Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை துறைமுகத்தில் கடற்புலிகள்?

Featured Replies

புஸ்வாணம் பற்றிக் கதைச்ச மொட்டைக்கு இது முகத்தில கரி பூசின மாதிரி இருக்கும்.

  • Replies 78
  • Views 17k
  • Created
  • Last Reply

தமிழ்நெற்றைப் போலவே, சங்கதி செய்திகளையும் நம்பலாம். 'சங்கதி" தமிழீழத்திலிருந்து நடத்தப்படும் ஊடகம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆதாரமற்ற செய்திகளை அவர்கள் பதிப்பதில்லை. அதோடு, அவர்கள் பருத்தித்துறைக் கடலில் கடும் சமர் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர, துறைமுகத்தினுள் சமர் எனக் குறிப்பிடவில்லை.

யாழ்கள உறுப்பினர்கள் தலைவரைப் பற்றி இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இரண்டு மாதத்திற்கு முதல் தலைவர் சொன்னதை மறந்துவிட்டினம் போல இருக்கு.

"எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்."

என்று தலைவர் தனதுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தவருடம், கட்டாயம் எங்களுக்கு நிச்சயமாக ஒரு விடிவு வரும் என்பது உறுதி. ஆனால் உடனே வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இப்படி இடைக்கிடை ஒரு சின்ன மாதிரிகளை (சாம்பிள்) தலைவர் குடுத்துக் கொண்டுதான் இருப்பார். வாகரையைப் பிடிச்சுப்போட்டம் என்று மகிந்த கொண்டாடி முடியிறதுக்குள்ள, பருத்தித்துறையில அடியைக்குடுத்து, அவரைக் கலங்கடித்து விட்டார். இதுதான் தலைவர். ஒரு பக்கம் சிங்களவன் அடிச்சால், மற்றப்பக்கம் அவனுக்கு பதிலடி குடுப்பார். மகிந்த இப்ப ஆடுகிற ஆட்டத்துக்கு கெதியில் நல்லா அனுபவிக்கப் போகிறார். மகிந்தவுக்கு குடுக்கப்போகும் பதிலடிகள் எப்பிடி இருக்கும் எண்டதை இந்த வருடம் முடியிறதுக்குள்ள இருந்து பாருங்கோ...

புலிகளின் சமாதானச் செயலகத்தின் அறிக்கை :

Sea confrontation in Vadamaradchy

A naval confrontation between a sea tiger unit and a team of Sri Lankan navy boats took place between Valvettithurai and Point Pedro this evening, (Sunday). Beginning around 3.45 this afternoon, the clash lasted for about three hours. The Sri Lankan naval personnel manning a freighter triggered off the confrontation by firing upon the sea tiger unit, the Sea Tiger sources say.

Sri Lankan artillery units, air force Kfir bombers and helicopter gun-ships were brought to the assistance of the Sri Lankan navy boats.

One Sea Tiger was killed in the action according to LTTE naval command for the Vadamaradchy region.

21 January 2007

http://www.ltteps.org/

Edited by lisa01

எவ்வளவோ பொறுத்திட்டியள். இன்னும் கொஞ்ச நாள்பொறுங்கோ.

  • தொடங்கியவர்

வெந்த புண்ணில பால் வார்க்க முற்பட்ட பதிவில குறைபிடிக்கிறது எங்கடை கட்டமைப்புகளை நாங்களே பலவீனமாக்கிற மாதிரி. அண்ணாந்து பாத்து எச்சில் உமிழிற மாதிரி.

மக்கள் போராட்டத்தின்பால் நம்பிக்கையோடு காத்திருக்க அவ்வாறான எழுத்துக்கள் தவிர்க்க முடியாதவை. இவாறு அவர்களின் எழுத்துக்களுக்கு பின்னால் இருக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய அரசியல் அறிவு வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை ஏற்றி வந்த சிட்டி ஆஃப் லிவர்பூல் சரக்குக் கப்பலில் இருந்து பருத்தித்துறை துறைமுகத்தில் ஞாயிற்றுகிழமை பொருட்களை இறக்கும் பணிகள் நடைபெற்றன.

