Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணை 100 முறை தென்னம்மட்டையால் அடிக்க உத்தரவிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபையினர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவருக்கு தென்னம்மட்டையால் 100 அடிகளை வழங்கிய குற்றச்சாட்டில் முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்றின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கால வரையறையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நல்லன்தெழுவ ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவர் பலவந்தமாக பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை பள்ளி வாசலுக்கு அழைத்து அதன் பரிபாலன சபையினர் 100 முறை தென்னம்மட்டையால் தாக்கி தண்டனை வழங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக பெண் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மற்றுமொரு முறைப்பாட்டை செய்துள்ளார்.சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பெண்ணை தென்னம் மட்டையால் தாக்கி தண்டனை வழங்க உத்தரவிட்ட ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.

http://www.tamilan24.com/contents/?i=65882

 

குரான்;24:2 திருமணமாகாத ஆண், பெண் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

The [unmarried] woman or [unmarried] man found guilty of sexual intercourse - lash each one of them with a hundred lashes, and do not be taken by pity for them in the religion of Allah , if you should believe in Allah and the Last Day. And let a group of the believers witness their punishment.

 

Edited by Alternative

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

puttalam-story

பெண்ணொருவருக்கு புத்தளத்தில் சவுக்கடி தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் விளக்கமறியலில்

 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவருக்கு 100 சவுக்கடி தண்டனையை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் – நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஐவர் கால எல்லையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நீதவான் பந்துல குணரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்;.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண் புத்தளம் – நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு, 100 சவுக்கடிகளை வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தொடர்பில் குறித்த பெண் தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸார் புத்தளம் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியதை தொடர்ந்து, நல்லன்தலுவ ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச்சட்டத்தையும் , பேரிச்ச மரம் எண்டு  நினைச்சிட்டினம் .

ஆமா இந்த கொழும்பான் இணைக்கும் செய்திகள் ஒரு மார்க்கமாவே இருக்குதே?

ஏன்?

confused face smiley

தேடித்தேடி வாசிப்பாரோ!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

51 minutes ago, colomban said:

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

மதம் சொன்னால் எந்த அநியாயமும் செய்யலாம். உலகத்தைப் படைத்த கடவுள் நமக்காக அனுப்பிய அன்பான தூதர் தந்த இந்த அன்புக் கடமைகளை நிறைவேற்றாமல் நாம் சொர்க்கம் போவது எங்ஙனம்?

1 hour ago, colomban said:

ஒர் பெண்ண்னிற்கு நடந்த அநியாயத்தை பார்த்தீர்களா? 
இது என்ன மார்ககமான செய்தி?

இது அநியாயம் என்பது உண்மைதான். மற்றப்படி நீங்கள் அடிக்கடி சில மாதங்களாக இணைக்கும் சில திரிகள் தொடர்பானதே எனது கருத்து.  :grin:

உதாரணத்துக்கு சில கிழே.

 

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம் சொன்னால் செய்திடனும்.

1 hour ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

நம்ம தேசிய இதழ் மித்திரன் கூட வெட்கப்பட்டு திருந்திட்டுது - நவீனன் வெட்கப்படக்கூடாதா? :grin:

ஒரு வருடத்தின் முன்னர் ஒரு மித்திரன் ஞாயிறு பதிப்பை வாங்கிப் பாத்தன். என்ன கட்டுரைகள், ஆக்கங்கள் - கல்கண்டு ரேஞ்சுக்கு வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

அடேங்கப்பாtw_blush:

2 hours ago, நந்தன் said:

நவீனன் வெட்கப்பட்டு இணைக்க தவறுவதை, நம்ம கொழும்பான் இணைக்கிறார்.:grin:

ஹஹா கடைசியாக என்னை ஏன் இதுக்கு இழுக்கிறீர்கள்..:grin:

சில செய்திகளை தவிர்ப்பதுதான்.. அதுக்கு வெட்கம் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்..:rolleyes:

யாழுக்கு என்று ஒரு தரம் இருக்கு.. அதனால் நான் விரும்புவதில்லை..:)

இந்த செய்தி என் கண்ணில் படவில்லை. அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

9 minutes ago, colomban said:

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

யாழ் களத்தின் தரத்தினை பேண நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

19 minutes ago, colomban said:

இந்த செய்திகளைவிட யாழ் வாசகர்கள் பலரின் பின்னூட்டங்கள் மோசமாக இருக்கிந்தே ஐயா.

நண்பரே இதை நீங்கள் எனக்கு எழுதி இருந்தால், நீங்கள் நான் எழுதியதை தவறாக புரிந்து கொண்டீர்கள். உங்கள் தனிமடலை பார்க்கவும்.

நான் இந்த திரியில் தொடர்ந்து விவாதிக்க  விரும்பவில்லை. ..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

நண்பரே இதை நீங்கள் எனக்கு எழுதி இருந்தால், நீங்கள் நான் எழுதியதை தவறாக புரிந்து கொண்டீர்கள். உங்கள் தனிமடலை பார்க்கவும்.

நான் இந்த திரியில் தொடர்ந்து விவாதிக்க  விரும்பவில்லை. ..:)

மன்னிக்கவும் நவீனன், மேலே எழுதிய பின்னுட்டம் விளையாட்டக எழுதினேன். உங்களை குறிப்பிட்டு எழுதவில்லை.

3 minutes ago, colomban said:

மன்னிக்கவும் நவீனன், மேலே எழுதிய பின்னுட்டம் விளையாட்டக எழுதினேன். உங்களை குறிப்பிட்டு எழுதவில்லை.

கொழும்பன் நான் உங்கள் செய்திகளின் வாசகர்களில் ஒரு ஆள். காலை, மதியம் எனக்கு நித்திரை  பயங்கரமாய் தூக்கி தூக்கி அடிக்கும்போது உங்கள் செய்திகள் காதுக்கு அருகில் உடுக்கு அடிக்கும்போது வருகின்ற எழுச்சியை தந்து என்னை தூங்கவிடாமல் உசார்படுத்தி வைக்கின்றன. அரைத்தூக்கத்தில் இருந்த நியானி கூட உங்கள் செய்தியை வாசித்துவிட்டுதான் இப்போது முழிப்பாய் இருக்கின்றார். ஒரு சிலர் இங்கு சபை அடக்கமாய் இருப்பதை பெரிசுபடுத்தாதீர்கள். :26_nerd:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பானை நெளிய வைத்த, ஜீவன் சிவாவை கடுமையாக கண்டிக்கிறோம். :107_hand_splayed:

கொழும்பான், இதெல்லாம் கண்டுக்கப் படாது...

வழக்கம் போல் தொடருங்கள்... 
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தென்னம் மட்டையால். ஒரு அடியே தாங்காது.... நூறா?

இவையளுக்கு எதையாவது தனியா பிரிச்சு கொடுத்தால், அங்க ஷரியா சட்டம் தான்.. 

ஆண்டவன் நமக்களித்த இனிப்பான ஷரியா சட்டம். 21ம் நூற்றாண்டின் அதிசயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.