Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் சேரனுக்கு பகீரங்க கடிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TO FILM DIRECTOR CERAN..

PLEASE WIDRAW YOUR URGLY ANTI ELAM TAMIL STATEMENT

புண்பட்ட நெஞ்சுடன் தோழர் சேரனுக்கு

மனுசங்கடா சேரன் நாங்களும் மனுசங்கடா
ஈழத் தமிழர் நாங்களும் மனுசங்கடா

என்னாச்சு இயக்குனர் சேரனுக்கு,?

இந்திய மொழி சினிமா உலகம் திருடட்டு விசிடி ஒழிப்பில் போராடி வருகிறது. கன்னா பின்னா கூட்டத்தில் தங்கர்பச்சான் ஜகுவார் தங்கம் போன்றவர்கள்திருட்டு விசிடிக்கு எதிராக கொடுத்த குரலை ஈழத்தமிழர் சார்பில் நானும் ஆதரிக்கிறேன். ஆனால் நீங்கள் சம்பந்தமோ அறமோ இல்லாமல் அந்த மேடையை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் அருவருப்பு என கொச்சைப் படுத்த பயன்படுத்தியமை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையும் அதிற்சியடைய வைத்துள்ளது.

ஈழத் தமிழர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்ல வரவில்லை. விமர்சியுங்கள் யார் வேண்டாமென்றார்கள். ஆனால் ஓரிருவர் தப்புக்காக வர்தக போட்டிக்காக ஒட்டு மொத்த சமூகப் பிரிவையும குற்ற வாளியாக்கி அசிங்கப் படுத்தும் மனோபாவத்தை வரலாறு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய கூட்டு தண்டனை மனோபாவம் வரலாறு முழுக்க சான்றோர்களால் கண்டிக்கப் பட்டே வந்துள்ளது. அந்த வரிசையிலேயே ஈழத்தமிழர் மீதான உங்கள் கூட்டுப் பழியையும் நான் கண்டிக்கிறேன். 
திரைப்பட திருட்டுப் பிரச்சினை இந்திய மொழிச் சினிமாக்களை மட்டுமல்ல உலகச் சினிமாவையே பாதிக்கும் பிரச்சினையாக பூதாகரமாகி உள்ளது.
தமிழக தொலைதூர பேருந்துகள் சிலவற்றிலும் ஏன் கேபிள் டிவி சிலவற்றிலும்கூட திருட்டு விசிடிகள் வெளியிடப் படுகிறது. இயக்குனர் சேரன். தமிழகத்தில் திருட்டு விசிடி கடைகளை நடத்துவதும் தொலைதூர பேருந்து கேபிள் டிவி போன்றவற்றை இயக்குவதும் இணைய சர்வர்களை நிர்வாகிப்பதும் ஈழத் தமிழர்கள் என்று சொல்ல வருகிறாரா?
இதுதான் பிரச்சினையின் மூலம். இது தொடர்பாக மலையாள திரைப்பட உலகம் சாதித்த அளவுக்கு தமிழகம் சாதிக்கவில்லை என்பது கவலை தருகிறது. தன்னைச் சுற்றி திரைப்பட திருட்டுக்களின் ஆடுகளம் இருப்பதை மறந்து சேரன் ஈழத் தமிழர்கள்மீது குற்றம் சாட்டுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

பொதுவாக ஒட்டுமொத்த தமிழ் திரைப் படங்களுக்கும் திருட்டு விசிடி களால் ஏற்படும் நட்டத்தில் உத்தேசமாக 80% - 100% நட்டத்தையும் தமிழக திருட்டு விசிடி. இந்திய இணைய சர்வர்களில் தரவிறக்கம் செய்வது, கேபிள் டிவி மற்றும் தொலைதூர பேருந்துகளில் ஒளிபரப்புவது போன்ற நடவடிக்கைகளே உருவாக்குகின்றன. இவற்றை தடுத்து நிறுத்துவதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவற்றின் தோல்விக்கான காணங்களையும் விளக்கி பொதுமக்களின் ஆதரவை இயக்குனர் சேரன் கோரி இருக்க வேண்டும். நாமெல்லாம் அவரை ஆத்ரித்திருப்போம்.