ஆனால் மதிய நேரத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினர் அங்கு பணியாற்றிய ஊழியர்கள், மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காகச் சென்றிருந்த ட்ரக் வண்டிச் சாரதிகள் உதவியாளர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்ததாகவும் :icon_idea::D:D அதன் பின்பே மோதல்கள் நடைபெற்றதற்கு அறிகுறியாக குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குறுக்ஸ், வக்காளத்தோ? புதினம், சங்கதியை போன்று பதிவும் இணையத்தளமும் மக்களிடையே பிரபல்யம் அடைஞ்சு கொண்டு வருது, நெருப்பு தேனி மாதிரி முந்திரிக்கொட்டையாட்டம் ஆதரமற்ற செய்திகளை போட்டு மக்களை குழப்பிறதில என்ன லாபம் அவைக்கு? நிதானமா செய்திகளை பொறுப்புடன் போட்டால் அவயளுடைய இணையத்தை ஒருத்தரும் பார்க்கமாட்டினமோ?

இண்டைக்கு இந்த பிரிவில மேல உள்ள உறுப்பினர்களுடைய கருத்தை பார்த்தியள் எண்டாள் தெரியும், பலர் தலைமுடியை போட்டு பிச்சுக்கிறாங்க (மூளை இல்லாதவங்க) இருக்கிறவங்க மூளையை போட்டு குழப்பிறாங்க, சப்போஸ் கந்தப்பு, சின்னப்பு போன்ற வயசானவர்கள் இந்த செய்தியாஇ அதாவது பருத்துத்துறைக்க புலி இறங்கி அடிக்கிறாங்களாம் எண்ட செய்தியை கேட்டு ஆனந்தத்தில மிதப்பாங்க, அப்புறம் அட அந்தசெய்தி பொய்யாம், வதந்தியாம் என்று கேள்விபடும்பொழுது வயசான நேரத்தில் பொட்டென்று போய் சேர்ந்திட்டல் யார் பொறுப்பு?? பதிவு இணையத்தளத்தில கிளைம் பண்ணலாமோ?? :angry: :angry:

  • தொடங்கியவர்

கிழக்கில் இருந்து வரும் செய்திகளால் மக்கள் சோர்ந்திருக்கும் பொழுது அவர்களிற்கு உற்சாக மூட்டி தேசியத்தைப் பலப்படுத்துவது தேசிய ஊடகங்களின் கடமை அதைத்தான் சங்கதி கொஞ்சம் செய்கிறது. பதிவு இன்னும் நல்லா செய்கிறது.

புதினம் இப்ப கொஞ்ச நாளா நல்லாயில்லை. அவை கிட்டமுட்ட தமிழ்நெற் கணக்குக்கு வந்திட்டினம்.

அவர்களை முந்திரிக் கொட்டை என்றனீர் ஒரு செய்தித்தளம் நடத்திக் காட்டும் பாப்பம். நடத்தினா அதில இருக்கிற கஸ்டங்கள் தெரியும். உம்மடை ஈழம்போறத்திலேயே ஒருபகுதியில நடத்தும் பாப்பம் பதிவை விட திறமா. எல்லாரும் தன்னாவலர்களாக தேசியத்துக்கு சேவை செய்ய வருவதை குற்றம் குறை பிடிக்க வேண்டாம். அவர்களிற்கு செந்த பிழைப்பை பாக்கத்தெரியாதா ஒரு பிஎம்டபிள்யு ஓடித்திரியாமல் ஏன் இதுகளை செய்கிறார்கள் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும்.

