Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் எதிர்பார்த்ததை விட குறைந்த இழப்போடு கிழக்கின் தொப்பிக்கல காட்டுப் பகுதி தவிர்ந்த 95% நிலப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளதாக இராணுவம் அறிவிதுள்ளது. சிங்கள வருடத்துக்கு முன்னாடியே இலகுவாக வெற்றிகளைப் பெற்று புலிகளின் பற்றிய பிரமையை முறியடித்துள்ளதாக இராணுவம் இன்று கதிரவெளி வெருகல் மற்றும் ஏ 15 நெடுஞ்சாலை முழுவதையும் மீட்ட பின்னர் விட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. புலிகள் தமக்கு ஆளணி மற்றும் தளபாட இழப்பின்றி பின்வாங்கி உள்ளமையானது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கும் அனைத்துத் தரப்புக்கும்..! :icon_idea:

தொப்பிக்கலக் காட்டுக்குள் பதுங்கி ஓடும் புலிகளை கருணா குழுவினரின் 4 பிரமாண்டமான அணிகள் துரத்தி அடித்து கொன்று அழிப்பதாகவும் ஆட்லறிகள் உட்பட பல ஆயுத தளபாடங்களை மீட்டு கருணா தனியான போராட்டம் ஆரம்பித்து சிறீலங்கா அரசாங்கப்படைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் சிறீலங்காவின் சிங்கள இணையத்தளங்கள் புளுகி அடிக்கின்றன..! வெற்றியே வெற்றி என்று எழுதிப் புலம்புகின்றனர். தமிழ் ஊடகங்களின் மூச்சு நின்று போனதுபோல் மயான அமைதி அவற்றில்..!

புலிகளும் வாய் திறக்கவில்லை இன்னும்..! :icon_idea:

எது எப்படியோ அப்பாவி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளமை வரவேற்க வேண்டிய விடயம். :icon_idea:

http://today.reuters.com/tv/videoStory.asp...e_C3_Top+News-5

Edited by nedukkalapoovan

  • Replies 145
  • Views 21.5k
  • Created
  • Last Reply

கிழக்கின் நெருக்கடிகள் அரசியல் ரீதியானவை. அவற்றை சீர் செய்ய முயற்சிப்பதற்கு வேண்டிய கால அவகாசத்தை பெறுவதற்குரிய இராணுவ பொருளாதார தொழிநுட்ப பலம் எம்மிடம் இல்லை. இன்றய உலக ஒழுங்கில் எமது போராட்டத்தின் இறுதி அத்தியாயம் ஒரு மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரத்தில் (supervised independence) தான் எழுதப்படும்.

சர்வதேசமும் சிறீலங்காவும் இந்த இறுதி அத்தியாயத்தில் எம்மைத் தோற்கடிப்பதற்கான நகர்வுகளைத்தான் முன்னெடுக்கிறார்கள்.

போராட்டத்தின் இறுதி அத்தியாயம் வேறு இறுதி யுத்தம் வேறு என்றே சொல்லாம். ஏன் என்றால் இறுதி யுத்தத்திற்கு பின்னர் தான் இறுதி அத்தியாயம் ஆரம்பமாகும். அதாவது இறுதியுத்தத்தில் இராணுவரீதியில் வெற்றிபெறுவதால் மட்டும் நாம் தாமதம் இன்றி சுதந்திரத்தை அடுத்த கட்டமாகப் பெற்றுவிடப்போவது இல்லை. அதன் பின்னரான மிகவும் சிக்கலான அரசியல் இராஜதந்திர சவால்களை சந்திக்க வேண்டும். புலிகளின் இன்றய பெறுமை அமைதி இராணுவ பின்வாங்கல்களை இந்த பின்னணியில் பார்க்க முயற்சிக்கவும்.

