் சிலையை உள்ளே வைச்சு கும்பிட்டிருக்கிறானுகள். கட்டை கூராக இருப்பதுக்கு காரணம் எவனாவது ஏறிக்குதிக்க முற்பட்டால் குத்தட்டும் என்றுமிருக்கலாம். 

இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது அல்லது சிரிப்பது. எதோ உங்களை மாதிரி நண்பர்கள் களத்தில் இருப்பதால் இதை எல்லாம் பகிர முடியுது.

இதுக்கே மண்டை விறைச்சா எப்படி?:grin:

  • Replies 181
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படங்களில் உள்ள... மரக் குற்றிகள், எல்லாம்...  மேற்கு உலகத்தில் வளர்த்த, சவுக்கு மரங்கள்.
இங்கு புயல் அடிக்கும் போது.... காத்தோடு, சாய்வது.... அந்த மரத்துக்குள் சில பூச்சி , புழுக்கள் இருந்து.....
இயற்கை சம நிலையை......   பாதிக்கும் அபாயம், இருந்தால்.... 

மூன்றாம் உலக நாடுகளுக்கு, அன்பளிப்பாக கொடுத்து விடுவார்கள். அது, நஞ்சு 

  • தொடங்கியவர்
1 hour ago, தமிழ் சிறி said:

படங்களில் உள்ள... மரக் குற்றிகள்,

இவை இப்பில் இப்பில் குத்திகள்.

மற்றயது மரக்குத்திகளால் வேலி போடப்பட்டால் அது விரைவில் விடப்படும் பகுதி என்றும் சீமெந்து தூணில் வேலி போட்டால்  இப்போதைக்கு இல்லை என்று அர்த்தமாம் என்று இங்குள்ளவர்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இராணுவம் எல்லாத்தையும் இங்கு தலைகீழாகத்தான் செய்யுது. உதாரணத்துக்கு நடேஸ்வரா கல்லூரி மைதானத்தை தோட்டமாக்கிவிட்டு ஒரு தோட்டத்தை மைதானமாக்கி இருக்கிறார்கள். ஒரு கோவிலில் இருந்த அம்மன் விக்கிரகத்தை எடுத்துவிட்டு தூபியில் இருந்த அம்மன் சிலையை உள்ளே வைச்சு கும்பிட்டிருக்கிறானுகள். கட்டை கூராக இருப்பதுக்கு காரணம் எவனாவது ஏறிக்குதிக்க முற்பட்டால் குத்தட்டும் என்றுமிருக்கலாம். 

இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது அல்லது சிரிப்பது. எதோ உங்களை மாதிரி நண்பர்கள் களத்தில் இருப்பதால் இதை எல்லாம் பகிர முடியுது.

இதுக்கே மண்டை விறைச்சா எப்படி?:grin:

வேவு நடவடிக்கைகளின் போது அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காக செய்வார்கள். ஏற்கனவே இருந்த வீதியை மூடிவிட்டு காணிகளுக்கால் வீதி அமைத்தல், பெரிய கட்டடங்களை இடித்தல் இப்படி பல 

  • தொடங்கியவர்

1984 அக்டொபேர் 31

வழமை போல் அப்பு அண்ணை வீட்டில் இருந்து வம்பளந்து மட்டுமில்லாமல் அர்த்தமேயில்லாத கதைகளை பேசி அதற்கும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார் - எல்லோருக்கும் அதிர்ச்சி. செய்வதறியாது நின்ற நேரம் அது. எமக்கெல்லாம் ஒரு விடிவை அவர் தருவார் என்று நம்பிய இளவயது.

1984 நவம்பர் 1

அடுத்த நாள் என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் இருந்த எமக்கு (Friends club) தையிட்டியில் ஒரு வாழைத்தோட்டம் அழிக்கப்படப்போவதாக தகவல் வருகிறது. உடனேயே இருவரை அனுப்பி தகவலை உறுதிசெய்துகொண்டோம். தோட்ட உரிமையாளரும் எத்தனை வாழைகள் வேண்டுமானாலும் வெட்டுங்கள் என்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கையாக நண்பர்கள் இருவரை அனுப்பி தையிட்டியைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் லாரி உதவி கேட்டோம். சந்திரனும் நண்பர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு லாரியுடனேயே வந்துவிட்டார். அப்புறம் என்ன அனைத்து வானரங்களும் லாரியினுள் கத்திகளுடன் தொத்தினோம்.