உலகளாவிய இந்த திரைபட திருட்டின் மூலம் ஈழத் தமிழர்களல்ல.
திருட்டு விசிடி 1.புறோச்சிங் லாப் பில் இருந்தோ 3. தமிழக அல்லது அயல் மாநில திரை அரங்குகளில் இருந்தோ 3. வெளிநாட்டுப் பிரதியில் இருந்தோ எடுக்கபடுகிறது என்பது பொதுவாக ஏற்றுக் ஒள்ளபட்ட கருத்து. மேலதிகமாக அண்மையில் மலையாளப் படமான ‘ப்ரேமம்’ திருட்டு விசிடி சென்சருக்கு அனுப்ப்பட்ட பிரதியில் இருந்து எடுக்கப் பட்டதாக புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இதே போன்ற புகார் பம்பாயிலும் இந்திப்பட தயாரிப்பாளர்களால் முன் வைக்கப் பட்டுள்ளது.
இந்த வரிசையில் ஈழத் தமிழர்கள் இல்லை. திருடப் பட்ட விசிடி களை தனிப்பட அல்லது வர்த்த நோக்கத்துடன் பயன்படுத்தும் மட்டத்தில் இனையத்தில் தமிழக தமிழர் சிலரும் மலேசியா இலங்கை தமிழர்கள் சிலரும் செயல்படுவதாக சொல்லப் படுகிறது.
இந்தியாவில் இடம்பெறும் திருட்டு விசிடி விற்பனை இணைய சர்வர்களில் தரவிறக்கம் செய்யும் வசதி என்பவையே தமிழ் மற்றும் இந்திய மொழி திரைபடங்களுக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்சினை. இது பெரும்பாலும் இந்திய இணைய சர்வர் நிறுவனங்கள் தமிழக வர்த்தகர்கள் சிலரது கட்டுப்பாட்டில் உள்ள முயற்சியாகும்.

இயக்குனர் சேரன் அவர்களே இங்கு ஈழத்தமிழர்கள் எங்கு வந்தார்கள்???

சம்பந்தமின்றி ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களையும் போராட்டத்தையும் இழுத்து இயக்குனர் சேரன் கொச்சைப் படுத்திய சேதி ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையும் அதிற்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நாங்க மனுசங்கடா என்ற கவிஞர் இன்குலாப்பின் பாடலைத் தவிர இயக்குனர் சேரனுக்குச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள்மீது அனுதாபம் காட்டியதற்க்காக ஒரு பெண் இயக்குனர்மீது சேரன் வன்மத்தைக் கக்கியுள்ளார். ஒடுக்கப் பட்ட சாதியினர் பெண்கள் ஈழத் தமிழர்கள் என்றால் ஊருக்கு இளைத்தவர்கள் என்கிற புதிய போக்கு தமிழகத்தில் உருவாகி வருகிறதா?.

இயக்குனர் சேரன், மன்னிப்பு என்று கூறி நீங்கள் ஆரம்பித்த இந்த அருவருப்பான வாத பிரதிவாதங்களை முடித்து வையுங்கள்.

 

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் திரைப்பட நடிகன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சேரன் மன்னிப்பு கேட்காவிட்டால் இனி இந்திய தமிழ் திரைப்படம் எதையும் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை என்று அனைவரும் உறுதிஎடுத்து செயற்படுவோம். அதன் பலாபலன்களை அவர்களே அனுபவிக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே! தமிழர்களின் உணர்வுகளை சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியுள்ளீர்கள். 

35 minutes ago, vanangaamudi said:

இயக்குனர் சேரன் மன்னிப்பு கேட்காவிட்டால் இனி இந்திய தமிழ் திரைப்படம் எதையும் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை என்று அனைவரும் உறுதிஎடுத்து செயற்படுவோம். அதன் பலாபலன்களை அவர்களே அனுபவிக்கட்டும்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா சார்.

உப்படி எத்தனை முறை சபதம் எடுத்திருப்போம், எல்லாம் அடுத்த படம் வரும் வரைக்கும்தான். 

தமிழனா கொக்கா.

நாங்கள் நினைத்தால் சேரன் போன்றவர்களை தூக்கி சிம்பிளா கடாசிட்டு போகலாம். தமிழ் சினிமாவின் வருமானத்தில் ஒரு பெரிய பங்கை நாம் வகிப்பது எம்மில் பலருக்கு புரிந்தால், இது வெகு சுலபம்.

மனம் இருந்தால் இடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா
உங்கள் கடிதம் தமிழ்த் திரை உலகத்தையும்  இயக்குனர் சேரனையும் உணர வைத்தாலே போதும்.
அதே வேளை ஈழத்து வர்த்தகர்களும் திருட்டு வி சி டிக்களை விற்பனை செய்வதையோ அல்லது மற்றவர்களுடன் பகிர்வதையோ உடனடியாக நிறுத்த வேண்டும்.
திருட்டு வி சி டி க்களை பார்க்கக் கூடாது என்று நாங்களும் சபதம் எடுக்க வேண்டும்.

நான் இறந்தால் ஈழத்தமிழர்கள் யாரும் 
வரமாட்டீர்களா? வரவேண்டாம்! 
சேரன் உருக்கம் ( வீடியோ )
 
 
சென்னையில் நடைப்பெற்ற திரைப்பட விழா ஒன்றில்  இயக்குநர் சேரன் பேசும்போது, ‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
 
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது’’ என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார்.
 
