Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் "பதுங்கலும்" புலம்பெயர்ந்த ஊடகர்கள் ஆய்வாளர்களின் "பாச்சலும்"

Featured Replies

புலிகள் பொறுமைகாக்கிறார்கள், பின்வாங்குகிறார்கள் தம்மைப் பலவீனமாகக் கூட காட்டுகிறார்கள்.

எதிரிகள் அவற்றை வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் தமது சூழ்சிகள் சதிகள் பயன் தருகிறது, தமது தாக்குதல்கள் புலிகளை அழிக்கிறது பலவீனப்படுத்துகிறது என்று. துரோகிகளும் கூடவே இருந்து எதிரியின் பிரச்சாரத்தைப் பலப்படுத்துகிறார்கள். அதைப்பார்த்து புலம்பெயர்ந்த மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அதை விளக்க முனைவதாக சொல்கிறார்கள் புலம்பெயர்ந்த சமூகத்து "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்".

இந்த "ஊடகர்களினதும்" "ஆய்வாளர்களினதும்" பத்திரிகைகள் இணையங்களில் வரும் "அரசியல் இராணுவ" ஆய்வினதோ கண்ணோட்டத்தினதோ அல்லது வானொலி தொலைக்காட்சியின் கலந்துரையாடல்களின் ஆரம்பம் பொதுவாக பின்வரும் தொனியில் தான் இருக்கும்:

  • பெரிவாரியான மக்கள் ஆய்வு எழுதுவபரை தொடர்பு கொண்டு விளக்கம் கேப்பதாகவும், "தாம் பெரும் குழப்பத்தில் இருப்பதாக, புலிகள் பலமாக இருக்கிறார்களா பலவீனமாக இருக்கிறார்களா..". அதை விளங்கப் படுத்தப் போவதாக ஆரம்பிப்பார்கள்.
  • வானொலி தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துபவர் கேட்பார் "புலம் பெயர்ந்த மக்கள் மிகவும் குழப்பமாக இருக்கிறார்கள் புலிகளின் இன்றய நடத்தை பற்றி. நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?"
  • இன்னும் ஒரு தரப்பினர் அண்மைக்காலங்களில் தாயகத்திலோ அல்லது சிறீலங்காவிலோ நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தை மைய்யப்படுத்தி ஆரம்பிப்பார்கள்.

அதாவது புலிகளின் இன்றய நடத்தை பற்றி புலம்பெயர்ந்த மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள் என்பது தான் அடிப்படை பிரச்சனை. அதற்கான பதிலாக பெரும்பான்மையான எமது "ஆய்வாளர்களும்" "ஊடகர்களும்" முன்வைக்கும் விளக்கம் என்பது எதிரிகளின் துரோகிகளின் பிரச்சாரத்திற்கான எதிர்ப்பிரச்சார வடிவமாகத்தான் இருக்கிறது. அதாவது களத்தில் புலிகளின் நடத்தையை எதிரிகளும் துரோகிகளும் எப்படி விளங்கி வியாக்கியானப் படுத்தி நடக்கிறார்களோ தமது நகர்வை மேற்கொள்கிறார்களோ அதுபற்றி பிரச்சாரப்படுத்துகிறார்களோ அதற்கு எதிர்வினையான பிரச்சாரத்தையும் விளக்கத்தையும் தான் புலம்பெயர்ந்த தமிழ் "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்" கண்ணை மூடிக் கொண்டு முன்வைப்பார்கள்.

எதிரிகளும் துரோகிகளும் களத்தில் புலிகளின் நடத்தையை மேற்கோள் காட்டி:

புலி பின்வாங்கி ஓடுகிறது என்றால்...

நமது புலம்பெயர்ந்த ஊடகர்களும் ஆய்வாளர்களும் பதிலுக்கு

இல்லவே இல்லை புலி பதுங்குகிறது படு பயங்கரமாகப் பாயப்போகிறது என்பார்கள்

எதிரிகளும் துரோகிகளும் களத்தில் புலிகளின் நடத்தையை மேற்கோள் காட்டி:

புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்றால்...

நமது புலம்பெயர்ந்த ஊடகர்களும் ஆய்வாளர்களும் பதிலுக்கு

வரலாறு காணாத பலத்தில் புலிகள் இருக்கிறார்கள் என்று நீண்ட வரலாற்று விளக்கம் கொடுப்பார்கள்

எதிரியே "புலிகள் பலமாக இருக்கிறார்கள்" "நவீன ஆயுதங்கள் பாவித்தவர்கள்" என்று அவ்வப்போது தான் பிறநாடுகளில் உதவி பெற, தனது ஆயுதக் குவிப்பை நியாப்படுத்த கூறியிருந்தால் அவையே எமது புலம்பெயர்ந்த "ஊடகர்களினதும்" "ஆய்வாளர்களினதும்" எதிர்ப்பிரச்சாரத்தின் மகுடமாக மேற்கோள் காட்டப்படும்.

