Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On 19 January 2007, LTTE decided to pull back from its Pannichchankerni position which is on the access route to Vaharai.

Edited by Vasan

  • Replies 145
  • Views 21.5k
  • Created
  • Last Reply

அரசியல் பொறுப்பாளர் சொஞ்ச நாளுக்கு முன் சவுண்ட் விட்டவர் "வாகரையை கைப்பற்ற முயன்றால் யுத்தத்தை ஆரம்பிப்போம்" என்று!!!!

உந்த யுத்த நிறுத்தம் எம்மவர்களை சராசரி அரசியல்வாதிகளாக மாற்றி விட்டதா????

முன்பெல்லாம் செயலுக்கு பின் தான் சொல் வரும்!!!! இப்போ சொல் தான் வந்து கொண்டிருக்கிறதே தவிர, செயல்களல்ல!!!!!!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20973

இப்போதைக் இதுகளை வைச்சு adjust பண்ணுவதை விட வேறு வழியில்லை. வேண்டின popcorn களை காலவதியாக முதல் TTN போடுற தமிழ்ப்படங்களை பார்க்கும் பொழுது கொறித்து முடிக்கவும். ஆறுதலாக பிறகு வேண்டலாம்.

:rolleyes:

அரசியல் பொறுப்பாளர் சொஞ்ச நாளுக்கு முன் சவுண்ட் விட்டவர் "வாகரையை கைப்பற்ற முயன்றால் யுத்தத்தை ஆரம்பிப்போம்" என்று!!!!

உந்த யுத்த நிறுத்தம் எம்மவர்களை சராசரி அரசியல்வாதிகளாக மாற்றி விட்டதா????

முன்பெல்லாம் செயலுக்கு பின் தான் சொல் வரும்!!!! இப்போ சொல் தான் வந்து கொண்டிருக்கிறதே தவிர, செயல்களல்ல!!!!!!

குரைப்பவர்களுக்காக எல்லாம் போராட்டம் நடத்தமுடியாது. வெல்லமுடிகின்னற இடத்தில்தான் போராட வேண்டும். புலிகளுக்கு பின்வாங்கவும் தெரியும் முன்னேறவும் தெரியும்.

களத்தில் பலர் விரைவில் வாயடைக்கப்படபோகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிப்புக்களையும் சாகஸங்களையும் நம்புவதைவிட யதார்த்தத்தை நம்பவேண்டும். புலிகள் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள். அதனால்தான் இங்கு எழுதும் கற்றுக்குட்டிகளின் விருப்பங்களில் மண்விழுகின்றது. தமிழ்ப்படங்களையே பார்த்து வளர்ந்தவர்களுக்கு முதலில் வில்லன் வெல்லுவதுமாதிரியும், பின் கதாநாயகன் சகலதையும் வென்று வாகைசூடுவதாகவும் நாட்டு நடப்பும் உள்ளது. முதலில் இத்தகைய மனநிலையிலிருந்து வெளியே வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை மருத்துவமனையை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்தது.

- சோழன் Friday, 19 January 2007 22:08

இன்று மட்டக்களப்பு வாகரை பொது மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிலங்காப் படையினர் நுழைந்துள்ளதாகவும், அங்கு அகதிகளாகத் தஞ்சம் கோரியிருந்த அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறிய நிலையில், நிராதரவாக கைவிடப்பட்ட மருத்துவமனைப் பகுதிக்குள் படையினர் முன்னேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வாகரை மருத்துவமனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நிலைகள் எதுவும் இருக்கவில்லை எனத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், தங்களது முக்கிய தாக்குதல் நிலைகள், பனிச்சங்கேணிக்கு மாற்றப்பட்டுள்ளனவே தவிர, விடுதலைப் புலிகளின் எந்த நிலைகளும் படையினரிடம் பறிபோய்விடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

வாகரையிலிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படையினர் எல்லைத் தடைகளைத் தாண்டியதும், அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் அங்கே சில இடங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பகுதியினர், மாங்கேணி கத்தோலிக்க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், சிறிலங்கா அரச படைகளின் கண்மூடித்தனமான வான் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களுடன் கூடிய மோசமான முன்னெடுப்புக்களால், வாகரை மருத்துவமனை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. இதனால் வாகரைப் பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

மருத்துவமனையை நம்பி தங்களது உறவுகளைத் தங்க வைத்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல், அனைத்துலக மனித உரிமை விதிகளுக்கும் முரணாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி எதுக்கெடுத்தாலும் துள்ளிக்குதித்து கருத்துச்சொல்லுற நாரதரையும் மின்னலையும் இந்தப்பக்கமே காணேல்லை ?

எல்லாரும் சாதாரணமாக சிந்திப்பவர்கள். புலிகளோடு தோள் கொடுத்து போராட்டத்தோடு இணந்திருப்பவர்கள் புலிகள் பின்வாங்கும் போது ஏதோ சறுக்கலாக வந்து விடுமோ என்று மனதளவில் பயப்படுவது இயல்பு தானே.

அதனால் தான் வாகரை விட்டு பின்வாங்கி விட்டினம் என்றவுடன் ஒரு பய உணர்வு வரத்தான் செய்கின்றது.

இந்த வாகரை இன்று நேற்றல்ல பல தடவைகள் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதே. ஈழப்போர் 2, 3 என்று அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒன்றுதான். புலிகள் ஒரு சன்னத்தைக் கூட செலவழிக்காமல் தான் இப்பிரதேசங்களுக்குள் முன்னர் போயினர். இராணுவம் தானா விலகிக் கொண்டதால்..!

இந்த முறைமட்டுமே புலிகள் வாகரையை தக்க வைக்க முயன்றுள்ளனர். மக்களுக்கு சொல்லப்படும் செய்திகளில் தவறு உண்டு. வாகரை பெரிய பிரதேசம். வாகரை நகரை அண்மித்த பகுதிகளை மக்களோடு மக்களாக சென்று இராணுவம் பிடித்திருக்கிறது. ராயிட்டர் சொன்னது போல மக்கள் வெளியேறும் தருணம் பார்த்து இராணுவம் முன்னேறியுள்ளது. வாகரையின் பெரும்பகுதி இன்னும் புலிகளின் கையில் தான் உண்டு.

யாழ் குடா நாட்டுக்கான சூரியக்கதிர் 1 இன் போது உக்கிரமாகப் போரிட்ட புலிகள் தென்மராட்சியைக் கைப்பற்ற முனைந்த சூரியக்கதிர் 2 இன் போது எதிர்ப்பே காட்டாமல் விலகிக் கொண்டனர். காரணம் தென்மராட்சியில் குடித்தொகை அதிகமாக இருந்ததால்..!

இம்முறையும் மக்களின் நலன் கருதித்தான் இந்தப் பின்னகர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த முயற்சிக்காக புலிகளைப் பாராட்ட வேண்டும். அநியாய உயிரிழப்புக்களை அவர்கள் தவிர்க்க முனைந்திருக்கின்றனர்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு சண்டை தீவிரமாக இருக்க வேண்டும் மண்மீட்பு விடிந்து பொழுது சாய்வதுக்குள் நடக்க வேண்டும் என்ற கற்பனை தான் அதிகம். செயற்பாடு காசு கொடுப்பதோடு சரி. சிலர் அதுவும் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகள் எடுத்த நடவடிக்கை சரியானதே. அதுமட்டுமன்றி போராளிகளின் ஆளணி தளபாட இழப்புக்களும் தவிர்க்கப்பட்டுள்ளதானது அரச படைகளுக்கு சவாலாகவே அமையும்..!