6...7 மாதங்களிற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளே இன்று நடப்பவற்றை ஒருவகையில் ஊகிக்க வைத்தது. அதாவது அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டி நிர்ப்பந்தத்தில் புலிகள் இருக்கிறார்கள் என்றதை. அந்தக் காலத்தில் தான் பலாலி திருகோணமலை மூதூர் எல்லாம் ஒரே அடியா விளப்போகுது டாங்கிக்கு காத்துப் போட்டுது என்று எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு திரஞ்சனாங்கள்.

கடந்த 2...3 மாதங்களிலாவது நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த நெருக்கடியை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டி விளக்க முயற்சிக்கப்பட்டது. விளங்க மறுத்தது பப்பாவில் இருந்து இறங்க மறுத்தது நாங்கள். இன்னும் இன்னும் ஏத்திவிட்டது வெளிநாடுகளில் இருக்கிற எங்கடை குறைமாச ஆய்வாளர்கள்.

இன்றாவது நாங்கள் சரியாக விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டியது யாழில் இருந்து பின் வாங்கியதற்கு இருந்த காரணங்கள் நெருக்கடிகள் சவால்கள் வேறு இன்று கிழக்கில் நடந்து கொண்டிருப்பவற்றிற்கான காரணங்கள் வேறு சவால்களும் நெருக்கடிகளின் பரிமாணங்கள் வேறு. யாழில் இருந்து வெளியேறும் பொழுது இலங்கைத் தீவின் பிரச்சனையில் சர்வதேச சக்த்திகளின் கவனம் பங்களிப்பு ஈடுபாடு இன்று போல் இருக்கவில்லை. எனவே இன்றய கிழக்கின் அரசியல் நெருக்கடி என்பது தனியே அதுவாக மாத்திரமல்ல அந்தப் பலவீனம் எவ்வாறு எமக்கு எதிராக பல்வேறு தரப்பட்டவர்களினால் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படப் போகிறது என்பது தான் சிக்கலானது. அதேபோல் யாழில் இருந்து வெளியேறும் பொழுது இராணுவ வலுச்சமநிலையை ஏற்படுத்தி இலங்கைத் தீவில் 2 இராணுவங்கள் 2 தேசியங்கள் அதிகார மைய்யங்கள் இருக்கு இரு தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் அவை பற்றிய எல்லைகள் என்பன எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மஸ்த்தியத்துடனான ஊடன்படிக்கை ஒன்றை செய்திருக்கவில்லை.

எனவே இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் முற்றிலும் வேறு அளவிலானது மிகவும் சிக்கலானது. அவற்றை மூடிமறைத்து கதைகள் புனைவது பாச்சல் பீச்சல் என்பது வாசிக்க மட்டும் நல்லா இருக்கும்.

எது எப்படியோ......

குரூக்ஸின் மடல்கள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல..... (பல சமயங்களில்.....)

யார் உங்களிற்கு வெந்த புண்ணா?

தாயகத்தில் உற்றார் உறவினர்களை கண்முன்னே உடல் சிதறி பலியாக பாத்தவர்கள் பல கிழமைகள் மாதங்களாக கஞ்சியே 1 வேளை உணவாக உண்டு 1 முறையல்ல பல தடவை பல இடங்களிற்கு இடம் பெயர்ந்து மாதக்கணக்காக பொது இடங்களிலும் மரங்களிற்கு கீழும் வாழ்க்கை நடத்துபவர்களின் புண்ணை விட உங்களிற்கு புண் இருக்கு அது வெந்து வேறு இருக்கா?

படம் விறுவிறுப்பாக போகவில்லை அபிமான விளையாட்டு வீரர் எதிர்பார்த்த மாதிரி விளையாடவில்லை போன்று போராட்டத்தை பார்த்து அங்கலாய்ப்பவர்களிற்கு வெந்த புண்ணா? வேல் அல்ல அமிலத்தை ஊத்தி கடப்பாரையை போட்டு சந்தோசமாக கிண்டவேணும் உங்கள் தரவளியில் வே* ஆட்ட புண்களில்.

என்ன இது? ஒன்றுமாக விளங்கவில்லை....ஆயிரகணக்கான போராளிகள் கிழக்கில் இருந்திருப்பார்களே, எங்கே, எப்படி போய் இருப்பார்கள்?

