Jump to content

ஆணுறைக்கு பதிலாக... "பிளாஸ்டிக் பை"   பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆணுறைக்கு பதிலாக... பிளாஸ்டிக் பை 

பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... அனுமதி. 

கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, காப்பர் டி என கருத்தரிப்பதை தடுக்க எவ்வளவோ முறைகள் இருக்கின்றன ஏன் பண்டைய காலங்களில் கூட பாதரசம், ஆலிவ் எண்ணெய், தேன், வினிகர், டக்கஸ் கரோட்டா போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஒரு விசித்திர தம்பதி ப்ளாஸ்டிக் பையை உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறை போன்று பயன்படுத்தி இப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்...  

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் பிறப்புறுப்பு பகுதியில் புண்கள், சிராய்ப்புகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது..  

வெட்கம்! ஆணுறை வாங்க வெட்கப்பட்டுக் கொண்டு, பிளாஸ்டிக் பையை பாதுகாப்பு கருதி பயன்படுத்தியதாக அந்த தம்பதி இருவரும் தெரிவித்துள்ளனர். இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபட துணிவதற்கு பதிலாக, கூச்சம், வெட்கம் பார்க்காமல், ஆணுறை, கருத்தடை வாங்க முற்படலாம்.

ஆண்டி-பயாடிக்! மருத்துவர்கள் அந்த தம்பதிகளுக்கு ஆண்டி-பயாடிக் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது பிறப்புறுப்பில் தொற்றுகள் உண்டாகியிருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணுறுப்பு மிகவும் மென்மையானது. பெண்ணுறுப்பின் வெளி பகுதியை காட்டிலும், உட்பகுதி மிகவும் மென்மையானது. பிளாஸ்டிக் போன்ற கடுமையான, சொரசொரப்பானவற்றை கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் காயங்கள் ஏற்படத்தான் செய்யும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

விழித்த வியட்நாம்! இந்த கிறுக்குத்தனமான தம்பதிகளின் நடவடிக்கை கண்டு, வியட்நாம் மருத்துவமனை ஒன்று 2,700 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில், 16% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக பதில் கிடைத்தது. 25% பேர் ஆணுறை வாங்க தயக்கமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். விழிப்புணர்வு! இந்த செயலுக்கு பின், வியட்நாமில் பாதுகாப்பான உடலுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தற்ஸ் தமிழ். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் இதனைத் தாயகத்தில் வேண்டுவதென்றால் பெரும்பாடுதான். பெரும்பாலும் மருந்தகங்களில் மகளிரே பெரும்பாலும் சிலர் தெரிந்தவர்களாயிருப்பர்... அப்போ எப்படி? 

அது வேண்ட முடியாதென்பதற்காக இந்த விசப்பரீட்சை தேவையா? இயற்கையான தடுப்புமுறைகள் குறித்த விழிப்புணர்வூட்டலும் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19.9.2016 at 5:32 AM, தமிழ் சிறி said:

விழித்த வியட்நாம்! இந்த கிறுக்குத்தனமான தம்பதிகளின் நடவடிக்கை கண்டு, வியட்நாம் மருத்துவமனை ஒன்று 2,700 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில், 16% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக பதில் கிடைத்தது. 25% பேர் ஆணுறை வாங்க தயக்கமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்

2013123001-kondomeautomat-moers-huelsdong-gewerbegebiet.jpg

மூலைக்கு மூலை இப்பிடி மிசினுகளை வைச்சிட்டால் பிரச்சனை முடிஞ்சுது... :grin:

Posted
1 hour ago, குமாரசாமி said:

2013123001-kondomeautomat-moers-huelsdong-gewerbegebiet.jpg

மூலைக்கு மூலை இப்பிடி மிசினுகளை வைச்சிட்டால் பிரச்சனை முடிஞ்சுது... :grin:

ஏன் ஊர் சனம் முழுக்க பார்க்கவா நின்று எடுக்கும் போது, பழசுகள் எல்லாம் கண்ணில எண்ணையைவிட்டு பார்த்துக்
கொண்டிருக்கும்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்கக் கடையில கூப்பன் மட்டைக்கு  மாதத்துக்கு நாலு  மாசிக் கருவாட்டோடு இனாமாக் குடுத்தாப்  போச்சு...!tw_blush: 

Posted
On 9/18/2016 at 11:32 PM, தமிழ் சிறி said:

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மிளகாய்த்தூள் பையை பாவிக்கவில்லையென நம்புவோம்..! tw_blush:

Posted
14 hours ago, வந்தியதேவன் said:

ஏன் ஊர் சனம் முழுக்க பார்க்கவா நின்று எடுக்கும் போது, பழசுகள் எல்லாம் கண்ணில எண்ணையைவிட்டு பார்த்துக்
கொண்டிருக்கும்tw_blush:Bilderesultat for old indian man