போராட்டகாலத்தில் ஆதாரமற்ற செய்தி நிதானமற்ற செய்தி என்று ஒண்டு இல்லை. தேசியத்தை எது பலப்படுத்தும் போல் இருக்கோ மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் போல் இருக்கோ அது எல்லாம் ஏற்புடையது. தமிழீழம் கிடைத்தா பிறகு நிதானம் ஆதாரம் எல்லாத்தோடையம் செய்திகள் வரும் இப்பது இது தான் மக்கள் எதிர்பார்ப்பாத்து ஏங்குவது. இதுகளை விளங்கிக் கொள்ள ஒரு ஆழமான அரசியல் அறிவு வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களுக்கு உலர் உணவு கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் கப்பல் தாக்குதலுக்கு இலக்காகி வடமராட்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் அது தொடர்பான ஒளிப்படங்கள் தமிழ் ஒளிபரப்பு ஒன்றில் காட்டப்பட்டும் உள்ளன.

வாகரை தொடர்பான செய்திகளில் புலிகளின் 120 எம் எம் ஆட்லறி மற்றும் 80 எம் எம் மோட்டார் மற்றும் 50 கலிபர் அழிக்கப்பட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் புலிகளிடம் இருந்து மொத்தம் 50 துப்பாக்கிகளும் 40 சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனவாம். அதில் 22 மிக அழுகிய நிலையில் இருப்பதால் தாமே அவற்றைப் புதைக்கப் போவதாகவும் படையினர் ரொயிட்டருக்கும் இதர செய்தி நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளனர்..!

எதுஎப்படி இருப்பினும் இவற்றை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் இது குறுத்து எதையும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

இறந்தது பொதுமக்களா...சரணடைந்தது பிடிக்கப்பட்ட பொதுமக்களா..அழிக்கப்பட்டது இராணுவத்தின் கருவிகளா என்பதெல்லாம்..எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். தங்கள் படைகள் எதிர்ப்பே இல்லாது இடத்தைப் பிடித்தது அவமானம் என்பதால் படையினர் சிங்கள மக்களை குசிப்படுத்த இப்படிப் பல கதைகளை அவிழ்க்கக் கூடியவர்கள். அதுமட்டுமன்றி புலிகள் போலி ஆட்லறிகள் மோட்டார்களை விமானப்படையை திசை திருப்பவும் குழப்பவும் செய்து காட்சிக்கு வைப்பது வழமை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் யாழ் குடாநாட்டில் நடந்த ஆனையிறவு ஆகாய கடல் தரை சமருக்கான நினைவுக் கண்காட்சியில் புலிகள் போலியாக தயாரித்த போர்த்தளபாடங்களை காட்சிக்கு வைத்திருந்ததையும் குறிப்பிடலாம்..! எனவே தாயக மக்கள் இராணுவத்தின் கதையளப்பை கேட்டு மக்கள் குழப்பமடையாமல் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மனோதிடத்தோடு இருக்கவும் வேண்டியதே முக்கியமானதாகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிந்த கப்பல் பாராளமன்ற உறுப்பினர் மகேஸ்வரனுக்கு சொந்தமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எப்பவும் ஆடு அறுக்கக்கிடையிலை-------அறுக்கிற நினைப்பிலதான் இருப்பம்.சும்மா சங்கு ஊதுறதை விட்டுட்டு பேசாமல் போங்கோவன்.அங்கை நடக்கிறது வேற விசயமப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :angry:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குறுக்ஸ், வக்காளத்தோ

என்ன டன்ங் குறுக்ஸின் பானியை புரிந்து கொள்ளவில்லையா இன்னும்.மீன்டும் ஒருக்கா வாசித்து பாருங்கோ வடிவா விளங்கும். :P

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி நாட்டிலிருந்து செய்யப்படுவதாக ஒரு கள உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், பல செய்திகள் புதினத்தின் செய்தித்தழுவலாகவே உள்ளன. அதனை உன்னிப்பாக வாசித்து வருகின்றவன் என்பதனால் என்னால் உறதியாகக் கூற முடிகிறது.

உதாரணத்துக்கு கப்பல் தாக்குதல் செய்தி புதினம் தான் சரியான விவரங்களுடன் வெளிக்கொணர்ந்திருந்தது. அதனை பார்த்து உடன் கொப்பியடித்த தளம் சங்கதி.

