Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வெளியில் பிரகாசிக்கும் யாழ்ப்பாணம் உள்ளுக்குள் முடக்கப்பட்ட பொருளாதாரம்"

Featured Replies

eral
2009 மேயில் முடிவுக்கு வந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது இருந்ததிலும் பார்க்க யாழ்ப்பாணம் இன்று பாரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றது.

யுத்த காலத்தில் கூரைகள் அற்ற வீடுகள், ஷெல் துவாரங்களுடனான சுவர்கள், குன்றும் குழியுமான வீதிகளுடன் காணப்பட்ட அந்தப் பிரதேசம் இப்போது பகட்டான கட்டிடங்களுடனும் பொருட்கள் நிறைந்த கடைகளுடனும் ஹோட்டல்களுடனும் காபெட் போடப்பட்ட வீதிகளுடனும் காட்சி தருகின்றது.

ஆனால் இந்தப் பிரகாசமான வெளிப்புறத் தோற்றம் வெளியிலிருந்து வந்த பணத்தின் மூலமே தோற்றுவிக்கப்பட்டிருப்பதுடன் இதற்குள் முடக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரம் ஒளிந்திருக்கின்றது. 

 வட மாகாண சபை பொருளாதார அபிவிருத்தியிலும் பார்க்க தீவிரவாத அரசியலில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்பதாகவும் கொழும்பிலுள்ள மத்திய அரசாங்கம் அங்கிருக்கும் வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதிலும் அதிகளவு கவனத்தைச் செலுத்த வில்லையென்றும் யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.ஜயசேகரம் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார். 

"ஆனையிறவில் ஐந்து உப்பளங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் முழு நாட்டுக்குமே உப்பை வழங்க முடியும். காங்கேசன்துறையில் கைவிடப்பட்டிருக்கும் சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்பட முடியும். பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் மீண்டும் தொடங்க முடியும்.  

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை பொது மக்களுக்கு மீள வழங்கினால் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். முந்திரி பருப்பு, தேங்காய், கரும்பு, திராட்சை, மாம்பழம் என்பனவற்றை இங்கு செய்கை பண்ண முடியும். உணவு பதனிடுதலை மேற்கொள்ளலாம் என்று ஜயசேகரம் தெரிவித்திருக்கிறார். 

அதேவேளை இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டால் மீன்பிடித்துறை மேம்படும். 

நீண்டகாலத்துக்கு முன்னர் முன்னணி பொறியியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் யாழ். மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். யுத்தத்திற்கு முன்பு நிகர தேசிய உற்பத்தியில் 40 % ஐ வட இலங்கை கொண்டிருந்தது.

ஆனால் இப்போது 3% ஆகவே வட இலங்கையின் நிகர தேசிய உற்பத்தி பங்களிப்பு உள்ளது. அரச மட்டத்திலான புறக்கணிப்பே இதற்கு காரணமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை மீள இயங்கச் செய்வதில்  மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியும் ஆர்வத்தைக் காட்டவில்லையெனவும் பலாலி இராணுவ விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்கான பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதிலும் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டப்படவில்லையெனவும்  ஜயசேகரம் கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுடனும் பிராந்தியத்துடனும் சிறப்பான தொடர்பாடலை மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணம் மொத்த விற்பனை சந்தையாக மாறும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பயண நேரத்தை குறைப்பதன் மூலம் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும்.

யாழ்ப்பாண சந்தையிலுள்ள 70% ஆன பொருட்கள் இந்தியாவிலிருந்தே வருகின்றன. ஆனால் அவற்றின் விலைகள் மிக உயர்மட்டத்தில் உள்ளன. ஏனெனில்  அவற்றை  கொழும்பு மார்க்கமாகவே கொண்டுவர வேண்டியுள்ளது என்று ஜயசேகரம் விபரித்திருக்கிறார். 

இலங்கை மற்றும்  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிர்மாண மற்றும் சுற்றுலா துறைகளிலேயே ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.  ஆயினும் சிலரே இத்தொழில் துறையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க இந்திய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.ஆனால் வெற்றியடையவில்லை.