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, இசைக்கலைஞன் said:

மிளகாய்த்தூள் பையை பாவிக்கவில்லையென நம்புவோம்..! tw_blush:

வியட்நாம் மிளகாய்த்தூள்... எங்கடை தூள்  மாதிரி, உறைப்பு இல்லை என்பதால்..... இரண்டு பேருக்கும் பெரிய  பாதிப்பு வந்திருக்காது.   :D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

வியட்நாம் மிளகாய்த்தூள்... எங்கடை தூள்  மாதிரி, உறைப்பு இல்லை என்பதால்..... இரண்டு பேருக்கும் பெரிய  பாதிப்பு வந்திருக்காது.   :D:

இப்ப தான் குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறாங்கள் ஆனால் ஆண்கள் தான் அணியவில்லையென்ற முறைப்பாடு இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் 

கனபேருக்கு பாமசில கேட்டு வாங்க வெட்கம் அங்கு இரூக்கும் பொண்ணு என்ன நிலைக்குமோ என்று 

Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

நீங்கள் வாங்கும் பொருளை தெரிந்தும் அந்த பெண்ணு நிலைக்குமோ என்று யோசிக்கிறீங்களே - அது நிலைக்காது:grin::grin:

(எழுத்துப் பிழைதான் என்று தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு சீண்டல்தான்)

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

உந்தக் கறுமத்தாலதான் பிளாஸ்ட்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் உலகமே சண்டிக் கட்டு  கட்டிக் கொண்டு நிக்குது ....! வேணுமெண்டால் இருந்து பாருங்கள் கடைசியில பாமர மக்களுக்கு பனங்கட்டிக்  கூடுதான் கை கொடுக்கப் போகுது ....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

உந்தக் கறுமத்தாலதான் பிளாஸ்ட்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் உலகமே சண்டிக் கட்டு  கட்டிக் கொண்டு நிக்குது ....! வேணுமெண்டால் இருந்து பாருங்கள் கடைசியில பாமர மக்களுக்கு பனங்கட்டிக்  கூடுதான் கை கொடுக்கப் போகுது ....! tw_blush:

இது  எச்சரிக்கையா?

அல்லது

வழி காட்டுதலா சுவாமியி..?

Posted
1 hour ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

அதுதான் அந்தர படக் கூடாது என்று டாக்குத்தர் மாத்ருபூதம் சொல்லி இருக்கிறாரே.

எல்லாத்திலையும் ஒரு நிதானம் இருக்கோணும் கண்டியலே. இல்லையெண்டால் இந்த நிலைமை தான்

http://www.ibtimes.co.uk/couple-taken-hospital-stuck-together-after-ocean-sex-romp-1470661

விசயம் என்னெண்டா, இத்தாலில, சோடியா, கடற்கரை ஓரமா குளிக்கக் போனவையளுக்கு, அந்த அந்தரம் வந்திட்டுது.

ஒருத்தரும்  கடற்கரை ஓரமா இல்லை எண்டதும் வசதியாய் போட்டுது.

ஆனால், இரண்டு பேரும் விலத்திக் கொள்ள முடியவில்லை. மொக்கை போடும் காலத்து, நாய்களின் நிலைமை. பெரும் அவலப் பட்டுக் கொண்டிருக்கேக்க, அந்தப் பக்கமா வந்த பெண் ஒருவர் இவர்களது அவலக் குரல் கேட்டு வந்து உதவ முயன்றும் முடியாமல் உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்.

பெண் நாய்களுக்கு உள்ளது போல, அந்த பெண்ணின் உறுப்பு சதை இறுகிக் கொண்டு இளக மறுத்ததால் வந்த வினை.

கடல் பக்கம் மணலில் அல்லது கடல் தண்ணீர், கடல் ஐந்து ஏதோ ஒன்றினால் வந்த ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில கேரளா கோவளம், கடற்கரை பணம் வாங்கி கொண்டு, வெளிநாட்டவரை சோடியா போக விடுவார்களாம்.

கலியாணம் கட்டி போக ஐடியா இருந்தது. இப்ப இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

கொழும்புக்கு.... கியூவிலை நிண்டு  மினக்கெட்டு  ரிக்கற் வாங்கிப் போட்டு,
மதவாச்சி, மருதானையிலை... இறங்கிறதிலும் பார்க்க 10.gif, பேசாமை போத்து மூடிக் கொண்டு, நித்தா கொள்ளலாம்.  38.gif:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Nathamuni said:

அதுதான் அந்தர படக் கூடாது என்று டாக்குத்தர் மாத்ருபூதம் சொல்லி இருக்கிறாரே.