இரு தரப்பிற்கும் (எதிரிகள் துரோகிகள் தரப்பிற்கும் புலம் பெயர்ந்துள்ள சமூகத்தின் இந்த புலம்பெயர்ந்த "ஊடகர்கள் ஆய்வாளர்கள்" என்ற மறு தரப்பிற்கும்) இடையிலான இந்த இழுபறி பிரச்சாரத்தைப் பார்த்தால் அடிப்படையில் அது "புலிகள் இராணுவரீதியில் பலமாக இருக்கிறார்களா இல்லையா" என்பதை பற்றியதே. அதாவது இது இராணுவ விடையம். உண்மையில் இதற்கு தமிழர் தரப்பில் புலிகளை தவிர வேறு ஒருவரும் தலையை போட்டுடைக்க தேவையில்லை. புலிகள் தாம் பலவீனமாக இருப்பது போன்று நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கு. மாறாக உண்மையிலேயே பலவீனமாகத்தான் இருக்கிறார்கள் என்றால் அதற்கு இல்லை பலமாக இருக்கிறார்கள் என்று புலம்பெயர்நதவர்கள் குரைத்து ஒன்றும் களத்தில் சாதகமாக நடந்துவிடப்போவது இல்லை. அதையுமே (தாம் பலமாக இருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும்) புலிகளால் தான் செய்ய முடியும். அதாவது பலமோ பலவீனமோ என்பது களத்தின் உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடுகளாக மட்டுமே இருக்கும் அதை புலிகளால் மாத்திரமே வெளிக்காட்ட முடியும்.

முக்கியமாக களத்தில் புலிகளின் நடத்தைக் எதிரான ஒரு தோற்றப்பாட்டை புலம்பெயர்ந்தவர்கள் தனித்து நின்று எழுத்தில் பிரச்சாரித்து காட்டிவிட முடியாது. அப்படி முனைந்தாலும் அதை நம்பும் அளவிற்கு இலகுவான எதிரியுடன் நாம் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக 85000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொடுத்து போராடவில்லை. அதாவது இந்த விடையத்தில் எதரியின் துரோகிகளின் பிரச்சாரங்களிற்கான வெறும் எதிர்மறையான பிரச்சாரமாக செய்வது என்பது அர்த்தமற்றது தவறானது பாதகமானது முட்டாள்தனமானது.

அடுத்து புலம்பெயர்ந்த மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்ற நியாயத்தில் இந்த "ஊடகர்களிலும்" "ஆய்வாளர்களிலும்"பலர் ஒளிந்து கொள்ளப் பாக்கிறார்கள்.

அந்த பிரச்சனையை பின்வரும் 2 வகைகளில் அடக்கலாம்

-1- தற்போதைய புலிகளின் நடத்தையை அதுவாகவே விளங்கிக் கொள்ள முடியவில்லை.

-2- தற்போதைய புலிகளின் நடத்தையை எதிரிகளின் துரோகிகளின் பிரச்சாரத்தின் பின்னணியில் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

முதலாவதைப் பார்த்தால், புலிகளின் தற்போதைய எதிர்கால இராணுவ நடத்தையைப் பற்றி அறிய வேண்டிய தேவை புலம்பெயர்ந்தவர்களிற்கு அறவே இல்லை. தாயகத்தில் உள்ளவர்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கு அதை அங்குள்ள ஊடகங்களும் புலிகளும் பாத்துக் கொள்வார்கள். புலிகளின் கடந்த கால இராணுவ நகர்வுகள் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டு அதன் நிகழ் மற்றும் எதிர்கால பெறுமதி காலவதியான நிலையில் அவர்களாலேயே பல்வேறு வடிவில் ஆவணப்படுத்தப்படுகிறது விளக்கப்படுகிறது. இவை குறித்த முகாங்கள், இலக்குகள் பற்றிய தாக்குதல் விபரங்கள் மாத்திரமல்ல போராட்டத்தின் ஏனைய தந்திரோபாயங்களும் தான், உதாரணத்திற்கு தேசத்தில் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் "போரும் சமாதானமும்" என்ற நூலில் கடந்த கால சமாதான பேச்சுகளில் நடந்த பல விடையங்கள் வெளிப்படையாக விளக்கப்படுகிறது. எனவே புலிகள் தாயகத்திலுள்ளவர்களிற்கும் புலம்பெயர்ந்தவர்களிற்கும் என்னென்ன விடையங்கள் தெரிய வேண்டும் என்னென்ன அத்தியாவசியமானது இன்றய மற்றும் எதிர்காலத்துக்கு என்று நினைக்கிறார்களோ அவை எல்லாம் தெரிவிக்கப்படுகிறது உரிய முறையில் உரிய வழிகளில் உரிய நேரத்தில். அதன்படி மேலுள்ள 1ஆவது வகை குழப்பம் என்பது இன்று தெரிந்து கொள்ள தேவை அற்றது. எனவே புலிகளாலேயே இன்றய காலப் பொழுதிற்கு தெரிந்து கொள்ள விளக்கம் கொடுக்க தேவையில்லை என்று (தேவை கருதி) விடப்பட்ட நடத்தைகள் நகர்வுகளிற்கு நாமாக வரிந்து கட்டி போட்டி போட்டுக் கொண்டு "ஆய்வாளர்கள்" என்றும் "ஊடகர்கள்" என்றும் விளக்கம் கொடுப்பது பாதகமானதும் அடிமுட்டாள்தனமானதும்.