தற்போதைய கிழக்கு நிலவரம் ஈழப்போர் 2, 3 இல் இருந்தது போலன்றி மாறுபட்ட பரிமானத்தைக் காட்டுகிறது. புலிகள் வடக்குப் போல கிழக்கிலும் இராணுவ முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முனைந்திரூக்கின்றனர். அதற்கான ஆளணி ஆயுத வழங்கல்களை அவர்கள் பெற்றுள்ளதானது இராணுவ ரீதியில் முக்கியமானது. அது அரச படைகளுக்கு எப்போதும் சவால் நிறைந்ததாக இருக்கும்..!

எனவே அரச படைகளின் கணிசமான ஆளணியை கிழக்கு நோக்கி நகர்த்தி வைத்திருக்க இது வகை செய்யும். ஏற்கனவே கொழும்புக்கும் இதர தெற்கின் பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ள மேலதிக படையினரை தவிர வடக்குக்கு என்று ஆளணிப் பிரச்சனை இருக்கும். அது புலிகளுக்கு சாதகமான களங்களை அமைக்க உதவும். இருந்தாலும்..கருணா அணியினரை வைத்து புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் செயற்பாட்டைச் செய்ய அரச படைகள் முனையும். அதை வைத்து மக்களுக்கு புலிகள் பலவீனமாக உள்ளனர் என்று காட்ட விளையும்.

வாகரை பிரபல்யமானது கருணாவால் தான். அவரின் பிளவும் அவரைத் துரத்தவும் புலிகள் வாகரையைத் தளமாக பாவித்ததே வாகரையை முக்கியப்படுத்தியது. கருணா அணி போன்றதல்ல சிறீலங்காவின் அரச படைகள். அவை விமானப்படை கடற்படை என்று பலமான நிலையில் உள்ளவை. அவற்றை எதிர் கொள்ளக் கூடிய வகையிலேயே நகர்வுகள் அமையும். புலிகள் ஒன்றும் அசாத்திய படைவலுவோடு இருக்கவில்லை. அவர்கள் சாத்தியமான படைவலுவோடு அசாத்தியமான துணிச்சலோடு உள்ளனர். மக்களும் அதை உணர்ந்து செயற்பட வேண்டும்..!

புலம்பெயர்ந்துள்ள ஜென்மங்கள் இதை உணரப் போவதில்லை..என்பது மட்டும் புரிகிறது. அதிலும் ஈழத்துப் போர் பற்றிய அறிவே இல்லாதவர்கள் எல்லாம்..புலி அடி..பிடி..என்று மக்களின் இழப்புக்கள் பற்றி அககறை இன்றி இருந்தனர்.

ஆனால் புலிகள் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ள இந்த நிலையானது வரவேற்கப்பட வேண்டியதுடன் அரச பொய் பிரச்சாரங்களை முறியடிக்க உதவும். புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பாவிப்பதாக அரசு பரப்புரை செய்து வருவது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ந்து வருவது நல்லதன்று..! மக்களை நாமே எதிரிக்குப் பலி இடுவதும் நல்லதன்று..!

மண்மீட்பு என்பது மக்களின் மீட்புடனேயே நடக்க வேண்டும்.. மக்களற்ற ஊரில் மண்மீட்பு அவசியமா..?! மக்களைப் பாதுகாப்பதுதான் இன்றியமையாத முதன்மைத் தேர்வு. அந்த வகையில் புலிகளின் நடவடிக்கை எல்லா வகையிலும் சரியானதே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

எல்லாரும் சாதாரணமாக சிந்திப்பவர்கள். புலிகளோடு தோள் கொடுத்து போராட்டத்தோடு இணந்திருப்பவர்கள் புலிகள் பின்வாங்கும் போது ஏதோ சறுக்கலாக வந்து விடுமோ என்று மனதளவில் பயப்படுவது இயல்பு தானே.

Hi all, i am new to this forum, i dont know how to use tamil fonts. i will try in the future.