யார் இந்த ''உங்கள்'' ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது? ஒன்றுமாக விளங்கவில்லை....ஆயிரகணக்கான போராளிகள் கிழக்கில் இருந்திருப்பார்களே, எங்கே, எப்படி போய் இருப்பார்கள்?

அவர்கள் எப்போதோ போய்விட்டார்கள்.. இன்னமும் வெருட்ட சில கட்டுரைகளை வரைந்து தள்ளியிருக்கின்றார்கள்.. வாசித்து மிரட்சியடையவும்.. :icon_idea:

http://www.dailymirror.lk/2007/01/20/opinion/2.asp

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரே நாளில் 500க்கு மேற்பட்டவர்கள் சரணைந்துவிட்டார்கள் என்ற மாதிரி மயக்கமாகச் செய்திபோட்டனர்; பின்னர் கடந்த வருடம் ஜூலையில் இருந்து என்று தெளிவாக்கியமாதிரி இருந்தது. இன்று கருணா கும்பலும், தாங்களும் சேர்ந்து துவசம் செய்துவிட்டோம் என்று கதைவிடுகின்றனர்.. கேட்கின்றவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்று சொன்னமாதிரி இருக்கு..

அவர்கள் எப்போதோ போய்விட்டார்கள்.. இன்னமும் வெருட்ட சில கட்டுரைகளை வரைந்து தள்ளியிருக்கின்றார்கள்.. வாசித்து மிரட்சியடையவும்.. :icon_idea:

http://www.dailymirror.lk/2007/01/20/opinion/2.asp

எனக்கு கிழக்கை பற்றிய அறிவு(geographical) அவ்வளவு இல்லை.ஆனாலும் வியாழக்கிழமை வரை வாகரையில் நின்றவர்கள் எங்கே போயிருப்பார்கள்? உடனே வன்னிக்கு போக முடியுமா? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

விடுதலைப்புலிகளால் ஓரு பெரிய தாக்குதலை நடத்தமுடியுமா இப்ப?

புலிகள் தான் தாங்கள் எங்கே எப்போது தாக்குதல் நடாத்த வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள், எனெனில் அவர்கள் தான் போராடுபவர்கள்..கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டமும்,புலிகள் பலமிழந்து விட்டனர் ஓடுகிறார்கள் ,போராட்டம் தோற்றுவிட்டது என்று காட்ட விழையும் ஒட்டுக் குழுக்களும் இல்லை.புலிகலின் பலம் அழிக்கப்படால் தான் அவர்களின் பலம் குறையும். நிலத்தை மீட்பதால் புலிகளின் பலததைக் குறைக்க முடியாது.வன்னியில் இந்த பாடத்தைத் தான் சிறிலங்கா இராணுவம் கற்றது.மீண்டும் கற்க இருக்கிறது.இன்று மகிந்தருக்குத் தேவையானது சிறிலாங்கா இரானுவம் முன் நேறுகிறது என்று காட்டுவது.ஏனெனில் இப்படித் தான் சிங்கள மக்களை ஏமாற்ற முடியும்.ஆனால் கடைசியில் ஏமாறப் போவது மகிந்தர் தான்.அதே தான் சந்திரிகாவுக்கும்,ரத்வத்தைக

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் எப்போ எங்கே தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிப்பார்கள்.... இதைச் சொல்வதும் ஒரு ஆய்வு. நாசமாப் போய்ச்சு போ...! பின்ன எலிகளே தாக்குதல் நடத்துறது..!

ஏதோ சனம் தப்பினது தம்பிரான் புண்ணியம்..! சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஸ்டப்பட்டதுகள். ஒருவேளை கஞ்சியாவது குடிக்குங்கள். இப்படியே ஏ 9 யும் பிடிச்சு திறந்திட்டாங்கள் என்றால்...குடாநாட்டுச் சனமும் தப்பிடும். அது ஒன்றும் கஸ்டமில்ல காட்டுக்கால ஊடுருவி மாங்குளம் வரைக்கும் வரலாம். அங்க இருந்து ஒரே பாய்ச்சலில...ஆனையிறவுக்குப் போயிட்டால்...பாதை கிளியர்..!