அடுத்து 2 ஆவதாக எதிரிகளின் துரோகிகளின் எதிர்ப்பிரச்சாரத்தின் பின்னணியில் புலிகளின் நடத்தையை புரிந்து கொள்ள முடியாது குழம்பியுள்ளவர்கள் புலிகளில் முழு நம்பிக்கை அற்றவர்கள். புலிகளின் நடத்தையில் நம்பிக்கை அற்றவர்கள் என்றால் எமது போராட்டத்தின் வரலாற்றை முழுமையாகத் தெரியாதவர்கள் விளங்காதவர்கள். அதாவது அரசியல் தெளிவில்லாதவர்கள். அரசியல் தெளிவில்லாதவர்களிற்கு இராணுவ ஆய்வு மூலம் என்னத்தை உருப்படியாக விளக்க முடியும்? புலிகளின் பலம் பற்றிய இராணுவ ஆய்வில் கவரப்பட்டவர் எப்படி ஒரு போராட்டம் நிஜ வாழ்வில் எதிர்கொள்ளும் ஏற்ற தாழ்வுகளின் போது தனது விசுவாசத்தைப் பேணுவார்? எமது போராட்டத்தின் தார்மீகம் நியாயம் தெரியாத ஒருவருக்கு அதன் இராணுவ பக்கம் பற்றி மிலேச்சத்தனமாக மூளைச்சலவை செய்தால் அது அவரை எப்படிப்பட்ட ஒரு தனிமனிதராக்கும்? அரசியல் தெளிவற்றவராக கிட்டத்தட்ட ஒரு போர் வெறியர் போன்று பேச வைக்கும். இப்படிப்பட்ட தனிமனிதர்களை கொண்ட ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தை எப்படி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பலமாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும்?

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் எமது போராட்டத்தின் தார்மீகத்தை நியாயங்களை அவரவர் வாழும் சமூகங்களில் நகரங்களில் நாடுகளில் என்று சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று தாயகத்தில் இருந்து பலமுறை பலர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதை எப்படி "புலிகளின் பலம் பற்றிய சாதகமான இராணு ஆய்வு" என்ற போதையால் கவரப்பட்ட அல்லது அப்படி ஒன்று அவ்வப்போது தேவையானவர்களால் முன்னெடுக்க முடியும்? இப்படியான இராணுவ ஆய்வு தேவையானவர்கள் சிறுதொகை என்றால் ஏன் அந்த சிறு தொகைக்காக ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்" இராணுவ ஆய்வு செய்வதில் குறியாக இருக்கிறார்கள்? மொத்தத்தில் இந்த அரசியல் தெளிவற்றவர்களை போராட்டத்தின் பால் கவர தக்க வைக்க ஆய்வு செய்வதாக கூறி தவறான பிரதிநிதிகளாக தயார்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதுமாத்திரமல்ல அரசியல் தெளிவற்றவர்களின் விசுவாசம் எமது போராட்டம் நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய நெருக்கடிகளில் நிலைக்கப்போவதும் இல்லை.

அப்படிப் பார்க்கும் பொழுது இன்று நடப்பது என்ன?

  • இன்று எமது போராட்டத்திற்கு தேவையானது என்று தெரிவு செய்யப்பட்ட முறையில் புலிகள் களத்தில் நடந்து கொண்டிருக்க அது பற்றிய எதிரிகளினதும் துரோகிகளினதும் விளக்கத்தை மறுதலித்து (திருத்தி) விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர்ந்த "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்".
  • புலிகள் விளக்கம் கொடுக்கக் கூடாது என்று விடுபவற்றை தூக்கிப்பிடித்து போட்டி போட்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் புலம்பெயர்ந்த "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்". அதாவது புலிகளின் தந்திரோபாயம் பற்றிய எதிரியின் குழப்பத்தை தெளிவுபடுத்துவதில் ஒரு சிறுபங்கையாவது இவர்கள் செய்கிறார்கள் அல்லது அது நோக்கிய முயற்சியில் தம்மை அறியதே ஈடுபடுகிறார்கள்.
  • அரசியல் தெளிவற்றவர்களிற்கு இராணுவப் பலம் என்ற கவர்ச்சியை எழுத்தில் காட்டி போராட்டத்திற்கு ஆதரவை திரட்டுவதாக தக்க வைப்பதாக கூறி சர்வதேச அரங்கில் உள்ள இவர்களை தவறான பிரதிநிதிகளாக்க முனைகிறார்கள். அதாவது சிறீலங்காவின் இனஅழிப்பு படுகொலைகள் சர்வதேச அளவில் தோலுரித்துக் காட்டப்பட்டு எமது போராட்டத்தின் நீதி நியாயம் தார்மீகத்தை எடுத்துரைக்க முடியாத "போர் வெறியர்களை" புலம்பெயர்ந்த சமூகத்தில் உருவாக்க முயல்கிறார்கள் புலம்பெயர்ந்த சமூகத்தின் மத்தியில் "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" என்று கூறிக் கொள்பவர்கள்.