It is not a surprising matter that LTTE withdraw from Vakarai area. People are over estimating the LTTE power. If you look at the past history, all most all the times LTTE avoid the fight like this. LTTE don’t have that much manpower. Instead of commenting their action, if we all people join with them they may do it.

The things all have to remember is that LTTE is good at attacking suddenly and recapture the areas or make the army undergo a heavy loss. So it is not a drawback or tactical withdrawal, IT is the reality every one has to accept.

Edited by viduthali

பனிச்சங்கேணிக்கு நிலைகள் மாற்றப்படவில்லை. பனிச்சங்கேணியில் இ:ருந்த நிலைகளே மாற்றப்பட்டுள்ளன. தமிழ் செய்திகளில் பிழையாகப் போட்டுள்ளார்கள். ஆனால் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் இணையத்தளத்தில் பனிச்சங்கேணியிருந்து மாற்றப்பட்டுள்ளதெனப் போடப்பட்டுள்ளது.

On 19 January 2007, LTTE decided to pull back from its Pannichchankerni position which is on the access route to Vaharai.

People have been forced to run around from place to place to avoid indiscriminate artillery shelling by the Sri Lankan military since October. Ninety three civilians including several children were killed in November and December in three schools, Kathiraveli, Patchenai, and Vammivedduvan, converted into refugee camps. Many more were severely injured. Just a few days ago three people were killed inside the Vaharai hospital complex where people had taken refuge. Repeated call by humanitarian agencies to spare the civilians produced no tangible result. International community watched while the carnage went on, except for occasional press statement.

Sri Lankan military used Pannichchankerni LTTE positions as an excuse to block humanitarian access to Vaharai people.

பொறுத்திருங்கள்..... பொறுத்திருங்கள்...... விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும்.

Edited by மின்னல்

போர் களத்தின் வெற்றி வாகரையா? எப்போது வாகரை விடுதலைப்புலிகளின் கீழ் வந்தது, வன்னி நிலபரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன், ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையால் கிழக்கில்லிருந்து பல இராணுவ முகாம்களை மூடியமால், கிழக்கின் பல பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுக்கள் வந்தது. ஆனால் இன்று சம்பூர், வாகரை மீண்டும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது. இவற்றை தக்க வைக்க எப் பகுதியை இலங்கை அரசு கொடுக்கப் போகின்றது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் இலங்கை அரசு, இச்சமரின் மூலம் பல கோடி பணத்தை கரியாக்கி இருக்கின்றது, இவர்களால் எவ்வளவு காலம் தான் தாக்கு பிடிக்க முடியும்?

Mr. Sarath Fonseka, you may win the battles, but you have already lost the war.

Time will make you people realize this. But sadly, when you realize it, the game would have been over.

Justice may be delayed, but never will be denied!!!

இந்த வாகரை இன்று நேற்றல்ல பல தடவைகள் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதே. ஈழப்போர் 2, 3 என்று அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒன்றுதான். புலிகள் ஒரு சன்னத்தைக் கூட செலவழிக்காமல் தான் இப்பிரதேசங்களுக்குள் முன்னர் போயினர். இராணுவம் தானா விலகிக் கொண்டதால்..!

இந்த முறைமட்டுமே புலிகள் வாகரையை தக்க வைக்க முயன்றுள்ளனர். மக்களுக்கு சொல்லப்படும் செய்திகளில் தவறு உண்டு. வாகரை பெரிய பிரதேசம். வாகரை நகரை அண்மித்த பகுதிகளை மக்களோடு மக்களாக சென்று இராணுவம் பிடித்திருக்கிறது. ராயிட்டர் சொன்னது போல மக்கள் வெளியேறும் தருணம் பார்த்து இராணுவம் முன்னேறியுள்ளது. வாகரையின் பெரும்பகுதி இன்னும் புலிகளின் கையில் தான் உண்டு.