எல்லாத்திலையும் ஒரு நிதானம் இருக்கோணும் கண்டியலே. இல்லையெண்டால் இந்த நிலைமை தான்

14359230_190571034707815_756596414884603874_n.jpg?oh=5b4ad326950c975e8b50b15023200c91&oe=58790C0C:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/09/2016 at 8:32 PM, ஜீவன் சிவா said:

நீங்கள் வாங்கும் பொருளை தெரிந்தும் அந்த பெண்ணு நிலைக்குமோ என்று யோசிக்கிறீங்களே - அது நிலைக்காது:grin::grin:

(எழுத்துப் பிழைதான் என்று தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு சீண்டல்தான்)

ம்கும் உள் குத்து நீளமான நிக்கிதே நல்லா வருவியள் tw_blush:

21 hours ago, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

அனுபவஸ்தன் ஐயா நீர்  tw_blush:

23 hours ago, தமிழ் சிறி said:

குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் அள்ளி அள்ளி கொடுத்தும், கைநிறைய வாங்கி வந்தாலும்....
கொண்டு வந்தது முடிந்து விட்டதென்றால்,  அந்தரத்துக்கு.... சாமான் வாங்கின,  "பிளாஸ்ரிக் பையை"   தான் பயன் படுத்த வேண்டும். :grin:

ஒரு காலத்தில் பப்பாசி அன்னாசி காய்களை கொடுத்து தடுத்து நிறுத்தியவர்களை பற்றி கேள்வி படலையோ சிறியர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23.9.2016 at 5:05 PM, முனிவர் ஜீ said:

ஒரு காலத்தில் பப்பாசி அன்னாசி காய்களை கொடுத்து தடுத்து நிறுத்தியவர்களை பற்றி கேள்வி படலையோ சிறியர் 

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

உப்புடி சொல்லி சொல்லி அலுவலைப்பார்த்து சனத்தொகையை பெருக்கிடுங்க வாழ்க  கு. சா 

நமக்கு சத்ததி முக்கியம்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, முனிவர் ஜீ said:

உப்புடி சொல்லி சொல்லி அலுவலைப்பார்த்து சனத்தொகையை பெருக்கிடுங்க வாழ்க  கு. சா 

நமக்கு சத்ததி முக்கியம்tw_blush:

என்ன ஜீ அடிக்கடி ரோல் ஆகிறது??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, MEERA said:

என்ன ஜீ அடிக்கடி ரோல் ஆகிறது??

ஆகா எழுத்து பிழையாகிவிட்டது மீரா அண்ண சந்ததி அது

நண்பன்  ஒருவன் கல்யாணம் கட்டுனவன் பாமசில போய் கொண்டம் என்று கேட்டிருக்கான் அங்கு உள்ளவர் ஆளை ஏற இறங்கி பார்த்தாரம் என்று சொன்னான் 

ஏதோ கொலை செய்ய ஆயுதம் கேட்டால் போல பார்க்கிறாங்கப்பா இந்த சமாச்சாரத்தை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/09/2016 at 7:50 PM, ஜீவன் சிவா said:

கொழும்புக்கு ட்ரைனில் டிக்கற்ற வாங்கிட்டு மருதானையில இறங்கிற டெக்னீக்கையும் பாவிக்கலாம்.

அத்தான் மருதானையில இறங்குமுன் கருதானா கோட்டையில குந்தியிருக்கும்...! tw_blush:   நீர்  கொழும்பில இறங்கப் பார்க்கவும்....!

8 hours ago, குமாரசாமி said:

கடவுளாய் பார்த்து குடுக்கிறதை பப்பாசி பழத்தாலையோ இல்லை பிளாஸ்ரிக் பையாலையோ தடுத்து நிறுத்தேலாது. tw_blush:

ஒரு சிறு சோப்புத்தூண்டுல முடியிற சமாச்சாரம். மில்க்வைட் , சன்லைட் எல்லாம் ஆடை துவைக்க மட்டும்தான் என நினைக்கும் அறியாமையை என்ன சொல்ல ...! (கரண்டி கம்பெனி தராது.குடும்ப வைத்தியரின் ஆலோசனை அவசியம்...!).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

அத்தான் மருதானையில இறங்குமுன் கருதானா கோட்டையில குந்தியிருக்கும்...! tw_blush:   நீர்  கொழும்பில இறங்கப் பார்க்கவும்....!

ஒரு சிறு சோப்புத்தூண்டுல முடியிற சமாச்சாரம். மில்க்வைட் , சன்லைட் எல்லாம் ஆடை துவைக்க மட்டும்தான் என நினைக்கும் அறியாமையை என்ன சொல்ல ...! (கரண்டி கம்பெனி தராது.குடும்ப வைத்தியரின் ஆலோசனை அவசியம்...!).

பழம் திண்டு கொட்டை போட்டதுகள் அனுபவசாலிகள்:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.