எமது போராட்டத்தின் இன்றய மிகவும் சிக்கலான முக்கியமான காலகட்டத்தில் இதன் பாதகங்கள் மிகவும் மோசமானவை. மாற்றங்கள் உடனடியாக தேவை. இதன் பொறுப்பும் கடமையும் எல்லோருடையதும்.

Edited by kurukaalapoovan

குழப்பமோ குழப்பம் !

புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களையோ கருத்துக்களையோ நம்ப வேண்டாம் என்று........ சொல்லது போல் உள்ளது.

Edited by lisa01

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):D
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஆய்வுக்குள்ளும் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். குறிப்பாக இராணுவ நிலவர ஆய்வுகள் பொய்த்துப் போன நிலையே அதிகம். அதற்காக ஆய்வாளர்கள் சொல்வதெல்லாம் தவறு என்பது போன்ற எண்ணப்பாடுகள் மக்களை மேலும் மேலும் குழப்பதில் ஆழ்த்தி அவர்களின் மனோபலத்தை சிதைக்குமே அன்றி பலப்படுத்தாது. புலிகள் பலவீனமாக இருந்து பலம் பெறுதல் குறுகிய கால சாத்தியப்பாடான விடயம் என்றால் உடைந்து போன மக்களின் மனோபலத்தைக் கட்டி எழுப்புதல் மிகவும் கடினமான நீண்டகால அவசியமுள்ள ஒரு செயல். அந்த வகையில் மக்களின் மனோபலம் குன்றாத வகையிலும் மிகைப்படுத்தல்களைத் தவிர்த்த வகையிலும் ஆய்வுகளும் செய்திகளும் கருத்துக்களும் அமைவதே எதிரியின் இராணுவ மற்றும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள மக்களைத் தயார்ப்படுத்தும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் தீவிர அரசியல் அறிந்தவர்கள் அல்ல. மக்களை தீவிர அரசியல் அறிவுள்ளவர்களாக எண்ண முடியாது. அவர்களின் மனோவலிமையைக் காக்கா விட்டால் புலிகள் மீதான நம்பிக்கை துரித கதியில் இழக்கப்படும். இதில் தாயகப்பற்று தேசப்பற்று எல்லாம் கதைத்துக் கொண்டிருக்க முடியாது.

ஆகவே ஆய்வாளர்களின் தேவை...

1. மக்களுக்கு மிகைப்படுத்தல் அன்றிய வகையில் மனோவலிமையைப் பாதிக்காத வகையில் எழுதுதல்.

(உதாரணத்துக்கு அனைத்துச் சிங்கள ஊடகமும் இராணுவத்தை மிகைப்படுத்திதான் எழுதுகிறது. புலிகளைக் மிகக் குறைத்துதான் எழுதுகிறது. இராணுவம் தோற்றாலும் மிகைப்படுத்தி வெற்றியாக்குகின்றன - இன்று வரை பிரச்சாரப் போரில் அரச இயந்திரமே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் சாதித்துள்ளது)

2. புலம்பெயர்ந்த நாடுகள் நோக்கிய ஆய்வுகள்.

குறிப்பாக தமிழ் காடியன் போன்ற இதழ்கள் திறமையான கட்டுரைகளை வழங்குகின்றன. தமிழ் மொழிமூலக் கட்டுரைகள் பரப்புரைகளுக்குத் தேவையான அளவுக்கு மக்களின் மனோநிலையை வைத்திருக்கும் அதேவேளை ஆங்கிலம் மற்றும் பிறமொழி மூல பத்திரிகைகள் சரியான திறனாய்வுடன் கூடிய ஆதாரங்களை உள்ளடங்க்கிய ஆய்வுகளைச் செய்ய வேண்டியது அவசியம்.

ஆக மக்களின் மனோநிலை மற்றும் சர்வதேச தேவைகள் எதிர்பார்ப்புக்கள் நோக்கிய வகையில் சிறீலங்கா தனது பிரச்சாரத்தை எடுத்துச் செல்கிறது. அந்த வகையில் இல்லை என்றாலும் மிகைப்படுத்தலற்ற ஆனால் மக்களின் மனோவலிமையை தக்க வைக்கக் கூடிய பிரச்சாரங்கள் அவசியம்.