இயக்குநர் சேரனின் இந்த பேச்சு இலங்கைத்தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு கண்டக்குரல்கள் எழுப்பி வந்தனர்.
 
இதையடுத்து தனது பேச்சு குறித்தும், கண்டனங்கள் குறித்தும் சேரன்,  ‘’ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்...’’என்று விளக்கம் அளித்தார்.
 
ஆனாலும் இந்த விவகாரம் மேலும் மேலும் கண்டனங்களை எழுப்பிவரும் நிலையில், லங்காஸ்ரீ இணையதளத்திற்கு  சேரன் அளித்துள்ள விளக்கம்:
 
’’நான் எந்த இடத்தில் பேசினேன் எந்த விசயத்திற்காக பேசினேன் என்பதை பொருத்து தான் அந்த கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு விழாவில் திருட்டு டிவிடி ஆதிக்கத்தை பற்றி நான் பேசும் போது இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது . எங்கே எல்லாம் இருக்கு, தமிழகத்தில் இருக்கு; தமிழ் நாடு அரசாங்கம்  கண்டு கொள்ளாமல் இருக்கு.  காவல் துறையினர் அந்த வழியாக செல்கின்றனர். தமிழ் நாடு முழுவதும் 18000 கடைகள் இருக்கின்றன. இதை அனைத்தையும் சுட்டிக் காட்டினேன். அதே நேரத்தில் வெளி நாடுகளில் இருந்து படம் வெளியான அன்றே இணையத்தளத்தில் போட்டுவிடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் இருக்க கூடிய தமிழர்கள் இலவசமாக பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளது. இது யார் வெளியிடுவது என்று பார்க்கும் போது எங்களுக்கு வந்த தகவல் கொண்டு பார்க்கும் போது, யாரோ சில இலங்கை தமிழர்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வேலையை செய்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.  இவை அல்லாமல் எனக்கு ஒரு அனுபவம்.  சிடூஎச் ஆரம்பித்து லண்டனில் குடும்ப நண்பர்கள் 300, 400 நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னேட சகோதரார்கள் இலங்கை தமிழர்கள்.  அவர்கள் யாவரும் என்னை ஏன் சேரன் சார் இப்படி பேசி இருக்கிறீர்கள் என்று கேட்க வில்லை. ஏன் என்றால் அவர்கள் அனைவருக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும் அனைவரும் பழகி இருக்கிறார்கள். இந்த கருத்தை பற்றி முரண்பாடக எடுத்து கொண்டவர்கள் என்னை பற்றி தெரியாதவர்கள் பழகாதவர்கள், நான் உங்கள் போராட்டத்திற்கு இவ்வளவு செஞ்சி இருக்கோம், அப்போழுது சிலர் இவர் அப்படி என்ன போராடி இருக்காரு என்று அவர்களுடைய விமர்சனத்தை பதிவு செய்கின்றனர். அதற்கு நீங்கள் போராடிய அளவிற்கு நான் போராட வில்லை. நான் ஒரு சாதாரன மனிதன்.  ஆனால் என் தற்காப்பு வாழ்க்கையில் என் படத்தை நம்பிதான் நான், சினிமாவை நம்பிதான் நான், சினிமா பாதிக்கும் போது எந்த இடத்தில் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்து அதை நீக்குவதற்கு முயற்சி எடுக்கிறேன். 
 
இந்த பிரச்சனைக்கு இலங்கை தமிழர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று சொன்னதும், உலகம் முழுவதும் விமர்சனங்கள் வெடிக்கிறது. 15 வருடமாக போராடி கொண்டு இருக்கிறார்கள். இதனை எந்த ஒரு அமைப்பும் கேட்கவில்லை. நம்முடைய தோழர்கள் நம்முடைய தமிழர்கள், சகோதரர்கள் இந்த தொழிலை பண்ணாதீர்கள் முறையாக அனுமதி வாங்கி பண்ணுங்கள் என்று எந்த அமைப்பாவது இவ்வாறு குரல் கொடுத்து இருக்கிறதா. 
 
இவ்வாறு குரல் கொடுக்காதவர்கள், இந்த ஒரு குறையை குற்றச்சாட்டாக கொண்டு உடனே ஆர்ப்பரிக்கிறார்களே, இதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதே போல் ஆதங்கம் இருக்கும் என்பதற்காகவே நான் பதிவு செய்தேன். என்னுடைய ஆதங்கம் யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளேன்; சகோதரன் நினைத்துள்ளேன், தமிழ் நாட்டில் அரசியல் பெரும் கட்சிகளை எதிர்த்து கொண்டு தான் நானும், சீமானும் சேர்ந்து போராடினோம்.  அனைவரின் மீது உள்ள அன்பில் தான் செய்தோம். நீ என் சகோதரன் நீயே ஏன்டா என் முதுகில் குத்துகிறாய் என்று கேட்டேன். யாருமே என் படங்களை லண்டன், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியாவிலும் திருட்டு தனமாக விற்கவில்லை என்று சொல்லுங்கள் திருட்டு டிவிடி யை பார்க்கவில்லை என்று சொல்லுங்கள்.
 