யாழ் குடா நாட்டுக்கான சூரியக்கதிர் 1 இன் போது உக்கிரமாகப் போரிட்ட புலிகள் தென்மராட்சியைக் கைப்பற்ற முனைந்த சூரியக்கதிர் 2 இன் போது எதிர்ப்பே காட்டாமல் விலகிக் கொண்டனர். காரணம் தென்மராட்சியில் குடித்தொகை அதிகமாக இருந்ததால்..!

இம்முறையும் மக்களின் நலன் கருதித்தான் இந்தப் பின்னகர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த முயற்சிக்காக புலிகளைப் பாராட்ட வேண்டும். அநியாய உயிரிழப்புக்களை அவர்கள் தவிர்க்க முனைந்திருக்கின்றனர்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு சண்டை தீவிரமாக இருக்க வேண்டும் மண்மீட்பு விடிந்து பொழுது சாய்வதுக்குள் நடக்க வேண்டும் என்ற கற்பனை தான் அதிகம். செயற்பாடு காசு கொடுப்பதோடு சரி. சிலர் அதுவும் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகள் எடுத்த நடவடிக்கை சரியானதே. அதுமட்டுமன்றி போராளிகளின் ஆளணி தளபாட இழப்புக்களும் தவிர்க்கப்பட்டுள்ளதானது அரச படைகளுக்கு சவாலாகவே அமையும்..!

தற்போதைய கிழக்கு நிலவரம் ஈழப்போர் 2, 3 இல் இருந்தது போலன்றி மாறுபட்ட பரிமானத்தைக் காட்டுகிறது. புலிகள் வடக்குப் போல கிழக்கிலும் இராணுவ முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முனைந்திரூக்கின்றனர். அதற்கான ஆளணி ஆயுத வழங்கல்களை அவர்கள் பெற்றுள்ளதானது இராணுவ ரீதியில் முக்கியமானது. அது அரச படைகளுக்கு எப்போதும் சவால் நிறைந்ததாக இருக்கும்..!

எனவே அரச படைகளின் கணிசமான ஆளணியை கிழக்கு நோக்கி நகர்த்தி வைத்திருக்க இது வகை செய்யும். ஏற்கனவே கொழும்புக்கும் இதர தெற்கின் பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ள மேலதிக படையினரை தவிர வடக்குக்கு என்று ஆளணிப் பிரச்சனை இருக்கும். அது புலிகளுக்கு சாதகமான களங்களை அமைக்க உதவும். இருந்தாலும்..கருணா அணியினரை வைத்து புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் செயற்பாட்டைச் செய்ய அரச படைகள் முனையும். அதை வைத்து மக்களுக்கு புலிகள் பலவீனமாக உள்ளனர் என்று காட்ட விளையும்.

வாகரை பிரபல்யமானது கருணாவால் தான். அவரின் பிளவும் அவரைத் துரத்தவும் புலிகள் வாகரையைத் தளமாக பாவித்ததே வாகரையை முக்கியப்படுத்தியது. கருணா அணி போன்றதல்ல சிறீலங்காவின் அரச படைகள். அவை விமானப்படை கடற்படை என்று பலமான நிலையில் உள்ளவை. அவற்றை எதிர் கொள்ளக் கூடிய வகையிலேயே நகர்வுகள் அமையும். புலிகள் ஒன்றும் அசாத்திய படைவலுவோடு இருக்கவில்லை. அவர்கள் சாத்தியமான படைவலுவோடு அசாத்தியமான துணிச்சலோடு உள்ளனர். மக்களும் அதை உணர்ந்து செயற்பட வேண்டும்..!

புலம்பெயர்ந்துள்ள ஜென்மங்கள் இதை உணரப் போவதில்லை..என்பது மட்டும் புரிகிறது. அதிலும் ஈழத்துப் போர் பற்றிய அறிவே இல்லாதவர்கள் எல்லாம்..புலி அடி..பிடி..என்று மக்களின் இழப்புக்கள் பற்றி அககறை இன்றி இருந்தனர்.