முதலீட்டு மேம்பாட்டுக்கு பொறுப்பான அதிகாரிகள் நிர்வாக ரீதியான தடங்கல்கள் சகல மட்டத்திலும் இருப்பதாக குறிப்பிடுகின்றனர் அத்துடன் உள்ளூர் தொழில்வாண்மை தேர்ச்சி குறைவாக உள்ளது. இவையே பொருளாதாரம் முடங்கியிருப்பதற்கான காரணங்களாக உள்ளன.  வட இலங்கை தொழிலதிபர்களுக்கு விசேட மென்கடன் வசதியை  யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனம் கேட்டு வருகின்றது.

அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். ஆயினும் அரசாங்கம் இதுவரை பதிலளித்திருக்கவில்லை. உண்மையில் நிதி வழங்கும் நிறுவனங்களை தேசிய கொள்கை தயாரிக்கப்படும் வரை ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டாமென சிறிசேன அரசாங்கம் கேட்டிருக்கின்றது என்று உள்ளூர் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலாசார ரீதியான தடைகளும் காணப்படுகின்றன. பாரம்பரிய முறைமையில் செயற்பட முனையும் யாழ். வர்த்தகர்களால் நவீன புறத்தோற்றங்களைக் கொண்ட ஆட்களுடன் ஒத்துழைத்து பணியாற்ற முடியாமல் உள்ளது. இது கூட்டு முயற்சிகளையும் திறமையான தகைமை வாய்ந்த ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்குலகில் வசிக்கின்றனர். அவர்களுக்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மத்தியிலான விருப்பம் மிகத் தாழ்ந்த மட்டத்தில் இருக்கின்றது. ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்களில் அநேகமானோர் தொழில்சார் நிபுணர்களாகவே உள்ளனர்.

தொழிலதிபர்களாக இல்லை. அவர்களில் சிலர் முதலீடு செய்வதில் ஆர்வத்தை கொண்டிருந்தாலும் நிர்மாணத் துறை, விவசாயம், கோழிப்பண்ணை போன்ற சிறிய திட்டங்களிலேயே கவனத்தை செலுத்துகின்றனர். பாரிய தொழில் துறையில் அல்ல.  அங்கு தேவையான தொழில்களுக்கு பொருத்தமான தொழிலாளர்கள் இல்லாத தன்மை காணப்படுகின்றது. சில துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஆனால் பொருத்தமான தொழிலாளர்கள் இல்லை. சில துறைகளில் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பு இல்லை. 
"பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் சிறிய வேலைகள் அல்லது தனியார் துறையில் தொழில் புரிவதற்கு பின்வாங்கும் தன்மை காணப்படுகின்றது. அரசாங்க தொழில்களையே விரும்புகின்றனர். ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட இலங்கையில் அரச தொழில்வாய்ப்புகள் போதியளவாக இல்லை' என்று முதலீட்டு மேம்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கருமுகிலில் ஒரு வெள்ளித் திரை காணப்படுகின்றது. முதலீட்டுச் சபையின் யாழ்ப்பாண கிளை, பாரிய இலங்கை ஆடைத் தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதாவது எம்.ஏ.எஸ். மற்றும் ஐதராமணி போன்ற ஆடைத் தொழில்துறை உற்பத்தியாளர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.

அவற்றின் மூலம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கின்றது.  காற்றாலை மூலம்  15 மெகாவாட் மின்சாரம் தனியார் முதலீட்டின் மூலம் பிறப்பிக்கப்படுகின்றது. இந்தத் துறையில் அதிகளவை செய்ய முடியும். விசேடமாக வட கரைக்கு அப்பால் உள்ள ஏழு தீவுகளிலும் இதனை செய்ய முடியும்.

http://www.thinakkural.lk/article.php?local/yrlwprvdrh3850f550e0ba9e18817yplqe1c4e8bb4a5ed0ac23a952dverm6#sthash.QsN5e2ob.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு சுமுக நிலைமை தோன்றாமல் இங்குள்ள தமிழ் தொழில் அதிபர்கள் எப்படி போவார்கள் ?

சும்மா எழுந்தமானத்தில் எழுதபட்ட கட்டுரை 

  • 2 months later...