நான் என்னுடைய பொருளை விலை கொடுத்து கொடுக்க அனுமதிக்கிறேன். அதே போன்று அதே போல விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன். அது தானே என் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் கல்வி, அப்போழுது என் சகோதரன் இவ்வாறு இருப்பது இன்று நினைப்பது தவறா, நான் கேட்பது யாரோ ஒரு திருடனுக்காக அல்ல; இது என் குடும்பம், குடும்பத்தில் தவறு நடக்கும் பொழுது அப்படி செய்ய கூடாது, அதை சரி பண்ணுங்க என்று சொல்கிறேன். அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா நீங்கள்.
 
எனக்கு தெரிந்த அமைப்புகளில் இருந்து எனக்கு தெரிந்த நண்பர்களில் இருந்து யாவரும் இவை பற்றி பேசவில்லை. இது பற்றி பேசியவர்கள் நம்மை வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் இவற்றை பற்றி பேசுகின்றனர். ஈழத்தமிழர்கள் பற்றி யூடியூபில் மூன்று வீடியோ இருக்கிறது. அந்த  மூன்று வீடியோ போட்டு கேளுங்கள்.  அந்த மாதிரி பேசிய மனிதன் ஏன் இன்று இப்படி பேசி இருக்காரு என்று சின்ன கேள்வி உங்கள் மனதில் உருவாகும். இப்போது இப்படி பேசி உள்ளேன் என்றால் எவ்வளவு காயம் பட்டு இருப்பேன்.
 
நேற்று செய்தது அனைத்தையும் மறந்து விட்டு இன்று ஏய் நீ எப்படி செய்யலாம் என்று ஒரு எதிப்பு குரலை எழுப்புகிறார்கள் என்றால் நம்முடைய எதிரிகள், நமக்கு பிடிக்காதவர்கள்.  இதனால் எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு என்ன ஆதங்கம் என்றால் உலகம் முழுக்க எனக்குனு ஒரு நாடு இல்லை, நமக்குனு ஒரு மண் இல்லை, நாம் ஒரு அடையாளத்தை அகதி என்று வைத்து கொண்டு அலைகிறோம் ஏன் என்றால் நாம் தேசத்தை விட்டு துரத்தப்பட்டதால், தேசத்தில் நாம் நிம்மதியாக வாழ முடியாததால், அந்த அகதிகள் என்ற பெயர் நமக்கு ஒரு அழுக்காகவும் ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. ஒருத்தன் இந்தியன் என்கிறான் ஒருத்தன் அஸ்திரோலியா என்கிறான் ஒருத்தன் அமெரிக்கா என்றான் ஆனால் நான் யாரு என்று சொன்னால் எனக்கு நாடு இல்லை எனக்கான ஒரு வீடு இல்லை. இந்த இடத்தில் நான் வாழுகின்ற வாழ்க்கை என்னும் அடையாளப் படுத்த வேண்டும்.  மேம்போக்காக, மேல் மட்டத்திற்கு கொண்டு போக வேண்டும். வாழ்க்கை ஒரு உதாரணமாக இருக்கவேண்டும்.  அதை விட்டு அடுத்தவர்களுடைய பொருளை திருடி பிழைகின்ற நாம் அடையாளம் அதை துரத்தவேண்டும் என்று தான் என்னை தூக்கி வேண்டும் என்றால் எறிந்து விடுங்கள். என்னுடைய படம் பார்க்க மாட்டீர்களா பார்க்கவேண்டாம்.  நான் இறந்தால் வர மாட்டீர்களா வர வேண்டாம். ஆனால் உன்னுடைய சகோதரன் இப்படி எல்லாம் செத்துகிட்டு இருக்கிறான் என்பது உணர்ந்தால் போதும்.  உணர வக்கவேண்டும் அதே நேரத்தில் உண் அடையாளம் இது இல்லை நீ நேர்மையானவன். நல்ல குடியில் பிறந்தவன்.  இதற்கு மேல் நான் தமிழர்களை பற்றி இலங்கை தமிழர்களை பற்றி மக்களை பற்றி  பேசவே மாட்டேன்.  அதே நேரத்தில் ஒரு வேண்டுகோள்..... நான் இறந்தால் கூட யாரும் செய்தி போட கூடாது’’ என்றார்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=171913

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராக இருந்தாலும் திரைப்படங்களை திருடுவது சம்பந்தமாக கண்டனங்களை தெரிவிக்கலாம்.தண்டனைகளை கொடுக்கலாம். 
ஏன் ஹொலிவூட் திரைப்படதுறைகளே இந்த விடயத்தில் கொஞ்சம் தள்ளாடித்தான் போயிருக்கின்றது. இருந்தாலும் நல்ல திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பும் வசூலும் அமர்க்களமாகத்தான் இருக்கின்றது. 