அப்பவும் புலிகள் எப்போ எங்கே தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிப்பார்கள் என்று சொல்ல ஆக்கள் இங்க இருப்பினம். சனத்துக்கு சாப்பாடும் நிம்மதியும் கிடைச்சால போதும் இப்போதைக்கு என்ற நிலைக்கு வந்திட்டுதுகள்..! :icon_idea:

போராடுபவர்கள் தான் எங்கே எப்போது எப்படிப் போராடுவது என்று தீர்மானிப்பது.அவர்களுக்குத் தான் அதற்கான அருகதையும்,அறிவும்,ஆளுமையும் இருக்கிறது.புலத்தில் இருந்து பதுங்கிக்கொண்டு தமது சொந்த விடயங்களைப் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்க ஆய்வாளர் என்றும் மக்களின் காலவலர்கள் என்றும் வேசமிடும் வேடதாரிகளுக்கு அவ்வாறு சொல்ல எந்த அருகதையும் கிடையாது. அங்க அடி இங்க அடி அப்படி அடி இப்படி அடி என்று எழுதும் லூசுகள் போராட்டத்தை நடாத்த முடியாது.இதைச் சொல்ல பெரியா ஆய்வாளர் என்கிற பட்டம் தேவையில்லை.உண்மை பேசுதல் எங்கிற அடிப்படை மனித குணம் இருந்தால் காணும்.சில ஐந்துக்களுக்கு மனிதமே இல்லாமல் தம்மை முன் நிறுத்த குரைப்பது ஒன்றே தொழிலாக இருக்கிறது.

சனம், மக்கள் என்று தம்மை மக்களின் பால் அக்கறை உள்ளவர்களாகக் காட்ட முயலுபவர்கள் அந்த மக்களுக்காக் என்ன செய்துள்ளார்கள்? மக்கள் இப்படித்தான் உணர்கிறார்கள் என்று சொல்வதற்கு இவர்கள் அந்த மக்களுடனா இருக்கிறார்கள்.அந்த மக்களின் அவலங்களைக் குறைக்க அவர்களுடன் அவர்களின் துண்ப துயரங்களில் பங்கேற்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்க இந்த லூசுகளுக்கு என்ன அருகதை இருக்கிறது.மக்கள் என்றுமே தமக்காகப் போராடுபவர்கள் பின்னாலையே அணிதிரள்வார்கள்.அவ்வாறு தான் திரண்டு கொண்டிருகிறார்கள்.

இந்த லூசர்கள் தாங்கள் தான் போராட்டத்தை, மக்களை விடுதலை செய்ய நடாத்துவதாகக் கூறுக் கொண்டு ஏன் புலத்தில் இருக்கிறார்கள்? ஒரு சதத்தை,ஒரு துளி வேர்வையை, ஒரு சொட்டு இரத்தத்தை தானும் அந்த மக்களுக்காக ஈயாதவர்கள் இங்கே எழுதும் எழுத்துக்கள் வெறும் விளம்பரம் அன்றி வேறென்ன. நாய் வாலை நிமிர்த்த முடியாது.ஆனா கோவம் வந்தா நாய்க்கு கல்லால எறியாம இருந்தா நாய் தொடர்ந்து ஊளை இட்டுக் கொண்டிருக்கும்.

Edited by narathar

இன்றைய நியுஸ்1st ல் இராணுவப் புளுகுனிப் பேச்சாளன் கூறியது 331 வி.புகள் வரை இறந்திருப்பார்களாம் வாகரைப் பகுதியில். இவர்களுக்கு எப்பொழுதும் தமது பக்க எண்ணிக்கைக்கு முன் புலிகளின் பக்க எண்ணிக்கை கிடைத்து விடுகின்றது. எப்படி??????

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பேசிய உண்மை..