வணக்கம் 

சென்ற வருடம் இங்கு இந்த தொழில் விடயம் பற்றி விவாதிக்கப்பட்ட்து.   அப்போது நாம் வெளிநாட்டில் இருந்து அங்கு தொடங்கும் வேலைகள் பற்றியும் விமர்சிக்கப்பட்டது.  

நானும் எனது கனடிய தமிழ் தொழில் அதிபர் நண்பர்களை அணுகினேன்.   பலர் இந்தியாவில் தொடக்கி பல நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.  

யாழ் என்றவுடன் இளக்காரமாக பார்த்தார்கள்.   இன்னுமொரு தமிழரின் குரல் நிறுவனத்தார் கொழும்புக்கு சென்றுவிடடார்கள். 
எம்மவர்களுக்கு எம்மவரில் நம்பிக்கை இல்லை என்பது வெளிச்சமானது.

நான் எமது முகில் மென்பொருள் பொறியியல் நிறுவனத்தின் கிளையை யாழில் சென்ற வருடம் திறந்தேன்.   இப்போது 11 உறவுகள் பிரித்து மேய்கிறார்கள்.   இவர்களில் 8 பேர் எ லெவல் பாஸ் என்றாலும் வறுமையால் பல்கலை செல்ல முடியவில்லை.  ஆனால் தமது ஆர்வத்தால் பல மென்பொருள்களை படித்து வைத்திருந்தார்கள். 

அவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் சம்பளம்,  தங்க வசதி,  இலவச உணவு, கணனி மற்றும் 5 பண்டிகை போனஸ் என்று கொடுத்து வைத்திருக்கிறோம்.  இங்கிருந்தும் பல மென்பொருள் வல்லுநர்களை அனுப்பி அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம்.

அவர்கள் வட அமெரிக்க நிறுவவனங்களின் பெரிய பெரிய தொழில்களை எல்லாம் இலகுவாக செய்கிறார்கள்.  

கடந்த ஒருவருடத்தில் ஒருபிரச்சினையும் இல்லை.   இப்போது வேலையாள் பற்றாக்குறை வந்து செய்தி தாள்களில் வரும் மாதம் விளம்பரம் கொடுக்கிறோம். 

மற்றும் நிறுவனமாக பதிந்தால் மின்சாரம் அரை விலை போன்ற ஊக்குவிப்பும் இருக்கிறது.   வரும் பங்குனி 50 பொறியியலாளர் கொண்ட நிறுவனமாக வளர்க்க திடடம்.  மற்றும் வடக்கில் எல்லா பாடசாலைகள் மற்றும் பல்கலையில் எமக்கு தேவையான மூளைகளை தேடி பிடித்து வருகிறோம்.

கிழக்கிலும் இப்போது ஒரு விரிவுரையாளரை பிடித்து அங்கும் வேலை நடக்கிறது.  அங்கு இந்தவருட இறுதியில் திறப்போம்.

வேறு யாராவது உதவி வேண்டுமானால் கேளுங்கள்.

We are looking for Java, Asp.Net, PHP, XML developers in North and Eastern Provinces.

  • தொடங்கியவர்

விவசாயி விக் உங்களைக் கண்டதில் பெரு மகிழ்ச்சி

வணக்கம்  விவசாயி விக் !

உங்களுக்கு வட க்கு ,கிழக்கு மாகாணசபையின் உதவிகள் தேவையாயின் தொடர்பை ஏற்படுத்தி தரமுடியும் .

2 hours ago, விவசாயி விக் said:

வணக்கம் 

நானும் எனது கனடிய தமிழ் தொழில் அதிபர் நண்பர்களை அணுகினேன்.   பலர் இந்தியாவில் தொடக்கி பல நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.  

யாழ் என்றவுடன் இளக்காரமாக பார்த்தார்கள்.   இன்னுமொரு தமிழரின் குரல் நிறுவனத்தார் கொழும்புக்கு சென்றுவிடடார்கள். 
எம்மவர்களுக்கு எம்மவரில் நம்பிக்கை இல்லை என்பது வெளிச்சமானது.

இதற்குரிய காரணம் என்ன ???