மானம்பூவில் மட்டுமே வாழை வெட்டை பாத்த எமக்கு ஒரு வாழைத் தோட்டமே கண்முன்னால், கையிலோ கத்தி. விடுவமா நாங்கள், ராசாக் குருக்களின் வாழை வெட்டு ஸ்டைல் முதல் எம் ஜி ஆரின் வாள்ச்சண்டை வரை ஒத்திகை பாத்தோம்.

சிலநிமிடங்களிலேயே அழகான வாழைத்தோட்டம், கவுண்டமணியிடம் அடிவாங்கிய செந்தில் போல அலங்கோலமானது. கடைக்கார ராசையா அண்ணையும், அய்யாத்துரை கடையிலிருந்து கிளி அண்ணையும் நிறைய கயிறும் தந்தார்கள். ஒரு மாதிரி எல்லாத்தையும் அள்ளி லாரியில் போட்டுக்கொண்டு போய் காங்கேசன்துறையில் ஒரு லைட் போஸ்ட் மிச்சமில்லாமல் கட்டினோம்.

களைத்துப்போய் வந்தாலும் அப்பு அண்ணையின் வீட்டில் ஒரு இடைத்தரிப்பை மேற்கொள்ளாது வீட்டை போவது என்பது வழமைக்கு விரோதமாகையால் அங்கேயே குந்திவிட்டோம். அன்ரியும் தேத்தண்ணி போட்டுத் தந்தா.

களைப்பும் காத்தோடு கரைந்துவிட, சரி இப்ப என்ன பண்ணலாம் என்ற யோசனைக்கு கண்ணில் காட்ஸ் பாக்கெட் படுகுது. 304 இல் எண்பது, நூறு, இரு நூற்றி ஐம்பது என்று காப்ஸ் வரை சுவாரஸ்யமாகவே போனது பொழுது. ஆனாலும் உந்த காப்ஸ் அடிப்பவனை விட அதில் பிழை கண்டுபிடிப்பதில்தான் ஒரு திரில் இருப்பது பலருக்கு எனோ புரிவதில்லை.

அன்றும் அப்படியே காப்ஸ் அடித்தவனுக்கு எதிரான சண்டை மும்மரமா நடை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் திடீரென ஒரு அமைதி. யாரும் வாய் திறக்கவில்லை. எல்லோர் தலையிலும் துப்பாக்கியை வைத்தபடி இராணுவம். அப்பு அண்ணையின் வளவு முழுவதும் இராணுவம்.

அப்புறம் 13 போரையும் அள்ளிக்கொண்டு போய் நல்லா கவனித்தார்கள். பதினோராவது நாள் என்னையும் இன்னொரு நண்பனையும் விடுதலை செய்தாங்கள். தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமா விடுதலையாக அப்பு அண்ணையின் இரு சகோதரர்கள் மட்டும் உள்ளே. ஒருவழியாக ஒருவர் முதலில் வீடு வந்தார், மற்றவர் வர இரண்டு வருடம் எடுத்தது. இத்துடன் எல்லார் வீட்டிலும் கட்டுப்பாடுகள் இறுகிப்போக, ஒவ்வொருவராய் புலம்பெயர - சிக்கிச் சீரழியத் தொடங்கியது Friends club.

இந்த உலகத்திலேயே முதன் முதலாக காட்ஸ் விளையாட்டிற்காக சிறை சென்று திரும்பிய செம்மல்கள் நாம்தான்.

சிறை மீண்ட எங்களுக்கும் தியாகிப் பட்டம் கிடைக்குமா?

எமக்கு அழிவுகள் புதிதில்லைத்தான் ஆனாலும் அப்பு அண்ணையின் வீட்டை இந்நிலையில் பார்க்கும் போது எனோ விழியோரங்களில் கண்ணீர் கசிவதை மட்டும் தடுக்க முடியவில்லை. எமது இனிய நினைவுகளுக்காக இன்றும் கூரை, கதவு, ஜன்னல் இல்லாவிடினும் நிமிர்ந்து நிற்கும் அந்த மாடி வீடு - இளமைக்கால இனிய நினைவுகளை நினைவு படுத்தியபடி.

(படங்கள் படத்தில் உள்ளவர்களின் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளது.)