கண்டனங்களை தெரிவிப்பது சேரனின் உரிமை. ஆனால் இதற்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அருவருப்பாக தெரிவித்தது விசு ,எஸ்வி சேகர், சுப்ரமணியசுவாமி வரிசையில் இவரும் சேர்ந்துவிட்டார் என்றே தோன்றுகின்றது.

இதர இந்திய தமிழ் உறவுகள் மீது இருக்கும் மரியாதை நல்லெண்ணம்  நிமித்தம் சேரனின் முகத்தில் காறித்துப்பாமல் இவ்விடத்தை விட்டு நகர்கின்றேன்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா சார்.

உப்படி எத்தனை முறை சபதம் எடுத்திருப்போம், எல்லாம் அடுத்த படம் வரும் வரைக்கும்தான். 

தமிழனா கொக்கா.

நாங்கள் நினைத்தால் சேரன் போன்றவர்களை தூக்கி சிம்பிளா கடாசிட்டு போகலாம். தமிழ் சினிமாவின் வருமானத்தில் ஒரு பெரிய பங்கை நாம் வகிப்பது எம்மில் பலருக்கு புரிந்தால், இது வெகு சுலபம்.

மனம் இருந்தால் இடம் உண்டு.

நான் நாசூக்கா சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சுக்கலை போல. படம் பாக்கிறதை நிறுத்திடச் சொல்லலை. பாருங்க சார் பாருங்க நல்லா பாருங்க. ஆனா மன்னிப்பு கேட்கும்வரைக்கும்.தியட்டரிலை பாக்காதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

சேரனின் ஆதங்கமே..அவரது கருத்தாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்றே நினைக்கிறேன்!

இங்கே ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

எண்ணையில்லாமல் வடை சுடுவது போல்...முதலில்லாமல் வியாபாரம் செய்வதில் எமது புலத்துத் தமிழர் முன்னிற்பவர்கள் என்பதில் எனக்கு மறு கருத்துக் கிடையாது!

அண்மையில் ஒரு தமிழ்க்கடையில் இருபதுக்கு மேற்பட்ட டிவிடிக்கள் (DVD) வாங்கினேன்! நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழ்ப்படம் பார்க்க ஒரு சோட்டை வந்தது தான் காரணம்!

எல்லாமே புதுப்படங்கள் தான்!

சத்தியமாய்ச் சொல்லுறன்...ஒரு படத்தைக் கூடப் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை!

எல்லாமே திரையில் படம் ஓடும் போது 'ரெக்கோர்ட்' பண்ணப் பட்ட கொப்பிகள்!

ஆனால் கடைக்காரர் எல்லாமே ஒரிஜினல் கொப்பிகள் என்று சத்தியம் பண்ணித் தான் எனக்கு அவற்றை விற்றிருந்தார்!

அவ்வளவு படங்களையும் அவரது கடையிலேயே திரும்பிக்கொண்டு போய்க் கொடுத்து விட்டேன்!

இனி மேல் தமிழ்ப்படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது!

எல்லாத் தமிழர்களையும் ஒரு தராசில் வைத்து நிறுத்தது தான் சேரனின் தவறு என்று நினைக்கிறேன்!

நாங்கள் முஸ்லிம்களைப் பற்றிக் கருத்துக் கூறுவது போல...அவசரப்பட்ட்டு விட்டார்!

பெரிது படுத்தாமல்பொ றுத்துக் கொள்ளுவோம்!

இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் சேரன்!

 

அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்...முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு (எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி...நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப் புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமார ஏற்றுக்கொள்கிறேன்.
 
.அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்...
 
முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு (எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி...நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப் புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமார ஏற்றுக்கொள்கிறேன்..காலம் எனக்கு சில உண்மைகளை என் கண்முன் காட்டியிருக்கிறது...
 