மீண்டும், மீண்டும் நான் கூறிக்கொண்டிருப்பது இதுதான் செய்திகளை கொப்பியடித்துப் போடுவதனை இவர்கள் தவிர்த்தாலே செய்தி தனித்துவம் மிளிரும் ஒவ்வொரு இணையத்தளங்களிலும்.

நீங்கள் சொல்வது உண்மைதான் நிர்மலன். செய்தி ஒன்றாக இருக்கும்போது, அது இன்னொன்றின் தழுவலாகத்தான் இருக்கும். "புதினம்" "பதிவு" ஆகியவற்றின் செய்திகள்கூட "தமிழ்நெற்"றின் தழுவலாகத்தான் இருக்கின்றன. நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. மேற்கூறப்பட்ட செய்தி ஊடகங்களுக்கு வரும் செய்திகள் அனைத்தும் ஒரு களத்திலிருந்துதான் வருகிறது. அதாவது, தாயகத்திலிருந்துதான் வருகிறது. அதுமட்டுமின்றி, ஊடகங்கள் செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் என்ற அவாவில்தான் உடனே செய்திகளை வெளியிடுகின்றன. முக்கியமாக சண்டை சம்பந்தப்பட்ட, தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகளைத்தான் அவர்கள் உடனடியாகப் பதிவு செய்கிறார்கள். மேற்குறிப்பிட்ட செய்தி ஊடகங்கள் அனைத்தும் மக்களின் நலன்களிற்காகவும், தாயகத்திற்கு ஆதரவான செய்திகளை மட்டும்தான் பிரசுரித்து வருகிறார்கள். புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மை மகிழ்வுப்படுத்தவேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யும் சேவையைக் குறை கூறாமல் இருக்கவேண்டும். இச்செய்தி ஊடகங்கள் வருவதற்கு முன்னர், நாம் தாயகச் செய்திகளை அறிவதற்கு தொலைபேசிச் செய்திக்குறிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை மறந்து விட்டீர்களா? ஆனால் இப்போதோ, நிகழ்வுகள் நடந்து ஒருசில மணிநேரங்களிலேயே எமக்குச் செய்திகளை அறியக்கூடியதாக உள்ளது. தயவுசெய்து, குறை கூறுவதைவிடுத்து, நாம் அவர்களுக்கு எவ்வாறு உதவமுடியும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

இதுவரை காலமும், தலைவர் அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்களிடம் வாய்விட்டு எதுவும் கேட்கவில்லை. ஆனால் இந்த வருட மாவீரர்நாளில், எமக்கு நன்றி சொல்லியது மட்டுமின்றி, நாம் தொடர்ந்தும் உதவவேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்குப் பிறகாவது, புலம்பெயர் மக்கள் திருந்துவார்கள் என்று பார்த்தால், இன்னும் சுயநலத்திலேயே குறியாக இருக்கிறார்கள். நீங்கள் செய்யாவிட்டாலும் செய்ய முன்வருபவர்களையாவது செய்யவிடுங்கள்.

வாலை நிமிர்த்த முடியாது என்பதை புலம்பெயர் தமிழ் மக்கள் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். எப்பதான் இந்தத் தமிழன் திருந்தப் போகிறானோ???????????? :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடியலின் ஆரம்பமோ?

ஈழத்திலிருந்து

ஜானா

:icon_idea::D:D:unsure:

Edited by Shankarlaal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

யாழ்களத்துக்க உள்ளுட்டால் அதுவும் தமிழீழப்பிரிவில உள்ளுட்டால் ஏதோ சினிமா தியேட்டருக்குள்ள் உள்ளுடுற்மாதிரி ஒரு பீலிங்க், அதுவும் தமிழ் நாட்டில ஒரு கிராமப்புற சினிமா தியேட்டருக்குள்ள உள்ளூடுற மாதிரி இருக்கப்பா..

பின்வாங்கினால் தாக்குறாங்க, பாஞ்சா துள்ளிக்குதிக்கிறாங்க, வில்லனுங்கள் மாதிரி பாயுறாங்க, ஹீரோ மாதிரி பஞ்ச் டயலக் போட்டு அவிக்கிறாங்க ஐயோ ஐயோ..