14440635_1451920598154612_3203772030156992506_n.jpg?oh=e21bf8d2a90393ab6f3d9c5469a1202e&oe=58D4E206

14639877_1451919931488012_3074096968845042376_n.jpg?oh=2739965bc54025c6c49c3476914a3341&oe=58C93A92

14956580_1451920551487950_5534388034380575550_n.jpg?oh=ed096faf598f7c8edc76e37a0517650a&oe=588FE137&__gda__=1490172420_616a2452e1ef9ca5cbe5bf6dcf9ade13

 

14993316_1451920768154595_5832509542079588047_n.jpg?oh=150b8bb7b9c441e3ad6843712d58d6f2&oe=58D1F779

14915548_1451920771487928_8557578476189337161_n.jpg?oh=b16b41aaaedc03e0ff31a4a476c48364&oe=58CD62C1

14993580_1451920941487911_6029006232023101393_n.jpg?oh=afd0946d74144bda40be127756aab379&oe=58C8A39F

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

சீட்டாடி சிறைமீண்ட சிங்கமே வருக வாழ்க ....! உன் மலரும் நினைவுகளை மாலைகளாய் தருக ....! tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரகாந்தி செத்து அவன்கள் சோகத்தில் இருக்க இவர்கள் தண்ணீ அடிச்சுக் கொண்டு சீட்டாடினால் சும்மா விடுவாங்களே அதான் அள்ளீட்டாங்கள்

  • தொடங்கியவர்
1 hour ago, ரதி said:

இந்திரகாந்தி செத்து அவன்கள் சோகத்தில் இருக்க இவர்கள் தண்ணீ அடிச்சுக் கொண்டு சீட்டாடினால் சும்மா விடுவாங்களே அதான் அள்ளீட்டாங்கள்

 

2 hours ago, ஜீவன் சிவா said:

 

அருமையான ஒரு வீடியோ ஜீவன்....

ஆனால் முரண்பாடாக எனக்கு ஹிட்லரை மிகவும் பிடிக்கும். ஹிட்லர் பற்றிய மோசமான பிம்பம் யூதர்களாலும் மேற்காலும் கட்டமைக்கப்பட்டது (காந்தியை தேசத் தந்தை என்று இந்தியா பிம்பப்படுத்துவதன் நோக்கத்துக்கு நேர் எதிரான பிம்பமே ஹிட்லர் என நம்புகின்றேன்). முதலாம் உலக்ப்போர் நிகழ்ந்திராவிடின் ஹிட்லர் மிகவும் சாதாரணமான ஒருவராகவே வாழ்ந்து இருப்பார்...அவர் இரண்டாம் உலகப் போரில் விஸ்வரூபம் எடுத்து இருக்க மாட்டார்

மேற்குலகம் இப்ப செய்வதெல்லாம் புதிய ஹிட்லர்களை இனம் கண்டு காயடித்து தாமே ஹிட்லராகுவது தான்

திரியின் போக்குக்கு மாறாக இதை இடைச் சொருகியதற்கு மன்னிக்கவும்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

அருமையான ஒரு வீடியோ ஜீவன்....

ஆனால் முரண்பாடாக எனக்கு ஹிட்லரை மிகவும் பிடிக்கும். ஹிட்லர் பற்றிய மோசமான பிம்பம் யூதர்களாலும் மேற்காலும் கட்டமைக்கப்பட்டது (காந்தியை தேசத் தந்தை என்று இந்தியா பிம்பப்படுத்துவதன் நோக்கத்துக்கு நேர் எதிரான பிம்பமே ஹிட்லர் என நம்புகின்றேன்). முதலாம் உலக்ப்போர் நிகழ்ந்திராவிடின் ஹிட்லர் மிகவும் சாதாரணமான ஒருவராகவே வாழ்ந்து இருப்பார்...அவர் இரண்டாம் உலகப் போரில் விஸ்வரூபம் எடுத்து இருக்க மாட்டார்

மேற்குலகம் இப்ப செய்வதெல்லாம் புதிய ஹிட்லர்களை இனம் கண்டு காயடித்து தாமே ஹிட்லராகுவது தான்

திரியின் போக்குக்கு மாறாக இதை இடைச் சொருகியதற்கு மன்னிக்கவும்

 

2ஆம் உலகப்போரில் ஹிட்லர் வென்றிருந்தால் ....
என்ன சொல்லியிருப்பார்கள் ?
என்பதுதான் .......... உண்மையான ஹிட்லர் !