ஆனால் புலிகள் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ள இந்த நிலையானது வரவேற்கப்பட வேண்டியதுடன் அரச பொய் பிரச்சாரங்களை முறியடிக்க உதவும். புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பாவிப்பதாக அரசு பரப்புரை செய்து வருவது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ந்து வருவது நல்லதன்று..! மக்களை நாமே எதிரிக்குப் பலி இடுவதும் நல்லதன்று..!

மண்மீட்பு என்பது மக்களின் மீட்புடனேயே நடக்க வேண்டும்.. மக்களற்ற ஊரில் மண்மீட்பு அவசியமா..?! மக்களைப் பாதுகாப்பதுதான் இன்றியமையாத முதன்மைத் தேர்வு. அந்த வகையில் புலிகளின் நடவடிக்கை எல்லா வகையிலும் சரியானதே..! :rolleyes:

நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் தோன்றுகிறது!

தங்களது முக்கிய தாக்குதல் நிலைகள், பனிச்சங்கேணிக்கு மாற்றப்பட்டுள்ளனவே தவிர, விடுதலைப் புலிகளின் எந்த நிலைகளும் படையினரிடம் பறிபோய்விடவில்லை இளந்திரையன்

[Friday January 19 2007 04:25:32 PM GMT] [pathma]

Tamilwin.com மட்டக்களப்பு வாகரை பொது மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிலங்காப் படையினர் நுழைந்துள்ளதாகவும், அங்கு அகதிகளாகத் தஞ்சம் கோரியிருந்த அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறிய நிலையில், நிராதரவாக கைவிடப்பட்ட மருத்துவமனைப் பகுதிக்குள் படையினர் முன்னேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வாகரை மருத்துவமனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நிலைகள் எதுவும் இருக்கவில்லை எனத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், தங்களது முக்கிய தாக்குதல் நிலைகள், பனிச்சங்கேணிக்கு மாற்றப்பட்டுள்ளனவே தவிர, விடுதலைப் புலிகளின் எந்த நிலைகளும் படையினரிடம் பறிபோய்விடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

வாகரையிலிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படையினர் எல்லைத் தடைகளைத் தாண்டியதும், அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் அங்கே சில இடங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பகுதியினர், மாங்கேணி கத்தோலிக்க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களாலும் கிபீர் விமான பீரங்கித் தாக்குதல்களாலும், அப்பகுதிகளில் மட்டும் குறைந்தது 70,000 பொதுமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், சிறிலங்கா அரச படைகளின் கண்மூடித்தனமான வான் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களுடன் கூடிய மோசமான முன்னெடுப்புக்களால், வாகரை மருத்துவமனை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. இதனால் வாகரைப் பகுதி மக்கள், ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

மருத்துவமனையை நம்பி தங்களது உறவுகளைத் தங்க வைத்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல், அனைத்துலக மனித உரிமை விதிகளுக்கும் முரணாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறத

யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும்.

இது நேரங்களில் சில மூதேவிகள் நம்மவர்களிடத்தில் பயத்தையும், சோர்வையும் ஏற்படுத்த முனையகூடும், அப்படி முயலும் சில மூதேவிகளை இங்கும் நாம் கான்கிறோம். அவர்களின் வெற்றுக்கூச்சல்களை புறந்தள்ளி புத்தி புகட்டுங்கள்.

தமிழர்களின் பொற்காலமாக கருதப்படும் பிற்கால சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வை இது சமயம் குறிப்பிடுகிறேன்

பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர். 'எண்கொண்ட தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வெற்றிப் புரவலன்' என்றும், 'புண்ணூறு தன்றிருமேனியிற் பூணாகத் தொண்ணூறும் ஆறுஞ் சுமந்தோனும்' என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால் பாடப் பெற்றவர். இவருடைய மகன் ஆதித்த சோழன் தந்தைக்கு இணையான பெரு வீரனாக விளங்கினான். இவனும் பல போர்களில் கலந்து கொண்டு புகழ்பெற்றான்.

விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்து மகனுக்குப் பட்டங்கட்டி விட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பாண்டிய மன்னனுக்கு வரகுணவர்மன் என்று பெயர்; பல்லவ அரசனுக்கு அபராஜிதவர்மன் என்று பெயர். இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழ நாட்டில் நடைபெற்றன. யானையும் யானையும் மோதிச் சண்டையிடும்போது நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் சேவல் கோழியைப் போல் சோழ நாடு அவதிப்பட்டது. சோழ நாட்டு மக்கள் துன்புற்றார்கள். எனினும் இப்போர்களை விஜயாலய சோழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு போரிலும் ஏதாவது ஒரு கட்சியில் தம்முடைய சிறிய படையுடன் போய்க் கலந்து கொண்டார். வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் சோழ நாட்டில் போர்க்குணம் மிகுந்து வந்தது.

காவேரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழ நாட்டை வளப்படுத்துவதை யாவரும் அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான்; அதற்கு மண்ணியாறு என்று பெயர். இந்த மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது. பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான்.

பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது.எனினும், இம்முறை பாண்டியன் வெற்றி பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்று ஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப் போல் பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்ந்திருந்தான்.

காத தூரத்துக்குக் காத தூரம் ரணகளம் பரவியிருந்தது. ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும் நாலுவகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. மலையோடு மலை முட்டுவது போல் யானைகள் ஒன்றையொன்று தாக்கிய போது நாலா திசைகளும் அதிர்ந்தன. புயலோடு புயல் மோதுவது போல் குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்த போது குதிரை வீரர்களின் கையிலிருந்த வேல்கள் மின்வெட்டுகளைப் போல் பிரகாசித்தன. ரதத்தோடு ரதம் மோதிச் சுக்குநூறாகித் திசையெல்லாம் பறந்தன. காலாள் வீரர்களின் வாள்களோடு வாள்களும், வேல்களோடு வேல்களும் உராய்ந்த போது எழுந்த ஜங்கார ஒலிகளினால் திக்குத் திகாந்தங்கள் எல்லாம் நடுநடுங்கின. மூன்று நாள் இடைவிடாமல் சண்டை நடந்த பிறகு, ரணகளம் முழுவதும் ரத்தக் கடலாகக் காட்சியளித்தது. அந்தக் கடலில் செத்த யானைகளும் குதிரைகளும் திட்டுத் திட்டாகக் கிடந்தன. உடைந்த ரதங்களின் பகுதிகள் கடலில் கவிழ்ந்த கப்பலின் பலகைகளைப் போல் மிதந்தன. இரு தரப்பிலும் ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் உயிரிழந்து கிடந்தார்கள்.

மூன்று நாள் இவ்விதம் கோர யுத்தம் நடந்த பிறகு பல்லவர் சைன்யத்தில் ஒரு பகுதிதான் மிஞ்சியிருந்தது. மிஞ்சியவர்களும் மிகக் களைத்திருந்தார்கள். பாண்டிய நாட்டு வீர மறவர்களோ, களைப்பையே அறியாத வரம் வாங்கி வந்தவர்களைப் போல், மேலும் மேலும் வந்து தாக்கினார்கள். அபராஜிதவர்மனுடைய கூடாரத்தில் மந்திராலோசனை நடந்தது. அபராஜிதன், பிரதிவீபதி, ஆதித்தன் ஆகிய மூன்று மன்னர்களுடன் படைத்தலைவர்களும் கலந்து ஆலோசித்தார்கள். இனி எதிர்த்து நிற்க முடியாது என்றும், பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரைக்குச் சென்று விடுவதே உசிதம் என்றும் முடிவு செய்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் போர்களத்தில் ஓர் அதிசயம் நடந்தது. முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்று காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான விஜயாலய சோழன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழ நாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.