மாவிலாற்றில் இருந்து இன்று வரைக்கும் பேசுவது..

1. எங்கே எப்போ தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பது புலிகள் தான்.

2.தமிழீழத்துக்கு மாற்றுத் தீர்விருந்தால் சொல்லுங்கள்.

3.புலிகளுக்கு மாற்றாக நீங்கள் யாரை முன்மொழியுறீங்கள்..!

இவைதான் இங்கு சிலர் பேசிய உண்மைகள்..! மக்களின் கஸ்டங்கள் அழிவுகள் பனர் ஒட்டுவதோடும் பிடிப்பத்தோடும் போச்சு.

ஆனால் இன்று பல ஆயிரக்கணக்கான மக்களில் சிலர் பிபிசி தமிழோசைக்கு வழங்கியுள்ள குரலே சாட்சி சொல்கிறது அந்த மக்களின் உண்மை ஏக்கம் என்ன என்பதை...! தங்களை அதிகபிரசிங்களாக எண்ணிக்கொண்டு நடமாடும் சிலர் அவற்றைக் கேட்க வேண்டியது கட்டாயம். அந்த மக்களைப் பற்றி மூச்சுக் கூட விட மறுக்கும் தமிழ் ஊடகங்கள் தான் ஏன்...??! அதுபோலத்தான் இவர்களின் உண்மையும். பொய்யை உண்மை என்று காட்ட கங்கணம் கட்டுவதிலும் உண்மையை உண்மையாகப் பேசுபவர்கள் இவர்களைப் போல நேரத்துக்கு மழுப்பல் செய்ய வேண்டியதில்லை..! :icon_idea:

நீங்கள் என்ன ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியா ?

ஏன் சஞ்சலப் படுகிறீர்கள். விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து உங்களாலான உதவியை செய்யுங்கள். இல்லையென்றால் அமைதியாக ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

அப்ப நீங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியா?

மக்கள் கருத்துத்தான் என் கருத்து

நம்பிக்கை இழந்தவர்கள் போய் போராடுங்கள் அல்லது கிழக்கின் விடிவெள்ளி கருணாவுடன் போய் சேருங்கள்

நீங்கள் அங்கை போய் போராடுங்கள்

புலி ஒருபோதும் தோற்றுப்போகாது என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு இராணுவ காய் நகர்த்தலே அன்றி வேறொன்றும் இல்லை. இது யாருக்கும் தெரியாத ஒன்றில்லை. சரி இன்னும் எத்தனை நாட்கள் என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்

அப்ப விடிவு இல்லை பகல் இருட்டும் இருட்டு பகலாகும் மாறி மாறி விடுவது பிடிப்பது விடுவது பிடிப்பது?

அப்பிடி எண்டால் நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறீங்கள்... நீங்கள் வளர்வதே இல்லையா..??? சாப்பிட்டது செரிச்சா பசிக்கும்.. பசிச்சா சாபிடுவீங்கள் தானே.. பிறகும் பசிக்கும்... அப்பவும் சாப்பிடுவீங்கள்... அப்படி சாப்பிடுகிற நீங்கள் வளர்வதே இல்லையா...??? ஏதாவது குறைபாடு இருந்து வளராவிட்டால் அதுக்கு பேர் வலது குறைவு எண்டுறவை... அதே மரமாக இருந்தால் சோடை என்பீனம்...

அதுமாதிரித்தான் ஒவ்வொருநாள் விடியும் போது ஒரு புது விடயம் நல்லதாக நடந்து இருக்கும்.. அதை கிரக்கித்துக்கொள்ள கொஞ்சம் சிந்தனை ஆற்றல் வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா போட்ட கட்டுரையில் இருப்பது கவலையை தருகின்றது சொர்ணம் அண்ணாக்கு என்னாச்சு?

விமானத்தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இருப்பது உண்மை அந்த கட்டுரையில் இருப்புது போல..

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா போட்ட கட்டுரையில் இருப்பது கவலையை தருகின்றது சொர்ணம் அண்ணாக்கு என்னாச்சு?