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,நான் சொல்ல வந்ததை விரிவாக நிழலி எழுதி விட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிட்லர் செய்ததிற்கும்........பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு படையெடுத்து  கைப்பற்றியதற்கும் இன அழிப்புகளை செய்ததிற்கும் என்ன வித்தியாசம்?
யாருக்காவது தெரியுமா?

  • தொடங்கியவர்

அன்னதானமும் பிள்ளையாரின் அற்புதமும்.

06 நவம்பர் 2016 செல்லப்பிள்ளையார் கோவிலில் முதல் முறையாக அமுது சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது வழமையானது என்று நீங்களும் நினைக்கலாம், ஆனால் பிள்ளையார் எங்களை எப்பவும் கைவிட்டதேயில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை ஆட்டோவில் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தபோது மல்லாகத்தில் அடைமழை காரணமாக மேற்கொண்டு செல்லவிடாமல் வருண பகவான் தடுத்து நிறுத்தினார். வருணபகவானின் சீற்றம் குறைந்து பிரயாணம் தொடர்ந்தபோது தெல்லிப்பளைக்கு பின்னர் மழையைக் காணவேயில்லை. 

அமுது ஆக்கி அன்னதானம் ஆரம்பமாகி இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பஸ் வந்து நின்றது. அதிலிருந்து குபு குபு என்று குதித்தது மாணவர் குழாம். அனைவரும் கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள். நேரே கோவிலுக்கு வந்தவர்களினை எதிர்கொண்டபோது கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். கேள்விகள் அரசியல் முதல் சமயம் வரை தொடர்ந்தது. காங்கேசன்துறையில் இன்னமும் இராணுவம் இருப்பதும், இன்று வெறும் கட்டாந்தரையாய் காட்சி அளிக்கும் வீதியோரங்கள் ஒரு காலத்தில் வீடுகளும் கடைகளுமாக இருந்தன என்பது போன்ற விடயங்களை விளக்கியபோது ஆச்சரியப்பட்டார்கள்.

சாப்பிடலாமே என்று அழைத்தபோது சந்தோசமாக வந்து குந்தியிருந்தார்கள். வயிறு நிறைந்ததோ இல்லையோ மனம் நிறைய சாப்பிட்டார்கள். ஆமா இதுக்குள்ள எங்க பிள்ளையாரின் அருள் என்றுதானே யோசிக்கிறீர்கள்!

செல்லப்பிள்ளையார் கோவிலை ஜாதி, மத, இன, மொழி வேறுபாடற்ற ஒரு அன்பான மக்கள் கூடுமிடமாகவும், அமைதியான ஒரு வழிபாட்டுத்தலமாகவும் உருவாக்க முயற்சி செய்துவரும் நிர்வாக சபைக்கோ இரட்டிப்பு சந்தோசம். இந்தக் கோவிலை ஒரு மாதிரி கோவிலாக்கி முன்னுதாரணமாக திகழவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படவைக்க பாடுபடும் நிர்வாகசபைக்கும் பிள்ளையாருக்கும் நன்றிகள்.

இந்து, கிரிஸ்துவர், முஸ்லீம், தமிழ், சிங்களம் என்று வேறுபாடில்லாமல் அனைவரும் அன்பால் இணைந்த இந்த நிகழ்வும் பிள்ளையாரின் அருளே.

 

15036417_1461604687186203_4054124351213853721_n.jpg?oh=0904d87d4354a44b88e6566c368db434&oe=58D0523E&__gda__=1489640432_28c064f1320940f549da1f71255bd070

15036735_1461604683852870_2284095495279885909_n.jpg?oh=a619f028fd5fb6de6bc957a0dad45a94&oe=588CDD7F

15095696_1461605057186166_649862870109657611_n.jpg?oh=52eca885cfb82596b12ab7c9362c48a5&oe=58946E63

15027642_1461605363852802_4659474122250768711_n.jpg?oh=002936248d1b1e02577984983a522ce9&oe=588DE0CB

15078555_1461605480519457_5520327921000454431_n.jpg?oh=41c3e2ff763049b98aff379944b3e374&oe=588D1C7F

 

15056514_1461606363852702_526172941364790226_n.jpg?oh=5270152404a8003e5eb9d2997c5b662d&oe=58C215B0&__gda__=1489576114_79fe1af1009bcbcca34628791f14c548