"நமது யானைப் படை முழுதும் அதமாகி விட்டது; ஒன்று கூடத் தப்பவில்லை" என்றார்கள்.

"ஒரு குதிரை, ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்றான்.

"உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.

"சோழ நாட்டுச் சுத்த வீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று விஜயாலயன் அலறினான்.

இருவருக்கு பதிலாக இருநூறு பேர் முன்னால் வந்தார்கள்.

"இரண்டு பேர் தோளில் வலியும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கி கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன். அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து விஜயாலயனைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள்.

"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.

போர்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் கீழைநாட்டாரைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள். இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக் கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு தாங்களும் போர்முனையில் புகுந்தார்கள். அவ்வளவுதான்; தேவி ஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பி விட்டது.

தேவி ஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் நம் பக்கம் திரும்ப அவரவர் சக்திக்கு ஆவன செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் நலனைக் காக்கும் நோக்கோடு பின்வாங்கிய விடுதலைப்புலிகள் மக்கள் வெளியேறியதன் பின்னர் இராணுவத்தின் மீது கடும் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பனிச்சங்கேணிப் பகுதியில் மட்டும் நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்த 4 படையினர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்து களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். வாகரையின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகள் உள்ளடங்க பல பிரதேசம் இன்னும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மக்கள் செறிந்திருந்த இடங்களில் இருந்து மட்டும் புலிகள் விலகிக் கொண்டுள்ளனர்.

இந்தப் பின்னகர்வு எதிரியின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நகர்வே அன்றி புலிகளின் பலவீன பின்வாங்கல் அல்ல.! விடுதலைப்புலிகள் ஆளணி மற்றும் ஆயுதளபாடங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளமையானது அரச படைகளுக்கு பேரழிவாகவே அமையும்..! இது அரச படைகளின் இராணுவ நோக்கங்களை தோற்கடிக்கும் ஒரு தந்திர நகர்வும் கூட..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்தார் பூமி ஆழ்வார்..

புலி தமிழீழம் ஆழும் காலம் வரப்போகிறது..

பொறுத்திருப்போம்..

யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும்.

சிவராஜா அய்யா,

எனக்கு சோழ பாண்டிய பல்லவர்களின் சரித்திரம் தெரியாது. இருந்தாலும் உங்களது கட்டுரையைப் படிக்கும் போது ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது.

வாகரையை இராணுவம் கைப்பற்றி விட்டார்கள் என்றவுடன் மனது மிகுந்த வேதனை அடைகிறது. ஆனாலும் புலிகளின்மேல் இருக்கும் நம்பிக்கையை நாம் இழந்துவிடவில்லை.

தோல்வி வருகிறதென்றவுடன் எதிரியுடன் கூட்டுச் சேரும் கயவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற சரித்திரங்கள் பாடமாக அமைய வோடும்.

புலி ஒருபோதும் தோற்றுப்போகாது என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு இராணுவ காய் நகர்த்தலே அன்றி வேறொன்றும் இல்லை. இது யாருக்கும் தெரியாத ஒன்றில்லை. சரி இன்னும் எத்தனை நாட்கள் என பார்ப்போம்.

பின் வாங்குவதுக்கு என்ன காரணம்?

பின் வாங்குவதுக்கு என்ன காரணம்?

-பகல் இருட்டுவது எதுக்காக எண்றால் மறுநாளை விடிய வைக்க என்பதுக்காகத்தான்... அது போல வாழ்க்கை எப்போதும் முன்நோக்கித்தான் போகும்...

அப்பிடிப் பாத்தா பகலாகிறதும் இருட்டத்தானே <_<

பகலானாபிறகு ஏதோ இருட்டாமல் நிக்கிறமாதிரி :rolleyes:

பின் வாங்குவதுக்கு என்ன காரணம்? முடியாமை என்று தான் அர்த்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.