எல்லாம் தற்பெருமை என் என்றால் இந்தியா மாயை, இந்தியாவுக்கு சென்று அங்குள்ளவனுக்கு தொழில் வழங்க அவன் கடவளே தெய்வமே என வழிபட அதில் ஒரு ஆனந்தம்.

என் லண்டனில் இருக்கும் கோவில்களை பாருங்கள் இலங்கையில் எத்தனையோ தொழிலில் பக்தியுள்ள சிவாச்சாரியார்கள் இருக்க போய் இந்தியாவில் அடுத்து தாசன் அழைத்து வருவினம்.

ஏன் யாழ்ப்பாணத்தில் மக்கள் இல்லையா?  London, மற்றும்  New York இயங்கும் ஒரு நிறுவனம் யாழில் தனது அலுவலகம் ஒன்றை வைத்திருப்பது இந்த அசைலம் அடித்த தொழில் அதிபர்களுக்கு தெரியுமா??

1 hour ago, Athavan CH said:

விவசாயி விக் உங்களைக் கண்டதில் பெரு மகிழ்ச்சி

நன்றி ஆதவன் அண்ணா.  வேலை பளுவால் வாசகனாக மட்டும் இருந்தேன்.

1 hour ago, Gari said:

வணக்கம்  விவசாயி விக் !

உங்களுக்கு வட க்கு ,கிழக்கு மாகாணசபையின் உதவிகள் தேவையாயின் தொடர்பை ஏற்படுத்தி தரமுடியும் .

வணக்கம் அண்ணா,  நாம் கிழக்கில் சம்பூர்,  ஆரையம்பதி பகுதிகளில் தொடங்க திடடமிடுகிறோம்.   அலுவலக வசதி, மின்வலை வசதி தேவை வரும்போது கடடாயம் தொடர்பு கொள்கிறேன்.  

உங்களுக்கு யாரவது துடிப்பான மென்பொருள் தெரிந்தவர்கள் கிழக்கில் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி 

2 hours ago, Dash said:

இதற்குரிய காரணம் என்ன ???

எல்லாம் தற்பெருமை என் என்றால் இந்தியா மாயை, இந்தியாவுக்கு சென்று அங்குள்ளவனுக்கு தொழில் வழங்க அவன் கடவளே தெய்வமே என வழிபட அதில் ஒரு ஆனந்தம்.

என் லண்டனில் இருக்கும் கோவில்களை பாருங்கள் இலங்கையில் எத்தனையோ தொழிலில் பக்தியுள்ள சிவாச்சாரியார்கள் இருக்க போய் இந்தியாவில் அடுத்து தாசன் அழைத்து வருவினம்.

ஏன் யாழ்ப்பாணத்தில் மக்கள் இல்லையா?  London, மற்றும்  New York இயங்கும் ஒரு நிறுவனம் யாழில் தனது அலுவலகம் ஒன்றை வைத்திருப்பது இந்த அசைலம் அடித்த தொழில் அதிபர்களுக்கு தெரியுமா??

வணக்கம்,

இன்னுமொரு நிறுவனம் கிளை யாழில் திறந்திருப்பது மகிழ்ச்சி.
எனக்கு தெரிந்து லைக்கா நிறுவனத்தினர் தமது கிளை ஒன்று திறந்திருக்கிறார்கள்.

நீங்கள் கூறிய மாயை உண்மை.   அமெரிக்காவில் இருக்கும் புலிக்கு முதல் பொருள் அனுப்பிய சீனியர் புலி என்று பீலா விடுபவர் ஒருவர் கூட கொழும்பில் 50 சிங்களவரை வைத்து தான் வேலை வாங்குகிறார்.  ஊருக்கு போனால் பிரச்சினை என்று பில்டப்பை வடஅமெரிக்க புலி ஆதரவாளர்களுக்கு கொடுத்து வியாபாரம் செய்து கொண்டு இரகசியமாக வருடம் இருமுறை கொழும்பு சென்று வருகிறார்.

நல்ல மாற்றம், முன்னேற்றம் எம்மக்களுக்கு வரும்.  

இங்கு கிழமைக்கு கிழமை தெருத்தெருவாக தமிழக கலைஞர்களை அழைத்து கொண்டாட்டம் போட்டு கொண்டு எமது மக்களை அங்கு கை விட்டுவிடடோம்.   அங்கும் கேளிக்கை போடவேண்டும்.   அவர்களுக்கு எங்களிலும் பார்க்க சிரிப்பு இன்னும் தேவை.  