விமானத்தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இருப்பது உண்மை அந்த கட்டுரையில் இருப்புது போல..

ஊர்ஜிதமற்ற தகவல்கள் என்றபாணியில் வதந்திகளைப் பரப்பி தமிழ் மக்களை மிரட்சியடையச் செய்யும் தந்திரத்தை கனகச்சிதமாக சிங்களவரின் நாளேடுகள் கையாளுகின்றன. இதை நம்பி ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான் செய்தியை இணைத்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

"As there was no radio communication between Swarnam and Jeyan, the Batticaloa leader had tried to contact the former, the forces initially believed that he was killed. This followed reports that his personal body guard was killed. But sources in the rebel-held area say he escaped when a group of elite Tigers numbering 150 arrived and whisked him to safety. The Navy swears by its blockade while the Army is certain it had sealed almost all its openings to prevent any escape. But, as his body was not found, it cannot be ruled with certainty that Swarnam was killed. Previously too there were reports that Banu was killed that turned out to be not so."

http://www.nation.lk/2007/01/21/newsfe5.htm

முழுக்கட்டுரையையும் படித்தால் இன்னும் "திறில்" அடைவீர்கள்..

அப்பிடி எண்டால் நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறீங்கள்... நீங்கள் வளர்வதே இல்லையா..??? சாப்பிட்டது செரிச்சா பசிக்கும்.. பசிச்சா சாபிடுவீங்கள் தானே.. பிறகும் பசிக்கும்... அப்பவும் சாப்பிடுவீங்கள்... அப்படி சாப்பிடுகிற நீங்கள் வளர்வதே இல்லையா...??? ஏதாவது குறைபாடு இருந்து வளராவிட்டால் அதுக்கு பேர் வலது குறைவு எண்டுறவை... அதே மரமாக இருந்தால் சோடை என்பீனம்...

அதுமாதிரித்தான் ஒவ்வொருநாள் விடியும் போது ஒரு புது விடயம் நல்லதாக நடந்து இருக்கும்.. அதை கிரக்கித்துக்கொள்ள கொஞ்சம் சிந்தனை ஆற்றல் வேணும்...

மனிதன் ஒரு வயசுக்கு வந்தால் பிறகு வலர்வது இல்லை எப்படி சாப்பிட்டலும்

என்னதான் சொண்னாளும் இன்று தமிழ் மக்கள் புலிகளில் நம்பிக்கையிழந்து இருக்கிறர்கள்?

அப்ப நீங்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியா?

மக்கள் கருத்துத்தான் என் கருத்து

புலி ஒருபோதும் தோற்றுப்போகாது என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு இராணுவ காய் நகர்த்தலே அன்றி வேறொன்றும் இல்லை. இது யாருக்கும் தெரியாத ஒன்றில்லை. சரி இன்னும் எத்தனை நாட்கள் என பார்ப்போம்.

இதில் மக்கள் கருத்து எது ? உங்கள் கருத்து எது ? :icon_idea: :icon_idea: :icon_idea:

விடுதலைப்புலிகள் பலவீனமடைந்தால் உலகிலேயே மலிந்த நலிந்த இனம் நாமாகத் தான் இருப்போம்.எனவே சேர்ந்திருங்கள் அல்லது விலகியிருங்;கள்.தயவு செய்து து ரோகிகளாக இருக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"""வெற்றியில் கற்பது சொற்பம் தோல்வியில் கற்பது அதிகம்."""

1983ம் ஆண்டு திருநெல்வெலியில் வெறும் 13 இராணுவத்தினர் கொல்லபட்டதற்காக. கொழும்பில் எத்தனையோ தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அனைத்து தமிழர்களும் தொலைந்தது தொலைய கிடைத்ததோடு வடக்கு வந்து சேர்ந்தார்கள்.