:icon_idea::D:D:unsure:

ஓயாத அலை அடிக்கமுதல் வன்னில இருந்தவங்க எல்லாம் வெளி நாடு வந்ததும் பழைசை எல்லாம் மறந்துட்டு புலம்புறதெ வேலையாப்போச்சு,

30வருட அனுப தலைவருக்கு தெரியாதது எல்லாம் நேற்று பெய்த மழையில மூளைச்ச காளானுகளுக்கு தெரியும் எண்டமாதிரி பீத்திக்கிறாங்க... ம் நா*** வாழ்க்கை பட்டால் வாலை ஆட்டித்தானே ஆகனும்.. :angry: :angry: அதே மாதிரி நீங்க எழுதுற கருத்தையும் வாசித்து தானே ஆகனும்

Edited by Shankarlaal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெற்றைப் போலவே, சங்கதி செய்திகளையும் நம்பலாம். 'சங்கதி" தமிழீழத்திலிருந்து நடத்தப்படும் ஊடகம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆதாரமற்ற செய்திகளை அவர்கள் பதிப்பதில்லை. அதோடு, அவர்கள் பருத்தித்துறைக் கடலில் கடும் சமர் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர, துறைமுகத்தினுள் சமர் எனக் குறிப்பிடவில்லை.

யாழ்கள உறுப்பினர்கள் தலைவரைப் பற்றி இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இரண்டு மாதத்திற்கு முதல் தலைவர் சொன்னதை மறந்துவிட்டினம் போல இருக்கு.

"எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்."

என்று தலைவர் தனதுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தவருடம், கட்டாயம் எங்களுக்கு நிச்சயமாக ஒரு விடிவு வரும் என்பது உறுதி. ஆனால் உடனே வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இப்படி இடைக்கிடை ஒரு சின்ன மாதிரிகளை (சாம்பிள்) தலைவர் குடுத்துக் கொண்டுதான் இருப்பார். வாகரையைப் பிடிச்சுப்போட்டம் என்று மகிந்த கொண்டாடி முடியிறதுக்குள்ள, பருத்தித்துறையில அடியைக்குடுத்து, அவரைக் கலங்கடித்து விட்டார். இதுதான் தலைவர். ஒரு பக்கம் சிங்களவன் அடிச்சால், மற்றப்பக்கம் அவனுக்கு பதிலடி குடுப்பார். மகிந்த இப்ப ஆடுகிற ஆட்டத்துக்கு கெதியில் நல்லா அனுபவிக்கப் போகிறார். மகிந்தவுக்கு குடுக்கப்போகும் பதிலடிகள் எப்பிடி இருக்கும் எண்டதை இந்த வருடம் முடியிறதுக்குள்ள இருந்து பாருங்கோ...

சங்கதி கனடாவில் இருந்து நடத்தப்படுதாக்கும்.....................

சங்கதி கனடாவிலாவில் இருந்தா? தாயகத்தில் இருந்தா? ரொம்ப முக்கிய விடயம்.

தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக ஊடகப் பங்களிப்பை சங்கதி மட்டுமல்ல அனைத்து தமிழ் ஊடகங்களும் வழங்க வேண்டும். தேவையற்ற பிதற்றல்களை, கற்பனைச் செய்திகளை விடுத்து விட்டு, சரியானவற்றை மக்களிற்குத் தெரியப்படுத்தவேண்டும்.

'ஊடக ஞானமே இல்லாதவர்களின் கைகளில் சிக்கிக்கிடக்கும் தமிழ் தேசிய ஊடகங்கள்" என தமிழ்நாதத்தில் பரணி என்பவர் எழுதியிருந்தார். அவரின் கருத்து சில இணையத்தளங்கள் பார்க்கவும், வானொலிகளைக் கேட்கும்போது உண்மையாகவே இருக்கிறது.