தமிழகத்தை ஒரு அரசியல் மாயையால் எம்மிடம் இருந்து பிரித்து பலம் இருந்தும் பலம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் எம்மவர்.    இப்போது தென்னிந்தியாவில் எமது இயற்கை மற்றும் கோவில் திருத்தலங்களின் சுற்றுலா விளம்பரங்கள் போட்டாலே போதும் வடகிழக்கில் பொருளாதாரம் வளரும்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விவசாயி விக் said:

நன்றி ஆதவன் அண்ணா.  வேலை பளுவால் வாசகனாக மட்டும் இருந்தேன்.

வணக்கம் அண்ணா,  நாம் கிழக்கில் சம்பூர்,  ஆரையம்பதி பகுதிகளில் தொடங்க திடடமிடுகிறோம்.   அலுவலக வசதி, மின்வலை வசதி தேவை வரும்போது கடடாயம் தொடர்பு கொள்கிறேன்.  

உங்களுக்கு யாரவது துடிப்பான மென்பொருள் தெரிந்தவர்கள் கிழக்கில் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி 

அக்னியஷ்த்ரா கிழக்கில் இருந்து மென் பொருளில் வேலை செய்பவர் என நினைக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். விவசாயி விக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்து இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விவசாயி விக் said:

நன்றி ஆதவன் அண்ணா.  வேலை பளுவால் வாசகனாக மட்டும் இருந்தேன்.

வணக்கம் அண்ணா,  நாம் கிழக்கில் சம்பூர்,  ஆரையம்பதி பகுதிகளில் தொடங்க திடடமிடுகிறோம்.   அலுவலக வசதி, மின்வலை வசதி தேவை வரும்போது கடடாயம் தொடர்பு கொள்கிறேன்.  

உங்களுக்கு யாரவது துடிப்பான மென்பொருள் தெரிந்தவர்கள் கிழக்கில் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி 

வாழ்த்துக்கள் விவசாயி விக். சம்பூர் பகுதியில் ஏதாவது தேவை எனில் சொல்லுங்கள் முடிந்ததை செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு சந்தோசமான செய்தி

தம்பி  உன்னைக்கண்டதும்

செயலை அறிந்ததும்.....

வாழ்க வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அக்னியஷ்த்ரா கிழக்கில் இருந்து மென் பொருளில் வேலை செய்பவர் என நினைக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். விவசாயி விக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்து இருங்கள். 

ம் ஆனால் இதில் பேசாமல் உள் பெட்டியில் பேசுங்கள் 

விவசாயி விக் நலமா கண்டு கன காலம்?

5 hours ago, nunavilan said:

அக்னியஷ்த்ரா கிழக்கில் இருந்து மென் பொருளில் வேலை செய்பவர் என நினைக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள். விவசாயி விக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்து இருங்கள். 

நன்றி அண்ணா.  தொடர்பு கொள்கிறேன்.   கனடாவிலும் ஒவ்வொரு கிழமையும் ஓரிருவரை வேலைக்கு இணைப்பதால் பளு கூட.   மற்றும் கனடாவிலேயே முகில் மென்பொருளை சடடதுறைக்குள் முதலாவதாக புகுத்தியவன் என்ற படியால் எல்லா சடட நிறுவனங்களும் வரிசை கட்டி நிற்கிறது.  அதனால் வாசகன் ஆனேன்.  தொடர்ந்திருப்பேன். 

2 hours ago, MEERA said:

வாழ்த்துக்கள் விவசாயி விக். சம்பூர் பகுதியில் ஏதாவது தேவை எனில் சொல்லுங்கள் முடிந்ததை செய்கிறேன்.

நன்றி மீரா.  கடடாயம் தொடர்பு கொள்கின்றேன்.  

1 hour ago, விசுகு said:

காலையில் ஒரு சந்தோசமான செய்தி

தம்பி  உன்னைக்கண்டதும்

செயலை அறிந்ததும்.....

வாழ்க வளமுடன்.