15094358_1461605910519414_5676527908406304568_n.jpg?oh=791bb2ecb5dd080ffc882d67a9f9839f&oe=588FB451

ஒரு பக்கம் இனவாத அரசியலை அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் போது  இன்னொரு பக்கம்  இளைய சமூகம் இன  முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாண்வர் படுகொலைக்கு எதிராகவும் போராதனை பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தி இருந்தனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி அவலங்களை தாண்டி அமுது உண்ண நல்லிணக்ககுழு மாதிரி பல்லினமாக வந்திருக்கின்றார்கள்.


எதிரியாக இருந்தாலும் விருந்தோம்பல் என்பது தமிழரின் இரத்தத்தில் சேர்ந்தே ஓடுவது. 

  • தொடங்கியவர்

கிணத்தை காணோம்.

 

நானும் நண்பன் அப்பு அண்ணையும் இன்றும் காங்கேசன்துறைக்கு சென்றிருந்தோம். மறுபடியும் வீட்டுக்குள் போக முடியாமல் புதிய முள்ளுக்கம்பி வேலி தடுத்தது. வெளியே இருந்து பார்த்தபோது ஒரு அலறலா அல்லது குளறலா என்று கண்டு பிடிக்கமுடியாமல் ஒரு சத்தம். "டேய் ஜீவா என்ர கிணத்தை காணோமடா". நானும் என்னடா வடிவேலு மாதிரி இந்தாள் குளறுது எண்டு பாத்தால் உண்மையிலேயே கிணத்தை காணவில்லை. 

நானும் பார்த்தன் கிணத்தை காணவேயில்லை. படுபாவிகள் கிணத்தை மூடிவிட்டு அதுக்குள்ளே எதோ ஒரு மரத்தை வளர்த்திருக்கிறானுக பயலுக.

இனிமேல் வடிவேலு மட்டுமில்லை எவன் கிணத்தை காணோம் எண்டு கத்தினாலும் நம்பவேண்டிய நிலைமை ஜீவனுக்கு.

15107356_1462785593734779_6394225279689334487_n.jpg?oh=a7a6cc7767518a6365a0416d7abb417f&oe=5888ED7A

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

அழிவின் பின்னான ஒரு சிறு ஆரம்பம் 

IMG_3568.jpg

IMG_3569.jpg

IMG_3570.jpg

IMG_3571.jpg

  • தொடங்கியவர்

அந்தநாள் ஞாபகங்கள் Friends  club. 1979 Part 1

சும்மா படிக்கிறமென்ற போர்வையில் ஊர் சுத்தித் திரிந்த எமக்குள் ஒரு கிளப் ஆரம்பித்தால் என்ன என்று அத்தி பூத்ததுபோல ஒரு ஐடியா தோன்றியது. இது ஒரு சமுதாய பிணைப்பையோ அல்லது ஒரு அங்கீகாரத்தையோ இல்லை வேறு எதையுமோ தரும் என்ற நம்பிக்கை, சிந்தனை  இருக்கவில்லை. வெறுமனே கிரிக்கெட் விளையாடனும் - அதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இருந்ததில்லை. 

சரி கிளப்பும் ஆரம்பித்தாயிற்று, பதிவும் பண்ணியாச்சு - காசு பணம் எங்கிருந்து வரும்? அந்தநேரம் இருந்த SO (ஸ்போர்ட்ஸ் ஆஃபீசர்) முருகையா  மாவட்ட ரீதியில் ஒரு எல்லே மாட்ச் நடக்குது கலந்து கொண்டால் பேட், பந்து + விக்கெட் வாங்க உதவி செய்வோம் என்றார். எல்லே என்றாலே எமக்கு என்ன என்று தெரியாத காலமது. சரி பாக்கலாம் என்று போனால் யாழ் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டவர்கள் ஒருவரும் வரவில்லை - ஒரு அணியைத்  தவிர. வோக்கோவராகவே போய் வந்திருந்த ஒரேயொரு அணியுடன் இறுதிச் சுற்று எமக்கு. ஒவ்வொரு அணியும் வந்துவிடலாம் என்று பயம் + எதிர் பார்ப்புடன் பொறுத்திருந்தோம். எங்களுடன் வந்திருந்த காங்கேசன்துறை விளையாட்டு அதிகாரியும் முடிந்தவரை எல்லே விளையாட்டைப் பற்றியும் விதிகள் பற்றியும் விளக்கினார். 