சர்வதேசத்துக்கான பிரச்சாரங்களை புலம்பெயர்ந்தவர்கள் எடுக்க வேண்டின் அதற்கு வலுவான அரசியல் பின்புல அறிவும் அனுபவமும் தேவை. சாதாரண மக்களால் அதைச் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் லண்டனில் பிரச்சாரம் செய்யவில்லை. வெளிவிவகார அமைச்சுத்தான் பிரச்சாரத்தை தூதரகர்கள் மூலம் செய்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அந்த நிலை இல்லை என்பதால் விடுதலைப் புலிகளுக்கும் புகலிடத்தில் ஒரு பிரச்சார மையமும் செயற்பாட்டாளர்களும் அவசியம். அவர்கள் சர்வதேச அங்கீகாரங்கள் நோக்கிப் பிரச்சாரங்களை தம்மூடும் மக்களூடும் செய்ய முனைய வேண்டும்.

வெறுமனவே மக்கள் தினமும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து சர்வதேச ஆதரவை விழிப்புணர்வை எமது பக்கம் திருப்பிவிட முடியாது. அதே நேரம் மக்களை வீதியில் இறக்க நம்பிக்கைகள் கட்டி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இரண்டு வழி வகைகளில் சமாந்தரமாக பிரச்சாரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். மிகைப்படுத்தல்கள் எங்கும் தவிர்க்கப்படுதல் நன்று. யதார்த்தச் சூழலைச் சொல்லி மக்களை எதிரியின் அனைத்து வகை பிரச்சார யுக்திகளுக்கும் எதிராகாத் தயார்ப்படுத்த வேண்டியதும் அவசியம்..! :)

Edited by nedukkalapoovan

குறுக்காலபோவான்,

நீங்கள் கூறும் கருத்துக்களில் நிறையவே உண்மைகள் இருக்கின்றது. அதாவது வெளிநாடுகளில் வாழும் நாங்கள் செய்யவேண்டியதெல்லாம், எமது தாயகத்து உறவுகளை, களத்தில் போராடும் எமது உறவுகளின் கைகளைப் பலப்படுத்த எம்மாலான உதவிகள் செய்வதேயொழிய, புலி பாய்கின்றதா, பதுங்குகின்றதா, படுத்துறங்குகின்றதா என ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பதல்ல.

இவவாறு அரைவேட்காடு ஆராய்ச்சிகள் ஊடகங்களில் நடத்தப் படுவதற்கு வியாபார தந்திரங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. வியாபாரிகளிற்கு தமது தொலைக்காட்சியைக் கேட்பதற்கு கூடுதலான வாடிக்கையாளர்கள் தேவைப்படுகின்றார்கள். வானொலிகளிற்கு தமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு கூடுதாலான நேயர்கள் தேவைப்படுகின்றார்கள். இதற்கெல்லாம் அவர்களிற்குத் தெரிந்த வழிகளின் ஒன்று தான் அவர்களின் இந்த 'புலிகளின் நடத்தை முறைகள்' பற்றிய இந்த ஆராய்ச்சிகள்! நான் எல்லா ஊடகங்களையும் குறைகூறவில்லை. ஆனால் இவ்வாறு செயற்படும் ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் மக்களாகிய நாம் செய்யக்கூடியதெல்லாம் விழிப்பாக இருப்பது, மற்றும் இவ்வாறான நிகழ்ச்சிகள் ஒளி/ஒலிபரப்பப்படும் போது ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

அரைவேட்காடு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இருப்பதால் தானே அவர்களும் அவற்றை போடுகின்றார்கள். நாம் எம்மைத் திருத்திக் கொள்ளாதவரை எல்லாம் சர்வ நாசம் தான்!

உங்கள் கட்டுரைக்கு நன்றிகள்!

மாப்பிள்ளை சரியாகத்தான் சொன்னீர். நாங்கள் தளரக்கூடாது. வெற்றிவரை கை கொடுபோம் என்ற உறுதிப்பாடு வேண்டும்.

இது ஒரு உரிமைப்போர்.

நெல்சன் மண்டேலா, கஸ்ரோ போன்றவர்களின் வரலாற்றை பார்த்தால் இன்னும் நாங்கள் பயணிக்க வேண்டி உள்ளது.

புலம் பெயர்ந்து வந்து பாஸ்போட்டும் கிடைத்தவுடன் அங்க ஏதாவது தீர்வுவர வேண்டும் என்றால் என்ன செய்வது.

குருக்ஸ் நிதானமான நல்ல பார்வை தொடர்ந்தும் இப்படியே எழுதவும்.

குறுக்காலபோவான் ஒரு விடயத்தை நோக்கும் பார்வை - மிகவும் ஆழமானதுதான்!

ஆனால் பல இடங்களில் உங்களிடமுள்ள பலவீனம் - சொல்ல வருவதை - நேரடியாக சொல்லாமல் விடுவதே! :)

குருக்ஸ்,

நீங்கள் சொல்வது 10%தான் சரி........... :angry:

நெடுக்ஸ்,

நீங்கள் சொல்வது 40%தான் சரி........... :P (இந்த முறை மட்டும்!)

மீதி 50% இந்த வீடியொவில் உள்ளது.......... :)

குறுக்காலபோவான் ஒரு விடயத்தை நோக்கும் பார்வை - மிகவும் ஆழமானதுதான்! :)

பலவீனம்?? எல்லோரையும் தன்னை போல் நினைப்பது! :D

in the beginning i thought he(kurooks) is playing reverse psychology! (i mean otherway around!):D

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சுவாரசியமான காலத்திற்கு தேவையான விடயங்கள்.. நன்றி..