அண்ணா,  விவசாயி அமைதியானால் நாற்று நடுறார் என்று அர்த்தம்.  உங்கள் ஆசீர்வாதம் என்னை எப்போதும் நிமிர்த்தி வைத்திருக்கும்.  

நாம் ஐரோப்பாவிலும் ஒரு அலுவலகம் திறந்திருக்கிறோம்.  அங்கு வரும்போது சந்திப்போம்.

28 minutes ago, முனிவர் ஜீ said:

ம் ஆனால் இதில் பேசாமல் உள் பெட்டியில் பேசுங்கள் 

விவசாயி விக் நலமா கண்டு கன காலம்?

முனிவர் நலம்.  வாழ்க்கை தண்ணீர் ஓட்டத்தில் அடித்து பிடித்து பாத்தி கட்டி கொண்டிருக்கிறேன்.   நீங்கள் எப்படி?  

  • கருத்துக்கள உறவுகள்

விக் உங்களைக் கண்டதில் பெரு மகிழ்ச்சி

  •  
22 minutes ago, சுவைப்பிரியன் said:

விக் உங்களைக் கண்டதில் பெரு மகிழ்ச்சி

  •  

நன்றி சுவை.  எனக்கும் எனது உறவுகளுடன் அளவளாவுவதில் பெரு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களின் பின் உங்களைக் கண்டது மகிழ்ச்சி விக்.. உங்கள் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..! :91_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விக்,
உங்களின் பதிவு கண்டு மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
மனைவி, மகன் , மற்றும் உங்கள் பண்ணை உறவுகள் நலமா?
நிறை குடம் தளும்பாது என்பதுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
டொரோண்டோ , மார்க்கம் பகுதிக்கு வந்தால் கட்டாயம் தொடர்பு கொள்ளுங்கள். 
யாழ் உறவுகள் மேற்கொண்ட "பண்ணை  விசிட்" இன்னும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் செவ்வனே கைகூட இறைவனின் ஆசிகள்.
வாழ்க வளமுடன்...   சசி 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விவசாயி விக் said:

முனிவர் நலம்.  வாழ்க்கை தண்ணீர் ஓட்டத்தில் அடித்து பிடித்து பாத்தி கட்டி கொண்டிருக்கிறேன்.   நீங்கள் எப்படி?

நான் நலம் சகோ வாழ்க்கை ஓட்டத்தில் எனது வண்டில் சில்லும் நகர்கிறது இன்ப துன்பங்களை கடந்து 

 அக்னியை சந்தித்து பேசினேன் இன்று அவரும் ஆவலுடன் உள்ளார் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் 
 
தேவைகள் பல அவை பூர்த்தியாகும்  போது ஒரு மன நிறைவு ஏற்படும் அது சந்தோசத்தை தரும் அது மக்களுக்கு எனும் போது இன்னும் சந்தோசமே தொடரட்டும் தேவையான சேவை என கூறி முனிவர்

On August 26, 2016 at 7:53 AM, நந்தன் said:

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி நந்தன்.

On August 26, 2016 at 8:08 AM, இசைக்கலைஞன் said:

பல நாட்களின் பின் உங்களைக் கண்டது மகிழ்ச்சி விக்.. உங்கள் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..! :91_thumbsup:

நன்றி இசை.

On August 26, 2016 at 11:28 AM, Sasi_varnam said:

வணக்கம் விக்,
உங்களின் பதிவு கண்டு மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
மனைவி, மகன் , மற்றும் உங்கள் பண்ணை உறவுகள் நலமா?
நிறை குடம் தளும்பாது என்பதுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
டொரோண்டோ , மார்க்கம் பகுதிக்கு வந்தால் கட்டாயம் தொடர்பு கொள்ளுங்கள். 
யாழ் உறவுகள் மேற்கொண்ட "பண்ணை  விசிட்" இன்னும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் செவ்வனே கைகூட இறைவனின் ஆசிகள்.
வாழ்க வளமுடன்...   சசி 

நன்றி சசி.  சென்ற கிழமையும் உங்கள் பூனை குட்டி கள்ளனை பற்றி துணைவியுடன் கதைத்தேன்.   திரும்பவும் நத்தாருக்கு சந்திப்பம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.