சரி பேட்டுக்குப்  பதில் பொல்லாங்கட்டை, விக்கெற்றுக்குகளுக்கு இடையே ஓடாமல் சுத்திவர நிற்கும் வீரர்களை சுத்தி ஓடவேண்டும் - புரிந்தது அம்புட்டுதான். நம்ம பேட்டிலேயே பந்து படுகுதாம் பொல்லாங்கட்டையில் படாதா என்ற துணிவுடன் களமிறங்கினால் - ஆக 3 ஓட்டங்கள்தான் எடுக்க முடிந்தது. கிரிக்கெட்டில் ஓட்டங்களை நூற்றுக் கணக்கில் பார்த்த எமக்கு ஒரே மனச்சோர்வு. முடிந்தது கதை என்றுதான் எண்ணினோம்.

எதிராளி ஆடத்தொடங்கிய பின்னர்தான் புரிந்தது இதில் ரன் எடுப்பது சுலபமில்லை என்று. அவர்களும் நம்ம மாதிரி கத்துக் குட்டிகளே - அவர்களால் முடிந்தது 1 ரன் மட்டுமே. ஆகா நாம்தான் யாழ் மாவட்ட சாம்பியன் என்று அறிவிக்கப் படுகிறது. கிரிக்கெட் பாட்டையும் பாலையும்  எதிர்பாத்த எங்களுக்கு எல்லே பொல்லும் டென்னிஸ் பந்துகளும் கேடயமும் பரிசாக தரப்படுகின்றது. வந்தவரை பந்துகள் லாபம் என்று நடையை கட்டினோம்.

ஒவ்வொரு வீட்டிலுமிருந்த பேட்டுகள் வெளியேவர சீமைக் கிளுவையில் நாமே செய்த விக்கெற்றுக்களும் தயாராகின. இனி விளையாட ஒரு இடம் வேண்டும். சிங்கப்பூர் பென்சனியர் வேலுப்பிள்ளை (அப்பு அண்ணையின் அப்பா) காணியும் தந்தார். கரடு முரடான காணியும் சிரமதான முறையில் கள்ளிச் செடி முதல் கத்தாழை வரை அகற்றப்பட்டு மைதானமும் ரெடி.

மைதானம் துப்பரவாக்கியபோது.

இங்கு ஒருவர் மட்டும் செக்ஸியா (:100_pray:) ஷார்ட்ஸ் + வெறும் மேலுடன் மண்வெட்டியால் கொத்துறாரே :grin: அவர் வேறு யாருமில்லை - சாட்ச்சாத் நானேதான்.

தொடரும் .....

 

1622036_1467623306584341_429517454605612_n.jpg?oh=5abce9aa74c7eb4964153dfa2b8317a5&oe=58CBA47D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம், அதுகும்... படங்களுடன் நன்றாக உள்ளது.
எல்லே. விளையாட்டில் "யாழ் மாவட்ட சாம்பியன்"  பட்டத்தை பெற்றமை  இனிமையான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லு மேல மண்வெட்டி போடேக்கையே நினைத்தேன் அது நீங்களாத்தான் இருக்கும் என்று...., தொடருங்கள் ஜீவன் .....! tw_blush:

  • தொடங்கியவர்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த நாள் ஞாபகம், அதுகும்... படங்களுடன் நன்றாக உள்ளது.
எல்லே. விளையாட்டில் "யாழ் மாவட்ட சாம்பியன்"  பட்டத்தை பெற்றமை  இனிமையான செய்தி.

நன்றி சிறி 

பச்சை இல்லை எண்டு கன்னா பின்னா எண்டு திட்டுது 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே  கப்பு  கவணம் :grin: ஒண்ணுமறியா பால்குடிய நடுவில விட்டு  தடிமாடுகள்  சுத்தி நிக்குதுகள்:221_see_no_evil:

  • தொடங்கியவர்
6 minutes ago, நந்தன் said:

தெய்வமே  கப்பு  கவணம் :grin: ஒண்ணுமறியா பால்குடிய நடுவில விட்டு  தடிமாடுகள்  சுத்தி நிக்குதுகள்:221_see_no_evil:

முன்னால ஒருத்தன் மண்வெட்டியை குப்புறப் போட்டுட்டு எதோ நக்கல் பண்ணுறானே. அவனை விட உங்கள் நக்கல் ஒன்றும் பெரிதில்லை.