2000ம்-2001ம் ஆண்டுகளில் 13ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்நத ஆணையிறவை புலிகள் முற்றுகைளிட்டபோது 3000 அதிகமான இராணுவத்தினர் கொல்லபட்டதாக புலிகளால் கூறப்பட்டாலும.;... (உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஆணையிறவின்பக்கம் திருப்பாமல் இருப்பதற்காகவே புலிகள் உண்மையான இராணுவ இழப்பை மறைத்திருப்பார் என்பது இராணுவ ஆய்வாளர்களின் ஐயம்) வெற்றிலைகேணியிலிருந்து கிளாலி வரையிலுமான இடங்களை பூகோளரீதியகபார்த்தால் பாரிய படையணி புலிகளின் முற்றுகைக்குள் இருந்து வெறும் குறுகிய நிலப்பரப்பால் ஆள்இழப்பில்லாமல் பின்வாங்குவது எவ்வளவு சாத்தியம்???? குறைந்தது 6000ம் வரையிலான இராணுவத்தினர் எனினும் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

17-18 வருடங்களின் பின்பு 3000ம் இராணுவத்தினர் கொல்லபட்டபோது கொழும்பில் 1தமிழர் கூட கொல்லப்படவில்லை. ஏன் தமிழர் பாவம் என்று சிங்கள காடையர் நினைத்தார்களோ??? இல்லை அப்படி சிங்களவரின் கைகள் கட்டப்பட்டிருந்தன என்பதே உண்மை.

1988 தொடக்கம் 1990 வரையிலும் புலிகள் காடுகளில்தான் பதுங்கி இருந்தார்கள். இந்த காலப்பகுதியில் வடக்குகிழக்கு மக்களை வடக்குகிழக்கு மாகாண முதலமைச்சர்தான் ஆண்டு வந்தார் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு கனரக ஆயுத பயிற்சி எல்லாம் நடந்ததுதான். 1990ல் இந்திய இராணுவம் இந்தியாவிற்கு போக தொடங்கியது முதலமைச்சரும் ஓடிவிட்டார்

ஏன் என்று தெரியாது?????? ஏன்???? ஏன்;?? ஏன்?????

நேற்று பெய்த மழையில் முழைத்த காளான்கள் நிலைப்பதில்லையோ?? இல்லை! உலகில் இது அப்போதுதான் முதன் முதலில் நடந்ததில்லை. தொன்று தொட்டே அதுதான் நடக்கிறது.

"""தர்மங்கள் எத்தனை நிர்பந்தங்கள் ஏற்பட்டாலும் தலைசாய்வதில்லை""" இது விடுதலைப்புலிகளின் வேதமந்திரம்.

புலிகள் வெற்றியின் பாதையில் நடைபோட்டாலும்....... பல தோல்விகளில் இருந்தே அனைத்து வெற்றிகளையும் சம்பாதித்தார்கள்.

இலங்கையின் ஒரு தற்காலிக ஜனாதிபதியை தவிர அனைத்து ஜனாதிபதிகளையும் மேசைக்கு கொண்டுவந்து பேசிவிட்டோம். இப்போதும் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருக்கிறோம்....... ஆக இப்போதும் பேச்சு தோல்விதான் முன்பைப்போல் போரை தொட்ங்கலமமா????? ஏன் தொடங்கவில்லை???? இதுதான் பலரது கேள்வி!

புலிகளின் நிலைப்பாடு போரை தொடங்குவதில்லை! ஏன்???

இம்முறை நாம் போரை தொடங்கி ஒரு குறிப்பிட்ட வெற்றிகளை எட்டும் போது...... மீண்டும் வேறு ஒரு சிங்கள அரசு இல்லாவிடின் இதே அரசு பேச்சுவார்த்தை என்று கைநீட்டினால் உலகம் அழுத்தம் கொடுத்தால் மீண்டும் பேசுவது??????

இதைத்தான் பலமுறை செய்துவிட்டோம் ""மீண்டும் அப்போது நாம் தோற்கலாமா?????"""

இனி நாம் பேசுவதா இல்லையா ??????

இதை முடிவு செய்து அதை உலகிற்கு அறிவித்து விட்டே தொடங்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.