சம்பவம் ஒன்று நடத்துவிட்டால் அது இப்படித்தான் இருக்குமென கற்பனை பண்ணி எழுதுவதும், அத்தளம் எந்த அடிப்படையில் அச்செய்தியை வெளியிட்டுள்ளதெனக் கூட சற்றும் சிந்திக்காது பிறதளங்கள் கொப்பியடிப்பதும், வானொலிகள் அதேசெய்தியை வாசிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவற்றை தவிர்பதற்கோ அல்லது சரியான வழியில் ஊடகங்களை கொண்டு செல்வதற்கு வழி நடத்தக்கூடியவர்கள் (தாயகத்தில் இருப்பவர்கள்) கவனமெடுத்தேயாக வேண்டும். ஏனோ தெரியவில்லை அவர்கள் இவற்றில் இதுவரை கவனம் செலுத்தியமாதிரித் தெரியவில்லை. (அல்லது இதுகளைத் திருத்த முடியானெ நினைத்துள்ளார்களோ தெரியவில்லை)

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி?

'\x..xx,|<X

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது ஒரு சிறிய அதிரடித் தாக்குதலாகக் கூட இருக்கலாம். நாம் அளவிற்கு அதிகமாக துள்ளிக்குதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

களக்கருத்துக்கள் முழுவதையும் படிக்காமல் ஏனய்யா சங்கர்லால் இப்பிடிக் குழப்புகிறீர்????? மூன்றாம் பக்கத்தில் போய்ப்பாரும், தெரியும். சங்கதி தாயகத்திலிருந்து பதிவு செய்யப்படும் ஒரு ஊடகம் என்று அறிந்ததாக நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதோடை ஊடகங்களின் சிக்கல்களையும் நான்காம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கருத்துக்களத்திலை குறிப்பிட்டிருக்கிற அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு ஊடகத்தின் வாயிலாகத்தான் செய்திகள் வருகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறன்.

குறுக்ஸ் சொன்னது மாதிரி, ஊடகங்களைக் குறைகூறும் நீங்கள் எல்லாரும் சேர்ந்தாவது ஓரு ஊடகத்தை நடத்திப் பாருங்கோ. அப்ப தெரியும் உங்களுக்கு, அது எவ்வளவு சிக்கலான விடயம் எண்டு... அதுவும் செய்தி ஊடகங்களை நடத்துவது எவ்வளவு கடினம் என்று அது சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுப் பாருங்கோ....

இப்ப வாலை ஆட்டுறவை எல்லாரும் சுருட்டி வைக்கிற காலம் தூரத்திலில்லை. இன்னும் எவ்வளவு நாள்தான் ஆட்டுவிங்கள் எண்டு பொறுத்திருந்து பார்ப்போம். :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

வெந்த புண்ணில பால் வார்க்க முற்பட்ட பதிவில குறைபிடிக்கிறது எங்கடை கட்டமைப்புகளை நாங்களே பலவீனமாக்கிற மாதிரி. அண்ணாந்து பாத்து எச்சில் உமிழிற மாதிரி.

மக்கள் போராட்டத்தின்பால் நம்பிக்கையோடு காத்திருக்க அவ்வாறான எழுத்துக்கள் தவிர்க்க முடியாதவை. இவாறு அவர்களின் எழுத்துக்களுக்கு பின்னால் இருக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய அரசியல் அறிவு வேணும்.

குறுக்ஸ்

நீங்கள் கிண்டல் அடிக்கிறீர்களா அல்லது உண்மையாகவா சொல்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்ல.

குறித்த பதிவின் செய்தியில் பருத்தித்துறையில் தரையிறங்கி சண்டை நடப்பதாக குறிப்பிடப்பட்டு பின்னர் சில மணிநேரம் கழித்து படகுகள் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளன என செய்தியை மாற்றுவதன் மூலம் அவர்கள் என்னத்தைச் சொல்ல வருகினம்.

வெந்தபுண்ணில் பால்வார்த்தமாதியில்லை. வார்க்க கொண்டுவந்து விட்டு திருப்பியெடுத்த மாதிரித்தான் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

?