இவையெல்லாம் நாம் சந்தோசமாக எந்த எதிர்பார்ப்புமில்லாமல் செய்த விடயங்கள். ஆனாலும் இதில் எமக்கு கிடைத்த சந்தோசம் இந்த சந்ததிக்கு கிடைக்குமா?

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்


அந்தநாள் ஞாபகங்கள் Friends club - பகுதி 2 

IMG_3571.jpg

அப்பு அண்ணையின் அப்பா கட்டிய புதிய வீட்டை வாடைக்கு கொடுத்தால் பழுதாக்கி விடுவார்கள் என்பதால் அதுவும் சும்மாதான் இருந்தது. இப்ப மைதானமும் ரெடி, கிளப்புக்கு அலுவலகமும் ரெடி. சந்தா பணம் மாதம் 50 சதம். இது பந்து வாங்கவே காணாது.

அடுத்தது பணம். பணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் ஏன் படம் ஓடக்கூடாது என்ற சிந்தனையும் வந்தது. காங்கேசன்துறையில் இருந்த இரு தியேட்டரில் ஒன்றான யாழ் தியேட்டரில் படம் ஓடுவதாக முடிவானது. என்ன படம் என்றபோது வீரபாண்டிய கட்டப்பொம்மன் முதல் கப்பலோட்டிய தமிழன் வரை முயற்சி செய்தாலும் பாலும் பழமும்தான் கிடைத்தது.

அச்சகத்தில் டிக்கெட்டை அச்சடித்து வீடு வீடாக விற்கத்தொடங்கினோம். அனைத்து டிக்கெட்டுகளை வித்தாயிற்று. அடுத்த பிரச்சனை தியேட்டரில் ஆரம்பமானது. அனைத்து டிக்கெட்டையும் ஒரே விலையில் வித்ததால், யார் எங்கிருப்பது என்கின்ற பிரச்சனை + தியேட்டரில் உள்ள மொத்த கதிரைகளின் எண்ணிக்கையை விட வந்தவர்கள் அதிகம். ஒரு மாதிரி எல்லாம் சுலபமாக முடிய கையில் கொஞ்ச காசும் (கிட்டத்தட்ட ரூபாய் 2000 ) வந்தது. வந்த காசில் உதை பந்தாட்ட குழுவுக்கு சீருடையும் பந்தும், ஒழுங்கான பேட் + விக்கெட்டுகளை வாங்கினோம்.

இப்படியே பாடசாலை, விளையாட்டு என்று போய்க் கொண்டிருந்த காலத்தில் குண்டும் குழியுமான எமது வீதியை திருத்த தொடங்கினார்கள். எமது கல்லூரி வீதியானது கொஞ்சம் பிரபலமானது. கே கே எஸ் வீதியிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை வீதியில் முடியும். மயிலிட்டி, தையிட்டி, ஊரணி, பலாலிக்கு போபவர்களுக்கு இது குறுக்கு வழி. ஆனாலும் வெள்ளம் புன்னாலைக் கட்டுவன், குரும்பசிட்டி, கட்டுவன் வீமன்காமம் பகுதிகளில் இருந்து வந்து இந்த வீதியைத் தாண்டித்தான் கடலுக்கு போகும். வெள்ள வாய்க்கால்கள் ஒழுங்கையாய் மாறிய சோகத்தை அறியாமல் வெள்ளமும் கடலுக்கு போகும்போது வீதியையும் கொண்டு போய் சேர்த்துவிடும். ஆனாலும் வெள்ளம் வந்தால் நமக்கு கொண்ட்டாட்டம்தான். 

எமது கிளப் இருந்த வீட்டு மதிலுடன்தான் பெரிய வெள்ள வாய்க்கால். மதவிலிருந்து பார்த்தா நயன்தாராவே சீச்சீ நாயகராவே தோத்து விடும் அளவுக்கு தண்ணி பாயும். ஆனாலும் அதில் மிதந்து வரும் கட்டுவன் குரும்பசிட்டி கோழிகளும் அழகுதான். அப்புறம் என்ன அதில் ஒண்டை லபக்கி கறி செய்து பொன்னுச்சாமியின் பேக்கரியில் சுட சுட பாணும் வாங்கி ஒரே கும்மாளம்தான் போங்கள். சரி கதைக்கு வருவோம்.