ஐயா பனங்காய்,

உங்கள் வீடியோ இணைப்புக்கு நன்றிகள் பல!

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் இணைப்புக்கு மிக்க நன்றிகள்

நீட்சி என்பது குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் உறுமீன் வரும்வரைக்கும்

புலிகள் காத்திருப்பதைப்போல் களத்திலும்

புலத்திலும் உள்ள மக்களும்(ஆய்வாளர்களும்)

காத்திருக்கத்தான் வேண்டும்.

:) மிகச் சிறந்த ஆய்வு யாழ் களத்தில் நிரந்தரமாக இக்கட்டுரை இடம் பெற சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களாக!!.

ஒண்டு மட்டும் உதக்குது இந்த இரண்டு குறுக்கு மற்றது நெடுக்கு இரண்டும் கீரைக்கு எதிர்கடை போல ஒருவரே என்பது சரியாக தெரிகிறது. எல்லாம் சரி படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்பது போல எழுதாது இப்படியாக எம்மவர் விடும் பிழையான கருத்துகளுக்கு சரியாக பதிலளிக்க சிலர் உண்டு என்பதினை நினைக்க தமிழராகிய நாம் பெருமைப்ப்டடவேண்டும். சபாஸ் தொடர்க உங்கள் பங்களிப்புகள். :D

அடக்குமுறைகளுக்கு எதிரான எந்த போராட்டத்திற்க்கும் போராட்டம் இறுதி வெற்றியை ஈட்டும் வரையிலும் அதற்க்கு அப்பாலும் கூட போராடும் மக்களிடை யே நேரடியாக போராட்டதில் ஈடுபடுபவர்கள், போராட்டத்திற்க்கு நேரடியாக ஆதரவு கொடுப்பவர்கள், மறைமுக ஆதரவு கொடுப்பவர்கள், நேரடியாக எதிர்க்கும் குழுக்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் இருக்கதான் செய்வார்கள் என்பது வரலாறு கற்ப்பிக்கும் பாடம். மறைமுகமாக ஆதரவு கொடுப்பவர்களும் போராட்ட சக்தியின் வலிமையின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொள்ளும் போது நேரடி ஆதரவாலர்கள் ஆவர்கள் என்பது நிதர்சனமான நடைமுறை. எதிர்க்கும் குழுக்களும் கூட போராட்ட சக்தியின் வெற்றி வீச்சு ஆதிகரிக்கும் போது ஆதரவாலர்களாக மாறுவார்கள் என்னும் வரலாற்று நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தர்க்கிக்க விழைகிறோம்.

புலிகளின் இன்றைய தந்திரோபாய பின்நகர்வு அல்லது பின்னடைவு ( துரோகிகளின் பார்வையில் தோர்த்தோடுதல்) பற்றிய எதிரிகள் அவர்களுக்கு ஆதரவு சக்க்திகளை பெருக்கி கொள்ளவும் பரப்புரைகளை மேற்கொண்டு போராட சக்திகளின் ஆதரவாலர்களிடம் நம்பிக்கையின்மையை தோற்றுவித்து மறைமுக ஆதரவாலர்களை நேர்முக ஆதரவாலர்களாக மாறாமலும், துரோகிகளையும் வலிமையுடன் தக்க வைக்கவும் முயலுவர்.

இது சமயங்களில் போராட்ட சக்திகளின் மறைமுக ஆதரவாலவர்களிடையே நம்பிக்கையையும், அவர்களை நேரடி ஆதரவாலர்களாக மாற்றவும் போராட்ட சார்பு ஊடக ஆய்வாலர்களின்/எழுத்தாளர்கள் எடுக்கும் முயற்ச்சி அவர்களின் தார்மீக கடமையாகிறது. இதில் சிலர் சுயவிளம்பரத்துக்காக எழுதுகிறார்கள் என்று கருதினாலும் கூட அவர்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முயலக்கூடாது.

களத்தில் உள்ளவர்களுக்கே களத்தின் நிலைமையை பொறுத்து முடிவெடுக்கும் தகுதியுள்ளது. மற்றவர்கள் அவர்களின் நிலைபாட்டை விமர்சிப்பது, அசிரத்தையுடன் மனம்போன போக்கில் கருத்துக்களை கூறுவது போன்றது. பார்வையாளர்களின் மனத்தில் சோர்வை உண்டாக்கி போராட்ட உணர்வை மழுங்க செய்துவிடும். இது சமயங்களில் சார்பு ஊடகவியலரின் பங்களிப்பு இன்றியமையாதது. அவர்கள் அவர்கள் பணியை செய்யும் போது வரவேற்க்கப் பழக வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களை குறுகிய நோக்குடன் ஆராய்வது போற்ற இழிச்செயல்களை சிலர் நல்ல கருத்துகளை பரப்புவது போன்றோ ஆய்வு செய்வது போன்றோ பரப்ப முயலக்கூடும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றே இன்றைய அவசர தேவை.