. என்னை புரிந்துகொண்டவர்கள், என் சொந்தங்கள் என்னை தவறாக எடுக்கமாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பேசிய எனக்கு,என்னைப் பிடிக்காதவர்கள் சிலர் என் திரைப்படங்களை பிடிக்காதவர்கள் சிலர் ஒரு மேல்பூச்சுக்காக என்னை சகோதரன் என அழைத்திருக்கிறார்கள் என இப்போது உணர்த்தியிருக்கிறது.கடந்த 5 நாட்கள் நான் உள்நோக்கமில்லாமல் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக என்மேல் மானாவாரியாக புழுதிவாரி இரைத்ததில் இருந்து புரிந்துகொண்டேன்...உங்களின் உண்மையான அன்பை நான் பெற்றிருந்தால் தவறே செய்திருந்தாலும் ஒரு வாய்ப்பைக் கொடுத்து நான் என்ன பதில் சொல்கிறேன் என கேட்டிருப்பீர்கள். அதெற்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் அடிச்சு நொறுக்கிட்டீங்க..
. பரவாயில்லை.ஆனால் உலகம் முழுதும் பரவிகிடக்கும் மிச்ச சொந்தங்கள் அமைதிகாத்தும் ஆறுதல் சொல்லியும் புரிதலான கடிதங்களை அனுப்பியும் என்னை எல்லோரும் தவறாக நினைக்கவில்லை என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்..சில அமைப்புகள், "இனிமேல் இலங்கைத் தமிழர்கள் முறைகேடாக டிவிடி வியாபாரம் செய்வதை நிறுத்தவேண்டும்," என செய்தி விடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.இப்போது எனக்கு கோபமில்லை.இதை வைத்து சிலர் குளிர்காய நாமே காரணம் ஆகிவிட்டோம் என்ற வருத்தம்தான். என் முதுகிலும் மார்பிலும் என் குழந்தைகள் என் சகோதரர்கள் ஏறி விளையாண்டதாக எடுத்துக்கொள்கிறேன்... அதே நேரம் இதை தூக்கி எறிந்து விட்டு வேலை செய்யலாம் என்றால் மனசு அப்படி போலியாக செயல்பட மறுக்கிறது.
 
எனவே உங்கள் வருத்தம் களைந்து என் நிம்மதி தேடுவதே சரி எனப்பட்டதால் இதை எழுத நேர்ந்தது.நீங்கள், அதாவது விமர்சனம் செய்த அனைவரும் வார்த்தைகளை வெளிப்படுத்திய விதமே என்னை கோபம் கொள்ள வைத்தது. உங்களோடு வளர்ந்த ஒருவனுக்கு (நீங்கள் என்ன கிழிச்சீங்க எங்களுக்காக என கேட்டாலும்) ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல் ஏதோ எதிரியின் கூடாரத்தில் வளர்ந்தவன் போல வசைமழை பொலிந்துவிட்டீர்கள்.அதைவிட சகோதரி வி பத்மாவின் கட்டுரை அற்புதம்.. " நீ இன்னைக்கு சினிமால இல்லை, நான் இருக்கேன்"... பிரமாதம்.. ஒருபடம் பன்னிட்டு இவ்வளவு திமிரா பேசும்போது நீங்கள் அகமகிழ்ந்தது எனக்கு சந்தோசமாக இருந்தது.இப்படி நாம் நம்மை அடுத்தடுத்து காயப்படுத்திக்கொண்டே போனபின் இனி உங்களோடு நான் வரமுடியாது என நினைக்கிறேன். நீங்களும் இனி என் படங்களை பார்க்கமாட்டேன் என சொல்லிவிட்டீர்கள்... இல்லை இல்லை எனக்குத்தான் மார்க்கெட்டே இல்லைன்னு சொல்லிட்டிங்களே... அந்த கட்டு நமக்கு வேணம்னுதான் நான்.... சரி வேணாம்... நீங்க நான் கேட்கனும்னு நினச்ச "என்னுடைய வார்த்தைகள் மூலம் உலகெங்கும் வாழும் இலங்கைத்தமிழர்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்.. அதேபோல என்னை உணர்ந்து அமைதிகாக்கும் ஆதரவு அளிக்கும் அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்..." என்பதை கடிதமாய் இதை எழுதுகிறேன்.
 
நான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்... சேரன் நம்மளோட ஆளுன்னு. அவர் இல்லாத இழப்பு தெரிகிறது.எனக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்புன்னு யாருக்கும் தெரியாது தெரியவும் வேணாம்...ஒரு வேண்டுகோள்..தயவுசெய்து இன்னொருமுறை இதுபோல் வேறு ஒருவருக்கு நடக்க வேண்டாம்... ஏற்கனவே கத்தி பட பிரச்னையில் எந்த காரணங்களும் இன்றி உண்மையறியாமல் உடனே அண்ணன் சீமானை திட்டித் தீர்த்தீர்கள். அவ்வளவு தூரம் உங்களோடு வந்த சீமான் அண்ணனுக்கே அந்த நிலை... இப்போ அவர் உண்மை தெரிந்தது அனைவருக்கும். இனியும் அதுபோல தொடரவேண்டாம்...இனி பேச ஒன்றும் இல்லை... உங்கள் அனைவருக்கும் என் கடைசி வணக்கம்...
 