இண்டைக்கு இந்த பிரிவில மேல உள்ள உறுப்பினர்களுடைய கருத்தை பார்த்தியள் எண்டாள் தெரியும், பலர் தலைமுடியை போட்டு பிச்சுக்கிறாங்க (மூளை இல்லாதவங்க) இருக்கிறவங்க மூளையை போட்டு குழப்பிறாங்க, சப்போஸ் கந்தப்பு, சின்னப்பு போன்ற வயசானவர்கள் இந்த செய்தியாஇ அதாவது பருத்துத்துறைக்க புலி இறங்கி அடிக்கிறாங்களாம் எண்ட செய்தியை கேட்டு ஆனந்தத்தில மிதப்பாங்க, அப்புறம் அட அந்தசெய்தி பொய்யாம், வதந்தியாம் என்று கேள்விபடும்பொழுது வயசான நேரத்தில் பொட்டென்று போய் சேர்ந்திட்டல் யார் பொறுப்பு?? பதிவு இணையத்தளத்தில கிளைம் பண்ணலாமோ?? :angry: :angry:

:angry: :angry: :angry:

கிழக்கில் இருந்து வரும் செய்திகளால் மக்கள் சோர்ந்திருக்கும் பொழுது அவர்களிற்கு உற்சாக மூட்டி தேசியத்தைப் பலப்படுத்துவது தேசிய ஊடகங்களின் கடமை அதைத்தான் சங்கதி கொஞ்சம் செய்கிறது. பதிவு இன்னும் நல்லா செய்கிறது.

அவர்களை முந்திரிக் கொட்டை என்றனீர் ஒரு செய்தித்தளம் நடத்திக் காட்டும் பாப்பம். நடத்தினா அதில இருக்கிற கஸ்டங்கள் தெரியும். உம்மடை ஈழம்போறத்திலேயே ஒருபகுதியில நடத்தும் பாப்பம் பதிவை விட திறமா. எல்லாரும் தன்னாவலர்களாக தேசியத்துக்கு சேவை செய்ய வருவதை குற்றம் குறை பிடிக்க வேண்டாம். அவர்களிற்கு செந்த பிழைப்பை பாக்கத்தெரியாதா ஒரு பிஎம்டபிள்யு ஓடித்திரியாமல் ஏன் இதுகளை செய்கிறார்கள் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும்.

போராட்டகாலத்தில் ஆதாரமற்ற செய்தி நிதானமற்ற செய்தி என்று ஒண்டு இல்லை. தேசியத்தை எது பலப்படுத்தும் போல் இருக்கோ மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் போல் இருக்கோ அது எல்லாம் ஏற்புடையது. தமிழீழம் கிடைத்தா பிறகு நிதானம் ஆதாரம் எல்லாத்தோடையம் செய்திகள் வரும் இப்பது இது தான் மக்கள் எதிர்பார்ப்பாத்து ஏங்குவது. இதுகளை விளங்கிக் கொள்ள ஒரு ஆழமான அரசியல் அறிவு வேணும்.

Excellent Comment. 100% truth. Appreciate others good efforts and hard works. it is not an easy thing to run a web based news service. It is easy to sit and criticise others hardworks. We should think how much time and efforts have to be put to run news websites such as sankathi, puthinam and padhivu.

"U are either with us or not with us"

The above words said by Gerorge W. Bush to the nations of the world, in regards to his fight against terrorism (?), are the words we the "Tamils" need to follow too.

U are either with tigers or not with tigers.

If you trust the tigers ability to win freedom for tamils, stop crticising and wrting pages about tigers military moves and pro tamil medias. Instead, think how I can contribute to tigers cause and make them, win freedom for tamils quickly and precisely.

Or else go and support traitors like karuna and douglus. U be a fighter or traitor. That is your choice. But dont be in between. U either be white or black. be a man or woman. If you are middle sex, u become good for nothing.

Sorry to write in English. Currently I am experiencing some font problem in my computer

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.