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய தொலைக்காட்சியின் அந்த ஆவணம் சொல்ல வருவது

  • போராளி என்றால் யார்?
  • விடுதலைக்கான உனது பணி என்ன?
  • ஒவ்வொரு ஈழத்தமிழனும் ஒவ்வொரு போராளியாக வழவேண்டும். ஈழத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் போராளியாக வாழ்கிறான் என்றால் அவனது கைகள் ஆயுதம் இருப்பது தவிர்க்க முடியாதது.
  • அதேபோல் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் போராளியாக வாழ தம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழர்களின் பணி என்பது அந்தந்த நாடுகளில் அரசியல் முனைப்புகளாய் இராஜதந்திர முனைப்புகளாய் பொருளாதார முனைப்புகளாய் அமைய வேண்டும்.
  • தமிழீழ விடுதலைப்போரை தலமை எப்படியும் வென்று தரும் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் யாரும் சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்த பெறுவதற்கு பெயர் விடுதலையாக இருக்க முடியாது.
  • தமிழீழ விடுதலைப்போரை தலமை சரியான வகையில் வழி நடத்தி வெற்றியீட்டும் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.
  • தலமையின் அற்புதமான உலகே வியக்கும் வழிநடத்தலிற்கு ஏற்றவகையில் விடுதலைக்கான உனது பணி என்ன? எல்லோரும் சேர்ந்து உழைக்கிற பொழுது தான் ஒப்பற்ற விடுதலை தமிழனிற்கு சித்திக்கும்.

இதில எந்தப் பகுதி புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தற்போது குடிகொண்டிருக்கிற "இராணு ஆய்வு" என்ற போதைய நியாயப்படுதுகிறது? "போராளி" என்று உங்களை சொல்லிப்போட்டுது அப்ப புலிக்கு வால்பிடிக்கிற இராணு ஆய்வு செய்கிறீர்களோ? புலிகளின் பலம் பற்றி குழம்புவது புலிகள் சொல்லவிரும்பாததை வருந்தி நீங்களாகவே ஆய்வு செய்வதாகவும் விளக்குவதாகவும் குழப்புவது தான் சும்மா இருக்காது போராட்டத்திற்கு நீங்கள் போராளியாக செய்யும் பங்களிப்போ?

விவரணம் தெளிவாகச் சொல்கிறதே தாயகத்தில் இருப்பவன் கையில் தான் ஆயுதம் வருவது தவிர்க்க முடியாது என்று. அப்புறம் நீங்கள் ஏன் புலத்தில இருந்து வில்லங்கப்படுறியள் ஒலிகன், வாட்டர்ஜெட், நீர்மூழ்கிக்கப்பல், ஸ்ரெல்த் படகு 152 மிமிீ 30மிமீ network warfare மின்னல் தாக்குதல் அதிர்ச்சி வைத்தியம் பதுங்கித்தாக்குதல் படுத்துத் தாக்குதல் என்று? புலம்பெயர் வாழ் தமிழர்களின் பணியான அந்தந்த நாடுகளில் அரசியல் முனைப்புகளாய் இராஜதந்திர முனைப்புகளாய் பொருளாதார முனைப்புகளாய் அமைய வேண்டும் என்றதற்கு இவை எப்படி உதவும்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மக்களுக்கு சரியான அரசியல் விழிப்பூட்டல் தேவை. இதைத்தான் புலம் பெயர் ஊடகங்கள் செய்ய வேண்டும்.. "ஏதாவது ஒரு தீர்வு கிடைத்தால் சரி" என்று தமிழ் மக்கள் சொல்லுவதை நிறுத்தி "தமிழீழம்தான் எமக்குள்ள ஒரே தீர்வு" என்று சொல்லும் நிலைக்குக் கொண்டுவர முதலில் முயற்சிக்க வேண்டும்.. சிறீலங்கா என்பது தமிழீழத்தின் அயல் நாடு என்ற உணர்வு வரப் பண்ணவேண்டும்..

தமிழீழ ஊடகத்துறை என்பது வெறும் வெட்டி வேலைதான் பார்த்துக்கொண்டு இருக்குது... தமிழர் ஊடகங்களை ஒருங்கிணைக்க தெரியாமல்த்தான் தயாமாஸ்ரருக்கு சுகமில்லாமல் வந்தது... அந்தளவுக்கு எங்கட ஆக்களுக்கு பயிற்ச்சியும் ஆற்றலும் இல்லை... இதுக்கை எ9 மூடினதால பொருளாதாரத்தடை வேற, சாப்பாட்டுகே கஸ்ரம், அப்பிடி இருக்கேக்கை அவர்களாலை செயலாற்றவே முடியாது...