தவறை சுட்டிக்காட்டாத நண்பன் ஒரு குவளை விஷத்துக்கு சமம். என அறிஞன் சொல்லியிருக்கிறான்.நான் நமக்குள் இருக்கும் கூட்டத்தால் நமக்கு கிடைக்கும் கெட்டபெயரை தடுக்கவே சொன்னேன்.. 'அகதிகள்' என்ற அடையாளமே நம் வலியாக மிஞ்சிவிட்ட நிலையில் மேலும் சில பெயர்கள் வேண்டாம் என்ற எண்ணத்தில் சொன்னது அது என மீண்டும் பதிவிடுகிறேன்... மீண்டும் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு உங்களை சமாதானம் செய்து நான் அமைதியாகிறேன்.. நன்றி அனைவருக்கும்..."எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு"நம் முன்னோர் வள்ளுவனார் சொன்னது.இதை முடிந்தவரை ஷேர் பண்ணுங்க... எல்லாருக்கும் என் மன்னிப்பு செய்தி போய்ச் சேரட்டும்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cheran-apologised-261390.html
10 hours ago, பகலவன் said:

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு"நம் முன்னோர் வள்ளுவனார் சொன்னது.இதை முடிந்தவரை ஷேர் பண்ணுங்க... எல்லாருக்கும் என் மன்னிப்பு செய்தி போய்ச் சேரட்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு"

இல்லை, இதை சேரன் ஷேர் பண்ண சொன்னார் அதுதான்.

நான் சேரனின் அடுத்த படத்தை பாக்கப்போகிறேன் (திருட்டு டீ வீ டியிலதான்) - நீங்கள் ரெடியா.

ஈழத்தமிழன் என்ன மாங்கா மடயானா?

நான் கனேடிய தமிழர்களில் ஒருவர், எனவே சேரனை மன்னிக்க வேண்டியதேவை இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சில பேச்சுக்கள் லைம் லைட்டுக்கு வருவதற்கு பேசத்தான் செய்வார்கள்.. எதாவது பேசி பரபரப்பை கிளப்ப வேணும்.. இல்லைய்யென்றால் எல்லாரும் மறந்துவிடுவார்கள் ... இவுங்களே பேசுவாங்களாம் .. அப்புறம் மன்னிப்பும் கேட்பார்களாம் ..  இப்போ பபிளுகுட்டி  கிடைத்து இருக்கும் .. எதிர்வினை ஆற்றும் நாமதான் பேக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சில பேச்சுக்கள் லைம் லைட்டுக்கு வருவதற்கு பேசத்தான் செய்வார்கள்.. எதாவது பேசி பரபரப்பை கிளப்ப வேணும்.. இல்லைய்யென்றால் எல்லாரும் மறந்துவிடுவார்கள் ... இவுங்களே பேசுவாங்களாம் .. அப்புறம் மன்னிப்பும் கேட்பார்களாம் ..  இப்போ பபிளுகுட்டி  கிடைத்து இருக்கும் .. எதிர்வினை ஆற்றும் நாமதான் பேக்கு!!

அதே....

அதுக்குத்தான் புரட்சி வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2016 at 0:02 AM, புங்கையூரன் said:

சேரனின் ஆதங்கமே..அவரது கருத்தாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்றே நினைக்கிறேன்!

இங்கே ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

எண்ணையில்லாமல் வடை சுடுவது போல்...முதலில்லாமல் வியாபாரம் செய்வதில் எமது புலத்துத் தமிழர் முன்னிற்பவர்கள் என்பதில் எனக்கு மறு கருத்துக் கிடையாது!

அண்மையில் ஒரு தமிழ்க்கடையில் இருபதுக்கு மேற்பட்ட டிவிடிக்கள் (DVD) வாங்கினேன்! நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழ்ப்படம் பார்க்க ஒரு சோட்டை வந்தது தான் காரணம்!

எல்லாமே புதுப்படங்கள் தான்!

சத்தியமாய்ச் சொல்லுறன்...ஒரு படத்தைக் கூடப் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை!

எல்லாமே திரையில் படம் ஓடும் போது 'ரெக்கோர்ட்' பண்ணப் பட்ட கொப்பிகள்!

ஆனால் கடைக்காரர் எல்லாமே ஒரிஜினல் கொப்பிகள் என்று சத்தியம் பண்ணித் தான் எனக்கு அவற்றை விற்றிருந்தார்!

அவ்வளவு படங்களையும் அவரது கடையிலேயே திரும்பிக்கொண்டு போய்க் கொடுத்து விட்டேன்!

இனி மேல் தமிழ்ப்படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது!

எல்லாத் தமிழர்களையும் ஒரு தராசில் வைத்து நிறுத்தது தான் சேரனின் தவறு என்று நினைக்கிறேன்!

நாங்கள் முஸ்லிம்களைப் பற்றிக் கருத்துக் கூறுவது போல...அவசரப்பட்ட்டு விட்டார்!

பெரிது படுத்தாமல்பொ றுத்துக் கொள்ளுவோம்!