வீதி திருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது கிளப் மதிலுக்கு வெளியே உள்ள புல்லுகள் பற்றைகளை அகற்ற முயற்சித்தோம். யாருக்கோ பிறந்த ஞானத்தால் கல்லூரி வீதி முழுவதும் தொடர்ந்தது சிரமதானம். வீடுகளில் இருந்த இளம் பெண்களை எமது கண்களில் இருந்து மறைத்தாலும் தேநீர், சோடா, கேக் என்று நன்றாகவே கவனித்தார்கள். களைப்பு தெரியாமல் வேலை செய்த காலமது. முரளியும் கிரியும் எப்பவுமே கீரியும் பாம்புந்தான். ஆளையாள் நக்கல் பண்ணுவதை கேட்டாலே களைப்பே தெரியாது. அப்புறம் சுதா அண்ணை, முகுந்தன் அண்ணை, ஆச்சிஅண்ணை என்று இன்னொரு வட்டம். அவர்களின் கதைகளையும் நக்கல்களையும் கேட்டால் களைப்பா என்னவென்று கேட்க்குமளவிற்கு இருக்கும். இப்படி இருந்தும் இதுகள் கொஞ்சம் படிக்குங்கள் ஆனால் இதுகள் காவாலிகள் எப்பவும் றோட்டிலதான் என்ற பிம்பமும் குறையவேயில்லை. ஆனால் கல்லூரி வீதி துப்பரவாகியது.

எமது கிளப்பில் மூவினத்தினரும், சகல சமயத்தினரும் இருந்தார்கள். அடிப்படையிலேயே சாதி, மத, இன வேறுபாடு அற்றிருந்தது கிளப். இன்றைய தொலைக்காட்சி புகழ் பிரான்ஸ் ஆசைப்பிள்ளை (சுதா) எங்களது ஆசான விகடகவி. சுதாவோட இருந்தால் நேரம் போவதே தெரியாது - அந்த இடமே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாகத்தான் இருக்கும். சுதாவின் சிந்தனையில் உதித்த "சினிமா பைத்தியம்" என்ற நகைச்சுவை நாடகமும் எங்களால் அரங்கேற்றப்பட்டு முதல் பரிசையும் தட்டிக் கொண்டது. ஆசைப்பிள்ளை என்பது ஒரு ஆசிரியரின் பெயர் மட்டுமில்லை எனது நண்பனின் அப்பாவும் கூட. இப்ப ஆசைப்பிள்ளை என்ற புனை பெயரில் உலாவரும் சுதாவுக்கு இந்த வாத்தியார் மீது என்ன பற்றோ - நாமறியோம் பரராபரமே.

பாலா அண்ணை லொறி வைத்திருந்தார். ஓட்டம் இல்லாத காலங்களில் எம்மை எத்திக்கொண்டு செல்வச்சன்னதி முதல் வல்வெட்டித்துறை வரை கூட்டிச்செல்வார். பாலா அண்ணையின் புண்ணியத்தில் எல் ஆர்  ஈஸ்வரியின் பாடல்களையும் பார்க்க முடிந்தது. அப்புறம் தேவதாஸ் அண்ணை  - ஒரு காலத்தில் அவருக்கு கையில் காசு நன்கு புழங்கும். உழைத்து சம்பாத்தித்தவர் அவர் - தப்பாக நினைக்க வேண்டாம். அந்த நேரங்களில் எங்களை கூட்டிக் கொண்டு கொத்துரொட்டிக் கடை, வின்செர் தியேட்டர் என்று சுத்தியதும் ஒரு காலம். அப்புறம் கண்ணன் அண்ணையின் இலவச மீன்கள் - பொரித்தமா சமைச்சமா எண்டதே மறந்து போச்சு. பொன்னுச்சாமியின் பேக்கரி பாண் மணம் மட்டும்தான் மூக்கிலே நிக்குது.

திருவிளையாடல்கள் தொடரும் ....

Edited by ஜீவன் சிவா

அருமை..தொடருங்கள் ஜீவன்..:)

உங்களுக்கு திட்டுவது போலவே எனக்கும் பச்சை இல்லை என்று திட்டுது..:grin:  2 மணி நேரத்தில் போடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.