அதாலை யாழ்களத்திலை இருக்கிறவை தயவு செய்து மனம்வைத்து அந்த பணியை எடுத்து நடத்தினீங்கள் எண்டால் புண்ணியமாய் போகும்... அப்பிடி எல்லாருமாய் சேர்ந்து செய்தி பரவல் எப்படி இருக்க வேணும் புலநாய்வு தகவல்கள் இராணூவத்துக்கு போகாமல் இருக்க என்ன செய்ய்ய வேணும் என்பதையும் அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேணும் என்பதையும் எல்லாருக்கும் வகுப்பு எடுக்கிறதோட... பதிவு, புதினம், சஙதி எல்லாத்தையும் படிச்சிட்டு பக்கத்து வீட்டு வெள்ளைக்காறனும் தேம்பி அழவைக்க நல்லது செய்யுங்கோ...

அதேமாதிரி பலஸ்தீனப்பிரச்சினையை பற்றி நல்ல தெளிவாய் இருக்கிற வெள்ளை குடிமக்கள் ( அவைதான் சர்வதேசம்..! அரசாங்கம் எல்லாம் சும்மா...) அங்கை சுதந்திரத்தௌ வாங்கி குடுத்து முடிஞ்சுது தமிழீழத்திலை வாங்கி தருவினம் எண்டு தமிழ் மக்கள் எல்லாரும் நம்பவேணும்... அப்பிடியே எங்கட பலத்தையும் ஆற்றலையும் நம்பாமல் அதை வளர்க்காமல் இருப்போமாக....

வாழ்க்க "யாழ்" மக்கள்... தமிழீழம் எக்கேடு கெட்டாவது போகட்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு இருக்கும் பெரும் பலத்தில் புலிகள் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை அதை உடைக்க வழில்லாம் தான் இந்தியாவின் ரோவும் சிங்கள அரசும்

ஏன் இந்த புலிஎதிர்ப்பு கூட்டங்களும்( நானும் தான்) ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் அந்த வேலையை நாங்காளே செய்துட்டம் என்றால் அவர்களுக்கு உதவியாக போகும் இங்கு எல்லாரிடைய ஆய்வுகளும் ஒரு நாளும் 100% சரியானதாக இருக்காது ஆனால் அதுக்கு எதிர் ஆய்வுகள் மட்டும் 100% நல்லா இருக்கும்

ஏன் என்றால் எழுதுபவர்கள் அப்படி.

Edited by Arya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகங்களின் வியாபாரப்புத்தியே இது. இது பற்றி என்ன செய்யலாம்?

இவர்களின் ஆய்வு ஒலி/ஒளி பரப்பாகும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு மற்றும் தமிழ் நாதம் இணையத்திற்கு ஒரு கடிதம் எழுதி பலர் ஒப்பமிட்டு அனுப்பினால் என்ன?

  • தொடங்கியவர்

மனிதராக பிறந்தால் பிழை விடுறது தவிர்க்க முடியாது.

ஆனால் சில பொறுப்புள்ள நிலையில் இருந்து விடும் பிழைகளிற்கு கொடுக்கும் விலை மிகவும் பாதகமானது அதிகமானது. இதை குடிசைக் கைத்தொழில் போன்று அணுகும் பொழுது உணர்வது கடினம்.

இன்று எம்மிடம் இருக்கும் இந்த குறைபாட்டை பலர் உணர்ந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

அதுபோல் வெளிநாடுகளில் உள்ள "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" என்று சொல்லிக் கொள்வோரும் இந்த முறையாவது உணர்ந்துள்ளார்கள் என்று நம்பி ஆக்கபூர்வமானவற்றை எதிர்பார்ப்போம் எதிர்காலத்தில்.

குறைபாட்டை உணர்ந்தவர்கள் விளங்கியவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை ஒலி ஒளிபரப்புபவர்கள் பிரசுரிப்பவர்களிற்கு அனுப்பி வைய்யுங்கள்.

போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொள்வது புலத்தில் வியாபாரமாகவும் சுயவிளம்பரமாகவும் மாறிக் கொள்ளாது இருக்க மக்களின் விழிப்புணர்வு அவசியம். ஊடகங்கள் மக்களை தெளிவு படுத்துவது விழிப்புணர்வு ஊட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் ஊடகத்துறையில் இருப்பவர்களே தவறாக அணுகியதால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

புலிகளின் கோழைத்தனமான பதுன்களா? வீரத்தனமான பதுங்களா?

புலிகளின் கோழைத்தனமான பதுன்களா? வீரத்தனமான பதுங்களா?

ஆத்தி இஞ்ச நிண்டு புலம்பாமல் நாட்டுக்கு போய் உங்கட வீரத்தைக் காட்டுங்க. உங்கட வீரத்தை பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கிறம். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு தங்கள் எதிர்வுகூறல்கள் பிழைத்துப் போய் கடுப்பில் இருக்கினம்.. இப்ப அவர்களின் கவலைகள் எல்லாம் தாங்கள் அவுட்டுவிட்டமாதிரி நடக்கப் புலிகள் ஒத்துழைக்கவில்லை என்பதே; தங்களை நம்ப வைக்க இன்னும் அதிகம் புலம்புவார்கள்.. தலைக்குத் தேசிக்காய் அரைத்து தேய்க்க வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.