உண்மையில், திருட்டு விசிடி விடயத்தில் தான் சிறந்த ஜடியா வைத்திருப்பதாக சேரன் நம்பி ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். 

புலம் பெயர் ஈழத்தமிழரையும் அணுகி இருந்தார். புலம் பெயர்ந்தோரிடையே முதலீட்டினையும், சந்தைப்படுத்தலையும், தான் சென்னையில் பட நிறுவனங்களுடன் லைசென்ஸ் விடயங்களை கவனிப்பதாகவும் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

இவர் யாருடன் பேசினாரோ தெரியவில்லை. ஆனால் லைக்காவின், போட்டியாளர் லெபேரா இந்த தொழிலில் இறங்கிவிட்டது. அவர்களுக்கு சேரன் தேவேயில்லை. வியாபார வழக்கம் போல, வீக்கஸ் லிங்கை கழட்டி விட கடுப்பாகி விட்டார். 

http://play.lebara.com/

மேலும் நன்றாக வியாபார விருத்தி அடைந்த பின், இங்குள்ள முறைமையான சட்டத்தை பயன்படுத்தி திருட்டு வீடியோ பிரச்சனையை ஒழிக்கும் வழியும் அவர்களுக்கு தெரியும்.

இவர் என்ன சொன்னாலும், கைல பணம் இல்லாதவரை செல்லாக்காசு தான். 

பத்தாததற்கு பணச்சிக்கல், கோட், கேஸ் என்று போக வெறுத்து விட்டார்.

ஆக மொத்தம், தனது சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துடன், அவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்திரனைப் பார்த்து, சேரன் குழைத்த கதைதான்.

முக்கியமான விடயம்: 

இலங்கையில் தமிழ் படங்கள்,  தமிழகத்தின் சம நேரத்தில் தான் திரையிடப் படுகின்றது.

இந்த திருட்டு விசிடி பதிவு, இணையத்தள இலவச ஏத்தம் எல்லாமே இலங்கை அரச புலனாய்வுத் துறையின் கைங்கரியமாக இருக்கலாம் என்பதும் மறுக்க முடியாதது. தமிழகமும், ஈழமும் இரண்டுபட இதுதான் ஒரு வழி. இதில் சேரன் மாட்டிக் கிடடாரு போல.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இயக்குனர் சேரனை எதிர்க்க எங்களை பயன்படுத்துகிறவர்களுக்கு. - வ,ஐ,ச,ஜெயபாலன்

 

DIRECTOR CHERAN IS LONG STANDING SUPPORTER OF THE STRUGGLE OF THE EELAM TAMILS.
THE MISUNDERSTANDING EXISTED AMOUNG US / BETWEEN EELAM TAMILS AND CHERAN IS NOW CLEARED BY HIS APOLOGY.

இயக்குனர் சேரன் ஈழ மக்கள் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் நீண்டகாலாமாக உழைத்த தோழராவார். அவர் எங்கள் குடும்பம்.

அண்மையில் இயக்குனர் சேரன் ஏதோ கோபத்தில் வாய் தடுமாறி ஈழத் தமிழர் எங்கள் மனதை நோகவைக்கும் வார்த்தைகள் சில பேசிவிட்டார். அதை நாங்கள் குடும்ப உரிமையுடன் கண்டித்தோம். அதுபற்றி சேரன் வருத்தம் தெரிவித்து சகோதர சண்டை எப்பவோ முடிவடைந்து விட்டது.

நாளை எங்களுக்குப் பிரச்சினையென்றால் தமிழ் சினிமா துறை களதில் இறங்கிப் போராடும் என்கிற நம்பிக்கையை தருகிறவர்களுள் சேரன் முதன்மையானவர்.

தயவு செய்து எப்பவோ சுமூகமாக முடிந்துவிட்ட உள்வீட்டுப் பிரச்சினை மீண்டும் கிளறி யாரும் அரசியல் செய்யாதீர்கள்.

சேரன் எங்கள் ஆதரவாளர்தான். ஆனால் அவர் எங்களை சீரியசாக எடுக்கவில்லை என்பதையே அவர் மன்னிப்பு வாக்கியங்கள் காட்டுகிறது. அதை அவர் உணர வேண்டும். . எனினும்எங்கள்மீது அக்கறையில்லாதவர்கள் சேரனை தாக்குவதற்க்கு எங்கள் தொடர்பான இப்பிரச்சினையை பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

On 27/8/2016 at 11:30 PM, poet said:

ஆனால் ஓரிருவர் தப்புக்காக வர்தக போட்டிக்காக ஒட்டு மொத்த சமூகப் பிரிவையும குற்ற வாளியாக்கி அசிங்கப் படுத்தும் மனோபாவத்தை வரலாறு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை

சேரன் தனது அரைவேக்காட்டு அறிவையும்,அறிவையும் ஈனப் புத்தியையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.